தம்பி, நீ விரும்பினால் இந்த நாட்டை பொன்னாடு ஆக்கமுடியும், அதற்கு ஒன்று தேவை. பொன்னும் பொருளும் நமக்கு மட்டும் கிடைத்தால் போதும் என்று எண்ணும் தன்னலம் சுட்டெறிக்கப்படவேண்டும்.
(04.01.1957)
குற்றச்சாட்டுகள், பகட்டான பேச்சு, வாக்குறுதி பறந்தது, பதவி வேட்டை, லஞ்சத்தில் பங்கு, கள்ள மாக்கெட் வரவு, அதிகார மோகம், என இதழ்கள் தூவியுள்ள குற்றச்சாட்டுகளை ஜனநாயக
வளர்ச்சி உள்ள எவரும் தாங்கிக் கொள்ள முடியாது. பச்சையாக கண்டித்தும் சகித்தும் கொள்ளுகின்றனர். ஆச்சரியம் அதிலே இல்லை. இவ்வளவு குற்றச்சாட்டுகளுக்கு உரியவர்களை கயவர்களை நாடு சகித்துக் கொண்டிருக்கிறதே அதுதான் ஆச்சர்யம். ஆனால் அதற்கு காரணம்? பாசம்! பாசம் பொல்லாத நோய்; எளிதில் போவதில்லை.
(திராவிட நாடு - 23.11.1947)
பொதுப் பணி என்ற பெயரால் தான் பெற்ற செல்வாக்கை பணப் பெட்டியை நிரப்பும் வழியாக உபபோகிப்பவன், மக்களால் வெறுக்கப்படுவான். அவன் எவ்வளவு அருமையான கொள்கைகளை கூறினாலும் அது செம்பாகுமே தவிர பொன்னாக மதிக்கப்படமாட்டாது.
(பொதுவாழ்வு ஒரு பொன்னாடு)
இன்று வெறுப்பு, அருவருப்பு, பகை எனும் உணர்ச்சியின் துணைகொண்டு மட்டுமே அரசியலில் தம்முடன் மாறுபட்டிருப்பவர்களை மட்டம்தட்டி, தாம் சார்ந்திருக்கும் அரசியல் அமைப்பிற்கு ஏற்றம் தேடித் தரமுடியும் என்ற எண்ணம் தடித்துக் கிடக்கிறது. கொள்கையில் நம்பிக்கை சுரந்ததால் அல்ல இருந்த இடத்தில் கசப்பு வளர்ந்ததால், பகைகக்கி இழிபொழிபேசியே, மாற்றுமுகாமினரை ஒழிக்க முடியும் என்ற நினைப்புடன் நாப்பறை கொட்டுகின்றனர் . பழுதுபட்ட மங்கை பழுக்க மங்சளை முகத்தில் அப்பிக்கொண்டு பத்தினிவேடம் போட்டிடும் கதைப்போல்! மற்ற கட்சி தலைவர்களை மதித்திடுவது நம் கொள்கையை நம்மிடமிருந்து பெயர்த்தெடுத்துவிடும் என்று எண்ணுவதும் பேதைத்தனம். செல்வாக்கு சிதைந்து வரும் நிலையில் புதுக்கட்சி பணம் சேர்த்து, புதிய பலம் பெற நினைப்பது, ஆடிக்கெட்ட முதியவன், ஆசை அடங்காததால் தங்க பஸ்பம் சாப்பிடுவதற்கு ஒப்பானது. முறுக்கு ஏறும் வேகமானது, அதைவிட வேகமாக முறுக்கு தளர்ந்துவிடும். முறிந்தேகூடப் போய்விடும்.
(கடிதம் - 11.07.1965)
பணம் மட்டும் குவிந்திருக்கும்போது செருக்கு பிறரை துச்சமாக எண்ணும். துடுக்கு ஏற்பட்டுவிடும். ஆனால் பதவி கிடைத்துவிட்டாலோ எவரையும் எதுவும் செய்துவிடமுடியும் என்கின்ற மண்டைகனம் எவனால் என்ன என்ற போக்கு, எடுத்தேன், கவிழ்த்தேன் என்கின்ற பேச்சு; யாருக்கு நான் அஞ்சவேண்டும் என்ற நோக்கத்துடன் நடவடிக்கைகள் - இப்படி பலப்பல நோய்கள் ஒருசேர குடியேறிவிடும். பதவியும், அதனால் கிடைத்திடும் அதிகாரமும் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்ற நினைப்பும் தடித்துவிடும். பிறகு நெறித்த புருவம், கனல் உமிழும் பார்வை கடும் சொற்கள்.
(05.05.1960)
அதிகாரம் ஒரு போதை! பருகப் பருக இனிக்கும். அதில் சொக்கி விழாதவர் மிகச் சிலரே. அதிலும் அரசியல் அதிகாரம், அதிகமான போதைத் தரும். அதைப் பருகுவோர், பரமானந்தமடைந்து பாதம் பூமியில் சரியாக படியாதபடி தாண்டவமாடுவர். அதைத்தான் அறிஞர்கள் அரசியல் கோமாளி கூத்தென்பர். அந்த போதையின் பயனாக எதேச்சதிகாரமும், சர்வாதிகாரமும் ஏற்படும். தட்டிக் கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டனாகிவிடமாட்டானா? அதைப்போல தனக்கொரு எதிரியும் இல்லை என்ற மனப்பான்மை கொண்டுவிட்டால், கேட்கவாவேண்டும். அவர்தம் திருவிளையாடல் யாராயினும் சரி எனக் கூறி, எதற்கெடுத்தாலும் கச்சை கட்டி நிற்பர். இதுவே அதிகார வெறி எனப்படுவது.
(எதேச்சாதிகாரம், திராவிடநாடு - 27.06.1948)
நீண்ட பேச்சினால் அல்ல, நாசுக்கான அரசியலால் அல்ல, உயிரை இழக்கவும் தயாராயிருந்த உத்தமர்கள் சிந்திய இரத்தத்தால்தான், உலகிலே எந்த உன்னதமான கொள்கையும் நிலை நாட்டப்பட்டிருக்கிறது.
அண்ணாதுரை ஒரு அறிஞர். வாய்ச் சொல் வீரர். மக்களின் பலவீனம் கண்டு அதை தனக்காய், தன் கட்சி வளர்ச்சிக்காய் பயன்படுத்திக் கொண்டவர். (உ.ம்) பெரியாரை விட்டு விலகியது, தனிநாடுகோரிக்கை, இந்தி எதிர்ப்பில் இளம் பள்ளி மாணவகர்களையும் இழுத்தது. லாட்டரி சீட்டு வியாபரத்தை அரசே தொடங்கியது. ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி என்ற பொய் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தது. "சொல் ஒன்று செயல் வேறு" என்ற நுட்பங்களை அரசியலில் எளிதாக்கியவர். அவரது மிகக்குறைந்த கால ஆட்சியும், நோயும்,அவரது மரணமும், பின் ஆட்சிக்கு வந்தோரின் அவலங்களும், அண்ணாவின் புகழை தக்கவைத்திருக்கிறது. பெரியாரையும், கண்ணதாசனையும், படித்திருந்து, அறுபது முதல் எழுபதுகளின் அரசியலை ஆழ்ந்து நோக்கினால் இது உள்ளங்கை நெல்லி. இறந்துவிட்டவரகளைப் பற்றிய குறை கூறுவதைச் சமூகம் விரும்பாதென்பதால், அண்ணா பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் அதிகம் வெளிவருவதில்லை. முக்கியாமாய், வாரிசுகள் மிக மோசமாய் ஆனதால்,முந்தைய சுமார்கள் மிக நல்லவர்களாகி விடுகிறார்கள்.
ReplyDeleteit is good one
ReplyDeleteஇறந்துவிட்டவரகளைப் பற்றிய குறை கூறுவதைச் சமூகம் விரும்பாதென்பதால், அண்ணா பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் அதிகம் வெளிவருவதில்லை. முக்கியாமாய், வாரிசுகள் மிக மோசமாய் ஆனதால்,முந்தைய சுமார்கள் மிக நல்லவர்களாகி விடுகிறார்கள்.//
ReplyDeletesariyaana karuthu
//அண்ணாதுரை ஒரு அறிஞர். வாய்ச் சொல் வீரர். மக்களின் பலவீனம் கண்டு அதை தனக்காய், தன் கட்சி வளர்ச்சிக்காய் பயன்படுத்திக் கொண்டவர். (உ.ம்) பெரியாரை விட்டு விலகியது, தனிநாடுகோரிக்கை, இந்தி எதிர்ப்பில் இளம் பள்ளி மாணவகர்களையும் இழுத்தது. லாட்டரி சீட்டு வியாபரத்தை அரசே தொடங்கியது. ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி என்ற பொய் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தது. "சொல் ஒன்று செயல் வேறு" என்ற நுட்பங்களை அரசியலில் எளிதாக்கியவர். அவரது மிகக்குறைந்த கால ஆட்சியும், நோயும்,அவரது மரணமும், பின் ஆட்சிக்கு வந்தோரின் அவலங்களும், அண்ணாவின் புகழை தக்கவைத்திருக்கிறது. பெரியாரையும், கண்ணதாசனையும், படித்திருந்து, அறுபது முதல் எழுபதுகளின் அரசியலை ஆழ்ந்து நோக்கினால் இது உள்ளங்கை நெல்லி. இறந்துவிட்டவரகளைப் பற்றிய குறை கூறுவதைச் சமூகம் விரும்பாதென்பதால், அண்ணா பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் அதிகம் வெளிவருவதில்லை. முக்கியாமாய், வாரிசுகள் மிக மோசமாய் ஆனதால்,முந்தைய சுமார்கள் மிக நல்லவர்களாகி விடுகிறார்கள்.//
ReplyDeleteமிக சரியான கருத்துக்கள். வேற்று வாக்குறுதிகளும் வெறும் அலங்கார பேச்சையும் தவிர வேறு எதுவும் தராத அண்ணாவை அவர் வழி வந்தவர்கள் வேண்டுமானால் அறிஞர் எனலாம். ஆனால் நீங்கள் சொல்வதே உண்மை