Sunday, November 13, 2011

சம்பு கவிதைகள்

உமது மீட்பரை நீர் கண்டடைவீர்...

உமது குற்றங்குறித்த விசாரணையின்
வாய்ப்பு மறுக்கப்பட்ட
அக்கணமே நிராதரவாய்
அந் நகரத்தில் கைவிடப்படுகிறீர்

நாக்குத் தள்ள அலைந்து
கண்டெடுத்த
வோட்கா போத்தலில் தளும்புவதோ
தூய
வெண்ணிறத்திலான கடவுளின் சிறுநீர்

எட்டுத்திசையிலும் மதிலையெழுப்பி
வழக்கம்போல்
எல்லா வழிகளையும் மூடிவிட்ட
உம் கடவுளோ
எங்கோ ஓடி ஒளிந்துகொள்கிறார்

வெப்பம் பொசுக்கும் இப் பாலை நகரத்தில்
சோர்வு கொண்டு மேய்கிறது
காய்ந்த குத்துச் செடியை
கரு நிறக் குதிரையொன்று

 

உம் அழைப்பை செவிமடுக்காமல்
அதுவரை அருகிருந்த குதிரை
நகர்ந்து நகர்ந்து போக்குக் காட்டுகிறது

அம் மதுப்போத்தலைப்
பரிசளிக்கத் துணிகிறீர்
நா வறண்ட தாகம் மீறி

நெகிழ்ந்துருகும் கருங்குதிரை
தாமதியாமல் அதை உடைக்கிறது
குறும்பாறை ஒன்றில்
துண்டு துண்டாகச் சிதறி
வழிகிறார் உங்களின் கடவுள்

பின்பு சொல்லவும் வேண்டுமா
இப்பாலைவெளி கடந்து
ஆகாசத்தில் உம்மை மீட்டுச் செல்லும்
அக் குதிரையே மீட்பராகிய சாத்தானென்று.

நீதிமானின் எழுதுகோல்

நீதிமானின்
எழுதுகோலினை நம்பினார்கள்
பெருங்கதவின் திறப்பிற்கு
காத்திருந்த அவர்கள்

விடுதலையின் குளிர்காற்றை
அது கொண்டு வருமென
அநீதியின்
ஒரு வாசகமும் தெரியாதென
தீமையின் புறம்
ஒருபோதும் திரும்பாதென
ஆகச் சிறந்த ஆகவே சிறந்த
ஒன்றை மட்டுமே அது
தாங்கிப் பிடிக்குமென

நீதிமானின்
எழுதுகோலினை நம்பிக் கொண்டிருப்பவர்களோ
துளியும் அறிவதே இல்லை

தமக்கான தீர்ப்புகளை எழுதும்போது
தலை குப்புற ஏன் அது விழுகிறதென்று
எவ்வித விமர்சனத்தையும் கடந்ததென
எந்நேரமும் உளறித் திரிகிறதென்று
பிறகு
அந்தரத்தில் தொங்கும்
அரதப் பழைய பிடியின் மீது
அவ்வளவு வெறியுடன்
கூர் கத்தியை வீசிப் போகிறதென்றும்

மேலாக
நீதிமானின்
எழுதுகோலினை நம்பப் போகிறவர்களுக்கோ
எப்போதும் தெரியப்போவதே இல்லை

அறுந்து கிழிந்த ஒரு நீதியை
சாவகாசமாய் உமிழ்ந்து விட்டு

அவ்வெழுதுகோல் மை
எப்படி
இறுகி உறைந்து போகுமென்றும்...

தற்கொலை நிகழ்ந்து கொண்டிருக்கிறது

நட்சத்திரமொன்று
பூமிக்கு நழுவுகிற கனவை
அவன் கண்ட இரவில்

தன்  பிரிவு சொல்லி நிற்கிறது
ஜோசஃப்பின் குதிரை

சமாதானத்தின் இறகுகளால்
ஜோசஃப்
நீவி விட முயலுகையில்
இக்கணம் வரை அவனைச்
சுமந்தறியா அது
சற்றே தடுமாறி
பின் வெறித்துப் பார்க்கிறது

சலிப்பில் அரட்டி மிரட்டுகையில்
பிரிவு என்பதே
தன் தற்கொலையெனவும்
மெல்லப் பகிர்கிறது ஜோசஃப்பின் குதிரை

தானே அதற்கு முன்
செத்துத் தொலைவதென அவன்
புலம்பித் தீர்ப்பதை அது
அசைபோட்டு மென்று விடுகிறது

வெறுப்பின் உச்சியில் தற்கொலையை
நிகழ்த்தப் போகும் ஜோசஃப்
மலை உச்சியின் மரத்தில் ஏறி
நழுவி
விழுந்து

தவியெனத் தவிக்கிறான்
நிலம் தொட முடியாமல்

மலைச் சரிவில் புல்மேயும்
ஜோசஃப்பின் குதிரையோ
ஒரேமுறை மட்டும்
அவனை நிமிர்ந்து பார்த்து

பின்  சாதுவிலும் சாதுவாகக் குனிந்து கொள்கிறது...

 

ஒரு நரியின் ஒப்பாரி

ஒரு நரியின் சிறு தந்திரங்களே
வாழ்வுத் துயர் கடக்க சூட்சுமமென

உள்ளூர களவு குணம் கைக்கொண்டு
உலவும்படி விதிக்கப்பட்டது இவ்வுலகமென

நீள்கிறது
உமது பிரசங்கம்

ஒரு நரியோ
ஒரு மயிரின் சிறு
நுனியளவும் அறியவில்லை

உயர் மின்சாரம் செலுத்தி
உயிர் கொல்கிற கலை குறித்து

கர்ப்பத்தில் புரளும் சிசுவிற்கும்
நேரடி மோட்சமளிக்கிற சூலம் குறித்து

லத்தியில் தடவிய அதிகாரக் கொழுப்பு
யோனி கிழித்துப் புணரும் நுட்பம் குறித்து

முடிவேயின்றி மூள்கிற போர்களின்
கொழுத்துப் பெருத்த ஆதாயங்கள் குறித்தும்

மட்டுமின்றி
உலகமே வியக்கும்
தன் தந்திரசாலித்தனம் குறித்தோ

இலக்கு பிசகின்றி
அதைப் பிரயோகிக்கும் வல்லமை குறித்தோ

தவிர
தானொரு நரி எனக் குறித்தோ கூட
அறியவே இல்லை
ஒரு நரி

ஆழ்துயிலுக்குள் இவ்வுலகம் புகும்போது
ஒரு நரி
ஒளிரும் நிலவை நோக்கித் துவங்குகிறது
தன் ஒப்பாரியை
தன்னளவில்
அதைத்தான் நீங்கள்
இரகசிய வேட்டைக்கான
ஒரு நரியின்
கானக ஊளை என்கிறீர்...·
·


கடவுளின் முகவரி

ஜோசஃப் தேடிவந்த கடவுள் அக்கவிதைக்குள்
சாவகாசமாகச் சாய்ந்து நின்றிருந்தார்
அடி மரத்தின் மீது
அவரிடம் ஜோசஃப் இறைஞ்சுகிறான்
அருள்கூர்ந்து
கடவுளின் முகவரியைத் தெரிவிக்க இயலுமாவென
கண் தொலைவிற்கு அப்பால் தெரிகிற
கவிதையின் எல்லைக் கோட்டினை
கடந்து திரும்பினால் தருவதாகச் சொல்லி
கடவுள்
மறைத்து வைத்திருந்தார் தன் முகவரி அட்டையை
எல்லை தொடும் பந்தயத்தில் ஜோசஃப்
மூச்சிரைத்து மூச்சிரைத்து ஓடும்போது
வளர்ந்து
வளர்ந்து
நீள்கிறது அவ்வெல்லைக் கோடு
அவ்வழியே
வயோதிகத்தின் பிடியிலிருந்த தன் தாயும்
என்றைக்குமாக கை நழுவிப்போன காதலியும்
சிரித்தபடி கடந்து போகிறார்கள் அவனை
இலக்கை அடைய ஓரடி முன்பாக ஜோசஃப்
சட்டென்று நின்று
பதட்டமுடன் திரும்புகிறான்
காணாமல் போய்விட்டிருந்தார்
மரத்தடியிலிருந்த கடவுள்

தனியே நின்று கொண்டிருந்தது
அக் கவிதைக்குள் ஒற்றை மரம்...
·

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)