Sunday, January 9, 2011

பிர்லா தப்பியோட வாஜ்பாய் உதவி!


இந்தியக் கம்பெனிச் சட்டத்தின்படி அரசி யல் கட்சிகளுக்கு கம்பெனிகள் நன்கொடை தரக்கூடாது என்றிருந்தது. 1977 தேர்தல் அறிவிக் கப்பட்டிருந்தது. இந்தச்சட்டத்தை மீறி காங் கிரசுக்கு எப்படி நிதி திரட்டுவது என்று யோசித் தார் கே.கே. பிர்லா. இதற்கு அவர் கண்டுபிடித்த வழிதான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார் பில் சிறப்பு மலர்கள் வெளியிடுவது. மலர் என்றால் ஒன்று இரண்டல்ல, அனைத்து முக்கிய மொழிகளிலும் 90 மலர்கள் கொண்டுவரப்பட் டது. போதாக்குறைக்கு மாநில அளவிலும் இந்தக் காரியம் நடந்தது. இதுபற்றி அவர் கூறுவது-

இந்தச் சிறப்பு மலர்களில் விளம்பரங்கள் தருவது சட்டப்பூர்வமற்றது அல்ல. நானும் ராமா கோயங்காவும் நாட்டின் சில முன்னணி வழக் கறிஞர்களைக் கலந்தாலோசித்தோம். அவர்க ளும் இந்தக் கருத்தையே கூறினார்கள். இந்த விஷயத்தில் திருப்தியான பிறகு தீவிரமாகக் காரியத்தில் இறங்கினோம். ஆனால் யாரையும் நிர்ப்பந்திக்காமல்”.

இதன் பொருள் தெளிவானது. இந்திரா காங் கிரசுக்கு தேர்தல் செலவுக்காக பிர்லா தலைமை யில் பெருமுதலாளிகள் கூட்டம் ஒன்று பல கோடி ரூபாய் திரட்டித் தந்தது. சட்டத்தின் பிடி யிலிருந்து தப்பிக்கசிறப்பு மலர்களில் கம்பெனி விளம்பரம்என்று ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்தார்கள். இப்படியாக மீண்டும் இந் திராவின் ஆட்சியைக் கொண்டுவரப் பார்த்தார் கள். வந்திருந்தால் மீண்டும் அவசரநிலைக் காட்டாட்சி தொடர்ந்திருக்கலாம். அதுவே இந்தப் பெருமுதலாளிகளுக்கு வேண்டியிருந்தது.

நல்லவேளையாக வட இந்தியாவில் பெரும் எழுச்சி ஏற்பட்டு காங்கிரஸ் தோற்கடிக்கப் பட்டது. தேர்தலில் இந்திராவும், சஞ்சய்யும் கூடத் தோற்றுப்போனார்கள். மொரார்ஜி தேசா யைப் பிரதமராகக் கொண்டு ஜனதா கட்சி ஆட்சி உருவாகியிருந்தது. அந்த ஜனதா கட்சி யில் ஸ்தாபனக் காங்கிரஸ், ஜனசங்கம், லோக் தளம் என்று பல கட்சிகளும் சேர்ந்திருந்தன. சவுத்திரி சரண்சிங்தான் உள்துறை அமைச்சர். அவர் சர்வாதிகார ஆட்சி செய்த இந்திரா மீது மட்டுமல்ல, அவருக்கு நிதி உள்ளிட்ட சகல உதவிகளையும் செய்த பிர்லா மீதும் கோபமாக இருந்தார். கம்பெனிச்சட்டத்தை மீறி குறுக்கு வழியில் நிதி வசூலித்துக்கொடுத்த விவகாரத்தை எடுத்துக் கொண்டார்.

சிபிஐ- மத்திய புலனாய்வுத்துறை- விசார ணைக்கு உத்தரவிட்டார். பிர்லா வெளிநாடு செல் லாமலிருக்க வேண்டும் என்பதற்காக அவரது பாஸ்போர்ட்டை முடக்கவும் முடிவு செய்தார். ஆனால் அதைச் செய்ய வேண்டியது வெளியு றவுத்துறை. அதற்கு மந்திரி அடல் பிகாரி வாஜ் பாய். அவரது துறையிடம் உள்துறை அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் நடந்தது என்ன தெரி யுமா? பிர்லா கூறுகிறார் - “இதுபற்றி அரசல் புரச லாகக் கேள்விப்பட்ட நான் அடல்ஜியை உடனே சந்தித்தேன். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று தனது துறையினருக்கு உத்தர விட்டார். கடைசியில் சவுத்திரி சாகேபே நேரடி யாக அடல்ஜியிடம் பேசினார். பாஸ்போர்ட்டை முடக்கி வைக்கிற அளவுக்கு திட்டவட்டமான புகார் கூறப்படாதவரை இதற்கு ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டார் அடல்ஜி”.

ஜனதா கட்சி ஆட்சி வந்த பிறகும் அரசாங்கத் தில் என்ன நடக்கிறது என்பது பிர்லாவுக்குத் தெரிந்தது. உள்துறை மந்திரியின் வேண்டு கோளை நிராகரிக்கிற அளவுக்கு வெளியுறவுத் துறை மந்திரியின் அன்பைப் பெற்றிருந்தார் பிர்லா! அவரோ இந்திராவின் கையாள்! உருப்படுமா ஜனதா ஆட்சி? இந்த விஷயத்தில் இதுவல்ல உச்ச கட்டக் காட்சி. அது இனிமேல் தான் வரப்போகிறது.

பிர்லாவின் பாஸ்போர்ட்டை முடக்குவதில் தோல்வி கண்ட சரண்சிங், விஷயத்தை அந்த அளவில் விட்டுவிடவில்லை. காங்கிரசுக்கு சட்ட விரோதமாகப் பணம் திரட்டித் தந்த விவகா ரத்தில் அவரைக் கைது செய்து விசாரிக்க முடிவு செய்தார். இது பற்றிய நம்பகமான தகவல் முன் கூட்டியே வந்து விட்டது பிர்லாவுக்கு. அவர் தரப்பு நடவடிக்கை-” நான் முதலில் அடல்ஜி யைச் சந்தித்தேன். நிலைமை எப்படி இருக்கி றது என்று கேட்டேன். நிலைமை மோசமாகத் தான் இருக்கிறது என்றும், எந்த நேரத்திலும் நான் கைதாகப்படலாம் என்றும் அவர் கூறினார்”.

இதனால் தனது தந்தையார், மனைவி உட் பட குடும்பத்தார் எல்லாம் எப்படி பரிதவித்தார் கள், பதைபதைத்தார்கள் என்று விரிவாக எழுதி யிருக்கிறார் பிர்லா. கோடீஸ்வரர் வீடு என்றாலும் பிரச்சனை பிரச்சனைதான். தாங்க முடியவில் லை மனிதருக்கு. என்ன செய்தார் தெரியுமா? “1977 செப்டம்பர் 10 ம் தேதி வாக்கில் நான் அடல்பிகாரி வாஜ்பாயைச் சந்தித்தேன். வெகு சீக்கிரத்தில் என் மீது சவுத்திரி நடவடிக்கை எடுக்கலாம் என்று அவர் தெரிவித்தார். இந்த அபாயத்தைத் தடுப்பது பற்றி நான் என்ன திட்டம் வைத்திருக்கிறேன் என்று கேட்டார். நான் எது வும் செய்வதாக இல்லை என்றும், முதலில் சவுத் திரி சாகேப் நடவடிக்கை எடுக்கட்டும், பிறகு பார்க்கலாம் என்றிருப்பதாகவும் கூறினேன். வெளிநாடு போகிற திட்டம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டார் அடல்ஜி. இந்த மாத இறுதியில் அப்படிப் போகிற திட்டம் இருப்பதாக அடல் ஜியிடம் கூறினேன். அடல்ஜி பின்னர் தனது திட் டத்தைக் கூறினார். அப்படிப் போகிறத் திட்டம் இருக்கிறதென்றால் ஏன் உடனடியாகப் போகக் கூடாது என்றார்.”

இது சுத்தமான உள்குத்து வேலை. உள் துறை அமைச்சர் என்ன திட்டம் போட்டிருக் கிறார் என்பதை வெளியுறவுத்துறை அமைச்சர், சம்பந்தப்பட்டவரிடம் சொல்லி விடுகிறார். அது மட்டுமல்ல, உள்துறை அமைச்சரின் திட்டத் தை முறியடிப்பது எப்படி என்று வெளியுறவு அமைச்சரே பிரமாதமாக ஐடியா தருகிறார்! வெளிநாட்டுக்கு ஓடச் சொல்கிறார்! வெளியுற வுத் துறை அமைச்சர் அல்லவா? ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தவர் பெரு முதலாளிகளின் கையாட் கள் என்பதை நிரூபித்தார். இவரைத்தான்ஜென் டில்மேன்என்றார் கலைஞர்!

வாஜ்பாய் சொன்னபடி செய்ய முடிவு செய் தார் பிர்லா. இதை இந்திரா காந்தியிடமும் சொன் னார். “அடல்ஜியின் ஆலோசனைப்படி நடக்கு மாறு அவரும் கூறினார்என்கிறார் பிர்லா. இந்தி ராவும், வாஜ்பாயும் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்று கூறப்படுகிறது. அவர்களோ பெருமுதலாளி பிர்லாவைக் காப்பாற்ற ஒரே மாதிரியாகச் சிந் தித்தார்கள், வழி சொன்னார்கள். காங்கிரசும், பாஜகவும் அடிப்படையில் பெரு முதலாளி களின் கட்சி எனும் மார்க்சியக் கணிப்பிற்கு இது வொரு கச்சிதமான எடுத்துக்காட்டு. முடிவில் பிர்லா அமெரிக்கா போய்ச் சேர்ந்தார்.

அமெரிக்காவில் இவர் இருந்த போது, வாஜ் பாய் .நா. சபைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள நியூயார்க் போனார். அங்கு அவரைச் சந்தித்தார் பிர்லா. தனக்கு உதவி செய்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார். அப்புறம் நடந் தது- “ எப்போது இந்தியா திரும்ப உத்தேசம் என்று கேட்ட அடல்ஜி, தன்னிடமிருந்து தகவல் வரும் வரை இந்தியா திரும்ப வேண்டாம் என்று ஆலோசனை கூறினார். “உண்மையிலும் அவரி டமிருந்து சமிக்ஞை வந்த பிறகு தான் இந்தியா திரும்பினார் பிர்லா. பல கோடி இந்தியர்களுக் காக மத்திய மந்திரிகள் மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்களது வேலையைப் பார்த்தீர்களா?

இவ்வளவு சேவை செய்த வாஜ்பாய்க்கு பிர்லா எவ்வளவு நன்றியுடையவராக இருக்க வேண்டும்? இருந்தார். இதோ அவரே கூறுகிறார் - “1980 ல் இந்திராஜி மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பிறகு, நெருக்கடியான நேரத்தில் என்னிடம் அன்பையும் அபிமானத்தையும் காட்டிய அடல் ஜியோடு என்னுடைய தொடர்பை விடாது பரா மரிப்பேன் என்று அவரிடம் கூறினேன்”. இந்திரா ஜிக்கு இதில் என்ன பிரச்சனை? எல்லாம் ஒரே வர்க்கம் தானே!

சஞ்சய் காந்தி விமான விபத்தில் மரித்ததும் இந்திராவுக்கு வாரிசு அரசியலுக்கு ஆள் தேவைப் பட்டது. ராஜீவ்காந்தி தயங்கி நின்றார். அவரைத் தயார்ப்படுத்த இந்திரா தேர்வு செய்த சில நபர்க ளில் முக்கியமானவர் பிர்லா. அடுத்த பிரதமரைத் தயார் செய்யும் வேலை அவருக்கு. அவர் எழுது கிறார்- “சஞ்சயின் மரணம் நிகழ்ந்த இரு வாரங் களுக்குள் நடந்த இந்திராஜியுடனான எனது சந்திப்புகளில் ஒன்றில் ராஜீவை இண்டியன் ஏர்லைன்சின் பைலட் வேலையை விட்டு விட்டு, அரசியலில் இறங்கச் செய்ய வேண்டும் என்றேன்... ராஜீவோடு நான் பேசிப் பார்க்கட் டுமா என்று இந்திராஜிடம் கேட்டேன். ஏற்கெ னவே தனது நண்பர்கள் பலரை ராஜீவிடம் பேசச் சொன்னதாகக் கூறியவர் என்னையும் பேசச் சொன்னார். நானும் ஒப்புக்கொண்டு, ராஜூவோடு பேசினேன்.”

ஜனநாயகம் பற்றி முதலாளிகளும் அவர்களது ஊடகங்களும் வெளியே பிரமாதமாகப் பேசுகி றார்கள். உள்ளேயோ வாரிசு அரசியலுக்கு இவர் களே வழி சொல்லித் தந்தார்கள். ஒரு மகன் இறந்து இரண்டு வாரம் கூட ஆகவில்லை, அதற்குள் இன்னொரு மகனைத் தயார் செய்ய முடிவு செய் தார் தாயார். இதற்குப் பெரிதும் உத்வேகமாக இருந்தவர் பெரு முதலாளி பிர்லா. இது அவரே சொல்வது! இந்திராகாந்தி படுகொலை செய்யப் பட்டபோது ஏன் ராஜீவ்காந்தி சர்வ சாதாரண மாகப் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார் என்பது இப்போது புரிகிறது!

இதற்கெல்லாம் பெரு முதலாளிகளுக்கு கிடைத்த கைம்மாறு என்ன? எத்தனையோ! அதில் ஒன்றை பிர்லா சொல்லியிருக்கிறார். அது 1977 தேர்தலின் போது நடந்தது. அதில் எளிதாக வெற்றி பெற- தேர்தல் உத்தியாக- சில முக்கிய மான தொழில்களை நாட்டுடைமையாக்க பிரதமர் இந்திரா திட்டமிட்டிருப்பதாகக் கேள்விப்பட்டு முதலாளிமார்கள் பலரும் அதிர்ந்து போனார்கள். அவர்கள் எல்லாம் திரண்டு வந்து பிர்லாவிடம் முறையிட்டார்கள். அவரும் உடனடியாக சஞ் சய் காந்தியைச் சந்தித்து விஷயத்தைச் சொன் னார். பிறகு? “இந்திராஜியுடனான சந்திப்புக்கு அவர் ஏற்பாடு செய்தார். அந்தக் குறுகிய சந்திப் பில் அந்த வதந்தி பற்றி அவரிடம் கூறினேன். அவர் பொறுமையாகக் கேட்டார், ஆனால் ஒன்றும் பதில் சொல்லவில்லை. ஆனால் எந்தத் தொழி லும் நாட்டுடைமையாக்கப்படவில்லை. அந்த வதந்திக்கு ஏதேனும் அடிப்படை உண்டா, இல்லையா என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.”

இடதுசாரிப் பாதையில் திரும்ப இலேசான எண்ணம் பிரதமருக்கு வந்தால் கூட அதை ஒழித்துக்கட்ட முடிந்தது பிர்லாவாலும் அவரது திருக்கூட்டத்தாலும். இப்படி அரசின் கொள்கை களைத் தீர்மானித்தார்கள் பெரு முதலாளிகள். இதிலே கே.கே.பிர்லாவுக்குத் தனிப்பட்ட அரசி யல் லாபம் ஏதேனும் இருந்ததா? இருந்தது. அதுதான் எம்.பி. பதவி!

1984 ஏப்ரலில் ராஜஸ்தானிலிருந்து மாநிலங் களவைத் தேர்தல் நடந்த போது அதில் நிற்கத் தயாரானார் பிர்லா. மூன்று இடங்களுக்கான தேர் தலில் இரண்டுக்கு காங்கிரஸ் சார்பில் வேட்பா ளர்கள் நிறுத்தப்பட்டார்கள். காங்கிரஸ் ஆதரவுட னான சுயேச்சை வேட்பாளராக பிர்லா நிறுத்தப் பட்டார். முடிவு என்னாயிற்று என்றால், இந்தசுயேச்சைக்குகாங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விழுந்து விழுந்து ஓட்டுப் போட்டார்கள். மிக அதிகமான வாக்குகள் பெற்று பிர்லா ஜெயித்து விட்டார். ஒரு காங்கிரஸ் வேட்பாளருக்குத்தான் இழுபறியாகி விட்டது. பிறகு எப்படியோ தப்பிப் பிழைத்தார் அவர்! இந்திரா- ராஜீவ் இவருக்குச் செய்த கைம்மாறு இது.

இப்படியாக பெரு முதலாளிகளுக்கும் இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கும் இடையே வலுவான கொடுக்கல், வாங்கல் இருந்தது. அது இப்போதும் தொடர்கிறது, மேலும் வலுவாகிறது. திமுக போன்ற பிராந்தியக் கட்சிக்குள்ளும் அவர் களது சாம்ராஜியம் புகுந்துவிட்டது. “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்என்றார் அண்ணா. கலைஞரோ, டாடாவின் சிரிப்பில் சக லத்தையும் காண்பதாகப்படுகிறது. “கலிகாலம்என்பது இதுதான் போலும்!

போரா.அருணன்

2 comments:

  1. நல்ல மனிதர் தவரான கட்சியில் இருக்கிறார் என்று இவரை பற்றி சில ஊடகங்கள் எழுதியது. தவரான கட்சியில் ஒரு நல்ல மனிதன் இருக்க முடியாது என்பதற்கு நல்ல ஆதாரம் இந்த கட்டுரை. வரலாற்று பூர்வமான ஆதாரம்.

    ReplyDelete
  2. காங்கிரஸ் கட்சியிலும் பாஜகவிலும் சில கறை படாத தலைவர்கள் இருக்கலாம்,ஆனாலும் மற்ற தலைவர்கள் அமைச்சர்கள், அவர்கள் பங்கு பெறும் அரசு ஊழலில் ஈடுபடும்போது அதை கண்டுகொள்ளாமல் இருப்பதே துணைபோவதற்கு சமம்.

    இந்த விசயத்தில் இடதுசாரிகள் தான் மற்றவர்களிடமிருந்து விதிவிலக்காக உள்ளார்கள். மம்தா பானர்ஜி சமீபத்தில் மேற்குவங்க மாநிலத்தில் ‘ராஜர்கட்’ என்ற நகரமைப்பு திட்டத்தில் ஊழல் என்று புகார் கூறினார், அடுத்த சில நாட்களில் அந்தத்துறை அமைச்சர் மம்தாவிற்கு முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என ஆதாரங்களை மம்தா பான்ர்ஜிக்கெ அனுப்பிவைத்தார். அதற்குப் பிறகு மம்தா பான்ர்ஜி அதுகுறித்து பேசுவதேயில்லை.

    இது போன்று ஆளும் கட்சியினர் புகார்களுக்கு பதில் அளிக்கவேண்டும்.

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)