Saturday, January 22, 2011

லெனின்: புது யுகத்தின் வழிகாட்டி !

லெனின் மறைந்து 87-ஆண்டுகள் முடிந்து விட்டன. அவரின் 54 ஆண்டு வாழ்க்கைப்பதிவுகள் இன்றும் லெனினியம் என்ற பெயரில் நமக்கு வழிகாட்டியாக திகழ்கின்றது. முதலாளித்துவத்தின் வளர்ச்சிப்போக்குகளை துல்லியமாக மதிப்பீடு செய்து ஏகாதிபத்தியம் என்ற சங்கிலியின் பலவீனமான கண்ணியை தகர்த்தெரிந்த வர்க்கப் புரட்சிச்கு தலைமையேற்றார் லெனின். மார்க்சியம் என்ற கோட்பாட்டினை நடைமுறைப்படுத்த வித்திட்டார். இன்றை க்கும் ஏகாதிபத்தியம் நாடுகடந்த தன்மையை அடைந்து நிதிமூலதனம் என்ற பகாசூரனாக மாறி தேசங்களையும், உழைப்பாளிமக்களின் இரத்தங்களையும் உறிஞ்சுக்கொண்டிருக்கிறது. இன்றும் எண்ணற்ற தாக்குத்ல்களை சந்தித்து ஏகாதிபத்தியமயமாக்கப்பட்ட முதலாளித்துவத்திற்கு மாற்றாக மார்க்சிய-லெனினிய சிந்தாந்தங்கள் புதிய அனுபவத்தோடும் புரிதலோடும் வீறுகொண்டு எழுந்து நிற்கின்றது. எனவேதான் 2008-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி பதவிலகும் சிலநாட்களுக்கு முன்பு பொதுநிகழ்ச்சியில் கீழ்கண்டவாறு அலறினார். 1900-ம்ஆண்டுகளில் நாடுகடந்து வாழ்ந்த ஒரு ஐரோப்பிய வழக்கறிஞர் என்ன செய்ய வேண்டும்? என்று பிரசுரத்தை வெளியிட்டார். ருஷ்யாவில் கம்யூனிச புரட்சியைநடத்தும் திட்டததை வெளியிட்டார்.ஆனால் உலகம் லெனினது வார்த்தைக்கு செவிசாய்க்கவில்லை ஆனால் அதற்குரிய கடும்விலையைகொடுத்தது ஏகாதிபத்திய இழப்பைத்தான் உலக இழப்பாக எடுத்துரைக்கின்றார். 2009-ம் ஆண்டு இதே புத்தகத்தை ஒபாமாவிற்கு அனுப்பிவைக்கிறேன் அதைப்படிக்க வேண்டும் என்று வெனிசூலாவின் அதிபர் சாவேஷ் தெரிவித்தார்லெனினது எழுத்துக்களும் கருத்துக்களும் இன்றும் சிம்மசொப்பனமாக திகழ்கிறது. லெனினியம் அவரது மூளையிலிருந்து உதித்த புனிதமானவையும் அல்ல, போதிமரத்தடியிலும்,கல்வாரி மற்றும் கைய்லாய மலைகளில தரிசித்துபெற்ற ஞானமும் அல்ல. மாறாக தான்படித்த தத்துவத்த் வரலாற்ற் ருஷ்ய சமூகத்துடன் இணைத்துப்பார்த்தார். மக்களை, தொழிலாளர்களை, விவசாயிகளை படித்தார், அவர்களுடன் இரண்டற வாழ்ந்தார், மாற்றுப்பாதைக் வந்தடைந்நதார்.

சாகசம் மட்டும் சாத்தியமில்லை ...

ஸ்ம்பீர்க் என்ற கிராமத்தில் 1870-ஏப்-22-ல் லெனின் பிறந்தார். தற்போது அக்கிராமம் லெனின் இயற்பெயரான உலியானவ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. லெனினின் பாட்டனார் குபர்னிகா என்ற பழங்குடிஇனத்தின் வழிவந்தவர். தாய் மருத்துவக்குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை ஆசிரியர். லெனினுடன் பிறந்தவர்கள் ஐந்துபேர்கள். சிறுவயதிலேயே லெனின் படிப்பார்வம் மிக்கவராக திகழ்ந்தார். புதினங்களை விரும்பி படித்தார். சென்னிஷேவ்ஸ்கியின் என்ன செய்வது?என்ற புத்தகம் லெனினை வெகுவாக கவர்ந்தது. பெரிய அறிஞர். ஜார் ஆட்சியை எதிர்த்து சமரசமற்ற யுத்ததை நடத்தினார் என்று பின்னாட்களில் லெனின் இவரைப்பற்றி குறிப்பிட்டார். தனது 16-வது வயதில் தந்தையை இழந்தார். 17-வது வயதில் தனது அண்ணன் அலெக்சாந்தரை இழந்தார்.அவர் பீட்டர்ஸ்பர்க் பல்கலையில் படிக்கும்போது சக மாணவர்களுடன் இணைந்து ஜார் மன்னனை கொலை செய்வதற்கு முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு 1886-மே மாதம் தூக்கிலிடப்பட்டார். இது லெனினுக்கு பேரிடியாக இருந்தது. பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் லெனின் வாழ்க்கை புரட்சிப்பாதையில் செல்வதை இது தடுக்கவில்லை. மேலும் உறுதிப்படுத்தியது. ஆனால் தனது அண்ணன் சென்ற பாதை தனது பாதை அல்ல என்பதை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டார். தனது அண்ணன் மற்றும் சகமாணவர்களின் வீரத்தையும், தியாகத்தையும், உறுதியையும் பாராட்டிய அவர் அவர்களது பாதையை புறக்கணித்து விடியலுக்கான புதிய பாதையை தேடினார். சுகசம் மட்டும் சமுதாய மாற்றத்திற்கு சாத்தியமில்லை என்று கருதினார். இத்தேடல் அவரை மார்க்சியம் என்ற விஞ்ஞான தத்துவத்திற்கு அழைத்துச்சென்றது. நம்பத்தகாத புள்ளிகள்

உயர்நிலைப்படிப்பில் தங்கப்பதக்கம் பெற்று தேர்வுபெற்றார். 1887-ல் கசான் பல்கலைக்கழகத்தில் சட்டப்பிரிவில் சேர்ந்தார். ழுல்லைக்கழகத்தில் புரட்சிகர மாணவர்களுடன் இணைந்து செயல்பட்டதால் கைது செய்யப்பட்டார். லெனின் கொக்காஷ்கினோ என்ற கிராமத்தில் சிறைவைக்கப்பட்டார். இது இப்போது அவரது பெயரால் லெனினோ கிராமம் என்றழைக்கப்படுகிறது இந்த ஓராண்டு சிறைவாசத்தை லெனின் தனது அறிவுதாகத்தை தீர்ப்பதற்காக பயன்படுத்தினார். இந்த ஓராண்டில் படித்ததுபோல் அதற்கு பின்னால் நான் சைபீரியாவில்கூட இப்படி படிக்கவில்லை என்று எழுதினார். லெனின் விடுதலைக்குப்பிறகு பல்கலையில் சேர முயன்றார், வெளிநாடு சென்று படிக்கவும் முயன்றார். அரசு அவரை நம்பத்தகாத புள்ளிகள் பட்டியலில் சேர்த்து அனுமதி மறுத்தது. அக்காலத்தில் கசானில் புரட்சிகர சூழல் நிலவியது. ருஷ்யாவின் முதல் புரட்சிகர மார்க்சிய வாதிகளில் ஒருவாரான பெதோசேயேவுடன் லெனின் தொடர்பு கொண்டார். இந்த தொடர்பை பயன்படுத்தி மார்க்சீய நூல்களை படித்தார். சலிப்பற்ற , ஓய்வற்ற தொடர்ந்த படிப்பு என்றுகூட கூறலாம். காலையில் தேநீர் அருந்திவிட்டு புத்தக சுமையுடன் எலுமிச்சை தோட்டத்தில் மூலையில் கிடந்த நாற்காலியில் ஏதோ கண்டிப்பான ஆசிரியர் காத்திருப்பதுபோல் சென்றுவிடுவார். மாலைவரை படிப்பு, இக்காலத்திலேயே சில ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதஆரம்பித்தார். நான்காண்டு பல்கலை படிப்பை ஒன்றரை ஆண்டுகளில் முடித்தார். 1891-ல் பீட்டர்ஸ்பர்க் கல்கலை கழகத்தில் சட்டத்துறையில் முதல்மாணவனாக தேர்வு பெற்றார். 1892-ல் சமரா மாவட்டத்தில் வழக்கறிஞராக தனது பணியை துவக்கினார். அவரது கட்சிக்காரர்கள் பெரும்பகுதி விவசாயிகளே, இந்தச்சூழலில்தான் லெனினுடைய அரசியல் நடவடிக்கையின் அடுத்த கட்டம் துவங்கியது. சமராவின் முதலாவது மார்க்சிய வட்டத்தை 1892-ல் லெனின் உருவாக்கினார். இந்தக்குழுவினர் மார்க்சியத்தை செயல்முறையில் பரப்பும் வேலைசெய்தார்கள். தனது 23-வது வயதில் இந்த நடவடிக்கையில் லெனின் குதித்தார். மற்றொரு திருப்பத்தையும் இங்கே சந்தித்தார். தனது எதிர்கால மனைவி, நண்பர் நதேழ்தா குரூப்ஸ்கயாவை போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும்போது சந்தித்தார். இவர் தொழிலாளர்களுக்காக மாலை நேரத்திலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பாடம் சொல்லிகொடுக்கும் ஆசிரியப் பணியில் இருந்தார். பொதுவாழ்க்கை இருவரையும் இணைத்தது.

இக்காலத்தில் லெனின் மேற்கு ஐரோப்பா சென்று தொழிலாளிவர்க்கம் பற்றி அறிந்து வரும்பொருட்டு வெளிநாட்டு மார்க்சிய குழுவினரால் அனுப்பபடுகிறார். முதலில் சுவிட்சர்லாந்து சென்று 1883-ம் ஆண்டே ருஷ்யாவில்உழைப்பு விடுதலைக்குழுவை உருவாக்கிய பிளக்கனாவுடன் பேசுகிறார். பிறகு பெர்லினக்கும், பாரீசுக்கும் சென்று தொழிலாளாகள் கூட்டங்களில் கலந்துகொள்றிர். பாரீசில் காரல்மார்க்சின் மருமகனான போல் லபார்க்குடன் சந்திப்பு நடத்துகிறரர். இங்கே லெனினுக்கு நிகழவிருந்த தலையான சந்திப்பு இயற்கையால் முடக்கப்படுகிறது. எங்கல்சை சந்திக்க முயற்சித்தபோது, எங்கல்சின் கடும் உடல்நல பாதிப்பால் அவரை சந்திக்கமுடியாமல் மரணச்செய்தி மட்டுமே கேட்கமுடிகிறது. லெனின் மீண்டும் ரஷ்யாவிற்கு திரும்பியபோது ஏராளமான மார்க்சிய நூல்களை அதிகாரிகளுக்கு தெரியாமல் எடுத்துவந்தார். ரஷ்யா முழுவதும் இப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டது.


சிறையே செயல்தளமாக


வெளிநாடு சென்று திரும்பிய லெனின் முன்னிலும் தீவிரமாக புரட்சி நடவடிக்கையில் ஈடுபட்டார். 1895-ல் அனைத்து மார்க்சிய குழுக்களையும் இணைக்கும் முயற்சியில் இறங்கினார். தொழிலாளி வர்க்க விடுதலைக்கான போராட்ட ஐக்கியம் என்ற அமைப்பை ஆரம்பித்தார். ரஷ்யாவில் புரட்சி நடத்தவேண்டுமென்றால், மார்க்சியத்தை ரஷ்யநிலைக்கு ஏற்றவகையில் கடைபிப்பதும், ஒரு உறுதியான கட்சியை கட்டுவதும் அவசியம் என்பதை இக்குழுவின் மூலம் வலியுறத்தினார். இக்குழு தொழிலாளர்களை வேலைநிறுத்தத்தில் இறக்கியது, இதனால் பல கொந்தளிப்புகள் ஏற்பட்டது. லெனின் உட்பட இக்குழுவின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் தனிக்கொட்டடியில் அடைக்கப்பட்டனர். சிறையில் தனி கொட்டடியில் அடைக்கப்பட்டாலும் தனது புரட்சிகர நடவடிக்கையை அவர் கைவிடவில்லை. சங்கேத மொழியில் மற்றவர்களுடன் தொடர்பு கொண்டார். செய்தித்தாள்கள் மற்றும் சிறை நூலகத்திலிருந்து எடுக்கப்பட்ட நூல்களின் இடையில் தனக்கு கொடுக்கப்படும் பாலின் மூலமாக எழுதி செய்தி பரிவர்த்தனைகளை செய்தார். இதற்காக ரொட்டியாலான மைக்கூடுகளை பாலில் தோய்த்து பயன்படுத்தினார். காவலர்கள் வந்துவிட்டால் பால்கூடை வாயில் போட்டு சாப்பிட்டுவிடுவார். 1897-ல் பிப்ரவரி மாதம் லெனினை சைபீரியகாட்டிற்கு மூன்று ஆண்டுகள் ஜார் அரசாங்கம் நாடு கடத்தியது. சைபீரியா என்றாலே கொடூரம், அதிலும் சைபீரியாவில் பலநூறு கிலோமீட்டர் தூரத்தில் லெனினை சிறைவாசம் வைத்தனர். 1897 மே மாதம் லெனின் சைபீரியாவின் ஜீஷென்கோயே கிராமத்திற்கு வந்தார். அங்குள்ள விவசாயிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கான வக்கீலாக செயல்பட்டு உதவினார்.(இங்கு லெனின் தங்கியிருந்த வீடு 1938-ல் நினைவகமாக மாற்றப்பட்டது). ஓராண்டு கழித்து குரூப்ஸ்கயாவும் கைது செய்யப்பட்டு லெனின் மணமகள் என்பதால் லெனின் தங்கியிருந்த கிராமத்திற்கு அனுப்பப்பட்டார். இங்குதான் இருவருக்கும் திருமணம் நடந்தது.


லேனா லெனின் ஆனார்

1900-ம் ஆண்டு லெனின் விடுதலையாகி பீட்டர்ஸ்பெர்க் நகரம் வந்தபோது ஜார் அரசு மீண்டும் கைது நடவடிக்கையில் இறங்கியது. உலியானோவ்-வை காட்டிலும் பெரியவர் எவரும் புரட்சியில் இப்போது இல்லை என்று ஜார் மன்னனின் ரகசிய அறிக்கை கூறியது. எனவே லெனின் 1900 ஜீலை மாதம் ரஷ்ய எல்லையை கடந்து ஜெர்மனி வந்து சேர்ந்தார். சைபீரியாவில் இருந்தபோது கட்சியின் அமைப்பாளன் போன்று இருக்ககூடிய பத்திரிக்கை ஒன்றை துவங்கிட யோசித்தார். ஜெர்மனி வந்தவுடன் டிசம்பர் மாதம் அதற்கான பணிகளை துவக்கி, முதல் இதழை வெளியிட்டார். தீப்பொறி என்று பொருள்படும் இஸ்க்ரா என்று பெயரிட்டார். இப்பத்திரிக்கையில் பிளக்கனாவ் வோல்கா என்ற நதியின் பெயரில் கட்டுரைகளை எழுதினார். லெனின் லேனா என்ற நதியின் பெயரில் கட்டுரைகளை எழுதினார். இதுவே பிற்காலத்தில் லெனினாக மாறியது. இப்பத்திரிக்கை தீப்பொறி பெரும் தீயாக மாறியதால் ஆட்சியாளர்களின் அடக்கு முறையால் 1902-ம் ஆண்டு லண்டனுக்கம், 1903-ம் ஆண்டு ஜெர்மனிக்கும் மாற்றவேண்டிய நிலைமை ஏற்பட்டது. 1900 முதல் 1905-ம் ஆண்டுவரை வெளிநாட்டில் லெனின் தங்கியிருந்து புரட்சிப்பணிகளில் ஈடுபட்டார். 1905ம் ஆண்டு ரஷ்யாவில் புரட்சி வெடித்தது. லெனின் பீட்டர்ஸ்பர்க் சென்று புரட்சிக்கு நேரடியாக தலைமையேற்றார். இரண்டரை ஆண்டுகளக்கு பிறகு புரட்சி தோல்வி அடைந்தது. பெரும் படிப்பினைகளுடன் லெனின் பின்லாந்து சென்று தங்கினார். அங்கு ஜார் அரசின் படைகள் முற்றுகையிட்டபோது ஆபத்து நிறைந்த பனிப்பாறைகள் மத்தியில் பல மைல்கள் நடந்து தப்பி ஸ்டாக்ஹோம் சென்றார். லெனின் தனது தாயை மூன்றாண்டுகளாக சந்திக்கவில்லை. 1910-ம் ஆண்டு 75 வயது நிரம்பிய தாய் ஸ்டாக்ஹோம் வந்து மகனை சந்தித்தார். மகனின் உரையையும் தாயார் கேட்டார். அதன்பிறகு லெனின் தாயார் ரஷ்யாதிரும்விட்டார். 1917-ல் லெனின் ரஷ்யா திரும்பியபோது அவரது தாய் உயிருடன் இல்லை. 1916-ம் ஆண்டிலேயே அவர் மரணமடைந்திருந்தார்.

பச்சை அலுவல் அறை

1917-ம் ஆண்டில் புரட்சி நடைபெற்று ஜார் ஆட்சி தூக்கியெறியப்பட்டு கெரன்ஸ்கி தலைமையில் இடைக்கால அரசு உருவாகியிருந்தது. எனினும் லெனின் அதிகாரம் அனைத்தும் மக்களுக்கே என்ற கோஷத்தை முன்வைத்து புரட்சியை தொடர்ந்தார். இக்காலத்தில் அடைக்கால அரசும் லெனினையும் மற்ற போல்ஷ்விக்குகளையும் வேட்டையாடியது. லெனின் பெட்ரோகிராட்டில் தொழிலாளர் குடியிருப்பில் புல் அறுக்கும் பின்லாந்துகாரன் போல் வேடமணிந்து தங்கினார். அரிவாள், கோடாரி, கவர்கோல், தூக்குகோணி என சகல கருவிகளுடன் வேடமணிந்து சுற்றினார். புதர்களில் ஒருஇடத்தில் சதுரமாக செடியை சுத்தம் செய்து அந்தப் பகுதியை தனது அலுவலகமாக பயன்படுத்தினார். இந்த இடத்தை லெனின் பச்சை அலுவல் அறை என்று வர்ணித்தார். இடைக்கால அரசை அகற்ற புரட்சி உக்கிரமாக நடந்தபோது லெனின் ஸ்மோலானியாவில் புரட்சி நடவடிக்கைகளில் பங்கு கொண்டார். அக்டோபர் 25 இரவு இடைக்கால அரசின் குளிர்கால அரண்மனையை கைப்பற்ற லெனின் உத்தரவிட்டார். அரோரா கப்பல் வெடியுடன் தாக்கியது, இடைக்கால பூர்ஷ்வா அரசின் கடைசி அரணும் தகர்ந்தது. 1917 அக்டோபர் 25(நவம்பர்-7) சோசலிச அரசு நிறுவப்பட்டது. புதிய சோசலிச அரசை அழித்தொழிப்பதற்காக ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் உட்பட 14 நாடுகள் கடும் தாக்குதலை தொடுத்தனர். உள்நாட்டு பிற்போக்குவாதிகளும் இதற்கு உதவினர். சோசலிச தாயகம் ஆபத்தில் இருக்கிறது என லெனின் மக்களக்கு அறைகூவல் விடுத்தார். தொழிலாளர்களும், இளைஞர்களும் போர்முனை நோக்கி விரைந்தனர். நாடே யுத்த களமாக மாறியது. இந்தச்சூழலில் 1918 ஆகஸ்டு 30ல் கப்ளான் என்ற பிற்போக்கு வாதி விஷம் தடவிய துப்பாக்கியால் லெனினை சுட்டான், லெனின் படுத்த படுக்கையானார். ஆனாலும் போர்முனை செய்திகள் அவரை குணமாக்கிக்கெண்டிருந்தது. செப்டம்பர் 12-ல் லெனின் சொந்த ஊரான ஸ்ம்பர்க்சை செம்படை மீட்டது. விரைவில் அடுத்தடுத்து ஏகாதிபத்திய படைகளை தோற்கடித்து, செம்படை வெற்றிகண்டது. லெனின் காயம் ஆறிய பிறகு சோசலிசத்தை கட்டுவதில் அக்கரை செலுத்தினார், பொருளாதார கொள்கைகளில் கவனம் செலுத்தினார், லெனனின் கடின உழைப்பும், துப்பாக்கிக்குண்டும் அவரது உடலை சேதாரப்படுத்தியது, கடுமையாக நோய்வாய்ப்பட்டு கோர்க்கி கிராமத்தில் இருந்தார். 1923 நவம்பரில் தொழிலாளர்களை சந்தித்து பேசினார். இதுவே தொழிலாளர்களுடன் அவரது கடைசி சந்திப்பாகும். 1924-ம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ம் தேதி மாலை 6 மணி 50 நிமிடத்தில் மூளையின் ரத்த நாளம் வெடித்து லெனின் உயிர் மூச்சு நின்றது. ஜனவரி 27 மாலை 4 மணிக்கு லெனின் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. செஞ்சதுக்கத்தில் அவரது உடல் விசேஷமாக நிர்மானித்த சமாதியில் வைக்கப்பட்டது. சோவியத் மற்றம் சர்வதேச உழைப்பாளி மக்கள் தங்களது தலைவன், நண்பன், ஆசான், தோழனாகிய லெனினுக்கு ஐந்து நிமிடம் எல்லா வேலைகளையும் நிறுத்தி வைப்பதென பிரகடனம் செய்தனர். ஆம், அந்த ஐந்து நிமிடம் இயற்கை அசைவுகளைத் தவிர ஆலைகள், வாகனங்கள், ரயில்கள், அலுவலகம் என அனைத்தும் அசைவற்று இருந்து தனது அஞ்சலியை செலுத்தினர்.


லெனின் 54 ஆண்டுகளே வாழ்ந்தார், அவரின் உயிர் இருந்த காலத்தில் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு அசைவும் புரட்சி, புதுவாழ்வு என்பதை கட்டி அமைத்தது. 15-வது வயதில் துவங்கிய அவரது புரட்சி பயணம் இன்னம் நிறுத்தப்படவில்லை, லெனினியம் என்ற பெயரால் தொடர்ந்து நடைபோடுகிறது,

ஏ.பாக்கியம்

1 comment:

  1. லெனினை பாராட்டியுள்ள பதிவு...சரி ஆனால் அவரின் சர்வாதிகாரம் பற்றி ஒன்றும் கூறப்படவில்லையே...

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)