Thursday, December 9, 2010

வேட்டையாடப்படுகிறது விக்கிலீக்ஸ்!





“அன்டா கா கசம் அபு கா ஹுக்கும் திறந்திடு சீசேம்! ” என்றெல்லாம் உச்சரிக்காமலேயே அமெரிக்காவின் ரகசிய மோசடி ஆவணங்களை வெளியில் கொண்டு வந்த விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறு
வனர் ஜூலியன் அசாங்கே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பல நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளில் அடைக்கலம் புகும் நாடுகளைப் பட்டியலிட்டால் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் பிரிட்டனும்தான் இருக்கும். அவர்களையெல்லாம் பாதுகாக்கும் வேலையைத்தான் அரசுகள் செய்யும். “தங்கள் சதி வேலையை அம்பலப்படுத்திவிட்டார் என்பதற்காக ஜூலியன் அசாங்கேயை முடக்கவே அவசர, அவசரமாகக் கைது செய்திருக்கிறார்கள்” என்று விக்கிலீக்ஸ் இணையதள அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள்.

ஸ்வீடனில் ஆகஸ்டு மாதம் 11 ஆம் தேதியன்று ஒரு கருத்தரங்கத்தில் அசாங்கே கலந்து கொண்டார். அதற்காக ஸ்டாக்ஹோம் நகரில் தங்கியிருந்த அவர் இரண்டு முறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார் என்று ஸ்வீடன் காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அந்தப் பெண்கள் அவர்களாகவேதான் அசாங்கேவைச் சந்தித்தனர் என்பதையும் காவல்துறையே கூறியுள்ளது. பலாத்காரம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று அசாங்கேயின் தரப்பிலிருந்து கூறுகிறார்கள். நான்கு ஆண்டுகள் வரை அவரைச் சிறையில் தள்ளுவதற்கான ஏற்பாடுகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்கால வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் குறித்து ஏராளமான ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு வருகிறது. இதில் தெரிந்த இராக்கியப் பொதுமக்களை அமெரிக்க ராணுவம் கொன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ மிகவும் பரபரப்பாக்கியது. இதுதான் அமெரிக்காவின் கோபத்திற்கு இட்டுச் சென்று ஸ்வீடன் மற்றும் பிரிட்டன் நாடுகளில் அசாங்கேயை வேட்டையாடும் நிலைமை உருவானது. கைது செய்தி வெளியானவுடன் அவரது சொந்த நாடான ஆஸ்திரேலியாவில் கடும் கோபத்தைக் கிளப்பியுள்ளது. தி ஆஸ்திரேலியன் என்ற பத்திரிகையில் வாசகர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்கள்.

ஜூலியன் அசாங்கே ஆஸ்திரேலியாவின் கதாநாயகன். ஒரு ஊடகம் எதைச் செய்ய வேண்டுமோ அதைத்தான் அவர் இவ்வளவு காலமாகச் செய்து வந்தார். ஊழல்வாதிகள் மற்றும் பொய்யர்களை அவர் அம்பலப்படுத்தினார். 2000த்தின் துவக்கத்தில் விக்கிலீக்ஸ் இருந்திருந்தால் உளவுத்துறை தகவல்கள் என்ற பெயரில் அமெரிக்கா நடத்திய நாடகங்கள் அம்பலமாகியிருக்கும் என்கிறார் கிரிஸ் என்ற வாசகர். அமெரிக்க மக்களிடம் விக்கிலீக்சுக்கு பெரும் வரவேற்பு இருந்தது என்று அசாங்கே குறிப்பிட்டிருந்தார். இதுதான் அமெரிக்க அரசுக்குக் கோபம் வந்ததற்குக் காரணம் என்று வாசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

பிரிட்டனின் எதிர்க்கட்சிகள் அந்நாட்டு அரசைக் குறை கூறியுள்ளார்கள். ஆஸ்திரேலியக் குடிமகனான அசாங்கே, கைது செய்யப்படுமளவுக்கு எந்த ஆஸ்திரேலியச் சட்டங்களை மீறியுள்ளார் என்ற கேள்விகளை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்புகிறார்கள். கைது நியாயமற்றது என்றும், அவருக்கான பிணைத்தொகையைக் கட்ட தயார் என்று பிரிட்டனைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கூறியுள்ளனர்.

“விக்கிலீக்ஸ் இணையதளம் பல்வேறு தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது. இதற்கான நோக்கம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவை வெளியிடும் ஆவணங்களை சந்தேகிக்க முடியாது. ஏகாதிபத்தியத்தின் பெரிய, பெரிய முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.” என்று விக்கிலீக்ஸ் பற்றி பிடல் காஸ்ட்ரோ கருத்து தெரிவித்துள்ளார்.

“விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே கைது செய்யப்பட்டார் என்பதைக் கேள்விப்பட்டவுடன் அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் மகிழ்ச்சி தெரிவித்தார். இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு நிதியுதவி செய்து வந்த ஜெர்மனி நிறுவனம் ஒன்றை குறிவைத்துள்ளார்கள். கணக்குகளை ஒப்படையுங்கள் என்று ஜெர்மனியின் அரசு மூலம் நெருக்கடி தருகிறார்கள். சுவிட்சர்லாந்தில் விக்கிலீக்சின் வங்கிக்கணக்கு மூடப்பட்டுள்ளது. ஆன்லைனில் பணம் செலுத்தும் பே பால் மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை மூலமாக விக்கிலீக்ஸ் கணக்கிற்கு பணம் செலுத்துவதற்கு தடை விதித்துள்ளார்கள்.

நெருக்கடிகள் சூழ்ந்தபோதும் விக்கிலீக்ஸ் தங்கள் நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறார்கள். “எங்கள் முதன்மை ஆசிரியர் ஜூலியன் அசாங்கேயைக் கைது செய்திருந்தாலும் செயல்பாடுகள் பாதிக்கப்படாது. தொடர்ந்து பல்வேறு ரகசிய செய்திகளை எங்கள் இணையதளத்தில் வெளியிடுவோம்” என தெரிவித்துள்ளனர்.

விக்கிலீக்ஸ் வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ள விவகாரங்கள் குறித்து  பேச நேர்மையற்றவர்கள், உண்மைகளைப் பேசுகிறவர்களை வேட்டையாடுகிறார்கள். இவர்கள்தாம் சுதந்திரம் குறித்தும், ஜனநாயகம் குறித்தும் வாய் கிழிய பேசுகிறார்கள். இவர்கள்தாம் உலகத்தின் பாதுகாவலர்களாக தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள். ஏகாதிபத்தியத்தின் கோரமுகங்கள் மேலும் கிழிந்து தொங்குகின்றன.

4 comments:

  1. http://www.wikileaks.ch/
    என்ற முகவரியில் தற்போது விக்கிலீக்ஸ் செயல்படுகிறது.

    ReplyDelete
  2. கூகிளில் தட்டினால் .. புதிய முகவரிதான் வருகிறது

    ReplyDelete
  3. இவருக்கு உலகில் உள்ள அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்... எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் பேசினால் ஜூலியன் யார் என்று கேட்கிறார்கள்.. என்ன செய்ய.. இவரைப் பற்றி அனைவரும் பதிவுகள் வெளியிடலாம்.. ஒரு அரசையே எதிர்த்து கண்ணில் விரலை விட்டு ஆட்டிய தைரியத்திற்கு தலை வணங்குகிறேன்..

    ReplyDelete
  4. ஜுலியன் அசாங்கே கைது, தமிழகத்தில் உமாசங்கர் ஐஏஎஸ் மீதான புகார், சவுக்கு சங்கர் வலைப்பதிவர் கைது ஆகியவற்றோடு தொடர்புடையது.

    ஜூலியன் அசாங்கேவிற்கு பாராட்டு தெரிவிக்கவேண்டும், உலக ஏகாதிபத்தியத்திற்கே சவால் விட்டுள்ளார்.

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)