Tuesday, January 11, 2011

சில அடிப்படைகள்...(கம்யூனிசம் என்றால் என்ன - 2)

கம்யூனிசம், சோசலிசம், ஜனநாயகம், புரட்சி ஆகிய சொற்களை எப்படிப் புரிந்துகொள்வது? கம்யூனிஸ்ட்டுகள் அடிக்கடி பயன்படுத்துகிற ஏகாதிபத்தியம், சுயாதிபத்தியம், வர்க்கம், யுத்ததந்திரம், போர்த்தந்திரம் போன்ற சொற்களின் பொருள்தான் என்ன? இடதுசாரி, வலதுசாரி என்றால் என்ன? ஆளும் வர்க்கம் வேறு, ஆளும் கட்சி வேறு என்கிறார்களே அது என்ன? இந்தியாவில் வர்க்கப் பிரிவினை மட்டுமல்லாமல், வேறெந்த நாட்டிலும் இல்லாத வர்ணப் பிரிவினை என்ற ஒன்று இருக்கிறதே, அது என்ன?

இப்போது இந்தச் சொல்லாடல்களுக்கு எளிமையான விளக்கமளிக்க முயல்கிறேன். இவற்றைப் புரிந்துகொண்டால்தான் கம்யூனிசம் பற்றிய கேள்விகளுக்கும், இந்தியாவில் அது வளர்ந்திருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கும் விடை காண முடியும். ஏதோ சில காரணங்களால் கம்யூனிச இயக்கத்திற்குள் ஈர்க்கப்பட்டுப் பணியாற்றிக்கொண்டிருப்போரில் கூட சிலருக்கு இவற்றைப் பற்றிய முழுமையான புரிதல் இருப்பதில்லை. புரிந்துகொள்ள முயன்றவர்களில், கடந்தகால கரடுமுரடான சொல் பயன்பாடுகள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றைக் கண்டு மிரண்டு முயற்சியைக் கைவிட்டவர்களும் உண்டு. எடுத்துக்காட்டாக- யுத்ததந்திரம், போர்த்தந்திரம் இரண்டு சொற்களும் ஒரே பொருள்தான் தருகின்றன. ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் இவற்றை இரு வேறு பொருள்களில் கையாண்டுவந்திருக்கிறார்கள்.

முதலில் வர்க்கம். மக்கள் பிரிவு என்பதுதான் இந்தச் சொல்லுக்கு எளிமையான பொருள். குறிப்பிட்ட பொருளாதார நிலையைச் சேர்ந்த மக்கள் பிரிவு என்று எடுத்துக்கொள்ளலாம். அந்தப் பொருளாதார நிலையை அடிப்படையாகக்கொண்டு அவர்களது சமூக நிலை, அதிகார நிலை, கல்விநிலை போன்றவை இருக்கும்.
பொதுவாக ஒரு பகுதி மக்கள் வாழத்தொடங்கிய இடம், அவர்களது உடல் நிறம், பேசும் மொழி இவற்றை வைத்து இவர்கள் இந்த இனம் என்றோ, இந்த மொழிக்காரர்கள் என்றோ அடையாளம் காணப்படுகிறார்கள் அல்லவா? இந்த இயற்கையான அடையாளத்தில் உயர்வு தாழ்வு கிடையாது. பொருளாதாரம் என்பது வந்த பிறகுதான் சமூக ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. யார் அதை அதிகமாகக் குவித்திருக்கிறார்கள் என்பதைப் பொருத்தும், யார் அந்தப் பொருளாதாரத்துக்காக (அதாவது வயிற்றுப்பாட்டிற்காக) அது யாரிடம் குவிந்திருக்கிறதோ அவர்களைச் சார்ந்திருக்கிறார்கள் என்பதைப் பொருத்தும் அந்த ஏற்றத்தாழ்வு அமைகிறது. இன்னும் எளிமையாகப் புரிந்துகொள்ள முயல்வோம். யார் நிலம், எந்திரம் போன்றவற்றை உடைமையாக்கிக்கொண்டு, அந்த நிலத்திலும் எந்திரங்களிலும் மற்றவர்களை வேலை செய்ய வைத்துத் தங்களது பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளும் நிலையில் இருக்கிறார்களோ அவர்கள் உடைமை வர்க்கம். யார் அவர்களிடம் வேலை செய்து நிலையில் இருக்கிறார்களோ அவர்கள் உழைக்கும் வர்க்கம். அதாவது இந்த உழைக்கும் வர்க்கத்திடம் வேறு உடைமை எதுவும் கிடையாது. உழைக்கும் ஆற்றல் மட்டுமே இவர்களுக்குச் சொந்தம்.

பொருள்களைத் தயாரிப்பதற்கான எந்திரங்கள், அந்த எந்திரங்களை நிறுவுவதற்கான கட்டடங்கள், அந்த எந்திரங்களையும் அவற்றிலிருந்து தயாராகும் பொருள்களையும் மற்ற இடங்களுக்குக் கொண்டுசெல்வதற்கான வாகனங்கள் ஆகியவை உருவாவதற்கு முன்னால் மனிதர்களுக்குத் தேவையான பொருள்களை உற்பத்திசெய்வதற்கு நிலம் மட்டுமே பயன்பட்டது. அதுவும் நிலத்தில் உழுது பயிரிட்டு தானியங்களையும் காய்கனிகளையும் உற்பத்தி செய்து அறுவடை செய்யலாம் என்பதைக் கண்டுபிடித்த பிறகுதான் நிலம் உற்பத்திக்கான அடிப்படையாக மாறியது. அதுவரையில் மனிதர்கள் இயற்கையாகக் கிடைத்ததைத்தான் உண்டு பசியாறினார்கள், கிடைக்காதபோது பட்டினி கிடந்தார்கள்.

நிலத்தை இப்படிப் பயன்படுத்தலாம் என்று மனிதர்கள் கண்டுபிடித்ததற்கே ஒரு வரலாறு உண்டு. ஆதி மனிதர்கள் இயற்கை உணவுகளைத் தேடியும் விலங்குகளை வேட்டையாடியும் பசியாற்றிக்கொண்டிருந்த காலத்தில், கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைப் பிறப்புக்காக என வெளியே செல்லாமல் குகையிலோ, மரத்தடியிலோ தங்கியிருந்தார்கள். அப்போது, சுற்றி நடக்கும் இயற்கை மாறுதல்களைக் கவனிக்க முடிந்தது. உணவுக்காக வைத்திருந்த தானியம் மண்ணில் விழுந்திருக்கும் அல்லவா? தானியம் விழுந்த இடத்தில் மழை பெய்திருக்கும் அல்லவா? அந்த இடத்திலிருந்து புதிய பயிர் முளைப்பதையும், அது வளர்ந்து முற்றுகிறபோது அதிலிருந்து ஏராளமான தானியங்கள் கிடைப்பதையும் அந்தப் பெண்கள் கவனித்தார்கள். நாமே இப்படிச் செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்ற, சில தானியங்களை மண்ணில் தூவி நீர் தெளித்தார்கள். பயிர் விளைந்தது.

இப்படித்தான் விவசாயம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆம், விவசாயம் என்ற முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர்கள் அக்காலத்துத் தாய்மார்கள்தான். உணவுக்காக அலைய வேண்டியதில்லை என்பதைப் புரிந்துகொண்டதும் நிலத்தைக் கைப்பற்றி, இங்கேயிருந்து அங்கே வரையில் என் நிலம் என்று உடைமையாக்கிக் கொண்டவர்கள் ஆண்கள். நிலத்தைக் கைப்பற்ற முடிந்தவர்கள் உடைமை வர்க்கம். அந்த நிலத்தில் வேலை செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டவர்கள் உழைக்கும் வர்க்கம்.

இதிலே முதலாளி வர்க்கம் எப்படித் தோன்றியது? இந்தியாவில் இந்த வர்க்கப்பிரிவினையோடு வர்ணப்பிரிவினை எப்படி ஏற்படுத்தப்பட்டது?

-அ.குமரேசன்

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)