மதியம் சன் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது. அது விக்கிலீக்ஸ் குறித்தது. அந்த செய்தியில் வட கொரியாவும், மியான்மரும் சேர்ந்து அணு சோதனை நடத்துவதாக, விக்கிலீக்ஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளதாகச் அறிவிப்பாளர் கூறினார். (தலைப்பின்போது) அதனைத் தொடர்ந்து, விரிவான செய்தியை வாசித்த அவர் “வடகொரியாவுடன் மியான்மர் அணு சோதனை இணைந்து நடத்த உள்ளதாக, விக்கி லீக்ஸ் இணைய இதழில் வெளியாகியுள்ள ஆவணங்களில், “மியான்மருக்கான அமெரிக்க தூதர்” செய்தி அனுப்பியுள்ளது விக்கிலீக்சில் வெளியாகியுள்ளது” என்றார்.
அமெரிக்கா வட கொரியாவைப் பற்றி எத்தனையோ செய்திகள் நேரடியாகவே சொல்லியிருக்க, இதுவொன்றும் புதிய தகவலில்லை. ஆனால், இந்தச் செய்தியை அவர்கள் ஏன் இப்போது சொல்ல வேண்டும்? அவர்கள் ஏன் விக்கிலீக்ஸின் பெயரைப் பயன்படுத்த வேண்டும்?.
அதே போல, விக்கிலீக்சின் இந்தியா பற்றி வெளியான தகவல்கள் பாகிஸ்தான் திட்டமிட்டு பரப்பியவை என ”பிரிட்டனிலிருந்து வெளியாகும் செய்தி ஏடு ஒன்றில் செய்தி வெளியானதாக ”அடுத்த செய்தி வந்தது.
இந்த இரண்டு செய்திகளின் நோக்கம் நாம் அறிந்ததே. விக்கிலீக்ஸ் பெயரைப் பயன்படுத்தி, அடுத்து வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா போட்டிருக்கும் போர்த் திட்டத்திற்கு வலுச்சேர்க்க முதல் செய்தி உதவிகரமாக அமைகிறது. இரண்டாவது செய்தி, விக்கிலீக்ஸ் இணையத்தில் வெளியாகும் தகவல்கள் எல்லாம், எதிரி நாடுகள் பொய்யாகப் பரப்பியவையாக இருக்கலாம் என்ற நம்பகமின்மையை ஏற்படுத்துவதாக உள்ளது. நாளைக்கே அவர்கள் வேறு ஒரு நாடுதான் இத்தனைக்கும் காரணம், அமெரிக்கா மீதான பொய்ப்புகார்களை அந்த நாடு திட்டமிட்டுப் பரப்புகிறது என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆனால், இதே செய்தி ஊடகங்கள் ஒரு செய்தியைக் காட்டவேயில்லை. அல்லது, சில ஆங்கில ஊடகங்களில் மிக மெதுவாகச் சொல்லிவிட்டு, அடுத்த செய்திக்கு தாவிவிட்டார்கள்.
என்ன அது?
அச்செய்தியின் ஆங்கில மூலம் மேற்கண்ட வீடியோவில் உள்ளது. அதன் தமிழ் வர்ணனைச் சுறுக்கமாக கீழே ...
“இராக் போரின்போது, போர் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. குறிப்பாக, ரூய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் 2 செய்தியாளர்களை, அதிகாரிகள் உத்தரவின் பேரில் சுட்டு வீழ்த்திய காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஒரு ஹெலிகாப்டரில் இருந்து வீடியோ பதிவாகிறது. அப்போது பின்னணியில் ஒருவர் நிருபர்கள் இருக்கும் இடம் நோக்கி திரும்பச் சொல்கிறார். பின்னர், ரூய்ட்டர்ஸ் நிறுவனத்தின் இரண்டு பத்திரிக்கையாளர்களை அடையாளம் காட்டிப் பேசுகிறார். சில நிமிடங்களில் அங்கு நோக்கி சரமாரி குண்டு பொழிகிறது. 12க்கும் அதிகமானோர் செத்து மடிகிறார்கள். (வீடியோ இங்கே)”
இந்தச் சம்பவம் நடந்தபோதே, ரூய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அமெரிக்க அரசிடம், “தகவலறியும் உரிமைச் சட்டத்தில்” இந்த வீடியோக்களைக் கேட்டுள்ளது. ஆனால், பெண்டகன் அதிகாரிகள் வீடியோவை தர மறுத்துவிட்டனர். தற்போது விக்கிலீக்ஸ் இந்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. அதில் வெளியாகியுள்ள 38 நிமிட வீடியோவில், கொலைகள் நேரலையாக பதிவாகியுள்ளன. இராக் போரின்போது சுமார் 140 பத்திரிக்கையாளர்கள் கொலையுண்டது இங்கே குறிப்பிடத்தக்கது.
சமாதானமும், அமைதியும், பட்டினியற்ற வாழ்க்கையும் கொண்ட ஜனநாயக சமூகத்திற்கு கனவு காணும் சாதாரண மக்களிடம், அமெரிக்காதான் ஜனநாயக நாடு, அமெரிக்காவின் நட்பு தேவை என்று இந்திய ஆட்சியாளர்கள் வாதிடும்போதும், ஊடகங்கள் அவர்களுக்கு ஒத்தூதி ஒபாமாவை வரவேற்கின்றன.
இப்போது விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்திகளின் மீது பொய்ச்சேற்றை அள்ளித்தெளிக்கும் வேலையை அந்த ஊடகங்கள் செய்யத்துவங்கியுள்ளன. அவர்கள் செய்தி உண்மைகளைக் கொல்கிறார்கள். அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளோ செய்தியாளர்களைக் கொல்கிறார்கள். விக்கிலீக்ஸ்க்குப் பின்னரேனும், இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
இந்த நேரத்தில் ஒரே ஆறுதல்: நமது வலைப்பதிவர்கள். நாம் தொடர்ந்து உண்மைகளை வெளியிட்டு வருகிறோம். ஜூலியன் அசாங்கேயின் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் மாற்று ஊடகத்தின் வாழ்த்துக்கள். ! ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்து குரல்கொடுப்போம்.
மேலும் படிக்க: பதுங்கு குழிக்குள் விக்கிலீக்ஸ் !
மேலும் படிக்க: பதுங்கு குழிக்குள் விக்கிலீக்ஸ் !
வலைப்பதிவுகள் சில் இணையதளங்கள் மட்டுமே உண்மையை வெளியிடுவது ஆறுதல் அதே நேரம் இணையத்தில் மட்டுமே ஜனநாயத்திற்கான குரல் ஒலிப்பதுதான் கவலைப்படவேண்டியது.
ReplyDeleteவருகைக்கு நன்றி, தமிழ்வினை ... இணையதளங்களுக்கென ஒரு வீச்சு இருக்கிறது. அந்த வீச்சு தமிழ் மக்களின் கருத்துத் தளத்தில் ஒரு மாற்றத்தை உண்டாக்கும். களத்திலும் போராடுபவர்கள்தான் .. இணையத்தில் சரியான ஜனநாயகத்திற்காக நிற்க முடியும். மாற்று, அந்தவகையிலான் பதிவர்களையே ஒருங்கிணைக்க விரும்புகிறது.
ReplyDeleteதொலைக்காட்சி ஊடக "முதலாளிகள்" எல்லாம் அமெரிக்காவில் படித்த மேதாவிகள் அல்லவா? மிகசிறந்த தொழில் வல்லுனர்கள்(வியாபாரிகள் என்றால் அவர்களுக்கு சற்று கேவலமாய் இருக்கும்) இவர்களிடம் நேர்மையாக ஞாயமாக அவைகளை எதிபார்க்க கூடாது. பணம் என்றால் ...எதற்கும் தயார் என்பார்கள். அவர்களுக்கு (அமரிக்கர்களுக்கு )வேறு என்ன வேண்டும்?
ReplyDeleteதாங்கள் கருத்து ஏதோ வேண்டுமென்றே அமெரிக்கா reuters நிருபர்களை கொலை செய்தது போல் உள்ளது. video உடன் பதிவான conversation கேட்டால் தெளிவாக புரியும் - நிருபர்கள் தீவிரவாதிகள் என்று தப்பாக புரிந்து கொள்ள படுகிறார்கள்.
ReplyDeleteஅமெரிக்கா எந்தக் குற்றமும் செய்யவில்லையென்றால் வீடியோவை ரூய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்திருக்கலாமில்லையா? ... ஏன் தரவில்லை.
ReplyDeleteஇன்னொரு விசயம் என்னவென்றால், போர்களின் சமயத்தில் பத்திரிக்கையாளருக்கும், எதிரிகளுக்கும் வித்யாசம் தெரியாத நிலையிலெல்லாம் ராணுவம் இருக்காது.