தாமதமாக வந்ததற்கு
மன்னிக்க வேண்டும் மிஸ்
நடந்ததை கேளுங்கள் - பிறகு
தண்டனை தாருங்கள்
புத்தகப்பை சுமையுடன்
ஊர்ந்து வந்தேன் மிஸ்
பனியில் குளித்த புற்களில்
தூக்கம் க்லைந்த பட்டுப்பூச்சிகள்
ஓட்டப்பந்தயம் நடத்தின மிஸ்
அசிங்கமாய் புத்தகத்தில் வரைந்திருந்த
அழகான வண்ணத்துப்பூச்சி
கையில் வந்தமர்ந்து
கண்ணை உருட்டி உருட்டி
கூடப் பறக்க அழைத்தது என்னை மிஸ்
புத்தகப்பை நசுக்கிக் கீழே
விழுந்து காயமாச்சு மிஸ்
குட்டி அணில் எட்டி நின்று
கண்ணாமூச்சி ஆடியது
சிட்டுக்குருவியும் என்னைப் பார்த்து
வாய்ப்பாட்டு பாடியது மிஸ்
காக்கா கூட கரைந்து கரைந்து
கதைகள் சொன்னது மிஸ்
உங்கள் தண்டனைக்குப் பயந்து
ஊர்ந்த என்னை எழுந்து நடக்க
எறும்புகள் சொன்னது மிஸ்
இவற்றையெல்லாம்
படித்தது எந்த பள்ளிக்கூடம்
என்று கேட்டேன் மிஸ்
பார்த்து கைகொட்டிச் சிரித்தன
பள்ளிக்கூடம் கேள்வி பதில்
பரீட்சை அடி உதை கூட
இல்லாமல் படிக்க முடியுமா மிஸ்?
-உதயசங்கர்
கவிதை நன்றாக இருக்கின்றது
ReplyDeleteஅடடா ... பாடம் எடுக்கிறாளே இந்தச் சுட்டி ...
ReplyDelete//உங்கள் தண்டனைக்குப் பயந்து
ஊர்ந்த என்னை எழுந்து நடக்க
எறும்புகள் சொன்னது மிஸ்//
உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கவிதைக்கு நன்றி.
ReplyDeleteநான் வாக்களிக்காமலே, வாக்களித்துவிட்டதாகச் சொல்கிறதே, தமிழ்மணம் எப்படி?
ReplyDeletesuperrrrrrrrrrrrr
ReplyDeleteசிறந்த கவிதை
ReplyDeleteதமிழில் குழந்தைகளுக்காக எழுதுகிற கொஞ்சம் பேரில் எழுத்தாளர் உதயசங்கரும் ஒருவர். பகிர்வு நல்லது.
ReplyDeleteKana varo!
ReplyDeleteநன்றி... வருகைக்கும், பகிர்வுக்கும்.
சிந்தன்!
ஆமாம், அவர்களிடம் நாம்தான் படித்து அறிவதில்லை.
மதுராஜ்!
நன்றி.... வருகைக்கும், பகிர்வுக்கும்.
ரவிக்குமார்!
மிக்க நன்றி....!
மார்க்சியன்!
நன்றி... வருகைக்கும், பக்ர்வுக்கும்.
பனித்துளி சங்கர்!
வருகைக்கும், கரம் கோர்த்ததற்கும், சந்தோஷம்.
மாதவராஜ்!
நன்றி..... வருகைக்கும், பகிர்வுக்கும்.