Saturday, April 13, 2013
Wednesday, March 9, 2011
நுழைவுத்தேர்வு யாருடைய நலனுக்காக?

நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரி களில் மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் மற்றும் சிறுபான்மை நிறுவனங்களுக் கும் பொது நுழைவுத்தேர்வு மூலமே சேர்க்கை நடைபெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இத்தகையதொரு உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு அனைத்து அம்சங்களையும் உச்சநீதி மன்றம் கருத்தில்கொண்டதா என்ற கேள்வி எழு கிறது. ஏனெனில் 2011-12ஆம் ஆண்டு முதல் மருத்துவப்படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்புக்கு மத்திய அரசு அனு மதி வழங்கவில்லை. இதுதொடர்பாக மாநிலங்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டி யுள்ளது என்றும், பல்வேறு மாநிலங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்திலும் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணையின்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கு நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள் ளதையும், அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு என்ற முடிவை செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும் சுட் டிக்காட்டியுள்ளார்.
அகில இந்திய மருத்துவக்கவுன்சிலின் முடி வுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அனுமதி வழங்கவில்லை என்று மத்திய அரசுத்தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில்தான் மருத்துவக்கவுன்சில் உச்சநீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் பொது நுழைவுத்தேர்வுக்கு அனுமதி வழங்கியிருந்தது. இதுதொடர்பான விசாரணை முழுமையாக முடிவடையாத நிலையில் இந்த ஆண்டு முதலே பொது நுழைவுத்தேர்வு என்ற அறிவிப்பு உச்சநீதிமன்றத்தால் வெளியிடப்பட் டுள்ளது.
அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு என்பது சமூக நீதி அடிப்படையிலான இடஒதுக் கீட்டுக்கு எதிரானதாகும். தமிழகத்தில் கிராமப் புற மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங் கப்பட்டுள்ளது. பொது நுழைவுத்தேர்வு என்ற முடிவால் இந்த இடஒதுக்கீடும் அர்த்தமற்றதாகி விடும். மத்திய-மாநில அரசுகளின் கருத்து களுக்கு மாறாக மருத்துவக்கவுன்சில் உச்சநீதி மன்றத்தை அணுகுவதும், நுழைவுத்தேர்வுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்குவதும் தவ றான முன்னுதாரணமாகிவிடும்.
உலகமயமாக்கல் சூழலில் கல்வி முற்றிலும் வணிகமயமாக்கப்பட்டுள்ள பின்னணியில் உயர்கல்வித்துறையிலிருந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் உயர் கல்வி நிலையங்களை எட்டிப்பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு என்பது இதற்கு வலுச் சேர்ப்பதாகவே அமையும்.
அதே நேரத்தில், கல்வி வணிகமயமாக்கல் தொடர்பான வழக்குகளில் நீதித்துறை தனியா ருக்கு ஆதரவான தீர்ப்புகளை பொதுவாக வழங்கி வருகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண் டியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு விழிப் போடு செயல்பட்டு, உச்சநீதிமன்ற உத்தரவு என்ற பெயரால் வரும் ஆபத்தை தடுத்து நிறுத்தி, சமூக நீதி மற்றும் கிராமப்புற மாணவர்களின் நலனைப் பாதுகாப்பது அவசியமாகும்.

.jpg)


