ஒரு நடிகரின் மரணத்திற்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் விவசாயிகள் தற்கொலைக்கு கொடுக்கப்படுவதில்லை என் பதை நீதிபதி மார்கண்டேய கட்ஜு மிகுந்த வேதனையோடு சுட்டிக்காட்டியுள்ளார். அந்த நடிகருக்கு தாமும் ரசிகர்தான், ஆனாலும் அவர் மரணத்திற்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் இதர சமூக அரசியல் பொருளாதார பிரச் சனைகளுக்கு தரப்படுவதில்லையே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இவை பொருள் பொதிந்த கேள்விகள்.
தமிழகத்திலும் கடுமையான பேருந்து கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, காத்திருக்கும் மின்கட்டண உயர்வு, எப்போதும் இல்லாத மின்வெட்டு என தமிழகம் மிகப் பெரிய நெருக்கடியில் தவிக்கிறது. தொழில்கள் முடங்குகின்றன. வாழ்க்கை நைந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் இதற்கு தமிழக ஊடகங்கள் கொடுக்கிற முக்கியத்துவத்தை விட, வேறு சில உணர்ச்சிபூர்வமான பிரச்சனைகளில் கொம்பு சீவி விடுவதற்கே அதிகம் வாய்ப்பளிக்கிறது.
முல்லைப் பெரியாறு பிரச்சனை ஒரு முக்கிய மான பிரச்சனை தான். `உயிர் பயம்’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி ஒரு தரப்பிலும் `வாழ்வாதாரத்திற்கு ஆபத்து’ என்பதை கூறி மறு பக்கமும் மக்களை திரட்டுகிறார்கள். அறிவியல் பூர்வமாகவும், நடைமுறை சாத்தியமானதாகவும், சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டதுமான ஒரு நியாயமான தீர்வை எட்டுவதற்கு இடையூறாக இரண்டு பக்கமும் சில சுயநல சக்திகள் கொம்பு சீவி விடுகின்றன. முன்னாள் முதல்வர் ஆரம்பத்திலேயே மாநிலங்களுக்குள் பகைமை வளர்க்க இதை பயன்படுத்தக் கூடாது என்று அறிக்கையில் தெரிவித்தார். தற்போது முதல்வர் ஜெயலலிதாவும் வதந்தியை பரப்பாமல், அண்டை மாநில மக்கள் ஒருவரை ஒருவர் பகைக் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவும், இரு மாநில மக்களும் அமைதிக் காத்து சுமூகமாக தீர்வு காண வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பிற்கு இணங்கல் அல்லது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணல். இந்த இரண்டு வழிகளுக்கு மாற்று வழி ஏதும் கிடையாது.
ஆயினும் சில சுய நல சக்திகள் நடை முறைக்கு ஒவ்வாத வெறித்தனங்களை தூண்டி விடுவதில் மும்முரம் காட்டுகின்றன. வதந்தியும், பதற்றமும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. கொடுமை என்னவெனில், சமூக பொறுப்போடு இவற்றை அணுகாமல் ஊடகங்கள் தங்கள் விற்பனைக்கும் பரபரப்பிற்கும் இதை பயன்படுத்துவது ஆபத்தானது; பிரச்சனையைத் தீர்க்க உதவாது.
ஊடகங்கள் இப்படி முல்லைப்பெரியாறில் மட்டுமல்ல, வேறு சில உணர்ச்சிமயமான பிரச்சனைகளிலும் சமூக பொறுப்போடு நடந்து கொள்ளவில்லை என்பதை யாரும் மறுக்க முடி யாது. நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, ஊடகங்கள் குறித்து சமீப காலமாக செய்து வரும் விமர்சனங்கள் தமிழக ஊடகங்களுக்கும் பொருந்தும்.
Mullaperiyar Dam: Supreme Court dismisses Kerala's plea to lower water level to 120 feet
ReplyDeleteRead more at: http://www.ndtv.com/?cp
ஊடகங்கள் நாட்டின் 4 வது தூண் என்று எல்லாராலும் பெருமையாகப்பேசப்படுகிறது. ஆனால் இது முதலாளிகளால் நடத்தப்படுகிற முதலாளிகளுக்கு சாதகமானது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
ReplyDeleteஅங்கே போராடுவது உங்கள் தோழர் கூட்டம்தானே அங்கே போய் உங்கள் அறிவுரையை சொல்ல வேண்டியது தானே. தமிழக மார்க்சிஸ்டுகளின் பித்தலாட்டம் ஊர் அறிந்ததுதானே
ReplyDeleteமுல்லைப்பெரியாறு முக்கியத்துவம் இல்லாத பிரச்சினையா ? என்ன அயோக்கியத்தனம் இது
ReplyDelete