திரைக்கு வந்தபோது அடித்தட்டு தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் சந்திக்கும் அவலங்களைப் புட்டுப்புட்டு வைத்து, மக்களின் வரவேற்பைப் பெற்ற படம் அங்காடித்தெரு. வசூலிலும் சாதனை படைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு அண்மையில் கோவாவில் நடந்த விழாவிலும் படத்திற்குக் கிடைத்தது. நவம்பர் 22 முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை கோவாவில் 41வது சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற்றது. இந்த விழாவில் அங்காடித்தெரு படமும் திரையிடப்பட்டது. நவம்பர் 27 அன்று திரையிடப்பட்ட படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் மீண்டும் ஒருமுறை டிசம்பர் 2 ஆம் தேதி திரையிட்டனர்.
திரையுலகப் பிரபலங்களில் ஒருவரான கோவிந்த் நிஹ்லானி இயக்குநர் வசந்தபாலனுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்தத் திரைப்படவிழாவில் சிறந்த அந்நியமொழித் திரைப்படமாக பீப்ளி லைவ் படம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் தேர்வுக்கான போட்டியில் பீப்ளி லைவ் படத்திற்கு அங்காடித்தெரு கடும் சவாலாக இருந்திருக்கிறது.
சூர்யாவின் வித்தியாசமான பாத்திரம்
திரைத்துறையில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா, தனது சமூகப்பணியிலும் தனி முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறார்.
முதலில் வெறும் நிதியுதவி என்றளவில் துவங்கிய சூர்யாவின் அகரம் பவுண்டேசன், களப்பணிகள் வரை முன்னேறியிருக்கிறது. அண்மையில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்கூட, இது பற்றி தனது மகிழ்ச்சியை அவர் தெரிவித்திருந்தார். தன்னார்வத் தொண்டர்கள் தன்னுடைய அமைப்புக்குக் கிடைத்ததில் அவர் மிகவும் மகிழ்ந்து போயிருக்கிறார். அமைப்பின் பணிகளைப் பெரும்பாலும் இந்தத் தன்னார்வத் தொண்டர்கள்தான் செய்கிறார்கள். ஆனால் சூர்யாவுக்கு நேரம் கிடைத்தால், அவரும் தன்னார்வத் தொண்டர்களோடு சேர்ந்து பணியாற்றவும் தயங்குவதில்லை.
கிராமப்புற மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களின் கல்விக்கு அகரம் பவுண்டேசன் உதவி செய்து கொண்டிருக்கிறது. கிராமப்புறங்களில் இருந்து வருகிறார்களே.. நகரத்தின் நிலைமையைப் உள்வாங்கிக் கொண்டு இயங்க சில காலம் பிடிக்கும் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்ததற்கு நேர்மாறாக, ஒரே மாதத்தில் அனைவரும் தங்கள் கைகளில் மைக்குகளைப் பிடித்துக்கொண்டு கம்பீரமாகப் பேசத்துவங்கி விட்டார்கள். அதைப் பார்த்தபிறகு எங்களுக்குள் நம்பிக்கை அதிகரித்துவிட்டது. அகரம் மாணவர்கள் சிகரத்தைத் தொடுவார்கள் என்கிறார் சூர்யா.
0 comments:
Post a Comment