சில்லறை வர்த்தகத்தில் அந்நியமுதலீட்டிற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றன. நிதிஷ்குமார், மாயாவதி, மம்தா பானர்ஜி, ஜெயலலிதா போன்றவர்களே தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என குரல் எழுப்பியிருக்கின்றனர். தி.மு.க, திரிணாமூல் போன்ற ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகளே, மத்தியிலிருக்கும் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசின் முடிவுக்கு தங்கள் சம்மதத்தைத் தெரிவிக்கவில்லை. தேசம் முழுவதும் டிசம்பர் 1ம் தேதி கடையடைப்பு என அனைத்திந்திய வர்த்தகர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருக்கிறது. ஒரு மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்திருக்கிறது.
பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இவ்விஷயத்தை முன்வைத்து கொந்தளிப்பு அடங்காமல் இருக்கிறது. எதோ தங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து பாராளுமன்றத்தில் தேவையில்லாமல் அமளிசெய்து முடக்குவது போல மன்மோகன் வகையறாக்கள் சீன் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். நாட்டின் ஒரு முக்கியப் பிரச்சினை குறித்து விவாதிக்கத் தயாரில்லாமல், அயோக்கியத்தனம் செய்து வருகிறது காங்கிரஸ். கோடீஸ்வரர்கள் அமைச்சர்களாக உள்ள காங்கிரஸ் அமைச்சரவைக்கு, சில்லரை வர்த்தகத்தின் சீரழிவை பற்றியோ அல்லது கோடிக்கணக் கான நடுத்தர, சாதாரண வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது பற்றியோ அக்கறை இல்லை.
இவ்வளவு எதிர்ப்பையும் மீறி, மன்மோகன் தனது அரசின் முடிவை நியாயப்படுத்திப் பேசிக்கொண்டு இருக்கிறார். நேற்று காங்கிரஸின் இளைஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தேவை எனபதை வலியுறுத்தி இருக்கிறார். நுகர்வோர்கள் பயன்பெறுவதுடன், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், விவசாயிகள், தங்கள் விலை பொருட்களுக்கு கூடுதல் விலை பெறவும் தொழில்ட்ப இறக்குமதிக்கு வழிகோலவும் தீவிர ஆலோசனைக்கு பிறகே சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாம். இதன் மூலம் நாட்டிற்கு நவீன தொழில்ட்ப வசதிகள் கிடைக்குமாம். கிராமப்புற கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுமாம். விவசாய விளைபொருட்கள் சேதம் அடைவது குறையுமாம். இதனால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுவது சரியல்லையாம். சிறு தொழில் துறையை மேம்படுத்தும் விதத்தில், சில நிபந்தனைகளை விதித்து இருக்கிறார்கள்.
இப்படி எவ்வளவு வாக்குறுதிகளையும், சால்ஜாப்புகளையும் இந்த காங்கிரஸ் அரசு இதே வாயால் சொல்லி வந்திருக்கிறது! பத்து கோடிபேருக்கு வேலை உருவாகும், வறுமையை ஒழிப்போம், பொருளாதார வளர்ச்சி அபரிதமாகும், விவாசய உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடியும் என்று, தாராளமயத்தினை வேகப்படுத்தும் போதெல்லாம் எத்தனை முறை இதே மன்மோகன் சொல்லியிருக்கிறார்! அதெல்லாம் நடந்தா விட்டது? பணவீக்கம், விலைவாசி எல்லாம் தாறுமாறாய் உயர்ந்து, நாட்டின் பொருளாதாரமே உருக்குலைந்து போவதுதானே நடந்திருக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்வதும், இளைஞர்கள் வேலை இல்லாமல் பித்துப் பிடித்துப் போவதும், சாமானியர்களின் எதிர்காலம் இருண்டு போவதும்தானே கண்ணெதிரே நடந்துகொண்டு இருக்கிறது.
எல்லா உண்மைகளையும் புறந்தள்ளிவிட்டு, நாட்டின் நலனை காலில் போட்டு மிதித்துவிட்டு, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, மக்களின் போராட்டங்களையெல்லாம் நசுக்கிவிட்டு அந்நிய முதலீட்டுக்கு சில்லரை வணிகத்தில் இடமளிக்க ஏன் இந்த வேகம் மன்மோகன்சிங்குக்கும், காங்கிரஸுக்கும்?
அந்நியருக்கு நெஞ்சும், இந்தியாவுக்கு வயிறுமாக இருக்கும் இந்த அமெரிக்க, பன்னாட்டு முதலாளிகளின் அடியாட்களை அடையாளம் காண்போம். வேரறுப்போம்.

0 comments:
Post a Comment