முல்லைப் பெரியாறு பிரச்சினையில், இரு மாநிலங்களுக்கிடையே பகைமை இல்லாமல், சுமூகமானத் தீர்வை காணவேண்டும் என சி.பி.எம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தனது நிலைபாட்டை அறிவித்திருந்தது.
இதற்கிடையில் பிரதேச, இன, மொழி என பிரிவினைகளைத் தூண்டி, இரு மாநிலத்து மக்களிடையேயும் பகைமையையும், சகோதர உறவையும் சீர்குலைக்கும் காரியங்கள் நடந்தன. சில பகுதிகளில் வன்முறைச்செயல்களும் நடைபெற்றன.
இந்த நிலையில், டிசம்பர் 7ந்தேதி சி.பி.எம் கட்சியின் கேரள மாநிலச் செயற்குழு விவாதித்தது. தமிழக - கேரள மக்களிடையே நிலவும் சகோதர உறவுக்கு தீங்கு விளைவிக்கும் போராட்டங்களில் ஈடுபடும் காங்கிரஸ் - பாஜக கட்சியினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சி.பி.எம் கட்சியின் கேரள மாநிலச் செயற்குழு அறிக்கை விடுத்துள்ளது!
இதற்கிடையில் பிரதேச, இன, மொழி என பிரிவினைகளைத் தூண்டி, இரு மாநிலத்து மக்களிடையேயும் பகைமையையும், சகோதர உறவையும் சீர்குலைக்கும் காரியங்கள் நடந்தன. சில பகுதிகளில் வன்முறைச்செயல்களும் நடைபெற்றன.
இந்த நிலையில், டிசம்பர் 7ந்தேதி சி.பி.எம் கட்சியின் கேரள மாநிலச் செயற்குழு விவாதித்தது. தமிழக - கேரள மக்களிடையே நிலவும் சகோதர உறவுக்கு தீங்கு விளைவிக்கும் போராட்டங்களில் ஈடுபடும் காங்கிரஸ் - பாஜக கட்சியினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரள - தமிழ்நாடு மக்களிடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வருகிற சகோதர உறவுக்கு எவ்விதத்திலும் தீங்கு விளைவித்து விடக்கூடாது. இரு மாநில அரசுகளும் மத்திய அரசும் பயனுள்ள வகையில் தலையிட்டு, முல்லைப் பெரியாறு பிரச்சனைக்குக் கூடிய விரைவில் தீர்வு காண வேண்டும்.
இந்தப் பிரச்சனையைப் பயன்படுத்தி, சில அரசியல் இயக்கங்களின் பிரதேச ஊழியர்களும் வன்முறைச் சக்திகளும் தவறான முறையில் செயல்பட்டு, நிலைமையை மோசமாக்குவது துரதிருஷ்ட மாகும்.
தமிழ்நாட்டுக்கான தண்ணீருக்கு நஷ்டம் ஏற்படுத்த குமுளியில் ஷட்டரைத் தகர்ப்பது என்ற வக்கிரமான போராட் டத்தையே இளைஞர் காங்கிரஸ்காரர்கள் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து, மலையாளிகளின் வாகனங்களைத் தடுப்பது, அவர்களின் கடைகளை எரிப்பது, மலையாளத் தம்பதிகளைத் தாக்குவது முதலான - முற்றிலும் கண்டிக்கத்தக்கதும் எதிர்க்கத்தக்கதுமான சம்பவங்கள் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் நிகழ்ந்தன.
அடுத்த மாநிலத்தவரின் நடமாடும் சுதந்திரத்தையோ, இயல்பான வாழ்க்கையையோ தடுக்கிற எந்த முயற்சியும் தாக்குதலும் தமிழ்நாட்டிலோ, கேரளத்திலோ நிகழ்வதைக் கடுமையாக ஒடுக்க வேண்டும். இத்தகைய வன்முறைச்சக்திகளைத் தனிமைப்படுத்த அரசுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
அமைதியான வாழ்க்கைக்கு பங்கம் விளைவிப்பவர்களைத் தடுத்திட இரு மாநிலங்களிலும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளும் இடதுசாரி ஊழியர்களும் ஜனநாயக சக்திகளும் களம் இறங்க வேண்டும். சபரிமலைக்குச் செல்கிற அடுத்த மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டோர்க்கு அனைத்துவிதப் பாதுகாப்பும் வழங்குவதற்கு அரசு மட்டுமல்லாமல் கட்சி ஊழியர்களும் களமிறங்க வேண்டும்.
நெருக்கமான பக்கத்து மாநிலத்தவர்களாக வாழ்கிற கேரளத்தையும் தமிழ்நாட்டையும் சேர்ந்த மக்கள் இந்த இரு மாநிலங்களிலும் பணி செய்து வாழ்ந்து வருகிறார்கள். இரு மாநில மக்களும் பரஸ்பரம் வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்வது உண்டு. இந்த வாழ்க்கை முறையைச் சீர்குலைக்க வரும் எதையும் இரு மாநிலங்களையும் சேர்ந்த அறிவார்ந்த மக்கள் அனுமதிக்கக்கூடாது.
“கேரளத்துக்குப் பாதுகாப்பு; தமிழ்நாட்டுக்குத் தண்ணீர்” என்பதே முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளம் எழுப்புகிற பொது முழக்கம். விவேகமற்ற போராட்டமும் வன்முறைகளும் இந்த முழக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிக்குப் பலத்த அடியாகிவிடும். இவற்றை அடக்கவும், அமைதி காக்கவும், தமிழர் - மலையாளி என்கிற பேதமின்றி அனைவரும் ஒன்றுசேர வேண்டும்.
இவ்வாறு சி.பி.எம் கட்சியின் கேரள மாநிலச் செயற்குழு அறிக்கை விடுத்துள்ளது!
இது தான் பச்சை சந்தர்ப்பவாதம்! அச்சு ஏன் அணைப் பகுதிக்கு சென்றார்?கொந்தளிப்பாகப் பேசினார்? மலையாளிகளின் உணர்ச்சியைத் தூண்டி விடுவதற்கு தானே? பெரியார் அணை என்ன ஆலையின் முன்வாசல் கேட்டா? முன்னாள் முதல்வர் ஒருவர், இந்த தள்ளாத வயதில்,மூன்றாம் தர ரவுடி அரசியல் செய்வது எந்த லாபத்தை எதிர்னோக்கி?
ReplyDeleteஎல்லாரையும் குறை சொல்லும் அறிவுஜீவிகள், தமிழக மக்களுக்கு பதில் சொல்லுவது எப்போது?ஏதோ மறைவான பிரச்சனையில், W.ஆர்.வரதராஜனை காட்டமாக விசாரித்து, நடவடிக்கை எடுத்த மார்க்ஸீயத் தலைமை, தேச ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைவிக்கும் அச்சுவின் மேல் மட்டும் மயிலிறகால் செல்லமாக அடிப்பதேன்? காரத்தும், அச்சுவும் ஒரே மாநிலத்தவர் என்பதாலா?
பெரியார் அணைக்குப் போய் உணர்ச்சியைத் தூண்டிய அச்சு, முண்டக்காயம் - குமுளி பகுதிக்குச் சென்று கலவரத்தை ஏன் தடுக்கவில்லை?
ReplyDeleteKerala Irrigation and Water Conservation Amendment Act, 2006
ReplyDelete62(e) to direct the custodian to suspend the functioning of any dam, to decommission any dam or
restrict the functioning of any dam if public safety or threat to human life or property, so requires;
http://www.kerenvis.nic.in/legislation/Microsoft%20Word%20-%20Act%202006.pdf
THE DAM SAFETY BILL, 2010
26. (1) Without prejudice to the provisions of this Act, all specified dams, shall fall
under the jurisdiction of the State Dam Safety Organisation or State Dam Safety Cell, as the
case may be, of the State in which dam is situated in matters related to dam inspections,
analysis of information, reports or recommendations regarding safety status, and remedial
measures to be undertaken to improve dam safety; and in all such matters full co-operation
shall be extended by the concerned Non-State Dam Safety Organisation or the Non-State
Dam Safety Cell and the owner of the specified dam.
http://www.prsindia.org/uploads/media/dam%20safety%20bill%202010.pdf
இரு மாநில உறவை சீர்குலைக்கும் இது போன்ற சட்டங்களைப் பற்றி சி.பி.எம் கட்சியின் கேரள,தமிழக மற்றும் அரசியல் தலைமைக்குழு வின் நிலைப்பாடு என்ன ??