Showing posts with label கருணாநிதி. Show all posts
Showing posts with label கருணாநிதி. Show all posts

Thursday, April 7, 2011

கலைஞரே! அந்தக் கடிதமும் பத்திரமாக இருக்கிறதா?




கருணாநிதி அவர்களே! செம் மொழித் தகுதி தமிழுக்குக் கிடைத் திருக்கிறது என்றால் அது உங்கள் கூட்டணியிலே இருக்கின்ற மற்ற கட்சிகளையெல்லாம்விட அதற்கான தனிப் பெருமை தேடிக் கொள்ளக் கூடிய உரிமையும் பெருமையும் உங் கள் ஒருவருக்கே உரியது என்று எனக்கு சோனியாகாந்தி அம்மையார் எழுதிய கடிதத்தை இப்பொழுதும் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றேன்

- முரசொலி 5.4.11.

வடசென்னை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் இப்படிப் பேசியிருக்கிறார்.

தமிழுக்கு செம்மொழித் தமிழ் அந்தஸ்து என்ற மத்திய அரசு உத்தரவு வேண்டுமானால் இவரது காலத்தில் வந்திருக்கலாம். ஆனால் இதற்கு முன்னதாக தமுஎகச உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்ட பிரச்சாரம் - பின்னர் காலவரையற்ற உண்ணாவிரதம் -அதையடுத்து தில்லிக்கே சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியது என்பதெல்லாம் முதலமைச்சர் கருணாநிதிக்குத் தெரியாது அல்லது மறந்துவிடுவார் அல்லது மறைத்துவிடுவார். ஏனென்றால் எல்லாப்புகழும் இவருக்கே சேர வேண்டும் என்ற பேராசை கொண்டவர். அது அவரது குணாம்சம்! அது ஒருபுறம் இருக்க, செம்மொழி தமிழுக்காக சோனியாகாந்தி எழுதிய கடிதத்தை பத்திரப்படுத்தி வைத்திருக் கிறேன் என்கிறாரே இன்னொரு கடிதத்தைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

அந்தக் கடிதம் எது தெரிகிறதா? தொழிலதிபர் ரத்தன் டாடா எழுதிய கடிதம். அதிலே என்ன எழுதியிருக்கிறார்? அதை வெளியிடுவாரா முதலமைச்சர் கருணாநிதி. வெளியிடமாட்டார். ஏனென்றால் அது மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச் சர் ஆ. ராசாவைப் பாராட்டி எழுதப்பட்ட கடிதம். இந்தக் கடிதத்தை டாடா யார் மூலமாக அனுப்பியிருக்கிறார். தெரியுமா? ஆ. ராசாவுக்கு பதவி வாங் கிக் கொடுத்த 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலுக்குத் தரகராக இருந்த நீராராடியா மூலமாகத்தான். நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணையில் ரத்தன் டாடாவே முதலமைச்சருக்குக் கடிதம் அனுப் பிய உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது அவருக்கும் தங்க ளுடைய தொழில் நிறுவனத்துக்கும் (டாடா டெலி கம்யூனிகேஷன்) இடையே நல்ல நட்புறவு இருக்க வில்லை என்றும் டாடா ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தச் சூழலில்தான் தினகரன் அலு வலகம் மீது தாக்குதல்; தயாநிதி மாறன் பதவி விலகல்; அந்தப் பதவிக்கு ஆ.ராசா நியமனம் என்ற காட்சிகள் ஓடுகின்றன. 2007ஆம் ஆண்டு தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகப் பதவி யேற்ற ஆ.ராசா உடனடியாக அலைக் கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் குதித்துவிட்டார். ஏலத்தின் கடைசி தேதி முன்கூட்டிய தேதிக்கு மாற்றப்பட்டது. காப்பீட்டுத் தொகை செலுத்தும் நேரமும் அவசர அவசரமாக மாற்றப்பட்டது. இதுபற்றி தொலைத் தொடர்பு அமைச்சகம், பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம், அமைச்சரவை அலுவலகம் ஆகியவற்றுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்தச் சூழலில்தான் முதலமைச்சர் கருணாநிதிக்கு டாடா கடிதம் எழுதியிருக்கிறார். ராசாவின் ஊழ லுக்கு ஊக்கம் கொடுத்ததா இந்தக் கடிதம்? முதலமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டதா இந்தக் கடிதம் என்ற கேள்விகள் எழுகின்றன. அந்தக் கடிதம் முதலமைச்சரிடம் பத்திரமாக இருக்கிறதா?

காஞ்சி ஏட்டில் அண்ணா எழு திய கடிதத்தையெல்லாம் வெளியிட்டு கடந்த காலத்தை நினைவுபடுத்தி பேசும் கலைஞர், டாடாவின் கடிதத்தை வெளியிடுவாரா?

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் விஷயத்தில் தொடர்ந்து அவர் மவுனம் சாதிக்க முடியாது. வெளிவந்தே ஆக வேண்டும். இல்லையென்றால் ஆட்சியிலிருந்து மக்கள் வெளியேற்றிவிடுவார்கள்.

- மயிலைபாலு

நன்றி:
தீக்கதிர்

Thursday, March 31, 2011

1967 காங்கிரஸ் ஆட்சி மாற்றமும்! விலைவாசி உயர்வும்!


1967-ல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு முதன்மையான காரணங்களில் விலைவாசி உயர்வும் ஒன்றாகும். 1964-ல் தமிழ்நாட்டில் உண வுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப் பாடு ஏற்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. முதலமைச்சராக பக்தவச்சலம் இருந்தார். 1967-ல் நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் விலைவாசி உயர்வை முன்வைத்து திமுக தேர்தலை சந்தித்தது. ‘பக்தவச்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி’ ‘காமராஜ் அண்ணாச்சி பருப்புவிலை என்னாச்சி’ ‘கூலி உயர்வு கேட்டான் அத்தான் குண் டடிப்பட்டு செத்தான் அத்தான்’ ‘கும்பி எரியுது குளு குளு ஊட்டி ஒரு கேடா’ என்ற முழக்கங்களை முன்வைத்து திமுக பிரச்சாரம் செய்தது. காங்கிரஸ் தோற்று, திமுக வெற்றியும் பெற்றது. ஆனால் இன்று அதே திமுக அதே காங்கிரஸமூடன் கூட்டணி சேர்ந்து கொண்டு விலைவாசி உயர்வை நியா யப்படுத்திக் கொண்டுள்ளது. சமீபத்தில் சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் அன் பழகன் விலைவாசி ஏற்றத்திற்கு ஆட்சி யாளர்கள் பொறுப்பில்லை என்றும், பூகம் பம், வெள்ளம் வருவதைப் போன்றுதான் விலைவாசி உயர்வும் என்று சொல்லி, தமிழ்நாட்டு மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளார்.

முன் எப்பொழுதும் கண்டிராத விலைவாசி உயர்வால் தமிழ்நாட்டு மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு இன்று ஆளாகியுள்ளனர். திமுக, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போடுவதாக சொல் லிக்கொண்டாலும் 100 ரூபாய்க்கு பருப்பு விற்பதையும், சர்க்கரை, சமையல் எண் ணெய் போன்ற உணவுபொருட்களின் விலை யானை விலைக்கு விற்பதையும்; மறைக்க முடியாது. ஏன் வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்றது? எப்படி விலை குறைக்கப்பட்டது? இடையில் கொழுத்த இலாபம் யார் பெற்றது? என்பதை நாடே அறியும். வெளிநாடுகளுக்கு வெங்காயத் தை ஏற்றுமதி செய்ய அனுமதி கொடுத்த தும், மாடுகள் ஓடிய பிறகு பட்டியை சாத் தியதும், திமுக பங்கேற்றுள்ள, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான் என்பதை அனைவரும் அறிவார்கள்..

விலைவாசி உயர்விற்கு மூல காரண மாக உள்ளது பெட்ரோல், டீசல் விலை உயர்வாகும். அதை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசில் திமுக பங்கேற்றுள்ளது. பெட்ரோல் விலையை உயர்த்திக்கொள்ள நிறுவனங்களுக்கே அதிகாரத்தை வழங் கும்போது, அதற்கு ஆமாம் போட்ட திமுக, இதுவரை மவுனமாக இருந்துவிட்டு, இனி விலைவாசியை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தப் போகிறதாம்!

தற்போது திமுக தேர்தல் அறிக்கை யில், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந் தால் (!) விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில் ஊகவணிகத்தை தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளது. யார் மத்திய அரசில் ஆட்சி செய்வது? யார் யாரை வலியுறுத்துவது? தமிழ்நாட்டு மக்கள் எதைச் சொன்னாலும் ஏமாந்து விடுவார்கள் என திமுக தப்புக்கணக்கு போடுகிறது. சட்டமன்ற தேர்தலில் அதிக சீட்டு கேட்டு காங்கிரஸ் கட்சி திமுகவை வற்புறுத்தினால், மத்திய அரசிலிருந்து விலகி விடுவோம் என மிரட்டும் திமுக, ஏன் ஊக வணிகத்தை தடை செய்யா விட்டால் ஆட்சியிலிருந்து விலகிவிடு வோம் என மிரட்டக்கூடாது ? தமிழ் நாட்டு மக்கள் எதையும் எளிதில் மறந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில்தானே மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள திமுக, மத்திய அரசை வலியுறுத்துவோம் என வெற்று வாக்குறுதியை தந்துள்ளது.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மற்றொரு வேடிக்கை, சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடுகளை அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை திமுக வலியுறுத் தப் போகிறதாம். பட்டிதொட்டிகளிலெல் லாம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சில் லரை வர்த்தகத்திற்கு அனுமதி அளித்து விட்டு, அப்பளம் முதல் குடிக்கும் நீர் வரை அந்நியநாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு இனி அந்நிய முதலீடுகளை எதிர்க்கப்போகிற தாம். கேட்பவர்கள் இ-னா வா-னாவாக இருந்தால் இதையும் சொல்வார்கள், இன்னமும் சொல்வார்கள்.

தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டணத் தை தேர்தலுக்கு தேர்தல் சத்தம் போடா மல் குறைத்துவிட்டு, தேர்தல் முடிந்த வுடன் வினோதமான பெயர்களை பேருந்துகளுக்கு சூட்டி கட்டணத்தை உயர்த்தி மக்களிடம் பணம் பறிக்கும் திமுக அரசின் நயவஞ்சகத்தனம் அம் பலப்பட்டுவிட்டது. இனியம் மக்கள் ஏமாறத் தயாராக இல்லை.

நடுத்தர மக்களின் சொந்த வீடு என்ற ஆசைக் கனவை தகர்த்தது திமுக ஆட்சி அல்லவா? செங்கல் விலை மூன்று மடங்காகவும், கம்பி விலை குதிரை விலையாகவும் யார் ஆட்சியில் உயர்ந்தது? மணல் விலை மலையாக உயர்ந்ததற்கும் யார் காரணம்? ஆற்றில் மணல் எடுத்து கோடி கோடியாக பணம் சேர்த்தவர்களின் பின்னால் யார் உள்ளனர் என்பது யாருக்கும் தெரியாது என்று நினைத்துவிட்டார்கள் போலும். கட்டுமானப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்ததால் பாதியில் நின்று போன வீடுகள் இன்று திமுக ஆட்சியின் அவலத்தை பறைசாற்றிக்கொண்டுள் ளன. இதனால் வேலைவாய்ப்பை இழந்த கட்டுமானத் தொழிலாளர்களின் குடும் பங்கள் பட்டினியால் வாடிக்கொண்டுள் ளன. ஆட்சியாளர்களுக்கு தக்க பாடம் புகட்ட அவர்கள் காத்துக்கொண்டுள் ளனர்.

மத்திய அரசின் கொள்கையால், மாநில அரசின் கண்டும் காணாதப் போக் கால், இன்று நூல் விலை கடுமையான ஏற்றத்தை சந்தித்துள்ளது. கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நூல் வியாபாரிகள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் குடும்பங் கள் இன்று நடுத்தெருவிற்கு வந்துவிட் டன. விசைத்தறி உரிமையாளர்கள் வங்கி யில் வாங்கிய கடனை கட்ட முடியால் பரி தவிக்கின்றனர். விசைத்தறி தொழி லாளர்கள், ஷிப்ட் குறைக்கப்பட்டு அரை வயிற்று கஞ்சிக்கு ஆளாய் பறந்துகொண் டுள்ளனர். போதாக்குறைக்கு தமிழக அரசின் மின்வெட்டு காரணமாக பஞ்சா லைகளும் விசைத்தறிகளும் விழி பிதுங்கி விக்கித்து நிற்கின்றன. இதுதான் திமுக அரசின் கடந்த 5 ஆண்டுகால சாதனையாகும்,

யார் சென்றாலும் வேலை கிடைக்கும் என்ற தமிழகத்தின் மான்செஸ்டர் திருப்பூர் இன்று சோகக் கடலில் மூழ்கிக் கிடப்பதற்கு யார் காரணம்? சாயப்பட் டறை கழிவுநீரை சுத்திகரிக்கும் திட்டத் தை பொறுப்பற்ற முறையில் தமிழக அரசு அணுகிய காரணத்தால் இன்று இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை யிழந்து வாடிக்கொண்டுள்ளனர். சிறு தொழில் நிறுவன உரிமையாளர்களிலி ருந்து பெரும் தொழில்நிறுவன உரிமை யாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று திருப்பூர் தொகுதியில் நூற்றுக் கணக்கானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து, தங்கள் எதிர்ப்பை வெளிப் படுத்தியுள்ளனர். திருப்பூரின் இன்றைய அவலநிலைக்கு காரணமான மத்திய-மாநில ஆட்சியாளர்களுக்கு மக்கள் தக்க தீர்ப்பு எழுத காத்துக் கொண்டுள்ளனர்.

எல்லா பொருட்களின் விலையும் உயரும். ஆனால் பால் கொள்முதல் விலை மட்டும் ஏன் உயராது? பால் கொள்முதல் விலை உயர்வு கேட்டுப் போராடிய பால் உற்பத்தியாளர்களை, எங்களுக்கும் போராட்டம் நடத்த தெரியும் என மிரட்டியவர்தான் இன்று வாக்கு கேட்டு தமிழக மக்கள் மத்தியில் வலம் வந்துகொண்டுள்ளார்.

எந்த விலைவாசியை வைத்து 1967ல் திமுக காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியதோ அதே விலைவாசி உயர்வு இன்று திமுக-காங்கிரஸ் கூட் டணியை வீழ்த்தும் என்பதில் ஐயமில்லை.

Tuesday, March 29, 2011

வேறு யாரும் கலைத்துறையில் இருக்கக் கூடாதா?




கேள்வி: “சினிமாத் துறையை எனது வீட்டுத்துறையாக பங்கிட்டுக் கொள்வதாக கூறுகிறார்கள்... எனது குடும்பம் கலைத்துறையில் இருக்கக் கூடாதா..?” என்று கலைஞர் கேட்கிறாரே...

இந்த கேள்வியை சற்று மாற்றி, கலைஞர் குடும்பத்தாரைத் தவிர, வேறு யாரும் கலைத்துறையில் இருக்கக் கூடாதா? என்பதே இப்போது எழுந் துள்ள உண்மையான கேள்வி!

கலைத்துறையில் கலைஞரின் குடும்பம் கூடாது என்பதல்ல; அந்த ஒரு குடும்பத்தின் ஏகபோகமாக கலைத் துறை மாற்றப்பட்டு விடக்கூடாது என் பதே திரைத்துறையினரின் ஒட்டு மொத்த மனக்குமுறலாகும்.

ஒரு காலத்தில் பெரியதிரையைச் சார்ந்து சின்னத்திரை இயங்கியது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரண மாகவும், தொலைக்காட்சி வலைப்பின் னல் உலகளாவிய முறையில் பரவி யுள்ள காரணத்தாலும், பெரியதிரை இன்றைக்கு சின்னத்திரையைச் சார்ந்தே இயங்க வேண்டியுள்ளது. சின்னத்திரையை கையில் வைத்திருந் தால், பெரியதிரையை முழுமையாக ஆக்கிரமிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

கேபிள் உட்பட சின்னத்திரையை தங்களது முழுமையான கட்டுப்பாட்டிற் குள் கலைஞர் குடும்பம் கொண்டு வந்துவிட்டது. இவர்களை பகைத்துக் கொண்டு, யாரும் திரைப்படம் தயா ரிக்க முடியாது என்ற நிலை உரு வாக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக திரைப்படத் தயாரிப்புத் துறையில் ஈடுபட்டிருந்த ஏவிஎம் நிறுவனம் கூட, கலைஞர் குடும்ப நிறுவனங்களைச் சார்ந்தே திரைப்படம் தயாரிக்க வேண் டியுள்ளது. ஏ.எம்.ரத்னம், கே.டி.குஞ்சு மோன், ஆஸ்கர் ரவிச்சந்திரன், எஸ் பிக்சர்ஸ் சங்கர் என திரைப்படத் தயா ரிப்பைத் குறைத்துக் கொண்ட அல் லது நிறுத்திவிட்ட திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

கலைஞர் குடும்பத்தை சரணாகதி அடையாமல் யாரும் திரைப்படம் தயா ரிக்க முடியாது; தயாரித்தாலும் வெளி யிட முடியாது; வெளியிட்டாலும் படத்தை ஓட்டிவிட முடியாது என்பதே இன்றைய நிலை. நீண்டகாலம் திமுக வின் அனுதாபியாக தன்னைக் காட் டிக் கொண்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்தி ரசேகர், இன்றைய நிலையில் திமுக வுக்கு எதிரான நிலை எடுத்திருப்ப தற்குக் காரணம் அவரது மகன் நடித்த “காவலன்” படத்தை வெளியிட விடா மல் கலைஞர் குடும்பத்தினர் படுத்திய பாடே காரணம்.

ராம.நாராயணன், வி.சி.குகநாதன் தலைமையிலான “பெப்சி” அமைப்பு போன்றவற்றை திமுக தனது கட்டுப் பாட்டிற்குள் வைத்துள்ளது. தொழிற் சங்க தேர்தல்களின் போது, திமுக பின்பற்றும் முறையே திரைப்படத்துறை சார்ந்த சங்கத் தேர்தல்களிலும் பின் பற்றப்படுகிறது. இந்த சங்க தேர்தல் களில், கலைஞர் குடும்ப நிறுவனங் களுக்கு ஏற்பவே விதிமுறைகள் உரு வாக்கப்படுகின்றன. உதாரணமாக, புதி தாக வெளியாகும் திரைப்படங்களுக்கு பத்திரிகைகளில் ஒருபக்க அளவு விளம்பரம் தரக்கூடாது என்பதும் ஒரு விதி. இதனால் வேறுவழியின்றி தயா ரிப்பாளர்கள் தொலைக்காட்சி களையே நாட வேண்டியிருக்கும். ஆனால், தொலைக்காட்சி விளம்பரங் களுக்கு இத்தகைய எந்த கட்டுப் பாடும் இல்லை. பன்னாட்டு நிறுவ னங்கள் நேரடியாக தமிழ்ப்படங்களைத் தயாரிக்க முடியாது. ஏதாவதொரு உள்நாட்டு திரைப்பட நிறுவனத்துடன் இணைந்துதான் படம் தயாரிக்க முடியும். இத்தகைய வாய்ப்பு கலைஞர் குடும்ப நிறுவனங்களைத் தவிர, வேறு சிறு தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை.

கலைஞரின் இருபது வயது நிரம் பாத பேரப்பிள்ளைகள் கூட, ஆண் டுக்கு ரூ. 50 கோடி அளவிற்கு முதலீடு செய்ய முடிகிறது. இதற்கான வரு வாயை அவர்கள் எந்தத் துறையிலி ருந்து- எந்த சம்பாத்தியத்தின் மூலம் பெற்றார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பே... இதற்கான பதிலைப் புரிந்து கொள்வதும் கடினமல்ல!

இதுமட்டுமின்றி, தமிழகம் முழு வதும் திரையரங்குகளை, கலைஞர் குடும்பத்தார், கிட்டத்தட்ட தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டனர். இவர்கள் தயாரிக்கும் உப்புப்பெறாத - உருப்படாத படங் களை, தொடர்ந்து ஓட்டுமாறு நிர்ப் பந்திப்பதும், மக்கள் ஆதரவோடு ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படங்களை தூக்குமாறு செய்வதும் இன்றைக்கு நடைமுறையாக மாறிவிட்டது.

அன்றைய கால திராவிட இயக் கத்தைப் போன்று, பகுத்தறிவு, சுய மரியாதை சார்ந்த படங்களை, கலை ஞரின் பேரப்பிள்ளைகள் இன்றைக்கு தயாரிப்பதில்லை. அப்படி தயாரித் தால் கைதட்டி வரவேற்க தமிழகம் தயாராக இருக்கிறது. ஆனால், இன் றைக்கு இவர்கள் தயாரிக்கும் அல்லது விநியோகிக்கும் பெரும்பாலான திரைப்படங்களின் உள்ளடக்கம், அஞ்சா நெஞ்சனிசம், அண்ணனிசம், தாதாயிசம் ஆகியவையே!

ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் அராஜகங்களுக்கும் அளவில்லை. மக்கள் நடமாட்டம் மிகுந்த சென்னை நகரின் பிரதான சாலைகளில் படிப் பிடிப்பு நடத்த அனுமதி இல்லை. ஆனால், கலைஞர் குடும்ப நிறு வனங்களுக்கு இந்த விதி பொருந் தாது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் தயாரித்த, “குருவி” என்ற திரைப் படத்திற்காக சென்னை கிரிக்கெட் ஸ்டேடியத்தை பல நாட்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு, விளையாட வந்த சிறுவர்களையும், இளைஞர்களையும் அடித்து விரட் டினர். இதேபோல படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட பல இடங் களிலும், கலைஞர் குடும்ப நிறுவனங் களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படு கிறது.

கலைஞரின் பேரப்பிள்ளை ஒருவர் தயாரித்த திரைப்படம் தொடர்பாக சம்பளப் பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் இயக்கு நர் கே.எஸ்.ரவிகுமார், நடிகர்கள் சூர்யா, வடிவேலு ஆகியோர் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட் டதும் நிகழ்ந்தது. திரைத்துறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள மாநில அரசு அதிகாரத்தை மட்டுமன்றி, மத்திய அரசு அதி காரத்தையும் பயன்படுத்த கலைஞர் குடும்பத்தினர் தயங்குவதில்லை. ஏதா வது ஒரு காரணத்தைக் காட்டி, முதல் வருக்கு பாராட்டு விழா நடத்துவதும் அதில் பங்கேற்குமாறு, சினிமா கலை ஞர்களை நிர்ப்பந்திப்பதும் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து கொண்டே இருந்தது. இதை ஒரு விழாவில், நடிகர் அஜீத், முதல்வர் முன்னிலையிலேயே சுட்டிக் காட்டினார். நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி அதை ஆமோ தித்தார். பிறகு இருவரும் கோபாலபுரம் செல்ல நேர்ந்தது தனி திரைக்கதை.

தொலைக்காட்சி வளர்ச்சி காரண மாக நல்ல திரைப்படங்கள் கூட ஓடாத சூழ்நிலையில், பல தயாரிப்பு நிறுவனங் கள் தயாரிப்பையே நிறுத்திவிட்ட நிலையில், கலைஞர் குடும்பத்தினர் மட்டும் பல்வேறு பெயர்களில் ஆண் டுக்கு பல படங்களை தயாரித்து வெளி யிடுவது எதனால்? கலர் படங்களில் கறுப்பு வெள்ளையாகும் என்ற ரச வித்தை ஒருபுறமிருக்க, கலைத் துறையை தங்களது ஏகபோகத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற எண் ணமும்தானே காரணம்!

திரைப்படத் தயாரிப்பு, கொள் முதல், விநியோகம், வெளியிடுதல், ஒலிநாடா வெளியிடுதல், பத்திரிகை கள், எப்எம் வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் விளம்பரப் படுத்துதல் என கலைத்துறையின் அனைத்துப் பிரிவுகளையும் கலைஞர் குடும்பத்தார் ஆக்டோபஸ் போல வளைத்துள்ளது கண்டு, கலைத்துறை மிரண்டு நிற்கிறது. இந்த அராஜகத்திற்கு முடிவுகட்ட ஆட்சிமாற்றம் அவசியம் என்பதை உணர்ந்தே இருக் கிறது.

Monday, March 28, 2011

நடுத்தெருவில் நிற்கிறார்கள் நடுத்தர மக்கள்

தி.மு.க., ஆட்சியில் உயிரற்ற கம்ப்யூட்டர், காகிதங்களுக்கு மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது; மனிதனுக்கு மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது!''

"காசு வாங்கினேன், பையில போட்டேன். போன இடம் தெரியல... காதலி பார்ப்பா காரணம் கேட்பா ஏது சொல்றதுன்னு புரியல... விதவிதமா துணிகள் இருக்கு விலையைக் கேட்டா மயக்கம் வருது... எதை எதையோ வாங்கணும்னு மனசுல, அதை எண்ணாம இருக்கவும் வழியில்ல' - என்ற, பட்டுக்கோட்டை கல்யணசுந்தரத்தின் பாடல் வரிகளைப் போல தான், இன்றைய தமிழக நடுத்தர மக்களின் வாழ்க்கை உள்ளது.நுகர்வு கலாசாரத்திலிருந்து நீந்திக் கரையேற முயற்சிக்கின்றனர்; அவர்களால் முடியவில்லை. கரையிலும் நில்லாமல், நீரிலும் இல்லாமல், திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கின்றனர். எதார்த்த வாழ்க்கையில், இருப்புக்கும், தேவைக்குமான இடையில் போராடிக் கொண்டிருக்கும் அவர்களால், கல்விக் கட்டணம், வாகனக் கட்டணம், மின் கட்டணம், மருத்துவச் செலவு ஆகியவற்றை சமாளிக்க முடியாமலும், அதை வெளிக்காட்ட முடியாமலும் தவிக்கின்றனர்.

கடந்த ஐந்தாண்டுகளில், காங்கிரஸ் மற்றும் தி.மு.க.,வின் தவறான பொருளாதாரக் கொள்கையால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பன்னாட்டு நிறுவனங்களிடமும், உலக வங்கியிலும் இலவசத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக, அவர்கள் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் கையெழுத்திட்டு, நாட்டை கடனாளி ஆக்கி உள்ளனர்.அது போல, வீட்டுக் கடன், வாகனக் கடன், வீட்டு உபயோகக் கடன், பர்சனல் லோன் போன்றவற்றுக்காக, நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போட்ட நடுத்தர மக்களும் கடனாளியாக நிற்கின்றனர்.செம்மொழி மாநாட்டை நடத்தியவர்களுக்குத் தெரியும், தமிழில் உயர்திணை, அஃறிணை என இரண்டு திணைகள் இருப்பது. காங்கிரஸ், தி.மு.க., ஆகியவற்றின் ஆட்சியில் உயிரற்ற கம்ப்யூட்டர் மற்றும் காகிதங்களுக்கு மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது; மனிதனுக்கு மதிப்பு குறைந்து கொண்டே போகிறது.குறிப்பாக, பெண்களின் நிலை மோசமடைந்துள்ளது. செலவுகளை ஈடு செய்ய முடியாமல், பல குடும்பத்தில், பெண்கள், வீட்டிலும் வேலை செய்து, வெளியில் வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தமும் வந்துவிட்டது.

எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்கள், விவசாயிகளைப் போல படங்களில் வேடமேந்தி நடித்துள்ளனர். தற்போதுள்ள கதாநாயகர்கள் எவரும், விவசாயிகள் போல வேடமேற்று நடிப்பது கூட இல்லை. காரணம், விவசாயிகளுக்கு எந்த மரியாதையும் இல்லாமல் போய்விட்டது. ஐந்தாண்டுகளில் விவசாயம் செய்யவே விளை நிலங்கள் இல்லை. ரியல் எஸ்டேட்களுக்கும், பொருளாதார மண்டலங்களுக்கும் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிடுகின்றன. விதைகளை அடுத்த போகத்துக்கு விவசாயிகள் சேமித்து வைப்பர். இப்போது, பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து மலட்டு விதைகளை வாங்கும் சூழல் நிலவுகிறது."கிரைண்டர் தருகிறேன், மிக்சி தருகிறேன்' என்கின்றனர். விற்கும் விலைவாசியில், அவற்றில் அரைக்க உணவுப் பொருகள்களை வாங்க முடியாமல், நடுத்தர மக்கள் நிற்கின்றனர்.

இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். சிறுதொழில் தொடங்க, வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. முதலாளிகளுக்கு, வட்டித் தள்ளுபடியுடன் கடன்களை வாரி வழங்குகின்றனர்.

நன்மாறன்எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கட்சி:""

Tuesday, March 22, 2011

‘ஸ்பெக்ட்ரம்’ கரன்சி நோட்டுகளோடு பகல் கனவு காண்கிறார்கள்!


சுதந்திர இந்தியா இப்பொழுதுபோல், முன்னெப்போதாவது இந்த அளவுக்கு அவமானப்பட்டு, அம்பலப்பட்டு இருந் திருக்குமா? என்றால்.. அநேகமாக ‘இருந்திருக்காது’ என்ற முடிவுக்கு நிச்சயமாக வரமுடியாவிட்டாலும் கூட தோராயமாக ‘ஆம்’ என்று சொல்லலாம்!

இந்திய அரசு, இந்திய பெருமுதலாளி கள்-நிலப்பிரபுக்கள் நலன் காக்கும் அரசு தான் என்பது ஊரறிந்த ரகசியம்! ஆனால், தற்போது அதையும் தாண்டி உலக முத லாளிகளின் - நிலப்பிரபுக்களின் அரசாக தன்னைப் பரிணமித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் ‘உலகறிந்த உண்மை’!

இது என்ன புதுக்கதை என்கிறீர்களா? இது புதுக்கதை அல்ல! இது 1990 களில் துவங்கிய பழைய கதைதான்! என்றாலும் கதையின் உச்சகட்டம் (கிளைமேக்ஸ்) இப்பொழுதுதான் ‘வெ(ள்)ளித்திரை’க்கு வந்துள்ளது.

1990களில் இந்திய ஆளும் வர்க்கத் தின் “சுரண்டல்” எல்லையை உலகளா விய அளவில் விரிவுபடுத்தப்போவதாக சொல்லப்பட்ட ஆசை வார்த்தைகள் தான் உலகமயம், தனியார்மயம், தாராளம யம்! அதாவது எல்பிஜி (டுஞழு) கொள் கை! அதாவது இந்திய முதலாளிகள் உலகத்தின் எந்த இடத்திலும் தொழில் தொடங்கலாம்; வர்த்தகம் செய்யலாம்! அதுபோல் உலக முதலாளிகளும் இந்தி யாவில் தொழில் தொடங்கலாம்; வர்த்த கம் செய்யலாம்! பொதுத்துறைகள் தேவையற்றது; தனியார் துறைதான் தேவையானது! இதனால் இந்தியாவில் பாலாறும், தேனாறும் பாயும் என்றார்கள்!

அதிலும் குறிப்பாக அணுசக்தி ஒப்பந் தம் ஏற்பட்டுவிட்டால், இந்தியாவில், கிரா மங்களில், நகரங்களில் வீட்டுப்பானை யில் இருக்கும் குடிநீரை ‘மொண்டு மொண்டு’ குடிப்பதுபோல், மின்சாரம் ஒவ் வொரு வீட்டிலும் ‘மண்டலம் போட்டு படுத்துறங்கும்’ என்று ‘பீலா’ விட்டார்கள்.

தற்போது ஜப்பானில் சுனாமி சீற்றத் தால், அணு உலைகள் ஒவ்வொன்றாக உடைந்து நொறுங்குவதையும், அதனால் வெளியேறும் உயிர்க்கொல்லி கதிர்வீச்சு பரவுவதையும் கேள்விப்பட்டவுடன், நம் நாட்டு அணு உலைகள் எல்லாம் பாது காப்பாகத்தான் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஜப்பானின் அணு உலை களை கட்டிய, ‘ஐஎஸ்ஐ முத்திரை’ குத்திய, அதே சர்வதேச அணுசக்தி முகமை (கழகம்) வழிகாட்டுதலில்தான், அல்லது மேற்பார்வையில்தான் இங்கும் கட்டப்பட்டிருக்கும்; கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் என்பதை அடிக் கோடிட்டுக்கொள்வோ மாக!

ஐ.மு.கூட்டணி-1 அரசுக்கு குறைந்த பட்ச செயல்திட்டமும், இடதுசாரிகளின் ஆதரவும் இருந்ததால்தான் அந்த அரசு ஓர ளவு அடக்கி வாசித்துக்கொண்டிருந்தது எல்பிஜி கொள்கையில்! தற்போதைய ஐ.மு.கூட்டணி-2 அரசுக்கு அத்தகைய குறைந்தபட்ச செயல்திட்டமோ, இடது சாரிகளைப்போல் மக்கள் நலன் சார்ந்த நிர்ப்பந்தமோ- அதாவது பிரதமர் மன்மோ கன் சிங் பாஷையில் சொன்னால், இந் திய இடதுசாரிகளின் கொத்தடிமையாக அவை இல்லாத காரணத்தினால், இன் றைக்கு இந்திய அரசு, அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் கொத்தடிமையாக இருப்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது.

இந்திய இடதுசாரிகள், இந்திய மக்க ளின் நலன் சார்ந்து தந்த நிர்ப்பந்தங் களை, ‘என்னை இடதுசாரிகள் கொத்தடி மையாக நடத்தினார்கள்’ என்று வர்ணித் தார்; வருத்தப்பட்டார்! ஆனால், தற்போது ‘விக்கிலீக்ஸ்’ “லீக்” செய்திருக்கும் பல விஷயங்களில் ஒன்றான - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், இந்தியாவிலுள்ள அமெரிக் கத் தூதரகத்திற்கு எழுதிய ‘ஓலை’யில், மன்னிக்கவும், அன்பு வேண்டுகோளுக்கு மன்மோகனார் என்ன சொல்லப்போகி றார்? வழக்கமாக எல்லாவற்றிற்கும் என்ன சொன்னாரோ... அதைத்தான் இதற்கும் சொல்லப்போகிறார்!

ஐயா, பாரதப்பிரதமரே! நாட்டின் அரசியல் சட்டப்படி ஆளும் அதிகாரம் படைத்தவரே...! 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்துள்ளதே... தெரியுமா? எனக்குத் தெரிந்த 2ஜி என்னவென்றால்-ஒன்று சோனியா ‘ஜி’, இன்னொன்று ராகுல் ‘ஜி’ ; மற்றபடி எந்த ‘ஜி’யும் எனக்குத் தெரியாது? இந்திய விண்வெளித்துறையில் (இஸ் ரோ) 3ஜி அலைக்கற் றையில் ஊழல் நடந் திருக்காமே... அது தெரியுமா? அப்படி யொரு ‘ஜி’யும் இருக்கிறதா? அதுவும் தெரி யாது! கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு கட்டிய அடுக்குமாடிக் குடியிருப்பு ஒதுக்கீட்டில் ஊழல் நடந் திருக்கிறதே, அதுவாவது தெரியுமா? அப் படியா...! அதுவும் தெரியாது! காமன் வெல்த் நாடுகள் விளையாட்டில், ஊழ லும் புகுந்து ‘விளையாடி’ இருக்கிறதே... அதாவது தெரியுமா? விளையாட்டில் எனக்கு ஆர்வமே இல்லை; நேரமும் இல்லை; அப்படி ஒன்றும் நடந்ததாகவும் எனக்குத் தகவல் இல்லை. ஆக அதுவும் எனக்குத் தெரியாது.

ஐ.மு.கூட்டணி-1 அரசுக்கு நம் பிக்கை கோரும் தீர்மானத்திற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாவது தெரியுமா? அதுவும் தெரியாது! பிரணாப் முகர்ஜியை - ஏன் நிதி மந்திரி ஆக்கினார்கள்; மாண் டேக் சிங் அலுவாலியாவை ஏன் நிதிமந் திரி ஆக்கவில்லை; சிதம்பரத்தை எதற்கு உள்துறை மந்திரி ஆக்கினார்கள்; கமல் நாத்திடமிருந்த வர்த்தகம், தொழில்துறை களை ஏன் எடுத்தார்கள்; ஆனந்த் சர்மா வை எதற்கு வர்த்தகம், தொழில்துறை மந்திரியாக போட்டார்கள்? என்று கேள் விமேல் கேள்வி கேட்டு, அதையெல்லம் உளவுபார்த்து (மன்னிக்கவும்-விசாரித்து) ரிப்போர்ட் அனுப்ப வேண்டும் என அமெ ரிக்க வெளியுறவுத்துறை, இந்தியத் தூதர கத்திற்கு உத்தரவு போட்டிருக்கிறதே... அதாவது தெரியுமா? அதுவும் தெரியாது!

டாக்டர் மன்மோகன் சிங் நாட்டின் பிரதம மந்திரியா? ‘தெரியாது’ துறை மந்தி ரியா? என்று நமக்குத் தெரியவில்லை! ஆனால் ஒன்றுமட்டும் தெரிகிறது- இவ ருக்கு பிடித்த ஒரே வார்த்தை... “தெரி யாது!” என்பதுதான். இப்படிப்பட்ட பிரதம மந்திரி நமக்கு கிடைத்தது மிகப் பெரிய ‘துரதிர்ஷ்டம்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்திய வரலாற்றிலேயே இது வரை நடந்திராத ஊழல், லஞ் சம், அமெரிக்கவிடம் தஞ்சம்; இந்திய உழைப்பாளிகளுக்கு வஞ்சம்; அந்நிய - இந்திய பெரு முதலாளிகளுக்கு பட்டுக்குஞ் சம்; மொத்தத்தில் இந்திய மக்க ளுக்கு பஞ்சமா பாதகம்! இத் தனையும் செய்துவிட்டு, தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஹை டெக் முதலாளிகளாக தமிழகத் தில் திகழும் திமுகவுடன் இளைய பங்காளியாக ‘ஈ‘ என்று இளித்துக்கொண்டும், “நீயும், நானும் ஒண்ணு; ஜனங்க வாயில மண்ணு!” என்று தமிழக மக்க ளின் காதுகளில் பூ சுத்த வரு கிறது திமுக-காங்கிரஸ் கூட்டணி!

இத்தகைய கேடுகெட்ட கூட்டணிக்கு, அதாவது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு, தமிழக வாக்கா ளர்களுக்கு தமிழில் பிடித்த ஒரே வார்த் தை என்ன தெரியுமா? “படுதோல்வி!” ஆம், எதிர்வரும் ஏப்ரல் 13ம் தேதி தமிழ கத்தில் நடைபெறவுள்ள 14வது சட்ட மன்றத் தேர்தலில், திமுக-காங்கிரஸ் கூட்டணி காதுகளில் ஒலிக் கப்போகும் ஒரே தமிழ் வார்த்தை “படு தோல்வி!”. இதுவும் பிரதமருக்கு தெரியா மல் போக வாய்ப்பில்லை! அதனால்தான் ‘ஸ்பெக்ட்ரம்’ கரன்சி நோட்டுகளோடு பகல் கனவு காண்கிறார்கள்! என்றாலும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு, தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தையாக “படுதோல்வி” அமையும் என்பது மட்டும் நிச்சயம்!

பி.தங்கவேலு

Friday, March 4, 2011

பாமக திமுக திருமணமும் மறந்துபோன சங்கதிகளும்


தமிழக சட்டமன்றத் தேர்தலுக் கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெறுகின்றன. திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவ தாக அறிவித்து 31 தொகுதிகளை பெற்றுள்ளது. கடந்த காலத்தில் கூட அல்ல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட திமுக குறித்து பாமகவும், பாமக குறித்து திமுகவும் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அப்படியே உள்ளன.

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணையோடு இணைத்து தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் காங்கி ரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டின் பூகோளம் குறித்து அறியாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியின் ஆணைப்படியே தொகுதி குறித்து பேசப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காங் கிரசின் மிரட்டல் குறித்து திமுக தலைவர் கலைஞரோ, முரசொலி எழுத்தாளர் சின்னக்குத்தூசியோ எதுவும் எழுதவில்லை. ஆனால் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி களத்தில் இறங்கி, குட்டக்குட்டக் குனியக்கூடாது, திமுக சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டுமென்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இது வீரமணியின் குரல் அல்ல. கலை ஞரின் குரல்தான் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.

இந்தத் தேர்தலில் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கப் போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மதுவிலக்கை அமல் படுத்துவதற்காகவே அவதரித்த கட்சி யென்று கூறிக்கொள்ளும் பாமக இதற்காக திமுக அரசிற்கு பல கெடுக் களை விதித்தது. அதுகுறித்து கூட நிபந்தனை எதுவும் விதிக்காதது வியப்பிற்குரியதுதான்.

ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் தயவு தேவையென்பதால் இலங்கைத் தமிழ ருக்கு கலைஞர் துரோகம் செய்து விட்டார் என்று ராமதாஸ் 11.4.2009 அன்று கூறினார்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் முதல்வர் கருணாநிதி மாற்றி மாற்றி பேசுகிறார். மத்திய அரசு நினைத்தால் இலங்கைத் தமிழரின் உயிரை காப்பாற்றலாம். தேவைப்பட்டால் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக ராஜினாமா செய்யவேண்டு மென்று 16.4.2009 அன்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

தமிழக முதல்வர் தில்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து இலங்கையில் போரை நிறுத்த நிர்ப்பந்திக்குமாறு வலியுறுத்தி இருக்கவேண்டும். மாறாக இலங்கையில் தமிழர்கள் படு கொலை செய்யப்படுவதைக் கண்டித்து பொதுவேலை நிறுத்தம் நடத் துவது தேவையற்ற வேலை என்று அன்புமணி ராமதாஸ் 22.4.2009 அன்று கூறினார்.

பாமகவுக்கு பதிலளிக்கும் வகையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பாமக தலைவர் ராமதாஸ் மக்களை ஏமாற்றுகிறார் என்று 7.5.2009 அன்று கூறினார்.

இந்நிலையில் பேத்தியின் திருமணத்திற்கு பத்திரிகை கொடுக்கச் சென்றபோது கூட்டணி உடன்பாட்டி லும் கையெழுத்திட்டார் ராமதாஸ். அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டு பேசும்போது, இது தேர்தல் திருமணம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதை முதல்வர் மேற்கோள் காட்டினார். திருமணத்தை நடத்திவைக்கும் புரோகிதர் பதவியை பெரிய பதவியாக கருதுவதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.

கூட்டணித் திருமணம் முடிந்து விட்டது. ஆனால் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் கலைஞர் மாற்றி மாற்றி பேசுவதாகவும், துரோகம் செய்துவிட்டதாகவும் பாமக முன் வைத்த விமர்சனங்கள் அப்படியே உள்ளன. இவர்களது திசை திருப்பல் வேலையை நம்பிய இலங்கை தமிழர் களின் கதிதான் பரிதாபமாக உள்ளது.

கோமாண்டூரார்

Monday, January 31, 2011

உத்தப்புரத்தில் உரிமை கேட்பவர்கள் பகையாளிகளா?


தமிழக அரசுக்குச் சொந்தமான புறம் போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உத் தப்புரம் முத்தாலம்மன் கோவிலில் துவக்க காலம் தொட்டே தலித் மக்கள் வழிபாடு செய்யவில்லை என்பது போன்ற ஆணை யை பேரையூர் வட்டாட்சியர் வடிவமைத் துள்ளது தலித் மக்களிடையே பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசியல் சாசனம் தலித் மக்க ளுக்கு வழங்கிய அரசியல் சட்ட உரிமை யைப் பாதுகாக்க மதுரை உத்தப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்தி வரும் போராட்டத்தின் தொடர்ச்சி யாக ஜனவரி 31ந்தேதி முத்தாலம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட்டம் நடத்தவிருக்கிறது.

இப்போராட்டத்திற்கு முன்பே அரசு இப்பிரச்சனையில் தலையீடு செய்ய வேண் டும் என தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கடிதம் எழு தினார். அதற்கு இதுவரை பதில் இல்லை.

ஆலயநுழைவுப்போராட்டம் என அறி வித்த பின் அரசு நிர்வாகம் மிக வேக வேக மாக தலித் மக்களின் உரிமைகளைத் தடுக்க அனைத்து வேலைகளிலும் இறங்கி யுள்ளது. சட்டம்- ஒழுங்கு எனச்சொல்லி மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்களைத் தேடித்தேடி ஒரு ஆணையை வழங்கி வருகிறது. அந்த ஆணையை பேரையூர் வட்டாட்சியர் ஆர். மங்களராமசுப்ரமணியன் பிறப்பித்துள்ளார். அடுத்து அந்த ஆணையில், “முத்தாலம் மன் கோயில் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தது” எனக்குறிப்பிட்டுள்ளது.

உத்தப்புரத்தில் காலகாலமாக முத்தா லம்மன் கோவிலில் எழுமலை, சீல்நாயக் கன்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, தங்ககவுண் டன்பட்டி, தச்சம்பட்டி, கோட்டைப்பட்டி, நல் லது நாயக்கன் பட்டி உள்ளிட்ட 18 கிரா மங்களைச் சேர்ந்த தலித் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் வழிபாடு நடத்தியுள்ளனர்.ஆனால் கடந்த 1989 ஆம் ஆண்டு எழுமலையில் நடந்த கட்டப்பஞ் சாயத்தில் தலித் மக்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது, அரசமரத்தை வழிபடக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு “முடி வுகளை” எடுத்தனர். இதன் பிறகு தான் தலித் மக்களைப் பிரிக்கும் வகையில் தீண் டாமைச் சுவர் கட்டப்பட்டது.

தமிழகம் முழுவதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய ஆய்வின் ஒருபகுதி யாக உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் வெளி உலகத்திற்கு தெரியவந்தது. இச்சுவரை இதுவரை முழுமையாக அகற்ற மனமில்லாத தமிழக அரசு கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர்-8 ந்தேதி ஒருபகுதியை அகற்றியது. அந்த வழியாக இதுவரை தலித் மக்கள் வாகனத் தில் செல்லமுடியவில்லை. மிக கவனமாக காவல்துறை அப்பாதையில் தலித் மக்கள் செல்வதைத் தடுத்து தனது பணியை “ சிறப்பாக” செய்து வருகிறது.

இந்த நிலையில் தலித் மக்கள் தங்களது வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட ஆலய நுழைவுப்போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த சூழலில் ஜனவரி28 ந்தேதி பேரையூர் வட்டாட்சியர் ஆர்.மங்களராம சுப்ரமணியன் பிறப்பித்த ஆணையைப் படித்தால் மிகச்சிரிப்பாக இருக்கும். தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உத் தப்புரம் மக்களுக்காக சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதை கூட அறியாமல் அவர் பிறப்பித்த ஆணையில், “எழுமலை காவல் ஆய்வாளரின் அறிக் கையில், கடந்த 30.12.2010 அன்று சென்னை பனகல் பூங்காவில் இடது கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை முழக்கப்போராட் டம் நடத்திய தாகவும், எதிர்வரும் 31.1.2011 அன்று உத்தப்புரம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் தலித் மக்களின் ஆலய நுழைவுப்போராட்டம் நடைபெறும் என்றும்” அறிவித்துள்ளன எனக்குறிப்பிட் டுள்ளார்.

இதில் இருந்தே எதையும் முழுமையாக விசாரிக்காமல் ஒரு தரப்பாகத்தான் அதி கார வர்க்கத்தினர் செயல்படுகின்றனர் எனத் தெரிந்து கொள்ளலாம்.

தலித் மக்கள் தங்கள் உரிமையைக் கேட் டால், அதை ஒடுக்குவதற்காக ஆதிதிராவி டர்களுக்கும், பிற இனத்தவர்களுக்கும் இடையேயுள்ள பகைமை உணர்வு தணிந்து விட்டதாக கருத இயலாத சூழ்நிலையே தற் போதும் நிலவி வருவதாகவும் தனது ரகசிய விசாரணையில் தெரியவந்ததாகக் கூறி 144 தடையாணை பிறப்பித்தல் ஆணை யில் பேரையூர் வட்டாட்சியர் கூறியுள்ளார்.

மதுரையில் உத்தப்புரத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் சமீபத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கூட, தலித் மக்களுக்கும், எங்களுக்கும் எந்தப் பகையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். உரிமை கேட்பவர்களை பகையாளியாக பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட்டம் நடந்த போது வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத்தார் ஒரு பிரசுரத்தை வெளியிட்டனர். “கோவில் தரிசனம் செய்பவர்களும், செய்து வைப்ப வர்களும், அனுமதிப்பவர்களும் மகத்தான அபசாரத்திற்கு ஆளாகி நீண்டகாலம் நரக வாசம் செய்ய வேண்டுமென்று ஆகமங்கள் முறையிடுகின்றன. சுருதி, ஸ்மிருதி, இதி ஹாஸ, ஆகம சாஸ்திரங்களில் நம்பிக்கை யுள்ள ஆஸ்திக மகாஜனங்களுக்கு இது விஷயம் ஞாபகப்படுத்தப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்கள். அது போல இருக் கிறது உத்தப்புரத்தில் ஆலயநுழைவுப் போராட்டம் நடத்த முடிவு செய்த நிலையில் வெளியிடப்பட்டுள்ள அரசு அதிகாரி 144 ன் கீழ் தடை யாணை பிறப்பிப்பு ஆணை.

- ப.கவிதா குமார்

Monday, January 10, 2011

உடைக்கப்பட்ட 17 கோயில் கதவுகள்

 தலித் மக்களுக்கு திறக்கப்பட்டமல் இருந்த கோயில் கதவுகள் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டத்தினால் திறக்கப்பட்டன. இவைகளில் பல கோயில்களில் ஆயிரம் ஆண்டுகளாக இந்த இழி நிலை நீடித்து  வந்தது. இந்த அமைப்பின் போராட்டத்திற்கு பின்னர்தான் 17 ஆலயங்களில் தலித் மக்கள் சென்று வர முடிகிறது. ஆனால் தலித்துகளுக்காக தன் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டதாக கதையடிக்கும் கலைஞர் மற்றும் திருமா வகையறாக்கள் இதுகுறித்து வாயை திறக்க மறுக்கின்றனர்.

சாதிய ஒடுக்குமுறை மற்றும்  பொருளாதார ஒடுக்கு முறை ஆகிய இரண்டுக்கும் எதிரான போராட்டங்கள் இணைந்ததுதான் வர்க்கப் போராட்டம். சாதியோடு இணைந்ததுதான் தீண்டாமை. தீண்டாமை ஒழிப்பு என்பதே சாதி ஒழிப்புக்கான போராட்டம்தான். சாதியக் கட்டுமானத்தை உடைத்தெறிய நடைபெறும் போராட்டங்கள் அனைத்தும் ஜனநாயகப் போராட்டங்களே. ஆக சாதிய ஒழிப்பு போராட்டமாக இருந்தாலும், ஜனநாயக போராட்டமாக இருந்தாலும் மேற்கண்டவர்கள் இதற்கு எதிராக இருக்கின்றனர்.

ஆலையங்களில் தலித் மக்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்வி எழுப்பினால் கோவில்கள் புனிதமான இடம் எனவே  தலித் மக்களை அங்கு அனுமத்க்க முடியாது  என்று ஆதிக்க சாதியினர் சொல்லுகின்றனர். கோடிக் கணக்கான தலித் மக்கள் அவர்கள் நம்பிக்கையின் அடிப்படையில் வழிபட விரும்புகிறார்கள். பிற சமூகத்தவர் செல்லும் போது தலித் மக்களுக்கு அந்த உரிமை வேண்டும் என்பதற்காக இத்தகைய போராட்டங்கள்  நடத்தப்படுகிறது. 

ஆனால் இந்த போராட்டங்கள் தமிழக அரசு சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டுமே பார்க்கிறது. இந்த அடிப்படையில் பிரச்சனையை திசை திருப்புகிறது. இப்போராட்டங்களினால் சில இடங்களில் மூடப்பட்ட கோவில்கள் அதன் பின் திறக்கப்படவே இல்லை. ஆதிக்க சக்திகள், சாமியை மாற்றிக் கொண்டார்களே தவிர, சாதியை ஒடுக்கு முறையை கைவிட மறுக்கிறார்கள்.

எனவே இன்னும் திறக்கப்பட்டமல் உள்ள ஆயிரக்கணக்கான கோயில் கதவுகளை உடைக்க திட்டமிட்டுள்ள தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு ஆதரவளிப்பது சமுகக் கடமையாகும்.

Wednesday, December 8, 2010

Monday, December 6, 2010

" லஞ்ச ஊழலுக்கு எதிரான இந்திய நெருப்பு" குறித்து அண்ணா ... !


தம்பி, நீ விரும்பினால் இந்த நாட்டை பொன்னாடு ஆக்கமுடியும், அதற்கு ஒன்று தேவை. பொன்னும் பொருளும் நமக்கு மட்டும் கிடைத்தால் போதும் என்று எண்ணும் தன்னலம் சுட்டெறிக்கப்படவேண்டும்.
(04.01.1957) 

குற்றச்சாட்டுகள், பகட்டான பேச்சு, வாக்குறுதி பறந்தது, பதவி வேட்டை, லஞ்சத்தில் பங்கு, கள்ள மாக்கெட் வரவு, அதிகார மோகம், என இதழ்கள் தூவியுள்ள குற்றச்சாட்டுகளை ஜனநாயக

Thursday, November 25, 2010

காகிதப்பூ மணக்காது, கலைஞரே!


ட்டங்களை கொண்டு வருவதற்காக மட்டுமல்ல, அதனை நிறைவேற்றுவதற்காகவும் தொடர்ந்து போராடியாக வேண்டும். ஏனெனில் சட்டத்தின் நோக்கத்தை உளப்பூர்வமாக ஏற்காத அதிகார வர்க்க நந்திகள் மேலிருந்து கீழ் வரை ஏராளம் உண்டு.

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)