Showing posts with label வால் ஸ்டிரிட். Show all posts
Showing posts with label வால் ஸ்டிரிட். Show all posts

Wednesday, November 16, 2011

வால் ஸ்டிரீட் போராட்டம்: ஒபாமா அரசு அடக்குமுறை

நியூயார்க் நகரின் சுதந்திரச் சதுக்கம் அமைந்துள்ள ஜூக்கோட்டி பூங்காவில் முகாம் அமைத்துள்ள பல்லாயிரம் இளைஞர்களையும் பெண்களையும் ஒபாமா அரசின் போலீசார் கடுமையாகத் தாக்கி கைது செய்துள்ளனர்.

செப்டம்பர் 17 அன்று 150 பேர் துவங் கிய முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டங்கள் பெரும் வீச்சுடன் அமெரிக்காவின் பல பகுதிகளில் நடந்து கொண்டிருக்கின்றன. இரண்டு மாதங்கள் நிறைவு பெறும் வேளையிலும் போராட்டங்களில் தொய்வு ஏற்படவில்லை. புதிய, புதிய பகுதி யினர் போராட்டத்தின் அங்கமாக மாறி வருகிறார்கள். நியூயார்க்கிலிருந்து வாஷிங்டன் வரை முதலாளித்துவ எதிர்ப்பு ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கியுள்ள அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க பாரக் ஒபாமாவின் அரசு படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது. பெரும் முதலாளிகளின் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களை பாதுகாப்பதற்காக, கோடிக்கணக்கான அமெரிக்கத் தொழிலாளர்களின் வேலையிலும் கூலியிலும் கைவைத்துள்ளது. ஏழை, எளிய, நடுத்தர வர்க்க அமெரிக்க மக்களின் ஓய்வூதியத்தை பறிக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. நெருக்கடி மேலும் மேலும் தீவிரமடைந்து வரும் சூழலில், வேலையில்லாத இளைஞர்களின் பட்டாளத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தங்களது இந்த துயரங்களுக்கெல்லாம் காரணமாக இருப்பது, நியூயார்க் நகரில் உள்ள வர்த்தக வீதியான வால்ஸ்டிரீட்டை மையமாகக் கொண்டு, உலகெங்கிலும் வர்த்தகத்தில் கோலோச்சிவரும் பெரும் முதலாளிகளின் பன்னாட்டு நிறுவனங்களே என சரியாக உணர்ந்துகொண்ட அமெரிக்க உழைக்கும் வர்க்க இளைஞர்களும் பெண்களும், ஒன்றிணைந்து வால்ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம் என்ற போராட்டத்தை துவக்கினர்.

படிப்படியாக கடந்த 2மாத காலத்தில் உலகம் முழுவதிலும் மிகப்பெரும் வீச்சாக இப்போராட்டம் பற்றிப்பரவியுள்ளது. வால் ஸ்டிரீட்டில் அமெரிக்கர்கள் நடத்தும் இந்தப்போராட்டத்தால் உத்வேகம் கொண்ட ஐரோப்பிய இளைஞர்களும் லண்டன் மாநகர தெருக்களிலும் பாரீஸ் மாநகர வீதிகளிலும், இன்னும் ரோம், மாட்ரீட், பிரஸ்ஸல்ஸ், பெர்லின், வியன்னா உட்பட உலகெங்கிலும் ஆயிரம் நகரங்க ளில் லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் முதலாளித்துவத்திற்கு முடிவுகட்டுவோம் என்று முழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் எழுச்சியுடன் நீடிக்கும் இந்தப்போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறது. நவம்பர் 17ம் தேதி வியாழனன்று நியூயார்க் பங்குச்சந்தை அமைந்துள்ளதும், அமெரிக்காவின் நிதி மையம் என்று அழைக்கப்படுவதுமான வால் ஸ்டிரீட்டை மூடும் போராட்டத்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் தலைமையகம் என்று அழைக்கப்படும் ஜூக்கோட்டி பூங்காவிலிருந்து கிளம்பி, வால் ஸ்டிரீட்டை நோக்கி போராட்டக்காரர்கள் ஊர்வலமாகச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதத்திலும் இதுபோன்ற ஊர்வலம் புரூக்லின் பாலத்தைக் கடந்து சென்றது. அப்போது 700க்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தற்போது அதைவிட கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகளை அமெரிக்க அரசு ஏவியுள்ளது.

லிபியாவிலும் சிரியாவிலும் அரசுக்கு எதிராக போராடும் மக்கள் மீது அங்குள்ள அரசுகள் அடக்குமுறையை ஏவுகின்றன எனக்கூறி, அந்நாடுகள் மீது போர்தொடுத்த, போர் தொடுக்க திட்டமிடுகிற அமெரிக்கா வின் ஒபாமா அரசு, தனது சொந்த நாட்டில் பொருளாதார விடுதலைக்காக போராட்டத்தை துவக்கியிருக்கும் இளைஞர்கள் மீது கடும் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

நவம்பர் 17ம் தேதி மிகப்பெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சூழலில், செவ்வாயன்று ஜூக்கோட்டி பூங்காவிற்குள் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். பூங்காவைச் சுற்றிலும் பல்லாயிரம் போலீசார் முற்றுகையிட்டனர். அங்கு கூடாரமடித்து தங்கியிருக்கும் போராட்டக்காரர்களை வெளியேறுமாறு மிரட்டினர். வெளியேற மறுத்தால் கைது செய்யப்படுவீர்கள் எனக் கூறிக் கொண்டே தாக்குதலை துவக்கினர்.





பூங்காவில் நூற்றுக்கணக்கானோர் தங்கியிருப்பதால் சுகாதார பிரச்சனை ஏற்பட்டுவிட்டது என்றும் பூங்காவை சுத்தம் செய்வதற்காகவே அனைவரையும் வெளியேறச் சொல்வதாகவும் நியூயார்க் மாநகர மேயர் மிக்கேல் புளூம்பெர்க் கூறிக்கொண்டார். எனினும் பூங்காவிலிருந்து எவரும் வெளியேற மறுத்ததால், பலவந்தமாக அவர்களைத் தாக்கி கைது செய்தனர். பெண்களையும் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கினர்.  தாக்குதலுக்குள்ளான போதிலும் அவர்கள் இடைவிடாமல் முழக்கமிட்டனர். இந்த நடவடிக்கைகளை படம்பிடிக்க வெளியிலிருந்து பத்திரிகையாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. எனவே பூங்காவின் ஓரத்தில் சில இளைஞர்கள், தங்கள் வசமிருந்த கணினிகள் மூலம் நிமிடத்திற்கு நிமிடம் அங்கு நடக்கும் விபரங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் உலகெங்கிலும் பரப்பினர்.


‘காவல்துறையை மீறி உள்ளே நுழைந்த செய்தியாளர் கைது செய்யப்பட்டார்’, ‘பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போராட்டக்காரர்கள் அருகில் உள்ள போலே சதுக்கத்தில் கூடியிருக்கிறார்கள்’, ‘சுதந்திரச்சதுக்கத்தில் நுழைய பத்திரிகையாளர்களுக்கு தடை’, ‘மிளகு ஸ்ப்ரே வாகனங்கள் பூங்காவை முற்றுகையிட்டுள்ளன’, ‘பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிந்துள்ளனர்’, ‘ஹெலிகாப்டர் ரோந்து நடக்கிறது’, ‘மிளகு ஸ்ப்ரே பிரயோகிக்கப்பட்டுவிட்டது’... என ஏராள மான செய்திகள் ஜூக்கோட்டி பூங்காவிலிருந்து வந்தவண்ணம் இருந்தன . இந்த அடக்குமுறையால் அமெரிக்கா முழுவதிலும் கொந்தளிப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது. உலகம் முழுவதி லும் கண்டனக்குரல் எழுந்துள்ளது.

Sunday, November 13, 2011

வால்ஸ்ட்ரீட் : வெடித்துச் சிதறும் எரிமலை

கனன்று கொண்டிருக்கும் எரிமலை ஓர்நாள் வெடித்துச்சிதறும்!
அதுதான் தற்போது அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கிறது.

"வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்" என்ற முழக்கத்தோடு நியூயார்க்கில் துவங்கியுள்ள எழுச்சிப் போராட்டம், லண்டன், பாரிஸ், ரோம், பிரஸ்ஸல் என உலகெங்கிலும் சுமார் 1000 நகரங்களுக்குப் பரவியிருக்கிறது.
   

எகிப்திலும், அரபு நாடுகளிலும் நடந்துவரும் போராட்டத்தை பரபரப்பாகக் காட்டிய ஊடகங்கள், உலகையே ஆட்டிப்படைக்க எண்ணும் அமெரிக்காவில் நடக்கும் போராட்டத்தையோ அப்போராட்டத்தின் வீச்சையோ முழுமையாக உலகிற்கு தெரிவிக்கவில்லை.

உலகப்பொருளாதாரத்தை, உலக நாடுகளைத்  தன் காலடியின் கீழ் கொண்டுவர எத்தனிக்கும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மிகப்பெரும் வர்த்தகங்கள் - பேரங்கள் - பங்குச் சந்தை ஊக வணிகங்கள் எல்லாம் நடக்கிற இடம்தான் வால்ஸ்ட்ரீட் எனும் தெரு, நியூயார்க் மாநகரத்தின் மையப்பகுதியில் இருக்கிறது. இந்தத் தெருவில் இருந்து இயங்கும் பகாசூரப் பன்னாட்டுப் பெரும் நிறுவனங்கள்தான் இன்றைக்கு உலக வர்த்தகத்தை உலகச்சந்தையை,  உலகம் முழுவதும் உள்ள மக்கள் எதைச் சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும், என்ன விலை கொடுத்து வாங்கிச் சாப்பிட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன.
  

இந்த நிறுவனங்களின் நலனை - இந்நிறுவனப் பெரு முதலாளிகளின் நலனைக் காப்பதற்காகத்தான்  உலகையே ஒட்டச் சுரண்டும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அமெரிக்க அதிகார வர்க்கம் உருவாக்கியது. உலக வர்த்தக மையம், சர்வதேச நிதி நிறுவனம், உலக வங்கி ஆகிய அமைப்புகளின் உதவியோடு உலக நாடுகளில் எல்லாம் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற நாசகரக் கொள்கைகளை அமலாக்குமாறு நிர்ப்பந்தித்தது.
   

நமது இந்தியா உட்பட ஏராளமான நாடுகள் 1980களில் துவங்கி, கடந்த 30 ஆண்டுகாலமாக இந்தக் கொள்கைகளைத் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.
   

இதன் நேரடி விளைவாக விவசாயம் பேரழிவைச் சந்தித்தது. சிறுதொழில்கள், அழிந்தே போயின. லட்சக்கணக்கான மக்கள் வேலைகளை இழந்தனர். கையில் இருந்த துண்டு துக்காணி நிலங்களையும் இழந்து, வெறுங்கையோடு கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி வேலைதேடி, வாழ்வைத் தேடி இடம்பெயர்ந்தனர். நகரங்களிலும் பணிப்பாதுகாப்போ, சமூகப் பாதுகாப்போ இன்றி அத்துக்கூலிகளாக, தினக்கூலிகளாக கிடைத்த வேலையைச் செய்து, வெந்ததைத் தின்று விதியை நொந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நமது நகரங்களில் மட்டுமல்ல... உலகம் முழுவதிலும் இதே நிலைமைதான்; சீனா, கியூபா போன்ற சில நாடுகளைத் தவிர, ஒட்டுமொத்த உலகமும் இப்படித் துயரத்தை அனுபவிப்பது யாருக்காக?
   

வால்ஸ்ட்ரீட் எனும் அந்தத் தெருவில் மையம் கொண்டிருக்கும் உலகப் பெரும் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக! இப்படி லாபவெறிகொண்டு, தறிகெட்டு கண்மண் தெரியாமல் ஓடிய இந்த முதலாளிகளது மூலதனம், எதிர்பார்த்தபடியே திடீரென அதலபாதாளத்தில் விழுந்துவிட்டது. இப்படி விழுந்ததற்கு சில முக்கியக் காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது, வேலையில்லாப் பட்டாளம்.
   

ஒரு ஊரில் கலவரம் நடந்தால் அதை அடித்து நொறுக்கி ஒடுக்குவதற்கு ரிசர்வ் போலீஸ் படையை வைத்திருப்பதைப் போல, ஏற்கெனவே வேலையில் இருப்பவர்கள் கூடுதலாக கூலி கேட்டாலோ - போராடினாலோ, "நீ வேலைநிறுத்தம் செய்தாலும் கவலையில்லை; அந்த வேலையைச் செய்ய இதோ இத்தனைபேர் காத்திருக்கிறார்கள்" என்று மிரட்டுவதற்காகவே மிகப்பெரும் பட்டாளத்தை - வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர் பட்டாளத்தை நிலையாக வைத்திருக்கிறது மேற்கண்ட முதலாளிகளுக்கு ஆதரவான அரசின் கட்டமைப்பு.
   

மறுபுறத்தில், பெரும் எண்ணிக்கையிலான படித்த மற்றும் திறமையான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிற தொழில் மற்றும் விவசாய உற்பத்தியைவிட, பங்குச் சந்தைகளை மையமாகக் கொண்டு செயல்படுகிற ஊகவணிகம் மூலமாக முன்னெப்போதும் இல்லாத லாபத்தை ஈட்ட முடியும் என்று பெரும் முதலாளிகள் எண்ணியதால், பொருள் உற்பத்தியை அதிகரிக்காமல் ஊகத்தின் அடிப்படையில் உலக வியாபாரம் மாறியது.
   

பொருள் உற்பத்தி அதிகரிக்காததால், சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் விலை தானாகவே உயர்ந்தது. குறைந்த பொருளுக்கு நிறைய லாபம் கிடைத்ததால், அந்தப் பொருளுக்கும் ஊக பேரத்தின் மூலம் மேலும் விலையை உயர்த்தி, மேலும் லாபம் ஈட்டத் துவங்கினார்கள் முதலாளிகள். வேலைவாய்ப்பற்ற பெரும் பட்டாளமும், குறைந்த கூலியே கிடைக்கப்பெறுகிற இதர மக்களும் பெரும் விலைகொடுத்து பொருட்களை வாங்கமுடியவில்லை; தேவையான அளவு நுகர முடியவில்லை. இதனால், பொருட்கள் தேங்கின. பொருள் தேங்கியதால் உற்பத்தி தானாகவே குறைகிறது. உற்பத்தி குறைவதால், பல தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை. தொழிற்சாலைகளை மூடியதால் மேலும் வேலையிழப்பு. இதனால், வங்கிகளில் வாங்கியிருந்த வீட்டுக்கடன்கள் போன்றவற்றை அடைக்க முடியவில்லை. கடன் வாங்கியவர்கள் எல்லாம் திரும்ப அடைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதால் வங்கிகளே திவாலாகின.
  

வங்கிகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதாலும், தாராளமயக் கொள்கையால் உலகம் முழுவதும் பல கிளைகள் பரப்பியிருப்பதாலும், ஒரு வங்கியில் ஏற்பட்ட சிக்கல், பல வங்கிகளைத் தாக்கியது. அடுத்தடுத்து வங்கிகள் திவாலாகின. வேகமாக சுழன்று கொண்டிருந்த பொருளாதாரச் சக்கரம், வேகம் குறைந்தது. நெருக்கடியில் சிக்கியது.
   

2008ம் ஆண்டில் அமெரிக்காவில் மையம் கொண்ட இந்த பொருளாதார நெருக்கடி, படிப்படியாக பிற நாடுகளுக்குப் பரவியது. கிரீஸ் போன்ற பல ஐரோப்பிய நாடுகளும் நெருக்கடியில் சிக்கின.
   

நெருக்கடியில் சிக்கிய பொருளாதாரத்தை மீட்டு, மீண்டும் ஓடச் செய்ய வேண்டுமானால் உடனடியாக ஒரே வழிதான் இருக்கிறது.    வேலையில்லாமல், கூலி இல்லாமல் பெருவாரியான மக்கள் உற்பத்திப் பொருட்களை வாங்காததால்தான், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால்தானே இந்த நெருக்கடி ஏற்பட்டது. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். வேலைவாய்ப்பை பெருமளவில் ஏற்படுத்த வேண்டும். இதற்கு அரசு நேரடியாக தலையிட்டு  தொழில் நிறுவனங்களை இயக்க வேண்டும். உழைப்பைச் செலுத்தி தாங்கள் பெறுகிற கூலியை பெருமளவிலான மக்கள் வீட்டில் வைத்திருக்கப்போவது இல்லை. தங்களுக்குத்தேவையான பொருட்களை வாங்குவார்கள். பொருட்களின் விலையையும் அரசு தலையிட்டு, மானியம் கொடுத்து குறைக்க வேண்டும். இப்படிச்செய்தால் அதிகமான மக்கள் தங்கள் கையில் கிடைத்த கூலியை செலவிட்டு, பொருட்கள் வாங்குவார்கள். பொருளுக்கு கிராக்கி அதிகரிக்கும். கிராக்கி அதிகரித்தால் உற்பத்தி  தானாக கூடும். உற்பத்தி கூடினால் மூடிய தொழிற்சாலைகள் திறக்கும். புதிய வேலைவாய்ப்பும் பெருகும். பொருளாதாரம் மீண்டும் வேகம் பிடிக்கும்.
   

ஆனால் அமெரிக்க அரசோ, நெருக்கடியில் தீவிரமாக சிக்கியிருக்கும் பல நாடுகளின் அரசுகளோ இதைச் செய்யவில்லை. மாறாக இந்த நெருக்கடியால் எங்களுக்கு லாபம் குறைந்துவிட்டது என்று பிதற்றிய பெரும் முதலாளிகளுக்கு அரசுப்பணத்தை  கோடிகோடியாக அள்ளிக்கொடுத்தது. மீட்பு நடவடிக்கை என்ற பெயரில் இதைச் செய்த அரசுகள் பின்னர் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், இருக்கிற கொஞ்ச நஞ்ச வேலைவாய்ப்புகளையும் வெட்டியுள்ளன. கூலியை கடுமையாக குறைத்துள்ளன. ஓய்வூதியத்தில் கைவைத்துள்ளன.
   

ஒரே ஒரு  சதவீத பெரும் முதலாளிகளின் லாப நலனுக்காக 99 சதவீத மக்களின் வயிற்றில் அடித்துள்ளன.    இது பொருளாதாரத்தை சுழல வைப்பதற்குப் பதிலாக நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. அமெரிக்கக் குடிமக்கள் 6ல் ஒருவர் மிகக் கடுமையான வறுமையின் பிடிக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். கொடிய வறுமையில் உழலும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வரலாறு காணாத வகையில், வேலையின்மை 9.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. 140 லட்சம் அமெரிக்க இளைஞர்கள் வேலையின்றி வீதியில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் வாழும் கருப்பின மக்களிடையே வேலையின்மை 16.7 சதவீதம் என்ற அளவிற்கு கடுமையாக அதிகரித்துள்ளது. வருமான விகிதம் வீழ்ந்ததால் வறுமையின் விகிதம் 15.1 சதவீதமாக கடுமையாக அதிகரித்துள்ளது.

மொத்தம் 460 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர். அமெரிக்காவின் வரலாற்றில் இப்படி நிகழ்ந்ததே இல்லை. பெருவாரியான அமெரிக்க மக்கள் இப்படித் துன்புற்று உழன்று கொண்டிருக்கும் போது ஒபாமா அரசு, இவர்களை கவனிக்காமல் லாபம் போய்விட்டது எனப்புலம்பிய பெரும் முதலாளிகளுக்கு மேலும் மேலும் மீட்பு நிதியை அள்ளிக்கொடுத்தது.
   

இதன் விளைவாக 2011ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக் காலத்தில் மட்டும்  மெரில் லிஞ்ச் நிறுவனம் 3.7 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியுள்ளது. கோல்டு மேன் சேக்ஸ் நிறுவனம் தனது உயரதிகாரிகளுக்கு போனசாக 5.23 பில்லியன் டாலர் பணத்தை வாரி வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் 11.89 பில்லியன் டாலர் கூடுதல் வருவாயை ஈட்டியுள்ளது. இதே போல ஜெ.பி.மார்கன் சேஸ், சிட்டி குரூப் உள்ளிட்ட பல நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடைந்துள்ளன.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் வால்ஸ்ட்ரீட்டில் இருந்தே இயங்குகின்றன. இந் நிறுவனங்களுக்கு பேங்க் ஆப் அமெரிக்கா நிர்வாகம், தனது வங்கியில் தங்களது கொஞ்ச நஞ்ச பணத்தை சேமித்து வைத்துள்ள ஏழை-எளிய, நடுத்தர அமெரிக்கர்களின் இருப்புப் பணத்தை தூக்கிக் கொடுத்தது என்பதை கவனிக்க வேண்டும்.
   

இப்படியாக அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும், ஒரு சதவீத முதலாளிகளை பாதுகாப்பது, அவர்களுக்காக 99 சதவீத மக்களை கசக்கிப்பிழிவது என்பதாகத் தொடர்வதால் அந்த  நடவடிக்கையை பொறுக்கமுடியாமல் கொதித்தெழுந்துள்ளது அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கம்.
   

சில நூறு பேர் கொண்ட அமைப்புகள் இப்போராட்டத்தை நடத்துவதாக அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் கூறுகின்றன ஆனால் உண்மையில் அமெரிக்காவின் 100 மாநகரங்களில் பற்றிப் பரவியுள்ள இப்போராட்டத்தில் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் களமிறங்கியுள்ளனர்.
   

வால்ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம் என்ற முழக்கம் உலகம் முழுவதிலும் எதிரொலித்துள்ளது. கடந்த செப்டம்பர் 17ம் தேதி துவங்கி தற்போது வரை ஒரு மாத காலத்திற்குள் 82 நாடுகளில் 1,500 போராட்டங்கள் இதே முழக்கத்துடன் நடந்துள்ளது. அனைத்திலும் மிகப்பெரும் எண்ணிக்கையில் திரண்டு முதலாளித்துவத்திற்கு எதிராக முழக்கமிட்டவர்கள் இளைஞர்கள், இளைஞர்கள், இளைஞர்களே...                                       

-எஸ்.பி.ராஜேந்திரன்

Tuesday, November 8, 2011

உலகமயச் சுரண்டலுக்கு எதிராக உலகம் தழுவிய போராட்டம்

முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென்னிலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே...
-பட்டினத்தார்

அக்கினிக் குஞ்சொன்று போலத் தான் பிடித்தது இந்த நெருப்பு...செப்டம்பர் 17 அன்று.  அமெரிக்காவின் சந்தைப் பொருளாதார மையமான வால் ஸ்ட்ரீட் அருகே இருக்கும் ஜுக்கொவிட் பூங்கா உள்ளே அன்று இரவு நூறு பேர் இன்றிலிருந்து 'இராத் தங்கல்' இங்கே தான் என்று பாய் தலையணைகளோடு வந்து நின்றுவிட்ட அந்த நாளில் ஆயிரம் பேர் கலந்து கொண்ட ஆவேச ஆர்ப்பாட்டங்களோடு தொடங்கியது இந்த "வால் ஸ்ட்ரீட்டை முற்றுகையிடுவோம்" போராட்டம். அக்டோபர் 15 உலகைக் குலுக்கி இருந்தது அதன் வீச்சு!  82 நாடுகள், அவற்றின் 951 நகரங்களில் லட்சக் கணக்கில் திரண்ட மக்களின் எழுச்சிகரமான அணிவகுப்பு- அவரவர் நாட்டுப் பிரச்சனைகளின் கோபத் தீயோடு சேர்ந்து கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது செப்டம்பர் 17 ஜுக்கொவிட் பூங்கா மரத்திடைப் பொந்தினில்  வைத்திருந்த அக்கினிக் குஞ்சு..

''உனக்குப் பசி எடுக்கிறதா, எவனாவது ஒரு வங்கி அதிபரைப் பிடித்துத் தின்னு..''என்று அலறியது ஆர்ப்பாட்டத்தில் ஒரு பெண் ஏந்தியிருந்த தட்டி. டோக்கியோ நகரில் ஒரு சின்னஞ்சிறுவன் வைத்திருந்த அட்டையில், என்னைக் கரை சேர்ப்பது எப்போது... என்று எழுதியிருந்தது உலகச் செய்தியானது. (பெயில் அவுட் என்ற சொல், நஷ்டத்தில் சிக்கி இருக்கும் நிறுவனத்தை அரசு தலையிட்டுக் காப்பற்றுவதைக் குறிக்கிறது, நிறுவனங்களின் அதிபர்களைக் காப்பாற்றி விட்டு அதன் முதலீட்டாளர்களை நடுத்தெருவில் நிறுத்துகின்றன அரசுகள், எனக்கான பெயில் அவுட் எங்கே என்று தான் இந்தச் சிறுவன் கேட்டது).. உலகமயமாகி இருக்கும் சுரண்டலுக்கு எதிரான கோபாவேசம் உலகமயமாகிக் கொண்டிருக்கும் ஒரு மகத்தான வெளிப்பாடாக வெடித்துக் கொண்டிருந்தது அக்டோபர் 15.

பெருமுதலாளிகளைக் குறிக்கிறது கார்பொரேட் என்கிற சொல். கார்பொரேட்களின் பேராசைக்கும், பட்ஜெட்களில் சாதாரண குடிமக்களைக் குறிவைக்கும் தாக்குதல்களுக்கும் எதிராக என்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது இந்த வால் ஸ்ட்ரீட்டை முற்றுகையிடுவோம் போராட்டத்தின் ஆதார முழக்கம். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகக் கனன்று கொண்டிருந்த உலகப் பொருளாதார பிரச்சனைகளின் பெருத்த அடி, 2008 இறுதிப் பகுதியில் மேற்கத்திய நாடுகளில் விழத் தொடங்கியது. லண்டனில் மிகப் பெரிய வங்கி (நார்தர்ன் ராக்) ஒன்று கவிழ்ந்தபோது அதோடு நின்றுவிடும் சரிவு என நினைத்த கதை எல்லாம் கவிழ்ந்து, அமெரிக்காவில் தொடங்கி அய்ரோப்பிய நாடுகள் வரை நிதி நிறுவனங்கள் பலவும் ஒரு நாளைக்கு இத்தனை என்று கணக்கு சொல்லி வைத்தாற் போல் சரிந்து கொண்டே இருந்தன..ஜார்ஜ் புஷ் காலத்திலிருந்து, ஒபாமா காலம் வரை அமெரிக்காவிலும், இதர நாடுகளிலும் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள எப்படி திட்டங்கள் தீட்டப்பட்டன என்பதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தின் அடிப்படை ஆவேசம்..

முதலாளித்துவ பொருளாதாரம் தனது சரிவிலிருந்து தன்னைத் தானே மீட்டெடுத்துக் கொள்ளும் திறன் படைத்தது என்று பெருமை பேசிக்கொண்டிருந்த அறிவுஜீவிகள் பலரையும் ஆட்டம் காணச் செய்திருக்கிறது அண்மைக்கால நிகழ்வுகள். மீட்சிக்கான பாதை நெருக்கடியை இன்னும் கூர் தீட்டிக் கொண்டிருப்பது என்பதை அவர்களால் ஒப்புக் கொள்ளவும் முடியவில்லை. தப்பித்துச் செல்லவும் வழியில்லை. பொருளாதாரம் எத்தனை வீழ்ச்சி அடைந்தாலும், பெருந்தனக்காரர்களுக்கு வரியை ஏற்றிவிடக் கூடாது, செலவினங்களைக் கட்டுப்படுத்தி - அதாவது, குடிமக்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவ வசதி, சுகாதாரம், ஓய்வூதியம், வேலையற்ற காலத்துக்கான நிவாரணம், காப்பீடு போன்றவை எல்லாம் ஒழித்துக் கட்டி, பற்றாக்குறையைத் தட்டி நிமிர்த்திவிட வேண்டும் என்று துடிக்கின்றன அரசுகள். நிறுவனங்களின் அதிபர்கள் தமது தொப்பைகளை மேலும் வளர்த்துத் தடவித் தடவி ஆனந்தம் அடைந்து கொண்டிருக்க, தங்கள் வாழ்வாதாரங்கள் அனைத்தும் பறி கொடுத்துவிட்டு வீதிகளில் நிற்கும் சாதாரண குடிமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த அத்தகைய  அரசுகளின் கனவுகளில் மண்ணை அள்ளிப் போட்டுப் புறப்பட்டிருக்கிறது இந்தப் போராட்ட அலை.

இதன் உருவகம் தான், நாங்கள் 99% என்ற புதிய கோஷ உருவாக்கம்.  ஒரு சதவீத பெரும் பணக்கார வர்க்கத்திற்காக பெரும்பானமையான எங்கள் நலனைக் காவு கொடுக்காதே என்ற கண்டன முழக்கம் அது. மேற்கு ஆசியாவில் புறப்பட்ட போராட்டங்களில் எப்படி முன்னேறிய கணினி தொழில் நுட்பம் பயன்பட்டதோ, அட அவ்வளவு ஏன், அதிபர் தேர்தலுக்கு ஒபாமா என்ன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திப் பரவலான மக்களைச் சென்றடைந்தாரோ, அதே சாதனங்களின் வழியாகக் கொப்புளிக்கும் கோபாவேசத்தை உலகு முழுக்க பெருந் தீயாகப் பரப்பி வருகின்றனர் இந்தப் போராளிகள். இதன் நரம்பு மண்டலம் எது, தலைமைப் பொறுப்பு யார் கையில் இருக்கிறது, இது தெளிவான திட்டமிடலின் வழி பயணம் செய்யுமா, குழப்பங்களில் சிதறி விடுமா என்ற கேள்விகள் இருந்தாலும், நிராகரிக்க முடியாத கொதி நிலையை நோக்கி நகர்கிறது.

ஃபிரான்ஸ் நாட்டில் அதிபர் சர்க்கோசி அரசுக்கு எதிராகப் பல ஆண்டுகளாக வெடித்துக் கொண்டிருக்கும் கலகங்கள் இன்னும் தீவிர உருக் கொள்கின்றன. லண்டன் மாநகரம் தொடர் போர்க் களமாக மாறிக் கொண்டிருக்கிறது.  ரோம் வெடித்துக் கொண்டு எழுகிறது.  கிரீஸ் கொழுந்து விட்டு எரிகிறது. வேலை நிறுத்தங்கள், காவல் துறையோடு தள்ளு முல்லுகள், மனிதச் சங்கிலிகள், முற்றுகைகள், ஆர்ப்பாட்டப் பேரணிகள்....என உயர்த்திய பதாகைகளின் வழி ஷேக்ஸ்பியரின் மேக்பெத் நாடகத்தில் அரசனுக்கு எதிராக பிர்னாம் காடுகள் எழுந்து வரும் காட்சியைப் போல் திரள்கின்றனர் மக்கள். கண்டங்கள் எல்லாம் முதலாளித்துவத்தைக் கண்ட துண்டமாக வெட்டிப் போடு என்று குரல் கொடுக்கும் நாள் நெருங்கி விட்டதோ என்ற ஆசையைத் துளிர்க்கச் செய்து கொண்டிருக்கிறது நடப்புகள்.  விஷயம் அத்தனை சுலபம் இல்லை என்றாலும்..

அமெரிக்காவின் நர்சுகள் எழுகிறார்கள், நாங்களும் இந்தப் போராட்டத்தில் என்று. ஐரோப்பாவின் மாணவர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர், முதியோர்கள் என யார் தான் இல்லை இந்தப் போராட்டத்தில்!  ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி, நுகர்வுக் கலாச்சாரத்திற்கு எதிரான அட்பஸ்டர்ஸ்  என்ற பத்திரிகை தான், வால் ஸ்ட்ரீட்டை முற்றுகையிடுவோம் என்ற பெயரைப் பதிவு செய்தது என்கிறார்கள். அது பிறகு பல்கிப் பெருகிப் பெரு வெள்ளமாக அக்டோபர் 15 உலக நாடுகளில் பாய்ந்துவிட்டிருக்கிறது. அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி மேலும் உக்கிரமாகக் கூடும் என்றும் தெரிகிறது.

அதன் பிரதிபலிப்புகளை அமெரிக்க அதிபர் ஒபாமா பேச்சிலும், நமது பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டு உலக நாடுகளின் அதிபர்கள் கருத்தோட்டங்களிலும் காண முடிகிறது. அதிர்ந்து தான் போயிருக்கின்றனர் மாற்றுக் கொள்கை கிடையாது என்று இத்தனைக் காலமும் சாதித்துக் கொண்டிருந்தவர்கள். ஆனாலும் கொள்கைகளில் இவர்கள் என்ன மாற்றம் கொண்டு வருவார்கள் என்பது தான் முக்கியம். அதை இலேசில் கொண்டு வர முடியாது என்பதும் தெரியும்.

'பச்சைக் குழந்தை பால் இன்றி பாதையில்  விழுவது அகிம்சையா, பசிக்கு இரத்தம் குடிக்கும் பேய்களைப் போருக்கு இழுத்தால் வன்முறையா' என்று போகிறது, பரிணாமன் எழுதிய கிளர்ச்சியைத் தூண்டும் தோழர்களே பாடல் வரிகள். அதன் அடுத்த மேன்மையான இடம், 'நிழலையே திருடும் நீசர்கள் முன்னே நேசக் கரங்கள் நீளாது, இவர் நிழலே விழாத திருநாள் வரும் வரை சமரசம் போரில் கிடையாது' என்று உச்சியைத் தொடும். அப்படியான சமரசமற்ற போர் தொடுக்கப்படும் என்று விழைகிறது முற்போக்கு உலகம்.

நடந்து கொண்டிருக்கும் இந்த எழுச்சிப் போரின் ஒரு முக்கிய முனையாக இருக்க வேண்டிய இந்தியாவில் இதன் உடனடி பிரதிபலிப்பு இல்லாதது வியப்பையும், கொஞ்சம் வருத்தத்தையும் ஏற்படுத்தினாலும் தொழிற்சங்கங்களும், இடதுசாரி கட்சிகளும் - குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியும் அக்டோபர் 15 எழுச்சியை வரவேற்றிருப்பது ஆறுதல் அளிக்கிறது. உலகெங்கும் போராட்டம் நடந்தாலும் சந்தைப் பொருளாதாரம் தவறு என்று ஆகிவிடாது என்று அண்மையில் மணிசங்கர் ஐயரின் தகப்பனார் சங்கர அய்யர் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா முழங்கி இருக்கிறார். நாள் ஒன்றிற்கு இருபத்தைந்து ரூபாய் ஈட்டினால் வறுமை ஒழிந்துவிடும் என்று சிந்திக்கும் அதி தீவிர அறிவியல் மூளை ஆயிற்றே, அது தான் இன்னும் அடங்காத கொழுப்பு.   ஆனாலும், ஊழல், பெருந்தொழில் நிறுவனங்களின் பகாசுரக் கொள்ளை, அதிகரிக்கும் விலைவாசி, பெருகும் பட்டினிச் சாவுகள், நொறுங்கும் வேளாண்மை, வேதனை அளிக்கும் வேலை இழப்புகள்....இவற்றின் பளுவால் துடித்துக் கொண்டிருக்கும் சாதாரண மக்களின் பாடுகள் அவர்களையும் ஒன்று திரட்டும். கலகம் வெடிக்கும். அதை வடிவமைக்கிற, வழிகாட்டுகிற, தலைமை ஏற்கிற கடமை அழைக்கிறது, முற்போக்கு இடது சாரி ஜனநாயக சக்திகளை.

வால் ஸ்ட்ரீட் முற்றுகை அமெரிக்காவில் என்றால், தலால் ஸ்ட்ரீட் முற்றுகை இந்தியாவில் என்று எழுதுகிறார் பிசினஸ் லைன் கட்டுரையாளர் ஒருவர். அது உண்மையாகட்டும்.

-எஸ் வி வேணுகோபாலன் 

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)