படிக்கும்போதே சிலரது பேச்சுக்கள் வாய்விட்டு சிரிக்க வைக்கும். ஆனால் அவர்கள் பெரும் தலைவர்களாக இருப்பார்கள். அவர்கள் பேச்சுக்களை நாடே கவனிக்கும். இதுதான் விந்தை.
இங்கே சிலரது சமீபத்திய பேச்சுக்களை கேளுங்களேன். “முடியல...” என்று வடிவேலுவின் தொனியில்தான் சொல்ல முடிகிறது.
- "ஏழையாகப் பிறந்தேன், ஏழைகளுக்காக ஆட்சி நடத்துகிறேன்!” - இளைஞன் படவிழா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி.
- “என் அறுபது ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இது போன்று எதிர்ப்புகளைச் சந்தித்த வேறொருவரை பார்த்ததில்லை!” - மோடியைப் புகழந்து பேசியவர் அத்வானி.
- “தகவல் தொலை தொடர்புத் துறையில் நான் புரட்சியை ஏற்படுத்தினேன்” ராஜினாமா செய்த மத்திய அமைச்சர் ஆ.ராசா.
- “அமெரிக்கா குறித்த விக்கிலீக்ஸ் ஆவணங்கள் அபாயகரமானவை!” - ஜார்ஜ் புஷ்.
- “தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை நல்லபடியாக இருப்பதில் மகிழ்ச்சி” - பதவி விலகிய ஆந்திர முதலமைச்சர் ரோசையா.
- “பிகார் தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வியால் விரக்தி அடையவில்லை” - ராகுல் காந்தி
- “என் மீதுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்” - கர்நாடக முதல்வர் எடியூரப்பா.
- “நான் வெறும் நடிகன் மட்டும்தான். மனசு மட்டும்தான் வேலை செய்யும். மூளைக்குப் பெருசா வேலையில்லை. அவருக்கு இரண்டுமே வேலை செய்யும்” -முதலமைச்சர் கருணாநிதி பற்றி நடிகர் ரஜினிகாந்த்.
இதில் யார் அதிக சிரிப்பை உங்களுக்கு வரவழைத்தது? முடிந்தால் சொல்லுங்களேன்.
வழக்கம் போலவே கலைஞர்தான்
ReplyDeleteகலைஞர்மட்டுமில்லை அவருக்கு ஜால்ரா அடிப்பவங்களும்தான்.
ReplyDeleteதிருவாளர் விஜயகாந்த் இங்கு இல்லாமல் போய்விட்டாரே என்பது வருத்தமாக இருக்கிறது ...
ReplyDeleteராசா மேட்டருதான் டாப்பு........
ReplyDeleteதமிழ்வினை!
ReplyDeleteவருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.
லஷ்மி!
நன்றி. நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியுது! :-))))
சிந்தன்!
எங்க போய்விடப் போறாரு! வருவார்... :-))))
யோகேஷ்!
பார்த்தீங்களா, எதைப் புரட்சின்னு சொல்றாரு!
* "ஏழையாகப் பிறந்தேன், ஏழைகளுக்காக ஆட்சி நடத்துகிறேன்!” - இளைஞன் படவிழா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி.
ReplyDeleteஅட வாங்க ஏழைகளா வாங்க ஏழைகளா..................
இதுல இன்னும் சில ‘முடியல’ களையும் சேர்க்கலாம்.
ReplyDeleteதமிழ்னாட்டில காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஒரு தலித்தைத்தான் முதல்வராக்குவோம்
-ப.சிதம்பரம்
ரூ.1.76 லட்ச்ம் கோடி ஊழலை ஒருத்தரே செய்ய முடியிமா..
-கருணாநிதி
234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம்
-ஐஜெகெ பச்சமுத்து
"ஏழையாகப் பிறந்தேன், ஏழையாக வாழ்கிறேன்" - அப்படின்னு சொல்ல அவருக்கு சொல்ல தைரியம் இல்லை பார்த்தீர்களா.
ReplyDeleteஅவருக்கு தைரியம் இருக்கு, தமிழக மக்களுக்கு தன தெம்பு இல்லை
ReplyDelete//ஏழையாகப் பிறந்தேன், ஏழைகளுக்காக ஆட்சி நடத்துகிறேன்!” //
ReplyDeleteமுதல்வரை இந்த விடயத்தில் ஓரங்கட்ட எவராலும் முடியாது. சன் தொலைக்காட்சியால் 100 கோடி பங்கு கிடைத்ததெனக் கூறி வாய் மூடுமுன்; எழையாகி விட்டார்.
வயதுக்கேற்ற பக்குவம் இல்லை. பிதற்ருகிறார்.பாவம்
//"ஏழையாகப் பிறந்தேன், ஏழைகளுக்காக ஆட்சி நடத்துகிறேன்!” \\
ReplyDeleteதாங்கமுடியலே -