Showing posts with label தகவல் உரிமை. Show all posts
Showing posts with label தகவல் உரிமை. Show all posts

Tuesday, June 25, 2013

தகவல் உரிமைச் சட்டமும், கட்சிகளின் எதிர்ப்பும் !

தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் கட்டுப்பட வேண்டும் என ஒரு விவாதம் கிளம்பியிருக்கிறது. இதனை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது, பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கிறது. சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்களில் சம்பந்தப்பட்டுள்ள அந்தக் கட்சிகள் எதிர்ப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இடதுசாரிகளும் இந்த நடவடிக்கையை தவறென்று சொல்கிறார்கள்.

தகவலுரிமைச் சட்டம் தேவையே!
'தகவல் உரிமை’ ஒரு ஜனநாயக தேசத்தின் அடிப்படைத் தேவை. இதன் மூலமாக ஏராளமான ஊழல்களை, முறைகேடுகள் அம்பலப்பட்டிருக்கின்றன. பெரும் நிறுவனங்களும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் – கூட்டு சேர்ந்து செயல்படுவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இந்த கூட்டணி, தன் தேவைக்காக சட்டங்களை வளைப்பதும், திட்டங்களை மாற்றுவதையும் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. ஊழல் இன்று தேசத்தின் மையமான பிரச்சனையாக எழுந்திருக்கிறது.
சுதந்திர இந்தியாவில் இடதுசாரி முதல்வர்கள் 8 பேர் இருந்துள்ளார்கள். இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதிக ஆண்டுகள் பதவியில் இருந்த  ஜோதிபாசு உள்ளிட்டு இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், இ.கே. நாயனார், வி.எஸ்.அச்சுதானந்தன்,  புத்ததேவ், நிருபன் சக்கரவர்த்தி, தசரத் தேவ், மாணிக்சர்க்கார் என ஒருவரின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. இதனால், ஊழலை எதிர்க்கும் பொதுமக்களுக்கு, இடதுசாரிகள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு.

இதனால், ’தகவல் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகளும் கொண்டுவரப்பட கூடாது’ என்று சொல்வது - விமர்சனத்திற்கு உள்ளாகிறது. இந்த நடவடிக்கையை எதிர்க்க இடதுசாரிகள் சொல்லும் காரணம் ’கட்சி என்பது ஒரு பொது ஸ்தாபனம் அல்ல’, ‘அனைவருக்கும், அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படையாக தெரிவிப்பது, கட்சிகளின் செயல்பாட்டை, ஜனநாயகத்தை பாதிக்கும்’ என்பதாகும்.
தகவல் உரிமைச் சட்டத்தில், அரசியல் கட்சிகளையும் சேர்க்க வேண்டும் என்ற கருத்து எப்படி வந்தது?
இந்தக் கருத்து தகவல் ஆணையத்தால் முன்வைக்கப்பட்டு, தகவல் உரிமைப் போராளிகளால் வழிமொழியப்படுகிறது. இந்தச் சட்டத்தை பயன்படுத்தியதன் மூலமும் , அரசு நிர்வாகத்தில் உள்ள நேர்மையானவர்களின் உதவியிலும் முறைகேடுகள் பல வெளிவந்தன. அந்தச் செய்திகள் மக்களிடையே அதிர்வை ஏற்படுத்தியதையடுத்து – ’அரசியல் கட்சிகளின் போராட்டங்களும்’ ‘சிவில் சொசைட்டி’ போராட்டங்களும் நடந்தன.
ஊழல் முற்றாக ஒழிக்கப்பட வெறும் தகவல் போராட்டங்கள் மட்டும் போராது, அரசியல் போராட்டமும், சமூக மாற்றமும் அவசியம் என்பது புரிபடத் தொடங்கிய நேரத்தில் – ஊடகங்கள் சிவில் சொசைட்டி போராட்டங்களையும், லோக்பால் மசோதாவுக்கான உண்ணாவிரதத்தையும் முன் நிறுத்தினார்கள். இப்படி, ஊழல் எதிர்ப்பு போராட்டம் ‘அரசியலை எதிர்த்தவர்களின், அரசியலற்ற போராட்டமாக’ குறுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ‘தகவல் உரிமைச் சட்டத்தை’ அனைத்து பிணிகளுக்கும் ஒரே மருந்து என்ற ரீதியில் முன்வைக்கும் வாதங்கள் உருவாகின. 
இது சரியான வாதமா?:
           
            இல்லை. மிகத் தவறான வாதம். அரசியலை எதிர்த்த போராட்டங்கள் அரசியலற்றவர்களால் மட்டும் நடத்தப்பட வேண்டும் என்பது - அதிகாரத்திற்கு அருகில் ஊழல்வாதிகளை நிறுத்திவிட்டு - எதிர்ப்பாளர்களை வெறும் ‘விமர்சகர்களாக’ சுறுக்கிவிடும். ’குளத்துக்குள் இறங்காமலே குளத்தை சுத்தப்படுத்தலாம்’ என்ற வியாக்கியானமாக அமைகிறது.

அரசியல் என்பது ஒரு போர்க்களம். இங்கே பல்வேறு கருத்துக்களும் மோதுகின்றன. உதாரணமாக ஊழலை எதிர்த்த கட்சிகள், ஊழல்வாதிகளுக்கு எதிராக மாற்றுக் கொள்கையை முன்வைத்து போராடுகிறார்கள். தகவல் உரிமையில் ‘அமைப்புகளின் உள் விவகாரங்களையும் கேட்கலாம்’ என்பதானது ஊழல்வாதிகளுக்கு எதிராகவும் பயன்படும். ஊழலை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும். இது அரசியலை கேலிக்கூத்தாக மாற்றிவிடும்

அரசியல் கட்சிகளை கண்டுகொள்ளாமல் விட வேண்டுமா? 

தகவல் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகளை உட்படுத்தாத போது - அவர்களை யாருமே கேள்வி கேட்கக் கூடாதா? என்ற கேள்வி வருகிறது. 
அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்த ஏற்கனவே உள்ள அமைப்புகளில், பல குறைகள் உள்ளன. அவற்றை சரியான முறையில் மாற்றியமைப்பதே - அரசியல் கட்சிகளைக் கட்டுப்படுத்த உதவும். உதாரணமாக ‘நபர்களை முன் நிறுத்தும்’ தேர்தல்களால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஆட்சிகள் மாறுகின்றன, கொள்கைகள் மக்கள் விரோதமாய்த் தொடர்கின்றன.
எனவே நம் நாட்டின் தேர்தல் தேர்தல் ஆணையத்தை இந்த அடிப்படையில் வலுப்படுத்த வேண்டும். தேர்தல் முறையை “கொள்கை அடிப்படையில் மாற்றுவது”, தேர்தல் பிரச்சாரத்துக்காக கார்பரேட்டுகளின் கையேந்துவதையும், தனி நபர்களை சார்ந்திருப்பதையும் மாற்றி - தேர்தல் ஆணையமே குறிப்பிட்ட அளவில் அனைவருக்குமான பிரச்சாரத்தை மேற்கொள்வது. லோக்பால் சட்டத்தை அமலாக்குவது என பல கட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.மக்கள் அரசியலில் இருந்து அந்நியப்படுத்தப் பட்டிருப்பது மற்றொரு காரணமாகும். ஒவ்வொரு கட்சியின் உறுப்பினராகவும் உள்ள ‘பொதுமக்கள்’அரசியல் மயப்பட்டால் – கொள்கை விவாதங்கள் முன்னுக்கு வரும். அப்போது கட்சிகளின் தலைமைகள் கேள்விக்குள்ளாகும். சரியான கொள்கைகள் கவனத்தைப் பெறும்.

ஊழலை ஒழிக்க இதுவே போதுமா??

ஊழலை ஒழிப்பதற்கு இது போதாது. மாறாக ஊழலுக்கு போராட்டக் களத்தை அமைக்க இது உதவியாக இருக்கும். மிகப்பெரும் பண முதலைகளின் கையிலிருக்கும் அரசியல் அதிகாரத்தைக் கேள்வி கேட்பது மட்டுமல்ல, மாற்றியமைப்பதும் இன்றைய தேவை. சாமானியர்களின் நலன்கள் முன்னுக்கு வரச் செய்வது - சாமானியர்களின் பங்களிப்பில்லாத அரசியலால் நடக்காது. மாற்றத்தை தொடங்கி வைப்பபவர்களாகவும் – நாமே இருக்க வேண்டும்.

- சிந்தன் ரா

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)