புதிதாகப் போடப்படும் சாலைகள் ஏன் ஒரு மழைக்குக் கூட தாங்காமல் குண்டும் குழியு மாய் மாறுகின்றன என்பதிலிருந்து, மக்கள் நல்வாழ்வுக்காக என திட்டங்கள் உருவாக்கப்பட்டு எத்தனையோ கோடிக்கணக்கில் செலவிடப்பட்டாலும் ஏராளமானோர் ஏன் இன்னும் தெருக்கோடியில் வாழ்கிறவர்களாகவே இருக்கிறார்கள் என்பது வரையில் விடை தெரியாத பல கேள்விகள் சுற்றிச் சுற்றி வருகின்றன. இதற்கு, ஊருக்குப் பாய்ச்சப்படும் நீர் சிலரது சொந்த வாய்க் கால்களுக்குத் திருப்பிவிடப்படுவது போன்ற ஊழல்களும் முக்கியக்காரணமாகும்.
எந்த மட்டத்தில் ஊழல் நடந்தாலும், அதில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்களை விசாரணைக்கு உட்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் உள்ள ஒரு சுயேச்சையான அமைப்பு தேவை என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. அந்த நோக்கத்துடன்தான் ‘லோக்பால்’ அமைப்பை ஏற்படுத்துவதற்கான ஒரு சட்ட முன்வரைவு முதன் முதலில் 1966ல் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அந்த மத்திய நடுவர்மன்ற அமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்ட முன்வரைவு இது வரையில் 8 முறை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது - ஆனால் இன்னமும் அது நிறை வேற்றப்படவில்லை!
எதனால் இந்த சட்ட முன்வரைவு இழுத்தடிக்கப்படுகிறது? லோக்பால் விசாரணைக்கு பிரதமர் அலுவலகம் உள்பட அனைத்துமே உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகளும், இதர சில கட்சிகளும், பல்வேறு சமூக இயக்கங்களும் வலியுறுத்துகின்றன. ஆனால், மத்திய ஆட்சியாளர்களோ லோக்பால் விசாரணை அதிகார எல்லையிலிருந்து பிரதமர் அலுவலகம், பாதுகாப்புத் துறை போன்றவற்றிற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என் கிறார்கள். பிரதமர் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டால், நிலையான அரசியல் தன்மை வலுவிழந்து உலக அரங்கில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்றெல்லாம் போலியான காரணங்களைக் கூறுகிறார்கள்.
இந்தப் பின்னணியில்தான், ஊழல் விசாரணைக்கென தற்போதுள்ள பல்வேறு அமைப்பு களுக்கு மாறாக ஒரே அமைப்பாக, அதிகார முள்ள அமைப்பாக லோக்பால் மன்றத்தை ஏற்படுத்துவதற்கான மாற்றுச் சட்ட முன்வரைவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநில ஊழல் விசாரணை நடுவர் (லோக் அயுக்தா) சந்தோஷ் ஹெக்டே, நீதித்துறை ஊழல்கள் பற்றி விமர்சித்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் ஒத்துழைப்புடன் ஒரு பொதுநல அமைப்பு இந்த மாதிரி சட்டமுன்வரைவை வெளியிட்டிருக்கிறது. விசாரணையில் வந்து விளக்கமளிக்குமாறு யாருக்கும் ஓலை அனுப் பவோ, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தண்டனை அறிவிக்கவோ அதிகாரமற்ற, ஆலோ சனை அமைப்புகளாக மட்டுமே செயல்படுகிற தலைமைத் தணிக்கை ஆணையம் (சிஏஜி), மத் திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) போல அல்லாததாக அந்த லோக்பால் நிறுவப்பட வேண்டும், ஊழல் குறித்து தகவல் அளிப்போ ருக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற விதிகள் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
சில மாதங்களுக்கு முன்னால் கூட மத்திய சட்ட அமைச்சர், லோக்பால் சட்டத்தை நிறை வேற்றுவதில் அரசுக்குத் தயக்கமில்லை என்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அலைக்கற்றை மோசடி விவகாரம் பிரதமர் அலுவலகத்தையே அசைத்துக்கொண்டிருக்கிற வேளையில், இப்படிப்பட்ட லோக்பால் அமைப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசுக்கு எந்த அளவுக்கு ஈடுபாடு இருக்கும் என்பதை எவரும் ஊகித்துவிட முடியும்.

The Independent Commission Against Corruption, or ICAC for
ReplyDeleteshort, was born in 1974.
ஹாங்காங் அறுபதுகளில் இப்போதைய இந்தியாவைப்போல் பெரும்பான்மை அரசியல்வாதிகள், அதிகாரிகள், அடியாட்கள், காவல் மற்றும் இராணுவத்தினரின் சுயநலங்களால் சுரண்டப்பட்டு,
நாடு அழுவின் விளிம்பிலும்,மக்கள் கோபத்தின் உச்சத்திலும் இருந்த போது 1974 ல் (ICAC) இந்த சட்டம், ஒரு மாபொரும் தலைகீழ் மாற்றத்தை அங்கு கொண்டுவந்தது. நாட்டை காக்க தேர்தெடுக்கப் படுபவர்கள் தன் வீட்டிலேயே திருடி அடுத்த வீட்டுக்காரனிடம் அடகு வைப்பவர்கள் போல் இருந்தால், வீட்டு பிள்ளைகள், பெண்டீர் நிலை என்ன ஆகுமோ அது தான் இங்கு நடக்கிறது. நமது கருப்பாடு, அந்நிய ஆட்டு மந்தைகளை கூட்டி வந்து விளைநிலத்தை மேய்கின்றன. இவர்களை அடக்க இது போன்ற சட்டம் தேவை. எம்பிகளுக்கு சம்பளத்தை மூன்று மடங்கு உயர்த்த இருந்த ஒற்றுமை ஏன் கூட்டு பார்லிமெண்டிரி குழு அமைக்க மட்டும் ஏன் இல்லை? 15 நாட்களாக முடங்கி இருக்கிறது மாமன்றம்.
//எம்பிகளுக்கு சம்பளத்தை மூன்று மடங்கு உயர்த்த இருந்த ஒற்றுமை ஏன் கூட்டு பார்லிமெண்டிரி குழு அமைக்க மட்டும் ஏன் இல்லை?//
ReplyDeleteவாசன் உங்கள் கேள்வி மிக நாயமானது.
இந்திய ஜனநாயக காவலர்கள் கயவாளிகலாக இருக்கும்போது கடுமையான சட்டங்கள் கூட வேலை செய்யாது.
ஒரு உறுதியான இடதுசாரி சார்பான மக்கள் போராட்டங்கள் மட்டுமே இப்பிரச்சனைகளுக்கு தீர்வு உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி