Showing posts with label விவாதம். Show all posts
Showing posts with label விவாதம். Show all posts

Thursday, July 4, 2013

’நீதி’க்கு அப்பாற்பட்டதா நீதித்துறை??


பல்லடம் உமா மகேஸ்வரி அவர்களுடன் குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்ய மாட்டேன் என ஏமாற்றிய குன்னூர் தங்கராஜு அவர்களை கைது செய்தது பற்றி பரபரப்பான விவாதம் ஓடிக்கொண்டேயிருக்கிறது. இதிலே ஆரம்பத்திலேயே எல்லோரும் செய்கிற தவறே, உமா மகேசுவரி அவர்களை காவல்துறை உதவி ஆய்வாளராகப் பார்ப்பதும், தங்கராஜு அவர்களை நீதிபதியாகப் பார்ப்பதும் தான்.  
தங்கராஜு அவர்களைக் கைது செய்த பிறகு ஜாமீனில் விட்ட நீதிமன்றத்தின் நடைமுறையும் வழக்கறிஞர் சங்கங்களின் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டங்களும், ஒரே ஒரு கேள்வியைத்தான் அவர்களை நோக்கி கேட்க வைக்கிறது. அது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று நீங்கள் சொல்வதை இன்னமும் நாங்கள் நம்ப வேண்டுமா? என்பது தான்.
கன்னியாகுமரியில், உடுமலை குடிமங்கலத்தில், பல்லடத்தில் என மூன்று ஊர்களில் தங்கராஜு அவர்கள் உமா மகேசுவரியுடன் கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால் தான் தங்கராஜு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தங்கராசு அவர்கள் சார்ந்திருக்கிற நீதித்துறையின் சென்னை உயர்நீதிமன்றம் தான் இரு வாரங்களுக்கு முன்பாக, திருமணம் என்றால் தாலி, சடங்கு, சம்பிரதாயம் என்பதெல்லாம் கட்டாயம் அல்ல. வயந்துவந்த இருவர், மனதொத்து சேர்ந்து வாழ்ந்திருந்தாலே, கணவன் மனைவிதான் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் அவர்கள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார். உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறார்களா? என்று வழக்கறிஞர் சங்கங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தியதற்கான பல்வேறு சாட்சிகளையும் (குடிமங்கலத்தில் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் உட்பட) பல்வேறு ஆதாரங்களையும் உமா மகேசுவரி அவர்கள் (குறுந்தகவல்கள், புகைப்படங்கள், செல்போன் உரையாடல்கள்) வைத்திருக்கிறார்.
திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து உறவு வைத்துக்கொண்டு ஏமாற்றினால் அது பாலியல் பலாத்காரம் என்று நீதித்துறைதான் சொன்னது. அதன்படிதான் 376வது பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒரு நீதிபதி அதை முறையாக எதிர்கொண்டு வழக்கில் வாதாடித்தான் வெற்றி பெற வேண்டுமே தவிர அவரைக் கைதே செய்யக்கூடாது என்று கற்பிப்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. எந்தத்தவறுமே செய்யாதவர் என்றே வைத்துக்கொள்வோம். எந்தத்தவறுமே செய்யாதவர் முகத்தை மூடிக்கொண்டு நீதிமன்றத்திலிருந்து ஓடுவது ஏன்?
கைது செய்யப்பட்ட (arrest) அனவைரையுமே இயந்திரத்தனமாக நீதிமன்றக்காவலுக்கு (remand) அனுப்பக்கூடாது வாதிடும் சட்ட வல்லுனர்கள் வழக்கறிஞர்கள் அல்லாத, நீதிபதிகள் அல்லாத யாருக்கேனும் இப்படிப் போராடியிருக்கிறார்களா? அதிகாரம் இருக்கிற யார் வேண்டுமானாலும் என்ன கிரிமினல் நடவடிக்கையில் வேண்டுமானாலும் ஈடுபடலாமா?
அமர்வு நீதிமன்றத்தால் மட்டுமே விசாரிக்கப்படத்தக்க ஜாமீனில் விடமுடியாத வழக்குப் பிரிவுகளில்சனிக்கிழமை கைது செய்யப்பட்டவருக்கு திங்கள் கிழமை திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுகிறது. அன்றே அது கோப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அன்றே அரசு தரப்பு வழக்கறிஞருக்கு அறிவிப்பு வழங்கப்பட்டு, அன்றே அவரிடமிருந்து பதில் பெறப்பட்டு அன்றே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதுவும் எந்த நிபந்தனையும் இல்லாமல், ஜாமீன் தாரர்கள் கோரப்படாமல், ஜாமீன் வழங்கப்பட்டு, அந்த உத்தரவும் அன்றே வழங்கப்பட்டு, அது உடனடியாக பல்லடம் நீதிமன்றம் போய் சேர்ந்து, அங்கு உடனே ஜாமீன் பத்திரம் தயார் செய்யப்பட்டு. அது உடனடியாக அங்கிருந்து கோவை மத்திய சிறைச்சாலைக்குச் சென்று அங்கு நடைமுறைகள் முடித்து 5 மணிக்குள்ளாக விடுதலை செய்யப்படுகிறார் என்றால், இதுபோல விரைவான நடவடிக்கைகள் யாருக்கேனும் நடத்தப்பட்டிருக்கிறதா? தங்கராஜு அவர்கள் தேச விடுதலைப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவரா? மக்கள் நலன் காக்க சிறை சென்றவரா? பொது நோக்கிற்காக சிறை சென்ற யாருக்கேனும் இதுபோல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா? அப்படியெல்லாம் இல்லாவிட்டாலும் கூட நீதிபதியைத்தவிர வேறு ஒரே ஒருவருக்காவது இப்படி நடத்தப்பட்டிருக்கிறதா?
வழக்கறிஞர் சங்கங்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்துப் போராட்டங்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்களே?  பொது நோக்கத்திற்காக சிறை சென்ற யாருக்காகவேனும் இப்படிப் போராட்ட அறைகூவல் விடுத்திருக்கிறார்களா? அப்படி சிலர் சிறை சென்றபோது, இது அவர்களுடைய தனிப்பட்ட நடவடிக்கை என்று ஒதுங்கிக்கொண்ட சங்கங்கள், இன்று தங்கராஜு அவர்களுக்காக களமிறங்குகிறதே? தங்கராஜுவின் நடவடிக்கை துறை சார்ந்ததா? பொது நலன் சார்ந்ததா? தனிநபர் குற்றத்திலும் மோசமான குற்றத்தில் அல்லவா சம்மந்தப்பட்டிருக்கிறார்?
அதிகாரம் ஒன்றைத்தவிர தங்கராஜுக்காக போராடவைக்கிற சக்தி எது? வழக்கின் பின்னணியை ஒருதுளி கூட ஆராய மறுப்பதுதான் கற்றறிந்த வழக்கறிஞர்களின் பகுத்தறிவா? உணர்வு வயப்பட்டே சில கேள்விகளைக் கேட்கிறோம். வழக்கறிஞர்களின் அக்கா தங்கைகள் இவ்வாறாக பாதிக்கப்பட்டாலும் கூட இப்படித்தான் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு நீதிபதி வழக்கறிஞர் என்ற அளவுகோலை மட்டும்தான் எடுத்துக்கொள்வீர்களா?   
     நியாயமாகப் பார்த்தால் தங்கராஜு அவர்களே நேர்மையாக தனது பதவியை விட்டு விலகி, வழக்கை எதிர்கொண்டு நிரபராதி என நிரூபித்துவிட்டு பதவி ஏற்றுக்கொள்கிறேன் எனச்சொல்லியிருக்க வேண்டும். ஒரு நீதிபதியை இன்னொரு நீதிபதி எப்படி மனச்சாய்வு இல்லாமல் நேர்மையான வழக்கு விசாரணையை நடத்துவார்? என்கிற பொதுஜனங்களின் கேள்விக்கு என்ன பதிலை வைத்திருக்கிறார்கள்?
     வழக்கறிஞர்களும், நீதிமன்றங்களும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. அதிகாரம் இருந்தால் யார் குடியை வேண்டுமானாலும் கெடுக்கலாம் என்ற தவறான முன்னுதாரணத்தை நாம் அனுமதிக்க முடியாது.
- நீலவேந்தன், வழக்கறிஞர். 

Monday, July 1, 2013

’சிங்கம்’ உள்ளிட்ட போலீஸ்கள், ஏன் அப்படி இருக்கிறார்கள்?!

பாஞ்சு அடிச்சா பத்தரை டன் வெயிட் டா? என ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் சிங்கம் வந்து மிரட்டிக் கொண்டிருக்கிறான். இந்த நேரத்தில் என்கவுண்டர் கதாநாயகர்களின் உருவாக்கத்தின் பின் உள்ள நோக்கங்களை புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை பயன்படும்.
-----

ஆள்கடத்தல் உள்ளிட்ட சமூகவிரோதச் செயல்கள் மூலம் பணம் சம்பாதிப்பதில் தப்பில்லை என்று நகைச்சுவையோடு சொல்லும் சூது கவ்வும் திரைப்படத்தின் பிற்பகுதியில் ஒரு போலிஸ் அதிகாரி வருவார். அவர் ஒரு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்றும், சிக்குகிறவர்களைத் தாக்குவதில் ஈவிரக்கமற்றவர் என்றும் சித்தரிக்கப்படுவார். கடைசியில் அவருக்கு என்ன நிலைமை ஏற்படுகிறது என்பது அந்தப் படத்தின் உச்சகட்ட சிரிப்பாக இருக்கும். படத்தின் கதாநாயகர்கள் கொள்ளையர்கள் என்பதால் அவர்களைப் பிடிக்க முயலும் போலிஸ் அதிகாரி வில்லனாகிவிடுவார், அவருக்கு ஏற்படுகிற தோல்வி ரசனைக்குரியாதாகிவிடும். கதாநாயகனே போலிஸ் அதிகாரி என்றால் அவன் செய்கிற என்கவுன்டர் கொலைகளும் வன்முறைகளும் தைதட்டி விசிலடித்து வரவேற்கப்பட வேண்டிய சாகசங்களாக சித்தரிக்கப்பட்டிருக்கும். காக்க காக்க படத்தை மறந்துவிட முடியுமா?

தெலுங்கிலிருந்து தமிழுக்கு ஒலிமாற்றம் செய்யப்பட்ட இதுதாண்டா போலிஸ் இப்படியாகப்பட்ட படங்கள் வேகம் பிடிக்கத் தூண்டுதலாக இருந்தது எனலாம். அநேகமாக எல்லா நட்சத்திர நடிகர்களும் என்கவுன்டர் நடத்துகிற போலிஸ் அதிகாரிகளாக நடித்துவிட்டார்கள். அவர்கள் கடைசியில் சுட்டுத்தள்ள வசதியாக வில்லன்களைப் படுமோசமான சட்டவிரோதிகளாகக் காட்டியிருப்பார்கள். பெரும்பாலான படங்களில் அந்த வில்லன்கள் கறுப்புத்தோல்காரர்களாக, சீவாத தலைமுடிக்காரர்களாக, எப்போதும் கொடூரமாகவே பார்த்துக்கொண்டிருக்கிற வியர்வை வழியும் முகத்துக்காரர்களாக ஒப்பனை செய்யப்பட்டிருப்பார்கள். கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் வக்கிரம்பிடித்த இளம் வில்லன்கள் இருவருக்கும் இளமாறன், அமுதன் என்று இனிய தமிழ்ப்பெயர் சூட்டியிருப்பார்கள்.

இடைவேளைக்குப் பிறகு வில்லன்களால் நிச்சயமாகக் கதாநாயகர்களின் காதலிகளோ மனைவியரோ தங்கையரோ பிள்ளைகளோ பெற்றோர்களோ கடத்தப்பட்டுவிடுவார்கள். சில படங்களில் அவ்வாறு கடத்தப்பட்டவர்கள் கோரமான முறையில் கொல்லப்பட்டிருப்பார்கள். கண்கள் சிவக்க, பற்கள் நறநறக்க, தரையிலிருந்து முகத்தை வானம் நோக்கி உயர்த்தி, வெஞ்சினத்தோடு பழிவாங்கப் புறப்படுவான் போலிஸ் கதாநாயகன். ஆக, தமிழ் சினிமா போலிஸ் நாயகர்களுக்குப் பொதுமக்களைக் காப்பாற்றுகிற சட்டப்படியான கடமையைவிட, சொந்த இழப்புக்குக் கணக்குத் தீர்ப்பதுதான் முக்கியம்!

நடிகைகள் காவல்துறை அதிகாரியாக வந்து தாதாமார்களை வதம் செய்கிற படங்கள் மிகமிகக் குறைவு. முன்பு ஒரே ஒரு வைஜயந்தி ஐபிஎஸ் வந்தது. அதுவும் தெலுங்கிலிருந்து தமிழுக்கு ஒலிமாற்றம் செய்யப்பட்ட படம்தான்.

ரசிகர்களாகிய பொதுமக்கள் இதையெல்லாம் ஏனென்று கேட்பதில்லை. அதைப் போலவே உண்மை வாழ்க்கையில் கேள்விப்படுகிற காவல்துறையினரின் மோதல் துப்பாக்கிச் சூடு நடவடிக்கைகள் பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. காவல்நிலைய சித்திரவதைகளில் யாரேனும் மரணமடைகிறார் என்றால் இடதுசாரி இயக்கங்களும், அவர் யார் என்பதைப் பொறுத்து வேறு சில அரசியல் கட்சிகளும், பொதுவாக சில மனித உரிமை அமைப்புகளும்தான் கண்டனம் தெரிவிக்கின்றன.

உண்மையறியும் குழுக்கள் அமைக்கப்பட்டு அவை வெளிப்படுத்தும் தகவல்கள் பெரும்பாலும் காவல்துறை அறிக்கைக்கு நேர்மாறாக இருக்கின்றன. காவல்துறையின் இப்படிப்பட்ட திட்டமிட்ட மோதல் நடவடிக்கைகளாலும், அவற்றைப் புகழ்கிற திரைப்படங்களாலும் உண்மையாகவே பாதிக்கப்படுகிறவர்கள் யார்? மேலோட்டமாகப் பார்த்தால், ஊரறிந்த ரவுடிகளும், கொலையே தொழிலாகக் கொண்ட அடியாள் கும்பல்களும்தானே போட்டுத்தள்ளப்படுகிறார்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

மோதலின்போது இடையில் சிக்கிக்கொள்ளக்கூடிய ஓரிரு அப்பாவிகளைத் தவிர மற்றபடி குற்றவாளிகள் அல்லாத வேறு யாரும் கொல்லப்படுவதில்லையே என்ற எண்ணமும் ஏற்படுகிறது. உண்மையில் அந்த எண்ணம் ஏற்படுத்தப்படுகிறது.

சிலரது அரசியல் செல்வாக்கு, அதிகார மேலிடத் தொடர்பு, சரியான ஆதாரம் கிடைக்காத நிலைமை, சாட்சிகள் எவரையும் அச்சுறுத்தி அடக்கிவிடக்கூடிய வன்மம்... இப்படிப்பட்ட சூழல்களில் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் முறைப்படி ஒப்படைத்து, சட்டப்படி விசாரணைக்கு உட்படுத்தி, தண்டனை பெற்றுத்தர முடிவதில்லை. அப்போது இப்படி சட்டத்திற்கும் ஊருக்கும் வெளியே அவர்களின் கதையை முடிப்பதில் தவறு என்ற கருத்தும் பல்வேறு வழிகளில் மக்கள் மனங்களில் ஏற்றப்படுகிறது. அவ்வாறு கருத்தேற்றம் செய்யும் கைங்கரியத்தைச் செய்வதில் போலிஸ் நாயகத் திரைப்படங்கள் பங்காற்றுகின்றன.

அரசு சட்டம் ஒழுங்கைக் காப்பதில் கறாராக இருக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காகக்கூட என்கவுன்டர்களுக்கு அனுமதி தரப்படுவது உண்டு. அரசியல் மட்டத்திலோ, துறைசார்ந்த அதிகார மட்டத்திலோ சிலபல சமூகவிரோதிகள் அவ்வப்போது பயன்படுத்திக்கொள்ளப்படுவதும் நடக்கிறது. அவர்கள் எல்லை மீறிச் சென்று வரம் கொடுத்தவர்கள் தலையிலேயே கை வைக்க முயல்கிறபோது, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தினால் பல ரகசியங்கள் உடைபடக்கூடும் என்பதால் இப்படிப்பட்ட என்கவுன்டர்கள் அரங்கேற்றப்படுகின்றன என்றும் மனித உரிமை இயக்கத்தினர் சொல்கிறார்கள். ஒரு சில திரைப்படங்களிலும் இது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

"அட, வெறும் பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் திரைப்படங்களைப் பார்த்தோமா, பொழுதைப் போக்கிவிட்டு வந்தோமா என்றில்லாமல் இந்த அளவுக்கு ஆராய வேண்டுமா" என்று வழக்கம்போல் சிலர் கேட்கவே செய்கிறார்கள். எந்தத் திரைப்படம் பற்றி எப்படிப்பட்ட விமர்சனம் வைத்தாலும் இப்படிக் கேட்கிறவர்கள் அவர்கள்.

கலை-இலக்கியத்தின் சமூகத் தாக்கம் குறித்த புரிதல் இல்லாததால் இப்படிக் கேட்கிறார்களேயன்றி அவர்களை வன்முறை ஆதரவாளர்கள் என்று குறைசொல்வதற்கில்லை. ஆனால், இப்படிப்பட்ட எண்ணங்கள் வளர்க்கப்படுவதன் விளைவை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கிறபோது வேறொரு கவலை ஏற்படுகிறது.

காவல்துறை அத்துமீறல்கள் நியாயமானவைதான் என்ற கருத்து வலுவாக ஊன்றப்படுவதால், அவர்கள் செய்யக்கூடிய எந்தவொரு தவறான செயலையும் தட்டிக்கேட்க வேண்டும் என்ற மனநிலை மேலோங்குவதில்லை. மக்களுக்காகப் போராடுகிற போராளிகள் போலியான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்படுகிறபோது, போலிஸ் நடவடிக்கையில் நியாயமில்லாமல் இருக்காது, என்ற நினைப்பு வருகிறது. இந்த மனப்போக்கை வளர்ப்பதில் என்கவுன்டர் நடவடிக்கைகளும் திரைப்படங்களும் பங்காற்றுகின்றன.

இந்த மனப்போக்கு பரவலாவதால், மனித உரிமைகளுக்கான எந்தவொரு போராட்டம் என்றாலும் சில அரசியல் இயக்கங்களும் சில மனித உரிமை அமைப்புகளுமே அந்தப் போராட்டங்களுக்கென வாக்கப்பட்டவையாக எப்போதும் களம் காண்கின்றனவேயன்றி, அந்த இயக்கங்கள் சார்ந்தவர்கள் அவற்றில் பங்கேற்கிறார்களேயன்றி, வெகுமக்கள் கலந்துகொள்வதில்லை.
இது ஜனநாயக வளர்ச்சிக்குப் பெரும் கேடல்லவா?.

ஏதாவது ஒரு காவல்நிலைய சாவு பற்றிய செய்தி வருகிறபோது, இறந்தவரின் குடும்பத்தினர், இடதுசாரி - ஜனநாயக சக்திகள், சில அமைப்புகள் தவிர்த்துப் பெரும் மக்கள்திரள் அந்தச் சாவுச் செய்தியைக் கண்டுகொள்வதில்லை. அவன் ஏதாவது தப்பு செய்திருப்பான். அவமானம் தாங்காமல் கயிற்றில் தொங்கியிருப்பான்... என்று இலகுவாக ஒதுக்கிவிடுகிறார்கள்.


ஒரு காவல்துறையின் அத்துமீறல்கள் பற்றிக் கேள்வி கேட்கத் துணியாத இந்த ஒதுக்கல்போக்கு, வேறு எந்தத் துறையின் வரம்பு மீறல்களையும் தட்டிக்கேட்காத சமூக மனநிலையாக மாறுகிறது. அரசின் மக்கள்விரோதக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட முன்வராத செயலின்மையைகக் கெட்டிப்படுகிறது.
ஒருவேளை இதையெல்லாம் எதிர்த்துக்கிளம்ப மக்கள் தயாராவார்களானால் இருக்கவே இருக்கிறது சாதி! மதம்! எல்லாம் கடவுள் செயல் என்ற போதனை! சாதித்தூய்மையைக் காப்பதற்கு அவதாரம் எடுத்தவர்களாக சில அமைப்புகள் பேரவைக்கூட்டங்கள் நடத்திக்கொண்டிருக்க, “ஆம்பளை கெட்டா வாழ்க்கை போச்சு, பொம்பளை கெட்டா வம்சமே போச்சு,” என்று பஞ்ச் டயலாக் பேசும் திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கின்றனவே!.

இப்படியெல்லாம் மக்கள் திசைதிருப்பப்பட வேண்டும், மக்களின் கேள்வி கேட்கும் திறன் மழுங்கடிக்கப்பட வேண்டும், மக்களின் தட்டிக்கேட்கும் வல்லமை பொசுக்கப்பட வேண்டும் என்பதுதான் இன்றைய உள்நாட்டு - உலகமய சுரண்டல் தாதாக்களின் விருப்பம் அல்லது ஆசை. அந்த விருப்பம் அல்லது ஆசையை அரசு எந்திரங்களோடு சேர்ந்து நிறைவேற்றுகிற கரசேவையை போலிஸ் நாயகத் திரைப்படங்கள்  நிறைவேற்றிக்கொண்டிருக்கிறபோது அதை வெறும் பொழுதுபோக்கென்று விட்டுவிட முடியாது.

-அ.குமரேசன்,
ஆசிரியர் தீக்கதிர் நாளிதழ்

Saturday, June 29, 2013

’காஃபிர்’களால் பதியப்பட்ட முஸ்லிம்களின் கதைகள் ...

“நான் அடிக்கடி யோசிப்பது போல அமெரிக்காவில் ஒரு வெள்ளையனாகப் பிறந்திருந்தால், உலகின் மிகப் பெரிய குற்றவாளியாக என்னை உணர்ந்திருப்பேன். அந்தக் குற்ற உணர்வு என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றிருக்கும். இந்தியாவில் ஒரு தலித்தாகப் பிறந்திருந்தால் என் மீது செலுத்தப்படும் அவமானத்தையும் ஒடுக்கு முறைகளையும் தாங்க முடியாமல் மனம் வெந்து தற்கொலை செய்து கொண்டிருந்திருப்பேன். இப்போது இப்படி யோசிக்கிறேன். நல்லவேளை நான் ஒரு முஸ்லீமாகப் பிறக்கவில்லை. பிறந்திருந்தால் பயந்து பயந்தே செத்திருப்பேன். என் நிழலே என்னைத் துரத்த ஒரு எலியைப்போல வளைக்குள் அடைந்திருப்பேன்' 
இஸ்மாயில் என்ற பெயருடன் நாதூராம் கோட்சேவால் காந்தியைக் கொலை செய்ய முடிந்ததிற்கான காரணம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எங்காவது குண்டு வெடித்தால் மிக எளிதாக நமக்கான பொதுபுத்தி இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொள்ள முடிவதற்கான காரணமாய்!! அது பிற மதவெறியர்கள் வைத்த குண்டாய் இருந்தாலும் கூட.. இந்த ஒப்பிடல் ஏதோ சட்டென நமக்குத் தோன்றியதில்லை. இதன் பின்னால் மிகவும் திட்டமிட்ட ஒரு அடையாள அரசியல் பதுங்கி நிற்கிறது. இஸ்லாமிய மக்கள் பிறருடன் ஒன்று கலந்து வாழும் கலாச்சாரம் இதனால் எல்லாம் இன்னும் உதிர்ந்துவிடவில்லை. ஆனால் இந்த ஒற்றுமை உதிர வேண்டும் என்ற வன்மம் தொடர்கிறது.

இந்த வன்மத்திற்கு எதிராக இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையைப் பதிவுகள் மூலமாகவும், கதையாடல்கள் மூலமாகவும் உரத்துச் சொல்ல வேண்டியது காலத்தின் தேவையாய் எழுந்து நிற்கிறது. எனவே நம்மோடு இணைந்து வாழ்கிற 20 சதமான இஸ்லாமிய சமூக சொந்தங்கள் குறித்து நமது எழுத்தாளர்கள் எழுதுவதில் காட்டும் சிக்கனத்தில் மாற்றம் தேவைப்படுகிறது. இத்தேவையை உணர்த்துவதாக காஃபிர்களின் கதைகள் தொகுப்பு வந்துள்ளது. 18 எழுத்தாளர்கள்; அவர்களில் எவரும் இஸ்லாமியர்கள் அல்லர். ஆனால் அவர்கள் இஸ்லாம் சமுதாய வாழ்வை அவதானித்து அதை சிறுகதைகளாக வடித்துள்ளனர். இக்கதைகளைத் தொகுத்து மிகவும் முக்கியமான ஆவணமாக எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா வழங்கியுள்ளார். அவரது படைப்புகளைப் போலவே இந்த தொகுப்பும் மௌனமாக ஆனால் ஆழமான கேள்விகளை எழுப்பி நிற்கிறது. 

டிசம்பர் ஆறாம் தேதி வந்தால் இந்திய தேசமே “அட்டென்ஷன்'' நிலைக்கு வந்து நிலைகுத்தி நிற்பது ஏன்? என்ற வினா உங்களுக்கு எப்போதாவது எழுந்திருக்கும் என்றால் இந்தத் தொகுப்பின் தேவையும் உங்களுக்குப் புரியும்!

தமிழின் முதல் சிறுகதையென அடையாளம் காணப்பட்ட வ.வே.சு அய்யரின் குளத்தங்கரை அரசமரம் துவங்கி இன்று வரை லட்சக்கணக்கான சிறுகதைகள் இஸ்லாமியர் அல்லாத எழுத்தாளர்களால் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவைகளில் எத்தனை கதைகள் இஸ்லாமிய சமூகம் குறித்த பதிவுகளைக் கொண்டிருக்கிறது என்ற கேள்வியை இந்தத் தொகுப்பு நிச்சயம் எழுப்பும். இத்தொகுப்புக்குள் வராத கதைகள் இன்னும் இருக்கலாம். அவைகளையும் தொகுக்க வேண்டியது இன்றைய சமூகச் சூழலின் அவசியமாகப்படுகிறது.

பெருமிதங்களை நிரப்பி, உணர்ச்சிகளைத் தூண்டி சவால்களை முன்நிறுத்தி, எதிரிகள் என சுட்டப்பட்டு அவர்களின் சுயமரியாதையைக் கேள்விக்குறியாக்கி, அறை கூவல்களைக் கொண்டாடும் மனநிலைமைக்கு கொண்டு வந்து ஒரு இனத்தை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வைத்துள்ள இந்துத்துவ வாதிகளின் முன்னால் இத்தகைய நூற்றுக்கணக்கான காஃபிர்களின் கதைகளை தேவைகளைத் தேடி முன்வைக்க வேண்டியது காலத்தின் அவசியம். இந்தத் தொகுப்பில் மதச்சார்பின்மையை வலியுறுத்தும் கதைகள் அணி வகுக்கவில்லை. தேச ஒற்றுமையை வலியுறுத்த வேண்டுமெனில் கோயில், மசூதி, சர்ச் படங்களை போட்டால் ஒற்றுமை பொங்கிவரும் என்ற நினைப்பும் பொதுவாக இருக்கிறது. முற்போக்கு இயக்க ஊர்வலங்களில்கூட ஒரு பூனூல் அணிந்த பார்ப்பனர், குல்லா அணிந்த இஸ்லாமியர், கோட்டு போட்ட ஃபாதர் கைகோர்த்து வருவது போல மதச்சார்பின்மை வலியுறுத்தப்படுகிறது. (அது சரி இந்து என்றால் பிராமணர்கள் மட்டும்தானா?) மற்ற மதங்களுக்கு இடம் எங்கே?

ஆனால் இந்தத் தொகுப்பு அமைதியாய் பேசும் அரசியல் மிகவும் முக்கியமானது. சுப்ரமணிய பாரதி, சுந்தர ராமசாமி, கு.ப.ராஜகோபாலன், அசோகமித்ரன், பிரபஞ்சன், பொன்னீலன், வண்ண நிலவன், எஸ்.பொன்னுத்துரை, சுகுமாரன், நாஞ்சில் நாடன், தஞ்சை ப்ரகாஷ், எஸ். ராமகிருஷ்ணன், விட்டல் ராவ், ரமேஷ் பிரேதன், சோ. தர்மன், ஆ. மாதவன், வேல ராமமூர்த்தி, சா.சுப்பாராவ் எனப் பல தலை முறை எழுத்தாளர்களின் எழுத்தினுள் இஸ்லாமியப் படிமம் பதிந்துள்ள விதம் என்ற உளவியலைக் கண்டறிய உதவும் கதைகளின் தொகுப்பு.

இத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதை குறித்தும் அறிமுகம் செய்வது நன்றெனினும் பக்கங்கள் அதற்கு இடம் தராது. இஸ்லாமியர்கள் அல்லாதோரின் எழுத்துக்கள் என்கிற ஓர்மையைத் தாண்டி இக்கதை களுக்குள் இன்னும் நிறைய ஒற்றுமைகள் இழைந்து நிற்கின்றன. குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டின் விதையாய் இந்திய இருப்பில் இஸ்லாமியர் வாழ்வின் நிலைகொள்ளாத் தவிப்பை பெரும்பாலான கதைகள் பேசுகின்றன. எந்த ஒரு கதையிலும் இஸ்லாமிய சமூகத்திற்காகப் ''பெருந்தன்மையுடன்'' பரிந்து பேசும் தொனி தட்டையான மதிப்பீட்டில் வராதது கவனம் கொள்ளத்தக்கது.

ஹஸர் தினார், அக்பர் எனும் அப்பா என்ற இரு கதைகளைத் தவிர்த்து மற்ற கதைகள் எல்லாம் சராசரி மனிதர் களின் தினசரி வாழ்க்கை குறித்துப் பேசுகின்றன. ஒரு வகையில் அக்பர் என்ற மாமனிதனும், கோபங்களை உடைக்கச் சுற்றியலைந்த மாலிக் காபூரும் சராசரி வாழ்க்கையுடைய மனிதரூபமாய் பார்க்கப்பட வேண்டியவர்களே. மனிதர்களே மகாபுருஷர்களாக மாறுகின்றனர். ஹஸர் தினார் மறுவாசிப்புக்கு உட்படுத்த தூண்டுகிற கதையாக இருக்கிறது.

1920 களிலேயே இஸ்லாமிய சமூகத்தை கரிசனத்தோடும் விமர்சனத்தோடும் அணுகியுள்ள பாரதியும், மனக் கணக்குப் புலியான ஹசன் ராவுத்தரும், தன்வாழ்வில் நடந்த எந்த ஒரு சம்பவத்தையும் மறைக்க விரும்பாத பட்டாணியும், பெற்ற மகள் திருமணத்திற்கு பயன் பட்டிருக்க வேண்டிய பணமாகினும் அது வந்தவழி தவறு என்பதால் தன் மகனைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த பாயம்மாவும், ஒரு இந்து திருமணத்தின் நம்பிக்கை சார்ந்த வலியைப் புரிந்து கொண்டு உதவும் மொகிதீன் ஷா என்கிற இன்ஸ்பெக்டரும், தன் தாடியும், சாயலும் ஒரு இஸ்லாமியரைப் போன்று இருப்பதால் அவஸ்தைக்குள்ளாகும் அதனால் தன்னுடைய இறுதி ஆயுதமாய் ஆண் உறுப்பை எடுத்துக் காட்டும் அவலம் நிறைந்த இளைஞனும், ஜன்னல் வழியே காதல் கொண்டவனுக்காக எல்லாம் துறந்த நூரி இறுதியில் அவனையே துறந்ததும், எல்லா சோகங்களையும் தனது வயலின் வழியே இசையாய் அனுப்பும் மெஹருன்னிசாவும் தொகுப்பைப் படித்து முடித்த பல நாட்கள் உங்களுடன் தொடர்ந்து வருவார்கள். கரீம் என்ற பெயர் இருப்பதாலேயே இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள ''விழிப்பு'' கொஞ்சம் நெருடத்தான் செய்கிறது. இன்னும் இதில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

“நான் அடிக்கடி யோசிப்பது போல அமெரிக்காவில் ஒரு வெள்ளையனாகப் பிறந்திருந்தால், உலகின் மிகப் பெரிய குற்றவாளியாக என்னை உணர்ந்திருப்பேன். அந்தக் குற்ற உணர்வு என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றிருக்கும். இந்தியாவில் ஒரு தலித்தாகப் பிறந்திருந்தால் என் மீது செலுத்தப்படும் அவமானத்தையும் ஒடுக்கு முறைகளையும் தாங்க முடியாமல் மனம் வெந்து தற்கொலை செய்துகொண்டிருந்திருப்பேன். இப்போது இப்படி யோசிக்கிறேன். நல்லவேளை நான் ஒரு முஸ்லீமாகப் பிறக்கவில்லை. பிறந்திருந்தால் பயந்து பயந்தே செத்திருப்பேன். என் நிழலே என்னைத் துரத்த ஒரு எலியைப்போல வளைக்குள் அடைந்திருப்பேன்'' என்று ரமேஷ் பிரேதன் பதிந்துள்ளது நாகரிக சமூகத்தை வெட்கப்பட வைப்பதாகும்.

இந்த புத்தகத்தைப் படிக்கும்போது வாசக மனநிலை எங்கு செல்லும் என்பதற்கு நானே சிறந்த உதாரணமாய் இருக்கின்றேன். என்னுடைய அனுபவத்தில் பிரியாணி என்ற உணவை முதலில் சுவைத்தது நான் பிறந்த பரங்கிப்பேட்டையில்தான். குமத் பள்ளியில் என்னுடைய அம்மா ஆசிரியையாக பணியாற்றிய காலம் அது. மியாங்கடை ரொட்டியும், தில்ஷாத் அக்கா நெய் சாதமும் இஸ்லாமியர்கள் நிறைந்த தெருவில் வாஞ்சையுடன் எங்களை அரவணைத்த முக்காடு அத்தைமார்களும் முப்பத்தைந்து வருடகாலங்களுக்குப் பின் என்னுடைய நினைவலைகளில் எழுந்து வந்தார்கள். சுவாசத்தைப்போல மிகவும் இயல்பாகப் பழகியவர்களை தூரம் வந்தவுடன் மறந்தது மட்டுமல்ல, என்னுடைய எழுத்தில் இதுவரை அவர்களை எங்கும் பதியவில்லை என்ற குற்ற உணர்வும் எழுந்தது. இந்த குற்றவுணர்வு எழுவது நல்லதுதான். இது பற்றிப்படர வேண்டும். 

மிகச்சிறிய மனித வாழ்வின் தூரத்தினை கடக்கும் வழியில் நம்மோடு பயணிக்கும் சகபயணிகளை ஆராயும் நோக்கோடு உற்றுப் பார்ப்பதும், முகம்திருப்பி யோசிப்பதும் பயணத்தை நரகமாக்கும். அதற்கான சூழல் உருவாகியுள்ள இந்தியா போன்றொரு கொந்தளிப்பான தேசத்தில் இதைப்போல் இன்னும் நூறு தொகுப்புகள் வரவேண்டும் என்று கீரனூர் ஜாகிர் ராஜா குறிப்பிடுவதை அப்படியே வழிமொழியலாம்.

- ரமேஷ்பாபு

Wednesday, June 19, 2013

கட்டுவதும், அவிழ்ப்பதும் ஆண்களாகவே இருக்கின்றீர்கள் (விவாதம்) ... - ப்ரியா தம்பி

ஒரு பத்திரிக்கையில் வெளியாகியிருந்த கேள்வி: ஒரு பெண் தாலியை கழற்றி எறிவது ஆணவத்தின் அடையாளமா? ஆத்திரத்தின் அடையாளமா? வெறுப்பின் அடையாளமா?

தாலியைக் கழற்றி எரிவது ஆணவம், ஆத்திரம், வெறுப்பு என 3 இல் ஏதோ ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என அமைக்கப்பட்டுள்ள இந்தக் கேள்வி - நாசூக்கான முறையில் தாலியைக் கட்டாத பெண்குறித்த விமர்சனத்தை உள்ளடக்கி இருந்தது. 
எனவே அது வெறுப்போ, ஆணவமோ, ஆத்திரமோ அல்ல என்று பொருள்படும் வகையில் - அறிவின் அடையாள என்று பதில் சொல்லியிருந்தார் அந்த எழுத்தாளர். ஆனால், பதிலை மட்டும் வைத்துக்கொண்டு, தாலி கட்டிக் கொண்டால் அறிவில்லையா? என்றும், பதில் சொன்னவரின் மதத்தை வைத்து அதனை திரிக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டனர். 

அந்தச் சூழலில் சில நல்ல அனுபவங்களும், விவாதங்களும் வெளிப்பட்டன ... முகநூலில் ப்ரியா தம்பி வெளியிட்டிருந்த பதிவை தருகிறோம்.
-----

கல்லூரியில் படிக்கும்போது, நாகர்கோயில் வேப்பமூடு ஜங்ஷன் அருகே கம்ப்யூட்டர் வகுப்புக்கு சென்று கொண்டிருந்தேன். உடன்படித்த மாணவர்களும், சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களும் அந்த வழியாக செல்லும் ஒரு பெண்ணை ‘’ஷிப்ட்’’ என கிண்டல் செய்து சிரிப்பார்கள்… எப்போதும் சிரித்தபடி இருக்கும் அந்தப் பெண்ணை பேருந்து நிலையத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன்… ‘’ஷிப்ட்’’க்கு அர்த்தம் கேட்டபோது, அந்தப் பெண் ஒரு பாலியல் தொழிலாளி என டியூட்டர் தான் புரிய வைத்தார்…

அதன்பிறகு அந்தப் பெண்ணை பேருந்து நிலையத்தில் பார்த்தால் பேச ஆரம்பித்தேன்… அவருக்கு கணவரும், மூன்று குழந்தைகளும் உண்டென்றும், கணவருக்கு மட்டும் தன்னுடைய தொழில் தெரியும் என்றும் சொன்னார்… அங்கிருந்து நான்கைந்து கிலோமீட்டர் தூரத்தில் தான் அந்தப் பெண்ணின் வீடு என்பதால் மறைக்கவும் வாய்ப்பில்லை…

அந்தக் கணவனின் ஒரே கோரிக்கை…. வேறு ஆண்களோடு இருக்கும்போது மனைவி தாலியைக் கழட்டி விட வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது… அவர் மனைவியா இன்னொருத்தர் கூட எதுவும் பண்ணக் கூடாதாமாம்…… அந்தப் பெண் கணவன் சொன்னதை தவறாமல் கடைப்பிடித்தாலும் கூட, இதை என்னிடம் சொல்லும்போது புருஷனை அர்ச்சனை செய்த வார்த்தைகளை இங்கே எழுதுவது ரொம்ப கஷ்டம்… 


 
இப்பவும் சொல்லுங்க… தாலி ரொம்ப புனிதம் தான்…   

இரண்டாயிரத்து எட்டு புத்தாண்டு அன்று நான் கணவரோடு மாமல்லபுரம் சென்றேன்.. திட்டமிடாத பயணம் என்பதால், தங்க இடம் கிடைக்கவில்லை. சாதாரண ஹோட்டல் ஒன்றில் தங்கினோம்.. இரவு பன்னிரண்டு மணிக்கு போலீஸ் வந்து கதவைத் தட்டினார்கள்.. நாங்கள் யார் கணவன் மனைவி என்று சொன்னதும், ‘’எங்கே கழுத்தில் தாலியைக் காணோம்’’ என்றுதான் அவர் கேட்டார்.. 


மீடியாவில் இருப்பதால் இதுபோன்ற ஆட்களை சிரமமில்லாமல் எதிர்கொள்ள முடிகிறது.. நான் தாலி கட்டி திருமணம் செய்து கொள்ளவில்லை என்று சொன்னால், ‘’அது எப்படி அப்படி ஒரு கல்யாணம்?’’ என்று அவர் உள்ளே வந்து உட்கார்ந்து கொண்டார்.. இதுபோன்ற தொல்லைகள் வரும் என ஊகித்து எங்கள் திருமணப் பதிவு சான்றிதழை எடுத்து வைத்திருந்ததால், சிறப்பு திருமணச் சட்டம் பற்றி அவருக்கு வகுப்பெடுக்க… அப்படித்தான் அந்த புதுவருடம் ஆரம்பித்தது… 
திருமணம் பற்றி விளக்கம் கிடைத்ததும், அவர் கேட்ட அடுத்த பிரமாதமான கேள்வி, ‘’கல்யாணம் ஆயிடுச்சில்ல, அப்புறம் எதுக்கு ஸ்கர்ட் போட்டிருக்கீங்க?’’ என்பதாக இருந்தது.. இன்றைக்கு போல் அல்லாமல், அன்று எனக்கு நிறைய பொறுமை இருந்ததால் அந்த கேள்விக்கு சிரிக்க முடிந்தது… கழுத்தில் இருக்கிற இத்துனூண்டு மேட்டர் தான் ஒழுக்கத்தை தீர்மானிக்கிறது என்றால் காமெடியா இல்லியா? 

இப்போதும் மகளோடு செல்லும் எல்லாப் பயணங்களிலும், பள்ளிக் கூடத்தில், வீடு வாடகைக்குப் பார்க்கப் போகும்போது.. என எல்லா இடங்களிலும் கழுத்தில் தாலி? என்கிற கேள்வியை எதிர்கொள்ளத் தான் வேண்டி இருக்கிறது… ஆனாலும் ஒரு இத்துனூண்டு தாலி தான் நான் பெர்ஃபெக்ட் என உங்களுக்கு சொல்லும் என்றால், நான் பெர்ஃபெக்டே இல்லப்பா, ஆளை விடுங்க என்றுதான் சொல்லத் தோன்றுகிறது… 

நாம் எதற்கு செய்கிறோம்? என்றே தெரியாமல் தான் நிறைய விஷயங்களை செய்து கொண்டிருக்கிறோம்.. அதில் ஒன்றுதால் இந்த தாலியும்... திருமண வாழ்க்கையின் நொச்சுகளில் இருந்து தப்பித்து, தன்னைப் பற்றியும் யோசிக்க பெண்களுக்கு நேரம் இருக்கும் ஒருநாளில் அவர்கள் இதை எதுக்கு அவன் கட்டினான்? என யோசிக்கத் தொடங்குவார்கள்.. தாலியின் உண்மையான அர்த்தம் தெரியும் நாளில் அவளே அதை கழற்றி வீசுவாள்... அட்லீஸ்ட் தன் மகளுக்காவது அதை வேண்டாமென்று சொல்லுவாள்....

அதுவரை ஆண்கள் தயவு செய்து மூடிக்கொண்டு போகலாம்... இங்கு கட்டைப் போடுவதும், அவிழ்ப்பதும் நீங்களாகவே இருக்கின்றீர்கள்.. தவிரவும்... தத்துவம், சித்தாந்தம், இலக்கியம், அரசியல் எல்லாம் தெரிந்த முற்போக்குவாதி என காட்டிக் கொள்ளுபவர்கள் தான் ஆபத்தானவர்கள் என்பதை வரலாறு பலமுறை நிரூபித்து விட்டது..

Tuesday, March 15, 2011

ஆயுத இறக்குமதி முதலிடம்: பெருமைதானா?


உலகிலேயே அதிகமாக ஆயுதங்களை இறக் குமதி செய்து குவிக்கும் நாடுகளில் இந்தியா முத லிடத்தில் உள்ளது என்று ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகின் ஒட்டுமொத்த ஆயுதங்கள் விற்பனை யில் இந்தியா 9 சதவீதம் அளவுக்கு இறக்குமதி செய்வதாகவும், குறிப்பாக 2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டுவரை இந்தியா பெருமளவில் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை இறக்கு மதி செய்து குவித்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக விமானப்படை மற்றும் கப்பற் படைகளை நவீனமயமாக்குகிறோம் என்ற பெய ரில் இந்தியா பல ஆயிரம் கோடி டாலர்கள் கணக்கில் ஆயுதங்களுக்காக செலவிட்டு வரு கிறது என்றும், இந்தியாவின் பாதுகாப்புத்துறை பட்ஜெட் வரும் ஆண்டில் 1.5 டிரில்லியன் டால ரைத் தாண்டும் என்றும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்புள்ள நிலைமையோடு ஒப்பிடும்போது இது 40 சதவீதம் அதிகம் என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் அதே நேரத் தில் இவ்வளவு பெரிய தொகையை பாதுகாப்பு என்ற பெயரில் வெளிநாட்டு ஆயுத வியாபாரிக ளுக்கு வாரியிறைப்பது நியாயம்தானா என்று கேள்வி எழுப்ப ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு.

உலகிலேயே ஆயுத ஏற்றுமதியில் அமெரிக் காதான் முதலிடத்தில் உள்ளது என்பதோடு இணைத்து இந்தியாவின் ஆயுத இறக்குமதியை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிலும் குறிப் பாக அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அண் மையில் இந்தியா வந்து சென்றபோது 4.1 பில்லி யன் டாலர் அளவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

பாதுகாப்புத்துறைக்கென்று வாங்கப்படும் ஆயுதங்கள் மற்றும் விமானங்கள், கப்பல்கள் பற்றிய வரவு-செலவு தணிக்கைக்கு உட்படுத் தப்படுவதில்லை. சிஏஜி நடத்திய ஆய்வில்தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டதும், பிரதமரின் நேரடிப் பொறுப்பிலுள்ள இஸ்ரோ நடத் திய எஸ்-பேண்ட் ஒதுக்கீட்டில் ரூ.2 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட இருந்ததும் கண்டறியப் பட்டது. ஆனால் இத்தகைய தணிக்கை முறை பாதுகாப்புத்துறைக்கு இல்லை.

போபர்ஸ் பீரங்கி ஊழலில் ரூ.64 கோடி ஊழல் நடந்தது கண்டறியப்பட்டது. ரூ.204 கோடி செலவு செய்யப்பட்டு விசாரணை நடந்த போதும் இத்தாலியைச் சேர்ந்த இடைத்தரகர் குவாத் ரோச்சி உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனை வரும் வசதியாக தப்பித்துவிட்டனர்.

பாஜக ஆட்சிக்காலத்தில் நடந்த கார்கில் மோதலின்போது ராணுவ வீரர்களுக்கு காலனி மற்றும் மரணமடையும் வீரர்களுக்கான சவப் பெட்டியில் கூட ஊழல் நடந்தது கண்டு நாடே அதிர்ச்சியடைந்தது. பல லட்சம் கோடி ரூபாயில் நடைபெறும் ஆயுத வியாபாரத்தில் பெருமளவு முறைகேடு நடக்க வாய்ப்பு உண்டு. இந்த ஆயுத வியாபாரத்தை நியாயப்படுத்துவதற் காகவே இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத் தல் ஏற்பட்டுள்ளதாக அவ்வப்போது சில ஊட கங்கள் கிளப்பிவிடுவதும், அதன்பின்னால் பன் னாட்டு ஆயுத வியாபாரிகள் இருப்பதையும் கவ னத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் அரைமணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற் கொலை செய்து கொள்வதையும் ஆயுத இறக்கு மதியையும் ஒப்பிடும் தேசபக்தியுள்ள இந்தியன் வருத்தப்படாமல் இருக்க மாட்டான்.

Monday, January 31, 2011

உத்தப்புரத்தில் உரிமை கேட்பவர்கள் பகையாளிகளா?


தமிழக அரசுக்குச் சொந்தமான புறம் போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உத் தப்புரம் முத்தாலம்மன் கோவிலில் துவக்க காலம் தொட்டே தலித் மக்கள் வழிபாடு செய்யவில்லை என்பது போன்ற ஆணை யை பேரையூர் வட்டாட்சியர் வடிவமைத் துள்ளது தலித் மக்களிடையே பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசியல் சாசனம் தலித் மக்க ளுக்கு வழங்கிய அரசியல் சட்ட உரிமை யைப் பாதுகாக்க மதுரை உத்தப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்தி வரும் போராட்டத்தின் தொடர்ச்சி யாக ஜனவரி 31ந்தேதி முத்தாலம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட்டம் நடத்தவிருக்கிறது.

இப்போராட்டத்திற்கு முன்பே அரசு இப்பிரச்சனையில் தலையீடு செய்ய வேண் டும் என தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கடிதம் எழு தினார். அதற்கு இதுவரை பதில் இல்லை.

ஆலயநுழைவுப்போராட்டம் என அறி வித்த பின் அரசு நிர்வாகம் மிக வேக வேக மாக தலித் மக்களின் உரிமைகளைத் தடுக்க அனைத்து வேலைகளிலும் இறங்கி யுள்ளது. சட்டம்- ஒழுங்கு எனச்சொல்லி மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்களைத் தேடித்தேடி ஒரு ஆணையை வழங்கி வருகிறது. அந்த ஆணையை பேரையூர் வட்டாட்சியர் ஆர். மங்களராமசுப்ரமணியன் பிறப்பித்துள்ளார். அடுத்து அந்த ஆணையில், “முத்தாலம் மன் கோயில் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தது” எனக்குறிப்பிட்டுள்ளது.

உத்தப்புரத்தில் காலகாலமாக முத்தா லம்மன் கோவிலில் எழுமலை, சீல்நாயக் கன்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, தங்ககவுண் டன்பட்டி, தச்சம்பட்டி, கோட்டைப்பட்டி, நல் லது நாயக்கன் பட்டி உள்ளிட்ட 18 கிரா மங்களைச் சேர்ந்த தலித் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் வழிபாடு நடத்தியுள்ளனர்.ஆனால் கடந்த 1989 ஆம் ஆண்டு எழுமலையில் நடந்த கட்டப்பஞ் சாயத்தில் தலித் மக்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது, அரசமரத்தை வழிபடக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு “முடி வுகளை” எடுத்தனர். இதன் பிறகு தான் தலித் மக்களைப் பிரிக்கும் வகையில் தீண் டாமைச் சுவர் கட்டப்பட்டது.

தமிழகம் முழுவதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய ஆய்வின் ஒருபகுதி யாக உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் வெளி உலகத்திற்கு தெரியவந்தது. இச்சுவரை இதுவரை முழுமையாக அகற்ற மனமில்லாத தமிழக அரசு கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர்-8 ந்தேதி ஒருபகுதியை அகற்றியது. அந்த வழியாக இதுவரை தலித் மக்கள் வாகனத் தில் செல்லமுடியவில்லை. மிக கவனமாக காவல்துறை அப்பாதையில் தலித் மக்கள் செல்வதைத் தடுத்து தனது பணியை “ சிறப்பாக” செய்து வருகிறது.

இந்த நிலையில் தலித் மக்கள் தங்களது வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட ஆலய நுழைவுப்போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த சூழலில் ஜனவரி28 ந்தேதி பேரையூர் வட்டாட்சியர் ஆர்.மங்களராம சுப்ரமணியன் பிறப்பித்த ஆணையைப் படித்தால் மிகச்சிரிப்பாக இருக்கும். தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உத் தப்புரம் மக்களுக்காக சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதை கூட அறியாமல் அவர் பிறப்பித்த ஆணையில், “எழுமலை காவல் ஆய்வாளரின் அறிக் கையில், கடந்த 30.12.2010 அன்று சென்னை பனகல் பூங்காவில் இடது கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை முழக்கப்போராட் டம் நடத்திய தாகவும், எதிர்வரும் 31.1.2011 அன்று உத்தப்புரம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் தலித் மக்களின் ஆலய நுழைவுப்போராட்டம் நடைபெறும் என்றும்” அறிவித்துள்ளன எனக்குறிப்பிட் டுள்ளார்.

இதில் இருந்தே எதையும் முழுமையாக விசாரிக்காமல் ஒரு தரப்பாகத்தான் அதி கார வர்க்கத்தினர் செயல்படுகின்றனர் எனத் தெரிந்து கொள்ளலாம்.

தலித் மக்கள் தங்கள் உரிமையைக் கேட் டால், அதை ஒடுக்குவதற்காக ஆதிதிராவி டர்களுக்கும், பிற இனத்தவர்களுக்கும் இடையேயுள்ள பகைமை உணர்வு தணிந்து விட்டதாக கருத இயலாத சூழ்நிலையே தற் போதும் நிலவி வருவதாகவும் தனது ரகசிய விசாரணையில் தெரியவந்ததாகக் கூறி 144 தடையாணை பிறப்பித்தல் ஆணை யில் பேரையூர் வட்டாட்சியர் கூறியுள்ளார்.

மதுரையில் உத்தப்புரத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் சமீபத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கூட, தலித் மக்களுக்கும், எங்களுக்கும் எந்தப் பகையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். உரிமை கேட்பவர்களை பகையாளியாக பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட்டம் நடந்த போது வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத்தார் ஒரு பிரசுரத்தை வெளியிட்டனர். “கோவில் தரிசனம் செய்பவர்களும், செய்து வைப்ப வர்களும், அனுமதிப்பவர்களும் மகத்தான அபசாரத்திற்கு ஆளாகி நீண்டகாலம் நரக வாசம் செய்ய வேண்டுமென்று ஆகமங்கள் முறையிடுகின்றன. சுருதி, ஸ்மிருதி, இதி ஹாஸ, ஆகம சாஸ்திரங்களில் நம்பிக்கை யுள்ள ஆஸ்திக மகாஜனங்களுக்கு இது விஷயம் ஞாபகப்படுத்தப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்கள். அது போல இருக் கிறது உத்தப்புரத்தில் ஆலயநுழைவுப் போராட்டம் நடத்த முடிவு செய்த நிலையில் வெளியிடப்பட்டுள்ள அரசு அதிகாரி 144 ன் கீழ் தடை யாணை பிறப்பிப்பு ஆணை.

- ப.கவிதா குமார்

Thursday, January 13, 2011

பகுத்தறிவு சகாப்தமும் ஜனநாயகமும்

‘ஒரு அபிப்பிராயத்தை வெளியிட வழியின்றி’ அடக்குவதனால் பெருந் தீமையே விளைகிறது. அது மனித சமூகம் அடையக் கூடிய நன்மையைக் கெடுப்பது போலாகும். அதனால் அந்தத் தலைமுறை மட்டுமின்றி வருங்காலத் தலை முறைகளும் பாதிக்கப்படும். ஆனால் அடக்கப்படும் அபிப்பிராயத்துக்குச் சாதகமானவர்களைக் காட்டிலும் அதற்குப் பாதகமானவர்களுக்குத்தான் அதிக நாட்டம். இந்த அபிப்பிராயம் சரியான தாயின் தனது தவறைத் திருத்திக் கொண்டு சத்தியத்தைத் தெரிந்து கொள்ளும் ஒரு அரிய சந்தர்ப்பத்தை மனித சமூகம் இழந்து விடுகிறது. அது தவறாயின்அதை அடக்குவதாலும் முன் சொன்னது போலவே நட்டம் ஏற்படும். ஏனெனில் சத்தியம் அசத்தியத்தோடு மோதும் போது இன்னும் அதிகப் பிரகாசமும் தெளிவும் பெறுகிறது. அந்த நன்மை தவறான அபிப்பிராயத்தை அடக்குவதனால் இல்லாமல் போய்விடுகிறது... நாம் அடக்க முயலும் அபிப்பிராயம் தவறா னது என்று நாம் நிச்சயம் சொல்ல முடியாது. அத்தகைய நிச்சயம் நமக்கு இருக்குமாயின் அதை அடக்குவதனால் தீமையே ஓழிய வேறில்லை”

இது ஜான்ஸ்டுவர்ட் எழுதியவை. அவர் ‘தனிமனித சுதந்திரம் என்ற கருத்தின் பலமான ஆதரவாளர். அவர் எழுதிய ‘சுதந்திரம்’ என்ற சிறிய நூல் மிகப்பெரும் பெயரை ஈட்டியது. அந்நூலில்தான் நாம் மேலே குறிப்பிட்ட வரிகள் இடம் பெற்றுள்ளன. தனிமனித கருத்துக்கு அவர் வழங்கிய முக்கியத்துவம் இதனால் புலனாகும். 1806-1873 காலத்தில் வாழ்ந்த இவர் இவ்வாறு வாதிடக் காரணம் என்ன?

“மிகப் பெரும்பான்மையோருக்கு மிகப்பெரிய சுகம்” என்பதையே ஒரு அடிப் படை அளவு கோலாகக் கொள்ள வேண்டும் என பிரயோஜனவாதிகள் கூறினர். இங்கிலாந்தில் இவர்கள் குரல் ஓங்கி ஓலித்தது. குறிப்பாக மில் என்பவர் இதைப் பிரபலப்படுத்தினார். அதன் எதிரொலி யாகவே ஸ்டுவர்ட் குரல் இருந்தது என்றாலும் தவறில்லை.

19வது நூற்றாண்டு முழுமையும் வாக்குரிமையை அனைவருக்கும் விரிவு படுத்துவது என்ற மைய இழையைச் சுற்றியே ஜனநாயகக் குரல்கள் எழுந்தன. அன்றைய சர்வாதிகாரச் சுழலில் அது மிக மிக முற்போக்கானது என்பதில் ஐயமில்லை. ஆனால் அது மட்டுமே போதுமானதாக இல்லை என்பதை நடை முறைகள் காட்டின. இது குறித்து ஜவஹர்லால் நேரு எழுதுகிறார்.

“பசியால் வாடும் ஒருவனுக்கு வாக்கினால் என்ன பயன்? அவனுடைய பசியைப் பயன்படுத்திக் கொண்டு. தங்களுடைய சொந்த நலனுக்காக எதையும் செய்யக் கூடியவர்கள் கையில்தான் உண்மையான அதிகாரம் இருந்தது. வாக்குரிமை என்பது ஒவ்வொருவருக் கும் அரசியல் அதிகாரத்தை அளிப்ப தாகக் கருதப்பட்டது. ஆனால் அந்த அரசி யல் அதிகாரம் பொருளாதார அதிகாரத் துடன் இணைந்ததாக இல்லாவிடின், அது சாரமற்ற வெறும் சக்கை என்பது தெளிவு. வாக்குரிமையினாலேயே சமத்துவம் ஏற்படும் என்கிற ஆரம்ப ஜனநாயக வாதிகளின் கூற்று வெறும் பகற்கன வாகவே முடிந்தது.

இந்த எண்ணம் வலுப்பெற்று பின்னர் அது சோஷலிசத்தை நோக்கி நகர்ந்தது. அந்த காலகட்டத்தில் ஜனநாயக தத்து வம் வளர் முகத்தில் இருந்தது. பல்வேறு சிந்தனையாளர்கள் அதனை வளப் படுத்தினர்; வலுப்படுத்தினர்.

ஆடம் ஸ்மித்தின் பொருளாதாரக் கருத்துகள் அன்றைய காலகட்டத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. ஏற் கெனவே சமூகம் மதப்பிடியிலிருந்தது. ஆடம்ஸ்மித் பொருளாதாரத்தை அதி லிருந்து விடுவித்து வேறொரு பாதையில் செலுத்தினார். காரல்மார்க்ஸ் இதனை சரியான திசை வழிக்கு கொண்டு செல்லும் வரை ஆடம்ஸ்மித் பார்வையே கோலோச் சியது. அமெரிக்க பிரெஞ்சு சுதந்திரப் பிரகடனங்களில் காணப்பட்ட ஆரவாரச் சொற்கள் மக்கள் மனதில் அடக்கு முறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான எழுச்சியை பறையடித்துச் சொல்லி யிருந்தது. ஆயினும் சுதந்திரம், சமத்து வம், சகோதரத்துவம் என்ற அந்தச் சொற்க ளின் மெய்ப் பொருளை உணர்ந்து அனுபவிக்க முடியாதவர்களாகவே கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். இந்தப் பின்னணியில் 19 ஆம் நூற்றாண் டில் ஜனநாயக வளர்ச்சிக்கு புதிய சிந்த னைகள் உரம் ஊட்டின.

இதற்கு முந்தைய நூற்றாண்டு சிந்தனையாளர்களின் எழுத்தும் கூட உற்சாகம் ஊட்டின. அவர்களில் மிக முக் கியமாகக் குறிப்பிடத்தக்கவர் தாமஸ் பெயின் என்பவராவார். இவர் ஆங்கி லேயர். அமெரிக்க சுதந்திரப் போரின் போது அங்கு இருந்தார். அதற்கு உத வவும் செய்தார். ஒருவகையில் ‘பூரண சுதந்திரம்’என அமெரிக்கர்கள் முழங்க அவரும் காரணம் என்பார் ஜவஹர்லால் நேரு. அவர் இங்கிலாந்து திரும்பிய பின் மனித உரிமைகள் என்ற நூலை எழுதி னார். அதில் முடியரசை தாக்கினார். ஜன நாயகம் அவசியம் என்றார். ஏற்குமா ஆளும் வர்க்கம். அவர் நாடு கடத்தப் பட்டார். பிரெஞ்சு நாட்டில் தஞ்சம் புகுந் தார் அங்கு தேசிய கன்வென்ஷனில் ஒரு அங்கத்தினர் ஆனார்.அங்கும் அவர் வாய்பொத்தி இல்லை. 1793 இல் 16 வது லூயி சிரச்சேதம் செய்யப்பட்டதை ஏற்க வில்லை. எதிர்த்தார். அங்கேயும் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்தபோது அவர் எழுதிய புத்தகம் ‘காமன் சென்ஸ் எனப்படும் பொதுபுத்தி குறித்த விமர்சன நூல் ’ ஆகும். அதில் மதச்சார்பு மனோபா வத்தை கண்டனம் செய்தார். எதையும் பகுத்தறிவோடு யோசிக்க வேண்டிய சகாப்தத்தில் இருப்பதாக வாதிட்டார். பிரெஞ்சு அரசியல் சூழலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீது இங்கிலாந்து அரசாங்கம் பெரிதும் கோபம் கொண்டது. ஏனெனில் அவரது ‘பகுத்தறிவு சகாப்தம்’ நூல் அவர்களுக்கு வேப்பங்காயாக கசந் தது. ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், அரசுக்கு எதிராகக் கலகம் செய்யாமல்; கிளர்ந்து எழாமல் இருக்க, அவர்களின் மத மூட நம்பிக்கை பெரிதும் காரணமாயிருந்தது.

அந்த மத நம்பிக்கையை தாமஸ் பெயின் தன் நூலில் தகர்த்து விட்டதால் அது மக்களை தூண்டிவிடும் அபாயகர மான சிந்தனை. அந்தப் புத்தகம் மிகவும் அபாயகரமானது என்று இங்கிலாந்து ஆட்சியாளர்கள் நடுங்கினர் அவர் புத்தகம் தடைசெய்யப்பட்டது. அதை வெளியிட்ட, விற்பனை செய்த அனைவ ரும் பெண்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். மதத்தை எதிர்த்ததால் ஆளும் வர்க்கம் அரண்டு போனது கண்டு ஜனநாயகவாதிகள் கவலைப்பட் டனர். கவிஞர் ஷெல்லி இது குறித்து நீதிபதிக்கு நீண்ட கடிதமே எழுதியதாகத் தெரிகிறது.

ஆயினும் இவர் போட்ட விதை இங்கி லாந்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் பல்வேறு ரூபங்களில் வெளிப்படலாயின. பைபிள், விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்ற பழமைவாதம் நொறுங்கிப் போனது. பைபிள் மீதான விமர்சனங்கள் வெளிவரத் துவங்கின. பைபிளை புதிய கோணங்களில் வியாக்கியானம் செய்யத் துவங்கினர். கேள்வி கேட்காமல் குருட் டுத் தனமாக ஒப்புக் கொள்ள வேண்டிய நூல் பைபிள் என்ற பழம் நம்பிக்கை மெல்ல மெல்ல ஆனால் படிப்படியாக உறுதியாக தவிடுபொடியானது.

அகஸ்ட் காம்டோ (1798-1857) எனும் பிரெஞ்சு தத்துவ ஆசிரியர் பழைய ஆத்திக சமயக் கோட்பாடுகள் இன்றைய தேவைக்கு உதவாது என கண்டறிந்து சொன்னார். அறிவியலையும் முன்னேற் றத்தையும் அடிப்படையாகக் கொண்ட புதிய தத்துவத்தை முன்வைத்தார். தன்னுடைய மதம் ஜீவகாருண்ய மதம் என அறிவித்தார். ஒரு வகையான சமத் துவத்தை அவர் கைக் கொண்டது, இவை யும் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட ஸ்டு வட்டை ஈர்த்தது என்பது ஆச்சரிய மில்லை.

பல்வேறு விதமான கற்பனாவாத சோஷலிச கருத்துகளும், சோதனை முயற்சிகளும், பிரெஞ்சு நாட்டிலும் வேறு சில நாடுகளிலும் பல்வேறு அறிஞர்க ளால் மேற்கொள்ளப்பட்டன. ஆக 19ஆம் நூற்றாண்டு ஜனநாயகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி பற்றி கவலைப் படலா யிற்று. அது வெறும் வாக்குரிமை என்ப தோடு நின்று விடாமல் பொருளாதார சமத்துவம் பற்றி கவலைப்படலாயிற்று. அதன் வளர்ச்சிப் போக்கில் மார்க்சின் கம்யூனிஸ்ட் அறிக்கை விளைந் தது. அதே சமயத்தில் “தனிமனிதர் உரிமை” பற்றிய கருத்தும் வலுப்படலாயிற்று. அதுவே பின்னர் மனித உரிமைப் பிரகடனமாக வெளிப்பட்டது. எந்தவொரு கருத்தும் திடீரென்று அந்தரத்திலிருந்து உதிப்ப தில்லை; யாரும் அருளுவதும் இல்லை; காலவோட்டத்தில் அனுபவ வெளிச் சத்தில் சரித்திர உரைகல்லில் உரசி உரசி தான் பிறக்கும் என்பதையே இவை உறுதி செய்கின்றன.

Sunday, December 12, 2010

Friday, December 10, 2010

பெண்களும், குழந்தைகளும் படிக்கக் கூடாத கமல்ஹாசனின் கவிதையாம்!


மன்மதன் அம்பு படத்தில் நடிகர் கமல்ஹாசன் எழுதிய கவிதை ஒன்றை பெண்களும் குழந்தைகளும் படிக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் தினமலர் பத்திரிக்கையில்  ஒருவர் பொங்கி எழுந்திருக்கிறார். "நாகரீகமற்றவர்கள் முன் நாமும் நாகரீகமில்லாமல் செயல்படுவது நாகரீகமில்லை என்பதால், நாகரீகமாக அடக்கிக்கொள்கிறேன்.” என்று  முடித்திருந்தார்.

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)