372 ஆண்டுகளுக்கு பின்னர் வானில் ஏற்படும் அதிசயமாக சந்திரகிர கணமும் குளிர்கால சிறுபகல் பொழுதும் (இந்தியாவில்) இணைந்து டிசம்பர் 21ல் வருகின்றன.
ஆண்டுக்கு இருமுறை பகல்பொழுது மிக குறுகிய நேரம் கொண்டதாக இருக் கும். கோடைகாலத்தில் ஒரு சிறிய பகல் பொழுதும், குளிர் காலத்தில் ஒருசிறிய பகல் பொழுதும் ஏற்படுவது வாடிக்கை யாகும். இந்த ஆண்டு குளிர்கால சிறுபகல் பொழுது விசேஷமானதாக கொண்டா டப்படுகிறது. இந்த குளிர்கால சிறுபகல் பொழுதில் சந்திரகிரகணமும் இணைந்து வருகிறது.
இத்தகைய இருவிண்வெளி நிகழ்வுகள் 372 ஆண்டுகளுக்கு பின்னர் வானில் செவ் வாயன்று ஏற்படுகிறது. இதற்கு முன்னர் கடந்த 1638ம் ஆண்டு டிசம்பர் 21ம்தேதி இதே போன்று இரு விண்வெளி நிகழ்வு கள் ஒன்றாக ஏற்பட்டன என்று அமெரிக்க கடற்படை கண்காணிப்பக ஜெப்செஸ்டர் கூறினார்.
பகல் நேரத்தில் வானில் ஏற்படும் சந்தி ரக்கிரகணத்தை இந்தியாவில் காண முடி யாது. இருப்பினும் முழு நிலா தாமிர சிவப் புடன் மாறுவதை ஐரோப்பா, மேற்கு ஆப் பிரிக்கா, அமெரிக்கா, பசிபிக் கடல், கிழக்கு ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் மற் றும் கிழக்கு - வடக்கு ஆசிய பகுதிகளில் இருந்து காண முடியும்.
இந்த ஆண்டின் மிக சிறிய பகல் பொழுதுநாளாக டிசம்பர் 21ம்தேதி உள் ளது. பூமியின் வடக்குப் பகுதியை சேர்ந்த மக்கள் குளிர்கால சிறுபகல் பொழுது அதியசத்தை ரசிக்க முடியும். குளிர்கால பகல் பொழுதின்போது வடக்கு துருவ புள்ளி சூரியனில் இருந்து வெகுதொலை விலும், தென்துருவ புள்ளி சூரியனை நேரடியாக நோக்கியும்இருக்கும். இதன்படி குளிர்கால சிறுபகல் பொழுதின் போது, தில்லியில் சூரிய உதயம் 7.09 மணிக்கு துவங்கி மாலை 5.29 மணிக்கு சூரியன் அஸ்தமனமாகிறது.
இன்று பகல் பொழுது 10 மணி நேரம் மட்டுமே நீடிக்கிறது. செவ்வாயன்று முழு சூரிய கிரகணம் மதியம் 1.47 மணிக்கு ஏற்படுவதாக இந்திய விண்வெளி இயற் பியல் பேராசிரியர் ஆர்.சி.கபூர் கூறினார். இதைபோன்ற இரு விண்வெளி அதிசயம் ஒன்றாக அடுத்த 2094ம் ஆண்டு டிசம்பர் 21ம்தேதி ஏற்படும்.
நல்ல தகவல் நன்றி !
ReplyDeletegood information!
ReplyDeleteதிரு.கோவி அவர்களுக்கு தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteதிரு. சமுத்திரா அவர்களுக்கு தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete