அன்புள்ள பதிவுலக நண்பர்களுக்கு,
”மாற்று” வலைப்பக்கம் துவங்கி இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. உண்மையிலேயே எதிர்பார்க்காத ஆதரவை வழங்கி வருகின்றீர்கள். மாற்று தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பதிவுலகில் ஏற்கனவெ இயங்கிக் கொண்டிருந்த சில பதிவர்களின் கூட்டு முயற்சியே மாற்று வலைப்பக்கம். நாங்கள் ஒரே கொள்கையுடன் இயங்கி வருபவர்கள். இடதுசாரிகள்.
நமது நாட்டில் கோலோச்சிக் கொண்டிருக்கும் பெருந்தனக்காரர்கள், அன்னிய மூலதனக் குவியலுக்கு எதிராக ஒரு மாற்றுப் பொருளாதாரத்தை முன்வைத்தும். அதன் விளைவாக அதிகரிக்கும் வாழ்க்கை நெருக்கடி, பொருளாதாரத் துயரங்கள், மரணங்கள் மற்றும் ஊழலுக்கு எதிராகவும் -இன்றளவிலும் மாறாமல் தொடரும் நிலப்பிரபுத்துவ அவலங்களான சாதி ஒடுக்குமுறை, தீண்டாமை மற்றும் மதவாதிகளின் பிரிவினைக் கோஷ்ங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயலாற்றுகிறோம்.
மேற்கண்ட அவலங்கள்தான், நமது இந்தியாவைப் பீடித்த நோய்கள். அவைதான், மனிதர்களை ஆண்/பெண், மதம், சாதி, பிரதேச வெறிகளைக் கிளப்பி அன்றாடம் சந்திக்கும் அவலங்களுக்கு காரணமாய் இருக்கின்றன. இந்த நிலையில் நடப்பதெல்லாம் நடக்கட்டும் என்று இல்லாமல். நம்மால் இயன்றவரை மாற்றுவோம் என்பதே எங்கள் அழைப்பாக இருக்கிறது.
ஆனால் ஏக காலத்தில் மாற்று வலைத்தளம் மட்டுமில்லை. சவுக்கு, வினவு , உண்மைத்தமிழன் என குறிப்பிடத்தக்க வலைப்பக்கங்கள் பலவும், இணையத்தில் அரசியல் சார்ந்த பதிவுகளை நிறைய எழுதிகிறார்கள். இங்கெல்லாம், நல்ல விவாதங்களும் நடக்கின்றன. ஆனால், விவாதங்கள் மட்டுமே நல்ல முடிவை எட்டுவதாகச் சொல்லிவிட முடியாது.
இங்கே அவரவர்களுக்கென தனித்த பார்வைகளும், கொள்கைகளும் இருக்கலாம். கருத்து முரண்பாடுகள் குவியக் கூடும் நிச்சயமாக. இந்த நேரத்தில் ஒரு ஆரோக்கியமான இணையக் கலாச்சாரத்திற்கான அவசியத்தையும், அறைகூவலையும் முன்னெடுப்பது அவசியம் என்று கருதுகிறோம். இணையம் என்பது ஒரு கட்புலனாகாத வெளியாக இருக்கலாம். ஆனால் உண்மையில், இது பல்வேறு வகையான மனிதர்களின் சங்கமமாக இருக்கிறது.
தனியே கணினியின் முன் அமர்த்தப்பட்டாலும், கருத்துப் பரிமாறல்கள் இல்லாமல் எந்த மனிதனும் இருக்க முடியாது. அதன் வெளிப்பாடே பதிவுத்தளம். சிலகாலம் செயலற்றுக் கிடந்த எழுத்துலகிற்கு புதிய திசையை இவ்வலப்பூக்கள் காட்டியிருக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது. பெண்களும் கூட அதிக அளவில் எழுத வந்திருக்கிறார்கள். அவர்களிலும் சிலரே அழுத்தமாகவும், வீரியமாகவும் சமூகப் பார்வையுடன் எழுதுகிறார்கள்.மற்றபடி அவர்களில் பெரும்பாலாரும் ஒரு வட்டத்துடன் நின்று, சமையல் குறிப்பு, கோலம், கவிதை ,காதல், பக்தி என்று அடங்கிவிடுவதும் இருக்கிறது. அதற்கு தயக்கங்களும், சமூக இறுக்கங்களும் பின்புலமாக இருக்கக்கூடும்.
இதற்கு காரணம், இணைய வெளிக்கென ஒரு கலாச்சாரம் பராமரிக்கப்படாததாகும். விவாதங்கள் கட்டற்று நடப்பது ஆரோக்யமான விளைவை எப்போதும் ஏற்படுத்தியதில்லை. குறிப்பாக 3 விசயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
1) வெற்று தாக்குதல்களை, கொச்சையான வார்த்தைகளைத் தவிர்த்தல் ... இது விவாதம் தனி நபர் காயங்களை ஏற்படுத்தாமல் நகர உதவும்.
2)முன்னுக்குப் பின் முரணான வாதங்களைத் தவிர்த்தல்
3) ஆதாரங்களற்ற, திரித்துப் பேசும் போக்கை கைவிடல்
4)பின்னூட்டங்கள் என்ற பேரில் அர்த்தமற்ற வார்த்தைகளைக் கொட்டுவதும், கும்மியடிப்பதையும் தவிர்ப்பது.
4)பின்னூட்டங்கள் என்ற பேரில் அர்த்தமற்ற வார்த்தைகளைக் கொட்டுவதும், கும்மியடிப்பதையும் தவிர்ப்பது.
இதுபோன்ற பதிவுலக குணாம்சங்களை வளர்த்தெடுக்க வேண்டியிருக்கிறது. (குறிப்பாக பிரபலமான பதிவர்களிடம் மட்டுமாவது).
நம்மைப் பார்த்துதான், புதிய பதிவர்கள் தங்கள் வலைப்பதிவுகளை அமைக்க இருக்கிறார்கள். எனவே
1) அர்த்தமுள்ள பதிவுகளை வெளியிடல்...
2) மொக்கைகளைக் குறைத்தல்
3)சமூக நலனுக்கான சில கொள்கைகளில் ஒன்றிணைதல் (உம். புவி வெப்பமயமாதல் எதிர்ப்பு, பெண்ணுரிமை, கனிம வளங்கள் பாதுகாப்பு)
இது சம்பந்தமாக ஆரோக்கியமான கருத்துக்களையும், யோசனைகளையும் எல்லோரும் முன்வைக்க அழைக்கிறோம். எழுத்துக்கள் வடிகாலாக மட்டுமில்லாமல் இல்லாமல் வழிகளை காட்டுவதாகவும் இருக்கட்டும்!
தொடர்ந்து பயணிப்போம்....
இது சம்பந்தமாக ஆரோக்கியமான கருத்துக்களையும், யோசனைகளையும் எல்லோரும் முன்வைக்க அழைக்கிறோம். எழுத்துக்கள் வடிகாலாக மட்டுமில்லாமல் இல்லாமல் வழிகளை காட்டுவதாகவும் இருக்கட்டும்!
தொடர்ந்து பயணிப்போம்....
இணையம் இடதுசாரிகளால் நிறையட்டும்
ReplyDelete! வாழ்த்துக்கள் தோழர்களே!
‘மாற்று’ வலைப்பூ சிறப்பான படைப்புகளை வெளியிடுகிறது.
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் தோழர்களே!
ReplyDeleteமொக்கைகளை குறைக்கனுமா?அய்யய்யோ அப்போ என் கிட்டே சரக்குஇல்லைங்கறது எல்லோருக்கும் தெரிஞ்சிடுமே?
ReplyDeleteகுட் போஸ்ட் சார்
ReplyDeleteneenga sollukira condition kalukkellam onru irandu peru kooda thera mattaangale.ippadiyellaam ezhuthithaane pirapalamaanaaga.
ReplyDeleteதமிழன் ... இந்தப் பதிவு போட்டதுமே அத்தனை வரவேற்பு பதிவுலக நண்பaர்கள் மத்தியில். எனவே ஒரு மாற்றம் நிச்சையம் நடக்கும் என நம்புவோம்.
ReplyDeleteஅன்புடையீர்,
ReplyDeleteஉங்களது நோக்கத்தை மெச்சுகிற அதே நேரத்தில், ஒவ்வொருவரும் வலைப்பூ துவங்கி எழுதுவதற்கான காரணங்கள் வேறுபடுகின்றன என்பதனை தாழ்மையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சிலருக்கு, இணையம் அவரவர் பணிச்சுமையின் நடுவில் கிடைக்கிற சிறிய ஓய்வுநேரத்தில் இளைப்பாறல்களாய் இருக்கிறது. இணையத்தால் பல சீரிய கருத்துக்களைச் சொல்ல முடியும் என்றாலும், ஒத்த கருத்து இல்லாமல் போனால், சர்ச்சைகள் தான் மிஞ்சும். எனவே, அவரவர் ரசனைப்படி, அவரவர் விரும்புவதை எழுதிக்கொண்டு போகட்டும். சமூகத்துக்குக் கெடுதல் விளைவிக்கிற கருத்துக்களை எழுதிப்பரப்பாமல் இருந்தாலே போதுமல்லவா? நன்றி!
அவரவர் ரசனைப்படி, அவரவர் விரும்புவதை எழுதிக்கொண்டு போகட்டும். சமூகத்துக்குக் கெடுதல் விளைவிக்கிற கருத்துக்களை எழுதிப்பரப்பாமல் இருந்தாலே போதுமல்லவா? ///
ReplyDeleteமொக்கைகள் எழுதுவது தவரல்ல என்று சொல்ல வருகிறீர்கள். நல்லதுதான். ஆனால், இணையத்திற்கென ஒரு கலாச்சாரத்தைக் கட்டமைப்பது தேவைதானே?
hai to all...
ReplyDeleteDaily News Update In www.ineeya.com
i want urs supportssss