Showing posts with label ஏகாதிபத்தியம். Show all posts
Showing posts with label ஏகாதிபத்தியம். Show all posts

Tuesday, November 22, 2011

ஏகாதிபத்தியத்தின் கன்னத்தில் அறைந்த கிதார் இசைக்கலைஞன்!

மக்களின் உழைப்பில் விளைந்த பயன்களைத் தின்று கொழுத்துத் திமிரேறிப் போய் உண்ட களைப்பைத் தீர்க்க திண்டுகளில் சாய்ந்து கிடக்கிற அரசர்களையும் அவர்களின் அடிவருடிகளையும் மகிழ்விப்பதற்கானவை கலையும் இலக்கியமும்  இல்லை.

மாடாய் உழைத்தும் ஓடாய்த் தேய்ந்து கொண்டிருக்கிற மனிதர்களின் விடுதலைக்கு பூபாளம் இசைப்பவை! கலைஞர்களும் இலக்கிய கர்த்தாக்களும் அவர்களுக்குப் பேருவகையுடன் பரிசளிக்கிற போராயுதங்கள்! இந்த உண்மையை இப்பூவுலகைப் பொசுக்கத் துடிக்கும் ஏகாதிபத்திய எஜமானின் கன்னத்தில் அறைந்து, இன்னொருமுறை எடுத்துக் காட்டியுள்ளான் உலகப் புகழ்பெற்ற கிதார் இசைக் கலைஞன் மக்கானா!

மக்கானா. ஏழு வயதில் பாடத் தொடங்கி 14 வயதில் சிறந்ததொரு தொழில்முறைக் கலைஞனாய் ஒளிவீசியவன்; ஏற்கெனவே 2009இல் வெள்ளை மாளிகையில் தனது கிதாரை மீட்டியவன். இந்த ஹவாய் தேசத்து இளம் கலைஞன் இவ்வார இறுதியில் சனிக்கிழமையன்று தனது மண்ணில் ஹோனலூலு நகரில் அமெரிக்க மக்களின் நம்பிக்கைத் துரோகியான ஒபாமாவின் தலைமையில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட 19 அல்லது 20 உலகத் தலைவர்களை மகிழ்விப்பதற்காக அளிக்கப்பட்ட விருந்தில் அவர்களை இசை மழையில் நனைக்க அழைக்கப்பட்டான்; அங்கே அவன் செய்ததோ அதியற்புதச் செயல்!

அக் கூட்ட அரங்குக்கு வெளியே இந்தக் கொள்ளைக் கும்பலுக்கு எதிராக நடந்து கொண்டிருந்த ‘ஹோனலூலுவைக் கைப்பற்றுக’ எனும் போராட்டக்காரர்களின் ஆர்ப்பாட்டம் அவனை முழுமையாக ஆட்கொண்டது! அதன் பொருட்டு அன்று காலையே அவன் ஒரு பாடலை வடித்திருந்தான்; அந்த விருந்தில் தனது கிதாரை மீட்டுவதற்குப் பதிலாக தான் அணிந்திருந்த’ டிசர்ட்டை‘யைத்திறந்து காட்டினான்; அது அந்த தேசத்தின் மிகச் சிறந்த வழியனுப்பும் வாழ்த்து மொழியாம் ‘அலோஹா!’ வுடன் கூடிய“அலோஹாவுடன் கைப்பற்றுவோம் ! ‘ எனும் வாசகத்தைத் தாங்கியிருந்தது.

“நாங்களே வெகுபலர்” எனும் தலைப்பைக் கொண்ட அப் பாடலின் வரிகள் அவனிடமிருந்து பொங்கியது...

‘ இங்கே வாருங்கள் இருக்கைகளில் அமருங்கள்!
எம் கோபக் கனலை கொட்டிடும் நேரம்
இங்கே வாருங்கள் இருக்கைகளில் அமருங்கள் !

கூண்டில் எமை அடைத்தீர் ! கொடுமைகள் பல செய்தீர் !
எம் உழைப்பின் பயனை ஒட்டச் சுரண்டிட
சட்டங்கள் போட்டீர் திட்டங்கள் தீட்டினீர் !

வாஷிங்டன் தரகர் வழிப்பறிக் கொள்ளையராய்
எம் சுதந்திரம் பறிக்கிறார் !
அதற்கெதிராய்க் கொடி தூக்கும் எமைப் பார்த்து
கோலோச்சும் அதிகாரி கொடுவாளை வீசுகிறான் !

இவர்களை இருந்த இடம் தெரியாமல்
கருவறுக்கும் நாள்வரை கலைந்துசெல்ல மாட்டோம் யாம்!
வீதியை நீதிமன்ற நெடுஞ்சுவரை
கனவான்கள் நீங்கள் காற்று வாங்கும்
கவைக்குதவா உங்கள் அலுவலகக் கட்டடத்தை
கைப்பற்றும் இயக்கத்தைக் கைவிடவே மாட்டோம் !

வெகு பலராம் எமது விழைவுகளைப் புறந்தள்ளி
ஒரு சிலர்க்காய் உம் அரசுத் தேர் உருளும்வரை
ஓயாது எமது சமர் உறங்காது எம் விழிகள் !

தனியொரு மனிதனின் தாழ்நிலை போக்கிட
தீட்டப்பட்ட தேசத்தின் சட்டம்
இன்றந்த ஒரு சிலரால் உருமாற்றப்படுகிறது
வில்லங்கம் ஏதுமின்றி
எல்லாம் அவர்களுக்கே
என்றாகி விட்டதின்று
நம்மைப் போல்வரா அந்த நயவஞ்சகர் ?
இல்லை இல்லை
அவர்களின் பிடியில் அரசு இயந்திரம்
இந்நிலை மாறும் அந்நாள் வரை
எமக்கிங்கில்லை இன்ப சுதந்திரம்
இவர்களை இருந்த இடம் தெரியாமல்
கருவறுக்கும் நாள்வரை கலைந்துசெல்ல மாட்டோம் யாம்!

வீதியை நீதிமன்ற நெடுஞ்சுவரை
கனவான்கள் நீங்கள் காற்று வாங்கும்
கவைக்குதவா உங்கள் அலுவலகக் கட்டடத்தை
கைப்பற்றும் இயக்கத்தைக் கைவிடவே மாட்டோம் !

வெகு பலராம் எமது விழைவுகளைப் புறந்தள்ளி
ஒரு சிலர்க்காய் உம் அரசுத் தேர் உருளும்வரை
ஓயாது எமது சமர் உறங்காது எம் விழிகள் !

தொந்தி பெருத்தவரின் தோள்சுமக்கும் பேரரசு
அவர்தம் நலன்காக்கும் ஆதிக்கச் சண்டைகளில்
எம் வீட்டுப் பிள்ளைகளின் இன்னுயிரைப் பலிகொடுக்கும்!
எல்லார்க்கும் ஒரு சில இம்மண்ணில் சொந்தம்!
என்றாலும் இத் திருடர் எதை எமக்கு விட்டுவைத்தார்?

எனவேதான் சொல்கின்றோம் கவனமாய்க் கேளுங்கள்!
எம் வாட்டத்தைத் தீர்க்காது வாய்ப்பந்தல் போடாதீர் !
இழப்பதற்கு ஏதுமில்லை என்பதனால் எம் கூட்டம்
நாளும் பொழுதுமாய் வளர்ந்து வருகிறது !

வீதியை நீதிமன்ற நெடுஞ்சுவரை
கனவான்கள் நீங்கள் காற்று வாங்கும்
கவைக்குதவா உங்கள் அலுவலகக் கட்டடத்தை
கைப்பற்றும் இயக்கத்தைக் கைவிடவே மாட்டோம் !

வெகு பலராம் எமது விழைவுகளைப் புறந்தள்ளி
ஒரு சிலர்க்காய் உம் அரசுத் தேர் உருளும்வரை
ஓயாது எமது சமர் உறங்காது எம் விழிகள் !

உம்மால் ,
எதிரும் புதிருமாய் எமைப் பிளக்க முடியாது
எம் கோபவிழிநீங்கி உம்கோரமுகம் மறையாது
உம் ஒதுக்கல் கொள்கை எம் ஒற்றுமையை
உருக்குப்போல் வார்த்தெடுக்கும் !

உம்மோடு எம்உறவு இனியில்லை ஒருபோதும்!
எமதரசு விலைக்கில்லை
நம்பிக்கைத் துரோகிகளாம் வங்கிகட்கு இனி இங்கே
மீட்பில்லை மீட்பில்லை !!

வெல்லும் நாள் வரையில்,
வீதியை நீதிமன்ற நெடுஞ்சுவரை
கனவான்கள் நீங்கள் காற்று வாங்கும்
கவைக்குதவா உங்கள் அலுவலகக் கட்டடத்தை
கைப்பற்றும் இயக்கத்தைக் கைவிடவே மாட்டோம் !

வெகு பலராம் எமது விழைவுகளைப் புறந்தள்ளி
ஒரு சிலர்க்காய் உம் அரசுத் தேர் உருளும்வரை
ஓயாது எமது சமர் உறங்காது எம் விழிகள் !

Thursday, September 29, 2011

ஏகாதிபத்தியமும் அதன் முட்டாள்தனங்களும்! - பேரா.பிரபாத் பட்நாயக்


சரியாக பத்து வருடங்களுக்கு முன்பு மன்ஹாட்டனில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக்கோபுரங்கள் தகர்க் கப்பட்ட உடனே நடைபெற்ற அமெரிக்க உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கண்டோலிசா ரைஸ் அதிரடியாக ஒரு கேள்வியை எழுப்பி னார்: “இந்த பயங்கரமான துயரத்தை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்போகி றோம்?” அவருடைய கவலை என்பது இந்த பயங்கர தாக்குதலைப் பற்றியதாக வோ அல்லது குற்றம் செய்தவர்களை நீதிக் குட்படுத்துவது தொடர்பாகவோ இல்லை. மேலும் அந்தக்கூட்டத்திலேயே, இந்த சந் தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இராக் மீது ஒரு போரினைத் தொடுத்து அதன் மூலம் நல்ல பலனை அடையலாம் என்ற விவாத மும் எழுப்பப்பட்டது. அல்கொய்தாவுடன் சதாம் உசேனுக்கு உள்ள பகைமை குறித்து நன்றாக அறிந்திருந்த போதும் இந்தப்போருக் கான விவாதம் எழுப்பப்பட்டது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

பளிச்செனத் தெரிந்த உள்நோக்கம்

இராக் “பேரழிவு ஆயுதங்களை” தயாரித்து வைத்துள்ளது என்பது போன்ற பொய்களை அதிவேகமாகப் பரப்பியதே, இராக் மீதான படையெடுப்பிற்கான காரணத்தை உருவாக் கத்தான் என்று நாம் அறிய முடியும். ஐக்கிய நாடுகள் சபை இதற்கான எந்தவொரு ஆணையும் வழங்கியிராத சூழலில், அமெரிக் காவின் நட்பு நாடுகளான பிரான்ஸ் போன்ற நாடுகள் இப்படி ஆணை எதுவும் இல்லையே என்பதை வலியுறுத்திய பிறகும்கூட, இராக் மீது ஆக்கிரமிப்புப்போர் நடத்தப்பட்டது.

இராக்கின் எண்ணெய் வளத்தைக் கைய கப்படுத்துவது ஒன்றுதான் இந்த படையெடுப் பின் பிரதான நோக்கம். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன், தனது சுயசரிதையில் இதை மிகத்தெளிவாகவும், வெளிப்படையாகவும் குறிப்பிட்டுள்ளார். உலகிலேயே மூன்றாவது பெரிய எண்ணெய் வள நாடு இராக். கிட்டத் தட்ட 143 பில்லியன் பேரல்கள் எண்ணெய் இருப்பதாகக் கூறப்படுகிறது. புவியியல் அமைப்பு மற்றும் பூகம்பவியல் ஆய்வுகளின் படி, 350 பில்லியன் பேரல்கள் எண்ணெய் வளம் இராக்கில் உள்ளது என்று கூறப்படு கிறது. இதனடிப்படையில் பார்த்தோமானால், உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடு இராக். அமெரிக்கா, இந்த மிகப் பெரும் எண்ணெய் வளத்தைத்தான் கைப் பற்றத் துடிக்கிறது. இதன்மூலம் அமெரிக் காவின் உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்பது மட்டுமல்ல, அமெரிக்காவின் நாணயமான டாலரை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மிக நுட்பமான தந்திரமும் அடங்கியுள்ளது.

டாலரும் பெட்ரோலும்

அமெரிக்காவின் டாலர் உலகச் செல்வ வளங்களை சேமிப்பதற்கான ஒரு நிலையான சாதனமாக தொடர்ந்து நீடிக்க வேண்டுமென் றால், எண்ணெயினுடைய டாலர் மதிப்பு (சில ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தாலும்) அதிவேக மாக உயரக்கூடாது. டாலர் என்பதுதான் கை யிருப்பு நாணயமாக இருக்க வேண்டும் என் பது அமெரிக்காவிற்கும் சரி, உலகின் ஒட்டு மொத்த முதலாளித்துவ அமைப்பிற்கும் சரி மிக முக்கியமானது. ஏனெனில், உலக நாடு களுடன் அமெரிக்கா வைத்துள்ள ஒட்டு மொத்த பொருளாதார பரிவர்த்தனைகளும் டாலர் மதிப்பிலேயே அமைந்துள்ளது. உலக முதலாளித்துவ அமைப்பைப் பொறுத்தவரை யில், உலகெங்கிலும் உள்ள செல்வ வளங்க ளின் சொந்தக்காரர்களுக்கு, அவர்களுடைய செல்வங்களை சேமித்து வைக்க ஒரு நம்பக மான சாதனமாக அமெரிக்க டாலர் உள்ளது. எனவே எண்ணெய்யின் டாலர் மதிப்பு அதி வேகமாக உயரக்கூடாது என்பதே இதற்கு ஆதாரமாக அமைய முடியும்.

உலகின் எண்ணெய் வளத்தின் மீது அமெ ரிக்கா வைத்துள்ள கட்டுப்பாடுதான் உலக செல்வ வளங்களின் சொந்தக்காரர்களது மன தில் டாலர் என்பது சேமிப்பிற்கான ஒரு நிலையான சாதனமாக தொடரும் என்ற எண் ணத்தினை, நம்பிக்கையினை மிக ஆழமாக பதியச் செய்துள்ளது. அதன் காரணமாக டாலர் என்பது “தங்கம் போன்று நல்லது” என்று நம்பு கின்றனர். அந்த நம்பிக்கையுடன் தங்கள் சேமிப்பினை டாலரில் தொடர்வதையே விரும்புகின்றனர். எனவே, உலகின் எண் ணெய் வளத்தின் மீது அமெரிக்கா தனது கட் டுப்பாட்டினை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இரண்டு காரணங்களில் இருந்து வருகிறது. அமெரிக்காவின் மிகப் பெரிய அளவிலான உள்நாட்டு நுகர்வுக்கு என்று மட்டுமல்லாது, டாலரை, அதாவது டாலரின் மதிப்பினை தாங்கி தூக்கி நிறுத்த வேண்டிய அவசியத்தில் இருந்தும் எழுகிறது.

அடுக்கடுக்கான அறிவீனங்கள்

ஆனால், இந்த எண்ணத்தோடு நடத்தப் பட்ட இராக்கின் மீதான அமெரிக்கப் படை யெடுப்பு என்பது, அமெ ரிக்கா எதிர்பார்த்ததில் இருந்து முற்றிலும் வேறானதாக மாறிவிட்டது. சதாமின் ஆட்சி மிக எளிதாக வீழ்த்தப்பட்டு விட்ட போதிலும், இந்தப்போரானது உள்நாட் டின் எதிர்ப்புக் குழுக்களுக்கு எதிரானதாக இழுத்துச்செல்லப்பட்டுவிட்டது. தற்போது நாடே துண்டாடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அமெ ரிக்கா தனது கைப்பாவையாக நிர்மாணித்த அரசாங்கமே கூட மக்களின் நம்பகத்தன்மை யை சிறிதளவாவது பெற வேண்டும் என்ப தற்காக, படையெடுப்பின் போது போடப்பட்ட திட்டத்திலிருந்து சிறிது மாறி செயல்பட வேண்டியதாகிவிட்டது. இதன் விளைவாக இராக்கின் எண்ணெய் வளங்களை அந்நியக் கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பதற்கான சட் டம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டு விட்டது. எண்ணெய் வளம் என்பது அரசின் சொத்தாகவே தொடரும் என்று அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அந்நிய எண்ணெய் கம்பெனிகள், அரசாங்கம் ஒரு பேரலுக்கு எவ்வளவு என்று நிர்ணயித்த தொகையை கொடுத்துவிட்டு எண்ணெய்யை இறைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள் ளன. அந்தக் கம்பெனிகள் கூட ஏல முறை யின் அடிப்படையில் போட்டிக்கு விடப்பட்டு தீர்மானிக்கப்பட்டன. மேலும் குர்து இன மக்களுக்கும், பாக்தாத் அரசிற்கும் இடையி லான கடுமையான முரண்பாடுகளின் கார ணமாக எழுந்த நிச்சயமின்மை காரணமாக வும், சீன மற்றும் ரஷ்ய கம்பெனிகள் மிகக் குறைந்த விலையில் ஏலத் தொகையை கேட்டிருந்ததன் காரணமாகவும், இராக்கின் எண்ணெய் வளத்தினைப் பெறுவதில் அதிக அளவில் லாபம் பெறும் அறிகுறிகள் இல் லாத காரணத்தால் அமெரிக்கக் கம்பெனிகள் இந்த ஏல முறையில் பங்கெடுக்காமல் தள்ளியே நின்றன.

அமெரிக்க அரசாங்கத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்த போர் மிகப்பெரிய லாபத்தினை கொணர்ந்துள்ளது என்பது உண்மையே. அதேநேரத்தில், இந்த காலகட் டத்தில் ஏகாதிபத்தியத்தின் மிகப் பெரிய திட்டம் கிட்டத்தட்ட ஒரு கடுமையான அடியைச் சந்தித்துள்ளது என்றே கூறலாம். தனது சொந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நேரடி மற்றும் மறைமுக பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும், லத்தீன் அமெரிக்க நாடு களில் தலையீடு செய்யும் சக்தியை இழந்த தன் காரணமாகவும் அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் திட்டம் தோல்வியை சந்தித்துள்ளது எனலாம்.

லிபியா

இருந்தபோதும், ஏகாதிபத்தியத்தின் அறி வீனமான செய்கைகளில் குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவென்றால், இத்தனை பாதிப் பிற்குப் பிறகும் திரும்ப திரும்ப அதையே செய் வது என்பதுதான். இராக்கில் செய்த அதே முட்டாள்தனத்தை தற்போது லிபியாவிலும் அரங்கேற்றுகிறது. இங்கேயும் கூட ஐக்கிய நாடுகள் சபையின் உண்மையான தீர்மானம் எதற்காக என்றால், கடாபியின் படைகளால் கலகக்காரர்களின் இடங்கள் அடித்து நொறுக் கப்பட்டதன் காரணமாக நிகழும் படுகொலை கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகிய வற்றைத் தடுப்பது என்பதுதான். ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நட்பு நாடுகளும் இதனை லிபியாவின் எண்ணெய் வளத்தினை கைப்பற்றுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக பார்த்தன. 
லிபியா, எண்ணெய் வளத்தின் அடிப்படையில் ஆப்பிரிக்காவி லேயே மிகப்பெரிய நாடு. உலகளவில் ஒன் பதாவது இடம் வகிக்கும் நாடு. சுத்திகரிப்பு செலவு மிகக்குறைவு (ஒரு பேரலுக்கு ஒரு டாலர் தான் ஆகும் என்ற அளவிற்குக் குறைவு) என்பதும் ஏகாதிபத்தியத்தைக் கவர்ந்திழுக் கும் அம்சமாக அமைந்தது. எனவே, அமெரிக் காவும் அதன் கூட்டாளிகளும் ஐ.நாவின் தீர் மானத்தை மீறி, அதன் எல்லையைத் தாண்டி, சர்வதேச சட்ட விதிகளையும் மீறி, ‘ஜனநாய கத்திற்குக்’ கட்டியங்கூறுகிறோம் என்ற பெயரில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொணர்ந்து, அதனை நாம் எதிர்பார்த்த மாதிரியே நியாயப் படுத்துகின்றன.

லிபியாவில் தங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு ஆட்சியை நிறுவி, அதன்மூலம் தம் முடைய திருப்திக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற வகையில் வரும் ஆண்டுகளில் ‘அமைதி யாக’ ஒரு ஆட்சியை நடத்திக் கொள்ளலாம் என்ற கனவும், அந்த ஆட்சியின் மூலம் லிபி யாவின் அபரிமிதமான எண்ணெய் வளத் தைக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்ற கன வும் இராக்கைப் போன்றே இங்கும் சுக்கு நூறாகப்போகிறது.

ஒசாமா பின்லேடன் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியது என்னவெனில், “அமெரிக்காவினை இஸ்லாமிய உலகில் இருந்து விரட்டியடிக்க ஒரே வழி, அமெரிக்கா வின் பிரதிநிதிகளான ஆட்சியாளர்களைத் தோற்கடிக்க ஒரே வழி, அமெரிக்கர்களை அதிக செலவிழுத்துவிடும் வகையில் சிறு சிறு போர்களுக்கு வரிசையாக இழுத்துவிடு வதன் மூலம் அவர்களை திவாலாகச் செய் வதுதான்” என்பதே. இந்த நோக்கத்தை நிறை வேற்ற ஒசாமாவின் எந்த ஒரு அமைப்பும் தேவையில்லை. எண்ணெய் வளங்களின் மீதான அமெரிக்காவின் தீராத வேட்கையே போதுமானது. ஆப்கானிஸ்தான், இராக், தற் போது லிபியா- என எவற்றிலிருந்தும் அமெ ரிக்கா தன்னை விடுவித்துக் கொள்ள முடிய வில்லை. இன்னும் ஏகாதிபத்தியத்தின் அறி வீனமான செயல்கள் அடுக்கடுக்காகத் தொடர்கின்றன.

(தமிழில்: ஆர்.எஸ்.செண்பகம், திருநெல்வேலி)
(நன்றி தீக்கதிர்)

Monday, June 13, 2011

புஷ்சை கொன்று அட்லாண்டிக் பெருங்கடலில் வீசினால்..


ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றுவிட்டது. 10 ஆண்டுகாலம் தேடித்தேடி, கடைசியாக பாகிஸ்தானில் அபோடாபாத் என்ற நகரில், பாகிஸ்தான் ராணுவ பயிற்சிப்பள்ளி அமைந்துள்ள மிக முக்கியமான இடத்திற்கு அருகில் சுமார் 5 ஆண்டுகாலமாக மிகப்பெரிய வீடு எடுத்து “பதுங்கியிருந்த” ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றுவிட்டது.
தனது தேசத்தில் உலக வர்த்தக மையக் கட்டடத்தை விமானம் கொண்டு மோதித் தகர்த்து சுமார் 3 ஆயிரம் மக்களை கொன்ற, அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான பின்லேடனை கொல்வதற்கு முன்பு, அவரைக் கொல்லப்போவதாகக் கூறி ஆப்கானிஸ்தானத்திலும், இராக்கிலும் சுமார் 10 லட்சம் மக்களை கொன்று குவித்தது அமெரிக்கா.
“நாம் நம்மையே கேட்டுக் கொள்வோம். இராக்கிய தேசத்தின் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் உள்பட 6 லட்சம் பேரை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த குற்றவாளி ஜார்ஜ் டபிள்யு புஷ்சின், வீட்டிற்குள் திடீரென ஒருநாள் இராக்கிய கமாண்டோ படைவீரர்கள் புகுந்து, அவரைப் படுகொலை செய்து, அவரது உடலை அட்லாண்டிக் பெருங்கடலில் வீசியெறிந்துவிட்டுப்போனால் நமது நாட்டு மக்களின் உணர்வு எப்படியிருக்கும்?” என்று எழுதுகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த மிகச்சிறந்த அரசியல் விமர்சகரான பேராசிரியர் நோம் சாம்ஸ்கி. பாகிஸ்தானில் தங்கியிருந்த பின்லேடனை, பாகிஸ்தானுக்கேத் தெரியாமல் அதிரடியாக அந்நாட்டுக்குள் புகுந்து விமானத் தாக்குதல் நடத்தி கொலை செய்து, உடலை எடுத்துச்சென்று பசிபிக் பெருங்கடலில் வீசிவிட்டு சென்றார்கள் அமெரிக்க ராணுவ கமாண்டோக்கள்.
அடுத்த நிமிடமே தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் பாரக் ஒபாமா. மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால், பின்லேடனை கொன்றதை நியாயப்படுத்தி, அரசியல் சுதந்திரமிக்க நாடான பாகிஸ்தானுக்குள் புகுந்து கொன்றதை நியாயப்படுத்தி பேட்டியளித்தார், உலகின் மிகப்பெரிய “ஜனநாயக” நாட்டின் இந்த ஜனாதிபதி. பின்லேடனைப் போன்றவர்கள் பாகிஸ்தானில் மேலும் கூடாரமடித்திருப்பது தெரியவந்தால், அபோடாபாத்தில் நடத்திய விமான தாக்குதலைப்போல பல தாக்குதல்களை அந்நாடு எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் பகிரங்க மிரட்டல் விடுத்தார்.
பாகிஸ்தானின் துரதிர்ஷ்டம். விடுதலை அடைந்து சுமார் 64 ஆண்டுகளில் கிட்டத்தட்ட அனைத்து ஆண்டுகளுமே அமெரிக்காவுடன் மிக நெருங்கிக் குலாவியதன் பலனை அனுபவிக்கத் துவங்கியிருக்கிறது, பின்லேடனைப் போலவே!உலக வரைபடத்தில் ஆசியாவின் மிக முக்கியமான கேந்திரத்தில் அமைந்திருக்கிற ஓர் அற்புத தேசம் ஆப்கானிஸ்தான். இயல்பாகவே இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளோடு மிக நெருங்கிய நட்பும் வரலாற்றுத் தொடர்பும் கொண்ட நாடு. பல்வேறு இனக் குழுக்களைக் கொண்ட முஸ்லிம் மக்கள் நிறைந்த ஆப்கானிஸ்தானத்தில், அண்டை நாடான சோவியத் ரஷ்யாவின் அரசியல் தாக்கம் இயல்பாகவே ஏற்பட்டது. 1980-களில் நஜிபுல்லா தலைமையில் அமைந்த ஜனநாயக அரசை, உடனடியாக ஒழித்துக்கட்டுவதற்காக அமெரிக்காவால் ஆப்கானிஸ்தானத்தில் உருவாக்கி, ஊட்டி வளர்க்கப்பட்டார்கள் தலிபான்கள். இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளான தலிபான்கள், அமெரிக்காவின் நாசகர உளவு அமைப்பான சிஐஏவின் முழுமையான உதவியோடு நஜிபுல்லாவை மிகக் கொடூரமாக படுகொலை செய்தார்கள். ஜனநாயக ஆட்சி ஒழிக்கப்பட்டது. இப்பிரதேசம் முழுவதிலும் தீவிரமத அடிப்படைவாதத்தை முன்வைத்து பயங்கர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சோவியத் ரஷ்யாவுக்கு எதிராக தலிபான்களுக்கு உரமூட்டவும் சிஐஏவால் உருவாக்கப்பட்டவர்தான் ஒசாமா பின்லேடன்.
அன்றைக்கு சிதைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் இன்று வரையிலும் எழுந்திருக்கவே முடியவில்லை. பின்லேடனின் மரணத்தை, அமெரிக்காவால் நிகழ்த்தப்பட்ட ஒரு படுகொலை என்று எழுதியுள்ள கியூபத் தலைவர் பிடல் காஸ்ட்ரோ, “பின்லேடன் என்ற நபர் பல்லாண்டு காலமாக அமெரிக்காவின் நண்பராக இருந்தவர்; அந்த நாடுதான் அவருக்கு ராணுவப் பயிற்சி அளித்தது; சோவியத் ஒன்றியத்தின் எதிரி; சோசலிசத்தின் எதிரி” என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் அவர் கொல்லப்பட்ட விதமும், நிராயுதபாணியாக இருந்த ஒரு மனிதனை, அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், அதுவும் வேறு ஒரு நாட்டிற்குள் அத்துமீறிப் புகுந்து சுற்றிவளைத்து படுகொலை செய்வது பயங்கரமானதே என்றும் பிடல் காஸ்ட்ரோ கூறுகிறார்.
தலிபான்களையும், பின்லேடனையும் பயன்படுத்தி ஆப்கானிஸ்தானத்தை சீரழித்த அமெரிக்கா, பின்னர் பின்லேடனைத் தேடுவதாகக் கூறிஅந்நாட்டை தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டது. தற்போது அமெரிக்காவுக்குத் தேவை பாகிஸ்தான்.
ஆசிய பிராந்தியத்தில் சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய முப்பெரும் நாடுகளை மிரட்டுவதற்கு ஆப்கானிஸ்தானைவிடவும் மிகப்பொருத்தமானதொரு வலுவான தளம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குத் தேவைப்படுகிறது. அமெரிக்காவின் மனதில் இருக்கிற அந்த தளம் பாகிஸ்தான். அமெரிக்காவோடு மிக நெருங்கிய தொடர்புகொண்டுள்ள அதே நேரத்தில், அமெரிக்காவின் இஸ்லாமிய எதிர்ப்பு போர்களால் கொந்தளித்து நிற்கிற முஸ்லிம் மதஅடிப்படைவாத சக்திகளுக்கும் பணியவேண்டிய நிலையில் இருக்கிறது பாகிஸ்தான். பின்லேடனை அழிப்பதற்காக தனது நாட்டின் மீது விமானத்தாக்குதல் நடத்திய அமெரிக்காவை கடுமையாக எதிர்க்க முடியாமலும், அடுத்தடுத்து ஆண்ட ராணுவ ஆட்சியாளர்களால் ஊட்டி வளர்க்கப்பட்ட மத அடிப்படைவாத பயங்கரவாதிகளை ஒடுக்க முடியாமலும் தவிக்கிறது இந்தியாவின் அண்டைநாடு.
பரிதவித்து நிற்கும் பாகிஸ்தானை குறிபார்த்து அடிக்க தருணம் பார்த்து காத்திருக்கிறது ஏகாதிபத்திய கழுகு. இந்த பின்னணியில் தான் பாகிஸ்தானுக்கு சீனாவும், ரஷ்யாவும் ஆதரவாக இருக்கின்றன. மும்பை தாக்குதல் உட்பட பாகிஸ்தானிய ராணுவ அரசியலின் இழிசெயல்களுக்கு இந்தியா ஆதரவு அளிக்க முடியாது என்ற போதிலும், ஏகாதிபத்தியக் கழுகின் கைகளில் சிக்கிவிடும் அபாயத்திலிருக்கும் பாகிஸ்தான் மக்களுக்கு இந்தியர்களின் ஆதரவே பெரும் ஆறுதலாக இருக்கும்.
                                                                                                                                                                              எஸ்.பி.ராஜேந்திரன்

Wednesday, April 20, 2011

பெரும் முதலாளிகளின் திட்டம் என்ன?



சுருக்கமாகச் சொல்வதென்றால், ஜனநாயகப் புரட்சியின் மீதான இந்த கடுமையான தாக்குதல் என்பது புராதன பிற்போக்கு சக்தி களால் மட்டும் ஏற்படுவதில்லை. மாறாக இந்திய மக்களின் ஜனநாயக உரிமைகளுக் குப்பங்கம் விளைவிக்க முயலுகின்ற, வலிமைவாய்ந்த, மேலும் மேலும் இந்திய செல்வங்களை கொள்ளையடிக்க முயலு கின்ற ஏகாதிபத்தியத்துடன் கை கோர்த்துக் கொண்டு தன்னுடைய நிலையை தூக்கி நிறுத்த முயலும் இந்திய நாட்டின் “நவீன” பெரும் முதலாளித்துவ சக்திகளினாலும் ஏற் படுகிறது. இப்படி சொல்வதனால், “நவீன தாராளமயமாக்கலுக்கு” முந்தைய கால கட்டத்தில் இருந்த முதலாளித்துவ சக்திகள் மக்களின் ஜனநாயக உரிமைகளைத் துண் டாட முயலவில்லை என்று பொருளாகாது. அவையும் முயன்றன. உதாரணமாக இருண்ட கால கட்டமாகிய “அவசர நிலை” பிறப்பிக்கப் பட்டபோது இந்தியாவில் எடுக்கப்பட்ட முயற் சிகளை கூறலாம். தற்போது இந்தியாவில் இதே முயற்சிகள் முறையாக, அதே நேரத்தில் துரித கதியில் அரங்கேற்றப்படுகின்றன. அத னால் இந்தியப் பொருளாதாரத்தின் இடை வெளியும் மேலும் மேலும் விரிவடைந்து கொண்டே செல்கிறது.

அரசியலமைப்பு ரீதியாக ஜனநாயக உரிமைகளை மக்கள் பெற்று அனுபவிக்க முடியும் என்ற சூழலில், இந்த பெரும் முதலா ளித்துவ சக்திகளால் எப்படி இத்தனை பெரிய ஏற்றத்தாழ்வுகளை, சமத்துவமற்ற நிலையை உருவாக்க முடிகிறது என்ற கேள்வி எழுவது நியாயமானதே. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இதுபோன்று ஜனநாயக உரிமைகளைப் பறிக்க அனுமதிக்கும் நடை முறை உத்திகள் எவை எவை என்ற கேள்வி யும் எழுகிறது.

உரிமைகளைப் பறிக்க முதலாளித்துவத்தின் உத்திகள்

முதலாவது உத்தி, அரசியலமைப்புச் சட் டத்தின்படி நாம் பெற்றுள்ள சில சம்பிரதாய மான ஜனநாயக உரிமைகளை வெட்டிச் சுருக் குவது. உதாரணமாக இந்திரா காந்தி அம்மை யார் அவசர நிலையை பிரகடனப்படுத்திய போது, ஒரு குறுகிய கால கட்டம் வரையில் இந்த முறையில் உண்மையாகவே வெற்றி கண்டார். ஆனால் கடைசியில் அவர் தோல் வியையே தழுவினார் என்பதை நாம் அறி வோம். அதேபோன்று பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட் டணி ஆட்சியில் இருந்தபோது அரசியல மைப்புச் சட்டத்திலேயே சில மாற்றங்களை செய்வதன் மூலம் ஜனநாயக உரிமைகளை வெட்டிக் சுருக்க முயன்று தோற்றுப்போனது. அதேபோன்று அவ்வப்போது சில நீதிபதிகள் தங்கள் பங்கிற்கு சில உத்தரவுகளை போடு கிறார்கள். உதாரணமாக பந்த் நடத்துவதற்கு தடை, வேலை நிறுத்த உரிமை மீது சில கட்டுப்பாடுகள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை போன்றவை இதில் அடங்கும்.

இரண்டாவது உத்தி, வகுப்புவாத அடிப் படையிலான எதேச்சதிகார அரசினை வளர்த்தெடுப்பது. இது காலக்கி கூறியது போல “அடக்கி வைக்கப்பட்டுள்ள வெறி நாய்”க்கு ஒப்பாகும். ஏனென்றால் அது அவிழ்த்துவிடப்படும்போது, மிகப்பெரிய நாசத்தினை நாட்டில் ஏற்படுத்திச் செல்லும். கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கும்போதோ எங்கே அது அவிழ்த்துவிடப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தினை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கும். இதன் காரணமாக வகுப்பு வாத அடிப்படையிலான அரசு அமையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் எழும். அது எங்கே கொண் டுவிடுகிறது என்றால், நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு ஆதரவான ஆட்சியமைப் புடன் ஒத்துப்போகச் செய்துவிடுகிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் காரணமாக வளர்ந்துவரும் வேலையில்லாத் திண்டாட்ட மும், துன்பங்களும் வலதுசாரி அதி தீவிரவாத சக்திகளின் போக்கு வளர ஏதுவான செழிப் பானதொரு தளமாக மாறுகிறது. இது நவீன தாராளமயமாக்கல் இயற்கையாகவே ஏற் படுத்தி வைத்துள்ள நடைமுறை உத்தியாகும்.

மூன்றாவது உத்தி, ஒரு செயலை செய்ய உடன்பாடு இல்லாவிட்டாலும், சம்மதமின் மை இருந்தாலும், அதனை உள்ளீடாக ‘செய்யச் சொல்வது’, செய்ய மறுத்தால் அந்த சம்மதமின்மையையே சட்டத்தை மீறும் செயலாக உருவகம் செய்வது, உதாரணமாக இந்திய பொருளாதார சந்தையை அந்நிய நிதி மூலதனச் சூறாவளிக்குத் திறந்துவிடச் சொல் வது என்பது நவீன தாராளமயமாக்கலுக்கு உத விடும் செயலாகும். இதற்கு மாறாக ஏதேனும் மாற்று கொள்கைகளை செயல்படுத்த முனைந்தால், அந்நிய நிதி மூலதனம் பின் வாங்கி தனது சொந்த நாட்டிற்குச் சென்று விடும். இந்த அபாயத்தின் காரணமாக, அனைத்து அரசியல் அணிகளுமே தங்களு டைய கொள்கை திட்டமிடல்களை அதற் கேற்ற வகையில் திட்டமிடுகின்றன. எந்த ஒரு அணிக்கும் தற்போது நாட்டில் உள்ள ஏற்பாடுகளை தாண்டிச்செல்லும் அரசியல் துணிவு இல்லை. அரசியல் கருத்துக்கும் மேலாக “வளர்ச்சியை பாதுகாப்போம்” என் பது போன்ற முழக்கங்கள்தான் முன்வைக்கப் படுகின்றன. “நாம் அனைவரும் ஒன்றி ணைந்து நவீன தாராளமயத்துக்கு எழுத்துப் பூர்வமாக இசைவோம்” மற்றும் “நிதி மூல தனத்தை பெருக்க உழைப்போம்” என்ற கசப் பான உண்மையை நாசுக்காகச் சொல்வது தானே மேற்கூறிய சொல்லாடல். கொள்கை ரீதியாக இதைத்தானே அனைத்து அரசியல் அணிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இப்படிப் பட்ட கொள்கைகளை “உள்ளடக்கம்” செய்ய மறுத்தால், இந்திய நாடு வல்லரசாக மாறு வதற்குரிய வாய்ப்புகளை நாசம் செய்த குற்றச் சாட்டுக்கு அந்த அணி ஆளாகிவிடும். அத னால் “தேச விரோதச் செயல்” புரிந்ததாகச் சித்தரிக்கப்படும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், கார்ப்பரேட் மீடியாக்களை பயன்படுத்தி, கார்ப்பரேட் மற்றும் நிதி முத லாளிகளின் நலன்களை “தேசத்தின் நலன்” என்று உருவகப்படுத்தி கணக்கிலடங்கா எண்ணிக்கையிலான பிரச்சாரங்கள் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

நான்காவது உத்தி என்பது, போலியாக மத சம்பந்தமான அடிப்படை உணர்வினை கிளப் பிவிட்டு, நவீன தாராளமயமாக்கலுக்கு ஆதர வாக, நவீன தாராளமயமாக்கலுக்கு முந்தைய கால கட்டத்தில் இருந்த சமூகக் கட்டமைப்பு களான “கட்டப் பஞ்சாயத்து(காப்)” போன்ற வற்றை மீண்டும் உயிர்பெறச் செய்வது. “கட்டப் பஞ்சாயத்து” போன்ற அமைப்புகளை முதலா ளித்துவ சக்திகள் மற்றும் முதலாளித்துவ சார்பு அரசியல் அணிகள் தங்களுக்கு சாதக மாகப் பார்க்கின்றன. ஒரு தனி நபர், அவர் ஆணோ, பெண்ணோ தன்னுடைய தனிப் பட்ட வாழ்க்கையில் எந்த மதத்தையும் சார்ந் திருப்பதற்கான உரிமை உள்ளது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால் போலியாக மத உணர்வினை தட்டி யெழுப்பி, மத ரீதியான பழக்க வழக்கங்களி லும், சடங்குகளிலும் அத்துமீறி தீய எண்ணத் துடன் நுழைவது என்பது சாதாரண மக்க ளின் வாழ்க்கையில் தலையிடுவதாகும். இந்த தலையீட்டின் மூலம் மக்களின் ஒற்றுமையை குலைப்பது மற்றும் அவர்களை அரசியல் படுத்துவதில் இருந்து தடுப்பதே நோக்கம்.

பெரும் முதலாளிகளின் திட்டம்

உண்மையில், மக்களை அரசியல் உணர் வற்றவர்களாக்கி, அவர்களது ஒற்றுமையை குலைத்து, அவர்களை முறைப்படி பயிற்சி பெறாதவர்களாக மாற்றி, அவர்கள் இந்த நாட் டின் குடிமக்கள் என்ற பொறுப்பினையே முழு வதுமாக திருடி, தங்களது ஜனநாயக உரிமை களை பாதுகாப்பதில் இருந்து மாறி அவர் களை பலவீனப்படுத்துவது என்பது தான் பெருமுதலாளிகளின் திட்டம். இந்த அத் தனை சீர்குலைவுகளையும் எதிர்ப்பது என்ப தில்தான் இடதுசாரிகளின் ஒப்பற்ற ஈடு இணையற்ற தன்மையே அடங்கியுள்ளது.

உண்மையில் இடதுசாரிகளின் திட்டம், இதற்கு நேரெதிராக மக்களை ஒற்றுமைப் படுத்துவதிலும், அவர்களை அரசியல்படுத் துவதிலும், அதன் மூலமாக அவர்களது ஜன நாயக உரிமைகளை பாதுகாக்க முயல்வதி லும் தான் அடங்கியுள்ளது. மக்களை அரசி யல்படுத்துவதன் மூலம் மட்டுமே அவர்களது ஜனநாயக உரிமைகளை தக்க வைக்க முடி யும் என்று இடதுசாரிகள் நம்புகின்றனர். சுருக் கமாகச் சொல்வதென்றால், இடதுசாரிகள் நமது நாட்டில் நீண்ட நெடிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் உறுதியான, தொடர்ச்சியான பங்களிப்பினை ஆற்றிவந்துள்ளார்கள்; வருகிறார்கள். அதை நோக்கிப் பயணப்படுகிறார்கள்.

இடதுசாரிகளின் சிறப்பு

உண்மையில் இடதுசாரிகள், மக்களு டைய ஜனநாயகப் புரட்சியை அடக்க, நசுக்க நினைக்கும் எதிர்ப்புரட்சியை எதிர்த்து தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். மக்கள் ஜனநாயகப் பரட்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறார்கள். இது ஏதோ இடதுசாரிகளின் “நற்பண்பு” என்பதாலோ அல்லது “நல்ல அம்சம்” என்பதாலோ மட்டு மல்ல; இடதுசாரிகளின் அடிப்படைக் கொள் கை அமைப்பே இதனை முன்னிலைப்படுத் தியதாகும். இதர அனைத்து அரசியல் அணி களும் முதலாளித்துவ எல்லையைத் தாண்டி தங்களுடைய பார்வையை விசாலப் படுத்த தைரியமில்லாதவை. விருப்பமிருந்தா லும், இல்லாவிட்டாலும், பெரும் முதலாளிக ளின் திட்டத்திற்குட்பட்டு சிக்கலான நிலை யை அடைகின்றன. சில நேரங்களில் ஏதோ ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களை எதிர்த்தா லும்கூட, இறுதியில் அவற்றின் எதிர்ப்பென் பது பெரு முதலாளிகளின் அபிவிருத்திக்கு முன்பு பலவீனப்படுத்தப்பட்டு, பின்னர் அவற்றின் பங்கு என்பதே முற்றிலுமாகச் சிதைந்துபோகச் செய்யப்படுகிறது.

இவர்கள் அனைவரிலிருந்தும் வேறுபட் டவர்கள் இடதுசாரிகள். அவர்களால் முதலா ளித்துவ எல்லையைத் தாண்டி தங்களுடைய பார்வையை விசாலப்படுத்த முடியும். அவர் களால் தொடர்ந்து ஜனநாயக ரீதியாக செயல் பட முடியும். ஏனென்றால், நிதிமூலதனத்தால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஏகாதிபத்திய முதலாளித்துவ சக்திகளுக்கும், போலியற்ற உண்மையான ஜனநாயகச் சக்திகளுக்கும் இடையிலான முரண்பாடு மட்டுமல்ல ; முத லாளித்துவத்தைத் தாண்டிச் செல்லும்போது ஏற்படும் முரண்பாட்டினை எதிர்கொள்ளவும் தங்களை தயார்ப்படுத்திக் கொண்டிருப்பதன் காரணமாக இடதுசாரிகளால் தொடர்ச்சியாக ஜனநாயக ரீதியாக நிற்க முடிகிறது; போராட முடிகிறது.

சிற்சில தவறுகள் ஏற்படுகிறபோதிலும், இந்திய நாட்டின் இடதுசாரிகள் தொடர்ந்து ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் விடாமல் பணியாற்றி வருகின் றனர். பழம்பெருமை பேசி பல்லாயிரம் ஆண்டு களாக நமது சமுதாயத்தில் புரையோடிப் போன, கட்டமைக்கப்பட்ட சமத்துவமற்ற சமு தாய நிலையை முறையாக அழித்தொழிப்ப தில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு இருப் பவர்கள் இடதுசாரிகள். சர்வதேச நிதி மூல தனத்தின் மேலாதிக்க நிலைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவர்கள் ; சர்வதேச நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள மிக ஆழமான சமூக ஏற்றத் தாழ்வினை எதிர்த்துப் போராடி வருபவர்கள் ; மதவாத எதேச்சதிகாரத்தை எதிர்த்துப் போராடி வருபவர்கள் இடதுசாரிகள். ‘சட்டம் - ஒழுங்கு’ என்ற பெயரில், “கலவரங்களுக்கு எதிர் நட வடிக்கை” என்ற பெயரில், “வளர்ச்சி” என்ற பெயரில் சாதாரண மக்களின் ஜனநாயக உரி மைகளை நசுக்க முயற்சிக்கும் நடவடிக்கை களை எதிர்த்து இடதுசாரிகள் போராடி வரு கின்றனர். மேலும், அரசியலைப் பயன்படுத்தி மக்களை துண்டாடுவதை எதிர்த்தும், போலியாக மத உணர்வைத் தூண்டிவிட்டு மக்களை பிளவுபடுத்துவதை எதிர்த்தும் இடதுசாரிகள் போராடி வருகிறார்கள்.

எனவே, இடதுசாரிகளை பலவீனப்படுத் தும் எந்தவொரு முயற்சியும் நமது நாட்டின் ஜனநாயகப் புரட்சியை பலவீனப்படுத்துவதா கும். அது, இந்திய தேசத்தின் “நவீனத் துவத்தை” நோக்கிய பயணத்தை பலவீனப் படுத்துவதாகும். “நவீனத்துவத்தை” நோக் கிய இந்தியாவின் பயணத்திற்கு 8,9,10 மற்றும் 11 சதவீத பொருளாதார வளர்ச்சி தேவை யில்லை. மாறாக அதனுடைய தேவை, ஜன நாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல் வதே. இதுதான் தகுந்த உரைகல்லாக முடியும். இந்த உரைகல்லை வைத்துத்தான் அனைத்து அரசியல் அணிகளும் மதிப்பிடப்பட வேண் டும். இந்த அளவுகோலின் அடிப்படையில், இடதுசாரிகள் தங்களுடைய பலவீனங் களைத் தாண்டி, அனைத்து அரசியல் அணி களையும் விட உயர்ந்தவர்களாக எழுச்சி பெற்று நிற்கின்றனர்.

தற்போது இடதுசாரிகளுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடைந்து வேகமாக ஒரு குவி மையத்தில் வளர்ந்து வருகின்றது. அவர் கள் தங்களை “முற்போக்கானவர்கள்” என்று கூறிக்கொண்டு, மேலே கூறப்பட்ட அத் தனை நடைமுறை உத்திகளையும் பயன் படுத்தி, விவாதங்களை முன் வைத்து, இடது சாரிகளை தாக்கி வருகின்றனர். இதைப் பேசும்போது, “சிங்கூர் என்னவாயிற்று” “நந்தி கிராமம் என்னவாயிற்று?” என்று எதிர்கேள்வி கேட்கிறார்கள்.

சிங்கூரைப் பற்றியும், நந்திகிராமத்தைப் பற்றியும் அதிகம் எழுதியாகிவிட்டது.

ஒரு நிகழ்ச்சியின் விளைவாக நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கும், ஜனநாயக உரிமை கள் குறித்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படு வது என்பதற்கும் ஏராளமான வித்தியாசம் உள்ளது. இடதுசாரிகள் ஒரு போதும் தங் களுடைய வர்க்க நிலைப்பாட்டை குறிப்பாக மக்களுடைய ஜனநாயக உரிமைகள் மீதான நிலைப்பாட்டை மாற்றியதில்லை. மாற்றவும் மாட்டார்கள். உண்மையில், இடதுசாரிகள், உரிமைகளை வெட்டிக் குறைக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் எதிராக ஒவ்வொரு நிலையிலும் செயல்பட்டுள்ளனர். (குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் னணி செயல் வீரர்களை கொலைவெறியுடன் மூர்க்கத்தனமாக தாக்கிய மாவோயிஸ்ட்டு களின் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தபோதுகூட, அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்கள் இடதுசாரிகள்).

அதேபோல, மேற்குவங்கத்தின் தேர்த லும் அரசியலும் வன்முறை கலந்தவையா கவே வர்ணிக்கப்படுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசு அங்கு வலுவாகக் காலூன்றி உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான புதிய அணி ஆட்சிபீடத் தில் அமர்வதற்காக, இடதுசாரிகள் அல்லாத பிற கட்சிகள், வாக்கெடுப்பு நடக்கும்போது வன்முறையை நாடுவதன் காரணமாக இப்படி வர்ணிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் திரிணாமுல் தலைமையிலான அணி தன்னை நிலைப்படுத்திக்கொள்ள வாய்ப்பு இல்லாத நிலையில், இடைப்பட்ட காலத்தில் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வது கடினம் என்பதால் வன்முறை யைக் கடைப்பிடிக்கின்றனர்.

மேற்குவங்கத்தில் அதிக அடியாள் பலமும், வன்முறை குணாம்சமும் இடதுசாரி களுக்கு உள்ளதாக பொய்ப்பிரச்சாரம் பரப்பப் படுகிறது. அப்படி இருந்தால், தனது எதிரணி கள் தனது அரணி லேயேகூட அதீதமான ஆக்கிரமிப்பை ஏற்படுத்தியபோதும், வன் முறை பலம் கொண்டு ஏன் இடதுசாரிகள் தடுக்கவில்லை என்பது கேள்வி.

இவையெல்லாம் தற்போதைய தேர்தல் களத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் இந்திய நாட்டில் இடதுசாரிகளின் எதிர்காலத்தின் மீது, இடது சாரிகளின் நடைமுறைகள் மீது, இடது சாரிகளின் நிலைப்பாட்டின் மீது, ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.எனவே, நவீன ஜனநாயக இந்தியா பாதுகாக்கப்பட இடதுசாரிகள் வெல்ல வேண்டும் ; வென்றே தீரவேண்டும்!


ஒரு தத்துவார்த்த கண்ணோட்டம் -பகுதி 2

பிரபாத் பட்நாயக்

பீப்பிள்ஸ் டெமாக்ரசி

தமிழில் : ஆர்.எஸ்.செண்பகம்

இணைச்செயலாளர், நெல்லை கோட்ட காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம்

Monday, March 7, 2011

இந்திய விடுதலைக்கு எழுச்சிமிக்க மக்கள் போராட்டம் ஒன்றே வழி


பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எல்பிஜி என்று அழைக்கப்படும் தாராளமய - தனியார்மய - உலகமயப் பொருளாதாரக் கொள் கைகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது பலரும் தாண்டிக் குதித்தார்கள். இந்தக் கொள்கைகள் இந்தியாவை வல்லரசாக ஆக்கப் போகிறது, அமெரிக்காவிற்கு நிகராக மாற்றப் போகிறது, சீனாவைத் தாண்டி முன்னேறப் போகிறது என்றெல்லாம் தம்பட்டம் அடித்தார்கள். இதை நம்பி சில எதிர்க்கட்சிகளும், சில விவசாய சங்கங்களும், சில தனி நபர்களும் புதிய கொள் கைகளை வாழ்த்தினார்கள், வரவேற்றார்கள். அன்று அநேகமாக இந்தக் கொள்கைகளுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் தான் என்றால் அது மிகையல்ல, உண்மை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தக் கொள்கைகளை எதிர்த்து நிறைவேற்றிய தீர்மானத்தில், இது இந்திய நாட்டில் உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தும், ஏழைகளின் அடிப்படைத் தேவைகளை சீர்குலைக்கும், ஒரு சிலரை மட்டும் கோடீஸ்வரர்களாக்கி, பெரும் பகுதி மக்களை வாழ வழியின்றிச் செய்திடும் என்று விவரமாக எடுத்துக் கூறியது. அன்றைக்கு ப.சிதம்பரம் மற்றும் காங் கிரஸ் கட்சித் தலைவர்கள் ‘‘இந்தக் கொள் கைகள் இந்தியாவைப் பளபளப்பாக ஒளிரச் செய்யப் போகிறது, விரைவில் ஒளிரும் இந் தியாவைப் பார்ப்பீர்கள்’’ என்றார்கள். ஆனால் ஒளிரும் இந்தியாவிற்குப் பதிலாக நாட்டு மக்களில் பெரும்பகுதியினர் பட்டினி கிடக் கும் இந்தியாவை இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அன்று நமது நிலைபாட் டைக் கேலி செய்து ப.சிதம்பரம் அளித்த பேட்டி என்ன தெரியுமா? ‘‘கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் பழைய காலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்குப் புதிய நிலைமை என்ன வென்று தெரியாது. விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பைகளிலும் ஏராளமான காசை இந்தக் கொள்கைகள் கொண்டு வந்து சேர்க்கப் போகின்றன. ஆகவே அவர்கள் அந்தக் காசைக் கொண்டு அரிசி உட்பட எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள லாம். அவர்கள் பட்டினிக் கிடந்து பதற வேண் டிய அவசியம் இல்லை. கம்யூனிஸ்ட்டுகள் தேவையின்றிக் கவலைப்பட வேண்டாம்,’’ என்றார்.

இன்று பதினைந்து ஆண்டு காலத்திற்குப் பிறகு, ஆட்சியாளர்கள் பின்பற்றிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் யாரை வாழ வைத்திருக்கின்றன, யாருடைய வாழ்வை அழித்திருக்கின்றன என்பதைச் சற்று விவரமாகத் தெரிந்து கொள்வது நல்லது.

ஒவ்வொரு நிறுவனமும் சொத்து மதிப்பு (ரூபாய்- கோடிகளில்) 1990இலும் 2009இலும் பின்வருமாறு:

நிறுவனம் 1996 2009

1. அம்பானி 3241 4,25,187

2. டாடா 6851 2,30,827

3. ஜிண்டால்ஸ் - 56,937

4. எல் & டி 1130 44,544

5. மஹிந்த்ரா 620 38,363

6. ஜெயப்பிரகாஷ் 484 25,202

7. டிவிஎஸ் 929 21,267

8. பஜாஜ் 1228 28,521

கடந்த பதினைந்து ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்துக்கள் 60 மடங்கு அதிகரித்திருக்கின்றன. ஒருசில கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்துக்கள் 100 மடங்கிற்குக்கூட அதிகரித்துள்ளன. தமிழ கத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விவ காரத்தில் சம்பந்தப்பட்ட ஆ.ராசா மற்றும் கலைஞர் குடும்பச் சொத்துக்களும் ஏறத்தாழ இதே அளவு உயர்ந்திருப்பதையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இப்படி நாட்டின் செல்வத்தை விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் கவர்ந்து சென்றுள்ளனர். வேண்டியவர்களுக்கு சலுகை செய்யும் முதலாளித்துவம் என்று இதைத்தான் அழைக்கிறார்கள்.

நவீன தாராளமயக் கொள்கைகளால் இந் தியா ஒளிரும் என்றார்கள். ஆனால் அவர்கள் கூறியதுபோல் இந்தியா ஒளிர்வதற்குப் பதி லாக, ஒழிந்துகொண்டு, அழிந்துகொண்டுதான் இருக்கிறது.

நாடு முழுவதும் 1 லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள் ளார்கள். ஒரு நாளைக்கு 50 பேர், 30 நிமிடங் களுக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள் கிறார் என்ற முறையில் தற்கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதற்குக் காரணம் என்னவென்று பரிசீ லிக்கும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் இடதுசாரிக் கட்சிகளும் மூன்று முக்கிய காரணங்களைக் கூறுகின்றன.

முதலாவதாக, அரசு, வேளாண் இடு பொருட்களுக்கு அளித்து வந்த மானியங் களை வெட்டிக் குறைத்தது. அதன்மூலம் உரம் மற்றும் பூச்சி மருந்துகளுக்கான செலவினங் கள், போக்குவரத்துக் கட்டணங்கள் ஆகி யவை உயர்ந்தன, உயர்ந்துகொண்டே இருக் கின்றன. உர மானியம் சென்ற ஆண்டு செல வினத்தைவிட 3 ஆயிரம் கோடி ரூபாய் வெட் டப்பட்டிருக்கிறது. யூரியா விலை 10 விழுக் காடு உயர்ந்திருக்கிறது. உரம் உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படி யாக மூடப்பட்டு வருகின்றன. உரம் விலை தொடர்பாக இருந்து வந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் கைவிடவும் அரசு தீர்மானித் திருக்கிறது. விரைவில் விவசாயிகள் முழுமை யாக ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங் களின் தயவில் உரங்களை, அவர்கள் நிச்ச யிக்கும் விலைக்கு வாங்க வேண்டிய கட் டாயத்திற்குத் தள்ளப்பட இருக்கிறார்கள்.

விவசாய இடுபொருட்களின் விலை களை இனி அரசு நிர்ணயிக்காது. மாறாக, இவற்றை சந்தை சக்திகள் (ஆயசமநவ குடிசஉநள) நிர்ணயிக்கும் என்று அரசு கூறுகிறது. இதன் பொருளைப் புரிந்துகொள்வது எளிது. அதா வது இனி வேளாண் இடு பொருட்களின் விலைகள் அரசின் கட்டுப்பாட்டில் இருக் காது, அரசு அவற்றின் விலைகளை நிர்ணயிக் காது. மாறாக, இவற்றை ஏகாதிபத்திய கார்ப் பரேட் நிறுவனங்கள்தான் நிர்ணயம் செய்தி டும். இவ்வாறு மான்சாண்டோ போன்ற நிறு வனங்களின் தயவில் விவசாயிகளைத் தள் ளிவிட அரசு முடிவு செய்துள்ளது.

இரண்டாவதாக, விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவு தானியங்களின் விலைகள் குறைந்துகொண்டே போகின்றன.

மூன்றாவதாக, வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு அளித்து வந்த கடன் வசதிகள் குறைந்தன. நாட்டில் 62 சதவீதம் பேர் ஏழை விவசாயிகள். இவர்க ளுக்கு அரசு நிதி நிறுவனங்கள் மூலமாகக் கடன் பெறும் வசதி கிடையாது. அரசாங்கமும் பொது முதலீட்டை அதிகப்படுத்தி, அவர் களுக்கு உதவ முன்வரவில்லை. இதன் காரணமாக விவசாயிகள், தனியார் கந்து வட்டிக்காரர்களைச் சார்ந்து நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவர்களது கடன் வலையில் வீழ்ந்த விவசாயிகள் மீள்வது என்பது அவ்வளவு எளிதல்ல. அநேகமாக அதில் சிக்கியவர்களில் பெரும் பகுதியினர் தற்கொலைப்பாதையைத்தான் தேடிச் சென்றிருக்கிறார்கள்.

விவசாயிகளில் பெரும்பகுதியினர் தங்கள் நிலங்களை விற்றுவிட்டு, விவசாயத் தொழி லாளர்களாக மாறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சமீபத்திய ஆய்வின்படி 50 விழுக்காட்டிற்கும் மேலான சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் விவசாயத்தைத் தொடர ஆர்வம் காட்ட வில்லை. கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வோ ராண்டும் 33 லட்சம் விவசாயிகள் இவ்வாறு நிலத்தை விட்டு வெளியேறிக் கொண்டி ருக்கிறார்கள்.

இந்த மூன்றும்தான் அடிப்படைக் கார ணங்கள் என்று இடதுசாரிகள் மட்டுமல்ல, அரசு நிர்ணயித்த எம்.எஸ்.சுவாமிநாதன் தலை மையிலான விவசாயிகளுக்கான தேசிய ஆணையமும் தெரிவித்துள்ள உண்மையா கும். இப்போது சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் உட்பட விவசாயிகளின் அடிப்படைப் பிரச்ச னைகளுக்குத் தீர்வு காண எந்த ஆலோச னையையும் அளித்திடவில்லை. மாறாக விவசாயிகளையும், கிராமங்களையும் வெளி நாட்டு முதலாளிகள் கையிலே ஒப்படைத்து, நடைபெறும் தற்கொலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

விவசாயத் தொழிலாளர்கள் வேலையில் லாததால் கிராமங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதனைத் தடுத்திட ஐ.மு. கூட்டணி-1 ஆட்சிக்காலத்தில் இடதுசாரி களின் நிர்ப்பந்தத்தின்பேரில் தேசிய கிரா மப்புற வேலைவாய்ப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்மூலம் கிராமப்புற விவசா யத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சம் ஆண்டுக்கு நூறு நாள் வேலையாவது அளிக் கப்பட்டது. ஆனால் இப்போது என்ன நிலை மை? பட்டினி கிடந்து வந்த விவசாயிகளுக்கு சற்றே பசியாற்றி வந்த தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் இன்றைய தினம் பல இடங்களில் கொள்ளையடிப்பவர்களின் கூடாரங்களாக மாறிப்போயிருக்கின்றன.

நாட்டின் இறையாண்மையே கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கிறது. நாடும் நாட்டு மக்களும் தங்கத் தட்டில் வைக்கப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு விருந்தாக்கப் பட்டு வருகிறார்கள். பட்ஜெட்டில் கூட பன் னாட்டு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஐந்து லட்சம் கோடி ரூபாய் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இவ் வாறு காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐ.மு. கூட்டணி-2 அரசாங்கம் பன்னாட்டு நிறுவ னங்களுக்குச் சேவை செய்யும் அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

20.8 லட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணமாக உலா வருகிறது என்பது சமீபத்திய செய்தி. இதில் உள்நாட்டில் உலாவும் கறுப்புப் பணம் கணக்கில் சேராது.

இவ்வாறு ஆட்சியாளர்கள் நாட்டை பன் னாட்டு நிறுவனங்களிடம் முழுமையாக ஒப் படைப்பதற்கு முன்னர், இவர்களை அதிகாரத் திலிருந்து விரட்ட வேண்டிய அவசியம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு துனீசியா, எகிப்து, லிபியா போன்று எழுச்சி மிக்க மக்கள் போராட்டம் ஒன்றே வழியாகும்.

கே.வரதராசன்

Monday, February 28, 2011

லிபியாவுமா? பிடல் காஸ்ட்ரோ எச்சரிக்கை


உலகின் மத்திய கிழக்குப் பிரதேசத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதன் நேட்டோ ராணுவக் கூட்டாளி களும் இணைந்து செயல்படுத்திய அராஜக அரசியல் இன்றைக்கு கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இது கிட்டத்தட்ட அனைத்து அரபு நாடுகளிலும் உணவு தானிய விலையை பல மடங்கு கடுமையாக உயர்த்தியுள்ளது. இந்த நாடுகளில் மிகப் பெருமளவு எண்ணெய் வளம் குவிந் திருக்கும்போதிலும் கூட மக்கள் குடிநீருக்கு தவிக் கிறார்கள்; பெருவாரியான மக்களுக்கு வறுமை வாரி வழங்கப்பட்டுள்ளது; எண்ணெய் வியாபாரம் மூலம் கிடைக் கும் மிகப் பெரும் சொத்துக்கள் எல்லாம் குறிப்பிட்ட பிரி வினரின் கைகளுக்கு சென்றடைந்துள்ளது.

உணவுப் பொருட்களின் விலைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ரியல்எஸ்டேட் அதிபர்களும், மன்னர் குடும்பங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட சிறு எண்ணிக் கையிலான நபர்களும், கோடிக்கணக்கான பில்லியன் டாலர்களை கொண்டிருக்கிற செல்வந்தர்களாக வலம் வருகிறார்கள்.

தங்களது அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய வக்கில்லாத அரசுகள் ஏவுகிற கடுமையான அடக்குமுறையால், இஸ்லாமிய கலாச்சாரமும், நம்பிக்கையும் மிகுந்த மக்களை கொண்ட அரபு உலகம் கொந்தளித்துப் போயிருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் உருவான இந்த அரசுகள் காலனிய ஆதிக்க கட்டமைப்பையே ஆட்சி முறையாக பாவித்து அதிகாரம் செலுத்தி வருகின்றன.

கேம்ப் டேவிட் ராணுவத் தளத்தில் அமெரிக்காவோடு கைகோர்த்துக் கொண்டு அரபு உலகத்திற்கு துரோகம்செய்த ஹோஸ்னி முபாரக்கை பார்த்தோம். 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந் தங்கள் அமலில் இருக்கும் போதிலும் கூட இன்று வரை யிலும் பாலஸ்தீன அரபு அரசு உருவாக முடிய வில்லை; இஸ்ரேல் என்பது, அமெரிக்கா மற்றும் நேட்டோ ராணுவக் கூட்டமைப்பின் ஒரு சக்தி மிக்க அணு ஆயுத கூட்டாளி நாடாக இணைந்து நிற்பதையும் பார்க்கிறோம். அமெரிக்கா வின் இத்தகைய ராணுவ - தொழில் கூட்டணி, ஒவ்வொரு ஆண்டும் இஸ்ரேலுக்கும், இதர பல அரபு நாடுகளுக்கும் ஆயிரக்கணக்கான பில்லியன் டாலர்களை அள்ளி வழங்கி வருகிறது; பகைமையையும், வெறுப்பையும் ஏற்றுமதி செய்கிறது.

இப்போது எரிமலை வெடித்துக் கிளம்பியுள்ளது. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்பது நேட்டோவுக்கு தெரிய வில்லை. லிபியாவில் நடக்கும் கண்டனத்திற்குரிய சம்ப வங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இவர்கள் முயற்சிக்கிறார்கள். லிபியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் வாய்ப்பில் இன்றைக்கு யாரும் இல்லை. ஆனால், அமெரிக்க பேரரசு தனது உலகளாவிய ஊடக பலத்தின்மூலம், பெரும்பாலும் பொருத்தமில்லாத தகவல்களை மிகத் தீவிரமாக பரப்பி வருகிறது. வன்முறை, பதட்டம் குறித்த அனைத்து தகவல் களும், செய்திகளும் பொருத்தமற்றவையாக முன்வைக்கப் படுகின்றன. தவறான தகவல்கள் ஊதப்படுகின்றன.

லிபியாவில் ஒரு உள்நாட்டுப்போர் நடந்துகொண்டிருக் கிறது என்பது தெரிகிறது. இது எப்படி, ஏன் ஏற்பட்டது? இத னால் ஏற்படும் பின்விளைவுகளால் பாதிக்கப்படப் போவது யார்?

ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் மீண்டும் மீண்டும் சொல்கிறது: “லிபியாவும், அல்ஜீரியாவும் எண்ணெய் உற்பத்தியை முடக்கிவிட்டால் விலைகள் பேரல் ஒன்றுக்கு 220 டாலரை தாண்டிவிடும்; ஓபெக் அமைப்பின் பெட்ரோலிய உற்பத்தி திறன் கணிசமாக குறைந்து விடும்; இது படிப்படியாக விலையை மேலும் அதிகரிக்கும்”.

இன்றைய தினத்தில் இவ்வளவு பெரும் விலையை யார் கொடுக்கப் போகிறார்கள். உணவு நெருக்கடியின் மீது இது ஏற்படுத்தப்போகும் தொடர் விளைவுகள் எப்படி இருக்கும்?

நேட்டோ ராணுவக் கூட்டமைப்பின் முக்கியமான தலைவர்கள் இப்போது புலம்புகிறார்கள். அரபு உலகில் ஜனநாயகமற்ற அரசாங்கங்களுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் மேற்கத்திய நாடுகள் தவறு செய்துவிட்டன என்று குவைத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் பேசியிருக்கிறார். பளிச்சென்று ஒப்புக் கொண்ட தற்கு அவரை பாராட்ட வேண்டும். லிபியாவில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் ரத்தம் தோய்ந்த ஒடுக்குமுறை தொடர அனுமதிக்க முடியாது என்று பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸியும், திரிபோலியில் சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்டுவிட்டதாக வந்துள்ள செய்தி “நம்பும்படியாக” இருக்கிறது என்று இத்தாலிய வெளியுறவுத் துறை அமைச் சர் பிராங்கோ பிராட்டினியும் கூறியுள்ளனர். ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ - மூன், சர்வதேச சமூகம் என்ன தீர்மா னிக்கிறதோ அதை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் செயல் படுத்தும் என்று கூறியிருக்கிறார். உண்மையில் பான் கீ - மூன், பாரக் ஒபாமாவின் வார்த்தைகளுக்காகவே இவ்வளவு நேரம் காத்திருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி, கடந்த புதனன்று ஒரு தகவலை வெளியிட்டார். லிபியாவில் என்ன செய்வது என்பது குறித்து நேட்டோ ராணுவக் கூட்டமைப்பின் கூட்டாளிகளோடு பேசுவதற்காக வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண் டன் ஐரோப்பாவுக்கு செல்வார் என்பதே அந்த தகவல்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்காக வலதுசாரி குடியரசுக் கட்சியின் தலைவர் ஜான் மெக்கெயின், இஸ்ரேலுக்கு ஆத ரவான அமெரிக்க செனட் உறுப்பினர் ஜோசப் லிபர்மான் போன்றவர்களிடமெல்லாம் மேற்கண்ட பிரச்சனைக்கு ஒப்புதல்வாங்கிவிட்டார் ஒபாமா.

அமெரிக்காவின் திட்டத்திற்கு ஏற்ப சர்வதேச அரங்கின் மனநிலையை தனது மிகப் பெரும் ஊடக பலத்தின் மூலம் இந்தப் பேரரசு தயார்ப்படுத்திவிட்டது. இனி லிபியாவில் ராணுவத் தாக்குதல் நடத்துவது மட்டுமே பாக்கி. திட்ட மிட்டப்படி கடாபியின் ஆட்சியோ அல்லது உயிரோ பறிக்கப் படாமல் சம்பவங்கள் நீடித்தால் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேரல் எண்ணெய்க்கும், ஐரோப்பிய கூட்டாளிகள் மூலம் பேரரசு உத்தரவாதப்படுத்திக் கொண்டுவிட்டது.

எந்த சம்பவம் நடந்தாலும் அதில் ஒபாமாவின் பங்கு முக்கியமானது. லிபிய தேசத்தில் இப்படியொரு தாக்குதல் நடந்து மிக அதிக ரத்தம் சிந்தப்பட்டால் அரபு மற்றும் இஸ் லாமிய உலகின் பதில் என்னவாக இருக்கும்? எகிப்தில் முபாரக் ஆட்சியை வீழ்த்திய மகத்தான கிளர்ச்சி, லிபியா வில் நேட்டோவின் தாக்குதலை தடுத்து நிறுத்திவிடுமா? தவறான காரணங்களை முன்வைத்து இராக்கிற்குள் இவர்களது படை நுழைந்தபோது 10 லட்சத்திற்கும் மேற் பட்ட அரேபிய குடிமக்களின் அப்பாவி உயிர்கள் பறிக்கப் பட்டன. திட்டம் வெற்றியடைந்தது. ஜார்ஜ் டபிள்யு புஷ்சும் வெற்றி பெற்றார்.

இராக்கைப் போல, லிபியாவுமா?

பிடல் காஸ்ட்ரோ
(கிராண்மா, பிப்.27)

தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்

Wednesday, February 9, 2011

கொந்தளிக்கும் உலகம்




உலகமய பொருளாதாரக் கொள்கை உலக அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டபிறகு நாடு களுக்கு இடையிலான பொருளாதார இடை வெளி அதிகரித்து வருகிறது. அத்துடன் ஒவ்வொரு நாட்டின் மக்களுக்கு இடையிலான இடைவெளியும் அதிகரித்து வருகிறது. இதன் விளைவுகளை பல்வேறு நாடுகள் சந்திக்கத் துவங்கியுள்ளன.

உலக வங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தக அமைப்பு போன்ற ஏகாதிபத்திய நிழல் நிறுவனங்கள் தாராளமய பொருளாதாரக் கொள்கையை வளர்முக நாடுகளின் மீது திணித்து வருகின்றன. இந்தக்கொள்கை முதலாளித்துவச் சுரண்டலின் செயல்வடிவமாக உள்ளது. முதலாளிகளின் லாபத்தைப் பற்றி மட்டுமே தாராளமய, தனியார்மயக் கொள்கை கவலைப்படுகிறது. பெரும்பகுதி உழைக்கும் மக்களைப் பற்றியோ, அவர்களது வாழ்க்கைத்தரம் பற்றியோ இந்த கொள்கையை செயல்படுத்துபவர்களுக்கு கவலை இல்லை.

விவசாயத்துறை கார்ப்பரேட்மயமாக்கப்பட்டு வருகிறது. உழவர்களின் பாரம்பரிய உரி மையான விதை உரிமை கூட பன்னாட்டு நிறு வனங்களின் வசமாகிவிட்டது. உரம், பூச்சி மருந்து போன்ற இடுபொருட்களும் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்தே உள்ளது. உணவுதா னிய உற்பத்தி புறக்கணிக்கப்பட்டு ஏற்றுமதி சார்ந்த பணப்பயிர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனால் உலக அளவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை, குறிப்பாக உணவுதானியப் பொருட்களின் விலை கடு மையாக உயர்ந்துள்ளது.

விலைவாசி உயர்வால் உலக அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றும் பல்வேறு நாடுகளில் பட்டினிப்புரட்சி நடைபெறும் நிலை உள்ளது என்றும் ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு கூறியுள்ளது. சர்வதேச அளவில் கடந்த 20 ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந் துள்ளது. 2008ம் ஆண்டில் 200 புள்ளியாக இருந்த உணவுப்பொருள்விலை குறியீடு, 2010ல் 231 புள்ளிகளாக அதிகரித்துள்ளது என்று அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

டுனீசியாவில் அரசுக்கு எதிராக வெடித்த கிளர்ச்சிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று விலைவாசி உயர்வு. எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தொடர்ச்சியாக வெடித்துவரும் மக்களின் கோபாவேச போராட்டங்களுக்கு விலைவாசி உயர்வும் பிரதான காரணங்களில் ஒன்றாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.

மக்களை ஆடு மாடுகள் போல நினைத்துக் கொண்டு, அவர்களது வயிற்றைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் முதலாளிகளின் மூலதனத் தொப்பையைப் பற்றியே ஆட்சியாளர்கள் கவலைப்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு எகிப்து உதாரணமாக உள்ளது.

தாராளமய பொருளாதாரக்கொள்கையின் மீது தாளாத காதல் கொண்டுள்ள இந்திய ஆட்சி யாளர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையாகும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காமல், எங்களிடம் மந்திரக் கோலா இருக்கிறது என மத்திய ஆட்சியாளர்கள் எகத்தாளம் பேசி வருகின்றனர்.

மக்கள் சக்தி எனும் மந்திரக்கோல் மகத்தான மாற்றங்களை உருவாக்கியுள்ளது என்பதுதான் வரலாறு என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

Saturday, January 29, 2011

நம்பிக்கை ஒளியேற்றும் போராட்டத் தீ



துனீசியா என்ற வார்த்தை ஆப்பிரிக்க மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அந்நாட்டு மக்கள் தங்களை வதைத்துக் கொண்டிருந்த அரசை வெளியேற்றியுள்ளனர். மக்களின் இந்த வெற்றி ஆப்பிரிக்காவில் உள்ள மற்ற நாடுகளுக் கும் பரவி வருவதால் பல ஆட்சியாளர்களுக்கு கிலி பிடித்துள்ளது. எகிப்து மற்றும் ஏமன் நாடு களிலும் கொள்கை மாற்றத்தோடு கூடிய மாற்று தேவை என்ற முழக்கங்களோடு லட்சக்கணக் கானோர் வீதிகளில் வலம் வந்து கொண்டிருக் கிறார்கள்.

1987 ஆம் ஆண்டில் பிரதமராக அபேதின் பென் அலி பொறுப்பேற்றார். ஒரே மாதத்தில் ஜனா திபதியாக இருந்த ஹபீப் போர்கிபாவை அப் பதவியிலிருந்து தூக்கிவிட்டு ஆட்சியைக் கைப் பற்றினார். அதன்பிறகு “மக்கள்” ஆதரவோடு தொடர்ந்து பதவியில் நீடித்தார். 1994 ஆம் ஆண்டு தேர்தலில் 100 விழுக்காடு வாக்குகளும், 1999 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 99.4 விழுக்காடு வாக்குகளும் அவருக்கு விழுந்ததாக அறிவிக்கப் பட்டது. தங்களுக்கு ஒரு எடுபிடி கிடைத்துவிட் டார் என்ற மகிழ்ச்சியில் அமெரிக்க நிர்வாகமும் ஆமாம் என்று தலையாட்டியது.

மிகவும் அடக்குமுறையைக் கையாண்ட அரசுகளைப் பட்டியலிட்டால் அபேதின் பென் அலி தலைமையிலான துனீசியா அரசு முதலிடத் திற்குப் போட்டியிடும் என்று ‘தி எகனாமிஸ்ட்’ நாளிதழ் கடந்த ஆண்டு நிறைவில் விமர்சனம் செய்திருந்தது. வேலையின்மை, வறுமை, வெட்க மற்ற முறையில் சுரண்டல், ஊழல், அநீதி மற்றும் கொடுங்கோல் சட்டம் என்பதுதான் இந்த அர சின் வேதனைப் பட்டியலாகும். மக்களின் எதிர்ப்புகள் அடக்கி ஒடுக்கப்பட்டன. தொழிலா ளர்களுக்கு தலைமை தாங்கிய தொழிலாளர், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது.

சாலையில் காய்கறி விற்று தனது வயிற்றைக் கழுவி வந்த முகமது பவுவாசிசி என்ற இளை ஞனை, உரிமம் இன்றி காய்கறி விற்றதாகச் சொல்லி காய்கறிகளை காவல்துறை பறிமுதல் செய்தது. தனது எதிர்ப்பைக் காட்ட விரும்பிய அந்த இளைஞன், உடலில் தீயைப் பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டார். அந்தத் தீ மக் களின் ஆவேசத்தீயாக மாறியது. அந்த இளை ஞன் வாழ்ந்து வந்த சிடி பவுஜித் என்ற நகரத் தைப் பற்றிக்கொண்ட தீ, துனீசியா முழுவதும் பர வியது. டிசம்பர் 17 ஆம் தேதி முகமது பற்ற வைத்த தீ, ஜனவரி 14 ஆம் தேதியன்று ஜனாதிபதியின் நாற்காலியைப் பதம் பார்த்தது. கொடுங்கோலாட்சி செய்த பென் அலி நாட்டை விட்டு ஓடினார்.

முகமது தற்கொலை, நாட்டில் நிலவும் வறுமை மற்றும் வேலையின்மையை படம் போட்டுக் காட்டுகிறது. அரசை எதிர்த்து ஏற்பட்டுள்ள கிளர்ச்சியைச் சிலர் புரட்சி என்கிறார்கள். எகிப்து, ஏமன் என்று போராட்டத்தீ பரவியுள்ளதைப் பார்த்து அமெரிக்காவும், இஸ்ரேலும் சுட்டுத்தள்ளுங்கள் என்று அரற்றுகின்றன. தன்னெழுச்சியாகக் கிளம்பியுள்ள இந்தப் போராட்டங்களை வழிநடத்த சரியான தலைமை மற்றும் தத்துவம் இல்லையென்பது இடதுசாரி ஆய்வாளர்களின் அக்கறை கலந்த கவலையாக இருக்கிறது. இத்தனைக்கும் நடுவில் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கே ஒளியேற்றும் விளக்காக இந்தப் போராட்டத்தீ மாறலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அந்த நம்பிக்கையை எகிப்து, ஏமன் போராட்டங்கள் உருவாக்கியுள்ளன

Friday, December 10, 2010

"ஜனநாயக சமூகத்தின் தேவை" விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே!


ஒரு புதிய வகை இதழியலை விக்கி லீக்ஸ் முன்வைத்துள்ளது. விஞ்ஞான  இதழியல் என்பதுதான் அது. மற்ற ஊடக அமைப்புகளோடு இணைந்து செய்தி களை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் நாங்கள் பணியாற்றுகிறோம். அதேவேளையில், அது உண்மையான செய்திதான் என்பதையும் நாங்கள் நிலை நிறுத்துகிறோம். செய்தியை நீங்கள் படிப்பதற்கு விஞ்ஞான இதழியல் அனுமதிப்பதோடு, இணையத்திலேயே ‘கிளிக்’ செய்து அசல் ஆவணத்தையும் பார்த்துக் கொள்ள முடிகிறது.

Thursday, December 9, 2010

வேட்டையாடப்படுகிறது விக்கிலீக்ஸ்!





“அன்டா கா கசம் அபு கா ஹுக்கும் திறந்திடு சீசேம்! ” என்றெல்லாம் உச்சரிக்காமலேயே அமெரிக்காவின் ரகசிய மோசடி ஆவணங்களை வெளியில் கொண்டு வந்த விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறு
வனர் ஜூலியன் அசாங்கே கைது செய்யப்பட்டுள்ளார்.

Wednesday, November 10, 2010

யார் ஏகாதிபத்தியம்? - தினமணி தலையங்கத்திற்கு விமர்சனம்



அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் இந்திய வருகையை வரவேற்று தினமணி நாளேட்டில் திங்கட்கிழமை 8ம் தேதி தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. இதற்காக உலக நாடுகளிடையே வெளியுறவுத் துறையில் அண்மைக் காலமாக ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும், இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.

Tuesday, November 9, 2010

ஒபாமா வருகை: சொந்த செலவில் சூனியம் !

இந்தியா வந்த ஒபாமாவுக்கு முழு அரசு மரியாதையுடன் கூடிய சிவப்பு கம்பள வர வேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட இந்த வரவேற்புரை தொடர்ந்து ஒபாமா, பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Monday, November 8, 2010

ஒபாமாவின் கொள்கைகளை எதிர்ப்பது ஏன்?



அமெரிக்காவின் 44வது அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வந்துள்ளார். உலகின் அதி காரம் வாய்ந்த பதவி என்று கருதப்படும் இந்த பதவிக்கு ஆப்பிரிக்கர் - அமெரிக்கரான கறுப் பினத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா தேர்வு செய் யப்பட்ட பிறகு அவர் இந்தியா வருவது இது முதன்முறையாகும்.

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)