“மிக உயர்ந்தவன்
கிராமவாசியா? நகரவாசியா?
இல்லை.
விலைவாசி.”
கவிஞர் கந்தர்வன்
நிர்வாணத்தை
விற்பனை
செய்கிறோம்,
ஆடைவாங்க”
கவிஞர் நா. காமராசன்
வீசியெறிந்த செய்தித்தாளை அப்பாவிடம் தரவும்
வீதியில் காய்கறிக்காரன் வந்தால் அம்மாவை அழைக்கவும்
யாரும் சொல்லித்தராமலே எனக்குப் புரிகிறது
//வீசியெறிந்த செய்தித்தாளை அப்பாவிடம் தரவும்
ReplyDeleteவீதியில் காய்கறிக்காரன் வந்தால் அம்மாவை அழைக்கவும்
யாரும் சொல்லித்தராமலே எனக்குப் புரிகிறது//
இக்கவிதை ஏதோ செய்கிறதென்னை, எத்தனையாவதுமுறை படிக்கிறேன் என்பதைகூட அறியாமல்....
வைரவரிகளாகத் தேர்ந்த்தெடுத்துத் தந்தமைக்கு நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள்
அருமை அருமை !
ReplyDelete"சிக்கலில் இருக்குது தேசம்
ReplyDeleteஎன்ன
செய்வதாய் உத்தேசம்"
"சின்னத்தமிழன் சேறினிலே
சிறப்புத்தமிழன் காரினிலே
என்ன தமிழா இத்தனை
காலம்
திண்ணை மீது சப்பணமாய்"
-இவைகளும் கவிஞர் கந்தர்வனின் தீப்பொறிக் கவிதைகள்தாம்