காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளரான ராகுல்காந்தி, ஒவ்வொரு மாநிலமாக கட்சி வளர்க் கிறேன் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். “போகும் இடங்களில் எல்லாம் அவருக்காக ஏற் பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு வளை யத்தைத்தாண்டி சென்றார். தலித் மக்கள் வீட்டுக்குச் சென்றார்” என்று ஊடகங்கள் செய்தி பரப்பி வருகின்றன. ஆனாலும், பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பலத்த அடி வாங்கியுள்ளது.
இச்சூழ்நிலையில் தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் இளைஞர் காங்கிரசாரை ராகுல்காந்தி சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர் தான் முதல்வர் என ராகுல் காந்தி பேசியுள்ளார். சென்னையில் அவர் இப்படி பேசிய போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு அதை தமிழாக்கம் செய்யாமல் விட்டு விட்டார். இதைக்கண்ட இளைஞர் காங் கிரசார் கூச்சலிடவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, தங்கபாலு வின் பேச்சை மீண்டும் திருத்தி மொழியாக்கம் செய்துள்ளார். தமிழகத்தில் விரைவில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்படுவார் என முன்னாள் அமைச் சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறி வருவதைக் கண்டு தங்கபாலு, ராகுலின் இப்பேச்சை ரசிக்காமல் விட்டிருக்கக் கூடும்!
இந்த நிலையில் மதுரை வந்த ராகுல் காந்தி, காந்திமியூசியத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் காங்கிரசாரைச் சந்தித்து உரையாடினார். அதன்பின் பயணிகள் தங்கும் விடுதி சென்றவர், திடீரென மேலூர் தும்பைப் பட்டியில் உள்ள தியாகசீலர் கக்கனின் நினைவிடத்திற்கும் சென்றுள்ளார். அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு மதுரை திரும் பிய அவர், ரேஸ்கோர்ஸ் காலனி அருகே உள்ள தாமரைத்தொட்டி ஆதிதிராவிடர் விடுதிக்கும் ஒரு விசிட் அடித்துள்ளார். இந்த விசிட்டெல்லாம் சிலமணி நேரங் களுக்குள் நடந்து முடிந்துவிட்டது.
தலித் மக்கள் மீது பாசம் கொண்டவர் போல ராகுல்காந்தி நடந்து கொள்வது பற்றி காங்கிரஸ் கட்சியில் உள்ள தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் விசா ரித்த போது, ராகுல்காந்தியின் செயல் பாடுகளை மட்டுமின்றி தமிழக காங் கிரஸ் கமிட்டியின் செயல்பாடுகளையும் கடுமையாகவே விமர்சித்தனர்.
தியாகசீலர் கக்கனின் தம்பி பி.வடிவேலுவிடம் இதுகுறித்து கேட்டதற்கு,“ காங்கிரஸ் கட்சியில் தலித்துகளுக்கு மரியாதை இல்லை. கக்கன் குடும்பத் திற்கும் மரியாதையில்லை” என்று குற்றம் சாட்டினார்.
ராகுல்காந்தி ஆதிதிராவிடர் நல விடுதியைப் பார்த்து என்ன ஆகப் போகிறது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆ.தமிழரசி தொகுதியில் உள்ள அந்த விடுதியில் பல ஆண்டு களாக கழிப்பறை வசதியில்லை. அதை சரிசெய்யச் சொல்லி பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ராகுல்காந்தி பார்த்தால் சரியாகி விடுமா என்ற கேள்வி யை முன்வைத்த காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி பிரிவு மாவட்டத்தலைவர் மானகிரி விஜயன், காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களில் 60 சதவீதம் தலித் மக்கள் தான். ஆனால், அக்கட்சியில் மாவட்டத் தலைவராக தலித் வரமுடியாது. ஏனெ னில் பிறசாதியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், தலித்துகளை வளரவிடா மல் பார்த்துக்கொள்வார்கள். இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெயக்குமார், எங்கள் துறையின் தலைவர் செங்கை செல்லப்பா ஆகியோர் சோனியாகாந்தி யிடமும், ராகுல்காந்தியிடமும் இது குறித்து பல முறை முறையிட்டுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலை வராக ஒரு தலித்தை நியமிக்க வேண்டும். அத்துடன், பத்து மாவட்டத்திற்கு தலித் தலைவர்களை நியமிக்க வேண்டும். இல் லாவிட்டால் சில விளைவுகளை காங் கிரஸ் கட்சி சந்தித்தே தீரும் என பேசினார்.
தியாகசீலர் கக்கனின் நூற்றாண்டு விழாவை மதுரையில் காங்கிரஸ் கட்சி நடத்திய போது, அவரை கேவலப்படுத்தி போஸ்டர் ஒட்டியது மட்டுமல்லாமல், அதில் ப.சிதம்பரம் படத்தை காந்தி போல சித்தரித்த கேவலத்தை என்ன வென்று சொல்வது என ஆதங்கப்பட்டார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தொண்டர்.
மதுரையில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியை ராகுல்காந்தி சுற்றிப்பார்த்தது குறித்து கருத்து தெரிவித்த இந்திய மாண வர் சங்க மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ் மோகன், தமிழகத்தில் உள்ள அரசினர் குறிப்பாக ஆதிதிராவிடர் நலவிடுதிக ளில் 75 சதவீத கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. திருச்சியில் டோல்கேட் ஆதிதிராவிடர் விடுதியில் தங்கிப்படிக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், கட்டணக்கழிப்பறையைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். விடுதி களில் உள்ள செப்டிக் டாங்குகளை சுத் தம் செய்யாத காரணத்தால் கழிப்பறை கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள் ளப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட வெளிச் சொல்ல முடியாத சோகத்துடன் தான் மாணவிகள் கழிப்பறைகளை பயன் படுத்தி வருகின்றனர். இதனால் மனரீதியாக மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனக்குறிப்பிட்டார்.
தலித் மக்களுக்கு விடுதலை அளிக்க வந்தது போல ஊடகங்கள் காட்டும் ராகுல்காந்தியின் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தான், தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பணம் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிக்கு ஒதுக்கப்பட் டது. ‘தேசிய மனித உரிமை ஆணையம் இன்று சந்திக்கும் சவால்கள்’ என்ற தலைப்பில் மதுரையில் நடைபெற்ற கருத் தரங்கில் பேசிய இந்தியாவில் ஐ.நா.வின் மனித உரிமைக்காக செயல்படும் குழு உறுப்பினர் மிலூன் கோத்தாரி இது குறித்து வெளிப்படையாகவே குற்றம்சாட் டினார். அவர்பேசும் போது, ‘‘இந்திய மனித உரிமை ஆணையங்கள் அனைத் தும் சுதந்திரமாக செயல்பட முடியாமல், அரசின் ஒரு துறையாகவே செயல்படு வதைப் பார்க்க முடிகிறது. தலித் மக் களுக்காக ஒதுக்கப்பட்ட 720 கோடி ரூபாய் பணத்தை புதுதில்லியில் காமன் வெல்த் விளையாட்டு போட்டி நடத்து வதற்கான ஸ்டேடியம் கட்டுவதற்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது” எனக் குறிப்பிட்டார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் தலித்துக ளின் நிலை எப்படி இருக்கிறது என அக் கட்சியின் எஸ்.சி.,எஸ்.டி துறையின் மாநி லத்தலைவர் செங்கை செல்லப்பாவிடம் கேட்டதற்கு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக ஒரு தலித் நியமிக்கப்பட்டு 36 ஆண்டுகள் ஆகிறது. இளையபெருமாளுக்கு பிறகு யாரும் எங்கள் சமுதாயத்தில் இருந்து காங்கிர சில் தலைவராக முடியவில்லை. இந்த நிலையில் ராகுல்காந்தி தலித் மக்களை சந்திக்கிறார். தமிழகத்தில் அடுத்த முதல் வர் ஒரு தலித் என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மதுரை மற்றும் மயிலாப்பூர் கூட்டங்களில் பேசுகிறார். ஆனால், தமிழகத்தில் மாவட்டத்தலைவராக ஒரு தலித் கூட காங்கிரஸ் கட்சியில் நிய மிக்கப்படவில்லை. இதற்காக நீண்ட நாளாக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம் என்று அவர் கூறினார்.
தமிழகத்தில் ஒரு மாவட்டத் தலைவராக கூட தலித்தை நியமிக்காத நிலையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப்பொதுச்செயலாளர் ராகுல்காந்தி, தமிழகம் வந்து, குறிப்பாக மதுரையில் கக்கன் குறித்தும் ஆதிதிராவிட மாண வர்கள் குறித்தும் அக்கறைபட்டது போல காட்டிக்கொண்டது, நடிப்பு இல்லாமல் வேறெதுவாய் இருக்க முடியும்.
-ப.கவிதா குமார்
//ராகுல் காந்தி அரசியல் ... நட்பா? இல்லை நடிப்பா? //
ReplyDeleteஇப்படி நீங்க கேட்கவே தேவை இல்லைங்க...
மேட்டுக் குடியில் பிறந்த எவனும் கீழக்கிடக்கும் எவனைப் பற்றியும் கலைப்பட்டது இல்லை. இதற்கு புத்தன் மடடுமே விதிவிலக்கு.............
கிட்டத்தட்ட அப்துல்கலாமின் ஸ்டைலில் சுற்ற ஆரம்பித்துவிட்டார். ஆனால் பலன் ஒன்றும் இருக்காது, பத்திரிக்கைகளுக்கும் மீடியாக்களுக்கும் நல்ல தீனி தான்.
ReplyDeleteமீடியாக்களுக்கு இப்படி ஒருத்தன் தேவைப்படுகிறான் ...
ReplyDelete