கோவை மாநகரத்திற்கு சற்று வெளியே அமைந்துள்ள வேடபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீண்ட, நெடிய பெருஞ்சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை மனதில் கொண்டு, தங்கள் பகுதிக்கு அருகில் தலித் குடியிருப்புகள் இருந்தால் விலை போகாது என்ற எண்ணத்தில் அந்தக் குடியிருப்புகளை மறைக்கும் வகையில் பத்தடி உயரம், இரண்டடி அகலத்திற்கு நீண்ட சுவரை எழுப்பியுள் ளார்கள். கடந்த இரண்டாண்டு காலத்தில் சிறிது, சிறிதாக கட்டப்பட்ட சுவர் தற்போது ஆயிரம் அடியையும் தாண்டுகிறது. ஒட்டு மொத்தமாக சுமார் முக்கால் கிலோ மீட்டர் தூரத்திற்கு தலித் குடியிருப்பை மறைக்கும் வகையில் சுவர் உள்ளது.
பிரதான சாலைக்கு சுற்றித்தான் போக வேண்டும் என்ற கட்டாயத்தில் வேடபட்டி பேரூராட்சியில் உள்ள நாகராஜபுரம் பகுதி மக்கள் உள்ளனர். சாதி ரீதியாக தங்களை தாழ்த்தப்பட்டவர்களாகப் பார்க்கும் மனநிலைதான் இந்தத் தீண்டாமைச்சுவர் என்று மக்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். ஏற்கெனவே குறைதீர்க்கும் நாளன்று இந்தத் தீண்டாமைச்சுவரை அகற்ற வேண்டும் என்று மனு தரப்பட்டது. விஷய மறிந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் சுவரைப் பார்வையிட்டனர்.
கோவையிலிருந்து பூசாரிபாளை யம் வழியாக தொண்டாமுத்தூர் செல் லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வேட பட்டி பேரூராட்சி. வேடபட்டிக்கு சற்று முன்னதாக கீழ்புறத்தில் அமைந்துள்ள பேரூராட்சியின் 4வது மற்றும் 5வது வார்டுகள்தான் நாக ராஜபுரம் என்றழைக்கப்படுகிறது. தொண்டாமுத்தூர் மெயின்ரோட்டின் வெகு அருகில் இணைகோடாய் அமைந்துள்ளது நாகராஜபுரத்தின் மட்டசாலை எனப்படும் பகுதி. மட்டசாலைப் பகுதியினரை முக்கிய சாலைக்கு வரவிடக்கூடாது என்ப தற்காகவே சுமார் ஆயிரம் அடி நீளத் தில், 10 மீட்டர் உயரத்தில், இரண்டடி அகலமான கற்சுவர் ஒன்றை கனகம் பீரமாக கட்டியிருக்கிறார்கள் சிலர். அச்சுவர் நெடிதுயர்ந்து நீண்டு வளைந்து தலித் அருந்ததியர் மக்களைத் தள்ளி வைத்திருக்கிறது.
நவீன தீண்டாமைச் சூட்சுமம்
சுமார் 500 வீடுகளைக் கொண்ட நாகராஜபுரம் பகுதியில் அருந்ததியர் மற்றும் நரிக்குறவர் என்றழைக்கப் படும் மராட்டா இன மக்கள் வசித்து வருகிறார்கள். மட்டசாலைப்பகுதிக் கும், மெயின்ரோட்டிற்கும் இடையே உள்ள சுமார் 12 ஏக்கர் நிலப்பகுதி முதலில் நஞ்சுண்ட கவுண்டர் தோட் டமாக இருந்துள்ளது. அதனைச் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் விலைக்கு வாங்கிய வட நாட்டுக் காரர் ஒருவர்தான் மூன்றாண்டு களுக்கு முன்னர் இந்தப் பெருஞ் சுவரைக் கட்டியெழுப்பியுள்ளார். ஏற்கெனவே தலித் மக்கள் அணுகு சாலையாக(சுமார் 20 அடிப்பாதை) பயன்படுத்திய இடம் இச்சுவரால் அடைபட்டிருக்கிறது. ஆனாலும் கீழ்புறம் சென்றுவர வழி இருந்த தாலும், அவரவர் சொந்த நிலத்தில் சுவரெழுப்பினாலென்ன, சுண்ணாம் படித்தால் என்ன என்ற பாமரத்தன மான பயம் கலந்த பொதுப்புத்தி யாலும் தடுக்காமல் விட்டுவிட்டனர். பின்னர் அடுத்துள்ள நிலத்தானும் அவன் சத்துக்கு சுவரெழுப்ப, கடை சிக்கீழ்புறம் சவுக்குத்தோப்பு வைத் திருந்த வடநாட்டுக்காரரும் சுவரெ ழுப்ப முற்று முழுதாக எழும்பிவிட் டது அந்த ஆயிரம் அடிப்பெருஞ் சுவர்.
கொள்ளை இலாபம் பார்க்க நிலம் வாங்கிப்போட்டவர், மேலும் பணம் செலவழித்து பெருஞ்சுவரை ஏன் கட்டவேண்டும்? இங்குதான் உள் ளது நவீனத் தீண்டாமையின் சூட்சு மம். சாலையோர நிலம்(ரோடுசைடு சைட்) என்று விரும்பி வருபவர்கள், அருகில் சேரி மக்கள் இருந்தால் நிலம் வாங்க மாட்டார்களாம். எனவே அப்பகுதியை சுவர் வைத்து அடைத்து விட்டால் நிலத்தை கொள்ளை லாபம் வைத்து விற்று விடலாமாம்.
இந்த தீண்டாமைப் பெருஞ்சுவர் தடுத்து நிற்பதால் வேறுவழியின்றி நாகராஜபுரம் பகுதியில் உள்ள சுமார் இரண்டாயிரம் தலித் மக்களும் முக் கால் கிலோ மீட்டர் தூரம் சுற்றித் தான் வேடபட்டி செல்லும் சாலைக்கு வரவேண்டியுள்ளது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையீடு
கடந்த திங்களன்று(டிசம்பர் 20) இப்பிரச்சனை குறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஜெயராஜ் என்பவர் புகார் அளித்துள்ளார். தகவலறிந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் புதனன்று நாகராஜபுரம் நோக்கி விரைந்தனர். கோவை மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், மாநிலச்செயலா ளர் கணேஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அ.ர.பாபு, தொண்டாமுத்தூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சி அமைப்பாளர் ஆறுச்சாமி, கிளைச்செயலாளர் கே. இருதயசாமி உள்ளிட்டோர் தீண் டாமைப் பெருஞ்சுவரை நேரில் ஆய்வு செய்தனர். விபரமறிந்து அப் பகுதியில் வசிக்கும் ஈஸ்வரி, பழனி யம்மாள், திவ்யா, ஜோதிமணி உள் ளிட்ட பெண்களும், ஏராளமான முதி யோரும் திரண்டு தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி களிடம் முறையிட்டனர். தங்களைத் தீட்டென்று விலக்கி வைக்கும் இத் தீண்டாமைச்சுவரை அகற்ற நடவ டிக்கை எடுக்குமாறு வேண்டினர்.
உடைத்து நொறுக்கு
பின்னர் இப்பிரச்சனை குறித்து யு.கே.சிவஞானத்திடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது : அருந்த தியர், குறவர் இன மக்களைத் தடுத்து எழுப்பப்பட்டுள்ள இந்த தீண்டா மைச் சுவரானது இம்மக்களை சிறை யில் அடைத்ததுபோல் உள்ளது. இந்த நிலம், வீட்டுமனை விற்ப னைக்கானது என்றால் லே-அவுட் டுகள் பிரித்து சாலைகள் அமைப் பது, ரிசர்வ் சைட் ஒதுக்குவது என பல்வேறு விதிகள் உள்ளன. மாடி வீடுகள் மூன்று இங்கு கட்டப்பட்ட பிறகும், எடைமேடை ஒன்று அமைக் கப்பட்டபிறகும், நில விற்பனைக் கான விதிமுறைகள் பின்பற்றப் படவே யில்லை. எனவே சம்பந் தப்பட்ட பேரூராட்சி நிர்வாகங்களும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு இத்தீண்டாமைப் பெருஞ்சுவரை அகற்ற வேண்டும். அப்பகுதியில் வீட்டுமனை ஒதுக் கீட்டு விதிமுறைகளின்படி விற்ப னையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஜனநாயக, முற் போக்கு இயக்கங்களையும், மக்க ளையும் ஓரணியில் திரட்டி போராட் டங்களை நடத்தும் என்றார்.
- எம்.சக்தி.
நன்றி: தீக்கதிர்
உடைக்க உடைக்க எழுந்துக்கொண்டே இருக்கிறது தீண்டாமை சுவர்கள். அனைத்தும் உடையும் வரை தொடர்ந்து எழுவோம் என முழங்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉடைக்கப்படவேண்டியவை சுவர்கள் மடும் அல்ல ...
ReplyDelete