கொள்ளை நோய் போன்ற இயற்கை விபத்து ஏதாவது ஏற்பட்டால் இந்தியாவில் மட்டுமல்ல ஐரோப்பாவில் கூட மக்கள் தங்களைக் காப்பாற்றும்படி தெய்வத்திடம் பிரார்த்திப்பதைப் பார்க்கிறோம்.
பிரார்த்தனை நொந்த மனதுக்கு ஆறுதல் அளித்து நம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்டுமாயின் மிகவும் நல்லதே. அதை ஒருவரும் ஆட்சேபிக்க வேண்டியதில்லை.
ஆனால் நோய் பரவுவதை பிரார்த்தனையால் தடுக்கலாம் என்ற எண்ணத்துக்குப் பதிலாக ஆரோக்கிய முறைகளை அனுசரித்து நோயின் தோற்றுவாயை அறுக்க வேண்டும் எனும் விஞ்ஞானக் கருத்து இப்போது வலுத்து வருகிறது.
தொழிற்சாலையில் ஒரு இயந்திரம் பழுதாகிவிட்டாலோ ஒரு மோட்டார் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டாலோ யாரும் கையைக் கட்டிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்தோ பிரார்த்தனை செய்தோ சரிப்படுத்தி விடலாம் என்று நினைப்பது இல்லை. ஆனால் என்ன செய்கிறார்கள்? உடனே யந்திரத்தை பழுது பார்த்துச் செப்பனிட்டு ஓட வைக்கிறார்கள்; கார் சக்கரத்தைக் கழற்றி பஞ்சர் ஒட்டி மீண்டும் மாட்டி காரை ஓட்டிக் கொண்டுபோகிறார்கள்.
அவ்வாறே மனித யந்திரத்தையும் சமூக யந்திரத்தையும் எடுத்துக் கொண்டால்; நல்லெண்ணத்தோடு அவற்றையும், அவற்றின் சாத்தியக் கூறுகளையும் பற்றிய தேர்ந்த கல்வி அவசியமாகிறது.
0 comments:
Post a Comment