_____________
“தமிழகத்தில் வீட்டு வசதி வாரிய ஊழல் சில நாட்களுக்கு முன்னர் அம்பலமானது. இப்போது, திமுகவினர் தமிழகம் முழுவதும் செய்துள்ள நில மோசடிகள் குறித்த தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. வரும் மாதங்களில் அரசியலில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும் பிரச்சனையாக அதுவே இருக்கும். நிலமோசடியில் முன்னாள் அமைச்சர் அ.ராசாவின் திருவிளையாடல்கள் குறித்த செய்திக் கட்டுரையை இப்போது பார்ப்போம்..”
“தமிழகத்தில் வீட்டு வசதி வாரிய ஊழல் சில நாட்களுக்கு முன்னர் அம்பலமானது. இப்போது, திமுகவினர் தமிழகம் முழுவதும் செய்துள்ள நில மோசடிகள் குறித்த தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. வரும் மாதங்களில் அரசியலில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும் பிரச்சனையாக அதுவே இருக்கும். நிலமோசடியில் முன்னாள் அமைச்சர் அ.ராசாவின் திருவிளையாடல்கள் குறித்த செய்திக் கட்டுரையை இப்போது பார்ப்போம்..”
__________________
தொலைத்தொடர்பு அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடுகளால் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் அடங்கவில்லை. அதற்குள் இதில் சம்பந்தப்பட்ட முன் னாள் அமைச்சர் ஆ. ராசாவின் குடும்பத் தினர் அவரது சொந்த மாவட்டமான பெரம்பலூரில் நடத்திய நிலஅபகரிப்பு மோசடி முன்னுக்கு வந்துள்ளது.
தொலைத்தொடர்பு அலைவரிசை முறைகேடுகள் சம்பந்தமாக கருத்து தெரி வித்த தமிழக முதல்வர், சம்பந்தப்பட்ட அமைச்சர் ஆ. ராசா ஒரு தலித் என்ப தால் அவரை எதிர்த்து வேண்டுமென்றே கலகம் செய்கிறார்கள் என்றார். நிலைமை தலைக்கு மேலே சென்று அவர் ராஜி னாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற் பட்ட போதிலும் அதே பல்லவியை தமி ழக முதல்வர் திரும்பப் பாடினார்.
தற்போது பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம்-காரை கிராமத்தில் ஏழை, எளிய தலித் மக்களது நிலங்கள் உட்பட மற்ற விவசாயிகளை மிரட்டி நிலங் களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்து, பல கோடி லாபம் ஈட்டியுள்ளது ஆ.ராசாவின் குடும்பம். இப்போது தமிழக முதல்வர் என்ன செய்யப்போகிறார் என எதிர் பார்த்து நிற்கின்றனர் நிலங்களை இழந்த ஏழை தலித் மக்கள்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், நாரணமங்கலம் - காரை கிராமங்களில் எம்.ஆர்.எப். நிறுவனம் டயர் தொழிற்சாலை அமைத்திட அனு மதி பெற்றுள்ளது. தனக்கு தேவையான 290 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம் நேரில் கிரயம் பெறுவதற்கு கம்பெனி அதி காரிகள் வந்து விவசாயிகளை அணுகிய போது, தங்களது வாழ்வாதாரமான நிலத்தை கொடுக்க முடியாது என விவசாயிகள் மறுத்துள்ளார்கள்.
நிலத்தை பெற முடியாத கம்பெனி நிர்வாகம் சென்னையில் உள்ள ‘கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ்’ நிறுவனத்தின் மூலம் மாவட்ட வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் துணையோடு விவசாயிகளை தனித்தனியாக அரசு அலுவலகத்துக்கு வரவழைத்து மிரட்டி யுள்ளார்கள். நிலத்தை குறைந்த விலைக்கு தர மறுத்தால் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து விடுவதாக அச்சுறுத்தியுள்ளார்கள். மேலும் நிலம் கொடுக்கும் குடும்பங்களுக்கு எம்.ஆர். எப். தொழிற்சாலையில் வேலை கொடுப் பதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி யுள்ளார்கள். கடைசிவரை அதிகாரி களின் மிரட்டல்களுக்கு பணிய மறுத்த செந்தில்குமார் என்பவர் மீது தீண்டாமை வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத் துள்ளார்கள். சுமார் ஒரு மாதத்திற்கு பின்னரே இவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்காக ஏன் மாவட்ட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வரிந்து கட்டிக்கொண்டு, மிரட்டி நிலம் வாங்க வேண்டும் என கேள்வி எழக்கூடும். இந்த நிறுவனம் சாதாரண பிரஜைகளைக் கொண்ட நிறுவனமல்ல, இந்த நிறுவனத்தின் இயக்குனர் சாதிக் பாட்சா, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் பால்ய நண்பர். ஆ. ராசாவின் துணைவியார் பரமேஸ்வரி இந்த நிறுவனத்தில் ஒரு இயக்குனர். அது மட்டுமின்றி இதில் இயக் குனர்களாக உள்ள கலியபெருமாள், ராம் கணேஷ், வழக்கறிஞர் மலர்விழி, பரமேஸ் குமார் ஆகிய அனைவரும் ஆ. ராசா அவர்களின் நெருங்கிய உறவினர்கள். மொத்தத்தில் ‘கிரீன் ஹவுஸ் புரோமோட் டர்ஸ்’ நிறுவனம் ஆ. ராசா அவர்களின் குடும்ப நிறுவனம். ஆகவே தான் அதிகாரிகள் அக்கறையுடன் கடமை யாற்றியுள்ளார்கள். சமீபத்தில் ஆ. ராசா அவர்களது வீடு மற்றும் உறவினர்களது வீடுகளில் மத்திய புலனாய்வுத் துறையால் ரெய்டு நடத்தப்பட்ட போது, இந்த நிறுவனத்திலும் ரெய்டு நடத்தப் பட்டது. இதன் நிர்வாக இயக்குநர் சாதிக்பாட்சா வீடும் சோதனைக் குள்ளாக்கப்பட்டதோடு, சாதிக்பாட்சா விசாரணைக்காக அழைத்துச் செல்லப் பட்டார் என்பது அறிந்ததே.
மத்திய அமைச்சர் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட நிறுவனம் என்றால் அதிகாரிகளுக்கு கேட்கவா வேண்டும்? தலித் மக்களையும், மற்றவர்களையும் அழைத்து வந்து அதிரடியாக நிலங்களை எழுதி வாங்கி விட்டார்கள். தலித் மக்க ளுக்கு ஏக்கருக்கு வழங்கப்பட்டது ரூ.40,000 முதல் ரூ. 90,000 வரை. மற்றவர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 4 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது. நிலத்துக்கு பணம் வழங்கியதிலும் தலித் மக்களுக்கு பெருத்த அநீதி!
இவ்வாறு அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்ட நிலங்களை அமைச்சர் குடும்ப நிறுவனம் எம்.ஆர்.எப். கம் பெனிக்கு ஏக்கருக்கு ரூ. 15 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை விற்றுள்ளது. ஏழை களிடமிருந்து பறிக்கப்பட்ட 450 ஏக்கர் நிலம் இவ்வாறு கொள்ளை லாபத்துக்கு விற்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் கிராம மக்களின் சுமார் 600 ஏக்கர் நிலம் இவ்வாறு பறிக்கப்பட்டுள்ளது. நிலங் களை பறிகொடுத்த தலித் மற்றும் ஏழை விவசாயிகள் வயிற்றெரிச்சலோடு கண் ணீரும் கம்பலையுமாக அலைந்து கொண்டுள்ளார்கள்.
இந்த பகல் கொள்ளை போதாது என சிலர் கொடுக்க மறுத்த மீதம் உள்ள 17 ஏக்கர் நிலத்தையும் அபகரிக்க முயன்று வருகின்றனர். இந்த நிலத்தையும் அரசு மூலம் குறைந்த விலைக்கு கையகப் படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள் ளனர். இந்த நடவடிக்கைகளை எதிர்த்து நில உடைமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத் துள்ளார்கள்.
விவசாயிகள் விருப்பத்திற்கு மாறாக நிலங்களை தொழிற்சாலைக்கு கையகப் படுத்தக்கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. இதையெல்லாம் மீறி அமைச்சர் குடும்பம், ஏழை தலித் மக்களது நிலங்களையும், இதர விவசாயி களது நிலங்களையும் அடிமாட்டு விலைக்கு வாங்கி கொள்ளை லாபம் அடித்துள்ளது.
சட்டத்துக்குப் புறம்பாக - விவசாயி களது விருப்பத்துக்கு மாறாக அபகரிக்கப் பட்ட அனைத்து நிலங்களையும் மீட்டு, சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைத்திட வேண்டும். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து மோசடி ஆவணங்களையும் ரத்து செய்திட வேண்டும். தலித் மக்களது நிலங்களை மிரட்டி பறிப்பது எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி குற்றமாகும். இச்சட்டம் உள்ளிட்ட இதர குற்றவியல் சட்டத்தின் படி சம்பந்தப்பட்ட கிரீன்ஹவுஸ் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் மீதும், அதற்கு துணைபோன அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்திட வேண்டும். தமிழக அரசு தாமதிக்காமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இக்கோரிக்கையினை வற்புறுத்தி டிசம்பர் 10 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பாதிக் கப்பட்ட கிராம மக்கள் மற்றும் விவ சாயிகள் கலந்து கொண்ட பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எதற்கெடுத்தாலும் ஆ. ராசா தலித் வகுப்பைச் சார்ந்தவர் என அவரது குற்றங்களை நியாயப்படுத்தும் தமிழக முதல்வர், நிலங்களை இழந்து தவிக்கும் ஏழை தலித் மக்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார்? நிலங்களை இழந்த ஏழை தலித் மக்கள் பக்கமா? அல்லது நிலங்களை பறித்த கோடீஸ்வரர் தலித் பக்கமா? .
கே.பாலகிருஷ்ணன்
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
முன்பு, நீதிபதி தினகரன் புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர் வரத்து பகுதிகளையும் வளைத்து வேலி போட்டு தனதாக்கிக் கொண்டிருந்தார் என மாவட்ட ஆட்சியாளரே அறிக்கை வெளியிட்டிருந்தார். இப்போது இது. இதன் தொடக்கம் இராமசந்திர மருத்துவமனையின் போது செடியாய் முளைத்தது. அப்போதே கிள்ளி எரிய அதிகாரம் தயங்கியதால் இன்று அதுவே மரமாகி, மரங்களாகி, வனமாகி விட்டது.
ReplyDelete