துனீசியா என்ற வார்த்தை ஆப்பிரிக்க மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அந்நாட்டு மக்கள் தங்களை வதைத்துக் கொண்டிருந்த அரசை வெளியேற்றியுள்ளனர். மக்களின் இந்த வெற்றி ஆப்பிரிக்காவில் உள்ள மற்ற நாடுகளுக் கும் பரவி வருவதால் பல ஆட்சியாளர்களுக்கு கிலி பிடித்துள்ளது. எகிப்து மற்றும் ஏமன் நாடு களிலும் கொள்கை மாற்றத்தோடு கூடிய மாற்று தேவை என்ற முழக்கங்களோடு லட்சக்கணக் கானோர் வீதிகளில் வலம் வந்து கொண்டிருக் கிறார்கள்.
1987 ஆம் ஆண்டில் பிரதமராக அபேதின் பென் அலி பொறுப்பேற்றார். ஒரே மாதத்தில் ஜனா திபதியாக இருந்த ஹபீப் போர்கிபாவை அப் பதவியிலிருந்து தூக்கிவிட்டு ஆட்சியைக் கைப் பற்றினார். அதன்பிறகு “மக்கள்” ஆதரவோடு தொடர்ந்து பதவியில் நீடித்தார். 1994 ஆம் ஆண்டு தேர்தலில் 100 விழுக்காடு வாக்குகளும், 1999 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 99.4 விழுக்காடு வாக்குகளும் அவருக்கு விழுந்ததாக அறிவிக்கப் பட்டது. தங்களுக்கு ஒரு எடுபிடி கிடைத்துவிட் டார் என்ற மகிழ்ச்சியில் அமெரிக்க நிர்வாகமும் ஆமாம் என்று தலையாட்டியது.
மிகவும் அடக்குமுறையைக் கையாண்ட அரசுகளைப் பட்டியலிட்டால் அபேதின் பென் அலி தலைமையிலான துனீசியா அரசு முதலிடத் திற்குப் போட்டியிடும் என்று ‘தி எகனாமிஸ்ட்’ நாளிதழ் கடந்த ஆண்டு நிறைவில் விமர்சனம் செய்திருந்தது. வேலையின்மை, வறுமை, வெட்க மற்ற முறையில் சுரண்டல், ஊழல், அநீதி மற்றும் கொடுங்கோல் சட்டம் என்பதுதான் இந்த அர சின் வேதனைப் பட்டியலாகும். மக்களின் எதிர்ப்புகள் அடக்கி ஒடுக்கப்பட்டன. தொழிலா ளர்களுக்கு தலைமை தாங்கிய தொழிலாளர், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது.
சாலையில் காய்கறி விற்று தனது வயிற்றைக் கழுவி வந்த முகமது பவுவாசிசி என்ற இளை ஞனை, உரிமம் இன்றி காய்கறி விற்றதாகச் சொல்லி காய்கறிகளை காவல்துறை பறிமுதல் செய்தது. தனது எதிர்ப்பைக் காட்ட விரும்பிய அந்த இளைஞன், உடலில் தீயைப் பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டார். அந்தத் தீ மக் களின் ஆவேசத்தீயாக மாறியது. அந்த இளை ஞன் வாழ்ந்து வந்த சிடி பவுஜித் என்ற நகரத் தைப் பற்றிக்கொண்ட தீ, துனீசியா முழுவதும் பர வியது. டிசம்பர் 17 ஆம் தேதி முகமது பற்ற வைத்த தீ, ஜனவரி 14 ஆம் தேதியன்று ஜனாதிபதியின் நாற்காலியைப் பதம் பார்த்தது. கொடுங்கோலாட்சி செய்த பென் அலி நாட்டை விட்டு ஓடினார்.
முகமது தற்கொலை, நாட்டில் நிலவும் வறுமை மற்றும் வேலையின்மையை படம் போட்டுக் காட்டுகிறது. அரசை எதிர்த்து ஏற்பட்டுள்ள கிளர்ச்சியைச் சிலர் புரட்சி என்கிறார்கள். எகிப்து, ஏமன் என்று போராட்டத்தீ பரவியுள்ளதைப் பார்த்து அமெரிக்காவும், இஸ்ரேலும் சுட்டுத்தள்ளுங்கள் என்று அரற்றுகின்றன. தன்னெழுச்சியாகக் கிளம்பியுள்ள இந்தப் போராட்டங்களை வழிநடத்த சரியான தலைமை மற்றும் தத்துவம் இல்லையென்பது இடதுசாரி ஆய்வாளர்களின் அக்கறை கலந்த கவலையாக இருக்கிறது. இத்தனைக்கும் நடுவில் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கே ஒளியேற்றும் விளக்காக இந்தப் போராட்டத்தீ மாறலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அந்த நம்பிக்கையை எகிப்து, ஏமன் போராட்டங்கள் உருவாக்கியுள்ளன

ஏமனில் தொடங்கிய தீ, எகிப்துக்கும் வந்திருக்கிறது. அராஜகம் புரியும் எல்லா ஆட்சியினருக்கும், அவர்களை ஆட்டிப் பிழைக்கும் அந்நியனுக்கும் ஆட்டம் கொடுக்கிறது, இந்த மக்களின் புரட்சித்தீ.
ReplyDeleteதீ பரவட்டும். பிரெஞ்சு புரட்சி, மொத்த ஐரோப்பாவின் சரித்திரத்தையே மாற்றியது போல், இந்த மக்கள் புரட்சி (தாய்லாந்தையும் நினைவு கொள்வோம்) உலக மக்களின் மனமாற்றத்தை ஏற்படுத்தும். ருஷ்ய புரட்சியை வாழ்த்தி, கரும்பு காடுகளில் கருகியவர்களுக்காய் உருகிய பாரதியை நினைவு கொள்ளும் நேரமிது.
மிகச்சரியாக சொன்னீர்கள் வாசன் தங்கள் கருத்துக்கு நன்றி
ReplyDelete