இந்தியா வந்த ஒபாமாவுக்கு முழு அரசு மரியாதையுடன் கூடிய சிவப்பு கம்பள வர வேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட இந்த வரவேற்புரை தொடர்ந்து ஒபாமா, பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையைதொடர்ந்து இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.
(மேற்கண்ட கட்டிப்புடி வைத்தியம் படம் அந்த பேட்டியின் போது எடுத்ததல்ல)
அப்போது, தனது இந்திய பயணத்தில் 10 பில் லியன் டாலர் அளவிற்கு முக்கிய வர்த்தக உடன் பாடுகள் கையெழுத்தாகியுள்ளன என்றும், இது அமெரிக்காவில் புதிதாக 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் ஒபாமா கூறினார். (அமெரிக்காவில் மட்டும் - நமக்கு இல்லை)
“நான் அமெரிக்காவுக்கு திரும்பி செல்லும்போது, இந்தியாவிலிருந்து 50ஆயிரம் வேலைவாய்ப்புகளை கொண்டு வந்துவிட்டேன் என்று பெருமையாக கூறுவேன். இந்தியர்கள் எங்களது வேலைவாய்ப்பு களை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறார்கள்; அப்படியிருக்கும்போது நீங்கள் ஏன் இந்தியாவிற்கு சென்று நேரத்தை செலவழித்தீர்கள் என்று எமது மக்கள் கேட்பார்கள். அவர்களுக்கு, இந்த 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை சமர்ப்பிப்பேன். இதுபோன்ற கேள்விகள் எழுவதால்தான், சர்வதேச வர்த்தக பேச்சுவார்த்தைகளில் (எங்களது நாட்டின் நலனை காப்பதற்கான) பாதுகாப்பு அம்சங்களை நாங்கள் வலியுறுத்துகிறோம். இது ஒரு வழி பாதையல்ல. இரு நாட்டு குடிமக்களும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும்” என்று ஒபாமா கூறினார். (எங்க கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டிங்கறீங்களே (!) ... சத்யராஜ் டைப் வசனமா தெரியல?)
அப்போது, பிரதமர் மன்மோகன்சிங், அவுட் சோர்சிங் முறையில் அமெரிக்காவின் பணிகளை இந்தியர்கள் பெற்று செய்வதன் மூலம் அமெரிக்கா வின் உற்பத்தி திறன் அதிகரிப்பதற்கே நாங்கள் உதவி செய்துள்ளோம் என்றும், அமெரிக்காவிட மிருந்து வேலைவாய்ப்புகளை இந்தியர்கள் திருடிக் கொள்வதாக அந்நாட்டு மக்கள் கருதக் கூடாது என்றும் கூறினார். (நாங்க அப்பிடித்தான் செய்வோம், நீங்கள் அதையெல்லாம் கண்டுக்க கூடாதுன்றார்)
அமெரிக்காவுக்கு இந்திய சந்தை மிகவும் அவசிய தேவை என்று மீண்டும் குறிப்பிட்ட ஒபாமா, குறிப்பாக அதிநவீன தொழில்நுட்ப உற்பத்தி பொருட்களுக்கும், அடிப்படை கட்டமைப்பு வசதி துறையிலும் இந்திய சந்தையையே அமெரிக்கா பெரிதும் நம்பியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார். ( அடுத்த டார்கெட் ...)
(இந்த ஒபாமாவின் பாதுகாப்புக்காக இந்தியா செலவிட்டிருக்கும் தொகை ரூ.900 கோடி, அத்துடன் 50 ஆயிரம் வேலை வாய்ப்பு அம்பேல் ! இதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதோ? ) |
அடிப்படை கட்டமைப்பு வசதி துறையில் பல லட்சம் கோடி டாலர் அளவிற்கு அமெரிக்காவிட மிருந்து முதலீட்டை இந்தியா எதிர்பார்க்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர் மன்மோகன்சிங், இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா வையே கருதுகிறோம் என்றும் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் பேசிய ஒபாமா:
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவின் பல் வேறு பெருமைகளை தனது உரையில் எடுத்துரைத்த ஒபாமா, தேசத்தந்தை காந் திக்கும், அமெரிக்க ஜனநாயகப் போராளி களில் ஒருவரான மார்ட்டின் லூதர் கிங்கிற் கும் இடையிலான உறவையும் ஒற்றுமை யையும் சுட்டிக்காட்டினார். (வாயிலையே அல்வா கிண்டரதுனா சும்மாவா?)
உலகப்பொருளாதாரத்தில் பெருமளவு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வியத்தகு சாதனைகளை இந்தியா படைத்துள்ளது என்றும், உலகப்பொருளாதாரத்தை இயக்கும் எஞ்சின்களில் ஒன்றாக இருக்கிறது என் றும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் தற்போது நடக்கும் தனது ஆட்சியிலும், இதற்கு முன்பு ஜனநாயகக் கட்சியும், குடியரசுக்கட்சியும் அடுத்தடுத்து ஆட்சி நடத்திய காலத்திலும் இந்தியா வுடன் மிக நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்தன என்று குறிப்பிட்ட ஒபாமா, இந்த காலகட்டத்தில் இரு நாடுகளி டையே கையெழுத்தான வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த அணுசக்தி உடன்பாட்டின் மூலம் இந்தியாவும் அமெரிக்காவும் மிக நெருங்கிய கூட்டாளிகளாக மாறிவிட்டன என்றும் கூறினார்.
“இந்த உறவின் அடுத்த கட்டம் என்ன? அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய ஒரே உலகமே அமெரிக்காவின் இலக்கு. அமெரிக்காவின் இந்த உலகளாவிய கண் ணோட்டத்துடன் இணைந்து நிற்கிற ஒரு உண்மையான கூட்டாளியாக இந்தியா இருக்கும் என்று நம்புகிறேன். அதுவே எதிர் காலம்” என்று கூறிய ஒபாமா, “எங்களது பாதுகாப்பு, எங்களது கூட்டாளிகளின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு கூடுதல் முக்கியத் துவம் தருகிறோம்” என்றும் கூறினார். (வாக்கு மூலம் ...)
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்பிடிக்க இந்தியா முயற்சி மேற்கொள்வதை வரவேற்பதாக தெரிவித்த ஒபாமா, பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகள், உலக வர்த்தக மையத்தின் தோஹா சுற்றுப்பேச்சுவார்த்தை களை மீண்டும் துவக்குவதற்கான நடவடிக் கைகள் போன்றவற்றில் இந்தியாவின் ஒத்து ழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவும் இந்தியாவும் உலகளாவிய முறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
(இந்த ஒபாமாவின் பாதுகாப்புக்காக இந்தியா செலவிட்டிருக்கும் தொகை ரூ.900 கோடி, அத்துடன் 50 ஆயிரம் வேலை வாய்ப்பு அம்பேல் ! இதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதோ? )
0 comments:
Post a Comment