Friday, December 2, 2011

முல்லைப் பெரியாறு: பகைமை வேண்டாம்!


முல்லைப் பெரியாறு அணை விஷயத்தை முன்னிறுத்தி தமிழக, கேரளா மாநிலங்கள் இருதரப்பிலிருந்தும் அறிக்கைகளும், போராட்டங்களுமாய் இருக்கின்றன. தத்தம் நிலைபாட்டிலிருந்தே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்து வருகின்றன. ஒரு சுமூகமான தீர்வை எட்டுகிற பார்வையில்லாமல்  ஆத்திரத்தைத் தூண்டுவிதமாக  ஒருவரையொருவர் குற்றம் சுமத்துவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். இது இரு மாநில உறவுகளையும், மாநில மக்களிடையே இருக்கும் இணக்கத்தையும் கெடுக்கவே செய்யும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்பதாக பலரும் பேசிக்கொண்டு இருப்பதாலேயே, சற்று நிதானமாக இவ்விஷயத்தை அணுக வேண்டியதிருக்கிறது.
 
இதனைப் புரிந்துகொள்ளாமல், ஒரு நண்பர் முல்லைப் பெரியாறு விஷயத்தில் ’சிவப்பு அயோக்கியத்தனம்’ செய்வதாக ‘பாகிஸ்தான் மக்கள் வெல்லட்டும்’ பதிவுக்கு பின்னூட்டமிட்டிருந்தார். இங்கே முல்லைப்பெரியாறு விஷயமாக ஊர் எரிந்துகொண்டு இருக்கும்போது, பாகிஸ்தானுக்குப் போய் விட்டீர்கள் என ஆத்திரப்படவும் செய்திருக்கிறார்.

முதலில் இது எரிகிற பிரச்சினையாக இருக்கக் கூடாது என்றே மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது. முல்லை பெரியாறு அணை பிரச்சனையை பொறுத்தவரை எப்போதும் இரண்டு கோட் பாடுகளின் வழிகாட்டுதல் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய நிலைபாட்டை எடுத்துவந்துள்ளது.

முதலாவதாக, முல்லை பெரியாறு அணை தமிழகத்திற்கு தண்ணீர் தந்து வருகிறது. இது அந்தப்பகுதியின் விவசாய வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எதிர்காலத்திலும் தமிழகத்திற்கு தண்ணீர் தரப்படுவது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

இரண்டாவதாக, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தி லுள்ள 115 ஆண்டு பழமையான அணையின் பாதுகாப்பு குறித்த பிரச்சனையாகும். அணையின் பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வு போக்கப்பட வேண்டும். அணையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதோடு இடுக்கி மற்றும் அதன் தொடர்ச்சியாக உள்ள மூன்று மாவட்ட மக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். இடுக்கி பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வைத் தொடர்ந்து முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த பிரச்சனை முன்னுக்கு வந்துள்ளது. அணையின் பாதுகாப்பு குறித்து மக்களிடம் பரவலாக அச்ச உணர்வு எழுந்துள்ளது.

முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், பிரச்சனையின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து விசாரிக்க உயர் மட்டக்குழு ஒன்றை அமைத்துள்ளது. உச்சநீதிமன்றம் தனது விசாரணையை விரைவுபடுத்தி இந்தப்பிரச்சனையில் உரிய காலத்தில் தீர்ப்பு வழங்க வேண் டும். அதுவரை மத்திய அரசு தலையிட்டு கேரள, தமிழக அரசுகளுடன் ஆலோசனை நடத்தி, அணையின் பாதுகாப்புக்கு தேவைப்படும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

நீண்டகாலமாக நீடிக்கிற சிக்கலான இந்தப்பிரச்சனைக்கு சுமூக தீர்வுகாணும் வகையில் தமிழக, கேரள மாநில அரசுகளின் அணுகு முறை இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு சுட்டிக்காட்டுகிறது.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் ஒரு சுமூகத் தீர்வை எட்ட வேண்டுமானால் முதல் தேவை பரஸ்பரம் புரிதல்.  பகைமை அல்ல!

7 comments:

  1. Then why V.S.Achuthanandan announced fast on December 7th. I really don't understand the stand of Marxist in this issue.Is Marxist also doing the election politics?

    ReplyDelete
  2. இருமாநிலமும் பகைமையுடன் ஈடுபடுகின்றன என்பதில் இருந்தே உங்களது வண்டவாளம் பல்லிளிக்கிறதே! முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகம் எப்போது, என்ன தவறிழைத்திருக்கிறது அல்லது சண்டை போட்டிருக்கிறது? அணை பாதுகாப்பாக இல்லை என்று ஒரு புரளி கிளம்பியதும், தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவழித்து அணையை பலப்படுத்தியிருக்கிறது. பின்னர் உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு அணை பலமாக இருக்கிறது என்று தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள அனுமதி அளித்திருக்கிறது. இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்?

    ஆனால் உச்சநீதிமன்ற உத்திரவை மதிக்காமல் 136 அடிதான் வைத்திருக்க வேண்டுமென்றும், தற்போது 120 அடிதான் முடியும், பிறகு அணையை இடித்து புதிய அணை கட்ட வேண்டும் என்று யார் கோரியது?

    ReplyDelete
  3. முல்லைபெரியாறு அணை பலமுடன் உள்ளது. அதன் முழு உரிமையும் தமிழகத்துக்கு தான் என்ற கருத்தில் எள் அளவும் மாற்றம் இல்லை. ஆனால் ஒரு எதார்த்த தமிழனாக இந்த கோரிக்கைகளை முன் வைக்கிறேன்.

    அணை நிலநடுக்கப்படுகியில் உள்ளது. அடிக்கடி லோசான நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது உண்மை. ஒவ்வொரு மழையின் போதும், ஒவ்வொரு நில அதிர்வின் போதும், மரண பயத்தில் உறைந்துபோகின்றனர் ஒரு லட்சம் மக்கள். போதாகுறைக்கு ஊடகங்களின் பீதி கூட்டலின் உச்சம் வேறு. அணு அணுவாக செத்துமடியும் இந்த உயிர்களின் மரண கூக்குரலை தயவு செய்து காது கொடுத்துக் கேளுங்கள்.

    அணையை உடைக்கவோ, புதிய அணை கட்டவோ வலியுறுத்தவில்லை. தயவு செய்து அணையின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள் என்று தானே சொல்கிறோம். இதில் என்ன தவறு கண்டீர்கள்?

    முல்லைபெரியாறு அணையின் பயன்பாடு இல்லாமலே தமிழகம் தாராளமாக தண்ணீர் எடுத்துச்செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி இருக்கும்போது எதற்காக பிரச்சனையையே தீர்வாக வலியுறுத்தி வருகிறீர்கள்? ஒரு பிரச்சனைக்கு அதன் மாற்றுவழி ஒன்று தானே உண்மையான தீர்வு.

    கிழக்கு இந்திய கம்பெனியால் முதன் முதலில் பரிசீலிக்கப்பட்ட திட்டம், பென்னிகுயிக் விரும்பிய திட்டம் இது ‘‘கூடுதல் கால்வாய்கள் மூலம் தண்ணீரை நேரடியாக தமிழகத்துக்கு கொண்டு வருதல்’’. பென்னிகுயிக்கிடம் நிதி இல்லாமல் தான் இந்த திட்டம் கைவிடப்பட்டதே தவிர வாய்ப்பு இல்லாமல் அல்ல. இந்த திட்டம் தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய வரபிரசாதமாக அமையும். கேரள மக்களின் தலைக்கு மேல் உள்ள மரண பயத்திற்கு முழுமையான ஆறுதலை தரும்.

    இந்த திட்டத்தை ஏன் பரிசீலித்து செயல்படுத்தக்கூடாது?

    இதனால் தமிழக விவசாயிகளுக்கு கடுகளவேனும் இழப்பு உண்டா? சுமூகமான தீர்வுகள் இருக்கும்போது ஏன் தமிழர்கள் வீண்பிடிவாதம் பிடிக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணை என்றும் தமிழர்களுடையது தான். ஆனால் தயவு செய்து மனிதாபிமான அடிப்படையிலாவது கேரள போராட்டக்குழுவின் கோரிக்கையை பரிசீலியுங்கள்.

    இந்த கோரிக்கையில் 1% மேனும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் உங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  4. தமிழ்மலர்,
    நீங்களே நினைத்தாலும் புதிய அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவரமுடியாது என்றல்லவா சொல்லப்படுகிறது!

    http://vimarisanam.wordpress.com/2011/12/02/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/

    ReplyDelete
  5. முல்லைப் பெரியாறு பிரச்சனை தற்போது இரு மாநில சிக்கலாக மாற்றப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இதை இனவெறியர்கள் இடதுசாரிகளைத் தாக்குவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வது பற்றி நாம் கவலைப்படுகிறோம். அதேசமயம் மத்திய அரசு சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் பிரச்சனையில் இதுவரை இல்லாத அளவுக்கு மக்களிடமிருந்து மிகவும் தனிமைப்பட்டு நிற்கிறது. இதில் அரசியல்ரீதியாக உறுதியான எதிர்ப்பாளர்களாக முன்நிற்பவர்கள் இடதுசாரிகள். இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் அதிமுக அரசு மக்கள் மீது கடுமையான கட்டணச் சுமைகளை சுமத்தியதற்கு பொதுவான எதிர்ப்பு இருந்தாலும், இடதுசாரிகளே களப்போராளிகளாக முன் நிற்கிறார்கள். கடுமையான வாழ்வியல் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் உழைக்கும் மக்களுக்கான அரசியலை இடதுசாரிகள் முன்னெடுக்கும் நேரத்தில் இதுபோன்ற இனவெறி அரசியல் கிளப்பப்படுவது தற்செயலானதா? அல்லது இந்திய அளவிலும், கேரளத்திலும், தமிழகத்திலும் இடதுசாரிகளுக்கு எதிராக ஆளும் வர்க்கங்களின் திட்டமிட்ட சதியா? — Kumaresan Asak

    face book படித்தது யோசிக்க வேண்டிய மேட்டர்தான் மக்கா...

    ReplyDelete
  6. திரு.ரிஷி

    கேரளா புதிய அணை கட்டினால் தமிழகத்துக்கு ஒரு லிட்டர் தண்ணீர் கூட கிடைக்காது என்பது 100% உண்மை. அதனால் தானே தமிழகமே முழுமையாக தண்ணீரை எடுத்துக்கொள்ளும் மாற்று வழிகளை கேரள போராட்ட குழுவினர் வலியுறுத்துகின்றனர். அது ஏன் தமிழக தமிழர்களுக்கு புரிவதில்லை.

    முழுமையாக பாதுகாப்பாக தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறோம். இதனால் உங்களுக்கு தண்ணீர் எங்களுக்கு பாதுகாப்பு நிரந்தரமாக உறுதி செய்யப்படும்.

    அதை ஏன் பரிசீலிக்க கூடாது?

    ReplyDelete
  7. Kerala Irrigation and Water Conservation Amendment Act, 2006 http://www.kerenvis.nic.in/legislation/Microsoft%20Word%20-%20Act%202006.pdf
    62(e) to direct the custodian to suspend the functioning of any dam, to decommission any dam or
    restrict the functioning of any dam if public safety or threat to human life or property, so requires;
    THE DAM SAFETY BILL, 2010
    http://www.prsindia.org/uploads/media/dam%20safety%20bill%202010.pdf
    26. (1) Without prejudice to the provisions of this Act, all specified dams, shall fall
    under the jurisdiction of the State Dam Safety Organisation or State Dam Safety Cell, as the
    case may be, of the State in which dam is situated in matters related to dam inspections,
    analysis of information, reports or recommendations regarding safety status, and remedial
    measures to be undertaken to improve dam safety; and in all such matters full co-operation
    shall be extended by the concerned Non-State Dam Safety Organisation or the Non-State
    Dam Safety Cell and the owner of the specified dam.
    இரு மாநில உறவை பிளவுபடுத்தும் இது போன்ற சட்டங்கள் பற்றி
    சி.பி.எம் கட்சியின் கேரள,தமிழக மற்றும் அரசியல் தலைமைக்குழுவின் நிலைப்பாடு என்ன ???

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)