நில ஊழலில் ஈடுபட்ட அவர் பதவியில் நீடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் திட்டவட்டமாக இருந்தனர்.
அதே போல ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமான சுஷ்மா சுவராஜூம் எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என்றார். மேலும் எடியூரப்பாவின் தீவிர எதிர்ப்பாளரான மூத்த பாஜக எம்பியான அனந்த் குமாரும், அவரது பதவியை பறிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார்.
ஆனால், எனது சாதியைச் சேர்ந்த, எனது தீவிர ஆதரவாளர்களான 13 எம்எல்ஏக்களை என்னுடன் ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியைக் கவிழ்ப்பேன், மேலும் பாஜகவுக்குக் கிடைத்து வரும் எனது சமூகமான லிங்காயத்து சாதி ஓட்டுக்களை சிதறடிப்பேன் என்று எடியூரப்பா விடுத்த மிரட்டலால் பாஜக தலைவர்கள் அவருக்குப் பணிந்து விட்டனர்.
மேலும் ரெட்டி சகோதரர்களுடன் சேர்ந்து கொண்டு சுஷ்மா சுவராஜ் நடத்தி வரும் உட்கட்சி கோஷ்டி அரசியலை பகிரங்கமாக்குவேன். மூத்த பாஜக தலைவர்கள் எனது அரசால் பெற்ற லாபங்களையும், கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் உள்ள அவர்களது சொத்து விவரங்களையும் வெளியிடுவேன். மேலும் கட்சிக்கு பணம் வரும் வழிகளையும் அடைப்பேன் என்றும் எடியூரப்பா மிரட்ட, அவரே பதவியில் நீடிக்கட்டும் என்ற முடிவுக்கு பாஜக தலைவர்கள் வந்துவிட்டனர்.
அவரிடம், இனிமேல் அரசாங்கத்தில் உங்களது மகன்களும் உறவினர்களும் தலையிடுவதை மட்டும் தவிர்த்து விடுங்கள், ரெட்டிகள் மீது கை வைத்துவிடாதீர்கள், எல்லா கோஷ்டிகளையும் அரவணைத்துச் செல்லுங்கள் என்று சில நிபந்தனைகளை மட்டும் கட்சியின் தலைவர் நிதின் கட்காரி, அருண் ஜெட்லி ஆகியோர் மூலம் ‘வேண்டுகோளாக’ வைத்து பெங்களூருக்கு அனுப்பி வைத்துவிட்டது பாஜக மேலிடம்.
ஒருவழியாக தனது தலைவர்களை மிரட்டி பதவியை தக்க வைத்துக் கொண்டு, பெங்களூர் வந்த எடியூரப்பாவுக்கு அவரது ஆதரவாளர்கள், சென்னையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ.ராசாவுக்கு திமுக வினர் வரவேற்பு அளித்த பாணியில், விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அப்போது நிருபர்களிடம் பேசிய எடியூரப்பா, வழக்கம் போல தரும் உறுதிமொழி களை மீண்டும் தந்தார். அவர் கூறுகையில், “பாஜக மேலிடம் கர்நாடக முதல்வராக தொடர்ந்து நீடிக்க எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளது. இனிமேல் கர்நாடகத்தின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துவேன்.” என்றார்.
இதற்கிடையே எடியூரப்பா குடும்பத்தினரின் நில ஊழல் தொடர்பாக லோக் அயுக்தா விசாரணை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக தனி நீதி விசாரணைக்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் லோக் அயுக்தாவின் விசாரணையை முடக்க அவர் முயல்கிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாங்கள் இந்த விவகாரத்தை விசாரிக்க ஆரம்பித்துள்ள நிலையில் எங்களிடம் கேட்காமல் நீதி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளது ஏன் என்று லோக் அயுக்தா தலைவரான நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் வியாழனன்று தனது மகன் விஜயேந்திரா மற்றும் மகள் உமாதேவியை தனது அரசு இல்லத்திலிருந்து காலி செய்யுமாறு எடியூரப்பா கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு சொந்த வீடுகளுக்குச் சென்று விட்டனர்.
(ஆதாரம் : தீக்கதிர்)
சித்தாந்தம், கலாச்சாரம், தேசீயம் என்று மார்தட்டிய கட்சிக்கு எதுவும் கிடையாது என்பது அம்பலமாகியுள்ளது. கட்சி, கட்டுப்பாடு என்பதெல்லாம் வெறும் பம்மாத்துதான். மக்களிடம் பிரிவினையையும், துவேஷத்தையும் வளர்ப்பது, அதில் குளிர் காய்வது, அதிகாரத்துக்கு வருவது என்ற அதன் திட்டத்தில் இப்போது ஊழலும் புகுந்து நாற்றமெடுக்க ஆரம்பத்திருக்கிறது. மோடியும், எடியூரப்பாவும் பா.ஜ.கவின் இருதலைகள்.
இந்த கட்டுரையை படிச்சதும், அவங்க இருதலைகள் அல்ல... தறுதலைகள் என்று சொல்லத்தோன்றுகிறது...
ReplyDeleteதியாகராஜன்!
ReplyDeleteவருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.