Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Sunday, August 11, 2013

நமது முயற்சியில் ஒரு மாற்று ஊடகம் …


‘மாற்று இணையதளம்’ – ஆகஸ்ட் 15, 2013 முதல் தனது சேவையை தொடங்குகிறது.
மாற்று, ஏற்கனவே ஒரு வலைப்பூவாக செயல்பட்டது. அநீதியை ‘மாற்று’, அடிமைத்தனத்தை ‘மாற்று’, ஆதிக்கத்தை ‘மாற்று’, அறியாமையை ’மாற்று’, என்கிற அடிப்படையில் பல்வேறு கட்டுரைகளும் தொகுக்கப்பட்டன. இப்போது மாற்று இணையதளம் ஒரு தனி ஊடகமான பரிணமித்திருக்கிறது.நோக்கம், கட்டுரைகளின் உள்ளடக்கத்திற்கான இதழியல் நெறியுடன், தொழில்நுட்பத்திலும் மாற்றுக் கட்டமைப்பைக் கொண்டு இதை ஒரு‍ இணையதளமாக கட்டமைத்திருக்கிறோம்.
இந்தத் தளத்தில் எவரும், தங்களின் சொந்த படைப்பையோ, தங்கள் நண்பர்களின் பதிவுகளையோ பெற்று சமர்ப்பிக்கலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்தக் கட்டுரைகள் வெளியாகும். (கட்டுரைகளில் பிழைகளை குறைக்கவும், வடிவமைப்பை சீர்ப்படுத்தவும் இந்தக் கால இடைவெளி தேவைப்படுகிறது.)
மனித சமூகத்தை மேம்படுத்துவதற்கான போராட்டத்தில் மாற்று இணையதளம் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. சமத்துவம், சம நீதி மற்றும் உயர்ந்த மாண்புகளை கொண்ட உலகைப் படைக்க விரும்பும் ஒவ்வொருவரும் எங்கள் நண்பர்களே.
மாற்று, சிந்தனைகளுக்கான விவாதக் களத்தை சீர்ப்படுத்தும் ஒரு ஆசிரியர் குழுவுடன், கட்டற்ற மென்பொருளைக் கட்டமைப்பின் அடிப்படையாகக் கொண்டு‍ தளத்தை இயக்குகிறோம்.
இணையதளப் பயனர் விபரங்களை பல நாடுகள் உளவுக்கு உட்டுபடுத்து‍வதை நாம் அறிந்தே வைத்திருக்கிறோம். இதற்கான தீர்வை முன்வைப்பதில் ’மாற்று’ தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும். இணையதள ஊடகத்தின் சுதந்திரத்தையும், தனிப் பயனர்களின் அந்தரங்கத்தையும் பாதுகாக்கத் தேவையான தொழில்நுட்பத்தை வளர்த்தெடுப்பதிலும், பரப்புவதிலும், பயிற்சியளிப்பதிலும் மாற்று இணையதளம் ஈடுபடும், இதில் தங்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது.
[ இணைந்து செயல்பட விரும்பும் ஒவ்வொருவரையும், அகன்ற கரங்களோடு வரவேற்கிறோம். - விபரங்களை பதிவு செய்க (Register) ]
புதிய கட்டுரை தொடங்க
புதிய கட்டுரை தொடங்குவதற்கு – மேலே, இடதுபக்கம் அமைந்துள்ள ‘மாற்று’-வை சொடுக்கினால், Dashboard என்று வரும், அதன் கீழ் Post-ல Add New என்பதை தேர்ந்தெடுத்து, கட்டுரையை தொடங்கலாம்.
மாற்றுவில் phonetic (உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்தில் அடித்தால் தமிழில் வரும்) இந்த வசதியை பெற ’F12’ ஐ அழுத்தவும்.
நண்பர் வட்டம்:
மாற்று எழுத்தாளர்கள் தங்களுக்கிடையே நண்பர் வட்டத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.
யார்? யார்? மாற்று இணையதளத்தில் இணைந்திருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கியிருக்கிறது. நண்பராக இணைந்து விவாதிக்க முடியும்.
எழுதும் முன் கவனிக்க வேண்டியவை:
மாற்று அறிவுச் செல்வம் அனைத்தும் சமூகத்தின் சொத்து என்ற காப்பிலெப்ட் (Copyleft) நடைமுறை கருத்தியலை அடிப்படையாகக் கொண்டது.
அதனால் மாற்றுவில் இடப்படும் புகைப்படங்கள் உங்களது சொந்த புகைப்படமாக இருக்க வேண்டும் அல்லது ’படைப்பாக்க பொதுமங்களாக’ (Pictures with Creative Commons License) உள்ளவைகளை மட்டும் இடவேண்டும், இதைப் பற்றி மேலும் விபரமாக இதழியல் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகங்கள் இருப்பின் மாற்றுவிற்கு மின்னஞ்சல் (admin@maattru.com) மூலம் தெரியப்படுத்தவும். உடனடியாக  உதவி கிடைக்கும்.
நன்றி……
வாழ்த்துக்கள்……

Thursday, July 4, 2013

இளவரசன் மரணம் படுகொலைதான் !

தர்மபுரி நாயக்கன் கொட்டாயைச் சேர்ந்த  இளவரசனின் மரணம் குறித்து சில நேர்வுகளை திரும்பிப் பார்ப்போம்.

இளவரசன் மரணம் குறித்து கிடைத்த புகைப்படம் ...
நேர்வு 1: முதலில் அந்தக் காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இந்தக் காதலை மையமாக வைத்து அவமானப்படுத்துதல் காரணமாக திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தற்கொலைக்கு காரணம் சாதி எண்ணமும், சுற்றத்தாரின் விமர்சனமும் தான் ஆனால் இதற்கு காதல் காரணமாக்கப்பட்டது. தற்கொலைக்கு காரணம் சாதிய எண்ணமா? காதலா?

நேர்வு 2: சாதி ஆதிக்கவாதிகள், இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் 3 கிராமங்களை சூரையாடினார்கள். இந்தச் செய்தியை “காதலால் நேர்ந்த கலவரம்” என்றார்கள். உதாரணமாக 14-11-2012 தேதியிட்டஒரு இதழில் 'காதல் தீயில் கருகிய கிராமங்கள்’ என்ற தலைப்பில் செய்திவெளியிட்டது. அது காதல்தீயா? சாதித் தீயா?


நேர்வு 3: திவ்யாவின் தாயார் தேன்மொழி (வயது 44) சென்னை ஐகோர்ட்டில் ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். கடந்த மார்ச் 27–ந் தேதி இந்த வழக்கை நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.தேவதாஸ் ஆகியோர் விசாரித்தனர். ‘நான் விரும்பித்தான் இளவர சனுடன் சென்றேன். என்னை யாரும் துன்புறுத்தவில்லை’ என்று திவ்யா கூறினார். பின் என் தந்தையும் இறந்துவிட்ட நிலையில், என் அம்மாவையும் இழக்க விரும்பவில்லை. நாம் என் அம்மாவுடன் வாழ்கிறேன் என்று திவ்யா குறிப்பிட்டார். அதாவது அம்மாவையும் தற்கொலைக்கு தள்ளிவிடுவார்களோ என்ற அச்சம் அவரிடமிருந்து வெளியானது.


நேர்வு 4: திவ்யா தனது நிலையை வெளிப்படையாகச் சொல்லியதன் மூலம், சாதி ஆதிக்கத்தின் குட்டு உடைந்தது. அதே சமயம், திவ்யா தனது நிலையில் உறுதியாக இருப்பதாக மற்றொரு பேட்டியளித்தார். - பின் தற்போது இளவரசன் உடல் ரயில் பாதையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மரணத்தை ‘காதல் தோல்வியால் நேர்ந்தது என்போமா?” அல்லது ‘காதலை நிராகரிக்கும் மிருகச் சமூகம் செய்த கொலை என்போமா?

இது கொலைதான் ...

சட்டத்தின் பார்வையில் இது கொலையா அல்லது தற்கொலையா? என்று விசாரிக்க வேண்டும். ஆனால், சாதி வெறி ஊறிய சமூகத்தை அறிந்தவர்களுக்கு காரணம் தெளிவாகவே புலப்படுகிறது. திவ்யாவின் தந்தையின் மரணமாக இருந்தாலும், தற்போது இளவரசன் மரணமாக இருந்தாலும் - அதற்கு பிற்போக்கு, சாதியச் சிந்தனைகளும், அதனை வலியுறுத்தும் ஆதிக்கத் தனமும்தான் காரணம்.

நேரடியாகவும், மறைமுகமாகவும் - சாதிக்கு வக்காலத்து வாங்கிய எவரும் இதுகுறித்து தன் உள்மனத்தை கேள்விகேட்டுக் கொள்ளுங்கள். பொதுவாக, எல்லாக் காதலர்களிடத்திலும், இந்த சாதிய வாதிகள் ஒரே நடைமுறையைத்தான் கையாள்கிறார்கள். நாடறிந்து நடந்த இந்தக் காதல் கதையில் கூட - சாதியின் பின்னணி குறைவாகத்தான் விவாதிக்கப்பட்டது. மாறாக, காதலால் கொலை, காதல் பிரிவு, காதல் தோல்வி, காதல் தற்கொலை என்றுதான் வியாக்கியானங்கள் முன் வைக்கப்படுகின்றன.

இரண்டு தனி மனிதர்களின் வாழ்க்கையில் - மூக்கை நுழைத்து, தற்கொலையைத் தூண்டி கலவரத்தை உண்டாக்கி, வாழ்க்கையைச் சிதைத்த ‘சாதி ஆதிக்கம்’ - கள்ள மெளனத்தோடு தன் அடுத்த வேலையைப் பார்க்கிறது. பொதுவானவர்கள்  காதலிச்சா இப்டித்தான், 100த்துல 90 காதலர்கள் பிரிந்தே வாழ்கிறார்கள் என்று வாயை மென்றுகொண்டிருக்கிறார்கள்.

சாதி ஆதிக்கவாதிகள் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். அதனை எதிர்த்த மனிதர்களோ மெளனம் காக்கிறார்கள். மெளனம் சம்மதம் என்பது பெண் பார்க்கும் படலத்துக்கு எத்தனை பொறுத்தம் என்பது தெரியாது. ஆனால், இப்படியான மரணங்களை மெளனமாகக் கடப்பது ஆமோதித்து வரவேற்பதுதான். சாதிக்கு எதிரான மெளம் உடைபட வேண்டும். அதுவரை இது இந்திய சாதி ஆதிக்க சமூகம் செய்த மற்றுமொரு கொலைதான்.

Tuesday, July 2, 2013

சிறையாக மாற்றப்படும் இணையம் – (மிகப்பெரிய அந்தரங்க உளவு) - 5

உலகில் மிக அதிக அளவில் திருடப்பட்ட இணைய அந்தரங்க தகவல்கள் ஈரானியர்களுடையது, இதற்கு நிகராக இந்தியர்களின் தகவல்களும் திருடப்பட்டுள்ளன. ப்ரிசம் திட்டம் அம்பலமானதைத் தொடர்ந்து 4 பாகங்களில் அதன் செயல்பாடுகளை விவரித்தோம்.

     ஒரு நாட்டின் அனுமதியின்றி அந்த மக்களை உளவு செய்வது மிக அதிர்ச்சிகரமான விஷயம். அதுவும், பேஸ்புக், டுவிட்டர், பிளாக்கர், யூடியூப் போன்ற இணைய தளங்களின் சேவைகளை அனுகினால், நம்
அமெரிக்க நாளேடுகளின் கேலிச் சித்திரம்
அந்தரங்கத்தை விலைகொடுத்தே ஆகவேண்டும் என்ற நிலைமை இருப்பதும், அது குறித்து நம்மால் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க முடியாது.

     இருப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டு போகும் நிலையில் நாம் ஏன் தள்ளப்பட்டோம்? – ஒவ்வொரு தனி மனிதனின் தகவலும் மெட்டா டேட்டாக்களாக இன்றைக்கு வரை அமெரிக்க உளவு கணினியில் சேகரமாகிறது. இந்தப் பிரச்சனை குறித்து ‘தனி நபர் சுதந்திரம்’, ‘கருத்து சுதந்திரம்’ பற்றி பேசும் இந்திய ஊடகங்கள் போதுமான வெளிச்சத்தை செலுத்தவில்லை. எனவே, அவர்களின் மூலமே உலகத்தை அவதானிக்கும் இந்திய மத்தியதர வர்க்கத்துக்கும் இன்னும் ரெளத்திரம் வரவில்லை.

     இந்திய அரசாங்கத்தின் சார்பில் சல்மான் குர்சித் வாய் திறந்திருக்கிறார். முதலில் அரசு இது குறித்து ‘சர்ப்ரைஸ்ட்’ என்றது. திகைப்பாக இருந்ததாம். இப்போது நம் அமைச்சர், “கணினி எப்படி வேலை செய்கிறது என்பது குறித்த தொழில்நுட்ப தகவல்களைத்தான் அவர்கள் கண்கானிக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

     உண்மை இதுதானா? – இல்லை என்கிறார் எட்வர்ட் ஸ்னோடன். அமெரிக்கா தன் நாட்டின் உள்ளேயும், மற்ற நாடுகளிலும் ஒவ்வொரு இணைய, ஸ்மார்ட் போன் உபயோகிப்பாளரின் தகவலையும் – தானியங்கி முறையில் திரட்டியது என்று சொல்கிறார். அதாவது இன்றைய நமது உரையாடலை நாம் மறந்துவிட்டாலும், அந்தக் கணினி மறக்காது.

     இந்திய அரசும் அப்படியொரு சர்வைலன்ஸ் திட்டத்தை வைத்திருப்பதும் தற்போது வெளிவந்திருக்கிறது. (இது தொடர்பான செய்தி) செண்ட்ரலைஸ்ட் மானிட்டரிங் சிஸ்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.400 கோடி. இது பயன்பாட்டுக்கு வந்தால், ஒவ்வொரு தொலைபேசி பேச்சையும், ஆன்லைன் தகவல் தொடர்பையும் உடனுக்குடன், பாதுகாப்பான முறையில் திருட முடியும். 
இந்திய உளவு விளக்க வரைபடம்
நன்றி; இந்து

     சட்டப்படி ஒருவரின் தகவலை, தேவையின் அடிப்படையில் படிப்பதென்பது வேறு, ஆனால் உடனுக்குடன் கண்கானிப்பு, எந்த சட்ட முறைகளும் இல்லாமல் களவாடுவது, தொலைபேசி பேச்சுக்களை பதிவு செய்வது என்ற இந்த திட்டம் 2013 – 2014 ஆண்டுகளில் செயலாக்கத்துக்கு வரும். 1 லட்சம் தொலைபேசிகளில் இருந்து மாதத்துக்கு 7500 முதல் 9000 அழைப்புகளை பதிவு செய்திட முடியும்.

 ஆதார் அட்டைகள் வெகு வேகமாக வழங்கப்பட்டு வரும் பின்னணியில் இதனை சிந்தித்தால் அந்த திட்டத்தின் வீச்சு நமக்கு புரிகிறது. நம்முடைய வாங்கும் திறன், செலவளிக்கும் முறை, தனி நபரின் பலம், பலவீனம், நட்பு வட்டம், தொழில் தொடர்புகள் என அனைத்தையும் இந்த முறையில் கண்கானிக்க முடியும்.

     அரசு ஒருத்தனை கட்டம்கட்டிவிட்டால், அரசிடம் உள்ளதுபோன்ற தகவல் தொழில்நுட்ப வசதிகள் வைத்திருப்போர் இந்த உளவுத் தகவல்களை படிக்க முடிந்தால் – நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் ஊடுருவ முடியும். மிகப்பெரிய சிந்தனைப் பேரழிவை நிகழ்த்த முடியும்.

     உதாரணமாக – ஒருவர் குறிப்பிட்ட சில நல்ல புத்தகங்களை வாங்கி படித்திருக்கிறார் என்றால் – அவருடைய சிந்தனையை சிதைக்கும் வகையில், திட்டமிட்ட விளம்பரங்கள், மூன்றாம்தர இணையங்களை அவருக்கு பரிந்துரைக்க முடியும். ஒருத்தரின் உளவியலைக் கண்டறிந்து, அதனடிப்படையில் அரசின் தவறுகளை விமர்சிக்காதவாறு தடுக்க முடியும். மதச் சண்டைகள், சாதிய மோதல்கள், கலாச்சாரக் கேடுகளை உருவாக்க முடியும். இன்றைய அரசு ஏராளமான குற்றங்களை புரிந்துவரும் நிலையில், நம் சிந்தனைகளை சிதைக்கும் பலமும் கிடைத்தால் - பின் அவர்கள் எதற்குத்தான் அஞ்சுவார்கள்???

     நிராயுதபாணியாக இருக்கும் மக்களின் மீது தொடுக்கப்படும் இப்படிப்பட்ட தாக்குதல்கள் நம்மை மேலும் அடிமை நிலைக்கே இட்டுச் செல்லும் ஆபத்து உள்ளது. இந்த அடிமைச் சிறையாக இணையம் மாறுவதைத் தடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.


முந்தைய பதிவு: 4) ஒரு ஹாலிவுட் படம் உண்மையாகிறது ...

ஒரு பெண்ணின் வாக்குமூலமும், தொலைக்காட்சி வியாபாரமும் !


நேற்று (01.07.2013) ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், முகம் மறைத்த பெண்ணின் பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. தனக்கு மயக்க மருந்து கலந்து, சுய விருப்பமில்லாமல் ஒரு ஆணோடு படுக்கையறையில் விட்டதாக அவள் சொல்லும்போது நமக்கு அதிர்ச்சியாக இருந்தது.


14 வயதில் கர்ப்பம் தரித்திருக்கிறாள் அந்தப் பெண். சென்னை பீச் அருகேயுள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவம் பார்த்த பெற்றவர்கள் - அந்தக் குழந்தையை யாருக்கோ கொடுத்துவிட்டார்களாம். குழந்தையை கொலை செய்தீர்களா? சினிமா  தயாரிப்பாளர்களுக்கு உங்கள் மகளை அனுப்பி வைத்தீர்களா? என்று ஆவேசமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் - நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.



இப்படி வரம்பு மீறிய சம்பவங்களை மட்டுமே மையத் தளத்தில் வைத்து விவாதிக்கும் தொலைக்காட்சிகளின் போக்கை விமர்சிக்க வேண்டியிருக்கிறது. தொலைக்காட்சிகள் என்றல்ல, ஒவ்வொரு ஊடகமுமே - வரம்பு மீறிய, நடைமுறைக்கு நெருக்கமில்லாத சம்பவங்களைக் குறித்தே அதிகம் பேசுகிறார்கள். பரபரப்பைக் கிளருவதில்தான், அவர்களின் வியாபாரமே அடங்கியிருக்கிறது.
 
சாதனைப் பெண்கள் நம் சமூகத்தின் எந்த இடத்தில் வைக்கப்படுகிறார்கள்?, இந்திய ஹாக்கி வீரர்கள் விமான நிலையத்தின் வாசலில் எந்த வரவேற்புமில்லாமல் நிற்கவைக்கப்பட்ட காட்சி கண்முன் வந்து அகல்கிறது. அதுவே, விளம்பரங்களில் கோடியாய்க் குவிக்கும், எந்த விளையாட்டு வீரராக இருந்தாலும் அவருக்கான மவுசைச் சொல்ல வேண்டியதில்லை.
 
தொலைக்காட்சியில் வெளியான அந்த சம்பவத்தை பொருத்தமட்டில் - “என் அம்மாவுக்கு 10 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும், ஒரு புல் பாட்டில் வாங்கிக் கொடுத்தா என் அப்பாவை கவுத்திடலாம். என் அண்ணனை மிரட்டினாலே போதும் என அவன் இரவு 2.30 மணிக்கு என்னிடமே சொல்லுகிறான். கதவைத் தட்டி, அழுதேன் யாரும் வந்து கதவைத் திறக்கவில்லை. இதுபோல நடந்தால் எனக்கு எப்புடி இருக்கும் மேடம்?!” என்று அந்தப் பெண் கேட்டதுதான் மனசை உறுத்துகிறது.

அன்பும், சிந்தனையும் இருக்க வேண்டிய இடத்தில், பணமும், மதுவும் - ஆக்கிரமித்திருக்கின்றன. ”நேற்று என்பது கையில் இல்லை, நாளை என்பது பையில் இல்லை. இன்று மட்டுமே உன்னிடம் உண்டு” என சில சாமியார்கள் தத்துவங்களைப் பொழிகிறார்கள். அந்த கார்பொரேட் சாமியார்கள் சொல்லும்  கார்பொரேட்டுகளின் தத்துவம்தான் நம் சக வாழ்வுக்கு யமனாகவும் அமைந்திருக்கிறது.

இன்றை அனுபவித்துவிட வேண்டும் என்று திரும்பத் திரும்ப புகட்டும் ஊடகங்களின் பிரச்சாரம். எங்கு திரும்பினாலும் காணக் கிடைக்கும் ஆடம்பரப் பொருட்களின் வியாபாரம். ‘புதிதாக உடுத்து, புதிதாக வாழ்’ என்று கற்பிக்கும் விளம்பரங்கள் என எல்லாமே மனிதனை ‘பணம் அன்றி வேறேதும் வாழ்க்கை இல்லை என்று சொல்லிக் கொண்டேயிருக்கின்றன.

இரண்டாவதாக, சிற்றின்பக் கனவுகளை விதைக்கும் வேலையை அரசுகளே செய்கின்றன. மது வியாபார இலக்கு நிர்ணயத்தையும், ‘அரசியல்’ ரீதியாக மட்டும் கத்திரியைத் தீட்டும் சென்சார் செயல்பாடுகளையும் என்னவென்று சொல்ல?

பெண்ணின் உடலை மையமாக வைத்துத்தான் பல பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் கட்டமைக்கப்படுவதையும் மறந்துவிடக் கூடாது.

நமது சமூகம் எதை நோக்கிச் செல்கிறது என்பதை உணர வேதனையாக இருக்கிறது. நாம் ஏற்கனவே, நுகர்வுக் கலாச்சார மோகம் குறித்து “வீட்டுக்கொரு கொலைகாரன்” என்ற தலைப்பில் படித்தோம். நம் வீட்டு ஜன்னலை மூடிக் கொண்டால், நமக்கொன்றும் பிரச்சனை இல்லை என்ற மனநிலை பலருக்கும் உள்ளது. ஆனால், வீடுகள் ஒவ்வொன்றும் பாதுகாப்பற்ற சிறைகளாக மாறி வருவதை எப்படி தடுக்கப் போகிறோம்.

“வாங்கு, அனுபவி, வீசு” என்ற நுகர்வுக் கலாச்சாரம் - பல விதங்களில் சமூகத்திற்கு யமனாக இருக்கிறது. விதவிதமான விளம்பரங்கள் அச்சடித்த பிளாஸ்டிக் பைகள், நமது கைகளில் தவழ்ந்தபோது அறிவோமா, இது ஏதோவொரு மரத்தின் வேரில் நச்சாக இருக்கப்போவதை? பெண்களை அரையாடையோடுஆட வைத்து காசு பார்க்கும் வியாபாரத்துக்கும், மேற்சொன்ன பெற்றோரின் மனநிலைக்கும்...  இந்த சமூக அவலத்தை பதிவு செய்து விற்பனை செய்யும் தொலைக்காட்சிக்கும் ... ஏதாவது வித்தியாசம் உண்டா?. 

இவற்றை மாற்றியமைப்பது நம் கையில்தான் இருக்கிறது. சக மனிதர்களை, சக மனிதர்களாய்ப் பார்க்கும் உலகை நாம்தான் படைக்க வேண்டும்.

- சிந்தன் ரா

Thursday, June 20, 2013

சுதந்திரமும் வேண்டும், கட்டுப்பாடும் வேண்டும்: ஜாக்கிசான் பேட்டி

ஜாக்கி சானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.தற்போது சீன திரைப்பட விழாவுக்கா இந்தியா வந்திருக்கும் ஜாக்கிசான் தனக்கு பிடித்த படம், தனது குழந்தை பருவம், தன் வாழ்க்கை தத்துவங்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.

ஸ்டண்ட் கதைகளுடன் காமெடியையும் புகுத்தி தனக்கென ஒரு ஸ்டைல் வகுத்துக்கொண்ட அவருக்கு, தற்போது சண்டைப் படங்கள் செய்வதில் விருப்பமில்லை. ”ஆசியாவின் ராபர்ட் டி நீரோவாக இருக்க விரும்புகிறேன்” என்கிறார் அவர்.

ஸ்டண்ட் காட்சிகள் ....

“சவால்களை நான் விரும்பினே, சவால்கள் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன” “ஆர்மர் ஆப் காட் படத்தில் 75 அடி உயரத்திலிருந்து குதிக்கும்போது செத்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன்” “அப்போது கிராபிக்ஸ் தொழில்நுட்பம் இல்லை” ஆனால், கிராபிக்ஸ் வந்த பிறகும், எனது ரசிகர்களுக்காக அதைச் செய்ய நேர்ந்தது. ”உண்மையிலேயே ஸ்டண்ட் காட்சிகளை செய்ய நாம் விரும்பவில்லை.”

“ஆபத்தில்லாத ஸ்டண்ட்களை டூப்புகள் வைத்துக்கொள்வேன். ஆபத்தானவைகளை நானே செய்வேன். மக்கள் என்னை அப்படிப் பார்க்கத்தான் விரும்புகிறார்கள். அந்தக் காட்சிகளில் வேறொருவர் நடித்தால், அதனை அவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்” என்று சொல்லும் ஜாக்கி சானுக்கு, ஊசி போட்டுக்கொள்வதென்றால் பயம் என்பது வினோதமானதுதான்.


”ஒருமுறை எனது முகத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. தையல் போட வந்தார்கள். அப்போது கூட ஊசி வேண்டாம் என்றுதான் சொன்னேன். அப்படி இல்லையென்றால், மின்சார ஷாக் மூலம்தான் செய்ய முடியும் என்றார்கள். நான் அதனை ஒத்துக்கொண்டேன்.”

என் அப்பா என்னை பிறந்ததும் விற்க ஒப்புக் கொண்டார் ...


”என் அப்பா ஒரு தைய்வான் உளவாளி. ஹாங்காங்கில் ஒளிந்துகொண்டு சைனாவுக்கு எதிராக செயல்பட்டார். அவருக்கு 2 மகன்கள் இருந்தார். என் அம்மாவுக்கு 2 மகள்கள் இருந்தார்கள்.

அவர்கள் இருவருக்கும் பிறந்த முதல் மகன் நான். நான் மிகவும் குண்டாக இருந்தேன். அதனால் என் அம்மாவுக்கு ஆபரேசன் செய்ய நேர்ந்தது. அவர்கள் அதை எதிர்பார்க்கவில்லை. மருத்துவமனை பில் செலுத்த முடியவில்லை. மிக ஏழ்மையான அப்பாவிடம் சென்று 500 ரூபாய் தருகிறேன் . அந்த குழந்தையை கொடுத்துவிடு என்று சொன்னதும் அப்பா எடுத்துக்கொள்ளுன்கள் என்று சொல்லிவிட்டார்.”

”அப்போது அவரது நண்பர்கள் வந்து என் அப்பாவிடம் - உனக்கு இப்போது 40 வயதாகிவிட்டது. என்று சொல்லி, அவர்கள் பணத்தை சேகரித்து கொடுத்து  மருத்துவ பில்லை கட்டினார்கள்”

ஒரு மகனாக ஜாக்கியும், ஜாக்கியின் மகனும் ...


”நான் ஸ்டண்ட் கலைஞனாக இருந்தபோது. எனக்கு அப்பா பணம் கொடுத்ததில்லை. சைனீஸ் புத்தாண்டின் போது வேலை இருக்காது. என்னிடம் 2 டாலட்கள் இருக்கும்.  அதை வைத்து நிறைய ரொட்டி வாங்குவேன். ஒவ்வொரு நாள் முடியும்போதும், எத்தனை ரொட்டிகள் இருக்கிறதென பார்த்துக் கொள்வேன். இப்போதுபோல, பெற்றோரிடம் பணம் கேட்பது அத்தனை சுலபமல்ல. ஆஸ்திரேலியாவில் என் அப்பா மிக வறுமையில் இருந்தது எனக்கு தெரியும். அத்துடன் போன் செய்யவே, பேருந்தில் சென்று காத்திருக்க வேண்டும்”

"நான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம், நலத்திட்ட அமைப்புகளுக்கு கொடுத்து விடுகிறேன்” எனும் ஜாக்கிசானிடம் - இது சற்று அதிகமாக தெரியவில்லையா? நீங்கள் ஏழ்மையில் வளர்ந்ததால் மகனுக்கும் ஏழ்மையைக் கொடுக்கிறீர்களா? என்று கேட்டதற்கு.

”இப்போது நான் பணக்காரன் இல்லை என்றாலும், ஏழையும் இல்லை.  15 ஆண்டுகளுக்கு முன்னர் எனது வருமானத்தில் பாதியை நலத்திட்டங்களுக்காக கொடுக்கும்போது எனது மகனிடம் சொன்னேன். ஒருவேளை உனக்கு திறன் இருந்தால் எனது பணம் உனக்கு தேவைப்படாது. உனக்கு திறன் இல்லாவிட்டால், எனது பணத்தை வீணாக்கிவிடுவாய் என்று சொன்னேன். அவன் வாழ்க்கையை அவன் பார்த்துக்கொள்வான். அவனுக்கு அம்மா இருக்கிறார். இப்போதே நல்ல இசையமைப்பாளராகவும், நடிகனாகவும் இருக்கிறான்.”

சுதந்திரம், கட்டுப்பாடு குறித்து ...

“இப்போது சில நேரங்களில் இளைஞர்கள் மிக அதிகமாக சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறார்கள். அவர்களுக்கு கட்டுப்பாடு தேவை. உடனே நீ எப்படி சொல்லாம் என்று கேட்காதீர்கள்.”

“சாலையில் செல்கிறோம்.  என் மகனுக்கு எப்படி சாலையை கடப்பது என சொல்லிக் கொடுக்கும்போது சிவப்பு விளக்கை குறித்து சொல்கிறோம். அவன் வளரும்போது அவனையே சாலையை கடக்க விடுகிறோம். ஆனால் அந்த சுதந்திரத்தை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பதில் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். சாலையில், வாகனத்தை வேகமாக எடுத்துச் செல்கிறான். மது அருந்துகிறான் என்றால் நான் அவனைக் கண்டிப்பேன். அவன் தவறாக செயல்படும்போது கண்டிப்பதிலும் சுதந்திரம் அடங்கியிருக்கிறது”

“எனக்கு ஒரு ஒழுங்கு வேண்டும். இளமையிலிருந்து நான் சண்டைக்காரனாக இருந்திருக்கிறேன். ஆனால் ஒரு நாளும் நான் மாபியா கும்பலில் நடித்ததில்லை, கொலைகாரனாக நியாயப்படுத்தியதில்லை. என்ன செய்தாலும் சில ஒழுங்குகள் இருக்க வேண்டும்”

ஒரு கலைஞனாக ...

என்னை நினைவில் வைத்துக்கொள்ளும் படங்களை செய்ய விரும்புகிறேன். எனக்கு இந்தியப் படங்களில் நடிக்கும் விருப்பம் உள்ளது.  இந்திய படங்களை சமீபத்தில்தான் பார்க்க தொடங்கினேன். குறிப்பாக 3 இடியட்ஸ், மிக அருமையான படம். வண்ணம், கேமிரா, கதை என எல்லா விதத்திலும் அருமையாக இருந்தது.

முழுமையான பேட்டி ... : @NDTV

Tuesday, June 18, 2013

’பேஸ்புக் காட்டிக் கொடுத்த போராட்டம்’ - ஜூலியன் அசாஞ் (விக்கிலீக்ஸ்)

- ஹாசன் சுரூர்


அமெரிக்கா உலகம் முழுவதும் மிகப்பெரும் அந்தரங்கத் தகவல் திருட்டை நடத்தியுள்ளது அம்பலமாகியுள்ள நிலையில், அமெரிக்க அரசியலின் போக்கு குறித்து கடுமையாக எச்சரிக்கிறார் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜீலியன் அசாஞ்ச்.

மேலும் பேஸ்புக், டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் முழுமையான அரசின் கண்கானிப்புக்கு ஆளாவது குறித்தும் - இதன் காரணமாக எகிப்திய போராளிகள் சுற்றிவளைக்கப்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார்.

ஸ்னோடன் -வெளியிட்ட அமெரிக்க உளவு குறித்த தகவல்கள் பற்றி அறிந்ததும் முதலில் என்ன உணர்வு ஏற்பட்டது?


ஒரு புரட்சியை நீங்கள் தொடங்கினால், அதன் வெற்றியை உறுதியாக்கிய பின் இறங்க வேண்டும்
கடந்தவருடம் “கட்டமைக்கப்படும் உளவு ராஜ்ஜியம்” என்று பெயரிட்டு வெளிப்படுத்திய ஏற்பாட்டை அம்பலப்படுத்துவதற்காக செய்துகொண்டிருந்த போராட்டத்தில், இந்த வெளியீடுகள் - வெற்றிக்கான வாசலை திறந்துவிட்டுள்ளது. விக்கிலீக்ஸ், தனது பணியின் இயல்பு காரணமாக அமெரிக்க பாதுகாப்பு முகமையின் நடவடிக்கைகளை அறிந்துவைத்துள்ளது. ஸ்னோடனின் புதிய ஆவணங்கள், அபாயகரமான உளவு ராஜ்ஜியத்தின் படு மோசமான முகத்தை அம்பலமாக்கி நிரூபிக்கின்றன.
1971 ஆம் ஆண்டில் வியட்னாம் யுத்தம் குறித்து அமெரிக்க மக்களை தவறாக வெளிநடத்தியதை அம்பலப்படுத்திய எல்ஸ்பெர்க் - இப்போது இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டதை அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமானதென்று சொல்கிறார்... அதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?
அமெரிக்க வரலாற்றில் இது மிக மிக முக்கியமானது. ஒரு நவீன ராணுவ அரசாங்கத்தின் அபாயமான சர்வாதிகார திருப்பத்தின் விளிம்பில் அமெரிக்கா நிற்கிறது. இதைவிட விக்கி லீக்ஸ் கேபிள்கள் மிக முக்கியத்துவம்வாய்ந்தவையாகும். அந்த ஆவணங்கள் உலகின் ஒவ்வொரு நாடு குறித்தும் தொடர்புடைய பிரச்சனைகளை உள்ளடக்கியிருந்தன.
அரசாங்கத்தினால், மக்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக இதுபோல ஊடுருவப்படு நிலையில் அவர்கள் தங்களது ஆன்லைன் ரகசியத்தை எந்த வழிகளில் பாதுகாத்துக்கொள்ள முடியும்?
ரகசியத்தை முழுமையாக பாதுகாத்து வைத்துக்கொள்வது இன்று மிகமிகக் கடினமாகிவிட்டது. அமெரிக்காவின் உலகளாவிய உளவு ராஜ்ஜியத்தின் ஏதாவது ஒரு பகுதியாக நமது தகவல்களும் வாரிச் செல்லப்படாமலிருப்பது கடினம். உதாரணமாக TOR, Tails முறைகளில் அனானிமஸாக, கவனமாக வேளிப்பட்டாலும், உங்கள் சக உறவினர்களுடனான ஸ்கைப், பேஸ்புக், இ-மெயில், எஸ்.எம்.எஸ் விவாதங்களில், உண்மையை சொல்வீர்கள். தம்மை அறியாமல் உங்கள் தகவல்கள் திருடப்பட்டுவிடும்.

விக்கி லீக்ஸ் வெளியீடுகள் அராபிய எழுச்சிக்கு உந்துதலை கொடுத்ததென நீங்கள் கூறியிருக்கிறீர்கள். ஆனால், ஸ்னோடன் வெளியிட்டுள்ள விசயம், எதிர்காலத்தில் மக்கள் எழுச்சிகளை அடக்குவதற்கான அம்சம் இருப்பதாக கருதுகிறீர்களா?
எகிப்தில் முபாரக்கின் ஆட்சியை வீழ்த்தும் போராட்டத்தில் இது ஏற்கனவே தெளிவாகிவிட்டது. எகிப்திய புரட்சியில் விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களில் “உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று தொடங்கி Facebook அல்லது Twitter -ஐ உபயோகிக்காதீர்கள் என வாசகங்கள் இருந்தன. போராளிகளை முன்னதாகவே சுற்றி வளைத்து கைது செய்த நடவடிக்கைகள் காரணமாக அவர்கள் அந்த முடிவுக்கு வந்தார்கள். அனைத்தையும் ஊடுருவும் உளவின் பொருள் - ஒரு புரட்சியை நீங்கள் தொடங்கினால், அதன் வெற்றியை உறுதியாக்கிய பின் இறங்க வேண்டும் என்பதுதான்.
ஸ்னோடன் வெளியிட்டுள்ள தகவல்கள் காரணமாக, இன்னும் பல உண்மைகள் வெளிக் கொண்டுவர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதா?

3 வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்டிருந்த பிராட்லி மேனிங்-இன் வழக்கு விசாரணை கடந்த வாரம் திங்களன்று தொடங்கியுள்ளது. இதை விடவும் மிகப்பெரிய புலணாய்வு என் மீதும் - விக்கிலீக்ஸ் மீதும் தொடர்ந்து நடந்துவருவதை அமெரிக்க நீதித்துறை ஒப்புக் கொண்டுள்ளது. இவ்வாறு இருந்தும் அல்லது இதன் காரணமாகவே கூட நமது உலகம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்பது குறித்த உண்மையை வெளிப்படுத்துவதற்காக எட்வர்ட் ஸ்னோடன் முன்நின்றார். அவருடைய துணிவு, உறுதிமிக்க பத்திரிக்கையாளர்கள் லாரா பாயிட்ராஸ் மற்றும் கிளென் கிரீன்பீல்ட் ஆகியோர் அவரோடு இணைந்து கொண்டனர். அதே கேவலமான தாக்குதல்கள் எட்வர்டு ஸ்னோடனுக்கு எதிராக நடப்பதை நாம் பார்க்கிறோம். அரசியல் தாக்குதல்களும், தனிமனித குணாம்சத்தின் மீதான தாக்குதல்களுமாக அது நடத்தப்படுகிறது. என் மீது சுமத்தப்பட்ட அதே சட்டவிரோதமான களங்கங்கள் பத்திரிக்கையாளர்கள் கிளென் கிரீன்பீல்டு மற்றும் லாரா பாயிட்ராஸ் ஆகியோரை தாக்கிக் கொண்டிருக்கின்றன.
ப்ரிசம்: மோசடி அம்பலப்படுத்திய உளவாளி பேட்டி தமிழில்

தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி

ஆங்கில மூலம்: http://www.thehindu.com/news/international/world/assange-america-is-at-the-precipice-of-turnkey-totalitarianism/article4818013.ece 

Saturday, June 15, 2013

’எனக்கு என்ன நடந்தாலும், அமெரிக்கர்களுக்கு நல்லது நடக்கும்’ - எட்வர்ட் ஸ்னோடன்

இணைய உலகத்தின் ஜனநாயகத்தை சிதைத்து, ஒவ்வொருவரும் உளவுபார்க்கப்படும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடனின் பேட்டி, ‘மாற்று’ வாசகர்களுக்காக தரப்படுகிறது.

- நிருபர்கள் : க்ளென் கிரீன் வார்ட் & இவான் மேக்கஸ்கில்
(நன்றி: கார்டியன்)

ரகசியங்களை அம்பலப்படுத்த உங்களை முடிவெடுக்கச் செய்தது எது?
கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே இடைமறித்து உளவுபார்க்கும் ஒரு கட்டமைப்பை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை உருவாக்கியுள்ளது. இந்த திறனைக் கொண்டு மிகப் பெரும்பான்மையான, மனித தகவல் தொடர்புகளை, தானியங்கி முறையில் கிரகித்துக்கொள்ள முடியும்.
உங்களுடைய மின்னஞ்சல்களையோ அல்லது உங்கள் மனைவியின் தொலைபேசியையோ உளவு பார்க்க விரும்பினால், அதனைக் குறுக்கிடும் வசதியை முடுக்கிவிட்டால் போதும். உங்கள் மின்னஞ்சல்கள், சங்கேத வார்த்தைகள், தொலைபேசிப்பதிவுகள், கிரெடிட் கார்டுகள் என அனைத்தையும் பெற முடியும். இத்தகைய செயல்களைப் புரிகின்ற ஒரு சமூகத்தில் நான் வாழ விரும்பவில்லை. நான் செய்கின்ற, சொல்கின்ற ஒவ்வொன்றும் பதிவு செய்து (காண்கானிக்கப்படுகின்ற) உலகில் நான் வாழ விரும்பவில்லை. அது எனக்கு உடன்பாடான விசயமல்ல.

போஸ்டன் தீவிரவாதத் தாக்குதல் போன்றவற்றை குறைக்க, இதுபோன்ற உளவு வேலைகள் அவசியம்தானே?
தீவிரவாதம் ஒரு புதிய அச்சுறுத்தலாக எழுப்பப்படுவது ஏன் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும். தீவிரவாதம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது.  போஸ்டன் குண்டுவெடிப்பு ஒரு குற்றச் செயல்தான். (ஆனால் அதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க) திறமையான, பழமைவாய்ந்த காவல்துறை விசாரணை தேவைப்படுகிறதேயன்றி, உளவுபார்க்கத் தேவையில்லை. காவல்துறை தனது பணியை நன்றாகத்தான் செய்துவருகிறது.

உங்களை நீங்கள் மற்றொரு பிராட் மேனிங்- என நினைத்துக் கொள்கிறீர்களா?
அவர் ஒரு தலைசிறந்த போராளி. மக்களின் நலன் மட்டுமே அவருக்கு தூண்டுகோலாக இருந்திருக்கிறது.

நீங்கள் செய்திருப்பது ஒரு குற்றமா?
அரசின் தரப்பில் குற்றம் உள்ளது. என்னை, குற்றம் சாட்டுவது வெறும் வார்த்தை ஜாலமே. மக்களின் தளத்தை அவர்கள் தங்கள் ஊடுருவலால் சுறுக்கிவிட்டார்கள்.

உங்களுக்கு இனி என்ன நடக்கும் என கருதுகிறீர்கள்?
நல்லது எதுவும் நடக்கப் போவதில்லை.

ஹாங்காங்கில் ஏன் தங்கியுள்ளீர்கள்?
சுதந்திரம் குறைவாக உள்ளதாக பெயர் பெற்றுள்ள பகுதிக்கு ஒரு அமெரிக்கன் சென்று தஞ்சமடைய நேர்ந்திருப்பது சோகமானதுதான். ஹாங்காங் - மக்கள் சீனக் குடியரசின் பகுதியாக இருந்தாலும் கருத்து சுதந்திரத்திற்கு பெயர் பெற்றது. அவர்களுக்கு வலிமையான கருத்துரிமை பாரம்பரியம் உண்டு.

வெளிவந்துள்ள ஆவணங்கள் எதை அம்பலப்படுத்துகின்றன?
அமெரிக்காவின் உளவுப் பரப்பு குறித்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் கேள்வி எழும்போதெல்லாம், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் பொய்யைத்தான் திரும்பத் திரும்ப கூறி வந்துள்ளனர். இந்த உளவின் பரப்பு குறித்து செனட்டர் வைடன் மற்றும் செனட்டர் உய்டால் ஆகியோர் கேள்வி எழுப்பியபோது, அப்படிப்பட்ட கருவிகள் தங்களிடம் இல்லை என என்.எஸ்.ஏ கூறியுள்ளது.

அந்தச் சாதனங்களையும், எந்தப் பகுதிகளில் அதிக புலனாய்வு நடந்தது என்பது தொடர்பான வரைபடத்தையும் நாங்கள் வைத்துள்ளோம். ரஷ்யர்களை விட, அமெரிக்கர்களிடையேயான தகவல் தொடர்பே அதிகமாக உளவுபார்க்கப்பட்டது.

சீனா நடத்தும் தகவல் திருட்டுக்கு எதிராக ஒபாமா நிர்வாகம் போராடுவதாகக் கூறுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
உலகின் ஒவ்வொரு மூலையிலும், ஒவ்வொருத்தரையும் (அமெரிக்கர்களாகிய) நாங்கள்  உளவு பார்க்கிறோம், தகவல் திருடுகிறோம். எங்களுக்கும் பிற நாடுகளுக்கும் வேறுபாடு  உள்ளது. கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் நாங்கள் இருக்கிறோம். அந்த நாடுகளிடம்  எங்களுக்கு எந்த யுத்தமும் கிடையாது.

அரசாங்கத்தின் உளவு வளையத்திலிருந்து தப்பிக்க முடியுமா?
தப்பிக்க முடியுமா? ... எது சாத்தியம் என்பது கூட தெரியாது. அவர்களின் பரப்பு பயங்கரமானது. உங்களின் கருவிகளில் உளவுச் சாதனங்களை புகுத்த முடியும். ஒருமுறை நீங்கள் ஆன்லைனில் வந்தால், உடனே அது விழித்துக் கொள்ளும். எந்த பாதுகாப்பை  ஏற்படுத்தினாலும் அதிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது.

இப்படியொரு திட்டம் உங்களுக்குள் இருந்ததை, உங்கள் குடும்பத்தினர் அறிவார்களா?
இல்லை. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது என் குடும்பத்திற்கு தெரியாது. அவர்கள்  (அமெரிக்க அரசாங்கம்) என் குடும்பத்தையும், நண்பர்களையும், கூட்டாளிகளையும்  என்னோடு தொடர்புடைய ஒவ்வொருவரையும் துரத்துவார்கள் என்பதுதான் என்  முதன்மையான அச்சம். இனி வரும் நாட்களை அந்த அச்சத்துடந்தான் நான் கழிக்க  வேண்டியிருக்கும். அவர்களோடு தொடர்புகொள்ள முடியாது. என்னை அறிந்தவர்கள்  யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக அதிகார வட்டம் மூர்க்கமாக செயல்படும்.  ஒவ்வொரு இரவும் இதுதான் என் தூக்கத்தைக் கெடுக்கிறது.

இந்த ஆவணங்களை வெளியிடுவதென எப்போது முடிவு செய்தீர்கள்?
உங்களை உறுத்துகின்ற விசயங்களை நீங்கள் கவனிக்கிறீர்கள். அனைத்தையும் நீங்கள்  பார்க்கும்போது, அவற்றின் சில தீயவையாக உங்களுக்கு படுகின்றன. அந்த அநியாயங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிறக்கிறது. ஒரு நாள் காலை எழுந்தவுடன் திடீரென இந்த முடிவுக்கு நான் வந்துவிடவில்லை. அது இயற்கையாக நடந்தது.

2008 ஆம் ஆண்டு ஏராளமான மக்கள் ஒபாமாவுக்கு வாக்களித்தார்கள். நான் அவருக்கு  வாக்களிக்கவில்லை. 3 ஆவதாக ஒரு கட்சிக்கு வாக்களித்தேன். இருந்தாலும் ஒபாமாவின்  வாக்குறுதிகளை நான் நம்பினேன். நான் இந்த தகவல்களை அம்பலப்படுத்த தயாராக  இருந்தபோதும் (அவரது தேர்ந்தெடுக்கப்படுவதற்காக காத்திருந்தேன்). அவருக்கு முந்தையவர்கள் பின்பற்றிய கொள்கைகளையே அவரும் தொடர்ந்தார்.

இந்த ஆவணங்களை அம்பலப்படுத்தியதற்கு, மக்களின் எதிர்வினை எப்படி இருக்கிறது?
பாதுகாப்பின் பெயரால், மக்களின் உரிமைகள் நசுக்கப்படுவதற்கு எதிராக பொதுமக்களின்  வலுவான எதிர்வினையைக் கண்டு நான் திகைப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.  வால்ஸ்டிரீட்டைக் கைப்பற்றும் போராட்டத்தைப் போன்ற இயக்கமல்ல இது ஆனால், “4  வது திருத்தத்தை அமலாக்கு” என்ற முழக்கத்துடன் ஜூலை 4 ஆம் தேதி தெருக்களில்  மக்கள் இறங்குவதற்கு அடிப்படைக் காரணம் இருந்தது. அது மக்களின் சினத்திலிருந்து  வளர்ந்தது. இணையதளத்தில் இதற்கு பிரம்மாண்ட ஆதரவு எதிர்வினையாக எழுந்தது.

பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்கு இடையிலான சமன்பாடு பற்றி பேசிக் கொண்டே, இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டதை அதிபர் ஒபாமா கண்டனம் செய்துள்ளது பற்றிய உங்களின் எதிர்வினை என்ன?
தன்னை தற்காத்துக் கொள்வது அவருக்கு கடினமாக இருந்தது என நினைத்துக் கொண்டேன். நியாயப்படுத்த முடியாததை, அவர் நியாயப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார். அது அவருக்கு தெரியும்.

வாசிங்டன்னில் வசிக்கும் அயல் விவகாரங்கள்துறை ஆய்வாளர் ஸ்டீவ் கிளெமென்ஸ், டல்லஸ் விமான நிலையத்தில், தான் பங்கேற்ற ஒரு உளவுத்துறை கலந்தாய்வுக் கூட்டத்தில் 4 பேர் விவாதித்ததை காதில் கேட்டதாகவும், அவர்கள் ’இந்த தகவல்களை அம்பலப்படுத்தியவர்களை “மாயமாக்கிவிட வேண்டும்” என்று பேசிக்கொண்டதாகவும் கூறப்படுகிறதே?
(இணையத்தில்) இந்தச் செய்தியைப் படித்த ஒருத்தர் “உளவாளிகள் அப்படி பேச மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார். நானொரு உளவாளி. உளவாளிகள் அப்படித்தான் பேசுவார்கள். குற்றங்களை எப்படி கையாள்வது என்பதைப் பற்றி அலுவலகத்தில் எப்போது விவாதித்தாலும், முறையாகச் செயல்படுவதை அவர்கள் விரும்பியதில்லை. தீர்மானகரமான நடவடிக்கையைத்தான் ஆதரித்தார்கள்.
இதுபோன்ற ஆட்கள், நீதிமன்றத்தில் ஒரு நாள் செலவிட அனுமதிப்பதை விட, ஒரு விமானத்திலிருந்து உதைத்துத் தள்ளுவது மேலானது என அவர்கள் கூறுவது வழக்கம். இது ஒரு அதிகார - ஆணவமான - அமைப்பாகும்

உங்களிடம் திட்டம் ஏதாவது உண்டா?
நான் செய்யமுடிகிற ஒரே விஷயம் இங்கே உட்கார்ந்துகொண்டு ஹாங்கான் அரசாங்கம் என்னை வெளியேற்றாது என நம்புவதுதான். என் நியாயங்களை அங்கீகரிக்கிற ஒரு நாட்டில் அடைக்கலம் தேடுவதுதான் எனது முதல் வேலை. அதற்கு மிகவும் ஏற்ற நாடு ஐஸ்லாந்து. இணையதள சுதந்திரம் குறித்த பிரச்சனையை எழுப்பிய மக்களுக்கு அவர்கள் ஆதரவாக இருந்தார்கள். என்னுடைய எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர்கள் (அமெரிக்க அரசாங்கம்) ஒரு இன்டர் போல் (சர்வதேச போலீஸ்) அறிவிப்பை வெளியிடக் கூடும். ஆனால், அமெரிக்காவின் எல்லையைத் தாண்டி நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று நினைக்கிறேன். இது அதன் இயல்பில் அரசியல்படுத்தப்படும் என நினைக்கிறேன்.

ஒருவேளை நீங்கள் கைதுசெய்யப்படலாம்...
சிறையில் அடைக்கப்படும் ஆபத்தை ஏற்றுக்கொள்ளாமல் நான் இதைச் செய்திருக்க முடியாது. உலகின் மிகப்பெரும் ஆற்றல்வாய்ந்த உளவு முகமைகளுக்கு எதிராக வந்துவிட்டு இந்த ஆபத்தை ஏற்காமலிருக்க முடியாது. அவர்கள் உங்களைப் பிடிக்க விரும்பினால், காலப்போக்கில் பிடித்துவிடுவார்கள்.

உங்கள் செய்தி வெளியாகி ஒருவாரமாகிவிட்டது, இப்போது என்ன உணர்வு  ஏற்பட்டுள்ளது?
கொடுஞ்செயலுக்கு எதிராக வெளிப்படுத்தப்பட்ட உணர்வு நியாயமானதென்று நான் கருதுகிறேன். எனக்கு என்ன நடந்தாலும், அமெரிக்காவுக்கு ஏற்படும் விளைவு ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்ற நம்பிக்கையை இது எனக்கு கொடுத்திருக்கிறது. எந்த சொந்த நாட்டை நான் பார்க்க விரும்பினாலும், பார்க்கப்போகிறேன் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

- தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி

தானியங்கி முறையில் இ-மெயில்களை திருடும் திட்டம் - ப்ரிசம் ! - 2

ப்ரிசம் - என்ற வார்த்தைக்கு அறிவியல் ரீதியான பொருள் - வெள்ளை சூரிய ஒளியில் இருந்து, 7 வண்ணங்களை பிரித்து வழங்குவதாகும். முக்கோண வடிவிலான அந்தக் கருவியைப் போலவே, இதுவும் ஆச்சர்யமூட்டும் திட்டம்தான். ஆனால், இது உங்களின் ஒவ்வொரு அங்குலத்தையும் கண்கானிக்கும்.

அமெரிக்காவில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட அலுவலகம் - இங்குதான் நம் ஒவ்வொருவர் நடத்திய அந்தரங்க உரையாடல்களும் தொகுக்கப்படுகின்றன.
24 மணி நேரமும், மாதம் ரூ.20 லட்சம் டாலர் சம்பளத்தில் சில நூறு இளைஞர்கள் இந்த தகவல்களையெல்லாம் திரட்டி தங்கள் அதிகாரிகளுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மேலும், இந்த திட்டம் தானியங்கி முறையில் செயல்படும். உதாரணமாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையில் அமர்ந்துகொண்டு ஒருத்தர் கம்யூனிஸ்டுகளின் தகவல் தொடர்பை படிக்க விரும்பினால் - கம்யூனிஸ்டுகள் அடிக்கடி பயன்படுத்தும் ஏதாவது ஒரு வார்த்தையை உள்ளீடாகக் கொடுத்தால் போதும். உலகம் முழுவதும் அதுகுறித்து நடக்கும் எல்லா கடிதப் போக்குவரத்தும் திரட்டி வழங்கப்படும்.

மிக ரகசியமான அரசாங்க தகவல்களை திருட - ப்ரிசம் வேறு வழிகளைக் கையாள்கிறது. அந்த அலுவலகத்திற்கு எப்படியாவது ஒரு வகையில் ‘பக்ஸ்’ எனப்படும் ஸ்பை கருவிகளை அனுப்புகிறது. அல்லது பக்ஸ் கொண்ட மென்பொருட்களை அனுப்புகிறது.


உங்களின் எல்லா தகவல் தொடர்புகளையும் அது ஒரே கோப்பாக ஆக்கிவிடுகிறது




இப்படி குறுக்கீட்டு வசதிகளைப் பயன்படுத்தி - எந்தவொரு நாட்டின் ஆவணங்களையும், எந்தத் தனி நபரின் உரையாடல்களையும், வீடியோ பதிவுகளையும், கிரெடிட் கார்ட் செலவுக் கணக்குகளையும் கண்கானிக்கலாம். - மிகப்பெரிய பலசாலி நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்காவும், பிரிட்டனும் - உலகின் ஒவ்வொரு குடிமகனின் மீதும் கண்வைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்தத் தகவல்களை வெளிகொணர்ந்த எட்வர்ட் ஸ்னோடன் குறிப்பிட்டதைப் போல “நாம் என்ன செய்தாலும், அதை இன்னொருத்தர் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் உலகில் வாழ்வது எத்தனை கொடுமையானது?” இந்த உலகை இப்படி மாற்றிக் கொண்டிருப்பவர்கள்தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயகவாதிகள் என்பது எத்தனை கேலிக்கூத்து!.

சிந்தன் ரா

(தொடரும்)

அடுத்த பதிவு: ஆம், தகவல்களை விற்றோம் - பேஸ்புக், மைக்ரோசாப்ட் ஒப்புதல் ... - 4

Monday, March 19, 2012

பழங்குடியினரை இத்தாலியர்கள் ஆபசமாக புகைப்படம் எடுத்ததால் கடத்தினோம் நக்சல்கள்

ஒரிஸா மாநிலம் காந்தமால் – கஞ்சம் பழங்குடியினர் மிகுந்த பகுதியை சுற்ரிபார்க்கச் சென்ற இரு இத்தாலியர்களைக் மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றுள்ளனர்.
இப்பகுதியில் நடைபெற்று வரும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவும், கைது செய்யப்பட்டுள்ள பழங்குடியினரை விடுதலைச் செய்யவும் காலக்கெடுவுடன் நிபந்தனை விதித்துள்ளனர்.

இந்த கடத்தல்களுக்கு மாவோயிஸ்டுகள் பொறுப்பேற்று, தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு சனிக்கிழமை நள்ளிரவு செய்தி அனுப்ப்பியிருந்தனர். அந்த இத்தாலியர்களும் இருவரும் கடந்த 14-ம் தேதியே கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

கடத்தப்பட்ட ஒருவரில் (பௌஸ்கோ ஹௌலா) பூரியில் கடந்த 10 ஆண்டுகளாக சுற்றுலா முகவராக செயல்பட்டு வருகிறார். மற்றொருவரின் பெயர் கிளாடியோ கொலஞ்ஜெலோ என்றும் தெரிய வந்துள்ளதாகவும், மாவோயிஸ்டுகளிடமிருந்து இது வரை எந்த தகவலும் வரவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.


இதனிடையே தனியார் தொலைக்காட்சியை மவோயிஸ்டுகள், காட்டுக்குள் இருந்த பழங்குடியினரை அந்த இத்தாலியர்கள் ஆபசமாக புகைப்படம் எடுத்த்தாகவும், அதற்காகவே அவர்கள் கடத்தப்பட்டு பிணையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


ஒரிஸா மாநிலத் தலைமை செயலாளர் பி.கே. பட்நாயக் கூறுகையில்,
இத்தாலியர்களைக் காட்டுக்குள் போக வேண்டாம் என தரிங்கிபாடி போலீஸார் எச்சரித்தனர். அதை மீறி அவர்கள் காட்டுக்குள் சென்றனர். அவர்களுடன் சென்ற டிரைவர், சமையல்காரன் ஆகியோரை வண்டியோடு விட்டுச் சென்றுள்ளனர்.
காட்டிலிருந்து திரும்பிய டிரைவர் கார்த்திக் பரிதா, சமையல்காரன் சந்தோஷ்
ஆகிய இருவரையும் போலீஸார் துருவித் துருவி விசாரித்து வருகின்றனர்.

ஒரிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் வேண்டுகோள்:

கடத்தப்பட்டுள்ள இரு இத்தாலியர்களையும் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுவிக்க வேண்டும். சட்டத்துக்கு உட்பட்டு பேச்சுவார்த்தைக்கு மாநில தயார். அவரசப்பட்டு எந்த முடிவையும் மேற்கொள்ள வேண்டாம்.

இத்தாலிய உயர் அதிகாரி ஒரிஸாவுக்கு விரைவு:


இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்க
இத்தாலிய கவுன்சில் ஜெனரல் ஜோயல் நொச்சியோரி புவனேஸ்வர் விரைந்துள்ளார். இந்த பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்பட்டு, கடத்தப்பட்ட இருவரும் பாதுகாப்பாக விடுவிக்கப்படுவார்கள் என நம்பிக்கையுடன் மேலும் அவர் தெரிவித்தார்.

ம்ல்கனாகிரி கலெக்டர் ஆர். வீனெல் கிருஷ்ணன், இளம் பொறியாளரோடு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இதே மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டதும். அரசுக்கு விதித்த நிபந்தனைகளை ஏற்றவுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டதும் நினைவு கொள்ளத்தக்கது. 

Monday, January 23, 2012

007 ஜேம்ஸ்பாண்டுக்கு வயது 50!




ஜேம்ஸ்பாண்டு 007 கதாபாத்திரம் தோன்றும் படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அதைக் கொண்டாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி நடைபெற இன்னும் பத்து மாதங்கள் இருந்தாலும், ஏற்பாடுகள் இப்போதிருந்தே செய்யப்பட்டு வருகின்றன. இந்தக் கற்பனைக் கதாபாத்திரத்தை பிரிட்டனைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் இயான் ஃபிளமிங் 1953 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார். 
ஜேம்ஸ்பாண்டை நாயகனாக வைத்து எழுதப்பட்ட நாவல்கள் அமோகமாக விற்பனையாகின. இந்த நாவலில் ஒன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் 1962 ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. டாக்டர் நம்பர் ஒன் என்பதுதான் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரம் தோன்றிய முதல் படமாகும். அதன்பிறகு, 22 படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 

ஸ்கைபால் என்ற பெயரில் உருவாகி வரும் படம் 23வது படமாக இருக்கப்போகிறது. 50 ஆம் ஆண்டு விழா கொண்டாடவிருக்கும் நேரத்தில்தான் இது வெளியாகும். இப்படத்தில் டேனியல் கிரேக், ஜேம்ஸ்பாண்டாக நடிக்கவிருக்கிறார். முதல் ஜேம்ஸ்பாண்டாக நடித்த சீன் கானரியிலிருந்து, ஜார்ஜ் லாசன்பி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன் ஆகியோர் இந்தப் பாத்திரத்தில் தோன்றினர். 
இந்த நடிகர்களுக்கு இணையாக நடித்த நாயகிகளான உர்சுலா ஆண்டர்ஸ்(வயது 75), டயானா ரிக்(73), பார்பரா பேக்(64), கேரி லேவல்(50), ஹேல் பெர்ரி(45) மற்றும் தற்போது உருவாகி வரும் ஸ்கைபால் படத்தின் நாயகியான நவேமி ஹாரிஸ்(35) ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். 

இந்த நிகழ்ச்சிக்கு ஜேம்ஸ்பாண்டு படத்தயாரிப்பாளரான எம்.ஜி.எம். நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி ஹாலிவுட்டில் நடக்கவிருக்கையில், மேலும் பல இடங்களில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். திரைப்படத்துறையில் நவீன தொழில்நுட்பங்கள் வந்து பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. ஆனால் 50 ஆண்டுகளாக ஒரு கதாபாத்திரம் தொடர்வதே சாதனையான விஷயமாகும். 80 வயதைக் கடந்துவிட்ட சீன்கானரி உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது பெருமைக்குரியது என்கிறார் தற்போதைய ஜேம்ஸ்பாண்டு நாயகன் டேனியல் கிரேக்.

இதெல்லாம் சரி இந்த ஜேம்ஸ்பாண்டுகள் மூன்றாம் உலக நாடுகளில் நடக்கும் அநியாயங்களை தடுப்பதற்காக பாய்ந்து, பறந்து அடிபதை பார்த்த நமக்கு அமெரிக்காவின் அடாவடிகளை எதிர்த்து அவர் அடித்த மாதிரி தெரியவில்ல அல்லவா? இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஏகாதிபத்திய நாடுகள் தங்களை அவ்வுளவு எளிதாக தாங்களே அம்பலப்படுத்திகொள்மாட்டார்கள். ஜேம்ஸ்பாண்டு அமெரிக்கா போனால் ராக்கி, ராம்போ சில்வர்ஸ்டோல்ன் இங்கிலாந்து போவார் அல்லது டெர்மினேட்டர் அர்னால்டு அங்கு போவார். எனவே இவர்கள் சாகசங்கள் சோசலிச நடுகள் மற்றும் மூன்றாம் உலக நாடுகளில் மட்டும் செல்லுபடியாகும். கிரிமினல்களும், போதை மருந்து கடத்துபவர்களும் ஏதோ இத்தகைய நாடுகளில்தான் இருப்பது போல சித்ததிக்கப்படுவதும், அதை தடுக்க ஜேம்ஸ்பாண்டுகளும், அர்னால்டுகளும் சண்டையிடுவதாக உருவாக்கப்படும் சினிமாக்களுக்கு பின்னால் அரசியல் இல்லாமல் இல்லை.!? 

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)