Showing posts with label முல்லைப் பெரியாறு. Show all posts
Showing posts with label முல்லைப் பெரியாறு. Show all posts

Friday, December 23, 2011

முல்லைப் பெரியாறு : உரிமை காப்போம், உறவைப் பேணுவோம்!


முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் பாரம்பரிய உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக்குழு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர முடியாது. அணையில் 142 அடி அளவுக்கு தண்ணீர் தேக்க வேண்டும், முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க மத்திய தொழில்பாதுகாப்புப் படையை அனுப்ப வேண்டும், அணையை பலப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பேரவையில் தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை, தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தின் அளவைப் பொறுத்தே தேனி, மதுரை, திண்டுக்கல், இராமநாத புரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவை உள்ளது. இந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய ஒன்றாக முல்லைப் பெரியாறு அணை உள்ளது. அணையின் அளவு 136 அடியாக குறைக்கப்பட்டதால் ஏற்கெனவே பாசனப் பரப்பு சுருங்கியுள்ளதோடு, ஒரு பகுதியில் இருபோக சாகுபடி ஒருபோக சாகுபடியாக மாறியுள்ளது.

இந்தப் பிரச்சனையில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் 5பேர் கொண்ட அதிகாரம் பெற்ற உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு மற்றும் தமிழகத்தின் பாசனப் பாதுகாப்பு குறித்து இந்த அதிகாரம் பெற்ற குழு ஆய்வு செய்து வருகிறது. இந்தக்குழுவின் அறிக்கையின் அடிப் படையில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க உள்ளது. 

முல்லைப் பெரியாறு பிரச்சனை என்பது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சனை ஆகும். அணையின் பாதுகாப்பு குறித்து பொறியாளர்கள் மற்றும் நீரியல் துறை நிபுணர்களே துல்லியமான முடிவை கூறமுடியும். உயர் நிலைக்குழு அமைத்துள்ள தொழில் நுட்பக்குழு அணையை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறது.

நிபுணர்குழுவின் அறிக்கை மற்றும் உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு இருதரப்பும் காத்திருப்பதே பொருத்தமாக இருக்கும். தமிழகம் மற்றும் கேரளம் தங்களது தரப்பு நியாயத்தை முழுமையாக உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் கேரள சட்டமன்றத்தில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும், புதிய அணை கட்ட வேண்டுமென்றும் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஏற்புடையதல்ல. 

இந்தப் பின்னணியில், தமிழக -கேரள எல்லையில் இருவாரங்களாக நடந்து வரும் நிகழ்வுகள் கவலையளிப்பதாக உள்ளன. கேரளத்திற்கு சென்ற சபரிமலை பக்தர்கள் தாக்கப்பட்டதாகவும், அங்கிருந்து தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. அதே போன்று தமிழகத்தில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தி வரும் வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு டீக்கடைகள், பேக்கரிகள் தாக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. 

தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிகவும் கவலையளிக்கத்தக்க இத்தகைய போராட்டங்களை கைவிட வேண்டும். பொருளாதாரத்தடை, எல்லை முற்றுகை போன்றவைகள் பிரச்சனையை தீர்க்க உதவாது. மாறாக மக்கள் ஒற்றுமையை சிதைக்கவே இட்டுச்செல்லும். தமிழகமும் கேரளமும் பாரம்பரியமாக நல்லிணக்கமும் நல்லுறவும் கொண்ட மாநிலங்களாகும், புவியியல் ரீதியாக மட்டுமின்றி பொருளியல் ரீதியாகவும் இரு மாநிலங்களும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. காய்கறி, முட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தமிழகத்திலிருந்து கேரளத்திற்கு செல்கின்றன. ஆழியாறு - பரம்பிக் குளம் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் ஒரு பகுதிக்கு குடிநீர் கிடைக்கிறது.

கேரளத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்திலும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கேரளத்திலும் நீண்ட நெடுங்காலமாக நல்லிணக்கத்தின் அடிப்படையில் ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்து வரு கின்றனர். பண்பாட்டு ரீதியாகவும், இரு மாநில மக்களுக்கிடையிலும் நெருங்கிய உறவு நீடித்து வருகிறது என்பதை இலக்கியங்களின் வாயிலாகவும், கலைகளின் வாயிலாகவும் அறிந்து கொள்ள முடியும்.

இந்தப் பின்னணியில், சகோதர மக்களிடையே மோதல் தூண்டிவிடப்படுவது மிகவும் துரதிருஷ்டவசமாகும். தமிழக - கேரள எல்லையின் இரு பகுதியிலும் பதற்றத்தை ஏற்படுத்தும் சக்திகளுக்கு இடம் தராமலும், ஆத்திரமூட்டும் செயல்களுக்கு இரையாகாமலும், பாரம்பரிய நட்புறவு மற்றும் அண்டை மாநில நல்லுறவை பேணுமாறு இரு மாநில மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் வேலை நிமித்தம் பணிபுரியும் தமிழ் மக்களுக்கும் சபரிமலை பக்தர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கேரள அரசு வழங்க வேண்டுமென்றும், தமிழகத்தில் வன்முறைச் சம்பவங்களுக்கு இடமளிக்காமல் உரிய பாதுகாப்பு ஏற்பாட்டை தமிழக அரசு செய்திட வேண்டும் என்றும் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது. 

மத்திய அரசு இந்த விசயத்தில் வெறும் பார்வையாளராக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, இரு மாநிலங்களிலும் சுமூக நிலையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் என்பதையும் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. 

கட்சியின் கேரள மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில், அமைதியான வாழ்க்கைக்கு பங்கம் விளைவிப்பவர்களை தடுத்திட இரு மாநிலங்களிலும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளும், இடதுசாரி ஊழியர்களும் ஜனநாயக சக்திகளும் பணியாற்ற வேண்டும், சபரிமலைக்குச் செல்கிற அடுத்த மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டோருக்கு அனைத்துவித பாதுகாப்பு வழங்குவது, அரசு மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களும் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சனையில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு விரைந்து கிடைத்திட மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

* தமிழகத்தின் பாரம்பரிய பாசன, குடிநீர் உரிமையை பாதுகாப்போம்.

* தமிழக-கேரள மக்களுக்கு இடையி லான சகோதர உறவை பாதுகாப்போம்.

Tuesday, December 20, 2011

தினகரன், தினத்தந்தி, தினமலர்களே உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா?


பத்தாம் நாள் போராட்டம், பதினொன்றாம் நாள் போராட்டம், பனிரெண்டாம் நாள் போராட்டம் என ஒவ்வொரு நாளும் முழுப்பக்க படங்களோடும், ஒவ்வொரு பக்கத்திலும் எதாவது தாக்குதல் செய்திகளுமாய் தினகரன் பத்திரிகை வெறிபிடித்து வருகிறது. டயர் எரித்தாலும் செய்தி. உம்மன் சாண்டியை எரித்தாலும் செய்தி. கேரள எல்லையில் கூட்டம் சென்றாலும் செய்தி. தனியாய்  நின்றாலும் செய்தி. கேரள மக்களுக்குச் சொந்தமான கடைகளை அடித்து நொறுக்கினாலும் செய்தி. தமிழக மக்கள் கேரளாவிலிருந்து விரட்டப்பட்டாலும் செய்தி. தினகரனுக்குத்  தாங்களும் சளைத்துப் போய்விடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் தினமலரும், தினகரனும் வரிந்து கட்டிக்கொண்டு செய்திகளை வெளியிடுகின்றன.  பிறகு முல்லைப் பெரியாறில் தண்ணீர் வரவேண்டும் என்பதா அவர்களின் நோக்கமாக இருக்கப் போகிறது?


போதாக்குறைக்கு இருக்கவே இருக்கின்றன தொலைக் காட்சிகள். தமிழக மக்களிடையே பெரும் கோபத்தையும், வெறியையும் திட்டமிட்டு இந்த பிரபல ஊடகங்கள் அனைத்தும் ஒன்றுபோல் ஊட்டிக்கொண்டு இருக்கின்றன. இதனைப் பார்க்கிற கேரள மக்களுக்கும் இதேபோல் கோபமும் வெறியும் ஏற்படும். அங்கு இருக்கிற பத்திரிகைகளும் இதே காரியத்தைத்தான் அங்கு செய்கின்றன. இரண்டு மாநிலத்து மக்களும் ஒருவருக்கொருவர் மோதி  அடித்துக் கொள்வதில்தான் இந்த ஊடகங்களுக்கு எவ்வளவு சந்தோஷம்? தங்கள் தந்திரங்கள் சரியாக கிளிக் ஆகி, பத்திரிகை விற்பனையும் அமோகமாக நடக்கிறதல்லவா?


கேரளாவில் இதுபோல்  ஊட்டப்படும் வெறிக்கு ஆளாகும் அங்குள்ள மக்களை, ‘மலையாளிகளின் அட்டகாசம்’ , ‘மலையாளத் திமிர்’ என்றெல்லாம்  இந்த பத்திரிகைகள்  அடைமொழிகள் இடுகின்றன. தமிழகத்தில் உள்ளவர்கள் கேரளாக்காரர்களின் கடையை அடித்து நொறுக்கினால் ‘தமிழர்களின் எழுச்சி’ என்றும், வீரம் போலவும் சித்தரிக்கின்றன. இந்த வார்த்தைகள் இனவெறியையும், இனப்பகைமையையும் விதைக்கின்றனவா இல்லையா? இதில் என்ன பெருமைப்படவும்,  போற்றிக்கொளவும் இருக்கிறது. மக்கள் ஒருவருக்கொருவர் தங்களை அடித்துக் கொள்வதில் என்ன எழுச்சி வேண்டிக் கிடக்கிறது? இப்படித்தானே மன்னர்களின் வரலாற்றில் படைகள் என்ற பெயரில் மக்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு வீழ்ந்து கிடந்தார்கள்?


இருதரப்பு எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் தமிழகத்திலிருந்து காய்கறி, பால், முட்டை போன்ற உணவுப்பொருட்கள் கேரளம் செல்வது தடைப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படுவது கேரள மக்கள் மட்டுமல்ல. தமிழக விவசாயிகளும்தான் என்பதை மறந்துவிடலாகாது. கேரளம் செல்லும் அனைத்துப் பாதையையும் அடைப்போம் என்றெல்லாம் இங்குள்ள சிலர் கோஷம் எழுப்புவதும் மக்களை உசுப்பிவிடுவதும் எந்த வகையிலும் பிரச்சனை தீர உதவாது என்பதோடு, தமிழக மக்களுக்கும் நலன் பயக்காது என்பது உறுதி.


மக்களை முன்வைத்துத்தான் அணை பாதுகாப்பற்றது எனப் பிரச்சினையை ஒருபக்கம் ஆரம்பித்தார்கள். மக்களை முன்வைத்துத்தான் அணை பாதுகாப்பானது, தண்ணீர் வேண்டும் என்பதில்  இன்னொரு பக்கம் உறுதியாய் இருந்தார்கள். மக்களை முன்வைத்துத்தான்   இருபக்கமும் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்தன. மக்களை முன்வைத்துத்தான் அரசியல் கணக்குகளும், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளும் தீர்மானிக்கப்பட்டன.   ஆனால் இந்த மொத்த விவகாரத்திலும் இரு மாநிலத்து மக்களுக்கும்  என்ன பங்கு இருக்கிறது, தத்தம் தலைவர்கள் சொன்னதைக் கேட்டதைத் தவிர.  ஆனால் அந்த மக்கள்தாம் ஒருவருக்கொருவர் இன்று அடித்துக்கொண்டு சாகின்றனர். இது என்ன கொடூரம்?


இரண்டு பக்கமும் அமைதி வேண்டி, மக்களின் நல்லிணக்கம் வேண்டி குரல்கள் எழுகின்றன. அவைகள்  இந்தப் பத்திரிகைகளால் கண்டுகொள்ளப்படுவதில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும், அதுவரை இருபக்கமும் பொறுமையாய் இருக்க வேண்டும் என சுமூகத் தீர்வுக்கு பேசும் சக்திகள் இந்த பத்திரிக்கைகளால் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.


மக்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வதை நாட்கணக்கில் படங்களாய் போட்டு ‘சேவை’ செய்யும் இந்தப் பத்திரிகைகள், மக்கள் அரசுக்கெதிராய் நடத்தும் போராட்டங்களை இதே போல் வெளியிடுவார்களா? எத்தனையோ கிராமங்களில் இன்னும் தீண்டாமைக் கொடுமை அடர்ந்து இருக்கின்றன, அதற்கெதிரான தலித் மக்களின் போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவற்றையெல்லாம் இப்படிப் படங்களாய்ப் பிடித்துப் போடுவார்களா? அரசின் மோசமானக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு வீடிழந்து, மண்ணிழந்து, வாழ்க்கையிழந்து நடுத்தெருவில் வீசியெறியப்பட்ட  மக்கள் தேசமெங்கும்  நிறைந்து கிடக்கின்றனர். அவர்களிடம்  உருக்கமானப் பேட்டிகளை வாங்கி வெளியிடுவார்களா? தங்கள் ஆதிக்கத்துக்கும்  அதிகார வர்க்கத்துக்கும் எதிரான சிறு கல்லையும் எடுத்துப் போடாத இந்த பத்திரிகைகள் மக்களின் மீது பாறாங்கல்லைத் தூக்கிப் போட கொஞ்சமும் யோசிப்பதில்லை.  தங்களுக்கு கல்லா கட்டினால் சரி.


தினகரன், தினத்தந்தி, தினமலர்களே உங்களுக்குக் கொஞ்சமும் மனசாட்சியே கிடையாதா?

Tuesday, December 13, 2011

முல்லைப் பெரியாறு அணை உடையுமா?


முல்லை பெரியாறு அணை பூகம்பம் வந்தால் உடைந்து விடும். அதனால் 40 லட்சம் பேருக்கு பாதிப்பு எனச் சொல்கிறார்கள். அங்கே பூகம்பம் வந்தால் மட்டும் தான் பாதிக்குமா? பாதுகாப்பான இடத்தில் வேறு அணை கட்டுவதாகச் சொல்கிறார்களே, அங்கே பூகம்பம் வந்தாலும் அதேபோல் தானே பாதிக்கும்? இயற்கைப் பெருஞ்சீற்றங்கள் எங்கே எப்போது வந்தாலும் மனிதன் உருவாக்கி வைத்திருக்கும் பாதுகாப்புகள் வரம்புக்கு உட்பட்ட அற்பமானவையே!

முல்லை பெரியாறு பிரச்சனையில் இரு மாநில உறவுகள், அரசியல் மோதல்கள், மக்கள் உயிர் பாதுகாப்பு, விவசாயிகள் வாழ்வாதாரம் என எத்தனையோ பரிமாணங்கள் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் அடிப்படையான ஒரு விசயம் நம்பிக்கை சார்ந்தது! எதை நம்புவது என்பது! விஞ்ஞானத்தை நம்புவதா, வேண்டாமா என்பது இதற்குள்ளும் பொதிந்திருக்கிறது.

விஞ்ஞானரீதியாக ஆய்வு செய்து அணை பலமாக இருக்கிறது என்று பொறியாளர்களும், வல்லுநர்களும் சொல்வதை யாவரும் ஏற்க வேண்டும். அதைத் தாண்டி அணை உடையுமா என்றால் அதற்கு ஐந்தோ, பத்து சதவிகிதமோ வாய்ப்பு இருக்கலாம். ஆனால் விஞ்ஞானரீதியாக அறிஞர்கள் ஆய்ந்து அணை உடையாது என்று சொல்வதை நாம் ஏற்க வேண்டும், நம்ப வேண்டும். இந்த வழிமுறையைப் பின்பற்றாமல் உடைந்து விடும் என்று "வெற்று" நம்பிக்கை அடிப்படையில் பேசுவது, பீதி கிளப்புவது சரியல்ல.இவைகளுக்கு எதிரான நம்பிக்கையூட்டும் பிரச்சாரத்தைச் செய்வதே நமது பணியாய் இருக்க வேண்டும்.

முல்லை பெரியாறு என்ற ஒரேயொரு பிரச்சனைக்கு மட்டுமல்ல, வாழ்வின் எந்தவொரு பிரச்சனையையும் இது போல் விஞ்ஞானத்துக்குப் புறம்பான ஏதோ ஒரு நம்பிக்கை அடிப்படையில் முடக்க முடியும், தகர்க்க முடியும். ஆனால் மனிதகுலத்தின் நீடித்த வளர்ச்சிக்கு அது உதவாது. வரலாற்றுரீதியாக அது பின்னடைவை ஏற்படுத்தும்.

நம் காலத்தின் மற்றொரு உதாரணம் சேது சமுத்திரத் திட்டம்! சேது கால்வாய் உருவாக்கப்பட்டால் தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் உதவியாக இருந்திருக்கும். ஆனால் அதை மதவெறியர்கள் "நம்பிக்கை" அடிப்படையில் முடக்கி விட்டார்கள். கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையிலும் கூட அத்தகைய ஒரு விசயம் இருக்கிறது. மக்களுக்கு விஞ்ஞானரீதியாக ஒளியூட்டினால், அதன் சாதக, பாதகங்களை அறியவைத்தால் நல்லது.

வெற்று அச்சம், அழிவு ஏற்படும் என்ற அவநம்பிக்கை முன்னேற்றத்துக்கு உதவாது. மனிதன் ஒவ்வொரு முறையும் இயற்கையோடு போராடியே முன்னேறியுள்ளான். அதனால் இயற்கை வளங்கள் பாதிக்கும் போது இயற்கை அதற்கும் எதிர்வினை ஆற்றி தனது வல்லமையை நிரூபித்து வருகிறது. அதற்கு ஏற்ப இயற்கையோடு தேவையானவற்றில் இயைந்தும், சாத்தியமானவற்றில் போராடியும் மாற்றைக் கண்டுபிடித்துத்தான் மனிதகுலம் தன் வாழ்க்கை பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

எனவே விஞ்ஞானத்தின் மீதான நம்பிக்கை என்ற அடிப்படையும் முல்லை பெரியாறு விசயத்தில் கேள்விக்குள்ளாக்கப்படுவதை நாம் ஏற்கக் கூடாது. உண்மையானத் தரவுகளின் அடிப்படை இல்லாமல் ஏற்படுத்தப்படும் அச்சங்கள் விஞ்ஞானத்துக்குப் புறம்பானது மட்டுமல்ல, மக்களுக்கு இழைக்கும் துரோகமும் ஆகும்.

- தூயவன்

முல்லைப் பெரியாறு : ஊடகங்களின் பொறுப்பின்மை


ஒரு நடிகரின் மரணத்திற்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் விவசாயிகள் தற்கொலைக்கு கொடுக்கப்படுவதில்லை என் பதை நீதிபதி மார்கண்டேய கட்ஜு மிகுந்த வேதனையோடு சுட்டிக்காட்டியுள்ளார். அந்த நடிகருக்கு தாமும் ரசிகர்தான், ஆனாலும் அவர் மரணத்திற்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் இதர சமூக அரசியல் பொருளாதார பிரச் சனைகளுக்கு தரப்படுவதில்லையே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இவை பொருள் பொதிந்த கேள்விகள்.

தமிழகத்திலும் கடுமையான பேருந்து கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, காத்திருக்கும் மின்கட்டண உயர்வு, எப்போதும் இல்லாத மின்வெட்டு என தமிழகம் மிகப் பெரிய நெருக்கடியில் தவிக்கிறது. தொழில்கள் முடங்குகின்றன. வாழ்க்கை நைந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் இதற்கு தமிழக ஊடகங்கள் கொடுக்கிற முக்கியத்துவத்தை விட, வேறு சில உணர்ச்சிபூர்வமான பிரச்சனைகளில் கொம்பு சீவி விடுவதற்கே அதிகம் வாய்ப்பளிக்கிறது.

முல்லைப் பெரியாறு பிரச்சனை ஒரு முக்கிய மான பிரச்சனை தான். `உயிர் பயம்’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி ஒரு தரப்பிலும் `வாழ்வாதாரத்திற்கு ஆபத்து’ என்பதை கூறி மறு பக்கமும் மக்களை திரட்டுகிறார்கள். அறிவியல் பூர்வமாகவும், நடைமுறை சாத்தியமானதாகவும், சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டதுமான ஒரு நியாயமான தீர்வை எட்டுவதற்கு இடையூறாக இரண்டு பக்கமும் சில சுயநல சக்திகள் கொம்பு சீவி விடுகின்றன. முன்னாள் முதல்வர் ஆரம்பத்திலேயே மாநிலங்களுக்குள் பகைமை வளர்க்க இதை பயன்படுத்தக் கூடாது என்று அறிக்கையில் தெரிவித்தார். தற்போது முதல்வர் ஜெயலலிதாவும் வதந்தியை பரப்பாமல், அண்டை மாநில மக்கள் ஒருவரை ஒருவர் பகைக் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவும், இரு மாநில மக்களும் அமைதிக் காத்து சுமூகமாக தீர்வு காண வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பிற்கு இணங்கல் அல்லது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணல். இந்த இரண்டு வழிகளுக்கு மாற்று வழி ஏதும் கிடையாது.

ஆயினும் சில சுய நல சக்திகள் நடை முறைக்கு ஒவ்வாத வெறித்தனங்களை தூண்டி விடுவதில் மும்முரம் காட்டுகின்றன. வதந்தியும், பதற்றமும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. கொடுமை என்னவெனில், சமூக பொறுப்போடு இவற்றை அணுகாமல் ஊடகங்கள் தங்கள் விற்பனைக்கும் பரபரப்பிற்கும் இதை பயன்படுத்துவது ஆபத்தானது; பிரச்சனையைத் தீர்க்க உதவாது.

ஊடகங்கள் இப்படி முல்லைப்பெரியாறில் மட்டுமல்ல, வேறு சில உணர்ச்சிமயமான பிரச்சனைகளிலும் சமூக பொறுப்போடு நடந்து கொள்ளவில்லை என்பதை யாரும் மறுக்க முடி யாது. நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, ஊடகங்கள் குறித்து சமீப காலமாக செய்து வரும் விமர்சனங்கள் தமிழக ஊடகங்களுக்கும் பொருந்தும்.

Saturday, December 10, 2011

சகோதர உறவை சீர்குலைக்கும் காங்கிரஸ், பாஜகவுக்கு கேரள சி.பி.எம் கண்டனம்!

முல்லைப் பெரியாறு பிரச்சினையில்,  இரு மாநிலங்களுக்கிடையே பகைமை இல்லாமல், சுமூகமானத் தீர்வை காணவேண்டும் என சி.பி.எம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தனது நிலைபாட்டை அறிவித்திருந்தது.

இதற்கிடையில் பிரதேச, இன, மொழி என பிரிவினைகளைத் தூண்டி, இரு மாநிலத்து மக்களிடையேயும் பகைமையையும், சகோதர உறவையும் சீர்குலைக்கும் காரியங்கள் நடந்தன. சில பகுதிகளில் வன்முறைச்செயல்களும் நடைபெற்றன.

இந்த நிலையில், டிசம்பர் 7ந்தேதி சி.பி.எம் கட்சியின் கேரள மாநிலச் செயற்குழு  விவாதித்தது. தமிழக - கேரள மக்களிடையே நிலவும் சகோதர உறவுக்கு தீங்கு விளைவிக்கும் போராட்டங்களில் ஈடுபடும் காங்கிரஸ் - பாஜக கட்சியினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரள - தமிழ்நாடு மக்களிடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வருகிற சகோதர உறவுக்கு எவ்விதத்திலும் தீங்கு விளைவித்து விடக்கூடாது. இரு மாநில அரசுகளும் மத்திய அரசும் பயனுள்ள வகையில் தலையிட்டு, முல்லைப் பெரியாறு பிரச்சனைக்குக் கூடிய விரைவில் தீர்வு காண வேண்டும்.

இந்தப் பிரச்சனையைப் பயன்படுத்தி, சில அரசியல் இயக்கங்களின் பிரதேச ஊழியர்களும் வன்முறைச் சக்திகளும் தவறான முறையில் செயல்பட்டு, நிலைமையை மோசமாக்குவது துரதிருஷ்ட மாகும்.

தமிழ்நாட்டுக்கான தண்ணீருக்கு நஷ்டம் ஏற்படுத்த குமுளியில் ஷட்டரைத் தகர்ப்பது என்ற வக்கிரமான போராட் டத்தையே இளைஞர் காங்கிரஸ்காரர்கள் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து, மலையாளிகளின் வாகனங்களைத் தடுப்பது, அவர்களின் கடைகளை எரிப்பது, மலையாளத் தம்பதிகளைத் தாக்குவது முதலான - முற்றிலும் கண்டிக்கத்தக்கதும் எதிர்க்கத்தக்கதுமான சம்பவங்கள் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் நிகழ்ந்தன.

அடுத்த மாநிலத்தவரின் நடமாடும் சுதந்திரத்தையோ, இயல்பான வாழ்க்கையையோ தடுக்கிற எந்த முயற்சியும் தாக்குதலும் தமிழ்நாட்டிலோ, கேரளத்திலோ நிகழ்வதைக் கடுமையாக ஒடுக்க வேண்டும். இத்தகைய வன்முறைச்சக்திகளைத் தனிமைப்படுத்த அரசுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

அமைதியான வாழ்க்கைக்கு பங்கம் விளைவிப்பவர்களைத் தடுத்திட இரு மாநிலங்களிலும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளும் இடதுசாரி ஊழியர்களும் ஜனநாயக சக்திகளும் களம் இறங்க வேண்டும். சபரிமலைக்குச் செல்கிற அடுத்த மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டோர்க்கு அனைத்துவிதப் பாதுகாப்பும் வழங்குவதற்கு அரசு மட்டுமல்லாமல் கட்சி ஊழியர்களும் களமிறங்க வேண்டும்.

நெருக்கமான பக்கத்து மாநிலத்தவர்களாக வாழ்கிற கேரளத்தையும் தமிழ்நாட்டையும் சேர்ந்த மக்கள் இந்த இரு மாநிலங்களிலும் பணி செய்து வாழ்ந்து வருகிறார்கள். இரு மாநில மக்களும் பரஸ்பரம் வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்வது உண்டு. இந்த வாழ்க்கை முறையைச் சீர்குலைக்க வரும் எதையும் இரு மாநிலங்களையும் சேர்ந்த அறிவார்ந்த மக்கள் அனுமதிக்கக்கூடாது.

“கேரளத்துக்குப் பாதுகாப்பு; தமிழ்நாட்டுக்குத் தண்ணீர்” என்பதே முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளம் எழுப்புகிற பொது முழக்கம். விவேகமற்ற போராட்டமும் வன்முறைகளும் இந்த முழக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிக்குப் பலத்த அடியாகிவிடும். இவற்றை அடக்கவும், அமைதி காக்கவும், தமிழர் - மலையாளி என்கிற பேதமின்றி அனைவரும் ஒன்றுசேர வேண்டும்.

இவ்வாறு  சி.பி.எம் கட்சியின் கேரள மாநிலச் செயற்குழு அறிக்கை விடுத்துள்ளது!

Friday, December 2, 2011

முல்லைப் பெரியாறு: பகைமை வேண்டாம்!


முல்லைப் பெரியாறு அணை விஷயத்தை முன்னிறுத்தி தமிழக, கேரளா மாநிலங்கள் இருதரப்பிலிருந்தும் அறிக்கைகளும், போராட்டங்களுமாய் இருக்கின்றன. தத்தம் நிலைபாட்டிலிருந்தே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்து வருகின்றன. ஒரு சுமூகமான தீர்வை எட்டுகிற பார்வையில்லாமல்  ஆத்திரத்தைத் தூண்டுவிதமாக  ஒருவரையொருவர் குற்றம் சுமத்துவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். இது இரு மாநில உறவுகளையும், மாநில மக்களிடையே இருக்கும் இணக்கத்தையும் கெடுக்கவே செய்யும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்பதாக பலரும் பேசிக்கொண்டு இருப்பதாலேயே, சற்று நிதானமாக இவ்விஷயத்தை அணுக வேண்டியதிருக்கிறது.
 
இதனைப் புரிந்துகொள்ளாமல், ஒரு நண்பர் முல்லைப் பெரியாறு விஷயத்தில் ’சிவப்பு அயோக்கியத்தனம்’ செய்வதாக ‘பாகிஸ்தான் மக்கள் வெல்லட்டும்’ பதிவுக்கு பின்னூட்டமிட்டிருந்தார். இங்கே முல்லைப்பெரியாறு விஷயமாக ஊர் எரிந்துகொண்டு இருக்கும்போது, பாகிஸ்தானுக்குப் போய் விட்டீர்கள் என ஆத்திரப்படவும் செய்திருக்கிறார்.

முதலில் இது எரிகிற பிரச்சினையாக இருக்கக் கூடாது என்றே மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது. முல்லை பெரியாறு அணை பிரச்சனையை பொறுத்தவரை எப்போதும் இரண்டு கோட் பாடுகளின் வழிகாட்டுதல் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய நிலைபாட்டை எடுத்துவந்துள்ளது.

முதலாவதாக, முல்லை பெரியாறு அணை தமிழகத்திற்கு தண்ணீர் தந்து வருகிறது. இது அந்தப்பகுதியின் விவசாய வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எதிர்காலத்திலும் தமிழகத்திற்கு தண்ணீர் தரப்படுவது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

இரண்டாவதாக, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தி லுள்ள 115 ஆண்டு பழமையான அணையின் பாதுகாப்பு குறித்த பிரச்சனையாகும். அணையின் பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வு போக்கப்பட வேண்டும். அணையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதோடு இடுக்கி மற்றும் அதன் தொடர்ச்சியாக உள்ள மூன்று மாவட்ட மக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். இடுக்கி பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வைத் தொடர்ந்து முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த பிரச்சனை முன்னுக்கு வந்துள்ளது. அணையின் பாதுகாப்பு குறித்து மக்களிடம் பரவலாக அச்ச உணர்வு எழுந்துள்ளது.

முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், பிரச்சனையின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து விசாரிக்க உயர் மட்டக்குழு ஒன்றை அமைத்துள்ளது. உச்சநீதிமன்றம் தனது விசாரணையை விரைவுபடுத்தி இந்தப்பிரச்சனையில் உரிய காலத்தில் தீர்ப்பு வழங்க வேண் டும். அதுவரை மத்திய அரசு தலையிட்டு கேரள, தமிழக அரசுகளுடன் ஆலோசனை நடத்தி, அணையின் பாதுகாப்புக்கு தேவைப்படும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

நீண்டகாலமாக நீடிக்கிற சிக்கலான இந்தப்பிரச்சனைக்கு சுமூக தீர்வுகாணும் வகையில் தமிழக, கேரள மாநில அரசுகளின் அணுகு முறை இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு சுட்டிக்காட்டுகிறது.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் ஒரு சுமூகத் தீர்வை எட்ட வேண்டுமானால் முதல் தேவை பரஸ்பரம் புரிதல்.  பகைமை அல்ல!

Thursday, November 24, 2011

வேண்டாம் “டேம் 999” குறும்படம்!

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் செவ்வாயன்று துவங்கியது. புதனன்று காலை மக்களவைத் தொடங்கியதும்,  “அணை 999”  என்று பெயரிட்டு வெளியாகவுள்ள குறும்படத்தில் முல்லைப் பெரியாறு அணை உடைப்பெடுத்து மக்கள் அழிவதுபோன்று எடுக்கப்பட்டுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது என்றும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சமயத்தில் இது போன்று ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை உருவாக்கும் விதத்தில் படங்கள் வரக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் ஓர் கவன ஈர்ப்புத் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்.

இதேபோன்று மக்களவை உறுப்பினர்கள் கணேசமூர்த்தி (மதிமுக), தம்பிதுரை (அஇஅதிமுக), டி,ஆர். பாலு(திமுக), லிங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியவர்களும் ஒத்திவைப்புத் தீர்மானம் தனித்தனியே கொடுத்திருக்கிறார்கள்.

இதனிடையே இந்த திரைப் படத்தை தமிழகத்தில் திரையிடுவதில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)