Thursday, December 23, 2010

இணையச் சண்டியர் வினவுக்கு ஈடு இணை உண்டா?



வீதியில் போகிற வருகிறவர்களை எல்லாம் அடித்துக்கொண்டும், கல்லெறிந்தும் கொண்டு இருக்கிறவனைப் பார்த்திருக்கிறீர்களா? என்ன செய்வீர்கள் நீங்கள்? அவனிடம் சண்டைக்குப் போய் என்ன ஆகப்போகிறது என்று ஒதுங்கித்தானே போவீர்கள்? அப்படித்தான் நாங்களும் முடிவு செய்திருந்தோம். ஆனால் எல்லை மீறிச் சீண்டிக்கொண்டே இருக்கிறது வினவு.


மாற்று வலைப்பக்கத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்தி தொடர்ந்து எழுதினால் வினவுக்கு இப்படி பொத்துக்கொண்டு வருகிறது:

“ஸ்பெக்டரம் ஊழலுக்காக நாடு முழுவதும் எதிர்ப்பு இயக்கம் எடுக்கப் போவதாக சி.பி.எம் அறிவித்திருக்கிறது. இணையத்திலும் நமது மாற்று தோழர்கள் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து தினம் இரண்டு பதிவுகள் போட்டுத் தாக்குகிறார்கள். தோழர்களது கணக்கு இதை வைத்து தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு, தி.மு.க இல்லாத அ.தி.மு.க அணியை பலப்படுத்துவது. ஆனால் அம்மா அங்கே தோட்டத்தில் காங்கிரசு பெருச்சாளிகளுக்குக்காக பொக்கேயை வைத்துக் கொண்டு காத்துக்கிடக்கிறாரே? பார்ப்பனிய ஊடகங்களும் அதையே இலக்கு வைத்து பிரச்சாரம் செய்கின்றன. இந்நிலையில் தோழர்கள் என்ன செய்வார்கள்? காங், அ.தி.மு.க கூட்டணி அமையக்கூடாது என்று ஆண்டவனிடம் வேண்டுவதைத் தவிர அவர்களுக்கு கதிமோட்சம் ஏதுமில்லை.
மேலும் ஊழல் நாயகி ஜெயலலிதா தலைமையில் ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்க்க முடியுமா என்ற கூச்சம் கூட சி.பி.எம்மிடம் இல்லை. அந்த அளவுக்கு அம்மா விசுவாசம் கொடிகட்டிப்பறக்கிறது. சுயமரியாதையும், தனது கொள்கையை வைத்து மக்களைத் திரட்ட முடியுமென்ற நம்பிக்கையும் இல்லாத இந்த செங்கொடிக் கோமாளிகளின் அரசியல் எதிர்காலம் அதாவது தமிழகத்தில் கிடைக்கும் நாலைந்து சீட்டுக்கள் போயஸ் தோட்டத்து புரட்சித் தலைவியிடம்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
ஒருவேளை காங், அ.தி.மு.க கூட்டணி ஏற்பட்டால் சி.பி.எம் தோழர்கள் வேறுவழியின்றி தி.மு.க கூட்டணிக்கும் செல்வதற்கு தயங்க மாட்டார்கள். என்ன, “ஸ்பெக்ட்ரம் ஊழல் ராசா மட்டும் செய்தது, அதற்கும் தி.மு.கவிற்கும் தொடர்பில்லை” என்று ஒரு விளக்கம் கொடுத்தால் போயிற்று. அந்த வகையில் சாயம் போன இந்த செங்கொடியின் எதிர்காலம் கோபாலபுரத்திலும் சிக்குண்டிருக்கிறது என்று சொல்லலாம்.”

அதாவது தமிழ்நாட்டில் ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்தி நாங்கள் எழுதினால், அது அ.தி.மு.க அணியை பலப்படுத்துவது ஆகுமாம். அதாவது, அதிமுகவுக்காகத்தான் சி.பி.எம் ஊழல் பற்றிப் பேசுகிறதாம். அதிமுகவை எதிர்த்தால், திமுகவுக்காக பேசுகிறார்கள் என்பார்கள். பா.ஜ.கவை எதிர்த்துப் பேசினால் காங்கிரஸுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் என்பார்கள். காங்கிரஸை எதிர்த்துப் பேசினால், பா.ஜ.கவுடன் கைகோர்த்துவிட்டார்கள் என்பார்கள். இப்படி ஒரு விஷமமான பிரச்சாரத்தை தொடர்ந்து மகஇகவினர் விதைத்து வருகிறார்கள். பிரச்சினையை மக்களிடம் சி.பி.எம் எப்போது கொண்டு சென்றாலும், சி.பி.எம்மை கொள்கையற்றதாய் காட்டுவதற்கு வரிந்துகட்டிக்கொண்டு வருவார்கள். அதாவது சிபிஎம் இங்கு அரசியலே பேசக்கூடாது என்பதுதான் மகஇகவின் இணைய ஊதுகுழல் வினவின் நோக்கமாய் இருக்கிறது.

ஊழல் நாயகி ஜெயலலிதாவின் தலைமையிலா, சி.பி.எம் ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்தியது?  ஒரு பிரச்சினையை முன் கை எடுப்பவர்களே தலைமை தாங்குபவர்கள் ஆகிறார்கள்.  ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சுயேச்சையாகவே சி.பி.எம்மும் அதன் வெகுஜன அமைப்புகளும் நடத்தி வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் வாலிபர் சங்கத் தோழர்கள் களம் கண்டு, காவல்துறையின் மிருகத்தனமான தாக்குதலுக்கு ஆளாகினார்களே?  ஜெயலலிதாவா அதற்கு தலைமை தாங்கினார்? எத்தனை புரட்டு இது! 

சுயமரியாதையும், கொள்கையையும் வைத்து மக்களைத் திரட்ட முடியுமென்கிற நம்பிக்கையில்லாத செங்கொடிக் கோமாளிகள்தாம் சி.பி.எம் கட்சியினராம்! அதிகாரத்திலும், ஆட்சியிலும் இருப்பவர்களை எதிர்த்து தொடர்ந்து போராடிக்கொண்டு இருப்பவர்கள் சி.பி.எம்மும், அதன் தோழர்களும். எண்ணற்ற தியாக வரலாறுகளைக் கொண்ட இயக்கம் சி.பி.எம்.  மக்களின் பிரச்சினைகளைக் கையிலெடுத்து தினம்தினம் வீதியில் இறங்கிப் போராடி வருவது சி.பி.எம்!  அவ்வப்போது சில போராட்டங்களை நடத்தி, எப்போதும் புரட்சி குறித்து வாய்கிழிய மட்டும் பேசுகிறவர்கள் நாங்கள் அல்ல.  மார்க்ஸையும், மாவோவையும் சேர்த்து, மம்தாவிடம் அடகு வைக்க புறப்பட்டவர்கள் வாய்கிழியப் பேசுகிறார்கள்.

நான்கைந்து சீட்டுகளுக்காக இப்படி சி.பி.எம் அலைகிறதாம். ஞாபகங்களுக்குத் தீவைத்துவிட்டு,  வினவால்தான் இப்படியெல்லாம் பேச முடியும். மத்திய அரசின் பிரதமர் பதவி தேடிவந்த போதே அதனை மறுத்தது சி.பி.எம்.!  முகத்தைப் பார்க்காமல் முதுகை மட்டுமேப் பார்ப்பது மார்க்சியம் அல்ல.

காவலன் படம் வெளியாகவிடாமல் நடக்கும் பின்னணியைக் குறிப்பிட்டு,   தமிழ் சினிமாவுக்குள் ஏகபோகமாக ஆதிக்க சக்திகள் உருவெடுப்பதன் பின்னணியை மாற்று வலைப்பக்கத்தில் அம்பலப்படுத்தியிருந்தோம். அதற்கும் எரிச்சல் வருகிறது வினவில் தளத்தில்:

"இதில் நமது சி.பி.எம் நண்பர்கள் காவலன் ரிலீசு ஆகவில்லை என்று ஏக கோபத்தில் இருக்கிறார்கள். தமிழ் சினிமா தி.மு.க குடும்பத்தின் ஏகபோகமாகிவிட்டது என்று சவுண்டு விடுகிறார்கள். இதைத் தடுப்பதற்கு இவர்களும் போயஸ்தோட்டத்திற்குத்தான் செல்கிறார்கள். அய்யா குடும்பத்தின் ஏகபோகத்தை தடுப்பதற்கு அம்மா குடும்பம். தோழர்களும் என்ன செய்வார்கள், பாவம்.”

நாங்கள் காவலன் படம் ரிலீசு ஆகவில்லை என கோபமாப்பட்டோம்? தமிழில் வாசிப்பதில் இத்தனை சிக்கலா வினவுக்கு? நாங்கள் எழுதியிருந்தது இதுதான்:

“ஒரு சினிமாவாக காவலன் படம் வெளிவந்தாலும், வெளிவராவிட்டாலும் இந்த சமூகத்திற்கும், மக்களுக்கும் ஒன்றும் ஆகப்போவதில்லை. இன்னொரு மசாலாப் படம் அது. அவ்வளவுதான். ஆனால் இங்கு நாம் கவலைப்பட வேண்டியது, தமிழ்ச்சினிமா தயாரிப்பிலும், வெளியீட்டிலும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் ஒரு குடும்பத்தைச் சார்ந்த நிறுவனங்களின் ஏகபோகம் குறித்து. அவர்கள்தாம் படம் எடுக்க வேண்டும், அவர்கள்தாம் வெளியிட முடியும் என்ற ஆதிக்கம் உருவாகியிருப்பது அவலமானது, நல்ல படங்களோ, குப்பைப் படங்களோ அது முக்கியமில்லை, இத்தனை நாட்கள்தான் திரையரங்குகளில் ஓட வேண்டும் என்கிற விதியை அவர்கள் எழுதுவது ஆத்திரப்பட வேண்டியது.”

நாங்கள் யாருக்காக சவுண்டு விடுகிறோம்? காவலன் படம் வெளியாகவில்லை என்றா கோபப்படுகிறோம்? எல்லாவற்றையும் திரித்துப் பேசுவதில், கொச்சைப்படுத்துவதில் ஒரு அல்ப சந்தோஷமா? அதுதான் வினவின் ஜென்ம சாபல்யமா?


மேலே வினவு எழுதியிருக்கும் இரண்டு விஷயங்களிலும் அவர்கள் நேரடியாக சி.பி.எம்மின் அரசியல் கொள்கைகளைப் பேசினால் சந்தோஷமே. “திமுகவும், அதிமுகவும் ஊழல் கட்சிகளே. இவர்களில் யாரையாவது சார்ந்துதான் நீங்கள் தமிழ்நாட்டில் அரசியல் நடத்த வேண்டுமா?” என்று ஒரு உரையாடலை இணையத்தில் தொடங்கினால், வரவேற்கலாம். ஆனால் போயஸ் தோட்டத்திலும், கோபாலபுரத்திலும் செங்கொடி சிக்கிக் கிடக்கிறது என்று கொச்சையாகவும், நாலாந்தரமாகவும் பேசுகிறார்களே! அதில் அரசியலைத் தாண்டி, அவர்களின் வெறுப்பும், வக்கிரமும்தானே வெளிப்படுகிறது.

பல்வேறு தேசங்களின் பிரச்சினைகளும், சூழல்களும் கொண்ட இந்த உலகின் ஆபத்தாக ஏகாதிபத்தியம் இருக்கிறது. மாநில அளவிலான பிரச்சினகள் என விரிந்த இந்தியாவில், அதிகாரம் குவிந்த மையமாக மத்திய அரசு இருக்கிறது. அதே வேளையில், மாநில அளவில் வேறு வகையான சூழல்களும், அங்கும் குட்டி அதிகார மையங்களும் நிலவுகின்றன. இவைகளுக்கு ஊடே ஒட்டு மொத்த இந்திய மக்களின் வாழ்விலும், நலனிலும் அக்கறை கொண்டு இயக்கம் நடத்த  வேண்டிய பார்வையும், பொறுப்பும் கம்யூனிஸ்டுகளுக்கு இருக்கிறது. கம்யூனிஸ்டுகள் சர்வதேசப் பார்வை கொண்டவர்கள். ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும்  விஷயத்தில், சதாம் உசேன் முன்வந்தால், அவரோடு நிற்பவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்தியாவில் காங்கிரஸையும், பா.ஜ.கவையும் எதிர்க்க தி.மு.க, அ.தி.மு.க முன்வந்தால் அவர்களோடு அந்த சமயத்தில் நிற்ப்வர்கள் கம்யூனிஸ்டுகள். பெரும் ஆபத்துக்களை வீழ்த்த சிறிய ஆபத்துக்களை பரவாயில்லை என்று கருத வேண்டி இருக்கிறது. முதலில் வீழ்த்த வேண்டியது ராஜாளிக்களே! இங்கே கம்யூனிஸ்டுகள் கொள்கைகள் எங்கே மாறி இருக்கிறது?  அணிமாறிக்கொண்டு இருப்பவர்கள் ஆட்சியாளர்களே!

சி.பி.எம் எப்போதும் அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறது. திமுகவை எதிர்க்கும் அதிமுக ஆட்சிக்கு வந்தாலும், சி.பி.எம்தான் முதல் ஆளாக எதிர்க்கும். இதுதானே வரலாறு. துரோகங்களும், சூழ்ச்சிகளும் மலிந்த அரசியல் களத்தில் நேர்மையான அரசியலை கொச்சைப்படுத்துவதற்கும், அரசியல் களத்திலிருந்து வெளியேற்றவும் முதலாளித்துவம் தொடர்ந்து சிந்திக்கும். செயல்படும். அதையே ’கம்யூனிஸம்’ பேசுகிற வினவும் செய்யும் போது விழிப்பாய் இருக்க வேண்டி இருக்கிறது. சி.பி.எம்மை போலி கம்யூனிஸ்டுகள் எனும்போது சிரிப்பாய் இருக்கிறது.

தன்னைத் தவிர யாரும் சமூக அவலம் குறித்து எழுதக் கூடாது. தன்னைத்தவிர ஆதிக்க சக்திகளை எதிர்த்து யாரும் இயக்கம் நடத்தக்கூடாது. அருமை!  என்ன ஒரு சித்தாந்தத் தெளிவு! எப்படிப்பட்ட இலட்சியக்கனவு! ஆமாம்,  தன்னைத்தவிர நியாயங்களைப் பேசுவதற்கு யாருக்கும் அருகதையில்லை என்பது இவர்களது புதிய கலாச்சாரம்.  தன்னைத் தவிர  அரசியல் பேசுவதற்கு யாருக்கும் யோக்கியமில்லை என்பது இவர்களது புதிய ஜனநாயகம். வாழ்க!

இவர்களே ’நயம்’ கம்யூனிஸ்டுகளாக இருக்கட்டும். இவர்களே இணையத்தில் ஈடு இணையற்ற சண்டியராக இருக்கட்டும். ஆனால், இனி வினவு இப்படி எழுதும் எல்லாவற்றுக்கும் மாற்று எதிர் வினையாற்றும்!
இது ஆரம்பம்....

33 comments:

  1. இந்த புண்ணாக்கு மகஇக எப்பவும் இப்படிதான் இதற்கு கட்சி கிடையாது புரட்சிகர கட்சி இல்லாமல் புரட்சிகர இயக்கம் கிடையாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத சிறு முதலாளித்துவ கூட்டம்தான் இந்த மகஇக வினவு

    ReplyDelete
  2. மகஇக எப்பவும் தனது கொள்கை இன்னானு எப்பவும் சொன்னது இல்லை ஏன்னா அதுக்கு கொள்கை என்றால் என்ன வென்றே தெரியாது. அதுக்கு தெரிந்தது எல்லாம் சிபிஎம்மை நக்கி பொழைக்கிறதுதான் இல்லனா அதுக்கு பொழப்பு ஓடாது. இப்படி பட்ட போலி புரட்ச்ச்சி கூலிகள் கொண்ட அமைப்புதான் மகஇக

    ReplyDelete
  3. மகஇக ஏஜென்ட் மருதையன் எத்தனை முறை சிறை சென்றிருக்கிறார்?

    மகஇக மருதையன் மீது அரசாங்கத்திற்கு எதிராக போராடி அதனால் சிறைக்குள் மாதக்கணக்கில் ஆண்டுகணக்கில் இருந்திருக்கிறாரா?

    1. மருதையன் எத்தனை முறை சிறை சென்றுள்ளார்?

    2. மருதையன் மீது என்னென வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன?

    3. தடா பொடா குண்டாஸ் மிசா என்ற வழக்குகள் ஏதேனும் அவர் மீது இருந்தனவா? அல்லது இருக்கின்றனவா? அப்படியெனில் எத்தனை மாதம் உள்ளே இருந்தார்?

    4. மகஇக அடிமட்ட தொண்டர்களையே போலிஸ் ஜட்டியோடு அடிப்பதாக பீலா விடும் மகஇக வினர் மருதையன் அது மாதிரி எத்தனை முறை பரேடு வாங்கியிருக்கிறார்?

    இந்த கேள்வியை சுத்தி சுத்தி சிலரிடம் விசாரித்தேன்... ம் பதில் கிடைக்கவில்லை அது தான் இப்போது பதிவில் கேட்கிறேன்... ஒரு வேளை மருதையன் மீது பெரிய வழக்குகள் ஏதுமில்லை உள்ளேயெல்லாம் போனதில்லை ஜட்டியோடு அடிவாங்குவதெல்லாம் மகஇக தொண்டர்கள் மட்டும் தானென்றால் மருதையனின் புரட்சி யாரின் தயவில் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்...

    குழலி

    ReplyDelete
  4. தன்னைத் தவிர யாரும் சமூக அவலம் குறித்து எழுதக் கூடாது. தன்னைத்தவிர ஆதிக்க சக்திகளை எதிர்த்து யாரும் இயக்கம் நடத்தக்கூடாது. அருமை! என்ன ஒரு சித்தாந்தத் தெளிவு! எப்படிப்பட்ட இலட்சியக்கனவு! ஆமாம், தன்னைத்தவிர நியாயங்களைப் பேசுவதற்கு யாருக்கும் அருகதையில்லை என்பது இவர்களது புதிய கலாச்சாரம். தன்னைத் தவிர அரசியல் பேசுவதற்கு யாருக்கும் யோக்கியமில்லை என்பது இவர்களது புதிய ஜனநாயகம். வாழ்க!//

    இவர்கள் வெறும் வாய்ச்சொல் வீரர்கள். அதனால்தான் வெட்டித்தனமாக
    எழுத மட்டும் செய்து கொண்டிருக்கிறார்கள்

    ReplyDelete
  5. இது மாற்றுவின் நோக்கம் பற்றி மாற்று வெளியிட்டிருக்கும் குறிப்பு


    ----------------------------
    http://maattru.blogspot.com/p/blog-page_5846.html

    நண்பர்களே!

    இது தனி நபர் வலைப்பக்கம் அல்ல. ஒரு கூட்டு முயற்சி.

    ஏற்கனவே இருக்கும் இந்த அமைப்பின் அலங்கோலங்களையும், அராஜகங்களையும் இங்கே விமர்சிப்போம்.

    இச் சமுகத்தை மாற்றக் கனவு காணும் பார்வைகளையும், கருத்துக்களையும் இங்கே பகிர்ந்து கொள்வோம்.


    அரசியல், கலை இலக்கியம், சினிமா, பொருளாதாரம், யாவும் குறித்து உருவாக்கப்பட்டுள்ள பொதுபுத்தியில் மாற்று திசைகளை அறிய எல்லோரும் சேர்ந்து யோசிப்போம்.

    யாவரோடும் ஆரோக்கியமான உரையாடல்களை நடத்தவே முயற்சிப்போம்.

    உங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பும் வேண்டுகிறோம்.

    - மாற்று -
    ----------------------


    ஆனால் வினவு சி.பி.எம் என்னும் அரசியல் கட்சியைப் பற்றி பேசினால் நீங்கள் ஏன் கோபம் கொள்கிறீர்கள். அதாவது சி.பி.எம் என்னும் அரசியல் கட்சியை யாரோ ஒருவர் விமர்சித்தால் ஏன் மாற்று அதை மறுக்கிரது?

    மாற்று என்பது சி.பி.எம் என்னும் அரசியல் கட்சியின் பிரச்சாரப் பீரங்கி என்றால் (வினவின் ம.க.இ.க ஆதரவு போல்) சொல்லிவிடுங்கள் தெளிவாக.

    **

    ‍‍‍‍‍உங்களைப் பற்றிக் கேள்வி கேட்பதால் நான் வினவு ஆதரவு என்று நினைக்க வேண்டாம். அதற்கு அத்தாட்சியாக என்னுடைய சில பதிவுகள்

    கொத்துபரோட்டாவும் கம்யூனிச வியாதிகளும்
    http://kalvetu.blogspot.com/2010/10/blog-post.html

    ஈராக், கம்யூனசம் கலந்த‌ யோனிக் கவிதைக்கு நாங்கள்தான் அத்தாரிட்டி.
    http://kalvetu.blogspot.com/2010/04/blog-post_27.html
    .

    ReplyDelete
  6. வாய்ச்சொல் வீரர்கள்.மகஇக வை போஸ்டரை தவிர்த்து எங்கேயும் காணவில்லை.

    ReplyDelete
  7. ஆனால் வினவு சி.பி.எம் என்னும் அரசியல் கட்சியைப் பற்றி பேசினால் நீங்கள் ஏன் கோபம் கொள்கிறீர்கள். அதாவது சி.பி.எம் என்னும் அரசியல் கட்சியை யாரோ ஒருவர் விமர்சித்தால் ஏன் மாற்று அதை மறுக்கிரது?

    மாற்று என்பது சி.பி.எம் என்னும் அரசியல் கட்சியின் பிரச்சாரப் பீரங்கி என்றால் (வினவின் ம.க.இ.க ஆதரவு போல்) சொல்லிவிடுங்கள் தெளிவாக.///

    ஊடகத்தில் நடுநிலை என்பதெல்லாம் இல்லை நண்பா ... நாங்கள் தெளிவாகவே சொல்கிறோம் ... “மக்கள் விடுதலைக்காக குரல் கொடுப்பதுதான் மாற்று” ... சிபிஐஎம் கொண்ட கொள்கை வழியை நாங்களும் ஆதரிக்கிறோம். வினவின் கொச்சையான பதிவுகளுக்கு, குறிப்பாக நாங்கள் வெளியிட்டிருக்கும் பதிவுகளை திரித்துப் பரப்பும் பொய்களுக்கு நாங்கள் பதில் தருகிறோம்.

    ReplyDelete
  8. // Sindhan R said...

    சிபிஐஎம் கொண்ட கொள்கை வழியை நாங்களும் ஆதரிக்கிறோம்.//

    நன்றி
    இதை இந்தப் பக்கத்திலும் போட்டுவிட்டால் நல்லது.
    http://maattru.blogspot.com/p/blog-page_5846.html

    அது போல வேறு எந்த அரசியல் இயக்கங்களை ஆதரித்தாலும் அதைச் வெளிப்படையாகச் சொல்லிவிடுவது நல்லது.

    **

    என்னளவில் நடுநிலை என்பது போலித்தனம். செயலற்று இருக்கும் நிலை. அந்த அளவில் நீங்கள் உங்களுக்குப்பிடித்த இயக்கத்தை ஆதரிப்பது தவறே அல்ல.

    **

    ReplyDelete
  9. சிறிய துரும்பை அசைப்பதற்கு முன்பே இவர்கள் வானத்தையே வளைத்து என் சட்டைப்பைக்குள் போட்டிருக்கிறேன் பார் என்று வெறும் வார்த்தைகளால் மட்டுமே புரட்சி நடத்தும் வீணர்கள்தான் இந்த 'வினவ'ர்கள்.

    'வினவு' 'வினவு' என்பார்கள்.. ஆனால் வினவினால், நமக்கு வெறும் வசைமொழிதான் பதிலாக கிடைக்கும்.

    'கம்யூனிஸ்டுகளே இப்படித்தான்பா.... அடுத்தவன பேசவே விடமாட்டாங்க...' என்று தவறான எண்ணங்களையே இவர்கள் தமிழ் இணையத்தில் விதைக்கும் வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள்...

    தொடரட்டும் 'மாற்று'வின் பணி....

    ReplyDelete
  10. இந்த அரசியல் அமைப்பு எப்படி இருக்கிறது ? ஒரு தரகு முதாலாளி அமைச்சர் யார் என்பதை
    முடிவு செய்கிறான் ? அத்தகைய தரகுமுதலாளி டாடாவிடம் வங்கத்தில் சேர்ந்தது யார் ? அப்படி
    ஊழலுக்கான தரகு முதாலாளியை ஆதரித்து விட்டு எப்படி ஊழலை ஒழிக்க முடியும் என்று நம்புகிறீர்கள்

    ReplyDelete
  11. மாற்று குழுவினருக்கு....

    அண்ணன் கல்வெட்டு கேட்டுள்ள கேள்வி எனக்கும் எழுந்தது. முன்னரே கேட்டுவிட்ட அண்ணனுக்கு நன்றிகள். அதற்க்கு பதிலிறுத்த உங்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.

    /*இந்தியாவில் காங்கிரஸையும், பா.ஜ.கவையும் எதிர்க்க தி.மு.க, அ.தி.மு.க முன்வந்தால் அவர்களோடு அந்த சமயத்தில் நிற்ப்வர்கள் கம்யூனிஸ்டுகள். பெரும் ஆபத்துக்களை வீழ்த்த சிறிய ஆபத்துக்களை பரவாயில்லை என்று கருத வேண்டி இருக்கிறது.*/

    1. மிக நல்ல கொள்கை தான். ஆனால் அவர்களுடன் இணைந்து நீங்கள் இதுவரை எதை எல்லாம் வெட்டி வீழ்த்தி இருக்குறீர்கள்.

    2. அவர்களும் (தி.மு.க, அ.தி.மு.க) நீங்கள் சொன்ன கட்சிகளை (காங்கிரஸையும், பா.ஜ.கவையும்) எந்த மாதிரி சூழ்நிலையில் எதிர்கிறார்கள், ஏற்கிறார்கள்.

    3. இன்னும் சில நாட்களில் காங்கிரசை எதிர்க்க பா.ஜ.கவை ஆதரிக்கிறோம். பா.ஜ.கவை எதிர்க்க காங்கிரசை ஆதரிக்கிறோம் என்று சொல்வீர்களோ?

    4. ஆபத்திலே என்ன பெரிய ஆபத்து, சிறிய ஆபத்து? உயிரே போகிற இடத்தில் காலை இழப்பது சின்ன ஆபத்து என்று சொல்ல வாரீங்களோ..

    அப்படி நடக்கவே நடக்காது... இந்தியா எனும் தேசம் மரிக்க விட மாட்டார்கள் அவர்கள் கை விரலை வெட்டினால் இவர்கள் கால் விரலை வெட்டுவார்கள் அவ்வளவு தான் வித்தியாசம் இதில் எங்கிருந்து வருகிறது பெரிய ஆபத்து சிறிய ஆபத்து...
    கொஞ்சம் விளக்கினால் என் மர மண்டைக்கு கொஞ்சம் புரியும்.

    பின் குறிப்பு: நான் வினவு ஆதரவாளனும் அல்ல எதிர்ப்பாளனும் அல்ல, உங்களுக்கும் ஆதரவாளனும் அல்ல எதிர்ப்பாளனும் அல்ல. ஆனால் மாற்று தேவை என்ற எதிர்பார்ப்பில் வினவுகிறேன் அவ்வளவே.

    ReplyDelete
  12. /*கல்வெட்டு said...
    // Sindhan R said...

    சிபிஐஎம் கொண்ட கொள்கை வழியை நாங்களும் ஆதரிக்கிறோம்.//

    நன்றி
    இதை இந்தப் பக்கத்திலும் போட்டுவிட்டால் நல்லது.
    http://maattru.blogspot.com/p/blog-page_5846.html

    அது போல வேறு எந்த அரசியல் இயக்கங்களை ஆதரித்தாலும் அதைச் வெளிப்படையாகச் சொல்லிவிடுவது நல்லது.

    **

    என்னளவில் நடுநிலை என்பது போலித்தனம். செயலற்று இருக்கும் நிலை. அந்த அளவில் நீங்கள் உங்களுக்குப்பிடித்த இயக்கத்தை ஆதரிப்பது தவறே அல்ல.

    **
    */
    கல்வெட்டை நான் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  13. வினவு யோக்கிதை தெரியும் . . சமீபத்தில் மேற்குவங்கத்தை பற்றி ஒரு அவதூறு கட்டுரையை வெளியிட்டார்கள் அதற்கு பதில் அளித்து என்னுடைய தளத்தில் வெளியிட்ட கட்டுரையை படித்துவிட்டு நல்லவரக்ள் போல நழுவி விட்டார்கள் இதுதான் அவர்களது ஜனநாயகம்

    ''''''''நீதிபதிகளாக மாறும் "அக்மார்க் ஐ.எஸ்.ஐ" புரட்சியாளர்கள் ("வினவு" க்கு எதிர்வினை)'''''

    http://natputanramesh.blogspot.com/2010/12/blog-post.html

    ReplyDelete
  14. நையாண்டி நைனா said...

    ஆனால் மாற்று தேவை என்ற எதிர்பார்ப்பில் வினவுகிறேன் அவ்வளவே.///

    மாற்று தேவை என்ற உங்கள் எதிர்பார்ப்பை வரவேற்கிறோம் ... இந்தியாவின் அரசியல் அமைப்பை ஏற்று, இதற்குள்ளே தேர்தல் வழியிலேயே ஆட்சிக்கு வந்து எல்லாவற்றையும் மாற்றிவிடலாம் என்பது எங்கள் நிலை அல்ல ...

    எனவே, தேர்தல் கூட்டணிகள் மூலமே எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்ற பிரமையும் எங்களிடம் கிடையாது.

    அதே சமயம், தேர்தல்களே போலி, இதில் பங்கெடுக்காதீர்கள் பன்றிகளே எனும் வினவுதான் தேர்தல் கூட்டணிகளைப் பற்றி மிக அதிகம் கவலை கொள்கிறது.

    மக்களை மார்க்சியம் சென்றடையாதவரை ... மார்க்சியப் பிரச்சாரத்திற்காக நாடாளுமன்ற அமைப்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்திய அரசு ஒன்று இருக்கிறது, அது செயல்படுகிறது என்ற அளவில் ... அதனைத் தவிர்த்துவிட்டு அரசியல் நடத்துவதென்பது ... வெற்றுக் காற்றில் கத்தி சுழற்றுவதைப்போல ...

    காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் தலைமைகள் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள் தான். ஏன், திமுக, அதிமுக ஆகிய இரண்டும் பெரு முதலாளிகளின் சொற்களைக் கேட்காமல் இயங்காது. அதே, சமயத்தில், அந்தக் கட்சிகளைப் பின்தொடரும் பெரும் மக்கள் கூட்டத்திற்கும் அரசியல் பாத்திரம் இருக்கிறது என்ற இயக்கவியலைப் புரிந்துகொள்ளாமல் போனால் அது குழப்பத்திலேயே கொண்டு சேர்க்கும்.

    எனவே, மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான ஒரு ஆயுதமாக நாடாளுமன்றப் பங்கேற்பையும், தேர்தல் அரசியலையும் பார்க்க வேண்டும். மாற்றம் என்பது மக்கள் பங்கேற்புடன் நிகழ வேண்டியது. என்ற அளவில் சிந்திக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  15. மாற்று தொழர்களே! இவர்களுக்கு பதில் சொல்லும் நேரத்தில் உறுப்படியாக எழுதலாம். இவர்களை எவ்வளவுக்கவ்வளவு உதாசீனப்படுத்துகிறிர்களோ, அலட்சியப்படுத்துகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. மாற்று இவ்வளவு விரைவில் பரவலாகும் என்று அவர்கள் நினைக்கவில்லை. U Must be unconcerned and indiferent about these people.---காஸ்யபன்.

    ReplyDelete
  16. வினவு வம்புக்கு வந்தால் நீங்களும் பதிலடி கொடுங்கள் அதான் சிறந்தது

    மக இக ஒன்றும் கம்யூனிசத்துக்கு குத்தகை தாரர் அல்ல

    வினவை வினவுங்கள்

    ReplyDelete
  17. வினவின் மேல் இருந்த மரியாதையே போயிற்று

    ReplyDelete
  18. மாற்று தொழர்களே! இவர்களுக்கு பதில் சொல்லும் நேரத்தில் உறுப்படியாக எழுதலாம். இவர்களை எவ்வளவுக்கவ்வளவு உதாசீனப்படுத்துகிறிர்களோ, அலட்சியப்படுத்துகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. //

    ஒதுங்கிப்போவது மார்க்சியமல்ல காஸ்யபன்... எழுதுவோம், பதிலும் கொடுப்போம் ... யாரும் பலரை பலநாள் ஏமாற்ற முடியாது.

    ReplyDelete
  19. 'வினவு'க்கோர் வினா!
    'வினவு'க்கோர் வினா!
    எனது மாணவப் பருவத்தில் தீவிர திராவிடனாக இருந்தபோது உங்களின் ஆரம்பகால அவதாரமான சி.பி. ஐ .[எம்.எல்.] எங்களின் தருமபுரி மாவட்டத்தில் வேரூன்றத் தொடங்கிய அந்த நாட்களில் [1970களின் தொடக்கத்தில்] நான் அதன் சித்தாந்த வாதி ஒருவரிடம் பேசுகிறபோது " இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி தோன்றி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் ஏன் புரட்சி ஏற்படவில்லை?" என்ற வினாவைத் தொடுத்த அவரே அதற்கான காரணத்தையும் சொன்னார்: "கட்சித் தலைமை 'பூணூல் போடாத' கம்யூனிஸ்டுகளின் பிடியில் சிக்கியதும், பாராளுமன்றப் பாதையில் சென்றதுமே" என்பதே அது. அந்த பதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது; மேற்சொன்ன இரு பெருந்தடைகளையும் தகர்த்தெறிந்துவிட்டு சுத்த சுயம்பிரகாசமான(!) அசல் புரட்சிகரக் கட்சி தோன்றி 40 ஆண்டுகள் உருண்டோடிய பின்னரும் புரட்சியின் அறிகுறியே காணோமே? உங்களின் ஒரே சாதனை 'திருத்தல்வாத' சி.பி.எம்.ஐத் தீர்த்துக்கட்ட 'புரட்சித் தலைவி' மம்தாவுடன் கூட்டணி சேர்ந்து அதன் ஆதரவாளர்களைக் கொல்வதும், எந்தத் தேர்தல் பாதையைத் திருடர் பாதை என்றீரோ அதே பாதையில் அவருக்குப் பக்கத் துணையாக வலம் வருவதும் தானோ?
    2) மக்கள் திரளின் பிரச்சனைகளைக் கையில் எடுப்பதும், 'மெகா' ஊழல்களை அம்பலப்படுத்துவதும் புரட்சிக் கட்சியின் வேலையில்லையோ?
    3) ஈழத் தமிழர் பிரச்சனையானாலும், 'திராவிடத் தங்கங்களின்' ஊழல்கள் என்றாலும் சரியான கருத்துகளை முன்வைக்கிற சி.பி.எம்.ஐயும், 'இந்து' என். ராம் அவர்களையும் நாராச நடையில் வசைபாடுகிற நீங்கள் 'தமிழனுக்காகவே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிற'--ஆனால் உண்மையில் அவனை ஒட்டச் சுரண்டிக் கொண்டுள்ள-- நம் சாதி, நம் இனமானத் தலைவர்களைப் போகிற போக்கில் பொத்தாம்பொதுவாகவும், வேண்டாவெறுப்பாகவும் விமர்சிக்கிறீர்களே, அது ஏன்?
    4) எந்தவொரு 'தரகு' முதலாளியிடமும் இது நாள் வரை கையேந்தாத மார்க்சிஸ்டுகளை அவனின் அடிவருடி என்கிற நீங்கள் செந்தளங்களில் இன்றும் சுரங்கங்களின் ஒப்பந்ததாரர்களிடம் சுங்கம் வசூலிக்கிற 'புரட்சி'யாளர்களைக் குறைகூறுவதில்லையே ஏன்?
    உங்களின் தோழர்களிடம் நேரடியாகப் பேசுகிறபோதோ அல்லது உங்களைப் போன்ற பேரறிவாளர்களின் வலைத்தள எழுத்துகளிலோ இத்தகைய எண்ணற்ற கேள்விகளுக்கு நேர்மையான விளக்கத்திற்கு பதிலாகக் குதர்க்கமான-- சில சமயங்களில் கொச்சையான வார்த்தைகளில்-- பதில்தான் கிடைத்துள்ளது; எனினும் நீங்கள் உங்களின் 'வினவலை'த் தொடரும் வரை என்னைப் போன்ற குறுமதியாளர்களின் 'எதிர்வினை'யும் இருக்கவே செய்யும்!
    ஏ. வி.சாமிக்கண்ணு,
    பாப்பிரெட்டிப்பட்டி .

    ReplyDelete
  20. ரவணன் கருத்துக்கள், கொச்சையான சொற்களுடன் இருந்ததால் நீக்கப்பட்டுள்ளன.

    ReplyDelete
  21. மகஇக வினவு மொதல்ல நீங்க யாரு உங்க கட்சி பேர் என்ன? ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியை பற்றிய விவாதத்திற்கு உட்படுத்துவதற்கு மகஇக என்.ஜி.ஓ அமைப்பிற்கு என்ன தகுதி இருக்கிறது.

    ReplyDelete
  22. மாற்று தோழர்களுக்கு வணக்கம்!

    நீங்கள் வினவையும்,ம.க.இ.கவையும்,விமர்சிக்காமல்,எதோ திரிப்புவாத(இப்பொழுது முதலாளிகளுக்கு பாதுகாப்பு இதுதான்) சிந்தனைமுறையில் திட்டி தீர்ப்பதைப்பார்க்கும்போது ரஸ்யாவில் இருந்த மென்ஸ்சுவிக்கள் தான் ஞாபகம் வருதுங்க. கம்யுனிஸ்ட்டுக்களின் குறைந்தபட்ச பாராளுமன்ற பாதையில் குறிப்பாக இந்தியாவில் இடதுசாரிகளிடத்தில் மட்டும் கூட்டணி வைத்து இருந்தால் பாராட்டலாம். கண்டகண்ட உழல்,ஆதிக்க நாய்களுடன் தேர்தல் கூட்டு வைத்துக்கொண்டு,இரண்டு முன்று தொகுதிக்காக கொள்கைகளை திரிப்பதுதான் உங்கள் வேலையே.காந்தி எப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரியாகவும்,பார்ப்பன,பனியாளுக்கு ஆதரவாக இருந்தாரே அதையே நீங்களும் கம்யுனிஸ்ட்டுகளுக்கு எதிரியாக இருக்கிறீர்கள்.பாராளுமன்ற பாதையை உண்மையான காந்தியவாதிகளே நம்பிக்கை இழந்த சூழலில், நீங்கள் புடிச்சு தொங்கிக்கிட்டு இருங்க. விமர்சித்தால் உள்நாடு,வெளிநாடு,வட்டம்,மாவட்டம் என்று உங்கள் திரிபுவாதத்தையே பேசுங்கள்.

    ReplyDelete
  23. நீங்கள் வினவையும்,ம.க.இ.கவையும்,விமர்சிக்காமல், திட்டி தீர்ப்பதைப்பார்க்கும்போது ///

    பதிவைப் படிக்காமல் ச்சும்மா கமெண்டுவது எங்கள் நேரத்தை வீணாக்குகிறது. படிக்கவும்.

    பாராளுமன்றத்தை எந்த அளவில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்கிற விளக்கம் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கிறது.

    தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி !

    ReplyDelete
  24. சிந்தன்//

    நல்லா விளக்கம் தருங்க.
    பதிவை படிக்காமல் விவாதிப்பார்களா?
    என்ன சொல்றது.உங்களுடைய கோட்பாடு, நடைமுறைசெயல்கள் அப்படி.நாட்டையே கூறுபோட்டுகிட்டு விற்கிறவங்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு கம்யுனிசம் பேசுரவங்களுக்கு மாக்சியம் எப்படி தெரியும்.ஏற்கனவே திரிபுவாதிகளின் வரலாற்றை ரஸ்யா,சீனா என்று நிறைய பேர்களை பார்த்துட்டோங்க.

    ReplyDelete
  25. பதிவை படிக்காமல் விவாதிப்பார்களா?//

    படித்திருந்தால் நன்மையே ...

    நீங்க ரஷ்யா சீனாவெல்லாம் பாத்தவரு.

    ஆனா நாங்க அப்படியில்ல ..
    மக்களை திரட்டாமல் அரசியல் மாற்றம் சாத்தியமில்லை.எனவே, பாராளுமன்றத்தையும் அதற்கு பயன்படுத்த வேண்டும். அரசியலிலேயே ஈடுபடாமல் அரசியல் செய்ய முடியாதே. என்பது எங்கள் நிலை.

    இந்தியாவில் ரயிலைக் கவிழ்த்தே புரட்சியைக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையெல்லாம் இல்லை.

    ReplyDelete
  26. தோழர் சிந்தன்//

    நீங்கள் மாவோயிஸ்ட்டுகளையும்,ம.க.இ.கவையும் ஒன்றாக பார்ப்பது,உங்கள் ஓட்டுப்பொறுக்கிக்கண்ணோட்டம்தான்.மாவோயிஸ்ட்டுக்களின் மக்கள் திரள் தவிர்த்த ஆயுத போராட்டத்தை என் மனத்திற்கு பொருத்தவரையில் நான் ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனால் இன்று பல ஆயிரம் மலைவாழ்,பழங்குடிகள், ஏன் மாவோயிஸ்ட்டுகளின் பக்கம் இருக்கிறார்கள் என்று சிந்திக்க மறுக்கிறீர்கள்.அரசு பயங்கரவாதத்தின் கொடுமைதாள முடியாமல் இன்று மலைவாழ்,பழங்குடிகள்,சில தாழ்த்தப்பட்டமக்கள்,மாவோக்களாக ஆக்கப்பட்டு இருக்கிறார்கள்.ரயில் கவிழ்ப்பு என்பதுக்கூட அந்த சூதுவாது தெரியாத சில பழங்குடிகளின் செயல்களாக தான் இருக்கும்.இதுக்கூட தங்களுக்கு எதிரான அரசுபயங்கரவாதத்தை யாருமே கேட்கவில்லையே என்ற எண்ணங்களின் குமுறல் தானே.எல்லா பழங்குடிகளும் முறையாக மாக்சியம் பயின்றவர்களா? இது அருந்ததிராய்க்கு தெரிகிறது. உங்களுக்கு தெரிவதில்லை.

    ReplyDelete
  27. நீங்கள் மாவோயிஸ்ட்டுகளையும்,ம.க.இ.கவையும் ஒன்றாக பார்ப்பது,உங்கள் ஓட்டுப் பொறுக்கிக் கண்ணோட்டம்தான்.///

    ம்ம்...

    மாவோயிஸ்ட்டுக்களின் மக்கள் திரள் தவிர்த்த ஆயுத போராட்டத்தை என் மனத்திற்கு பொருத்தவரையில் நான் ஏற்றுக்கொள்ளவில்லை.///

    நல்லது ...

    ஆனால் இன்று பல ஆயிரம் மலைவாழ்,பழங்குடிகள், ஏன் மாவோயிஸ்ட்டுகளின் பக்கம் இருக்கிறார்கள் என்று சிந்திக்க மறுக்கிறீர்கள்..///

    சிந்திக்க மறுக்கவில்லை ... பழங்குடி மக்களில் ஒருபகுதியினர் இப்படிப்பட்ட தவறான சிந்தாந்தத்தின் கீழ் சிக்கியிருக்கிறார்களே என்று வேதனையுடன் தான் பார்க்கிறோம்.

    அரசு பயங்கரவாதத்தின் கொடுமைதாள முடியாமல் இன்று மலைவாழ்,பழங்குடிகள்,சில தாழ்த்தப்பட்டமக்கள்,மாவோக்களாக ஆக்கப்பட்டு இருக்கிறார்கள்.///

    திரிந்த தத்துவப் பார்வை கொண்டவர்களிடம் சிக்கியிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் ...

    ரயில் கவிழ்ப்பு என்பதுக்கூட அந்த சூதுவாது தெரியாத சில பழங்குடிகளின் செயல்களாக தான் இருக்கும்///

    படு மோசமான விளக்கம் இது. பழங்குடி மக்கள் மீது பழிபோடாதீர்கள். அவர்களா கொலை பாதகர்கள்?

    இது அருந்ததிராய்க்கு தெரிகிறது. உங்களுக்கு தெரிவதில்லை.///

    முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது உங்களுக்கே விளங்கவில்லையா? ... முதலில் ஒரே நிலையில் பேசப் பழகு நண்பா. அப்புறம் விவாதிக்க வாருங்கள் ...

    ReplyDelete
  28. அரசு பயங்கரவாதத்தின் கொடுமைதாள முடியாமல் இன்று மலைவாழ்,பழங்குடிகள்,சில தாழ்த்தப்பட்டமக்கள்,மாவோக்களாக ஆக்கப்பட்டு இருக்கிறார்கள்.///

    திரிந்த தத்துவப் பார்வை கொண்டவர்களிடம் சிக்கியிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் ...//

    எது திரிபுவாதம் ஓட்டு பொறிக்கி அரசியலில் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை கூட்டணி மாறுவது திரிபுவாதமா இல்லை பிழைப்புவாதமா?
    மலைவாழ் மற்றும் பழங்குடிகள் ஏன் அரசுக்கு எதிராக சென்றார்கள?அவர்களின் வாழ்விடங்களை கூறுப்போட்டு விற்பதும்,துரத்தி அடிப்பதும்,அங்கு இருக்கும் கனிமவளங்களை தரகு,பன்னாட்டு முதலாளிகளுக்கு கொடுத்தது யாரு? நீங்கள் கூட்டணி வைத்துக்கொண்ட அரசுதானே. ஏன் இன்று உலகமயத்தில் காட்டுவளங்களை சூரையாடுவதும்,அங்கு இருக்கும் பழங்குடிமக்களை அடித்து துரத்துவதும் நம் நாட்டில் மட்டுமா நடக்கிறது. பல நாட்டில் செய்துவந்த முதலாளித்துவத்தின் லாபவெறியின் தொடர்ச்சி தானே இது.இதுக்கூடவா உங்களுக்கு தெரியாது.எல்லாம் தெரியும் உங்களுக்கு.போலிகள் மார்க்சியம் பேசி முதலாளித்துவத்தின் இருப்பை பாதுக்காத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது மட்டும் நன்றாகவே புரிகிறது.

    ReplyDelete
  29. ரோபோ காந்த் வார்த்தையை பொறுக்கி பேசுவதில் தாங்கள் சமத்தர் போலும்... ஓட்டு பொறுக்கி என தங்கள் சொல்லுவதின் அர்த்தம் தேர்தலில் நிற்கக்கூடாது என்பதுதான். இருக்கட்டும் உமது ஆசைகள். அடுத்து திரிபுவாதம் என்ற வார்த்தையின் அர்த்தம் தெரிந்து எழுதுவது நல்லது.
    /// இன்று பல ஆயிரம் மலைவாழ்,பழங்குடிகள், ஏன் மாவோயிஸ்ட்டுகளின் பக்கம் இருக்கிறார்கள் என்று சிந்திக்க மறுக்கிறீர்கள்//////
    எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் ரோபோ காந்த் .. இப்போது மாவோயிச்டுகளை பழங்குடியினர் அடித்து விரட்டும் தகவல்கள்களை பார்ப்பதில்லையா? அவர்கள் அந்த அப்பாவி பழங்குடி மக்களிடம் அடித்த கொள்ளையின் அளவு இப்போதுதான் அம்மக்களால் உணரமுடிகிறது.. பல இடங்களில் அவர்கள் கஞ்சா பயிரிட்டது இப்போது கண்டு பிடித்து அழிக்கப்படுகிறது.. கட்ட பஞ்சாயத்து செய்வதும், கஞ்சா பயிரிடுவதும்தான் மாவோயிச தத்துவமா? இதுதன் திரிபுவாதம். மக்களிடமிருந்து தனிமைபட்டதும் அதற்காக தத்துவ விளக்கங்களை உருவாக்கிக்கொண்டு மாய உலகில் வாழ்வதுதான் திரிபுவதா உச்சம்.

    ReplyDelete
  30. ரமேஷ்
    இப்போது மாவோயிச்டுகளை பழங்குடியினர் அடித்து விரட்டும் தகவல்கள்களை பார்ப்பதில்லையா?//

    நல்லா பார்க்கிறேன்.ஹர்மத்வாகினி,சல்வார்ஜூடும் தானே இது.ஒரு முதலாளித்துவவாதி என்னசொல்வானோ அதை தான் நீயும் சொல்கிறாய்.அடப்பாவிங்களா! நீங்களா கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்கிறீர்கள்.நான் மாவோயிஸ்ட்டின் ஆயுத போராட்டத்தை ஏற்க்கவில்லை.ஆனால் உங்களை ஒரு முதலாளித்துவ ஜனநாயகவாதியாககூட பார்க்கமுடியவில்லை.அந்த அளவுக்கு சீரளிந்து போய் இருக்கிறீர்கள்.நீ சொல்கிறாயே அதை தான் எல்லா முதலாளித்துவ ஊடகங்களும்,முதலாளிகளும்,நாட்டைகூட்டி கொடுக்கும் அரசியல் கட்சிகளும் சொல்கிறார்கள்.நல்ல விவாத தந்திரம்.

    ReplyDelete
  31. வாங்க ரோபோ காந்த்

    நாங்க மவோஸ்ட்டை ஆதரிக்கவில்லை ஆனால் சிபிஎம் கட்சி ஊழியர்களை கொள்கிறார்கள் அதனால் ஆதரிக்கிறோம்

    நாங்கள் ஆயுத போராட்டத்தை ஆதரிக்கவில்லை அவர்களுடைய ஆதயுங்கள் அப்பாவி மக்களை கொள்வதால் ஆதரிக்கிறோம்.

    நாங்கள் ரயில்களுக்கு குண்டு வைத்து தகர்ப்பதை ஆதரிக்கவில்லை அதில் புரட்சி புடிங்கின்னு வரும் என்பதால் ஆதரிக்கிறோம்

    நாங்கள் ஓட்டு பொருக்கி கட்சிகளை ஆதரிக்கவில்லை சிபிஎம் கட்சியை தோர்க்கடிப்பது என்றால் ஓட்டு போடுவோம்.

    நாங்கள் மகஇக வை ஆதரிக்கவில்லை அது சிபிஎம் கட்சிக்கு எதிராக மாமா செய்வதால் ஆதரிக்கிறோம்

    நல்லா இருக்கு அண்னே உங்க நாயம் வாழ்க மகஇக வளர்க புரட்சி

    ReplyDelete
  32. விடுதலை//

    உங்களிடம் பேசுவதே வீண் தான். எந்த முதலாளியாவது சுரண்டுவது தவறு என்று உணர்கிறானா? அதுபோலதான் நீங்களும்.போலிகள் என்று தவறுகளை திரித்திக்கொள்கிறது. பாராளுமன்ற பாதையே புரட்சி பாதை. நடத்துக்கள்.

    புரட்சிகர கோட்பாடு இல்லையென்றால் புரட்சிகர இயக்கம் இருக்கமுடியாது
    ---- லெனின்

    ReplyDelete
  33. ரோபோ காந்த்

    மார்க்சிஸ்டுகளை வீழ்த்த வேண்டுமானால், தரகு கூட்டமான காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மதவெறி பாஜகவோடும் கூட்டுச் சேரலாம் என்பதுதான் மாவோயிஸ்டுகளின் புதிய புரட்சிகர கோட்பாடு என்றால் அது வெட்கக் கேடானது. அழித்தொழிப்பு என்று நிலப்பிரபுக்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும் எதிராக களம் புகுந்த நாம், எத்தனை நிலப்பிரபுக்களையும், பெருமுதலாளிகளையும் இதுவரை கொன்று அழித்திருக்கிறோம் என்று நக்சலைட்டுகள் யோசித்து பார்த்தால் நல்லது. மாறாக, மார்க்சிஸ்ட் கட்சியினரையும், அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி, துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு வீசியும் கொன்று குவிப்பதுதான், அழித்தொழிப்பா என்பது குறித்தும் அவர்கள் யோசிக்க வேண்டும்.

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)