அட அட பெட்ரோலு
வெலையில ஏது கண்ட்ரோலு?
ஸ்கூட்டர் பைக்க தலையில தூக்கிச் செல்லவா-கருங்
கொரங்க கட்டி ஆட்டோ இழுக்கச் சொல்லவா?
ராமா ராகவா
நாங்க சாகவா?
ஆட்டோ இழுக்க அனுமார கூட்டிவா!
(அட அட)
இது - எப்படி இருக்கு - மந்திரிக்கு
புடிச்சி இருக்கு கிறுக்கு
பெட்ரோல ஒடம்பில் ஊத்தல
உசுரில் ஊத்தறான் எரியறோம்
இந்த - கொடுமைய வெறுத்து - பெட்ரோல் நாங்க
தலையில் ஊத்தி எரிந்து
சாகக் கூட மலிவு வெலையில்
குடுக்க மாட்டான் துடிக்குறோம்
லட்சங்கோடி அபேஸ் பண்ண மந்திரி மட்டுமா
வாங்கப் போறான் பெட்ரோல்? அது நமக்கு எட்டுமா?
(அட அட)
அடி - பெட்ரோல் தேவி - அம்பானிக்கு
வரங்குடுக்குற தாயி!
மாப்பிளைக்கு பைக்உடன் இனி
பெட்ரோலும்வர தட்சிணை!
அந்த - வெங்காய ராணி - வெள்ளப்பூண்டாம்
வெள்ளையம்மா சாமி
குட்டித் தெய்வங்கள் பெட்ரோலோடு
எட்டிப்புடிக்குது நிலவினை!
அமுதம் கூட கிட்டுமடா பெட்ரோல்கிட்டுமா
சொட்டுச்சொட்டா வாவதுஎங்க பைக்கில் சொட்டுமா?
(அட அட)
அட - சூரத் தேங்காயி - போல எங்க
மண்டைய ஒடச்சான் பாவி
எங்க ரத்தமே பெட்ரோல் ஆச்சு
காரில்போறான் சவாரி
என்ன - டா இறுமாப்பு - எலக்சனில்
இருக்குதடா ஆப்பு!
காலாவதி ஆகப்போகுது
கவருமெண்டு பிடாரி
சொகுசுக்காரில் மந்திரி; நாம பாத சாரியா?
கட்டவண்டி காலத்துக்கு போகப் போறியா?
(அட அட)
நவகவி
0 comments:
Post a Comment