Wednesday, December 22, 2010

“இலவச நில ஊழல்”: 6000 ஏக்கர் நிலங்களைச் சுருட்டிய ”ஏழைகள்” யார்?


பொள்ளாச்சியில் அமைந்துள்ள இந்த ஆலை, அரசு வழங்கிய இலவச நிலங்களை ஆக்கிரமித்து அமைந்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியராக அறியப்படும் ஐகோபி கார்பன்ஸ் நிறுவன அதிபர் தயாநிதிமாறனின் பினாமி என்கிறார்கள். விசாரிக்க வேண்டும்.

மத்திய அரசு மட்டுமல்லாமல், மாநில ஆரசுகளும் தொடர்ந்து ஊழல் புகார்களில் சிக்கி வருகின்றன. குறிப்பாக பாஜக கர்நாடகாவில் அரங்கேற்றிவரும் அரசியல் விளையாடல்கள் ஊடகங்களாலும், சாதாரண மக்களாலும் எள்ளி நகையாடப்பட்டன.

அதிமுகதான் ஊழல் கட்சி என்று குற்றம் சாட்டியே தன்னை ஆட்சியில் அமர்த்திக் கொண்ட திமுக-வோ, தற்போது தொடர்ந்து ஊழல் புகார்களுக்கு ஆளாகிவருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலைப் போலவே, தமிழகத்தில் நடைபெற்றுள்ள நில மோசடி ஊழல்கள் தற்போது கவனிக்கத்தக்கவையாக முன்னுக்கு வந்துள்ளன.

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் மாவட்ட ஆட்சியரிடம் சில ஆவணங்களுடன் கூடிய புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர். அந்த ஆவணங்கள் அதிர்ச்சியளிப்பவையாக இருந்தன. ஒரே நிலம் தொடர்பான இரண்டு பத்திரங்கள் அவை.

மலுமிச்சம்பட்டியில் அரசு இலவச நிலமாக அரியப்படும் இடத்தில் தனியார் கல்லூரி ஒன்று எழும்பிவருகிறது.
அப்பகுதியில், 7/1996/584/2 எண் கொண்ட 23.95 ஏக்கர் நிலத்தை அரசு வாங்கி 918 இலவச வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கியுள்ளது. அதே  பதிவு எண் 522/2000 கொண்ட அன்பு நகர் பகுதியும் அரசுக்கு சொந்தமானதாகும். அதேபோல, 586/2,3, 588/1,2,5 எண்கள் கொண்ட  அம்பேத்கர் நகரிலும் அரசு வாங்கி 250 வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டு மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அந்த மோசடி ஆவண நகல்களும் மதுக்கரை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பக்காவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நீலகிரி மாவட்டம் ஸ்டீபன் என்பவர் மகன் எரிக்ஸ்டீபன் என்பவர் மலுமிச்சம்பட்டியில் உள்ள 584/4 (அவ்வை நகர்), 586/2,3,5 (அன்புநகர்) உள்ளிட்டு 180 ஏக்கர் நிலங்களை கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த முகமதுஅலி என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.  தனிநபர் கிரயம் பதிவு செய்தாலே சிட்டா, அடங்கல் நகல்கள் சரிபார்க்கப்படும் நிலையில், எவ்வித உண்மையான ஆவணங்களும் இன்றி இந்த நிலங்கள் கிரயம் செய்யப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல, இந்த பதிவுக்காக பெறப்பட்டுள்ள வில்லங்கச் சான்று, 1943 முதல் தற்போது வரையில் இந்த நிலங்கள் குறித்து எந்த பத்திரப் பதிவுகளும் இல்லை என்று வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் பதிவுகள் உள்ளன. இப்படி, முரணான தகவல்களைக் கொண்டு பத்திரப் பதிவு நடைபெற்றுள்ளது  பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இது குறித்து அப்பகுதி விவசாயி பழனியப்ப கவுண்டர் கூறியதாவது : எனக்கு 31 ஏக்கர் நிலம் இப்பகுதியில் உள்ளது. இந்த இடத்தில் விவசாயத்திற்கான கிணறு வெட்ட இரண்டு முறை அரசு வங்கியில் கடன் பெற்றுள்ளேன். மேலும் அரசிற்கு மண்வள பாதுகாப்பு திட்டத்திற்கு எனது நிலத்தில் இருந்து 50 சென்ட் நிலத்தை தானமாக கொடுத்திருக்கிறேன். இதுவெல்லாம் பத்திரப்பதிவு துறையில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலங்களையெல்லாம் எனக்கே தெரியாமல் வெறோருவருக்கு விற்று இருக்கின்றனர். இதில் வெடிக்கை என்னவென்றான்றால் புரோக்கர்கள் கையில் இருக்கும் வில்லங்க சான்றிதழில் இந்த விபரங்கள் எதுவும் இல்லை. அப்படி என்றால் பதிவு துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இதுவெல்லாம் எப்படி சாத்தியம். நில மோசடிக்கு உடந்தையாக இருந்திருக்கும் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.(நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை) (நன்றி: தீக்கதிர்)

ஒருவரின் நிலத்தை அவருக்குத் தெரியாமலே விற்கும் இந்த மோசடியின் தொடர்ச்சியாக, அரசு நிலத்தை, அரசு ஒப்புதலுடனே ஆக்கிரமிக்கும் மோசடியும் தமிழகம் முழுவதும் பரவலாக அரங்கேறிவருகிறது.

இதன் தொடர்ச்சியாக,  அதே பகுதியில், தமிழக அரசின் இலவச நில திட்டத்தில் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படும் நிலம் அமைந்துள்ளது. அங்கே, வேலி அமைக்கப்பட்டு தனியார் கல்லூரி (சர்வே எண்: 567/25 ஏபி முதல் 576/40, 738/2, மற்றும் 738/40 வரை) உருவாகிவருகிறது.

சேலம் மாவட்டம் சங்ககிரியில் தேவகவுண்டனூர் பகுதியில் மலைப்பகுதியில் ஒதுக்கப்பட்ட நிலத்தில், கனிம வளங்களை வெட்டியெசுக்கும் கல் குவார் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  அப்பகுதி திமுக பஞ்சாயத்து தலைவர் இந்த கல் குவாரியை நடத்திவருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் (சர்வே எண்: 489/5 இலிருந்து 489/21).
திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலை ...

பவானி வட்டம் அந்தியூர் “ஏ” கிராமப் பகுதியில் ஒதுக்கப்பட்ட நிலங்கள் (சர்வே எண் 82/6, 82/7, 82/8, 106/3, 117/3, 212/6, 229/2)  அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதனின் உறவினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

திண்டுக்கல் மதுரை நெடுஞ்சாலையில் உள்ள நிலங்கள் (சர்வே எண்: 4/5, 4/9) ஊறுகாய் கம்பெனியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

தேனி மாவட்டத்தில் திமுக செயலாளர் வைகை சேகர், கிரி அஇஅதிமுகவின் பிரமுகர் சன்னாசி ஆகியோர் வைகை அணையைச் சுற்றிய வளமான நிலங்கள் (சர்வே எண்: 1349/5, 1349/6, 1445/1 1445/2, 1446/1) வளமான நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர். 

திருச்சி மாவட்டம் சூரியூர் கிராமத்தில் ஒதுக்கப்பட்ட இலவச நிலங்கள் (சர்வே எண்: 50/11 50/12 52/3 52/8 63/1 63/4 67/2 67/12 67/13 67/14 67/16 76/15) திமுக பொதுக்குழு உறுப்பினர் வசல்பட்டி விஜி கட்டுப்பாட்டில் உள்ளதாக உள்ளூர் காரர்கள் தெரிவிக்கின்றனர். (நன்றி: இந்தியா டுடே)

மேற்கண்ட ஆக்கிரமிப்புகள் நடைபெற்றுள்ள மோசடியில் மிகச் சிறு பகுதியாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் தரப்பட்டிருப்பதாக சொல்லப்படும் நிலத்தின் அளவுக்கும் (2,10,747), அதனால் பயனடைந்த விவசாயிகள் (1,75,798) குறித்து செய்திகளே வெளியாகாததையும் பார்க்கும்போது மோசடி சாதாரணமானதாகத் தெரியவில்லை. அத்துடன், ஒரு குடும்பத்திற்கான நில உச்சவரம்பு 15 ஏக்கர் மட்டுமே என்று குறைக்கப்பட்டும் அப்படி எந்த நிலமும் கைப்பற்றப்பட்ட செய்திகள் வெளியாகவில்லை

சமூக நோக்கர் ஒருவர் கூறுகையில், “திமுகவினர் பலன்பெறவும், ஏற்கனவே பண முதலைகளாக உள்ளவர்கள் லாபமடையவுமே இலவச நிலம் உள்ளிட்ட திட்டங்கள் உதவியுள்ளன. இத்திட்டத்தில் சுமார் 6 அயிரம் ஏக்கர் நிலங்கள் சுறுட்டப்பட்டிருக்கலாம்” என்றார்.

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளால் வெற்றிகரமாக செய்துமுடிக்கப்பட்ட நிலச் சீர்திருத்தத்தின் முதல் படியில் கூட திமுகவால் ஏற முடியவில்லை என்பதற்கு காரணம் அவர்களின்  ஊழல் மலிந்திருக்கும் செயல்பாடுகள்தான்.   இந்தவிசயத்தைத் துருவினால், நில மோசடியில் மட்டும், பெருந்தனக்காரர்கள் சுருட்டியுள்ள நிலம் எத்தனை என்கிற உண்மை நமக்கு தெரியவரும் !

தொடர்ந்து படிக்க ...

உங்கள் மின்னஞ்சல் முகவரியை கீழேயுள்ள பெட்டியில் இட்டு, பின்னர் பட்டனை

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)