Showing posts with label உலக சினிமா. Show all posts
Showing posts with label உலக சினிமா. Show all posts

Thursday, January 26, 2012

சமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum - British Film)




இலாபமொன்றையே குறிக்கோளாகக்கொண்டியங்கும் நிறுவனங்களில்/தொழிற்சாலைகளில் தொழிலாளிகள் தினந்தோறும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம். ஊதியக்குறைவு, மோசமான பணிச்சூழல், மரியாதையின்றி நடத்தப்படுவது, அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படுவது, இவற்றையெல்லாம் எதிர்த்துக்கேட்டால் வேலையைவிட்டே அனுப்பிவிடுவது - இவைதான் இன்றைய தொழிற்சாலைகளின் இயங்குமுறை. அதிலும் பெண் தொழிலாளர்களின் நிலை சொல்லிமாளாது. பணியிடத்தில் ஒரே மாதியான வேலை செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியாக ஊதியமோ மரியாதையோ தரப்படுவதில்லை. 


ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித்திட்டம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு  மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகிய அமைப்புகளின் உதவியுடன் உலக பொருளாதார மன்றம் ஒரு அறிக்கையினை தயாரித்து சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கையில் உலகின் எந்த நாட்டிலும் பெண்கள் ஆண்களுக்கு சமமாக ஊதியம் பெறுவதில்லை என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது.



நாடு
ஆண்களுக்கு கொடுக்கும் ஊதியத்தைவிட பெண்களுக்கு எத்தனை   சதவீதம் குறைவாக கொடுக்கப்படுகிறது?
ஐஸ்லாந்து
15 %
நார்வே
16 %
ஜெர்மனி
25 %
இங்கிலாந்து
25 %
அமெரிக்கா
26 %
இலங்கை
28 %
ரஷ்யா
30 %
 பிரான்ஸ்
30 %
இஸ்ரேல்
31 %
சிங்கப்பூர்
31 %
சீனா
31 %
இத்தாலி
33 %
ஜப்பான்
35 %
இந்தியா
39 %
பாகிஸ்தான்
45 %


ஆண்களைவிட பெண்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் கொடுக்கிற பட்டியலில் பாகிஸ்தானும் இந்தியாவும்தான் ஆசியாவிலேயே கடைசி இடங்களை பிடித்திருக்கின்றன. இப்புள்ளிவிவரங்களை சேகரிக்க இயலாமற்போன ஏராளமான மூன்றாமுலக நாடுகளில் இந்நிலை எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு மோசமாக இருக்குமென்று அஞ்சப்படுகிறது. தனியார் நிறுவனங்களிலும் முறைசாரா தொழிலிலும் ஆண்-பெண் ஊதிய வேறுபாடானது மிக அதிகமாக இருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளின் வளர்ச்சி விகிதம் அப்படியே தொடர்ந்தால், ஆணும் பெண்ணும் சமவூதியம் பெறுவதற்கு இன்னும் 150 ஆண்டுகள் ஆகலாம் என்கிறார் லண்டன் பொருளாதார நிபுணர் ஆலன் மானிங்.


கதைச்சுருக்கம்:


ஐரோப்பாவின் மிகப்பெரிய (உலகிலேயே நான்காவது பெரிய) கார் தயாரிக்கும்  "போர்ட்" நிறுவனத்தின் தொழிற்சாலையொன்று லண்டன் தேம்ஸ் நதிக்கரையிலிருக்கும் டேகன்காம் என்கிற இடத்தில் இருக்கிறது. அத்தொழிற்சாலையில் 1968 ஆண்டில், 55 ஆயிரம் ஆண் தொழிலாளர்களும் 187 பெண் தொழிலாளர்களும் வேலை செய்துவந்தார்கள். ஆண் தொழிலாளர்களைவிட பெண் தொழிலாளர்களுக்கு மிகமிகக் குறைவான ஊதியம் கொடுக்கப்பட்டுவந்தது. அதோடு மட்டுமன்றி  அவர்களை, "பயிற்சித்திறன் தேவைப்படாத வேலை" (unskilled labour ) என்கிற வகையில் நிறுவனம் கணக்கில் கொண்டதால், மரியாதையும் ஊதியமும் ஒருசேர குறைவாகவே கிடைத்தது பெண் ஊழியர்களுக்கு. ஆண்களும் ஆணாதிக்கமும் ஆக்கிரமித்திருந்த நிர்வாகம், தொழிற்சங்கம், ஊடகம், முதலாளிகள், அரசு ஆகியவற்றை எதிர்த்து எவ்வாறு அவர்கள் ஒருங்கிணைந்து போராடி வெற்றி பெற்றார்கள் என்பதே இத்திரைப்படத்தின் கதை. போர்டு நிறுவனத்தில் அப்பெண்கள் பெற்ற வெற்றியானது, உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாகத்திகழ்ந்தது.


திரைக்கதை:

மிகமோசமான பணிச்சூழலில் 'போர்ட்' கார்களுக்கான இருக்கைகள் தைக்கும் பணியினை 187 பெண்கள் செய்துவந்தார்கள். மிகவும் நுட்பான வேலையாக இருப்பினும், "பயிற்சித்திறன் வேண்டா உழைப்பு" என்ற வகையிலேயே இவ்வேலையினை நிர்வாகம் சொல்லிவந்தது. அதனால் மிகக்குறைந்த ஊதியமும் அப்பெண்களுக்கு வழங்கப்பட்டது. இதனை மாற்றவேண்டுமென்று அப்பெண்கள் அனைவரும் தொழிற்சங்கத்தின் உதவியை நாடுகிறார்கள். தொழிற்சங்க பிரதிநிதியான ஆல்பர்ட் அப்பெண்களின் கோரிக்கையினை தொழிற்சங்கத்தில் எடுத்துரைத்து, அதன்மூலம் நிர்வாகத்தின் பார்வைக்கும் கொண்டுசெல்வதாக உறுதியளிக்கிறார்.

இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்கத்தை நிர்வாகம் அழைக்கிறது. ஆல்பர்ட் இதனை மிகவும் மகிழ்ச்சியோடு பெண் ஊழியர்களிடம் அறிவிக்கிறார். பேச்சுவார்த்தைக்கு தானும் (ஆல்பர்ட்டு), மான்டியும் (மற்றொரு தொழிற்சங்க பிரதிநிதி) தொழிற்சங்கம் சார்பாக கலந்துகொள்ளவிருப்பதாகவும், பெண்களிலிருந்து இரண்டுபேர் வரவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறார். கோனி என்கிற பெண், மூத்த ஊழியர் என்பதால் அவரை தேர்ந்தெடுத்துவிட்டு, மற்றொருவர் யார் வருகிறீர்களென்று ஆல்பர்ட் கேட்கிறார். ஆனால் யாருமே முன்வரவில்லை. முன்வரிசையில் நின்றுகொண்டிருந்த ரீட்டாவை பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு கேட்கிறார். துவக்கத்தில் ரீட்டா தயங்கினாலும், பின்பு எல்லோரும் ரீட்டாவை ஆதரிக்க, ரீட்டாவும் ஒப்புக்கொள்கிறாள்.

அடுத்தநாள், ரீட்டா, கோனி, ஆல்பர்ட் மற்றும் மான்டி ஆகியோர் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாராகினர். கூட்ட அறைக்கு உள்ளே செல்வதற்குமுன், ரீட்டா மற்றும் கோனியிடம்,
மான்டி : "பேச்சுவார்த்தையின்போது நிர்வாத்தில் யாராவது ஏதாவது கேள்வி கேட்டால், எதுவுமே பேசாமல் தலையை குனிந்து கொள்ளுங்கள். நான் பதில் சொல்லிக்கொள்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, நான் தலையாட்டினால் நீங்களும் தலையாட்டவேண்டும்."
என்று சொல்லிவைத்தே அவர்களை பேச்சுவார்த்தை அறைக்கு அழைத்துச் செல்கிறார் மான்டி.

அனைவரும் பேச்சுவார்த்தை நடைபெறும் அறைக்குள்ளே செல்கிறார்கள்.
ஆப்கின்ஸ் (நிர்வாக அதிகாரி) : "பெண்களின் கோரிக்கை என்ன என்பது எங்களுக்கு புரிகிறது. ஆனால் அதையெல்லாம் உடனடியா தீர்த்து வைக்க முடியாது. கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கென்று ஒரு நடைமுறை இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு திடீரென ஒரு முடிவெடுக்கமுடியாது." 
மான்டி : "நான் எப்போதும் நியாயமாத்தான் பேசுவேன்னு உங்களுக்கே தெரியும்" 
ஆப்கின்ஸ் (நிர்வாக அதிகாரி) : "ஆமா. நீங்க நியாயமானவர்" 
மான்டி : "சரி. நாம ஒரு இரண்டு வாரம் கழித்து மீண்டும் கூடுவோம். அப்போது நீங்கள் பெண்களின் கோரிக்கையினை பரிசீலிக்கிறோமென்று உத்திரவாதம் கொடுங்கள். இன்றைய பேச்சுவார்த்தையின்மூலம் பெண்கள் வேலைநிறுத்தத்தை திரும்பப்பெற்றுக்கொண்டார்களென்று நீங்க உங்க மேலதிகாரிகளிடம் சென்று சொல்லிவிடுங்கள். நாங்களும் பெண்களிடம் சென்று, இன்னும் சில வாரங்களில் நிர்வாகம் பெண்களுடைய பிரச்சனையைத்தான் முதன்மையானதாகக் கருதி பரிசீலக்கத்துவங்கிவிடும் என்று சொல்லிவிடுகிறோம்." 
ஆப்கின்ஸ் (நிர்வாக அதிகாரி): "இது ரொம்ப நியாயமான யோசனையா இருக்கு" 
ஆல்பர்ட் : "இது பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை" 
மான்டி (நிர்வாக அதிகாரி) : "அதெல்லாம் சரியாயிரும். நிர்வாகம் அவங்களை ஏமாற்றவில்லை என்கிற நம்பிக்கை இருக்கிறவரை ஒன்னும் பிரச்சனையில்லை."
இதனையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ரீட்டாவால் கோபத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை.
ரீட்டா (பெண்களின் பிரதிநிதி) : "மூன்று மணிநேரம் நாம் இங்கே பேசிக்கொண்டிருக்கிறோம். நீங்க எல்லாரும் பெண்களுக்கு கொடுக்குற மதிப்பு இவ்வளவுதானா?"
தன்னுடைய கைப்பையிலிருந்து சில தோல் துண்டுகளை (லெதர் பீஸ்) எடுத்து மேசையின்மீது வைத்து, நிர்வாக அதிகாரியைப்பார்த்து பேசுகிறாள்,

ரீட்டா (பெண்களின் பிரதிநிதி) : "இந்த துண்டுகளையெல்லாம் சரியாக வைத்து, கார் இருக்கைக்கு ஏற்ற மாதிரி தைத்துத் தாருங்கள் பார்க்கலாம். உங்களால முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஏனென்றால், அனுபவமோ, பயிற்சியோ இல்லாமல் இவ்வேலையினை செய்யமுடியாது. இந்த மாதிரி ஏராளமான வேலைகள் நாங்க செய்றோம். இது ஒரு 'பயிற்சித்திறன் தேவைப்படாத வேலை' அல்ல."
ஆப்கின்ஸ் (நிர்வாக அதிகாரி) : "உங்களோட கோரிக்கை நிர்வாகத்திற்கு புரிகிறது'
ரீட்டா (பெண்களின் பிரதிநிதி) : "எங்களின் கோரிக்கையினை புரிந்து கொள்வது எளிது என்றாலும், எனக்கென்னவோ நீங்கள் புரிந்துகொண்டது மாதிரியே தெரியல."
ரீட்டா (பெண்களின் பிரதிநிதி) : "எங்களையெல்லாம் 'ஓரளவு பயிற்சித்தேவைப்படுகிற வேலையினை' செய்கிறவர்கள் பட்டியலில் இணைக்கவேண்டும். அதற்கேற்ப ஊதியமும் கொடுக்கவேண்டும். இக்கோரிக்கையினை நாங்கள் வைத்தே பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரைக்கும் நீங்கள் எதுவுமே செய்யவில்லை. ஏன் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். இதுவரைக்கும் பெண்கள் எப்போதுமே வேலைநிறுத்தம் செய்ததே இல்லை. எங்களோட கோரிக்கையினை நீங்கள் மறந்துவிடலாம், நாங்களும் எங்களுடைய வேலையைப்பார்க்க சென்றுவிடுவோம் என்றுதானே நினைத்தீர்கள். ஆனால் நாங்கள் எங்கேயும் போகப்போவதில்லை. நாங்கள் சொல்லியதை செய்யப்போகிறோம். முதன்முறையாக.......அடுத்த 24 மணிநேரம் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்போகிறோம்."

என்று சொல்லிவிட்டு, ரீட்டா அப்பேச்சுவார்த்தை அறையிலிருந்து வெளியேறுகிறாள். ரீட்டாவின் கொந்தளிப்பைக்கண்டு ஆல்பர்ட் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்.


ரீட்டாவும் கோனியும் தாங்கள் வேலை செய்யும் இடத்திற்கு வருகிறார்கள். பேச்சுவார்த்தை என்னவாகியிருக்குமோ என்கிற ஆர்வத்தில் எல்லோரும் அமைதியாக ரீட்டா மற்றும் கோனியின் முகங்களையே பார்க்கிறார்கள்.

ரீட்டா மெதுவாக அருகிலிருக்கும் மேசையின்மீது ஏறி நிற்கிறாள். ஒரு சில வினாடிகள் என்ன சொல்வது, எப்படி சொல்வது என்று யோசித்துக்கொண்டே எல்லோரையும் பார்க்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, 
ரீட்டா : "எல்லாரும் வெளிய போலாம் வாங்க. நாம் வேலைநிறுத்தம் பண்ணப்போறோம்"
என்று அறிவிக்கிறாள் ரீட்டா.


பெண்கள் அனைவரும் மகிழ்ச்சி போங்க, துள்ளிகுதித்து வெளியே செல்கிறார்கள். 
"எங்களுக்குத்தேவை மரியாதை"
"எங்களுக்குத்தேவை மரியாதை"
"எங்களுக்குத்தேவை மரியாதை"  
என்ற முழங்கிக்கொண்டே தட்டிகளையும் பதாகைகளையும் ஏந்தியபடி 'போர்டு' தொழிற்சாலை வாயிலில் போராட்டத்தை துவங்குகிறார்கள் அப்பெண்கள்.

முதன்முறையாக தங்களது உரிமைக்காக போராடியதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் ரீட்டாவிற்கு எல்லோரும் நன்றிதெரிவித்துவிட்டு மாலை வீடு திரும்பினர்.

அமெரிக்காவிலிருக்கும் போர்டு நிறுவன தலைமைச்செயல் அதிகாரியான போர்டிற்கு பெண்களின் போராட்டம் குறித்த செய்தி சொல்லப்படுகிறது. அவர் அதிர்ச்சியாகிறார்.


ரீட்டா வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் வேளையில் ஆல்பர்ட் ரீட்டாவை பார்த்துவிடுகிறார். ரீட்டாவிடம் தனியாக பேசவேண்டுமென்று சொல்லி அருகிலிருக்கும் தேநீர் விடுதிக்கு அழைத்துச்செல்கிறார்.
ஆல்பர்ட் : "ஆண்களைவிட பெண்களுக்கு குறைவான ஊதியம் கொடுத்தால் போதும் என்கிற வசதி அவர்களுக்கு இருப்பதால்தான், போர்டு நிறுவனம் இப்படி ஒரு அநியாயத்தை செய்கிறது. இது இங்கே மட்டுமல்ல. நாடெங்கிலும் இதேநிலைதான். பெண்கள் என்பதாலேயே அவர்களுக்கு குறைவான ஊதியம் வழங்குகிறார்கள். மிக மிக அடிப்படையான பிரச்சனைகளுடனே நீங்கள் எப்போதும் போராடிக்கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது. அதனால் சமவூதியம் பெறப்போராடுவது மிகமிக அவசியம்"
ரீட்டா : "உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் இப்பிரச்சனையில்?"
ஆல்பர்ட் : "எங்கம்மா தனியாக உழைத்து, அதில் கிடைக்கும் அரைச்சம்பளத்தை வைத்தே என்னையும் என் சகோதரர்களையும் வளர்த்தாங்க. வாழ்க்கை முழுவதும் அவங்க பட்ட துயரம் என்னை மிகவும் பாதித்திருக்கிறது."
ஆல்பர்ட் : "யாராவது இந்த சுரண்டலை தடுத்துநிறுத்தனும்."
என்று ரீட்டாவிடம் சொல்கிறார் ஆல்பர்ட்.


அடுத்தநாள் எல்லோரும் வேலைபார்த்துக்கொண்டிருக்கும்போது, நிர்வாகத்திடமிருந்து ஒரு சுற்றறிக்கை வருகிறது. வேலைநிறுத்தத்தை நடத்திய பெண் ஊழியர்களை கடுமையான வார்த்தைகளால் கண்டித்து எழுதப்பட்டிருந்தது அவ்வறிக்கை. அதைக்கண்டதும் கடும் கோபத்திற்குள்ளாகிறார்கள் அவர்கள். இனியும் பொறுப்பதற்கில்லை என்று ரீட்டா, மற்ற பெண்களின் கருத்தினையும் கேட்டுவிட்டு தொடர் வேலைநிறுத்தத்தை அறிவிக்கிறாள்.

"சமவூதியமும் மரியாதையும் கிடைக்கும்வரை வேலைநிறுத்தம் தொடரும்"
என்று சொல்லிவிட்டு எல்லோரும் வெளியேறுகிறார்கள்.

அவர்கள் வேலை செய்கிற டேகன்காம் கிளையில் மட்டும் இப்போராட்டத்தினை முடக்கிவிடாமல், போர்டின் அனைத்து கிளைகளுக்கும் சென்று அங்கிருக்கும் பெண் ஊழியர்களிடமும் ரீட்டாவும் மற்ற பெண்களும் பேசுகிறார்கள்.
"நம்மை நடத்துகிறவிதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. இதற்கு மேலும் நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது"
நம்பிக்கையோடு அவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துச்சென்றாலும், ஊடகங்களும் பொதுமக்களும் அவர்களுக்கு ஆதரவாக இல்லை. 

ரீட்டா எப்போதும் போராட்டத்திலேயே கவனம் செலுத்துவதால், அவளால் வீட்டு வேலைகளை அதிகமாக கவனிக்க முடியவில்லை. அதனால் ரீட்டா மீது அவளது கணவனுக்கு நிறைய கோபம் வருகிறது. கோபத்தின் விளைவால், அவளிடம் பேசுவதையே குறைத்துவிடுகிறான். 

பெண் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் இருப்பதால், கார் இருக்கைகள் தைத்துத்தர ஆளில்லாமல் போர்டு நிறுவனமே தவிக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல், கார்கள் தயாரிப்பையே போர்டு நிறுவனம் காலவரையின்றி நிறுத்திவிடுகிறது. அதனால் ஆயிரக்கணக்கான ஆண் தொழிலாளர்களும் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள். அதனால் அவர்களெல்லாம் ரீட்டாவின் மீதும் மற்ற பெண்களின்மீதும் ஆத்திரப்படுகிறார்கள், திட்டித்தீர்க்கிறார்கள். ரீட்டாவின் கணவனும் ரீட்டாவிடம் பேசுவதை நிறுத்திவிடுகிறான். கோனி போராட்டத்திற்கு சென்றிருக்கும்போது, உடல்நிலை சரியில்லாத அவளது கணவரும் இறந்துவிடுகிறார். அனைவரையும் வறுமை துரத்துகிறது. பெண்களனைவரும் தங்களிடமிருக்கும் சேமிப்பு பணத்தை ஒன்றாக சேர்த்து, அதனை போராட்டசெலவிற்கும் எல்லோரது வீட்டுசெலவிற்கும் பகிர்ந்துகொண்டு நாட்களை நகர்த்துகிறார்கள். பெண்களின் போராட்டத்தை உடைக்க நிர்வாகம் பல வழிகளில் முயல்கிறது. போராட்டக்குழுவில் முக்கிய பங்குவகிக்கும் சாண்ட்ராவிற்கு விளம்பர மாடலாகவேண்டுமென்ற ஆசையிருப்பதை அறிந்துகொண்டு, அவளை போர்டு நிறுவனத்தின் விளம்பர மாடலாக நியமிக்கிறோமென்று சொல்லி நிர்வாகம் அவளை தன்வசம் இழுக்கப்பார்க்கிறது. நிர்வாகத்தின் சூழ்ச்சியறிந்து அவ்வாய்ப்பினை மறுக்கிறாள் சாண்ட்ரா.


பெண்களின் கோரிக்கையை முதன்மையாகக்கருதி ஒட்டுமொத்த தொழிற்சங்கமும் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்லலாமா வேண்டாமா என்று தங்களுக்குள் வாக்கெடுப்பு நடத்த தொழிற்சங்கம் முடிவுசெய்கிறது. ரீட்டா உள்பட சில பெண்களையும் அக்கூட்டத்திற்கு தொழிற்சங்கம் அழைக்கிறது. வாக்கெடுப்பிற்கு ரீட்டா கிளம்பிக்கொண்டிருக்கையில், அவது கணவன் அவளை தடுத்துநிறுத்துகிறான்.
கணவன் : "சமீபகாலமாக நீ செய்வது எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை"
ரீட்டா : "எனக்கு நேரமாகிறது. நான் போகணும். பிறகு வந்து பேசலாம்"
கணவன் : "இப்பவே பேசியாகணும். எனக்கும் நிறைய ஆசைகள் இருக்கு. பைக்ல ஊர் சுத்தணும், தினமும் நண்பர்களோட இரவு தண்ணியடிக்கனும். இந்த மாதிரி எதையுமே செய்யமுடியல. எல்லாம் உன்னாலதான். உன்னைய அடிக்க நான் கை ஓங்கினதுகூட இல்ல."
ரீட்டா : "இப்ப நீ என்ன சொல்ல வர? நீ ஒரு தியாகியா இருக்குற, அப்படின்னு சொல்றியா?"
ரீட்டா : "நாங்கள்லாம் உரிமைக்காக போராடுறோம் இப்போ... ஆனா நீ உன்னோட கூடுதல் சலுகைகள் பறிபோகுதேன்னு பேசிக்கிட்டு இருக்க. எங்களோட அடிப்படை உரிமைக்கான போராட்டம்தான் இது... அதை நீ புரிஞ்சிக்கோ..."
அதற்குமேல் எதுவுமே பேசாமல், ரீட்டா அங்கிருந்து கிளம்பி தொழிற்சங்கக் கூட்டத்திற்கு சென்றுவிடுகிறாள். 

ஒட்டுமொத்த சமூகத்தின் பொதுபுத்தியிலும் ஆணுக்குப் பெண் சமமாக ஊதியம் பெறக்கூடாது என்கிற எண்ணம் ஆழப்பதிந்திருக்கிறது. அதுவே தொழிற்சங்க ஓட்டெடுப்பில் தங்களுக்கெதிராக அமைந்துவிடுமோ என்று அஞ்சவே செய்கிறார்கள் ரீட்டாவும் மற்ற பெண்களும். சற்று தாமதமாகவே கூட்ட அறைக்குள் நுழைகிறாள் ரீட்டா. அவளை பேச அழைக்கிறார்கள்.
ரீட்டா : "நாமெல்லாம் உழைக்கும் வர்க்கம். நாமெல்லாமென்று நான் சொன்னது 'ஆண்', 'பெண்' ஆகிய இருவரையும்தான். நாமெல்லாம் பாலினத்தால் வேறுபட வேண்டாம். அடிப்படை உரிமைக்காக நாமெல்லாம் போராடுவோம். 'பெண்ணுக்கு சமவூதியம்' என்பதுவும் ஒரு உரிமைதான். அதற்காகவும் போராடனும் நாமெல்லாம் ஒன்றிணைந்து"
என்னும் பொருள்பட பேசிமுடித்து மேடையிலிருந்து கீழிறங்கிவருகிறாள் ரீட்டா.

ரீட்டாவின் கணவனும் கூட்டத்தில் அவள் பேசுவதை கேட்டுவிடுகிறான். தன்னுடைய பேச்சிற்கும் செயலுக்கும் ரீட்டாவிடம் மன்னிப்பு கேட்கிறான். இனி அவளது போராட்டத்திற்கு உறுதுணையாக இருக்கப்போவதாக அவளிடம் உறுதியும் கூறுகிறான்.

அதற்குள் வாக்கெடுப்பின் முடிவு அறிவிக்கப்படுகையில், பெரும்பான்மையானோர் பெண்களின் கோரிக்கைக்கு ஆதரவளித்து வாக்களித்திருந்தது தெரியவருகிறது. 

பெண்களின் சமவூதிய கோரிக்கைக்கு ஒட்டுமொத்த தொழிற்சங்கமும் ஆதரவு தெரிவித்த செய்தி, அரசாங்கத்தின் காதுகளுக்கு எட்டுகிறது. போராட்டத்தின் வீரியம் பலமடங்காக உயருகிறது. அரசாங்கத்திலிருக்கும் பெண் தொழிலமைச்சர், போராட்டப் பெண்களை சந்தித்து பிரச்னைக்கு ஒரு முடிவுகட்ட நினைக்கிறார். அதற்கான தேதியும் நேரமும் முடிவு செய்யப்படுகிறது. எந்த முடிவெடுத்தாலும் போர்டு நிறுவனத்திற்கு ஆதரவாகவே எடுக்கவேண்டுமென்று அமெரிக்காவிலிருந்து போர்டு நேரடியாக நாட்டின் பிரதமருக்கே தொலைபேசியில் அழைத்துச்சொல்கிறார். பிரதமரும் அமைச்சருக்கு அதனை ஒரு ஆணையாகயாகவே பிறப்பிக்கிறார். 

பிரதமர் : "கோடிக்கணக்கான பணத்தை நம் நாட்டில் முதலீடு செய்திருக்கிறது போர்டு நிறுவனம். நமது அரசாங்கம் போராட்டக்காரர்களின் பக்கம் நிற்காது என்று நான் 'போர்டு'க்கு வாக்கு கொடுத்துவிட்டேன். நீங்க என்ன செய்தாலும் சரி... ஆனால் 'போர்டு' வருத்தப்படுகிறமாதிரி மட்டும் எந்த முடிவும் எடுக்ககூடாது."
இச்சூழலில் அமைச்சரும் ரீட்டா குழுவினரும் சந்திப்பதற்குமுன், போர்டு நிர்வாக அதிகாரியே அமைச்சரை நேரில் சந்தித்து, தங்களுக்கு சாதகமாகவே அரசு நடந்துகொள்ள வேண்டுமென்றும் பெண்களின் கோரிக்கையை நிராகரிக்கவேண்டுமென்றும் சொல்கிறார்.
போர்டு நிர்வாக அதிகாரி : "போர்டு நிறுவனம் உங்கள் நாட்டிக்கு எவ்வளவு முக்கியமென்று உங்களுக்கே தெரியும். நாங்கள் இந்நாட்டிலேயே தொழிலை  தொடர்ந்து நடத்தவேண்டுமா அல்லது வேறு நாட்டிற்கு செல்லவேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். இவர்களுக்கெல்லாம் தொடர்ந்து குறைந்த ஊதியம் கொடுத்தால்தான் நாங்கள் இலாபமாக நிறுவனத்தை நடத்தமுடியும். இதில் ஏதேனும் மாற்றம் வந்தால், நாங்கள் நிச்சயம் வேறு நாட்டிற்கு தொழிற்சாலையை மாற்றவேண்டிவரும். 40 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்க்கை எங்கள் கையில்தான் இருக்கு. அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்"
போர்டு நிர்வாக அதிகாரியை அந்த அறையிலேயே விட்டுவிட்டு, அமைச்சர் அப்போராட்ட பெண்கள் இருக்கும் அறைக்கு செல்கிறார். 
அமைச்சர் : "நீங்கல்லாம் திரும்ப வேலைக்கு செல்லுங்கள். நிச்சயமாக உங்களுக்கு வெகுசீக்கிரத்தில் ஒரு நல்ல முடிவை நான் சொல்கிறேன்." 
ரீட்டா : "அப்படியெல்லாம் போக முடியாது. எங்களுக்கு ஒரு தீர்க்கமான உத்திரவாதம் கொடுத்தாலொழிய நாங்கள் போராட்டத்தை நிறுத்துவதாக இல்லை" 
அமைச்சர் : "அரசியலில் சில நேரம் விட்டுத்தான் பிடிக்கணும்"
ரீட்டா : "நாங்கள்லாம் அரசியல்வாதிகளில்லை. உழைக்கும் பெண்கள். நீங்களும் தானே?" 
அமைச்சர் : "சரி குறைந்தபட்சம் இப்போதைக்கு என்ன வேணும் உங்களுக்கு?" 
ரீட்டா : "வெகு சீக்கிரத்தில் சமவூதியம் தரப்படும் என்று அரசு வாக்குறுதி கொடுக்க வேண்டும். அதுவரை உடனடியாக இன்றிலிருந்தே ஆண்களுடைய ஊதியத்தில் 90 சதவீதம் அளவிற்காவது எங்களுக்கு உயர்த்திக்கொடுக்கவேண்டும்."

அதனை கூட்டத்தில் கலந்துகொண்ட மற்ற எல்லாப்பெண்களும் வழிமொழிகிறார்கள். அவர்களின் உறுதியான பேச்சு, அமைச்சரால் எதுவும் பேசமுடியாமல் திணறடிக்கிறது.

சில நிமிடங்கள் கழித்து, அமைச்சரும் ரீட்டா மற்றும் குழுவினரும் வெளியே வருகிறார்கள். பத்திரிகை நிருபர்களின்முன் அமைச்சர் அறிவிக்கிறார்,
அமைச்சர் : "போர்டு நிறுவன பெண் தொழிலாளிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில், அவர்கள் அனைவரும் ஜூலை ஒன்றாம்தேதி முதல் மீண்டும் வேலைக்கு செல்வார்கள் என்று உறுதி கூறுகிறேன். அவர்கள் உடனடியாக ஊதிய உயர்வும் பெறுவார்கள். அதாவது ஆண்கள் பெறும் ஊதியத்தில் 92 % அளவிற்கு பெண்களின் ஊதியமும் இனி இருக்கும். அதோடுமட்டுமல்லாது, அடுத்த இலையுதிர்காலத்திற்குள் சமவூதியச்சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் வாக்குறுதி கொடுக்கிறோம்."
எல்லோரும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்....
"இரண்டாண்டுகளுக்குப்பிறகு 1970 இல் இங்கிலாந்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக ஊதியம் வழங்கவேண்டுமென்று வலியுறுத்தி 'சமவூதியச்சட்டம்' நிறைவேற்றப்படுகிறது" 
திரைப்படத்தின் இறுதியில், போர்டு நிறுவனத்தில் 1968 இல் சமவூதியதிற்காக போராடிய பெண்கள் பேசுகிறார்கள்.

"அந்தகாலகட்டத்தில் நாங்க வேலைநிறுத்தம் செய்து போராடுவோம் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை"

"எதனைப் பெறுவதற்காக போராட்டத்தை துவங்கினோமோ, அதனைப் பெறும்வரை நம்முடைய முடிவில் உறுதியாக இருப்போம் என்று சொல்லிக்கொண்டோம்"

"நாங்கள் அவ்வளவு உறுதியாக இருப்போமென்றோ, போர்டு நிறுவனத்தையே இறங்கி வர வைக்கமுடியுமென்றோ நாங்கள் நினைக்கவேயில்லை"

"ஆனால் இறுதியில் எங்களால் எல்லாவற்றையும் செய்யமுடிந்தது"

-இ.பா.சிந்தன்


Monday, January 23, 2012

007 ஜேம்ஸ்பாண்டுக்கு வயது 50!




ஜேம்ஸ்பாண்டு 007 கதாபாத்திரம் தோன்றும் படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அதைக் கொண்டாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி நடைபெற இன்னும் பத்து மாதங்கள் இருந்தாலும், ஏற்பாடுகள் இப்போதிருந்தே செய்யப்பட்டு வருகின்றன. இந்தக் கற்பனைக் கதாபாத்திரத்தை பிரிட்டனைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் இயான் ஃபிளமிங் 1953 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார். 
ஜேம்ஸ்பாண்டை நாயகனாக வைத்து எழுதப்பட்ட நாவல்கள் அமோகமாக விற்பனையாகின. இந்த நாவலில் ஒன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் 1962 ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. டாக்டர் நம்பர் ஒன் என்பதுதான் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரம் தோன்றிய முதல் படமாகும். அதன்பிறகு, 22 படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 

ஸ்கைபால் என்ற பெயரில் உருவாகி வரும் படம் 23வது படமாக இருக்கப்போகிறது. 50 ஆம் ஆண்டு விழா கொண்டாடவிருக்கும் நேரத்தில்தான் இது வெளியாகும். இப்படத்தில் டேனியல் கிரேக், ஜேம்ஸ்பாண்டாக நடிக்கவிருக்கிறார். முதல் ஜேம்ஸ்பாண்டாக நடித்த சீன் கானரியிலிருந்து, ஜார்ஜ் லாசன்பி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன் ஆகியோர் இந்தப் பாத்திரத்தில் தோன்றினர். 
இந்த நடிகர்களுக்கு இணையாக நடித்த நாயகிகளான உர்சுலா ஆண்டர்ஸ்(வயது 75), டயானா ரிக்(73), பார்பரா பேக்(64), கேரி லேவல்(50), ஹேல் பெர்ரி(45) மற்றும் தற்போது உருவாகி வரும் ஸ்கைபால் படத்தின் நாயகியான நவேமி ஹாரிஸ்(35) ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். 

இந்த நிகழ்ச்சிக்கு ஜேம்ஸ்பாண்டு படத்தயாரிப்பாளரான எம்.ஜி.எம். நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி ஹாலிவுட்டில் நடக்கவிருக்கையில், மேலும் பல இடங்களில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். திரைப்படத்துறையில் நவீன தொழில்நுட்பங்கள் வந்து பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. ஆனால் 50 ஆண்டுகளாக ஒரு கதாபாத்திரம் தொடர்வதே சாதனையான விஷயமாகும். 80 வயதைக் கடந்துவிட்ட சீன்கானரி உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது பெருமைக்குரியது என்கிறார் தற்போதைய ஜேம்ஸ்பாண்டு நாயகன் டேனியல் கிரேக்.

இதெல்லாம் சரி இந்த ஜேம்ஸ்பாண்டுகள் மூன்றாம் உலக நாடுகளில் நடக்கும் அநியாயங்களை தடுப்பதற்காக பாய்ந்து, பறந்து அடிபதை பார்த்த நமக்கு அமெரிக்காவின் அடாவடிகளை எதிர்த்து அவர் அடித்த மாதிரி தெரியவில்ல அல்லவா? இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஏகாதிபத்திய நாடுகள் தங்களை அவ்வுளவு எளிதாக தாங்களே அம்பலப்படுத்திகொள்மாட்டார்கள். ஜேம்ஸ்பாண்டு அமெரிக்கா போனால் ராக்கி, ராம்போ சில்வர்ஸ்டோல்ன் இங்கிலாந்து போவார் அல்லது டெர்மினேட்டர் அர்னால்டு அங்கு போவார். எனவே இவர்கள் சாகசங்கள் சோசலிச நடுகள் மற்றும் மூன்றாம் உலக நாடுகளில் மட்டும் செல்லுபடியாகும். கிரிமினல்களும், போதை மருந்து கடத்துபவர்களும் ஏதோ இத்தகைய நாடுகளில்தான் இருப்பது போல சித்ததிக்கப்படுவதும், அதை தடுக்க ஜேம்ஸ்பாண்டுகளும், அர்னால்டுகளும் சண்டையிடுவதாக உருவாக்கப்படும் சினிமாக்களுக்கு பின்னால் அரசியல் இல்லாமல் இல்லை.!? 

Sunday, January 15, 2012

கொலம்பஸின் காலனியாதிக்கமும், பொலிவியாவின் தண்ணீர்ப்புரட்சியும் (Even the Rain - Spanish Film)




'கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்' என்கிற ஒற்றை வரிதான் கொலம்பஸ் குறித்து நமக்கு சொல்லித்தரப்பட்டிருக்கிறது. யாரந்த கொலம்பஸ்? அவர் எதற்காக ஐரோப்பாவிலிருந்து கடல்வழிமார்க்கமாக பல ஊர்களுக்குச் சென்றார்? என்பதற்கான பதில்களெல்லாம் நமக்குச்சொல்லித்தரப்பட்டதே இல்லை. கொலம்பஸ் சென்ற நாடுகளிலெல்லாம் அம்மக்களை அடிமைப்படுத்தி கொடுங்கோல் ஆட்சி புரிந்தார் என்பதும், தங்கம் மற்றும் இன்ன பிற செல்வங்கங்களை கொலம்பஸின் காலடியில் போடாதவர்களின் கைகள் வெட்டியெறியப்பட்டன, எதிர்த்துக்கேள்வி கேட்போரெல்லாம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர் என்பதெல்லாம் நமக்குச் சொல்லித்தரப்பாத உண்மை வரலாறு. இது காலனியாதிக்கம்...

"தண்ணீரை தனியார்மயமாக்கு"
"இலவசமாக கல்வி வழங்காதே"
"விவசாயிகளுக்கு மானியம் கொடுக்காதே"
"இதனைச்செய்யாவிடில் உனக்கு கடனுதவி கிடையாது"
என்னும் உலகவங்கியின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்துகிற அரசுகள் பெரும்பாலான மூன்றாமுலக நாடுகளில் இன்றும் இருந்து வருகின்றன. அதன்பிறகு வளர்ந்தநாடுகளிலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் அம்மூன்றாமுலக நாடுகளுக்குள் நுழைந்து தங்கள் வியாபாரக்கடைகளை விரித்து, கல்லாகட்டிவிடும்... இது மறுகாலனியாதிக்கம்....

பொலிவிய நாட்டில் கொச்சாபம்பா என்கிற நகரிற்கு செமாபா (SEMAPA) என்னும் அரசு நிறுவனம்தான் தண்ணீர் வழங்கிவந்தது. தண்ணீரை தனியார்மயமாக்காவிட்டால் பொலிவியாவிற்கு எவ்விதமான கடனுதவியும் செய்யப்படமாட்டாது என்று உலகவங்கி அறிவித்துவிட்டது. அதனையேற்று, 1998 இல் கொச்சாம்பாவிற்கு தண்ணீர் வழங்குவதற்கு 'அகுவாஸ் டெல் டுனாரி' என்கிற பன்னாட்டு நிறுவனத்துடன் பொலிவிய அரசு ஒப்பந்தம் போட்டது. இங்கிலாந்தின் 'சர்வதேச தண்ணீர் நிறுவனம்', இத்தாலியின் 'எடிசன்' நிறுவனம், அமெரிக்காவின் 'பெக்டெல் என்டர்ப்ரைஸ் ஹோல்டிங்க்ஸ்', ஸ்பெயினின் 'அபெங்கோவா' நிறுவம் மற்றும் இரண்டு பொலிவிய தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றிய உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு நிறுவனம்தான் 'அகுவாஸ் டெல் டுனாரி'. கொச்சாம்பாவில் குடிநீர், பாசன நீர் மற்றும் மழைநீர் உட்பட அனைத்து வகையான நீரிற்கும் உரிமைகொண்ட ஒரே நிறுவனம் 'அகுவாஸ் டெல் டுனாரி' தான் என்று பத்திரமே எழுதிக்கொடுத்துவிட்டது பொலிவிய அரசு. 

(இதனை எதிர்த்து மக்கள் பெரிய அளவில் போராடினார்கள். நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் அப்போராட்டத்திற்கு ஆதரவு கிடைத்தது. அதன் விளைவாக பொலிவியாவில் ஒரு ஆட்சிமாற்றமே நிகழ்ந்திருக்கிறது என்பது தனி கதை)


கதைச்சுருக்கம்:

கொலம்பஸின் வாழ்க்கையை திரைப்படமாக்கி, அவரது உண்மை முகத்தை உலகறியச்செய்திட இயக்குனர் செபாஸ்டின், தயாரிப்பாளர் கோஸ்டா ஆகியோர் ஒரு சிறிய குழுவுடன் பொலிவியா வருகிறார்கள். இயற்கை அழகைக் கருத்தில்கொண்டு இயக்குனர் செபாஸ்டின் பொலிவியாவைத்தேர்ந்தேடுக்கிறார். ஆனால் தயாரிப்பாளர் கோஸ்டாவோ, ஒரு நாளைக்கு வெறும் 2 டாலர் கொடுத்தாலே வேலைக்கும் நடிக்கவும் ஆட்கள் கிடைப்பார்கள் என்கிற நோக்கில்  பொலிவியாவைத் தேர்ந்தெடுக்கிறார். உள்ளூர் மக்களையே அத்திரைப்படத்தில் நடிக்கவைக்கிறார்கள். அவர்கள் நடிக்கத்தேர்ந்தெடுத்த உள்ளூர்க்காரர்களில் ஒருவர், பொலிவிய அரசு தண்ணீரை தனியார்மயமாக்குவதை எதிர்க்கும் போராட்டத்தின் முக்கிய போராளியாக இருக்கிறார். கொலம்பஸின் காலனியாதிக்கத்தை/கொடூரமுகத்தை ஒருபுறமும், உலகவங்கியின்மூலமாக மூன்றாமுலக நாடுகளை தனியார்மய வலைக்குள் சிக்கவைத்து, மீன்பிடித்து மகிழும் மேற்கத்திய நாடுகளின் மறுகாலனியாதிக்கத்தை பொலிவியாவின் தண்ணீர் பிரச்சனையின் வழியாக மறுபுறமும் எடுத்துரைக்கிற திரைப்படம்தான் "EVEN THE RAIN"


கொலம்பஸின் வாழ்க்கையாக இத்திரைப்படத்தில் வருபவை....

கொலம்பஸ் : "இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதத்துடன் ஆட்சிபுரியும் ஆரகோன் அரசர் பெர்டினன்ட் மற்றும் அரசி இசபெல்லா ஆகியோரின் ஆணைப்படி இங்கிருக்கும் நிலங்களையும் கடல்களையும் அவற்றிலிருக்கும் அனைத்தையும் சொந்தமாக்கிக்கொள்ள வந்திருக்கிறேன். இந்நிலங்களின் கடல்களின் இறையாண்மையை அவர்களின் சார்பாக காப்பேன் என்று உறுதிகூறுகிறேன்" என்று அறிவிக்கிறார் கொலம்பஸ்.

தன்னுடைய குழுவினரிடம், 
கொலம்பஸ் : "இம்மக்கள் மிகவும் அமைதியானவர்களாக இருக்கிறார்கள். அதோ அதுதான் அவர்களது கிராமமென்று நினைக்கிறேன். ஒரு கோட்டை கட்டுவதற்கு சிறந்த இடம் அது. நீங்கள் அனைவரும் இம்மக்களுடன் கலந்துவிடுங்கள். உங்களில் யார் முதலில் தங்கத்தை கண்டுபிடிக்கிறீர்களோ, அவர்களுக்கு நிச்சயம் பரிசு உண்டு. அதுமட்டுமில்லாமல், அவர்களிடம் என்ன மாதிரியான ஆயுதங்கள் இருக்கிறது என்பதையும் கண்டறியுங்கள்"

அம்மக்களின் வாழ்க்கையினை நன்கு அறிந்தபிறகு, அவர்களை ஓரிடத்தில் அழைத்து கொலம்பஸ் மீண்டும் பேசுகிறார்.
கொலம்பஸ்: "தேவாலயத்தையும் போப்பையும் இப்பிரபஞ்சத்தை ஆள்பவர்களாகவும், ஸ்பெயின் அரசரையும் அரசியையும் இந்நிலங்களின் ஆட்சியாளர்களாகவும் நீங்கள் ஏற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அதற்கு பிரதிபலனாக, எங்களது அன்பை உங்களுக்குத் தருவோம்."
ஒரு இந்தியர்: "ஏற்றுக்கொள்ளவில்லையென்றால்?"
கொலம்பஸ் : "உங்களை அடிமையாக்குவோம். உங்களது உடைமைகளை ஆக்கிரமிப்போம். எங்களால் இயன்றவரை உங்களை துன்புறுத்துவோம்."
ஒரு இந்தியர்: "எங்களிடமிருந்து என்னதான் வேண்டும் உங்களுக்கு?"
கொலம்பஸ் : "வரி"
கொலம்பஸ் : "ஒவ்வொரு இந்தியனும் இந்த குண்டுமணி அளவிற்கு தங்கம் கொண்டுவர வேண்டும்." 
என்கிற ஆணை பிறப்பிக்கிறார் கொலம்பஸ்.

அதன்பிறகு ஒவ்வொரு நாளும், அம்மக்களை வரிசையில் நிற்கவைத்து எல்லோரும் ஒரு குண்டுமணி அளவிற்கு தங்கம் கொண்டுவந்திருக்கிறார்களா என்று எடைபோட்டு பார்க்கிறார்கள். தங்கத்தின் அளவு சிறிது குறைவாக இருந்தாலும் கூட, அம்மக்களின் கைகளை வெட்டியெறிகிறார்கள் கொலம்பஸின் உத்தரவுடன் அவரது ஆட்கள்.

இக்கொடுமைகளில் இருந்து தப்பித்து ஓடுகிறவர்களையும், எதிர்த்து கேள்விகேட்போரையும் பொதுவிடத்தில் எரித்துவிடுகின்றனர் கொலம்பசும் அவரது கூட்டமும்.



ஈவன் தி ரெயின்திரைப்படத்தின் திரைக்கதை:

'நடிக்க ஆள் வேண்டும். எல்லோருக்கும் வாய்ப்பளிக்கப்படும்' என்ற விளம்பரத்தைப்பார்த்து , திரைப்படக்குழு அலுவலகத்தின் முன்பு ஆயிரக்கணக்கானோர் பெருங்கூட்டமாக வந்து குவிகிறார்கள். இயக்குனர் செபாஸ்டின் அவருக்குத் தேவையான சிலரை, வரிசையின் முதலிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டு, வரிசையின் பின்னாலிருப்போரை கிளம்பச்சொல்கிறார். உடனே அக்கூட்டத்திலிருந்து டேனியல் என்பவர், திரைப்படக்குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். 
"எல்லோரையும் பார்த்துவிட்டு, அதன் பிறகே நீங்கள் முடிவெடுக்கவேண்டும். இந்த வேலைக்காக நாங்கள்லாம் எத்தனை கிலோமீட்டர் நடந்து வந்துருக்கோம் தெரியுமா உங்களுக்கு? உங்களுக்கு எங்க கஷ்டங்களெல்லாம் புரியாது..." என்று திரைப்படக்குழுவினருடன் கோபமாக வாதிடுகிறார் டேனியல். 

டேனியலின் கோபம் தன்னுடைய படத்திற்கு உதவும் என்று நம்பி, 'வரிசையில் இருக்கும் எல்லோரையும் பார்த்துவிட்டே தேர்வு செய்வோம்' என்று அறிவிக்கிறார் செபாஸ்டின். கூட்டத்திலிருக்கும் எல்லோரும் டேனியலை பாராட்டி கைதட்டுகிறார்கள்.

டேனியலின் முகமும் அவரிடம் காணப்படுகிற போராட்ட குணமும் படத்தில் கொலம்பஸை எதிர்த்துப் போராடும் இந்தியர் வேடத்திற்கு பொருந்துமென்பதால் டேனியலையும் அவரது மகளையும் தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க தேர்வுசெய்கிறார் இயக்குனர் செபாஸ்டின்.

மற்றொருநாள் திரைப்படக்குழு அலுவலகம் அருகிலேயே டேனியலும் அந்த ஊர் மக்கள் சிலருமாக சேர்ந்து அங்கே குழி தோண்டிக்கொண்டிருக்கிறார்கள். திரைப்படக்குழுவிலுள்ள ஒரு பெண், டேனியலைப் பார்த்து, 'எதற்காக இங்கே தோண்டுகிறீர்கள்?" என்று கேட்கிறாள்.
டேனியல் : "எங்களுக்கு இங்க குடிக்க தண்ணியே இல்ல. அதான் நாங்க எல்லாரும் சேர்ந்து காசு போட்டு, இங்க இருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில் அதோ தெரியுதே அந்த மலைக்கு பக்கத்துல ஒரு கிணறு வாங்கிருக்கோம். அங்க இருந்து பூமிக்கு கீழே குழாய்வழியாக தண்ணீரை இங்கே கொண்டுவருவதற்குதான் தோண்டிக்கிட்டு இருக்கோம்."
இதனைக்கேட்ட அப்பெண் அதிர்ச்சியுருகிறாள். அப்போது 'அகுவாஸ் டெல் டுனாரி' என்கிற பன்னாட்டு தனியார் தண்ணீர் நிறுவனத்தைச்சேர்ந்த சிலர் அங்கே வந்து ஏதோ கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனைக்கண்ட டேனியலும் ஊர்மக்களும் தனியார் நிறுவன வண்டியை அடித்து நொறுக்கி அதில் வந்தவர்களையும் அடித்துத் துரத்துகிறார்கள்.
மற்றொருநாள் 'அகுவாஸ் டெல் டுனாரி' நிறுவன ஆட்கள் பொலிவிய காவல்துறை சகிதமாக வந்து, கொச்சாபம்பா மக்கள் தங்கள் சொந்த செலவில் கட்டிவைத்த தண்ணீர் தொட்டிகளை சீல்வைத்து மூடுகிறார்கள்.
இதனைக்கண்டு வீடுகளிலிருக்கும் பெண்கள் ஓடிவருகிறார்கள்...
பெண்கள் : "எங்களுடைய சொந்த உழைப்பில் தோண்டிய கிணறும் தொட்டிகளும் இவை."
பெண்கள் : "இதனை மூட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை"
பெண்கள் : "நாங்க அழுக்குத் தண்ணீரோடு எப்படி வாழ்வது?"
பெண்கள் : "எங்களோட நிலத்தை எடுத்துக்கொண்டீர்கள்... எங்களுடைய கிணறுகளையும் எடுத்துக்கொண்டீர்கள்.... காற்றையும் எடுத்துக்கொள்வீர்களா?"
பெண்கள் : "இதுக்கு மேலும் தண்ணீருக்கு உங்களுக்கு எங்களாலு காசு கொடுக்கமுடியாது"
காவல்துறை அதிகாரி : "அவங்களை அவங்களோட வேலையை செய்யவிடுங்க"
பெண்கள் : "என்ன வேலை? எங்களோட தண்ணீரை எடுத்துக்குற வேலையா?"
பெண்கள் : "இது எங்களோட தண்ணீர்.... எங்க குழந்தைகளுக்கான தண்ணீர். இதில் கைவைக்காதீர்கள்...."
அப்பெண்களின் கெஞ்சுகுரல்களுக்கெல்லாம் அவர்கள் செவிசாய்க்காமல் தொட்டிகளுக்கு பூட்டுபோடத்துவங்குகிறார்கள். இப்போது பெண்கள் அனைவரும் கெஞ்சுவதை நிறுத்தி, காவல்துறையினரை விரட்டி அடிக்கிறார்கள்.

விவரம் அறிந்த டேனியலும் சிறிய அளவிலான மக்களும் 'அகுவாஸ் டெல் டுனாரி' நிறுவனத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். டேனியல் ஒரு சிறிய ஒலிபெருக்கியின் வழியாக அம்மக்கள்முன் ஆவேசமாக பேசுகிறார்.
டேனியல் : "தோழர்களே! அவர்கள் நமது விருப்பத்துக்கு மாறாக, நம்முடைய ஆறுகளை குளங்களை ஏரிகளை விற்றார்கள்... நம் தலைமீது விழும் மழைத்தண்ணீரைக்கூட சட்டம்போட்டு விற்றார்கள்... இது நம்ப முடியாத உண்மை தோழர்களே! மழைநீரைக்கூட நம்மை எடுக்கவிடுவதில்லை. ஆனால் அதனை யார் எடுக்கிறார்கள்? லண்டனிலும் கலிபோர்னியாவிலும் இருக்கிற முதலாளிகளின் நிறுவனங்கள்தான் எடுக்கின்றன..."
டேனியல் : "தோழர்களே! அடுத்தது அவர்கள் எதனை நம்மிடமிருந்து திருடப்போகிறார்கள்? நம்முடைய மூச்சுக்காற்றையா? நம்முடைய நெற்றி வியர்வையா? ஆனால் அவர்களுக்குக் கிடைக்கப்போவது நம்முடைய சிறுநீர்மட்டுந்தான்" 
என்று பேசிமுடிக்கையில் காவல்துறையினர் டேனியலை அப்புறப்படுத்துகிறார்கள்.
இதனை சற்று தொலைவில் நின்று பார்த்துக்கொண்டிருந்த 'கொலம்பஸ் திரைப்படத்தின் தயாரிப்பளருக்கு பயமும் கோபமும் ஒருசேர உருவாகிறது. டேனியலை தனியே அழைத்து எச்சரிக்கிறார். தண்ணீர்ப் போராட்டங்களிலிருந்து ஒரு மூன்று வாரத்திற்கு தள்ளியே இருக்குமாறு டேனியலை வற்புறுத்துகிறார். டேனியல் எவ்வித பதிலும் சொல்லாமல் அமைதிகாக்கிறார்.

அடுத்தநாள் டேனியல் மக்களோடிணைந்து தண்ணீர் தனியார்மயமாவதை எதிர்க்கிற தங்கள் போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கிறார். ஆலோசனையின் முடிவில், தண்ணீர் நிறுவனத்தை முற்றகையிடுவதென்றும் தண்ணீர் கிடைக்கும்வரை அங்கிருந்து நகர்வதில்லையென்றும் உறுதிஎடுக்கிறார்கள். அதன்படி எல்லோரும் தண்ணீர் நிறுவனத்தின்முன்பாக கூடுகிறார்கள். டேனியல் மக்கள்முன்பு பேசத்துவங்குகிறார்.
டேனியல் : "அடுத்த 48 மணிநேரத்திற்குள் தண்ணீரினை தனியார்மயமாக்குவதை திரும்பப் பெறவில்லையெனில், நகரின் சாலைகளனத்தையும் மறித்துப் போராட்டம் நடத்துவோம்."
 கூடியிருக்கிற மக்கள் அனைவரும் கைதட்டி தங்கள் ஆதரவைத் தெரிவிக்கிறார்கள்.

பொலிவிய அரசு மக்களின் குரலுக்கு செவிசாய்க்காமல், அவர்களது போராட்டத்தை ஒடுக்கவே முயற்சிக்கிறது. காவல்துறையினரால் எல்லோரும் கடுமையாக அடிக்கப்படுகிறார்கள். அதில் டேனியலுக்கும் நன்றாகவே அடியும் உதையும் விழுகிறது. இதனைகேள்விப்பட்ட 'கொலம்பஸ்' திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும் டேனியல் மீது கடும் கோபதிற்குள்ளாகிறார்கள். தயாரிப்பாளர் கோஸ்டா டேனியலின் வீட்டிற்கே வந்து, 'இனியாவது எந்தப் போராட்டத்திற்கும் போகாதே' என்று எச்சரித்துவிட்டுப்போகிறார்.

ஆனால் அடுத்தநாளும் போராட்டம் தொடர்கிறது. காவல்துறையினரின் கடும் தாக்குதலுக்காளாகி இரத்தவெள்ளத்துடன் டேனியல் கைதாவதை தொலைக்காட்சியில் பார்க்கிறார்கள் கோஸ்டாவும் செபாஸ்டினும். டேனியலை அடைத்துவைத்திருக்கிற சிறைக்கு சென்று, உயர் காவல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து டேனியலை மீட்கிறார்கள். திரைப்படம் எடுத்துமுடித்தபின்னர் டேனியலை மீண்டும் சிறைக்கே வந்து ஒப்படைப்பதாக டேனியலுக்குத்தெரியாமல் சிறையதிகாரிக்கு வாக்குகொடுக்கிறார்கள்.
தயாரிப்பாளர் கோஸ்டா: ஏன் இப்படி செஞ்ச டேனியல்? என்னோட வார்த்தையை நீ மீறிவிட்டாயே?
டேனியல் : தண்ணீர்தான் வாழ்க்கை. அது உங்களுக்கு புரியாது...

அடுத்தநாள் படப்பிடிப்பிற்கு டேனியல் வருகிறார். நடித்துக்கொண்டிருக்கும்போதே, காவல்துறைவந்து டேனியலை கைது செய்யமுயல்கிறது. கூடியிருக்கிற மக்களனைவரும் காவல்துறையினரை அடித்துவிட்டு, டேனியலை தப்பவிடுகிறார்கள். கொச்சாபம்பா நகரின் மக்களுடைய பேராதரவுடன் போராட்டமும் பலமடங்கு பெரியதாகிறது. கொச்சாபம்பாவில் படப்பிடிப்பைத் தொடர இயலாத காரணத்தால், எட்டு மணிநேரம் பயணித்து வேறுவொரு கிராமத்திற்கு சென்று படப்பிடிப்பைத் தொடரலாமென்று முடிவெடுக்கிறார்கள் திரைப்படக்குழுவினர். அவர்கள் கிளம்புகிற நேரத்தில், டேனியலின் மனைவி அங்கே வந்து, தன்னுடைய மகள் அடிபட்டு கிடப்பதாகச்சொல்லி தயாரிப்பாளர் கோஸ்டாவின் உதவியைக்கேட்கிறாள். அவளது அழுகை கோஸ்டாவை அவளுடன் செல்லவைக்கிறது. இயக்குனர் செபாஸ்டினும் திரைப்படக்குழுவினரும் அங்கிருந்து புதிய படப்பிடிப்புத்தளத்திற்கு செல்கிறார்கள். கோஸ்டா மட்டும் டேனியலின் மனைவியுடன் அவளது மகளைத்தேடிச்செல்கிறார். 

கோஸ்டா செல்லும் வழியெங்கும் பிணங்கள், இரத்தவாடை, மனித பாகங்களின் சிதறல்கள், முழுவதுமாக சேதமடைந்த நகர வீதிகள்/வீடுகள் என எல்லாமுமாகச்சேர்ந்து கோஸ்டாவின் மனதை ஏதோ செய்தது. இறுதியாக டேனியலின் மகளைக்கண்டுபிடிக்கிறார்கள். அவ்விடத்தில் ஏராளமானோர் காயங்களோடு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றனர். கோஸ்டா தன்னுடைய காரிலேயே டேனியலின் மகள் உட்பட பலரையும் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்கிறார். இரவு முழுவதும் மருத்துவமனையிலேயே இருந்துவிடுகிறார் கோஸ்டா. மறுநாள் எல்லோரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்கள் என்கிற செய்தியை அறிந்ததும், டேனியலைத்தேடி நகரத்தின் மையப்பகுதிக்கு வருகிறார் கோஸ்டா. 

நகரமே அமைதியாக இருக்கிறது. தனியார் தண்ணீர் நிறுவனத்தின் பெயர்ப்பலகை சாய்ந்து விழுந்து கிடக்கிறது. 
சாலையில் ஒருவர் மணியடித்தபடி
"போராட்டத்தை நிறுத்துங்கள்... தண்ணீர் உங்களுடையதுதான்...
 போராட்டத்தை நிறுத்துங்கள்... தண்ணீர் உங்களுடையதுதான்..."
சொல்லிக்கொண்டே போவதைப்பார்த்து கொச்சாபம்பா மக்கள் வெற்றிபெற்றுவிட்டார்களே என்று கோஸ்டாவும் மகிழ்ச்சியடைகிறார்.
அதன்பின் டேனியலையும் சந்திக்கிறார். கோஸ்டா கண்ணீர் மல்க டேனியலிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு கிளம்புகையில் கோஸ்டாவிற்கு டேனியல் அன்புப்பரிசொன்று கொடுக்கிறார். 
காரில் பயணிக்கையில் டேனியல் கொடுத்த பரிசுப்பொட்டலத்தை திறந்துபார்க்கிறார் கோஸ்டா. அதனுள்ளே தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பாட்டில் இருக்கிறது... "யாக்கு" (ஸ்பானிஷ் மொழியில் தண்ணீர்) என்று தனக்குத்தானே ஒருமுறை சொல்லிக்கொள்கிறார் கோஸ்டா....


Thursday, December 15, 2011

பாலியல் வன்கொடுமை (678 - Egypt Film)

ஒரு பெண் தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே செல்வதற்குமுன், ஏராளமான கேள்விகளை தனக்குள்ளே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

  • நான் போகிற இடம் எனக்குப் பாதுகாப்பானதுதானா?
  • நான் எந்த உடையினை அணிய வேண்டும்?
  • அந்த உடை மிகவும் இருக்கமானதாக இருக்கிறதா?
  • அந்த உடை அணிந்தால், என்னுடைய உடலை வெளிக்காட்டுவதுபோல் இருந்துவிடுமா?
  • எதிலே நான் அவ்விடத்தை அடையப்போகிறேன்?
  • நான் போகவேண்டிய இடத்தில், தனியே நான் நடக்கலாமா? அல்லது ஆண் துணையுடன்தான் நடக்கவேண்டுமா?
இப்படியான கேள்விகள் பெண்களின் அன்றாட வாழ்க்கையில் அங்கமாகிப் போயிருக்கிறது. பெண்களுக்கு நிகழ்த்தப்படுகிற உடல்ரீதியான வன்கொடுமைகளே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
(நன்றி - விக்கிபீடியா)
 
கதைச்சுருக்கம்: 
எகிப்து நாட்டுப்பெண்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்கிற பாலியல் தொல்லைகளையும், அவர்கள் ஏன் அதனை வெளியே சொல்ல முற்படுவதில்லை என்பதனையும், முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கினையும்  செபா, பாய்சா மற்றும் நில்லி ஆகிய மூன்று பெண்களின் வாழ்க்கை வழியாக விவரிக்கிறது இப்படம்.


திரைக்கதை:

செபா ஆபரண வடிவமைப்பாளராக இருக்கிறாள். அவள் தன்னுடைய கணவனுடன் கால்பந்தாட்ட போட்டியொன்றினை காணச்செல்கிறாள். அங்கே விளையாட்டு முடிகிற தருவாயில், அவள் பெரும் கூட்டத்தின் நடுவே தனியாக மாட்டிக்கொள்கிறாள். தனியாக இருப்பதைப் பயன்படுத்தி அவளைச் சுற்றிவளைத்துக்கொண்டு ஒரு கூட்டமே பாலியல் தொல்லை கொடுக்கிறது. அதில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறாள். அந்நிகழ்வுக்குப்பிறகு அவளுடைய கணவன் வீட்டுக்கு வருவதே இல்லை. ஒரு நாள் அவனுடைய அலுவலகத்திற்கே சென்று பார்க்கிறாள்.

செபா : "நீ வீட்டுக்கு வாயேன்"

கணவன் : "உன்னை பாக்கும்போதெல்லாம் அவங்க உன்னை என்னவெல்லாம் செஞ்சாங்களோ அதான் என்னோட ஞாபகத்துக்கு வருது. எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்"

செபா : "அவகாசமா?"

கணவன் : "என்னோட மனசு படுற வேதனைய உன்னால கற்பனை செஞ்சிகூட பாக்கமுடியாது"

செபா : "நீ என்னோட நிலைமையை ஒரு நிமிடம் கூட நெனச்சி பாக்க மாட்றியேங்குறதுதான் எனக்கு புரியமாட்டேங்குது"

கணவன் : "நான் அதையெல்லாம் புரிஞ்சிக்க விரும்பல... நீ போ...."
ஒருபுறம் அவளுக்கு நேர்ந்த கொடுமை, மறுபுறம் இதில் எந்தத் தவறும் செய்யாத அவளை தன்னுடைய கணவனே வெறுக்கிறான் என்கிற துயரம். ஆகிய இரண்டும் அவளை நிலைகுலையச்செய்கிறது. 


கணவனை விட்டு பிரிந்து, பெண்களுக்கான தற்காப்பு யுத்திகளை பயிற்றுவிக்கும் நிறுவனத்தை துவங்குகிறாள் செபா.


பாய்சா ஒரு அரசு ஊழியை. அவள் தினந்தோறும் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு சென்று வரும் பேருந்தின் எண் 678. அதுதான் இப்படத்தின் தலைப்பு. அப்பேருந்து எப்போதும் கூட்டமாகவே இருக்குமென்பதால், தினமும் அருவெறுப்பான உரசலுக்காளாகிறாள். ஒரு நாள் டாக்சியில் சென்றும் பார்க்கிறாள். டாக்சி ஓட்டுபவனும் சாடை மாடையாக பாட்டுப்போட்டு, அவளை முழுங்கிவிடுவதுபோன்றே பார்க்கிறான். பயணமென்பது அவளுக்கு பயமுறுத்தலாகவே இருக்கிறது. இதனிடையே செபா துவங்கியிருக்கும் தற்காப்பு வகுப்பு பற்றி கேள்விப்பட்டு அங்கே செல்கிறாள்.

அங்கு வந்திருப்பவர்களிடம் பேசுகிறாள் செபா....
"உங்களை பாதுகாத்துக்கொள்ள நீங்கள் எவ்வித ஆயுதங்களையும் எடுக்கத்தேவையில்லை. ஆயுதங்களை கையில் வைத்திருக்கும் பெண்களால்கூட பலநேரங்களில் அவர்களை தற்காத்துக்கொள்ளமுடிவதில்லை. ஆத்திரத்துடன் அவனுடயை கண்ணைப்பாருங்கள். அவன் நிச்சயமா உங்களைப்பார்த்து பயப்படுவான். ஏனென்றால் அவன் பலவீனமான பெண்களை மட்டும் தேடித்தான் வேலையைக்காட்டுவான். தான் என்ன செய்தாலும் எந்தப்பெண் பயந்து எதுவும் சொல்லாமலிருக்கிறாளோ, அவளைத்தான் தேடித்தொல்லை கொடுப்பான்." என்கிறாள் செபா.
பங்கெடுத்த அனைவரிடமும் வகுப்பினிறுதியில் ஒரு வெள்ளைத்தாளை கொடுத்து, மூன்று கேள்விகளுக்கு பதிலெழுதச்சொல்கிறாள் செபா.
"1.இதுவரை நீங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறீர்களா?"

"2.எத்தனை முறை?"

"3.அப்போது நீங்கள் என்ன எதிர்வினையாற்றியிருக்கிறீர்கள்?"
அவ்வெள்ளைத்தாளில் எல்லோரும் மிக ஒற்றுமையாக "இல்லை" என்கிற ஒற்றை பதிலையே எழுதிக்கொடுத்துவிட்டு கிளம்புகிறார்கள்.
செபாவால் இதனைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தனக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்லக்கூட யாரும் முன்வருவதில்லையே என்று வருந்தி அங்கு வந்திருக்கிற பாய்சாவிடம் கேட்கிறாள்,
"நீ இதோட அஞ்சாவது முறை இங்க வர்றியே, எதுக்கு இங்க வந்த? என்னை பார்க்கவா?  புரிஞ்சிக்க பாய்சா.. டாக்டர் கிட்ட போயிட்டு, உனக்கு வயிறு வலிக்கிதுன்னு சொல்ல கூச்சப்பட்டீனா அவரால எப்படி உனக்கு உதவ முடியும்? வருத்தப்படவேண்டியதும் வெக்கப்படவேண்டியதும் நீ இல்ல; உன்கிட்ட அசிங்கமா நடந்துகிட்டானே, அந்த மிருகந்தான்.."
அப்போதும் பாய்சா "இல்லை" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறாள்.


ஒருநாள் பாய்சா சாலையில் நடந்து கொண்டிருக்கையில் ஒருவன் அவளைப் பின்தொடர்ந்து அவளிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறான். கூடுமான வரையில் கோபத்தை கட்டுப்படுத்திப்பார்க்கிறாள். அவன் எல்லை தாண்ட முயற்சிக்கிறபோது, அவள் தன்னுடைய கைப்பையிலிருந்து கூர்மையான பொருளொன்றை எடுத்து அவனது 'குறி'நோக்கி தாக்கிவிடுகிறாள். பயத்தில் என்ன செய்வதென்றே புரியாமல், நேராக  செபா வீட்டிற்கு செல்கிறாள். அவளுடைய உதவியுடன் ஆடையை மாற்றிக்கொண்டு வீடுவந்து சேர்கிறாள்.


மற்றொருநாள் வழக்கம்போல அவளது 678 எண் பேருந்தில் பயணம் செய்கிறபோது, ஒருவன் அவளை உரசத் துவங்குகிறான். மீண்டும் கூர்மையான அதே பொருளினால் அவனது குறியின்மீதும் தாக்கிவிட்டு யாரும் கண்டுபிடிப்பதற்குமுன்னர் அப்பேருந்திலிருந்து இறங்கி தப்பிக்கிறாள்.


மூன்றாவது முறையும் அதே போன்று அவளிடம் தவறாக நடக்க முயன்ற வேறொருவனையும் தாக்கிவிட்டு யாருமறியாவண்ணம் ஓடிவிடுகிறாள். பேருந்தில் எப்போதும் கூட்டம் மிக அதிகமாகவே இருப்பதால், அவளை யாரும் கண்டுபிடித்துவிடவில்லை. 


எகிப்து முழுவதும் இச்செய்தி பரவுகிறது. குற்றவாளியினைக் கண்டுபிடிக்க சிறப்பு காவல் அதிகாரியொருவரை அரசு நியமிக்கிறது. அவரும் காயம்பட்டவர்களை தனித்தனியே விசாரித்து, குற்றப்பின்னனியினைக் கண்டுபிடிக்கிறார். பெண்களுக்கு தற்காப்பு வித்தைகள் சொல்லித்தரும் செபாவை கண்காணித்து, அதன்மூலம் பாய்சாதான் குற்றவாளியெனக் கண்டறிகிறார். அந்நேரத்தில்தான் அவருக்கு பெண்குழந்தை பிறந்திருப்பதாக செய்தி வர, 'இனி இதுபோன்று செய்யாதீர்கள்' என்று சொல்லி எவ்வித வழக்கும் போடாமல் அவர்களை அனுப்பிவிடுகிறார் காவலதிகாரி.


நில்லி ஒரு நிறுவனத்தில் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு கடனட்டை வாங்கவைக்கிற வேலையினை செய்கிறாள். ஒரு நாள், வாடிக்கையாளர் ஒருவருக்கு அழைக்கிறபோது,
நில்லி : "சார் நான் சர்க்கிள் டிஸ்கவுன்ட் சொல்யூசன்ல இருந்து நில்லி பேசுறேன். ஒரு அஞ்சு நிமிடம் ஒதுக்குனீங்கன்னா, எங்க நிறுவனத்தின் கடன் அட்டையோட சலுகைகளை நான் விளக்கமுடியும்"

வாடிக்கையாளர் : "நில்லியா? நீங்க சாராவோட தோழியா?"

நில்லி : "இல்ல சார். அது யாருன்னு எனக்கு தெரியாது சார். நான் சொல்லவந்தது என்னன்னா....."

வாடிக்கையாளர் : "ஆனா உங்க குரல் எங்கயோ கேட்டமாதிரி இருக்குதே! நீங்க எந்த ஏரியாவுல இருந்து கால் பண்றீங்க?"

நில்லி : "என்ன நம்புங்க சார்... எனக்கு தெரியாதுசார் உங்கள... நான் சொல்லவந்தது...."

வாடிக்கையாளர் : "இல்ல.. நீங்க சொல்லுங்க எந்த ஏரியாவுல இருக்கீங்கன்னு"

நில்லி : "நாசிர் ஏரியா சார்"

வாடிக்கையாளர் : "ஓகே. நானும் பக்கத்துலதான் இருக்கேன். என்கிட்ட கார் இருக்கு... நான் அங்க வந்து உங்கள பாக்குறேன்..."
பயத்தில் நடுநடுங்கி, அழைப்பைத்துண்டிக்கிறாள் நில்லி. உடனே உயரதிகாரி நில்லி அருகே வந்து, 
"வாடிக்கையாளரிடம் அன்பாக பேச கத்துக்கோ. உன்னை என்ன அவன் கூடவா போக சொன்னேன். அன்பா பேசி, அழகா அவனையே அழைப்பை துண்டிக்க வைக்கணும். அதுதான் திறமை..." 
என்று கடுமையாக திட்டித்தீர்க்கிறார் நில்லியை. எதுவும் பேசமுடியாமல், அமைதியாகிறாள் நில்லி.


கோபமும் சோகமும் கலந்ததொரு மனநிலையோடு, வீட்டிற்கு செல்லப்புறப்படுகிறாள். வீட்டை நெருங்கி சாலையைக்கடக்கிற வேளையில், மிதமான வேகத்தில் வண்டியொன்று அவளருகே செல்கிறது. அதனை ஓட்டிவந்தவன், நில்லியின் மார்பினைத்தொடநினைத்து அவளது சட்டையைப் பிடித்துக்கொள்கிறான். அவளது சட்டையை விடாமல் அவன் வண்டியை தொடர்ந்து ஓட்டுகிறான். அவளும் வண்டியுடனே ஓடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறாள். சிறிதுதூரம் சென்றதும் நிலைதடுமாறி கீழேவிழுகிறாள் நில்லி. அலுவலகத்தில் அனுதினமும் அவளுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவமும், அதனைத்தொடர்ந்து சாலையில் நிகழ்ந்த கொடுமையும், அவளுக்கு ஒரு வேகத்தை கொடுக்கிறது. அடுத்த வினாடியே சாலையிலிருந்து எழுந்து, அவ்வண்டியைப் பின்தொடர்ந்து ஓடுகிறாள். சற்று தொலைவில் சிக்னலில் மாட்டிக்கொள்கிறது வண்டி. அவளை துன்புறுத்தியவனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்கள். நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்தும் அவளது வருங்கால கணவனும் செய்தியறிந்து காவல்நிலையத்திற்கு வருகிறான்.


அங்கே காவல் அதிகாரி, இதனை பாலியல் வன்கொடுமைச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய மறுக்கிறார். கடுமையாக வாதிட்டுப் பார்க்கிறார்கள் நில்லியும் அவளது வருங்காலக்கணவனும். அதற்கு மேலதிகாரியின் ஒப்புதல் வேண்டுமென்றும், வேறொரு காவல் நிலையத்திற்கு செல்லவேண்டுமென்றும் அலைக்கழிக்கிறார் அக்காவல் அதிகாரி. அவளும் விடாமல், உயர் காவல் நிலையத்திற்கு சென்று ஒருவழியாக பாலியல் வன்கொடுமை வழக்காக பதிவு செய்கிறாள். இதுதான் எகிப்து நாட்டிலேயே முதன்முதலாக பதிவுசெய்யப்பட்ட முதல் பாலியல் வன்கொடுமை வழக்கு என்பது அவளுக்கு அப்போது தெரியாது.


அதன் காரணமாக நேயர்கள் தொடர்பு கொண்டு நேரடியாக கேள்வி கேட்கிற ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கெடுக்க நில்லிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. போத்தைனா என்கிற பெயரில் ஒரு பெண் நேயர் அழைக்கிறார்.
போத்தைனா : "நில்லி! உங்கள மாதிரி ஆகறதுக்கு நாங்கெல்லாம் ஆசைப்படதான் முடியாது. ஆனா ஆகமுடியாது"

நில்லி : "நான் ஒன்னும் வித்யாசமா பெருசா எதையும் செஞ்சிரல... அந்த நேரத்துல என்ன செய்யணுமோ அதைத்தான் செஞ்சேன்"

போத்தைனா : "அது உண்மையிலேயே கடினமான ஒன்றுதான் நில்லி. உங்களுக்கு ஒன்னு தெரியுமா? என்னோட பேரு போத்தைனா கூட இல்ல..."

என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிடுகிறாள் போத்தைனா என்கிற பெயரில் அழைத்த பாய்சா.

அடுத்ததாக, அகமத் என்பவர் அழைக்கிறார்.
அகமத் : "பாலியல் தொல்லைகள் எல்லா இடத்திலேயுமா நடக்குது? எல்லோருக்குமா நடக்குது? எனக்கும் தங்கச்சிங்க இருக்காங்க, எங்க வீட்லயும் பெண்கள் இருக்காங்க... ஆனா யாருக்கும் இதுமாதிரி நடக்குறதில்ல... நீ ஏதாவது மோசமான ஆடைகள் போட்டுட்டு இருந்திருப்ப... அதான் அப்படி ஆயிருக்கு..."
நில்லி உடனே எழுந்து நின்று சொல்கிறாள், "நான் இப்ப போட்டிருக்கேனே, அதே உடைகள்தான் அன்னைக்கும் போட்டிருந்தேன். இது என்ன மோசமாவா இருக்கு?"
அகமத் : "இல்ல"
நில்லி : "உங்க வீட்ல உங்க தங்கச்சிங்களுக்கு எதுவும் நடக்குரதில்லன்னு சொல்றீங்களே... அப்படியில்ல அது... அவங்களுக்கும் இதுமாதிரி நடக்கத்தான் செய்யுது... ஆனா அவங்க வெளிய சொல்றதில்ல, நான் சொல்லிருக்கேன்... அவ்வளவுதான் வித்யாசம்... உடனே எங்கிட்ட கேட்ட கேள்வியையே உங்க தங்கச்சிங்ககிட்டயும் கேட்டுராதீங்க...."


நில்லியின் குடும்பத்தாரும், அவளது வருங்காலக் கணவனின் குடும்பத்தாரும் வழக்கை திரும்பப்பெறுமாறு அவளை வற்புறுத்துகிறார்கள். அவளது வருங்காலக்கணவனும் எதிர்கால வாழ்க்கையைச் சொல்லி அதையே வழிமொழிகிறான். நில்லி அதனை மறுத்துவிடுகிறாள். அவன் நடத்தும் நகைச்சுவை நிகழ்ச்சியொன்றில் நில்லிக்கும் வாய்ப்பு பெற்றுத்தருகிறான் அவன். அதிலே, நில்லி சற்று நகைச்சுவை கலந்து தனக்கு நேர்ந்த கொடுமையினையே தொகுத்துப் பேசுகிறாள். அவள், தற்போது தனது காதலன்கூட துணைக்கு இல்லை என்றும் சொல்லிமுடிக்கிறாள் அந்நிகழ்ச்சியினை.


ஒரு நாள் வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. 'வழக்கை திரும்பப்பெற்றுக்கொள்கிறாயா' என்று நீதிபதிகள் நில்லியைப்பார்த்து கேட்கிறார்கள். அவள் தன்னுடைய குடும்பத்தைப்பார்க்கிறாள். எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறாள். நீதிமன்றமே அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறது. சட்டென அவளது காதலன் எழுந்து நின்று, "அவள் வழக்கை திரும்பப் பெறமாட்டாள்"  என்கிறான். 

அவளும் மகிழ்ச்சிபொங்க, "ஆமாம். நான் வழக்கை திரும்பப்பெறமாட்டேன்" 
என்கிறாள். நீதிமன்றத்தில் குவிந்திருக்கும் ஒட்டுமொத்த மக்களும் கைதட்டி வரவேற்கிறார்கள் அவளது முடிவை.


நில்லியின் வழக்கில் அவளை பாலியில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவனுக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கிறது. அதன்பிறகு ஓராண்டு கழித்து, எகிப்தில் பாலியில் வன்கொடுமைக்கென தனியாக சட்டங்கள் இயற்றப்படுகிறது. ஆனாலும் இன்றளவும் பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்கள் மிகக்குறைவாகவே காணப்படுகின்றன என்கிற வாசகத்தோடு படம் நிறைவுபெறுகிறது.


படம் பார்க்க..

-இ.பா.சிந்தன் 

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)