ஆப்கானிஸ்தானையொட்டி அமைந்துள்ள பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் மோமண்ட் மாவட்டம் சலாலா எனும் மலைக் கிராமத்திற்கு அருகில் இரண்டு ராணுவ செக்போஸ்ட்டு களில் கடந்த சனிக்கிழமை, அமெரிக்க போர் விமானங்கள் அதிரடியாக தாக்குதல் நடத்தின. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 24 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கராச்சி மாநகரில் அமெரிக்கத் தூதரகம் முன்பு பல்லாயிரக்கணக் கான மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். பெஷாவர், இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி, மூல்தான் என அனைத்து மாநகரங்களிலும் ஆவேசப் போராட்டம் நடக்கிறது.
பாகிஸ்தானில் நீண்டகாலமாக அதிகாரத்தில் இருந்த ராணுவ ஆட்சியாளர்களும் சரி, குறைவான காலமே ஆட்சியில் இருந்துள்ள ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களும் சரி, அமெரிக்காவுக்கு வெண் சாமரம் வீசியதன் விளைவை அந்த நாடு அறுவடை செய்து கொண்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே, பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்பகுதி கொதிநிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. பின்லேடனைத் தேடுகிறோம் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் கொடியப் போரை நடத்தி அந்நாட்டைச் சிதைத்த அமெரிக்க ராணுவத்தின் தலைமையிலான நேட்டோ படைகள், ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையை சல்லடையாகத் துளைத்துள்ளன. பின்லேடன் கொல்லப்பட்ட பிறகும், எல்லையோர மலைக்கிராமங் களில் அமெரிக்க கொத்துக் குண்டுகள், பேரழிவை ஏற்படுத்தி வருகின்றன. இப்பகுதியில் உள்ள ஷாம்சி நகரில் அமெரிக்க விமானப்படைத்தளமே இருக்கிறது. இங்கிருந்துதான் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இரண்டின் எல்லைகளிலும் நேட்டோ போர் விமானங்கள் குண்டு மழை பொழிகின்றன. நேட்டோ படைகளுக்கு உணவு, எரிபொருள் சப்ளையும் இப்பகுதி வழியாக நடக்க அனுமதி கொடுத்திருந்தது பாகிஸ்தான் அரசு. இன்னும் சொல்லப்போனால் ஆப்கானிஸ்தான் மீதான போருக்கு அமெரிக்காவுக்கான தளமாக இருந்ததும் பாகிஸ்தானே!
இப்போது ஆப்கானிஸ்தானை கைப்பற்றி விட்ட அமெரிக்கா, தனது “ஆப்-பாக்.” திட்டத்தின் அடுத்த கட்டமாக, பாகிஸ்தானை கேள்வி ஏதும் கேட்காத முழு அடிமையாக்க முயல்கிறது.
அதன் அடையாளங்கள்தான், கடந்த பிப்ரவரியில் அமெரிக்கத் தூதர் என்ற பெயரில் இயங்கிய சிஐஏ ஏஜெண்டான ரேமண்ட் டேவிஸ் என்பவர், லாகூர் சந்தையில் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் இரண்டு அப்பாவி இளை ஞர்களைச் சுட்டுக்கொன்றார். அடுத்து, மே மாதம் அபோட்டாபாத்தில் அமெரிக்கப் படை கள் அத்துமீறிப் புகுந்து பின்லேடனைக் கொன் றது. இப்போது நேட்டோவின் தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் பலி...!
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களோடு, கடந்த மூன்று ஆண்டுகளில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 72 பேர் கொல்லப்பட்டனர் என்று பாகிஸ்தானின் மேஜர் ஜெனரல் அதார் அப்பாஸ் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், "250 பேருக்கு மேல் காயமடைந் திருக்கிறார்கள். பல காரணங்களைக் கூறி அமெரிக்கா தலைமையிலான நேட் டோ அமைப்பு தற்போது வருத்தம் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் படையினர் தாக்கி ஒரு நேட்டோ வீரர்கூட இறந்தது கிடையாது. ஒரு குண்டோ, இரண்டு குண்டோ அல்ல. தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. நேட்டோ அதிகாரிகள் நினைத்திருந்தால் துவக்கத்திலேயே நிறுத்தியிருக்க முடியும். பாகிஸ்தான் ராணுவத்தினர் சுருண்டு விழுந்தபிறகும் குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவை நம்பி வாழ்ந்த நாடு எதுவும் இல்லை. அந்தப் பட்டியலில் பாகிஸ்தானும் சேருகிறது. இனியும் அமெரிக்காவின் ஏவலாளிகளாக பாகிஸ்தான் ஆளும் வர்க்கத்தினர் நீடிக்க முடியாது. அந்த நிர்ப்பந்தம் ராணுவத்திற்குள்ளேயே எழுந்துள்ளது. ஏகாதிபத்தியத்தின் தாக்குதல் மட்டுமின்றி வேலையின்மையும் வறுமையும் விரட்டுவதால் வீதிகளில் மக்கள் திரள்கிறார்கள். இந்த எழுச்சி பரவட்டும். பாகிஸ்தான் மக்கள் வெல்லட்டும்!
அதானே பார்த்தேன் எங்கடா முல்லைப் பெரியாறு பிரச்சினையைப் பற்றி எதுவும் காணவில்லையே என்று. இங்கு ஊர் பற்றி எரியும் போது அமெரிக்கா பாகிஸ்தான் பிரச்சினையை பற்றி எழுதுவீர்களே தவிர தமிழ் நாட்டைப் பற்றி மட்டும் சிந்திக்க மறுப்பீர்கள் ஏனெனில் அங்கு போராடுவது "உங்கள்" தோழர்கள் என்பது தானே இது தானா சிவப்பு அயோக்கியத்தனம் என்பது ?
ReplyDelete