முல்லை பெரியாறு அணை பூகம்பம் வந்தால் உடைந்து விடும். அதனால் 40 லட்சம் பேருக்கு பாதிப்பு எனச் சொல்கிறார்கள். அங்கே பூகம்பம் வந்தால் மட்டும் தான் பாதிக்குமா? பாதுகாப்பான இடத்தில் வேறு அணை கட்டுவதாகச் சொல்கிறார்களே, அங்கே பூகம்பம் வந்தாலும் அதேபோல் தானே பாதிக்கும்? இயற்கைப் பெருஞ்சீற்றங்கள் எங்கே எப்போது வந்தாலும் மனிதன் உருவாக்கி வைத்திருக்கும் பாதுகாப்புகள் வரம்புக்கு உட்பட்ட அற்பமானவையே!
முல்லை பெரியாறு பிரச்சனையில் இரு மாநில உறவுகள், அரசியல் மோதல்கள், மக்கள் உயிர் பாதுகாப்பு, விவசாயிகள் வாழ்வாதாரம் என எத்தனையோ பரிமாணங்கள் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் அடிப்படையான ஒரு விசயம் நம்பிக்கை சார்ந்தது! எதை நம்புவது என்பது! விஞ்ஞானத்தை நம்புவதா, வேண்டாமா என்பது இதற்குள்ளும் பொதிந்திருக்கிறது.
விஞ்ஞானரீதியாக ஆய்வு செய்து அணை பலமாக இருக்கிறது என்று பொறியாளர்களும், வல்லுநர்களும் சொல்வதை யாவரும் ஏற்க வேண்டும். அதைத் தாண்டி அணை உடையுமா என்றால் அதற்கு ஐந்தோ, பத்து சதவிகிதமோ வாய்ப்பு இருக்கலாம். ஆனால் விஞ்ஞானரீதியாக அறிஞர்கள் ஆய்ந்து அணை உடையாது என்று சொல்வதை நாம் ஏற்க வேண்டும், நம்ப வேண்டும். இந்த வழிமுறையைப் பின்பற்றாமல் உடைந்து விடும் என்று "வெற்று" நம்பிக்கை அடிப்படையில் பேசுவது, பீதி கிளப்புவது சரியல்ல.இவைகளுக்கு எதிரான நம்பிக்கையூட்டும் பிரச்சாரத்தைச் செய்வதே நமது பணியாய் இருக்க வேண்டும்.
முல்லை பெரியாறு என்ற ஒரேயொரு பிரச்சனைக்கு மட்டுமல்ல, வாழ்வின் எந்தவொரு பிரச்சனையையும் இது போல் விஞ்ஞானத்துக்குப் புறம்பான ஏதோ ஒரு நம்பிக்கை அடிப்படையில் முடக்க முடியும், தகர்க்க முடியும். ஆனால் மனிதகுலத்தின் நீடித்த வளர்ச்சிக்கு அது உதவாது. வரலாற்றுரீதியாக அது பின்னடைவை ஏற்படுத்தும்.
நம் காலத்தின் மற்றொரு உதாரணம் சேது சமுத்திரத் திட்டம்! சேது கால்வாய் உருவாக்கப்பட்டால் தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் உதவியாக இருந்திருக்கும். ஆனால் அதை மதவெறியர்கள் "நம்பிக்கை" அடிப்படையில் முடக்கி விட்டார்கள். கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையிலும் கூட அத்தகைய ஒரு விசயம் இருக்கிறது. மக்களுக்கு விஞ்ஞானரீதியாக ஒளியூட்டினால், அதன் சாதக, பாதகங்களை அறியவைத்தால் நல்லது.
வெற்று அச்சம், அழிவு ஏற்படும் என்ற அவநம்பிக்கை முன்னேற்றத்துக்கு உதவாது. மனிதன் ஒவ்வொரு முறையும் இயற்கையோடு போராடியே முன்னேறியுள்ளான். அதனால் இயற்கை வளங்கள் பாதிக்கும் போது இயற்கை அதற்கும் எதிர்வினை ஆற்றி தனது வல்லமையை நிரூபித்து வருகிறது. அதற்கு ஏற்ப இயற்கையோடு தேவையானவற்றில் இயைந்தும், சாத்தியமானவற்றில் போராடியும் மாற்றைக் கண்டுபிடித்துத்தான் மனிதகுலம் தன் வாழ்க்கை பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
எனவே விஞ்ஞானத்தின் மீதான நம்பிக்கை என்ற அடிப்படையும் முல்லை பெரியாறு விசயத்தில் கேள்விக்குள்ளாக்கப்படுவதை நாம் ஏற்கக் கூடாது. உண்மையானத் தரவுகளின் அடிப்படை இல்லாமல் ஏற்படுத்தப்படும் அச்சங்கள் விஞ்ஞானத்துக்குப் புறம்பானது மட்டுமல்ல, மக்களுக்கு இழைக்கும் துரோகமும் ஆகும்.
- தூயவன்
மூத்த விஞ்ஞானி அச்சுதானந்தாவுக்கு இந்த கட்டுரையின் முன் பகுதியை, மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து, அவர் வீட்டின் கதவின் மேல் ஒட்டிவிட்டு ஓடி வந்து விடுங்கள்! கையில் கிடைத்தால் வார்த்தைகளில் பின்னியெடுத்திடுவார்!
ReplyDeleteஇந்த ரணகளத்திலும் காவிக்கட்சியைத் திட்டி கிளுகிளுப்பு வேண்டியிருக்கு!
//இந்த ரணகளத்திலும் காவிக்கட்சியைத் திட்டி கிளுகிளுப்பு வேண்டியிருக்கு!
ReplyDeleteஅப்படின்னா காவிக்கட்சி செஞ்சது சரின்னு சொல்றிங்களா?
சுயலாபத்துக்காக காவிக்கட்சி செய்வதைப்போல,கேரள காம்ரேட்களும் செய்ய வேண்டுமா? இல்லையெனில், காவிக்கட்சியுடன் ஒற்று நோக்குப் பார்வை எதற்கு?
ReplyDeleteஆம் எனில், இது தேவையற்ற பதிவு!
தொடர்ந்து இந்த தளத்தில் உங்கள் பதிவு சி.பி.எம் மிற்கு எதிராகவே உள்ளது. விமர்சனத்தை வரவேற்கிறேன் ஆனால் கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டும் என்றே பதிவு செய்தால் என்ன வென்று சொல்வது?. உங்கள் பதிவின் அர்த்தங்களை பார்த்தால் நீங்கள் பி.ஜே.பி யா? ஆர்.எஸ்.ஏஸ் சா?. காரணங்களுடன் பதிவை இறக்குங்கள்.
ReplyDeleteரமேஷ் வெங்கடபதி///தொடர்ந்து இந்த தளத்தில் உங்கள் பதிவு சி.பி.எம் மிற்கு எதிராகவே உள்ளது. விமர்சனத்தை வரவேற்கிறேன் ஆனால் கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டும் என்றே பதிவு செய்தால் என்ன வென்று சொல்வது?. உங்கள் பதிவின் அர்த்தங்களை பார்த்தால் நீங்கள் பி.ஜே.பி யா? ஆர்.எஸ்.ஏஸ் சா?. காரணங்களுடன் பதிவை இறக்குங்கள்.
ReplyDeleteகிராமத்தான்//
ReplyDeleteசி.பி.எம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா என்ன? விமர்சிப்போர் கண்டிப்பாக காவிக்கட்சியினராகத்தான் இருக்க வேண்டுமோ?
சரி சொல்லுங்கள்! தமிழக சி.பி.எம் பெரியார் அணை விவகாரத்தில் வெளிப்படையாக என்ன நடவடிக்கை எடுத்தது? தமிழக மக்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது?
சர்வதேசியம் பேசுபவர்கள், இன்று கேரள சிபிஎம் பிரிவுக்கு பணிந்து கிடப்பது ஏனோ?இது என்ன வகை கொள்கைப் போராட்டம்? வெற்றி பெற வைக்கும் கேரளத்திற்கு சாதகமாக நடந்து கொள்வதன் பெயர் சுயநலமன்றி வேறென்ன?
மாற்றுக் கருத்துக் கூறுபவரை "பிராண்ட்" செய்வதை, "மாற்று"வது எபோது?