மன்மதன் அம்பு படத்தில் நடிகர் கமல்ஹாசன் எழுதிய கவிதை ஒன்றை பெண்களும் குழந்தைகளும் படிக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் தினமலர் பத்திரிக்கையில் ஒருவர் பொங்கி எழுந்திருக்கிறார். "நாகரீகமற்றவர்கள் முன் நாமும் நாகரீகமில்லாமல் செயல்படுவது நாகரீகமில்லை என்பதால், நாகரீகமாக அடக்கிக்கொள்கிறேன்.” என்று முடித்திருந்தார்.
அந்தக் கவிதை இதுதான். முதலில் ஒரு பெண் ஆணின் மனநிலையை சொல்ல ஆரம்பிக்கிறார்.
பெண்:
இந்த இடத்திலிருந்து ஆண் ஆரம்பிக்கிறான். அவன் பெண்ணின் மனநிலையை பேசுகிறான்.
ஆண்:
கவிதை முடிகிறது. இப்போது நாம் பேசுவோம். ஒரு விஷயம் மோசமாக இருந்தால் அதனை ஒட்டு மொத்த சமூகமே வெறுத்து ஒதுக்க வேண்டும் எனச் சொல்வதுதான் சரியாக இருக்கும். இங்கே கட்டுரையாளர் “பெண்களும், குழந்தைகளும்’ படிக்க வேண்டாம் என்கிறார். அதாவது ஆண்கள் மட்டும் படிக்கலாமாம். ஆண்களும் பெண்களும் சம்பந்தப்பட்ட கலவியலை ஆண்கள் மட்டும் பேச வேண்டுமாம்.
இவ்வாறு ஆணாதிக்கத் திமிறுடன் பேசுகிற தினமலரின் வியாபார நியாயம் என்ன?. பெண்கள் குறித்த உடல் இச்சையை புளோஅப் படங்களாகப் போட்டு காசாக்குவதுதானே?. உடல் இச்சையைக் கிளப்புகிற காட்சிகளும், பாடல்களும் எவ்வளவோ தமிழ்த் திரைப்படங்களில் கொட்டிக்கிடக்கின்றன. அப்போதெல்லாம் வேர்க்காத, விறுவிறுக்காத தினமலர் மேற்கண்ட கவிதையில் காமத்தை மோப்பம் பிடிப்பதுதான் விந்தை.
மேற்கண்ட பாடலில், வக்கிரங்களை “கமர்சியல்” என்ற பெயரில் ஒளித்துப் பரிமாரும் கபடம் இல்லை.மாறாக, கலவி குறித்ததொரு விவாதத்தை துவக்குகிறது.
மனதின் அழுக்குகளையும், சமூகம் கற்பித்திருக்கிற தவறான புரிதல்களையும் பொதுவெளியில் பேசுவதாகவே இருக்கிறது இந்தக் கவிதை. இதனைக் கொண்டு பாலியல், உளவியல் குறித்து நமது புரிதல் பற்றிய பார்வைகளை மோத விடலாமேயனி, கலவியல் குறித்து பேசுவதே தவறு என்று பொருட்படுத்தி, வசவு பாடினால் அதில் பரபரப்பு அன்றி, வேறு எந்த உபயோகமும் இருக்கப்போவதில்லை.
இன்றைய ஊடகங்களின் ஆபாச, வியாபாரத் தாகுதல்களுக்கு மத்தியில், மெளனத்தைக் காட்டிலும் விவாதங்களே அவசியம். படிப்போம், பேசுவோம் ... ஒரு திறந்த விவாதமே இக்கவிதைக்கான எதிர்வினையாக அமையும்.
அந்தக் கவிதை இதுதான். முதலில் ஒரு பெண் ஆணின் மனநிலையை சொல்ல ஆரம்பிக்கிறார்.
பெண்:
கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா
ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை
ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்த பின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை
உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை
அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக் கொள்
கூட்டல் ஒன்றே குறியென்றான பின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்
உன்னை மங்கையர் என்னைக் கொள்வர்
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்
காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்.
இந்த இடத்திலிருந்து ஆண் ஆரம்பிக்கிறான். அவன் பெண்ணின் மனநிலையை பேசுகிறான்.
ஆண்:
கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்
காமக் கழிவுகள் கழுவும் வேளையில்
கூட நின்றவன் உதவிட வேண்டும்
வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்
இப்படிக் கணவன் வரவேண்டும் என
ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலட்சுமியென
கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன் பீச்சுக்கு
தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்
மூத்த அக்காள் கணவனுக்கு
முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையில் அவன்
(சக்)களத்தி வேண்டும் என்றான்
வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு
வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன்
அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்
வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
அதுவும் இதுவும் எதுவும் செய்யும்
இனிய கணவர் யார்க்குமுண்டோ?
உனக்கே அது அமையப் பெற்றால்
உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல எனக்கும் அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலட்சுமி நமோஸ்துதே!
கவிதை முடிகிறது. இப்போது நாம் பேசுவோம். ஒரு விஷயம் மோசமாக இருந்தால் அதனை ஒட்டு மொத்த சமூகமே வெறுத்து ஒதுக்க வேண்டும் எனச் சொல்வதுதான் சரியாக இருக்கும். இங்கே கட்டுரையாளர் “பெண்களும், குழந்தைகளும்’ படிக்க வேண்டாம் என்கிறார். அதாவது ஆண்கள் மட்டும் படிக்கலாமாம். ஆண்களும் பெண்களும் சம்பந்தப்பட்ட கலவியலை ஆண்கள் மட்டும் பேச வேண்டுமாம்.
இவ்வாறு ஆணாதிக்கத் திமிறுடன் பேசுகிற தினமலரின் வியாபார நியாயம் என்ன?. பெண்கள் குறித்த உடல் இச்சையை புளோஅப் படங்களாகப் போட்டு காசாக்குவதுதானே?. உடல் இச்சையைக் கிளப்புகிற காட்சிகளும், பாடல்களும் எவ்வளவோ தமிழ்த் திரைப்படங்களில் கொட்டிக்கிடக்கின்றன. அப்போதெல்லாம் வேர்க்காத, விறுவிறுக்காத தினமலர் மேற்கண்ட கவிதையில் காமத்தை மோப்பம் பிடிப்பதுதான் விந்தை.
மேற்கண்ட பாடலில், வக்கிரங்களை “கமர்சியல்” என்ற பெயரில் ஒளித்துப் பரிமாரும் கபடம் இல்லை.மாறாக, கலவி குறித்ததொரு விவாதத்தை துவக்குகிறது.
மனதின் அழுக்குகளையும், சமூகம் கற்பித்திருக்கிற தவறான புரிதல்களையும் பொதுவெளியில் பேசுவதாகவே இருக்கிறது இந்தக் கவிதை. இதனைக் கொண்டு பாலியல், உளவியல் குறித்து நமது புரிதல் பற்றிய பார்வைகளை மோத விடலாமேயனி, கலவியல் குறித்து பேசுவதே தவறு என்று பொருட்படுத்தி, வசவு பாடினால் அதில் பரபரப்பு அன்றி, வேறு எந்த உபயோகமும் இருக்கப்போவதில்லை.
"சரியான மனிதர் தவறான கட்சியில்" " இது வாஜ்பாய் குறித்த அப்பாவிகளின் கருத்து. நமது தினமலர் போன்ற ஊடகங்கள் இதை ஆமோதித்து தொடர்ந்து எழுதின. சரியான மனிதன் ஒரு தவறான கட்சியில் எப்படி இருக்கமுடியாதோ அப்படி ஒரு தவரான பத்திரிக்கையால் சரியாக எழுத முடியாது என்பதற்கு தினமலரே சிறந்த உதாரணம்.
ReplyDeleteபிரம்மன், இந்திரன், ராமன், கிருஷ்ணன் ஆகியோர் செய்த கொலைகள், பாலியல் வன்முறைகள், திருட்டுத்தனங்கள் தெய்வீகமக புகழ்வதில் தினமலருக்கு உள்ள விருப்பம் நாம் அறிந்தத்தான். அதனால்தான் அவர்கள் இப்படி எழுதுகின்றனர்.
வாத்சாயனாரின் காமசூத்திரம் 64 வகைகளில் பாலியல் தொழிலாளியுடன் பாலுறவு கொள்வது எப்படி என்பதை விளக்கும் இவைகளை கற்றுக் கொடுத்தால், எய்ட்ஸ்தான் பரவும். ஆண் - பெண் உறவு குறித்த இந்துமத கருத்துக்களை தாங்கிப்பிடிக்கும் தினமலரில் இந்த பாடல் குறித்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
ஆண் மட்டுமே பாலியல் தேவைகளை பேச வேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடு இது
னாத்திகர் கமல் பெரியாரின் காமலீலைகள் பற்றி கவிதை எழுதி இருக்கலாமே ஏன் வரலட்சுமி விரதம் போன்றவற்றி ,அரங்கநாதரை பற்றி எழுத வேண்டும்?
ReplyDeleteசமூகத்தின் முக்கியமான பிரச்சனைகளின் ஒன்றாக உளவியல் குறித்த தெளிவின்மையையும் கூறலாம் ... கலவியலில் ஒவ்வொருவருக்கும் ஆசைகள் உண்டு, அது மனித இயல்பு. அந்த இயல்பைப் புரிந்துகொள்ள விவாதங்கள் தேவைப்படுகின்றன. விவாதம் எழும்பினால்தான், குடும்பங்களை ஜனநாயகப்படுத்துவது சாத்தியம்.
ReplyDeleteஆர்கே சதீஸ் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் புரட்டுக் கதைகளைக் காட்டி எல்லலிடுவதே இயல்பு ... ஏதோ அவர் பொய் கூறியதைப் போல பதற வேண்டாம். பிரச்சனை கடவுள் பற்றியது அல்ல. காமம் குறித்த விவாதங்கள் அவசியமா இல்லையா என்பது பற்றியது.
ReplyDeleteஎனது வலைப்பூவுக்கு வந்து அழைப்பு விடுத்தமைக்கு நன்றி!
ReplyDeleteகமலின் கவிதைக்கு எனது எதிர்ப்பை எனது வலைப்பூவில் தெரிவித்துவிட்டேன்.
கமலஹாசன் தமிழ் சினிமாவை யாருமே சிந்திக்காதவண்ணம் அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்பவர்.தமிழில் உதட்டோடு உதட்டை ஒட்டச்செய்தவர்.திருமணம் ஆகாமலேயே லிவிங்டுக்கெதர் நடத்தலாம் என தமிழ்சினிமாவில் அறிமுகப்படுத்தி,இன்று பல இளைஞர்களும்,பெண்களும் திருமணம் ஆகாமலேயே,உடல் இச்சையைத்தீர்த்துக்கொள்ளும் வாழ்க்கைக்கு அச்சாரம் போட்டுள்ளனர். இ ந்தப்பாட்டும் அப்படித்தான்.லீனா மணிமேகலையின் அழகிய பெண் கவிதையத்தூக்கி சாப்பிடும் அளவிற்கு இருக்கிறது. இ ந்தப்பாட்டு இனி வீட்டில் அனைவரும் பார்க்கத்தகுந்த முறையில் அனைத்து தொலைக்காட்சிகளிலும் வரும்.காமம் குறித்து சின்ன குழ ந்தைகள் முதல் அம்மா,அப்பா,அக்கா,தங்கை, அண்ணன், தம்பி என ஆரோக்கியமான விவாதம் நடக்க வேண்டும் என மாற்று விரும்புகிறதா?கமல் ஹாசன் தனது ஆபாசக்கவிதையை தனது வீட்டோடு வைத்துக்கொள்ளட்டும்..உலகநாயகன் தனது வயதுக்கேற்றவாறு நடந்து கொள்ளட்டும்..எதற்குத்தான் விவாதம் என்ற விவஸ்தை கிடையாதா?
ReplyDeleteகாமம் என்பது பள்ளியில் பாடமாய் இருந்திருந்தால் ,மனப்பாடம் செய்து மார்க் கிடைத்தபின் மறந்திருப்போம்
ReplyDeleteமதிப்பிற்கு உரிய ஈஸ்வரன் ஐயா அவர்களே, முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விவாதம் "பெண்களும் குழந்தைகளும் கேட்க கூடாத கவிதையா இது என்பது.." உங்கள் கருத்து பெண்கள் கேட்க கூடாது என்பதா? அப்படியென்றால், மறு கேள்வி எதுவும் கிடையாது.. நீங்கள் ஆணாதிக்கத்தின் பகுதி என்று உணர்ந்து கொள்கிறேன்.
ReplyDeleteஉங்கள் கருத்து குழந்தைகள் கேட்க கூடாது என்பதா? அப்படியென்றால், தலைவனும் தலைவியும் அன்பு செய்யும் அக நானூறு கல்வி கூடங்களில் எதற்கு? தங்கள் கருத்தை மறுதலிப்பது மட்டுமே எனது எண்ணம் அன்று. சிறு வயதில் பலான புத்தகங்களை தேடி சென்ற உங்கள் நண்பர்கள் யாவரும் இல்லையா? குறைந்த பட்சம் அரைகுறை ஆடையை தேடிய அரைகுறை வயதினர்கண்டதும் இல்லையா? கண்டதை உண்மை என்று நம்பாமல் பெற்றவர்களிடம் கலவி பற்றி விவாதம் செய்வதில் என்ன தவறு. இனியேனும் சாமி போட்ட பிச்சையாக தன்னை என்னும் குழந்தைகள் குறையட்டும்.
அருள் அய்யா அவர்களே, காமம் என்பது பள்ளியில் பாடமாய் இருந்திருந்தால் ,மனப்பாடம் செய்து மார்க் கிடைத்தபின் மறந்திருப்போம். இல்லாத காரணத்தாலேயே என்னவென்றே புரியாமல் பல பிஞ்சுகள் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகின்றனர்.