” நீ தான் முதல் பெண்”
என்றார் கடைக்காரர்
பெருமைப்படக் காரணம் இல்லை
அது தமிழில் வாழ்த்தட்டை கேட்டதற்கு.
வருடத்திற்கு ஒரு முறை வருமாம்
தமிழர் திருநாளுக்கு.
தமிழைக் கொண்டாடாமல்
திருநாள் கொண்டாடி மட்டும் என்ன பயன்?
நெருங்கிய ந்ண்பனுக்கு,
பாசமிகு அத்தைக்கு,
கற்றுத் தந்த ஆசானுக்கு
வாழ்த்தி அனுப்ப
வார்த்தைகள் இல்லை செம்மொழியில்
தன் கை தான்
தனக்குதவி என்றெண்ணி
வெளியே வந்தேன்.
“பவானி வாழ்த்தட்டை நிலையம்”
தமிழில் பெயர் பலகை!
கவி தை: விஜி
உங்கள் கவிதை வரிகள் நன்று . வாழ்த்துக்கள் .
ReplyDelete