Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, June 29, 2013

அவ்வையார் காதல் ... - புதிய பரிதி

காதல், என்றைக்கும் இளமை ததும்பும் உணர்வுதான். தமிழர் பண்பாட்டுக்கும், காதலுக்கும் உள்ள தொடர்யை உணர்த்தும் இலக்கியங்கள் தமிழில் ஏராளம். சமூக, அரசியல் நிலைகளுக்கு தக்க சாதிய நச்சுப் புகுத்தப்பட்ட இலக்கியங்கள் குறித்தும் நாம் முன் ஒரு கட்டுரையில் விவாதித்தோம். (சமகால அரசியலை முன்வைத்த மீள்பார்வை)

நாட்டுப்புற வழக்கில் குறுதொகைப் பாடல்களை பெயற்கும் முயற்சியை ‘புதிய பரிதி’ செய்துள்ளார். தமிழின் இலக்கியங்கள் மீது ஒரு ஈர்ப்பை உண்டாக்க இந்த பாடல்களின் மேலோட்டமான அர்த்தங்களையாவது புரியவைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் செய்த முயற்சி இது. சுருக்கமாகச் சொல்லப் போனால் பஞ்சவர்ணக்கிளியை ப்ளாக் அன்ட் ஒயிட் படத்தில் பார்ப்பது போன்றது, கவிதைகளை ரசித்து, குறுந்தொகை வாசிப்பில் ஈடுபட முயற்சிக்கவும்.

                                                   

1) குறுந்தொகை 28, ஔவையார், பாலை திணை, தலைவி தோழியிடம் சொன்னது

மூட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்
அலமரல் அசை வளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.


என் பாடல்

எத்துவனா குத்துவனா -இல்ல
காச்சு மூச்சுனு கத்துவனா
என்ன செய்ய தெரியலையே - அவன்
 என்ன விட்டுப் போனபின்னே
 ஏம் மனக்காச்சல் புரியாம
இந்தக் காத்து அது பாட்டுக்கு அடிக்கிது
இந்த ஊரும் அது பாட்டுக்கு ஒறங்குது..


2) குறுந்தொகை 43, ஔவையார், பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது

செல்வார் அல்ல என்று யான் இகழ்ந்தனனே
ஒல் வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே
ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல்
நல்ல அராக் கதுவியாங்கு என்
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே.

என் பாடல்:

விட்டுப் போவான்னு நான் நினைக்க இல்ல
விட்டிடுவேன்னு அவனும் நினைக்க இல்ல
எங்க ஆசைக ரெண்டும் முட்டிக்கிற
பாம்பு கடிச்சது போல
 பதறுதே பாவி நெஞ்சு.



3) குறுந்தொகை 41, அணிலாடு முன்றிலார், பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது

காதலர் உழையர்  ஆகப் பெரிது உவந்து
சாறு கொள் ஊரில் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய அம் குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே

என் பாடல்

மாமன் பக்கமா இருக்கையில
நான் திருவிழா ஊரா ஆனேனடி
மாமன் செத்த தள்ளி போனாக்கா
நான் ஒத்தவீட்டுத் திண்ணையா ஆகுறேன்டி
ஆளில்லாம அணில் அங்க ஆடுதடி

4) குறுந்தொகை 44, வெள்ளிவீதியார், பாலை திணை -  செவிலித் தாய் சொன்னது
காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.

என் பாடல்
ஒங்களத் தேடி
நடந்து நடந்து  காலு தேஞ்சு போச்சு
நீங்கயில்லாத மொகங்களாப்
பாத்துப் பாத்துக் கண்ணும் இருண்டு போச்சு
அம்மம்மா...ஆகாச வெள்ளிய விட
அதிக சனம் உள்ளதம்மா, இந்த பூமியில


5) குறுந்தொகை 75,  படுமரத்து மோசிகீரனார்,  மருதம் திணை – தலைவி பாணனிடம்  சொன்னது - ஊடலின் பொழுது பாணர்கள் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே தூது செல்வார்கள்
நீ கண்டனையோ கண்டார்க் கேட்டனையோ
ஒன்று தெளிய  நசையினம் மொழிமோ
வெண்கோட்டு யானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.

என் பாடல்
நீயே பாத்தியா-இல்ல
பாத்தவுக சொல்லிக் கேட்டியா
வெள்ளானை விளையாடும்
வெள்ளியா ஆறோடும்
 ஊருனக்கு கெடைக்கும். யப்பா.... சொல்லு 
மச்சான் வாரகன்னு யார் சொல்லக் கேட்ட?


6) குறுந்தொகை 107, மதுரைக் கண்ணனார், மருதத் திணை – தலைவி சொன்னது 

குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன
தொகு செந் நெற்றிக் கணங் கொள் சேவல்
நள் இருள் யாமத்தில் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்கு இரை ஆகிக்
கடு நவைப் படீஇயரோ நீயே நெடு நீர்
யாணர் ஊரன் தன்னொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பி யோயே.

என் பாடல்
மாடி வீட்டு மச்சான் கூட
மெய் மறந்து தூங்கயில
செவப்புக் கொண்டச் சேவலே
கூவி எழுப்பிவிட்டியே..
எலி திண்ணும் காட்டுப் பூன
எச்சில் ஒழுக ஒன்னத் திண்ண
நீயுந் துடிச்சு செத்தால் தான் என்ன!!

7) குறுந்தொகை 58, வெள்ளி வீதியார், குறிஞ்சி திணை – தலைவன் தோழனிடம் சொன்னது 

இடிக்கும் கேளிர் நுங்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று மற்றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே.



என் பாடல்
காதலிக்க வேணாமுன்னு 
சொல்லும் கூட்டுக்காரா...
வெயிலில் உருகும்
வெண்ணையப் போயி- ஊம 
முடவன் தடுக்க முடியுமா?
 மேல ஏறும் இந்த நோய-என்னால
 ஒதறித் தள்ள முடியுமா?


8) குறுந்தொகை 130, வெள்ளி வீதியார்,  பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது

நிலந்தொட்டுப் புகார் வானம் ஏறார்
விலங்கு இரு முந்நீர் காலில் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ நம் காதலோரே.

என் பாடல்

மாமன் பூமிக்குள்ளயும் புகுந்திடல
வானத்தைத் தாண்டியும் குதிச்சிடல
கடலுக்குள்ள போயும் கலந்திடல
ஒவ்வொரு நாடா
ஒவ்வொரு வீடா
ஒவ்வொரு ஊரா
தேடிப் பார்த்தா அவன் கிட்டிடுவான்
ஆசையில என்னைக் கட்டிடுவான்.

9)குறுந்தொகை 138, கொல்லன் அழிசி,  மருதத் திணை – தோழி சொன்னது - தலைவன் கேட்குமாறு, தலைவி சொல்லுவதைப் போன்று, தோழி சொன்னது 
கொன்னூர் துஞ்சினும் யாந் துஞ்சலமே
எம் இல் அயலது ஏழில் உம்பர்
மயிலடி இலைய மா குரல் நொச்சி
அணிமிகு மென் கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடு நனி கேட்டே.

என் பாடல்:

ஊர் முழுக்கத் தூங்கிருச்சு
ஒரு பொட்டுத் தூக்கமில்ல
எங்கூட்டுப் பக்கத்துல
எழுந்து நிக்கும் கரட்டினில
கொத்தான மரத்திலிருந்து
ஒத்தொத்த எலையா உதிருதுங்க
அதக் கேட்டு என் நெஞ்சும் அதிருதுங்க..

10) குறுந்தொகை 196, மிளைக் கந்தனார்,  மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது (தலைவியும் தலைவனும் ஊடல் கொண்டப் பொழுது சொன்னது)

வேம்பின் பைங்காய் என் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர்!  இனியே
பாரி பறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே.

என் பாடல்:
அக்காளின் கைப்பட்ட 
வேப்பங்காய வெல்லக்கட்டினு
சப்புக்கொட்டின ஐய்யாரே..
சண்ட ஒன்னு போட்டுபிட்டு
பச்சத் தண்ணிக் கொடுத்தாக் கூட 
பொத்துப் போச்சு வாயின்னு
இத்த பேச்சு பேசுரீறே ஐய்யாரே..

- புதிய பரிதி

Wednesday, June 19, 2013

முத்தமாக மாறேன்..! - த.தமிழரசி

 
உமிழ்துளி தீர்த்தமாய்
இனித்தருளி
உதிர்ந்த பூவையும்
கனியவைத்து
நஞ்சையும் மகரந்தமாக்கும்
அன்னையின் முத்தம்..!

புழுதி படிந்த தினத்தை
பொன்னாக்கி
நீரும் நிழலும் அன்ற
நிலத்தில் மருந்தாகி
உட்பிணியை மயிலிறகால் வருடும்
தந்தையின் முத்தம்..!

வார்த்தைகளை ஊமையாக்கி
சொல்லத்தெரியாத
சொல்லின் மொழியில்
பூங்கொத்து தரும்
குழந்தையின் முத்தம்..!

விடாது நடந்த
போரின் முடிவில் கிழிந்த
நரம்பின் வலியை
பின்நோக்கி ஓடச்செய்து
பூத்துக்குலுங்குவது
நட்பின் முத்தம்...!

வெப்பத்தில் குளிர்காய்ந்து
இதழில் மடல் தீட்டி
துவந்தயுத்தத்தில்
பூ விரியும் பொழுதில்
புதுமொழி பேசும் 
காதல் முத்தம்..!

முப்பகையில் முத்தெடுத்து 
முத்திபெற
அணிவகுத்து 
அணிகலன் இன்றி
மங்கையை அழகுபடுத்தும்
ஆண்மகனின் ஆசை முத்தம்..!

முத்தங்களான உலகில்
நீங்கள் முத்தத் தேர்வில்
ஈடுபட்டவரா தெரியாது
முத்தமாக மாறுவது தான்
முக்கியமென்று மட்டும் இப்போது
சொல்லத்தெரிகிறது..!
-த.தமிழரசி

Tuesday, January 17, 2012

வாழ்வின் மிச்சங்களை பேசுபவன் - பவித்ரன் தீக்குன்னி



பவித்ரன் தீக்குன்னி கவிதைகள் என அறியப்படுபவைகளில் சில..

தற்கால மலையாளக் கவிஞர்களில் முக்கியமானவர் என்று அறியப்படுபவர் பவித்ரன் தீக்குன்னி...... வடிவாக பிறந்ததால் பாலியல் தொழிலாளியக இச்சமூகத்தில் அறியப்பட்ட அவரது அம்மா, இதை நம்பிய அவரது அப்பாவின் மனப்பிறழ்வு இரண்டும் இவரை ஊர் ஊராய் துரத்தியது. 

நினைவு தெரிந்த நாள் முதலாய் கிறுக்கனின் மகன் என்றே அழைக் கப்பட்டும், அம்மாவை குறித்து கிடைக்கப் பெற்ற மோசமான தகவல்களால் எட்டு வயதில் ஊரை விட்டு ஓடியவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு அப்பா ஆன பின்னரும் ஊர் ஊராய் ஒடிக்கொண்டே இருந்தார்.

பால்ய காலங்களில்  பெற்றோர்களின் அன்பு கிடைத்திராத அனாதரவான சூழலால் டீக்கடை, கல் உடைக்கும் வேலை, மரமேறும் வேலை, சாணி அள்ளுதல், பிச்சை எடுத்தென  இப்படியான வேலைகள் செய்து கொண்டே படிப்பதும் காணாமல் போவதும் பின்னர் திரும்பி வருவதும் அப்புறம் ஓடிப் போவதுமாய் அலைந்து சிக்கி சீரழிந்து எப்படியோ பி.ஏ.வை முடித்து ஒருகட்டத்தில் தாங்கொணாத வறுமையால் பெற்ற குழந்தைகளை தண்டவாளத்தில் படுக்க வைத்து கொன்று விட துணிந்து அதிலிருந்து மீண்டு, கவிஞன் என்பதை ஆதரிக்கும் அவ்வளவாக இன்னும் கெட்டுப் போகாத சமூகத்தின் நல்ல மனதுகளால் அடையாளம் காணப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வரும் தீக்குன்னி ஆயஞ்சேரி சந்தையின் மீன் வியாபாரி.  கேரளம் அறிந்த பிரபல கவிஞர். சிறு வயதில் பாடநூலில் படித்த புனலூர் பாலன் என்ற கவிஞரின் கவிதையே மனவலிமையோடு படிக்க உத்வேகம் தந்தது என்கிறார்.

கேரள முற்போக்கு கலை இலக்கிய சங்கம்  ஐநூறு பேரிடம் தலைக்கு இருபது ரூபாய் வசூலித்து இவரின் ரத்தகாண்டம் என்கிற வெகுவாய் அறியப்பட்ட தொகுப்பை வெளியிட்டு கவிஞனென நிலை நிறுத்தியது இதுவரை ஏழு தொகுப்புகள் வெளியிட்டிருக்கும் இவர் வயது 38. இவரின் கவிதைகளை பவித்ரன் தீக்குன்னி கவிதைகள் என்று என்.டி.ராஜ்குமார் மொழிபெயர்ப்பில் புதுஎழுத்து வெளியிட்டிருக்கின்றது. அதிலிருந்து சில கவிதைகள்.


 1

பிறகு..........?

நீயும் குழந்தைகளும்
என்றென்றைக்கும்
என்னுடையவர்கள் மட்டும்தானென்று
நான் நம்பவில்லை
இது போன்ற துர்விதி என்னை
வேட்டையாடுமென்றால்
நாளை உங்களை ரட்சிப்பதற்கான
எனது கடைசி தந்திரமும் தவறிப்போகும்
பட்சத்தில்
உனக்கு விருப்பமில்லை என்றாலும்
உனது இதயம் வேறு ஒருவனுடைய சூடு
தேடிச் செல்லும்
அவன் பரிசாய் தருகின்ற
இனிப்பு பலகாரங்களிலும்
விளையாட்டு சாதனங்களிலும்
நமது குழந்தைகள் சந்தோசத்தில்
மூழ்கிப்போவார்கள்
பிறகு பிறகு
அர்த்தமற்ற இந்த வாழ்க்கையின்
வெள்ளரித் தோட்டத்தில்
நான் வெறும் சோளக்கொல்லை
பொம்மைதான்.

2

பாம்பு.....!

முதலில் பார்த்தது
அம்மாதான்

பின்வாசலிலுள்ள
சகதியில்

பிறகு
தெக்குப்புறம் திண்னையில்
சமையலறை ஓரத்தில்
கட்டிலுக்கடியில்

பிறகு பிறகு
பூஜையறையிலும்

நேற்று
அந்திநேரத்தில்
அழுதுகொண்டே வந்து
அம்மாவோடு தங்கை சொன்னாள்

அது இப்போது
அவளுடைய
அடிவயிற்றில்
சுருண்டுகிடக்கிறதென்று


3

நமக்கிடையில்.................!?

நமக்கிடையில் ஒரு நதியுண்டு
இடையிடையே மெலிந்தும்
மெலியும் போது தெளிந்தும்
கீழிருந்து மேல்நோக்கியும்
அது இப்பொது ஒழுகிக் கொண்டிருக்கிறது

நமக்கிடையில் ஒரு ஒட்டகமுண்டு
வறண்டுபோன எதிர்பார்ப்பில்
மிகப்பெரிய சுமைகளோடு
விட்டுக்கொடுக்கின்ற
ஊசிமுனை காதுவழி
அது இப்போதும் ஏறி இறங்குகின்றது

நமக்கிடையில்
என்றோ ஒரு காலத்தில்
சரிந்து விழுந்த
மண்ணின் அடியில்
ஒரு மாமரத்தின் வேர்களுண்டு

காய்ந்த பிறகும்
பசுமையின் மீதுள்ள ஆசை தீராமல்
மண்ணின் அடிவயிற்றில்
அது இப்போதும் வியர்த்துக்
கொண்டிருக்கின்றது
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தொகுப்பு 
அன்பன் 
இரா.தெ.முத்து              

Tuesday, December 27, 2011

மண்வாசனை, நெருப்பு, பெருவெளி மற்றும்...


மண்வாசனை

நூறாயிரம் வீரர்கள் தொடர
சென்றிருக்கிறாய்

குதிரைகளோடும் யானைகளோடும் வீரர்கள்
வாட்களையும் வேல்களையும்
ஏந்திப் பின் தொடர்கிறார்கள்

உன் உடல் கவசங்களால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது
உன் கண்களில் நிலத்தின் மீதான வெறி சுடர்கிறது
புழுதியால் காற்று நிரம்புகிறது
எதிரிகளின் நிலம் அதிர்கின்றன

நான் அறிவேன்
நீ விரும்பிய நிலத்தை வென்று திரும்புவாய் என

உனது நிலத்தில்
உன்னுடையவள் மண்வாசனை பூக்க விரிந்திருக்கிறாள்
மழையற்று வறண்ட நிலம் பிளந்திருக்கிறது

இந்த மண்வாசனை
நீ நுகர்கையில்
இந்த நிலத்தின் சுனை பெருகத்தொடங்கும்
அதில்
பேச மறந்த நாம் மிதந்து கொண்டிருப்போம்.


மணலில் அலையும் தனிமை



பாலை நிலத்தை கடந்து கொண்டிருக்கிறேன்

பெயரறியாத விலங்குகளின் அசைவுகள்
பறவைகளின் சிறகடிப்புகள்
தொடர்ந்து கொண்டிருக்கின்றன

அகன்ற நிலவெளியை நிலவு நிறைத்துக் கொண்டிருக்க
காட்டுச்செடிகளின் நிழல்
இருண்மையை கவிழ்த்துகிறது மனதில்

இது
ஒரு நீண்ட பயணம்
இரவும் பகலும் அச்சம் தந்து கொண்டேயிருக்க
முடிவற்றுப் போய்விடும் காலம்

முன்னும் பின்னும் எவருமில்லையென்கிறபோது
தனிமை மணலில் புகும் பாம்பாய் நெளிகிறது.


நினைவெனும் பெருவெளி


பனிக்கால வெயில்
உன் நினைவுகளிலிருந்து எழுப்புகிறது என்னை
பூக்களுக்கு நிறத்தைத் தூவியபடி நகர்கிறது வெயில்

கொடியது
இப்பனி அல்ல
பனிக்காலத்தில் வரும் உன் நினைவுகள்தான்
அந்த நினைவுகள் அக்கினிக்காலத்து சூரியஒளியைப்போல
சுட்டெரித்துக் கொண்டிருக்கின்றன

பறவைகளை
கோடையில் தண்ணீருக்கென அலையச் செய்வதுபோல
பனியிலிருந்தோ
அந்தக்காலத்தின் துயரம் மிகுந்த சம்பவங்களிலிருந்தோ
விடுபட அலைகிறேன்

அந்தப் பருவம் முழுக்க
வெற்றுப் பாதங்களோடு
பளிங்குக்கற்களை மிதித்து நடந்து செல்கிறேன்

நேற்றிரவு
நீ நடந்து சென்ற பாதை
அனலென சுட்டெரிக்கிறது
கடந்தோ
மிதித்தோ
செல்வது எப்படியென தயங்குகிறேன்

என் முன் விரிந்திருக்கிறது
உன் நினைவெனும் பெருவெளி


நினைவின் சுவை

வண்டுகள் ரீங்காரிக்கும் இவ்விரவில்
அறியப்படாத சுவையொன்று
நாவில் ஊறியபடி இருக்கிறது

இரவுக்குப் முந்திய பகல்
நலிவைத் தருவதாதாக இருந்தது

மழை பெய்து குளிர்ந்த தினைச்செடிகள் செழித்திருக்க
மலைச்சரிவில்
மூங்கிலின் நிழலும்
வெயில் படிந்த அவன் முகமும்
எனக்குள் விம்மியடங்குகின்றன

நீள்மலைத் தொடர் காட்டில்
உறங்காதிருக்கும் வண்டுகள்
இசைத்துக்கொண்டிருக்கின்றன நலிவின் பாடலை

இரவெல்லாம்
மூங்கிலைத் தாலாட்டும்
தென்றலின் பாதையை
துளையிடும் வண்டுகள்

மழையில் நனைந்த தினைச்செடிகளில் மலரும் சிரிப்பை
அவனிடம்
நினைவூட்டினால்தான் என்ன.


நெருப்பு

காய்ந்த கிளைகளைச் சேர்த்து தீயிடுகிறேன்
எரிந்தடங்குகிறது
பூந்தோட்டத்தைக் கடக்கிற பொழுதை
கணக்கிட்டுக் காத்திருந்த நேற்றைய நினைவுகள்
அதிகாலை மார்கழியில்
குளிர்காயும் சிறுமிகளுடன் சேர்ந்து கொள்கிறேன்
காய்ந்தக் கிளைகள் தன் பட்டைகள் வெடிக்க எரிகிறது
கூடவே பற்றியெறிவது
மலராத சில பூக்களும்தான்

- சக்திஜோதி

Wednesday, December 21, 2011

எல்லோருக்கும் உண்டு புனைபெயர்






கடைவாயிலிருந்து
ஒழுகும் எச்சில்
அமிர்தத் தாரையென
படிந்து கிடக்கிறது
முதுகுப் புறத்தில்!

கசங்கிய சேலைக்கு
நறுமணம் தெளிக்கிறது
கதக்கிய பாலின் வாசம்!

பனித்துளிகளை
தொடுகிற பரவசத்துடன்
மென்மையாக
ஒற்றி எடுக்கப்படுகிற மலம்
மஞ்சள் தங்கமென
மின்னுகிறது விரல் நுனிகளில்!

சிதறிய சிறுநீர் திவலைகளை
அபிடேக நீரென
சிலிர்த்து
ஏற்றுக் கொள்கிறது தேகம்!

தத்துப் பிள்ளையிடம்
தன்னை முழுமையாய்
ஒப்படைத்தவளை
காணுந்தோறும்
யார் வீட்டுப் பிள்ளையோயென
கூசியபடி தொடும் நான்
கூனிக் குறுகி
சூன்யமாகிறேன்

- கோவை.மீ.உமா மகேஸ்வரி


நூல் அறிமுகம்:
எல்லோருக்கும் உண்டு புனைபெயர்
கோவை.மீ.உமாமகேஸ்வரி
வெளிச்சம் வெளியீடு
சோயம்புத்தூர்
பக் 64/ ரூ.40/ செல்: 9894777291

Tuesday, November 29, 2011

மின்னஞ்சலில் நழுவும் குரல்கள்


வழக்கம் போலவே
அலுவலகத்திலிருந்து மீண்டதும்
உடைகளைக் கூடக் களையாமல்
உன்னோடு உள்ளே நுழைந்த
குரலோடு அலைபேசியில் பேசியவாறு
மடிக் கணினியைப் பிரிக்கத் தலைப்படுகிறாய்

உனது பெட்டியில் வந்து விழுந்து கொண்டிருக்கும்
இடைவிடாத  மின்னஞ்சல்களை
ஒரு பெருமூச்சோடு தவிர்த்துவிட்டுக்
குறிப்பாக எதையோ தேடுகிற
உனது மனத்தின் கட்டளைக்கு
நர்த்தனமிடும் விரல்கள்
எடுத்துக் கொடுக்கும் செய்தியை
வாசிக்கிறது உனது நிதானம் அடைகிற கண்கள்..
மவுனம் கொள்கிறது அலைபேசி.

வேகமாய் எழுந்திருக்கையில்
தற்செயலாகக்  கணினியை மூடியும் மூடாதும்
என்னிடம் நீட்டிய அந்தப் பொழுதில்
மீதம் இருக்கும் அஞ்சல்களில் பரவும் வெளிச்சம்
மெதுவாக விடைபெறுகிறது

அப்புறம் அப்புறம் அப்புறம் அப்புறம்
எப்போதாவது வாசிக்க நீ
நட்சத்திரக் குறி போட்டுப்
பிரித்தே கேட்காத யாரோ அப்பாவிகளுடைய குரல்கள்
நழுவும் ஓசை தீனமாகக் கேட்கிறது கணினியிலிருந்து,
என்னுடையதைப் போன்றே..

- எஸ்.வி.வேணுகோபாலன்

Sunday, November 13, 2011

ந.பெரியசாமி கவிதைகள்

குலைத்து தீரா மௌனம்

கருத்த மண் படர்ந்த
காட்டின் மையத்தில்
திரண்ட மக்காச்சோளக் கதிரென நிற்பாள்
தெனவு தீர்க்கவென்பான் வழிப்போக்கன்
களவு காதலுக்கென்பான் மற்றொருவன்
வெறித்த பார்வையில் பலரும்
வேள்வியிட்டிருந்தனர்
இசை  உயிராய்  மீட்கப்பட்டது
கரைந்தொழுகியது கானம்
கவிதை உரத்து வாசிக்கப்பட்டது
மேலாடை களைந்தொருவன்
தேகவளம் காட்டினான்
சிலம்பும் கோல்களும் உரசிக்கொள்ள
அதிர்ந்தடங்கியது ஒலி
களைப்பின் மிகுதியில்
யாவரும் களைந்துபோன பின்னும்
கால்கடுத்தோய
நின்றபடியே இருக்கிறாள் அவள்

 

ஆதிக்கத்தில் வழிந்த எச்சில்....

புல் என்றாள்
அமரும் பனித்துளியென்றேன்

மலை என்றாள்
பற்றிக்கிடக்கும் கொடியென்றேன்

பாறை என்றாள்
செதுக்கிய ஓவியமென்றேன்

மரம் என்றாள்
சுவைக்க அமரும் பறவையென்றேன்

கடல் என்றாள்
நிரப்பும் மழையென்றேன்

வாய்க்கால் என்றாள்
பாயும் நீரென்றேன்

கொழிக்கும் வயல் என்றாள்
பருவம் தவறா அறுவடையாளனென்றேன்

வைக்கோல்போர் என்றாள்
தின்று பெருக்கும் மாடென்றேன்

வெட்டுக்கிளி என்றாள்
வீழ்த்தும் பூச்சிக்கொல்லியென்றேன்

வெளிறிய காகிதம் என்றாள்
தீற்றும் கோடென்றேன்

வெடுக்கென எழுந்தவள்
துப்பிச் சென்றாள்...

வெறும் வார்த்தைகளிலும்
விழத் தயாரில்லாதவனென...


முகம் பூத்த நிறங்கள்

கோடைக்குப் பின்னான
முதல் துளிர்ப்பின் தயக்கத்தில்
வரையத் தொடங்கினாள் சிறுமி
தன் வளையலால் வட்டத்தை
அருகமர்த்திய இரு மலைகளிடையே
மற்றொருத்தி சூரியனை திணித்துக்கொண்டிருந்தாள்
மேலும் சிலரோ
கட்டங்களில் வீட்டையும்
ந-இட்டு காகத்தையும்
எப்படியேனும்
சுதந்திரக்கொடியை பறக்கவைத்துவிட கம்பத்தையும்
ஐந்தில் நாயையும் வரைந்து
காய்ந்த ஜவ்வரிசிக் கஞ்சியை
உடைத்துடைத்து ஒட்டி
பூசிய நிறங்களால்
பளிங்குச் சிலையென தகதகக்க
திருப்தியின் கீற்றுகள் வழிந்தன
முகமெங்கும் வர்ணங்களாக...


பசியாற்றுபவள்

மழைக்குப் பின்னான நாளின்
காலைப்பொழுதொன்றில்
உண்டு உறைவிடப்பள்ளி மைதானத்தில்
இட்லி ராகி குஷ்காவென
குழுமியிருந்த சிறார்களிடையே
உலர்ந்த இலையைப்போல கைவிரித்து
பிச்சைக் கேட்டவனிடம்
தேநீர் கோப்பையை பொதித்து
கணத்தை நிஜமாக்கினாள்...


ஒழிச்சியெழ...

நதியில் மூழ்கியெழ கரைந்தொழுகுமெனில்
போய்வந்திடலாம் சிரமம் பார்க்காது
பரிகாரம் செய்திடப் போகுமெனில்
ரிஷிகளிடம் சரணடையலாம்
மேலும் வசதிதான்
மாத்திரைகளாக கிடைத்துவிட்டால்
எதுமற்றிருக்க
என்னால் என்னுள் இருப்பதை
தொலைக்க இயலாது
கவசகுண்டலமாக போர்த்தியிருக்கு
உடலேறிய கூச்சங்கள்.

சம்பு கவிதைகள்

உமது மீட்பரை நீர் கண்டடைவீர்...

உமது குற்றங்குறித்த விசாரணையின்
வாய்ப்பு மறுக்கப்பட்ட
அக்கணமே நிராதரவாய்
அந் நகரத்தில் கைவிடப்படுகிறீர்

நாக்குத் தள்ள அலைந்து
கண்டெடுத்த
வோட்கா போத்தலில் தளும்புவதோ
தூய
வெண்ணிறத்திலான கடவுளின் சிறுநீர்

எட்டுத்திசையிலும் மதிலையெழுப்பி
வழக்கம்போல்
எல்லா வழிகளையும் மூடிவிட்ட
உம் கடவுளோ
எங்கோ ஓடி ஒளிந்துகொள்கிறார்

வெப்பம் பொசுக்கும் இப் பாலை நகரத்தில்
சோர்வு கொண்டு மேய்கிறது
காய்ந்த குத்துச் செடியை
கரு நிறக் குதிரையொன்று

 

உம் அழைப்பை செவிமடுக்காமல்
அதுவரை அருகிருந்த குதிரை
நகர்ந்து நகர்ந்து போக்குக் காட்டுகிறது

அம் மதுப்போத்தலைப்
பரிசளிக்கத் துணிகிறீர்
நா வறண்ட தாகம் மீறி

நெகிழ்ந்துருகும் கருங்குதிரை
தாமதியாமல் அதை உடைக்கிறது
குறும்பாறை ஒன்றில்
துண்டு துண்டாகச் சிதறி
வழிகிறார் உங்களின் கடவுள்

பின்பு சொல்லவும் வேண்டுமா
இப்பாலைவெளி கடந்து
ஆகாசத்தில் உம்மை மீட்டுச் செல்லும்
அக் குதிரையே மீட்பராகிய சாத்தானென்று.

நீதிமானின் எழுதுகோல்

நீதிமானின்
எழுதுகோலினை நம்பினார்கள்
பெருங்கதவின் திறப்பிற்கு
காத்திருந்த அவர்கள்

விடுதலையின் குளிர்காற்றை
அது கொண்டு வருமென
அநீதியின்
ஒரு வாசகமும் தெரியாதென
தீமையின் புறம்
ஒருபோதும் திரும்பாதென
ஆகச் சிறந்த ஆகவே சிறந்த
ஒன்றை மட்டுமே அது
தாங்கிப் பிடிக்குமென

நீதிமானின்
எழுதுகோலினை நம்பிக் கொண்டிருப்பவர்களோ
துளியும் அறிவதே இல்லை

தமக்கான தீர்ப்புகளை எழுதும்போது
தலை குப்புற ஏன் அது விழுகிறதென்று
எவ்வித விமர்சனத்தையும் கடந்ததென
எந்நேரமும் உளறித் திரிகிறதென்று
பிறகு
அந்தரத்தில் தொங்கும்
அரதப் பழைய பிடியின் மீது
அவ்வளவு வெறியுடன்
கூர் கத்தியை வீசிப் போகிறதென்றும்

மேலாக
நீதிமானின்
எழுதுகோலினை நம்பப் போகிறவர்களுக்கோ
எப்போதும் தெரியப்போவதே இல்லை

அறுந்து கிழிந்த ஒரு நீதியை
சாவகாசமாய் உமிழ்ந்து விட்டு

அவ்வெழுதுகோல் மை
எப்படி
இறுகி உறைந்து போகுமென்றும்...

தற்கொலை நிகழ்ந்து கொண்டிருக்கிறது

நட்சத்திரமொன்று
பூமிக்கு நழுவுகிற கனவை
அவன் கண்ட இரவில்

தன்  பிரிவு சொல்லி நிற்கிறது
ஜோசஃப்பின் குதிரை

சமாதானத்தின் இறகுகளால்
ஜோசஃப்
நீவி விட முயலுகையில்
இக்கணம் வரை அவனைச்
சுமந்தறியா அது
சற்றே தடுமாறி
பின் வெறித்துப் பார்க்கிறது

சலிப்பில் அரட்டி மிரட்டுகையில்
பிரிவு என்பதே
தன் தற்கொலையெனவும்
மெல்லப் பகிர்கிறது ஜோசஃப்பின் குதிரை

தானே அதற்கு முன்
செத்துத் தொலைவதென அவன்
புலம்பித் தீர்ப்பதை அது
அசைபோட்டு மென்று விடுகிறது

வெறுப்பின் உச்சியில் தற்கொலையை
நிகழ்த்தப் போகும் ஜோசஃப்
மலை உச்சியின் மரத்தில் ஏறி
நழுவி
விழுந்து

தவியெனத் தவிக்கிறான்
நிலம் தொட முடியாமல்

மலைச் சரிவில் புல்மேயும்
ஜோசஃப்பின் குதிரையோ
ஒரேமுறை மட்டும்
அவனை நிமிர்ந்து பார்த்து

பின்  சாதுவிலும் சாதுவாகக் குனிந்து கொள்கிறது...

 

ஒரு நரியின் ஒப்பாரி

ஒரு நரியின் சிறு தந்திரங்களே
வாழ்வுத் துயர் கடக்க சூட்சுமமென

உள்ளூர களவு குணம் கைக்கொண்டு
உலவும்படி விதிக்கப்பட்டது இவ்வுலகமென

நீள்கிறது
உமது பிரசங்கம்

ஒரு நரியோ
ஒரு மயிரின் சிறு
நுனியளவும் அறியவில்லை

உயர் மின்சாரம் செலுத்தி
உயிர் கொல்கிற கலை குறித்து

கர்ப்பத்தில் புரளும் சிசுவிற்கும்
நேரடி மோட்சமளிக்கிற சூலம் குறித்து

லத்தியில் தடவிய அதிகாரக் கொழுப்பு
யோனி கிழித்துப் புணரும் நுட்பம் குறித்து

முடிவேயின்றி மூள்கிற போர்களின்
கொழுத்துப் பெருத்த ஆதாயங்கள் குறித்தும்

மட்டுமின்றி
உலகமே வியக்கும்
தன் தந்திரசாலித்தனம் குறித்தோ

இலக்கு பிசகின்றி
அதைப் பிரயோகிக்கும் வல்லமை குறித்தோ

தவிர
தானொரு நரி எனக் குறித்தோ கூட
அறியவே இல்லை
ஒரு நரி

ஆழ்துயிலுக்குள் இவ்வுலகம் புகும்போது
ஒரு நரி
ஒளிரும் நிலவை நோக்கித் துவங்குகிறது
தன் ஒப்பாரியை
தன்னளவில்
அதைத்தான் நீங்கள்
இரகசிய வேட்டைக்கான
ஒரு நரியின்
கானக ஊளை என்கிறீர்...·
·


கடவுளின் முகவரி

ஜோசஃப் தேடிவந்த கடவுள் அக்கவிதைக்குள்
சாவகாசமாகச் சாய்ந்து நின்றிருந்தார்
அடி மரத்தின் மீது
அவரிடம் ஜோசஃப் இறைஞ்சுகிறான்
அருள்கூர்ந்து
கடவுளின் முகவரியைத் தெரிவிக்க இயலுமாவென
கண் தொலைவிற்கு அப்பால் தெரிகிற
கவிதையின் எல்லைக் கோட்டினை
கடந்து திரும்பினால் தருவதாகச் சொல்லி
கடவுள்
மறைத்து வைத்திருந்தார் தன் முகவரி அட்டையை
எல்லை தொடும் பந்தயத்தில் ஜோசஃப்
மூச்சிரைத்து மூச்சிரைத்து ஓடும்போது
வளர்ந்து
வளர்ந்து
நீள்கிறது அவ்வெல்லைக் கோடு
அவ்வழியே
வயோதிகத்தின் பிடியிலிருந்த தன் தாயும்
என்றைக்குமாக கை நழுவிப்போன காதலியும்
சிரித்தபடி கடந்து போகிறார்கள் அவனை
இலக்கை அடைய ஓரடி முன்பாக ஜோசஃப்
சட்டென்று நின்று
பதட்டமுடன் திரும்புகிறான்
காணாமல் போய்விட்டிருந்தார்
மரத்தடியிலிருந்த கடவுள்

தனியே நின்று கொண்டிருந்தது
அக் கவிதைக்குள் ஒற்றை மரம்...
·

Thursday, January 27, 2011

உலகம் சுற்றும் கவிதை


எங்கெல்லாம் அடக்குமுறை கோலோச்சுகிறதோ- எங்கெல்லாம் பாசி சம் கவ்வுகிறதோ- எங்கெல்லாம் சர்வாதி காரம் கோலோச்சு கிறதோ- எங்கெல்லாம் மத, இன, பிரதேச வெறி ஆட்டிவைக்கி றதோ அங்கெல்லாம் மேற்கோள்காட்டப் படும் கவிதை ஒன்று உண்டு.

“முதலில் அவர்கள் யூதர்களைப் பிடிக்கவந்தனர்
நான் பேசவில்லை

ஏனெனில் நான் யூதன் அல்ல

பின்னர் அவர்கள்
கம்யூனிஸ்டுகளைப் பிடிக்க வந்தனர்
நான் பேசவில்லை

ஏனெனில் நான் கம்யூனிஸ்டு அல்ல

பின்னர் அவர்கள்
தொழிற்சங்கவாதிகளைப் பிடிக்க வந்தனர்
அப்போதும் நான் பேசவில்லை

ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியும் அல்ல

பின்னர் அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர்
அப்போது எனக்காகப்

பேசயாரும் இல்லை”

மனித மனங்களை நுட்பமாகப் படம் பிடித்து பாசிசத்துக்கு எதிராக ஆவேச உணர்வை ஊட்டிய இக்கவிதை வரிகளை எழுதியவர் யார்? அவர் வரலாறு என்ன? எதுவுமே தெரியாமல் கூட அன்றாடம் உல கெங்கும் பலரால் இக்கவிதை மேற்கோள் காட்டப்பட்ட வண்ணம் உள்ளது.

இக்கவிதையை எழுதியவர் பாஸ்டர் மார்டின் - நீய்- மொல்லர். இவர் ஒரு கிறிஸ்தவ மதபோதகர். இதில் வேடிக்கை என்னவெனில் இவர் கப்பற்படை அதி காரியாக பணி புரிந்தவர் என்பதும், முதலில் ஹிட்லரின் தேசிய வாதத்தை ஆத ரித்தவர் என்பதும் நாமறிய வேண்டிய செய்தி.

Friday, January 21, 2011

தீப்பொறியாகுமோ கவிதை



“மிக உயர்ந்தவன்

கிராமவாசியா? நகரவாசியா?

இல்லை.

விலைவாசி.”

கவிஞர் கந்தர்வன்






நிர்வாணத்தை

விற்பனை
செய்கிறோம்,
ஆடைவாங்க”

கவிஞர் நா. காமராசன்








வீசியெறிந்த
செய்தித்தாளை அப்பாவிடம் தரவும்

வீதியில் காய்கறிக்காரன் வந்தால் அம்மாவை அழைக்கவும்

யாரும் சொல்லித்தராமலே எனக்குப் புரிகிறது

கவிஞர்
வெண்ணிலா

Saturday, January 1, 2011

”சர்வதேச வனங்கள் ஆண்டு” 2011 - காடுகளின் முகவரியைத் தேடி ...



பச்சைப் பசேலென்ற
ஆடையணிந்த சிறுமி எழுப்பினாள் அதிகாலையில்
விடிந்தது வனங்களின் ஆண்டு...
கை கோத்துக் கொண்டு அவள் போட்ட
துள்ளல் நடையில்
எதிரே விரிந்தது அடர்ந்த கானகம்

Thursday, December 23, 2010

Tuesday, December 21, 2010

ஏதாச்சும் செய்யணும்னே ... !

ஏதாச்சும் செய்யணும்னே ... !


1)

ஞாயிற்றுக்கிழமை காலை!
டீக்கடை பெஞ்சிலமர்ந்து தினத்தந்தியின் பக்கங்களை ஆளுக்கொன்றாக பிரித்துவைத்து டீயின் சூட்டையும் மிஞ்சுமளவுக்கு விவாதங்கள் நடத்திக்கொண்டிருந்தனர்.

"ஒரு டீ போடுங்கண்ணே" ஜீவாவின் குரலைக்கேட்டு 'எப்பவுமே வராதவன் இன்னைக்கு வந்துருக்கானே' என அண்ணாச்சி ஆச்சர்யர்மாய் பார்த்தார்.

Wednesday, December 15, 2010

பூகோளம் பொய்!



நதியின் வாழ்க்கை
நாக்கறுந்து கிடக்கிறது

நதியின் மூலமும் ஆழமும்
கண்டதில்லை என்ற
முதியவருக்கு வயது தொண்ணூத்து எட்டு.

Saturday, December 11, 2010

பதிவர்கள் சிந்தனைக்காக ஒரு கவிதை ....


களம் தள்ளி ...


வயிற்றையோ
மனதையோ
சோற்றாலோ
போதையாலோ
நிறைத்துவிட்டு
வெளிவருகிற நிமிடங்களில்
நீள்கிற கைகளுக்கு
இடப்படும் ஒரு ரூபாய் ...

Friday, December 10, 2010

பெண்களும், குழந்தைகளும் படிக்கக் கூடாத கமல்ஹாசனின் கவிதையாம்!


மன்மதன் அம்பு படத்தில் நடிகர் கமல்ஹாசன் எழுதிய கவிதை ஒன்றை பெண்களும் குழந்தைகளும் படிக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் தினமலர் பத்திரிக்கையில்  ஒருவர் பொங்கி எழுந்திருக்கிறார். "நாகரீகமற்றவர்கள் முன் நாமும் நாகரீகமில்லாமல் செயல்படுவது நாகரீகமில்லை என்பதால், நாகரீகமாக அடக்கிக்கொள்கிறேன்.” என்று  முடித்திருந்தார்.

Tuesday, December 7, 2010

பெண்ணெழுத்து: உடலரசியலும் உலக அரசியலும்!


நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ
உமது உயிர்க் கூறு
அரசியல் கடந்த காலம் கொண்டது
உமது சருமம்
அரசியல் படிந்தது
உமது விழிகள்
அரசியல் நோக்கு கொண்டது
- விஸ்வாலா சிம்போர்ஸ்க்கா

Sunday, December 5, 2010

அம்பேத்கரின் தனிமை ...



சிங்கக்குட்டிகள்
காலடியில் விளையாட
ஊஞ்சலில் அமர்ந்தபடி
சிரிக்கிறார் அமைச்சர்.

டிசம்பர் பத்து
எங்க சொத்துயென
நடந்தும்..
உட்கார்ந்தும்...
ஏதோ சிந்தித்தபடியும்...
கையசைத்தபடியும்...
எல்லாத் தெருக்களின்
மூலைகளிலும்
நின்று கொண்டிருக்கிறார்
முன்னாள் அமைச்சர்.

Friday, November 26, 2010

Tuesday, November 16, 2010

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)