தலித் மக்களுக்கு திறக்கப்பட்டமல் இருந்த கோயில் கதவுகள் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டத்தினால் திறக்கப்பட்டன. இவைகளில் பல கோயில்களில் ஆயிரம் ஆண்டுகளாக இந்த இழி நிலை நீடித்து வந்தது. இந்த அமைப்பின் போராட்டத்திற்கு பின்னர்தான் 17 ஆலயங்களில் தலித் மக்கள் சென்று வர முடிகிறது. ஆனால் தலித்துகளுக்காக தன் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டதாக கதையடிக்கும் கலைஞர் மற்றும் திருமா வகையறாக்கள் இதுகுறித்து வாயை திறக்க மறுக்கின்றனர்.
சாதிய ஒடுக்குமுறை மற்றும் பொருளாதார ஒடுக்கு முறை ஆகிய இரண்டுக்கும் எதிரான போராட்டங்கள் இணைந்ததுதான் வர்க்கப் போராட்டம். சாதியோடு இணைந்ததுதான் தீண்டாமை. தீண்டாமை ஒழிப்பு என்பதே சாதி ஒழிப்புக்கான போராட்டம்தான். சாதியக் கட்டுமானத்தை உடைத்தெறிய நடைபெறும் போராட்டங்கள் அனைத்தும் ஜனநாயகப் போராட்டங்களே. ஆக சாதிய ஒழிப்பு போராட்டமாக இருந்தாலும், ஜனநாயக போராட்டமாக இருந்தாலும் மேற்கண்டவர்கள் இதற்கு எதிராக இருக்கின்றனர்.
ஆலையங்களில் தலித் மக்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்வி எழுப்பினால் கோவில்கள் புனிதமான இடம் எனவே தலித் மக்களை அங்கு அனுமத்க்க முடியாது என்று ஆதிக்க சாதியினர் சொல்லுகின்றனர். கோடிக் கணக்கான தலித் மக்கள் அவர்கள் நம்பிக்கையின் அடிப்படையில் வழிபட விரும்புகிறார்கள். பிற சமூகத்தவர் செல்லும் போது தலித் மக்களுக்கு அந்த உரிமை வேண்டும் என்பதற்காக இத்தகைய போராட்டங்கள் நடத்தப்படுகிறது.
ஆனால் இந்த போராட்டங்கள் தமிழக அரசு சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டுமே பார்க்கிறது. இந்த அடிப்படையில் பிரச்சனையை திசை திருப்புகிறது. இப்போராட்டங்களினால் சில இடங்களில் மூடப்பட்ட கோவில்கள் அதன் பின் திறக்கப்படவே இல்லை. ஆதிக்க சக்திகள், சாமியை மாற்றிக் கொண்டார்களே தவிர, சாதியை ஒடுக்கு முறையை கைவிட மறுக்கிறார்கள்.
எனவே இன்னும் திறக்கப்பட்டமல் உள்ள ஆயிரக்கணக்கான கோயில் கதவுகளை உடைக்க திட்டமிட்டுள்ள தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு ஆதரவளிப்பது சமுகக் கடமையாகும்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பணிகள் பெரியார் காலத்திற்கு பிறகு ஒரு மிகப்பெரும் சமூக பண்முக செயல்பாட்டு இயக்கமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது இது மேலும் வளரவேண்டும் நாம் அணைவரும் உதவவேண்டும்
ReplyDelete