Tuesday, December 21, 2010

ஏதாச்சும் செய்யணும்னே ... !

ஏதாச்சும் செய்யணும்னே ... !


1)

ஞாயிற்றுக்கிழமை காலை!
டீக்கடை பெஞ்சிலமர்ந்து தினத்தந்தியின் பக்கங்களை ஆளுக்கொன்றாக பிரித்துவைத்து டீயின் சூட்டையும் மிஞ்சுமளவுக்கு விவாதங்கள் நடத்திக்கொண்டிருந்தனர்.

"ஒரு டீ போடுங்கண்ணே" ஜீவாவின் குரலைக்கேட்டு 'எப்பவுமே வராதவன் இன்னைக்கு வந்துருக்கானே' என அண்ணாச்சி ஆச்சர்யர்மாய் பார்த்தார்.


"ஒன்னும் இல்லண்ணே. வீட்ல எல்லாரும் ஊருக்கு போயிருக்காங்க.  தனியா வெறுப்பா இருந்திச்சி... அதான் வந்தேன்..."

பேப்பர் ஏதும் கிடைக்காமல் ஒருவரின் பக்கத்திலமர்ந்து பேப்பரை பங்குபோட்டு படித்தான். வரிக்கு வரி விவாதம் நடந்துகொண்டிருந்ததை பார்ப்பதற்கே ஒரு புதிய அனுபவமாக இருந்தது அவனுக்கு.

"ஆனாலும் அவரு இப்படி பேசிருக்கக்கூடாதுப்பா..."

"நான் ஏற்கனவே நெனச்சேன். இந்த கேஸ் இப்படித்தான் ஆகுமுன்னு..."

"39 ஆவது ஓவர்ல யூசுப் பதான் அடிச்சான் பாரு ஒரு சிக்சரு.... கலக்கிட்டான்யா. வேர்ல்ட் கப் டீம்ல அவனுக்கு ஒரு எடம் உண்டு."
"ஆமா நிச்சயமா உண்டு..."

"மருதநாயகம் படத்தை திரும்பவும் எடுக்கப்போறாங்களாமே ..."
"ஆமா இப்படித்தான் ரொம்ப நாளா சொல்லிட்டே இருக்காங்க. எடுத்த பாடக்காணோம்."

"இந்திய பிரதமர் ஒரு வார சுற்றுப்பயணமாக ஐரோப்பா சென்று இன்று நாடு திரும்பினார்"
"எதுக்கு போனாராம்?"
"எதுக்கு போயிருப்பாரு... ஏதாவது ஒப்பந்தம் கிப்பந்தம் போடபோயிருப்பாரு."
அடுத்த வரியையும் வாசித்துக்காண்பித்தார் முதலாமவர்,
"அரசியல், பொருளாதாரம், அனைத்துவித வியாபாரம் தங்குதடையின்றி செய்துகொள்ள அனுமதிக்கும் ஒப்பந்தம் இந்திய-ஐரோப்பிய  யூனியனிடையே கையெழுத்தானது."

"எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ல இருந்து இப்படித்தான் ஒப்பந்தம் போட்டுகிட்டே இருக்கானுங்க. ஆனா நமக்குத்தான் எந்த பிரயோஜனமும் இருக்குறதில்ல. என்ன பண்றது எல்லாம் நம்ம விதி. ", எழுபதைக்கடந்தவரின் ஆதங்கம்.
"ஏதாவது செய்யணும்னே... ஒப்பந்தம் போட்டு ஏமாத்துற அவனுங்களையும், காச வாங்கிட்டு கப்சிப்புன்னு எஸ் ஆகுற இவனுங்களையும்....", முப்பதைத்தொடாதவரின் வேகம்.

"அத்த விடுப்பா... நம்ம தலைவரோட மெழுகு செலைய லண்டன்ல  வெக்கப்போறாங்கலாம்.  தெரியுமா உனக்கு?"
"அப்படியா! தலைவர்னா தலைவர்தான்..."
எல்லோர் முகத்திலும் பரவியிருந்தது பெருமிதமகிழ்ச்சி.

டீக்காசு கொடுத்துவிட்டு ஆளுக்கொருபுறமாக சென்றபோது அவர்களை பின்தொடரமுடியாமல் காற்றில் கலந்து கரைந்தது அவர்களின் வீராவேச வசனமெல்லாம்.

பெரும்பாலான டீக்கடை விவாதங்கள் இப்படித்தான் என்பதை அறியாத ஜீவா, வீட்டிற்கு வந்தபின்னும் விவாதத்திலிருந்து வெளிவரமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தான். "ஏதாவது செய்யணும்னே..." என்கிற வார்த்தைகள் ஏதோ செய்ததவனை. அந்த ஒப்பந்தத்தை மீண்டும்  மனதிற்குள் ஓடவிட்டு வாசித்தான், 
'அரசியல், பொருளாதாரம், அனைத்துவித வியாபாரம் தங்குதடையின்றி...'
'அரசியல்' என்கிற ஒரு வார்த்தை மட்டும் புதியதொரு பொருள்தருவதாக இருந்ததவனுக்கு. எதையோ கண்டறிந்தவன் போல் வெவ்வேறு ஊர்களிலுள்ள இணையமையத்திற்கு சென்று புதிய மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கி சிலருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பிவிட்டு வீடுவந்துசேர்ந்தான்.

2)
அமைச்சர் தனது உதவியாளரிடம் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை கேட்டுகொண்டிருந்தார்,
"நீ சொல்றது சாத்தியமாய்யா?"
"ஆமா சார். சட்டப்படி இது சாத்தியந்தான் சார். இந்திய-ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தத்துல அரசியல் அப்படின்னு ஒரு வார்த்தை இருக்கு சார். அதனால் நாம ஐரோப்பிய நாடுகள்ல எந்த நாட்டுல வேணும்னாலும்  அரசியல்ல குதிக்கலாம்; தேர்தல்ல போட்டியிடலாம். ஜெயிக்கலாம்... என்ன வேணும்னாலும் பண்ணலாம் சார். நமக்கு வந்த மெயில் அப்படித்தான் சொல்லுது சார்"
"சமீபத்துல நமக்கு வந்த சில இலட்சம் கோடிய வெச்சி என்ன பண்றதுன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்... நல்லதா போச்சி.. ஆனா நம்ம குடும்பத்து பசங்களே நமக்கு போட்டியா வந்துருவானுங்க.. அதனால நாம மொதல்ல போயி நல்லதா ஒரு நாட்ட புடிச்சிரனும்."


இது மற்றொரு கட்சியின் தேசியக்குழுக்கூட்டம்!
"நமக்கு வந்த மெயில்படி பாத்தா, நாம ஐரோப்பாவை ஆட்டிப்படைக்கலாம்"
"ஆமாம்! துருக்கிய ஐரோப்பிய யூனியன்ல சேக்குறதா வேணாமான்னு ஏற்கனவே அங்க ஒரு பிரெச்சனை இருக்கு.. இதை நாம பயன்படுத்திக்கணும்"
"நரேந்திர ஜான் அப்படின்னு என்னோட பேரையே மாத்திக்கிட்டு அங்க போயி, முஸ்லிம்-கிறிஸ்துவ பிரச்சனைய பெருசாக்கி ஏதாவது ஒரு நாட்டோட ஆட்சிய புடிச்சிர்றேன்."


ஒரு மாநில கட்சி...
"ஒரே மொழி பேசுற ஸ்டேட்டயே ரெண்டாக்குற தெறம நம்மகிட்ட இருக்கு.. பெல்ஜியம்ல ரெண்டு மொழி பேசுறாங்கப்பா. அதனால அத ரெண்டாப்பிரிக்கனும்னு போராடி அதுல ஒரு நாட்டுல நாமதான் ஆட்சிக்கு வரோம்"


2000 அகில இந்திய செயலாளர்கள் பங்குபெறும் மாநாட்டில்...
"இந்த நாட்டுக்கே நான் ஒரு விடிதங்கமா இருந்தாலும், நமக்கு வந்திருக்குற மெயில்படி நாம ஐரோப்பாவில் ஒரு காமன் வெல்த் கேம்ஸ் நடத்துறோம்"
"ஆனா ஐரோப்பிய யூனியன் நாடுகள் காமன் வெல்த் நாடுகள் பட்டியல்லையே இல்லையே"
"ஓ! அப்படி ஒன்னு இருக்கோ! சரி காமன் வேர்ல்ட் கேம்ஸ் அப்படின்னு பெயர மாத்திருவோம்"
"சூப்பர்ங்க! இந்தியாவின் விடிதங்கம்னா அது நீங்கதாங்க"

 
"அம்மா... எல்லாரும் ஐரோப்பா போறாங்க... நாம ஐரோப்பால சுவிசர்லாந்த புடிச்சிருவோம்."
"எதுக்கு சுவிசர்லாந்து?"
"கொடநாடவிட சுவிசர்லாந்து நல்லா இருக்கும்மா"
"ஓ! அப்பா நாமளும் கெளம்பிருவோம்"

கிணறு வெட்ட பூதம் கிளம்பியதைக்கண்டு வெலவெலத்துப்போன  ஐரோப்பிய யூனியன், பேசாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடலாமாவெனவும் யோசித்துக்கொண்டிருக்கிறது.
ஒருபுறம் ஐரோப்பிய யூனியன் அந்த மின்னஞ்சல் அனுப்பியவனை தேடிக்கொண்டிருக்க, மறுபுறம் நமது கதாநாயகன் தொலைக்காட்சியில் எல்லாவற்றையும் பார்த்து ரசித்துக்கொண்டிருக்க, ஒட்டுமொத்த ஐரோப்பாவே இந்தியமயமாகிக்கொண்டிருக்கிறது....

3) 
"அப்புறம் என்னாச்சி தம்பி?" 
ஆர்வமிகுதியால் வினா எழுப்பினார் கதை கேட்டுக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்.
"கதையோட க்ளைமாக்ஸ்சை இன்னும் எழுதி முடிக்கல சார்"
 "ஒரு சின்ன டீக்கடைல ஆரம்பிச்சு ஐரோப்பா வரைக்கும் போயி கலக்குதே உன் கதை! பிரமாதம் தம்பி."
"சார்! அப்போ படத்த எப்போ ஆரம்பிக்கிறோம்?"
"தம்பி! கதைய முழுசா முடிச்சிட்டு வாங்க. கிளைமாக்ஸ் காட்சியும் தூள் கெளப்பனும். எத்தன கோடி செலவானாலும் பரவாயில்ல. ஒரு பெரிய மாஸ் ஹீரோவ போட்டு நாம பட்டய கெளப்புரோம்."

 தயாரிப்பாளரிடம் விடைபெற்று பேருந்திலேறி வீடு நோக்கி பயணிக்கலானேன். இயக்குனராகுமென் இத்தனை ஆண்டுகால கனவு நிறைவேறப்போவதை நினைத்துக்கொண்டிருக்கையில், சிக்னலிலே பேருந்து நின்றும் நிற்காமல் பயணித்தது என் மனம்.

 படத்தின் இறுதிக்காட்சியை வெள்ளைத்தாளொன்றில் பலவிதங்களில் எழுதிப்பார்த்தேன்.
'இனி நியாயமான ஒப்பந்தங்களையே போடுவோம்' எனச்சொல்லி அரசியல் கட்சிகள் திருந்துவதாக வைக்கலாமா? (அல்லது)ஐரோப்பிய நாடுகள் கதாநாயகனை சமாளிக்க முடியாமல் மன்னிப்பு கேட்டு திருந்துவதாக வைக்கலாமா, (அல்லது)
'உலகம் இப்படித்தான்' என கதாநாயகன் உணர்ந்து திருந்துவதாக வைக்கலாமா? (அல்லது)
இறுதி சண்டையில் கதாநாயகன் இறப்பது போன்றதொரு  சோகமான முடிவை வைக்கலாமா?

இதுவா அதுவா.... அதுவா இதுவா.... என யோசித்துக்கொண்டிருக்கையில்,
"கொளத்தூர் அம்பேத்கர் நகர் எல்லாம் எறங்குங்க", பேருந்து நடத்துனரின் குரல் கேட்டு இறங்கினேன்.

வீடிருக்கும் தெருவுக்குள் நுழைகையில் கூட்டமும் கூச்சலும் நிரம்பிக்கிடக்க, கூடுதலாக குரலெழுப்பி என்னைநோக்கிஅழுகொண்டே ஓடிவந்தாள் என் இளைய தங்கை.
"அண்ணே! இங்க வால்மார்ட்டுன்னு ஏதோ வெளிநாட்டுக்கடை வரப்போகுதாம்ணே. மெயின் ரோட்டுக்கு பக்கத்துல இருக்குறதால நம்ம தெருவையே அரசாங்கம் எடுத்துக்குதாம்..."
முத்திரை குத்தப்பட்ட அரசு நோட்டீஸ்களை வீடுகளின் நெற்றியில் ஒட்டி எங்களது தலையெழுத்தை அழித்தெழுதிக்கொண்டிருந்தார்கள் வந்திருக்கும் அதிகாரிகள்.
முப்பது வருட உழைப்பான தன் மளிகைக்கடையின் வாசலில் அமர்ந்து கண்ணீரால் கழுவிக்கொண்டிருந்தார் என் அப்பா.

"இந்த மாதிரி அநியாயம் பண்றீங்களே?", அதிகாரியிடம் கேட்டுக்கொண்டிருந்தார் ஒருவர்.
"வால்மார்ட்டுங்குறது ஒரு பெரிய கடை. அது வந்துச்சின்னா நம்ம எல்லாருக்கும் நல்லது. எல்லா பொருளும் சீப்பா கெடைக்கும்", யாரோ எழுதிக்கொடுத்ததை ஒப்பித்துக்காண்பித்தார் அதிகாரி.

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த என்னிடம், "அண்ணே! ஏதாவது செய்யணும்னே" என்றாள் என் தங்கை. நானே நிற்கிறேன் என் கதாநாயகன் நிலையில். வலது கையில் வைத்திருக்கும் இறுதிக்காட்சித்தாளை பார்த்தேன். வாழ்க்கைக்குதவாத வெற்று முடிவுகள் அவை. இடதுகையை வேகமாக உயர்த்தி கூட்டத்தை நோக்கி கத்தினேன்,"ஏதாவது செய்யணும்". சில நொடிகளின் அமைதிக்குப்பின் எல்லோரும் அவர்களது இடதுகைகளை உயர்த்தி, "ஏதாவது செய்வோம்" என ஒருகுரலாய் ஒலியெழுப்பினர்.

மக்கள் விரோத அரசுகளை எதிர்க்க ஒரு கதாநாயகன் போதாது....

சிறுகதை: யாநிலாவின் தந்தை 

3 comments:

 1. நல்லாயிருக்குங்க..

  ReplyDelete
 2. 'வால்மார்ட்' ஒரு ப‌ங்கை அர‌சிய‌ல் த‌லைவ‌ருக்கு கொடுத்திருக்கும், அல்ல‌து த‌லைவ‌ருக்கு அதில ஒரு ப‌ங்கு இருக்கும். நூறு குடும்ப‌ம் பிழைப்பின்றி வாட‌, அர‌சிய‌ல் த‌லைவ‌ர் அந்த‌ ப‌ண‌த்தை அந்நிய‌ வ‌ங்கில் போட்டுட்டு வாரிசுக‌ளை அர‌சிய‌லுக்கு கொண்டுவ‌ர ஆயுத்த‌மாவார்.
  அந்நிய‌ க‌ம்ப‌னிக‌ள் இங்க வந்து கொழிக்கிற‌து அப்ப‌டித்தானே.

  ReplyDelete
 3. ஸ்வர்ணரேக்கா மற்றும் வாசன் அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  இந்திய-ஐரோப்பிய யூனியனின் தடையற்ற ஒப்பந்தம் என்பது சாதாரண மக்களின் வாழ்க்கையை பாதிக்கும்.

  ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)