திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காளிபாளையம் ஊராட்சியில் தலித் மக்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி, அவர்களுக்கு அரசமைப்புச் சட்டப்படி கிடைக்க வேண்டிய அதிகாரத்தைப் பறிப்பதற்கான சதி நடைபெற்றிருக்கிறது. இந்த சதி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஊராட்சி மன்றங்களில் பல உறுப்பினர் வார்டு முறைக்கு பதிலாக ஒரு உறுப்பினர் வார்டு முறை கொண்டு வருவதற்கான பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதன்படி காளிபாளையம் ஊராட்சியில் வார்டுகள் பிரிக்கப்பட்டபோது இந்த விபரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிலேயே தலித் மக்கள் மொத்தம் 59 பேர் மட்டுமே வசிப்பதாக மிக, மிகக் குறைத்துக் காட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.
ஆனால் கடந்த நூறாண்டு காலமாக இங்குள்ள மூன்று காலனிகளில் தலித் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது ஏறத்தாழ 300 குடும்பங்கள் உள்ளன. இவர்களில் 1995ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் அப்போதைய தேர்தலில் 435 பேர் வாக்களித்தனர். 2001ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் 446 பேர் வாக்களித்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 479 தலித் மக்கள் வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில் மக்கள் தொகை அடிப்படையில் 2005ம் ஆண்டு காளிபாளையம் ஊராட்சியில் தலித் சமூகத்தினருக்கு ஒரு வார்டு கூட ஒதுக்கப்படவில்லை. ஆனால் 1996ம் ஆண்டு இதே ஊராட்சியில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தலித் மக்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டுள்ளது நிரூபணமாகிறது.
அத்தோடு சுழற்சி அடிப்படையில் தலித் ஊராட்சிமன்றத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும் தட்டிப் பறிக்க சூழ்ச்சி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த விபரத்தை தற்போதைய ஊராட்சிமன்ற 2வது வார்டு உறுப்பினராக இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கட்சியின் சுந்தரேசன் கண்டறிந்தார். இதையடுத்து திங்களன்று மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் இந்த ஊராட்சியைச் சேர்ந்த தலித் மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டனர். குறிப்பாக 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தலித் மக்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அத்தோடு 2011ம் ஆண்டுக்குரிய தற்போதைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சரியான விபரங்களை சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும் புதிய வார்டு பிரிப்பில் தாண்டாக்கவுண்டன் புதூர் ஆதிதிராவிடர் காலனி என்று தவறுதலாகக் குறிக்கப்பட்டுள்ள அந்தப் பெயரை நீக்கிட வேண்டும். 2009ம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் மொத்தம் 2275 வாக்காளர்கள் இருப்பதால், இந்த ஊராட்சியை 9 வார்டுகள் கொண்டதாக எண்ணிக்கையை அதிகரித்து தலித் மக்களுக்கு 2 வார்டுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இந்த பிரச்சனையில் தவறைச் சரி செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் வி.பி.சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர் ச.நந்தகோபால் உள்பட மார்க்சிஸ்ட் கட்சியினர் உடனிருந்தனர்.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி போன்ற பகுதிகளில் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட தலித் ஊராட்சித் தலைவர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலையை ஏற்படுத்தினர். ஆனால் இங்கோ எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி நூதன முறையில் மோசடி செய்திருப்பதன் மூலம் அத்தகைய இட ஒதுக்கீட்டுக்குக்கூட வழியில்லாத நிலையை ஏற்படுத்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு தமிழ்த் திரைப்படத்தில் அத்திப்பட்டி என்ற ஊரையே கடலுக்குள் மூழ்கடித்தது போல எங்கள் ஊரையும் இரண்டாவது அத்திப்பட்டியாக்க முயற்சி நடைபெற்றுள்ளது என்று ஊராட்சி வார்டு உறுப்பினர் சுந்தரேசன் குற்றஞ்சாட்டினார்.

0 comments:
Post a Comment