Monday, December 20, 2010

ராடியா தொலைபேசி உரையாடல்கள் ... பாகம் 2 (தமிழில்)

பகுதி I: Click Here
 
அரசியல், வணிகம், ஊடகம் என பல்வேறு துறைகளின் பெருந்தலைகளிடமும் செல்வாக்குச் செலுத்திய நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவுகளின் புதிய தொகுப்பு ஏற்கனவே வெளியானது. அவற்றில் ஒரு பகுதி தமிழில்...
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதியிடம் பேசி தீர்ப்பில் தலையிட முயன்றதாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு பற்றி ராசாவின் முன்னாள் அந்தரங்கச் செயலர் ஆர்.கே.சந்தோலியாவும் ராடியாவும் பேசுகிறார்கள். "சென்னை உயர்நீதிமன்ற வழக்குக்கும் ஆ. ராசாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என ராடியாவிடம் சந்தோலியா கூறுகிறார்.

ராடியா: ஹாய்!

சந்தோலியா: ஹலோ, எப்படியிருக்கீங்க?

ராடியா: நான் இன்னும் மும்பையில்தான் இருக்கிறேன். தொடர்பு கொள்ளாமல் இருந்ததற்காக மன்னிக்கவும். எல்லாம் எப்படிப் போகிறது. உங்கள் அமைச்சரின் பெயர் செய்திகளில் அடிபடுகிறதே?

சந்:எதில்?

ராடியா:ம்... சென்னை உயர் நீதிமன்ற விவகாரத்தில்.

சந். அதனாலென்ன, அவருக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

ராடியா: இல்லை... ஊடகங்களில் 9 மணிச் செய்திகளில் இரண்டு பெயர்கள் அடிபட்டன. ஆ.ராசா, அழகிரி....

சந்: ம்...

ராடியா:பின்னர் அழகிரியின் பெயர் விடப்பட்டது. அது அழகிரியில்லை என அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு ராசாவின் பெயர் எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. 

சந்:ம்...

ராடியா: இதே விஷயத்தை ராஜ்தீப்(தேசாய்)பும் என்னிடம் சொன்னார்: நியூஸ் எக்ஸýம் எனக்குச் சொன்னது. எல்லோரும் அவரது பெயரைத்தான் சொல்கிறார்கள். என்டிடிவியின் ஷிவ்நாத்(துக்ரால்)தை நான் சந்தித்தபோது அவரும் அது ராசாதான் என்று சொன்னார். பிறகு டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் நான் பேசினேன்... கேஸ் செய்தி பற்றி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதே பெயர்தான் விவாதத்தில் இருக்கிறது... சட்ட அமைச்சரிடம் சொல்லப்பட்டிருக்கிறது... அது ராசாதான்.

சந்: ம்... எனக்குத் தெரியாது. நான் யாரிடமும் பேசவில்லை.

ராடியா: உங்களுக்குத் தெரியட்டும் என்றுதான்... நிறைய பேர் அவருடைய பெயரை பரப்பி வருகிறார்கள்; அது உண்மையல்ல. அதனால்தான் உங்களுக்கு போன் செய்தேன்.

டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவுடன் ராடியா பேசியபோதும் சென்னை உயர் நீதிமன்ற விவகாரம் வருகிறது. 07.07.2009 அன்று இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ரத்தன் டாடா: ராசாவுக்கு எதிராக மாறன் தீவிரமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதுதான் பிரச்னை. ராசா எதுவும் செய்திருக்க மாட்டார், எதுவும் ஆகாது என நம்புகிறேன்...

ராடியா: இல்லை. ராசா எதுவும் செய்யவில்லை. ஏனென்றால் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு அமைச்சர் யாரும் போன் செய்யவில்லை என தலைமை நீதிபதியே அறிவித்துவிட்டாரே.

டாடா: ஓ! அப்படியா?

ராடியா: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த விஷயம் விளக்கப்பட்டிருக்கிறது. அதனால் எதுவும் நடக்காது. மாறன் முட்டாள் தனம் செய்திருக்கிறார்.

டாடா: ஓகே.

ராடியா: எப்படியிருந்தாலும், "எனக்கு அந்த அமைச்சரைத் தெரியும்' என்று பார் கவுன்சில் தலைவர் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார். "கேபினட் அமைச்சரின் செல்வாக்கை நீதிமன்றத்துக்குள் கொண்டுவராதீர்கள்' என்று நீதிபதி கூறியிருக்கிறார்.

டாடா: ஓகே.

ராடியா: ராசா ஒருபோதும் பேசவில்லை. அது தெளிவாக்கப்பட்டுவிட்டது.

டாடா: ஓகே.

2009-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி நீரா ராடியாவுடன் அடையாளம் தெரியாத ஒருவர் பேசும்போது "நான் இதுபற்றி உடனடியாகப் பேசுகிறேன். டெலினார் நிறுவனத்துடன் என்ன பிரச்னை' என்று கேட்கிறார்.

அடையாளம் தெரியாதவர்: யெஸ் மேடம்! குட் ஈவ்னிங்!

ராடியா: ஓகே. டெலினார் பாதுகாப்பு அனுமதி பற்றி ஏதாவது கேள்வி இருந்தால், பிகேஎம்மிடம் கேளுங்கள்

அ.தெ: ஓகே.

ராடியா: ஏனென்றால் எப்.ஐ.பி.பீ. (அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம்) அனுமதி...

அ.தெ: ம்...

ராடியா: ஹா... ஏனென்றால் பாகிஸ்தானிலும் சேவை அளித்துவரும் நிறுவனம் டெலினார்...

அ.தெ: ஓ..ஹோ...

ராடியா: ஆனால் ஸ்வானும் அப்படித்தான்...

அ.தெ.: ஓகே.

ராடியா: திங்கள்கிழமை ஒரு கூட்டம் இருக்கிறது என்று நினைக்கிறேன்...

அ.தெ: ஓகே.

ராடியா: ... ஐ.பி மற்றும் அனைவரும் டெலினார் பற்றி முடிவு செய்ய திங்கள்கிழமை கூடுகிறார்கள்.

அ.தெ: ஓகே.

ராடியா: அவரது பிரச்னைகள் என்னென்ன என்று மட்டும் உறுதி செய்யுங்கள்...

அ.தெ.: நான் உடனடியாகப் பேசுகிறேன்.

ராடியா: இல்லை... அவர்... ஸ்வான் பற்றியும் நாம் கேட்க வேண்டும் ஏனென்றால் அவர்களுக்கும் பாகிஸ்தானில் நெட்வொர்க் இருக்கிறது அல்லவா?

அ.தெ.: ஓகே.

ராடியா: ஓகே, ஓகே. பை.


2009-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி ஆ.ராசாவின் முன்னாள் தனிச் செயலர் ஆர்.கே. சந்தோலியா, நீரா ராடியாவுடன் பேசுகிறார். பெரம்பலூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு டாடா நிறுவனம் நிதியளிப்பது குறித்து இருவரும் உரையாடுகிறார்கள். இதன் பிறகு ராசாவின் சொந்த மாவட்டத்தில் மருத்துவமனைகளை மேம்படுத்த டாடா அறக்கட்டளை ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

ஆர்.கே. சந்தோலியா: ஹலோ...

நீரா ராடியா: ஹாய்! எப்படியிருக்கிறீர்கள்?

சந்: ம்... மதிய வணக்கம், நான் நலம், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

ராடியா: ஆல்ரைட். மும்பையில் வேலைகளில் மூழ்கியிருக்கிறேன். பணிகள் என்னை ஆக்கிரமித்திருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

சந்:ஓகே.

ராடியா: எப்படியிருக்கிறீர்கள்?

சந்: எப்போது தில்லி திரும்புகிறீர்கள்?

ராடியா: செவ்வாய், புதன்கிழமைவரை இல்லை...

சந்: ஓகே, ஓகே... பேசலாமா? (டாடா) உபகரணங்களோ அல்லது வார்டுகளோ தரலாம்.

ராடியா: நான் கிருஷ்ண குமாருடன் பேசினேன். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று சொல்கிறேன். பெரம்பலூரில் உள்ள மருத்துவமனைக்கு செய்யலாம் என்கிறார்கள். பிரச்னை ஒன்றுமில்லையே? ஆனால், அவர்களது அறக்கட்டளை விதிப்படி குறிப்பிட்ட முறையில்தான் அவர்களால் செய்ய முடியும் என்பதால் மருத்துவமனைக்கு உபகரணங்களை வழங்க விரும்புகிறார்கள்.

சந்: ஓகே.

ராடியா: அல்லது சில வார்டுகளை கட்டித் தரலாம் என்கிறார்கள். வார்டுகள் போல ஏதாவது கட்டித் தருவார்கள். காசோலை போல் எதுவும் இல்லை. நாம் ஒரு கடிதம் தர வேண்டும். அந்தக் கடிதத்தின் அடிப்படையில் அவர்கள் சில குறிப்பிட்ட வகையில் வார்டு அல்லது உபகரணங்கள் என மருத்துவமனையில் பணிகளைத் தொடங்குவார்கள். பின்னர் அந்த நிதி விநியோகங்கள் தொடங்கும்.

சந்: ஓகே. அதனால் ஒன்று செய்யுங்கள், அவருக்கு போன் செய்யுங்கள், அமைச்சருக்கு...

ராடியா: ம்...

சந்:அவரிடம் சொல்லுங்கள், ஏனென்றால் அவர் உங்களது போனுக்காக காத்திருந்தார்...

ராடியா: என் போனுக்காக காத்திருந்தாரா?

சந்: ஆமாம்... ஆமாம்...

ராடியா: ஓகே. அவர் சென்னைக்குப் போய்விட்டாரா அல்லது இன்னும் இங்கேயே இருக்கிறாரா?

சந்: இல்லை... அவர் சென்னையில் இருக்கிறார்.

ராடியா: சென்னையில் இருக்கிறாரா, அப்படியா?

சந்: ஆமாம். ஆமாம்.

ராடியா: எப்போது திரும்பி வருவார்?

சந்: திங்கள்கிழமை திரும்பி வருவார்.

ராடியா: திங்கள்கிழமை வருகிறார்... சரி. நான் பேசுகிறேன்.

சந்: தயவு செய்து அவரிடம் பேசுங்கள். பிறகு எனக்குச் சொல்லுங்கள்.

ராடியா: ஓகே. அதன் பிறகு அவரிடம் பேசவே இல்லை. மன்னியுங்கள். ஏனென்றால் நேற்றுத்தான் நாங்கள் பேசினோம்.

சந்: ம்... ம்...

ராடியா: அதனால்.... நான்... நான்... அதுதான் அவர் என்னிடம் சொன்னது. எனக்கு அந்தத் தெளிவு தேவைப்பட்டது. பிறகு நான் சொன்னேன்... அது எதுவோ, அதை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் (குரல் தெளிவில்லை) சமர்ப்பியுங்கள், புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட அனைத்தையும். இதுதான் நான் அவருக்குச் சொன்னது.

சந்: ம்...ம்...

முன்னதாக 2009-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி ராடியாவுடன் ஆர்.கே.சந்தோலியா பேசுகிறார்.  "ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மக்களைச் சந்தியுங்கள் என்று சார் (ராசா) சொன்னார்' என்று சந்தோலியா கூறுகிறார். ராடியா - ராசா இடையிலான சந்திப்பு நடந்த சிறிது நேரத்தில் இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஊடகங்களைக் கையாள்வதற்கு தேர்ந்த ஆளை ராசா தேடியபோது, தனக்கு நம்பகமான ஒருவரைத் தருவதாக சந்தோலியாவிடம் ராடியா பரிந்துரைக்கிறார்.

சந்: ஹலோ.

ராடியா: ஹாய்.

சந்: ஹாய், எல்லாம் எப்படிப் போகிறது?

ராடியா: இப்போதுதான் நமது அமைச்சரைச் சந்தித்தேன். வழக்கம்போல் அப்பாயிண்ட்மென்ட் கிடைக்காமல் ஃபரீத் வெளியே இருந்தார்.

சந்: பிறகு சார் (ராசா) அனைவரையும் திட்டுவார்.

ராடியா: யார்?

சந்: அதிகாரிகளை அவர் திட்டினாரா?

ராடியா: ஆம். ஏதோ எரிச்சலில் இருந்தார். எத்தனை பேரைச் சந்திக்க வேண்டும் என்பதை வரையறுத்திருப்பதாக அவர் சொன்னார். அவரது அதிகாரிகளையெல்லாம் மாற்றவும் செய்திருக்கிறார். நீங்கள் சாதித்துவிட்டீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.

சந்: இல்லை. இல்லை. அலுவலகத்தில் கூட அனைத்து ஊழியர்களையும் மாற்றியிருக்கிறோம். 2-3 பேரைத் தவிர. ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் மக்களைச் சந்திக்க வேண்டும் என்று சார் கூறியிருக்கிறார். நாள் முழுவதும் அல்ல. ஆள்கள் வந்துகொண்டும்... போய்க்கொண்டும் இருப்பார்கள்...

ராடியா: மிகச் சரி.

சந்: அதை நடைமுறைப்படுத்தப் போகிறோம்... முன்அனுமதி இல்லாமல் யாரும்..

ராடியா: செயலாளர் பற்றியும் பிஎஸ்என்எல் பற்றியும் அவர் சொல்லிக்கொண்டிருந்தார். அவரது சொந்த ஊடகம் பற்றியும் சொன்னார். அதனால், அதை எப்படிச் செய்வது என்பது பற்றி நான் உங்களுக்கு ஒரு திட்டம் தரப்போகிறேன். அவருக்காக ஊடகங்களைக் கையாள்வதற்கு ஒரு சரியான ஆளைத் தருகிறேன்.. சரியா?

சந்: ஓகே.

ராடியா: எனக்கு நம்பகமான நபர்களில் ஒருவரைத்தான் நான் தரப்போகிறேன். ஊடகங்களைக் கையாள்வதில் அவர் தேர்ந்தவர்.

சந்: ஓகே. நல்லது.

ராடியா: நீங்கள் விரும்புவது ஒரு சுதந்திரமான... என்னுடைய ஆலோசனை என்னவென்றால்,இந்தக் கச்சிதமானவற்றையெல்லாம் விட்டுவிடுங்கள். ஏனென்றால் அவைகளெல்லாம் அவர்களுடன் சேரக்கூடியவைகள்.

சந்: இல்லை. அது சரிதான். ஒருவர் எனக்குச் சொன்னார்...

ராடியா: என்னால் முடியாது. என்னிடம் ஒரு அருமையான குழு இருக்கிறது என்று சாஹித் சொல்லுவார்.  ஒரு நிமிடம்.... நாம் இன்று சந்திக்கிறோம் இல்லையா?

சந்: இன்று, நீங்கள் விரும்பினால் 3.30-க்கு வாருங்கள். சந்திக்கலாம்.

ராடியா: இல்லை. நான் குர்காவோன் போக வேண்டும். அதைப்பற்றியும் உங்களிடம் நான் பேச வேண்டும். இல்லையில்லை... நான் அங்கே போகவேண்டும்.

சந்: சரி.

ராடியா: அதனால்தான். அதனால் நான் விரும்பவில்லை... (தெளிவாக இல்லை)  இறுதியில் எல்லா மகன்களும் தந்தையும் பேச்சுக்கு வந்துவிட்டார்கள்.

சந்: அப்படியானால் நாளை 3 மணிக்குச் சந்திப்போமா?

ராடியா: நாளை நான் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு போகிறேன்.

சந்: ஓகே. நல்லது. அப்படியானால் 11 மணிக்கு வாருங்கள்... வரமுடியுமா..?

ராடியா: செப்டம்பரில் இன்னும் ஒரே ஒருநாள்தான் இருக்கிறது (சிரிப்பு)

சந்: உங்களால் 11.15 மணிக்கு வர முடியுமா?

ராடியா: இப்போதே வர முடியும்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் மனோஜ் மோடியுடன் ராடியா பேசும்போது, சிவில் வழக்குகள், பொதுநல வழக்குகள் தொடர்வதற்கு சில தன்னார்வ அமைப்புகளின் (என்ஜிஓ) பெயர்கள் பரிசீலிக்கப்படுவது பற்றி ஆலோசிக்கிறார். 2009-ம் ஆண்டு மே 29-ம் தேதி இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மனோஜ் மோடி: ஹாய், நீரா.

நீரா ராடியா: ஹாய்.

மனோஜ் மோடி: எப்படியிருக்கிறீர்கள்?

ராடியா: நலம். நீங்க எப்படியிருக்கிறீர்கள்?

ம.மோடி: நலமாக இருக்கிறேன். ராஜா என்னுடன் இருக்கிறார்.

ராடியா: ம்... ம்...

ம.மோடி: நமது சட்ட வழக்கு, நிறுவன பிரிப்பு, வேறுசில பொதுநல வழக்குகள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

ராடியா: ம்...

ம.மோடி: இப்போது இந்த ஒரு என்ஜிஓ, ராம்ஜிபாய் மாவானி, நமது திட்டத்துக்காக வேலை செய்தவர்கள்.

ராடியா: ம்.

ம.மோடி: இரண்டாவது, தில்லியில் நீங்கள் பார்த்து வைத்திருப்பது.

ராடியா:ம்.

ம.மோடி: அதனால், எதுவென்றாலும் சரி. உங்களுடைய வசதியையும் விருப்பத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

ராடியா: இந்த ஆட்களைப் பற்றிய எனது கருத்து நல்லவிதமானது... அவர்கள் ஓகே என தெரிகிறது. எந்த வகையிலும் இதில் கவலைப்பட எதுவுமில்லை.

ம.மோடி: ம்... இந்த ராஜ்கோட் ஆட்கள் ஓகே. ஏதும் தப்பாகிப் போகாது... இருந்தாலும் புது ஆட்களை இந்த விஷயத்தில் ஈடுபடுத்துவது நல்லது. இருந்தாலும், அவர்கள் மீது உங்களுக்கு சிறிய சந்தேகம் இருந்தாலும் நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால் இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்த உடைக்க முடியாத வழக்காகப் போகிறது.

ராடியா:ம்... ஓகே. அவர்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட என்ஜிஓதான், மனோஜ். அவர்கள் பதிவு செய்யப்பட்ட என்ஜிஓ.

ம.மோடி: நல்லது. பதிவு செய்யப்பட்ட என்ஜிஓ என்றால் நல்லது. ஆனால்,அவர்கள் பின்வாங்கிவிடக்கூடாதல்லவா... பின்னர்...

ராடியா: இல்லை மனோஜ், நான்... உங்களிடம் உண்மையைச் சொல்கிறேன்... அவர்களை தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது. அந்த ஒரு நபரை எனக்குத் தெரியும். அவர் தனது வாக்கில் இருந்து பின்வாங்குவார் என நான் நினைக்கவில்லை.

ம.மோடி: உங்களுக்கு அவர்களைத் தனிப்பட்ட முறையில் தெரியாதா?

ராடியா:இல்லை, அவர்களில் ஒருவரை எனக்குத் தெரியும். அவர் சொந்தமாக... அவர்கள் 5 பேர். மற்றொருவர் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். அவர் பின்வாங்குவார் என நான் நினைக்கவில்லை. அவர் மிகவும் நம்பகமானவர் என அவரை அறிந்தவர்கள் மூலம் தெரிந்துகொண்டேன். அவர்கள் மிகவும் சீரியஸôனவர்கள். அவர்களுக்கு டிஎல்எப் அதிக நெருக்கடி கொடுத்துப் பார்த்தது, ஆனாலும் அவர்கள் பின்வாங்கவில்லை. பணம் கொடுத்தபோதும் அவர்கள் பின்வாங்கவில்லை.

ம.மோடி: அவர்களது நம்பகம் பற்றி உங்களது முழுமையான சோதனைகளைச் செய்யலாமே? முடிவில்... நான் அதன்படி நடக்கலாம்...

ராடியா: செய்துவிட்டேன். அதனால்தான் அவர்களை நான் அணுகினேன். அப்போதுதான் டிஎல்எப் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தும் அவர்கள் பின்வாங்கவில்லை என்பதும் தெரிந்தது.

ம.மோடி: டிஎல்எப் நெருக்கடி சாதாரணமானதுதான். நான் நம் ஆட்கள் எந்த அளவுக்கு நெருக்கடி தருவார்கள் என்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. உங்களுக்குத்தான் தெரியுமே, நம் ஆட்கள் அதிக நெருக்கடி தருவார்கள் என்று.

ராடியா: ஆம்... ஆம்... மனோஜ், நமக்கு இன்னும் எவ்வளவு அவகாசம் இருக்கிறது?

ம.மோடி: (அருகில் யாருடனோ பேசுகிறார்) அடுத்து 2-3 நாள்களில் நாம் முடிவு செய்தாக வேண்டும். அதனால் நான் உங்களது முடிவுப்படி செயல்படவேண்டும். நாம் 2-3-4 விஷயங்களை முடிக்க வேண்டும்... நாம் செய்தாக வேண்டும்...

ராடியா: மனோஜ், இந்த நபரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது என்றாலும் அவரை நான் நம்புகிறேன். இந்த ஆள் மிகவும் நம்பகமானவர். மிகவும் நம்பகமான பின்னணியில் இருந்து வந்திருக்கிறார். அதனால் இவர் சந்தேகப்படும்படியான ஆள் என்று எனக்குத் தோன்றவில்லை.

இன்னொரு குரல் (முன்னர் குறிப்பிட்ட ராஜா என்பவராக இருக்கலாம்): நீரா, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால் ஒருவரைத் தவிர மற்றவர்களுக்கு நெருக்கடி இருக்கக்கூடாது... அதாவது...

ராடியா: இல்லை.. இல்லை.. அவர்கள் 3 பேர். அவர்களில் ஒருவரை தனிப்பட்ட முறையில் எனக்கு மிக நன்றாகத் தெரியும். அவர் பின்வாங்க மாட்டார் என்று எனக்கு மிக நன்றாகத் தெரியும். இன்னொருவர் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். அவரும் நம்பகமானவர். ஏமாற்றமாட்டார். அவர் சர்தார். அவர் மீது எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. மூன்றாவது ஆள் மிகவும் கூலானவர். அவருக்கு எனது ஊழியர்களுள் ஒருவர், தல்ஜீத்தை நன்றாகத் தெரியும். அப்படித்தான் விஷயங்களை ஒருங்கிணைத்தேன். பெயர்களுடன் அவர் என்னிடம் வந்தபோது, அவைகளைச் சரிபார்த்தேன். பின்னர் சுனீல் அரோராவை அவர்களுடன் பேச வைத்தேன். ஏனென்றால் சுனீல் அரோராவை அவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனக்குத் தெரியும் சுனீல் இறங்கிவிட்டால்... எப்போதெல்லாம் அவர் எனக்கு பரிந்துரைக்கிறாரோ... எப்போதும் தவறாகப் போனதில்லை, மனோஜ், குறைந்தபட்சம் இன்று வரைக்கும்... அவர் மீது எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

ம.மோடி: நாம் இதைச் செய்யும்போது, ராம்ஜிபாய் மாவானியையும் பார்க்க வேண்டும். அவர்கள் அவரது வீட்டுக்குப் போய் எல்லாவகையான பைகளையும் எடுத்துவிட்டார்கள்.

ராடியா: ஆம்... ஆம்... அவர் செய்வார் என்று எனக்குத் தெரியும். இதுபற்றியெல்லாம் தெரிந்துதான் நான் அதைச் செய்தேன்,மனோஜ்.

ம.மோடி: ஆம். இந்த வழக்கு மிக முக்கியமானது. எனவே எனது தேர்வு அவர்கள்தான். ஏனென்றால் அதே நபர் மீண்டும் நேரடியாக இதைச் செய்வதை நான் விரும்பவில்லை. இன்னொரு சாதாரணமான உணர்வு வர வேண்டும். அவர்கள் செய்வார்கள்.

ராடியா: அவர்கள் இருவரையும் கொண்டு நடத்திவிடலாம். அவரும் வருவார் அல்லவா?

ம.மோடி: ஆமாம். ஆமாம். சில வேலைகள் நடக்கவேண்டியிருக்கிறது. வெவ்வேறு ஆள்களைக் கொண்டு அவைகளை முடிக்கலாம் என்றிருக்கிறேன்.

ராடியா: மிகவும் நல்லது, இல்லாவிட்டால் நம்பகம் இல்லாமல் போய்விடும் இல்லையா?

ம.மோடி: அதைத்தான் நான் சொல்கிறேன். நான் முக்கியமாகக் குறிப்பிடுவது அதைத்தான். அதற்காகத்தான் இன்னொரு முறையும் சொல்கிறேன். நீங்கள் வைஷ்ணவ தேவி கோயில் பயணத்தை முடியுங்கள். அந்த நேரத்தில் இதை இன்னொரு முறை பரிசீலியுங்கள். ஒன்றும் பிரச்னையில்லை. யோசியுங்கள்.

ராடியா: ஓகே.

ம.மோடி: பின்னர் ராஜா தனது வழக்குத் தொடரும் வேலையைச் செய்வார், ஏனென்றால், வழக்குத் தொடர்வதற்கு அவருக்கு எல்லா வகையிலும் பச்சைக்கொடி காட்டிவிட்டேன் ஆவணங்களைத் தயார் செய்வதற்கும்... மனுக்களைத் தயாரிப்பதற்கும்.... எல்லாவற்றுக்கும்.

ராடியா: ம்...

ம.மோடி: ம்ம்...?

ராடியா: ம், கச்சிதம். நான் செய்ய வேண்டியது என் குழுவிடம் பேச வேண்டும், இன்னொரு முறை சுனீலுடன் நான் பேச வேண்டும். நான்... (இணைப்பு துண்டிக்கப்படுகிறது)

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மருமகன் (வளர்ப்பு மகளின் கணவர்) ரஞ்சன் பட்டாச்சார்யா,முகேஷ் அம்பானியுடனான தனது உரையாடல் குறித்து  நீரா ராடியாவுடன் பேசுகிறார். 2009-ம் ஆண்டு மே 31-ம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த பேச்சில், சுனில் மிட்டலை சுஹேல் சேத் வீட்டில் சந்தித்ததை ரஞ்சன் உறுதி செய்கிறார்.

ராடியா: ஹாய்!

ரஞ்சன் பட்டாச்சார்யா: வெல்கம் பேக்!

ராடியா: நன்றி! இப்போதுதான் வந்தேன்... பணமில்லாமல் ரூ.60 கோடி காசோலை வங்கியிலிருந்து திரும்பும் ஆபத்திலிருந்து (யுனிடெக் நிறுவனத்தை) இப்போதுதான் நான் காப்பாற்றியிருக்கிறேன்.

ரஞ்சன்: ஓகே... ஓகே.. கேளுங்கள்... நான் சொன்னேனே... நான் சந்தேகப்பட்டது உண்மைதான். அவர் (முகேஷ் அம்பானி) போன் செய்தார். நீராவை ஒரு பொது நிகழ்ச்சியில் சந்தித்தேன் என்று மட்டும் அவரிடம் சொன்னேன்... தமக்காக வேலை செய்ய வேண்டும் என சுனில் (மிட்டல்) விரும்புவதாக நீரா சொன்னார் என்று கூறினேன். சில கட்டில்லாத ஏற்பாட்டின் அடிப்படையில் தமக்காக நீரா வேலை செய்ய வேண்டும் என்று சுனில் விரும்புகிறார்.... நீங்கள்தான் அதை ஊக்குவிக்கிறீர்கள் என நீரா என்னிடம் சொன்னார் என்றும் அவரிடம் கூறினேன். உடனே அவர், அதனால் என்ன பாஸ்? அது எந்த விதத்தில் என்னைப் பாதிக்கும்? எல்லோரும் நன்றாக இருக்கட்டும் என்றார். ஆனால் எந்த ஆட்சேபமும் இல்லை. அதனால் நான் எம்டிஏவிடம், இந்த வகையில் நான் பேசவில்லை என்று கூறினேன். ஆனால், இதற்கு உங்களுக்கு சம்மதமா என்று கேட்டேன். அவர் பேசியது இதுதான்: பாஸ், உங்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். நான் எவ்வளவோ பேருக்கு பெரும் உதவி செய்திருக்கிறேன். அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். உடனே நான் குறுக்கிட்டு நீங்கள் தெளிவாக இல்லை என்றேன். அதற்கு அவர்,நேற்று மாலை எனக்கு ஒரு போன் வந்தது. கட்டற்ற ஏற்பாட்டை விரும்புவதால் அவர் (ராடியா) அவருக்காக வேலை செய்யப்போவதில்லை என்று. ஆனால் நீரா எதுவும் முறையற்றதாக இருக்கக்கூடாது என்று கூறிவிட்டார். அதனால் நீரா அவருக்காக வேலை செய்யப் போவதில்லை என்று முகேஷ் கூறினார்.

ராடியா: உங்களிடம் இப்படிக் கூறியதாக அவர் அன்றைக்கே என்னிடம் சொல்லிவிட்டார்.

ரஞ்சன்: அதனால் நீரா, நான் என்ன நினைக்கிறேன் என்றால்... இது விஷயத்தில் நாம் பிரச்னைக்கு மட்டும் தீர்வு காண வேண்டும்... மீண்டும் யோசியுங்கள்.

ராடியா: ம்... பிரச்னைக்கு மட்டும் தீர்வுகாண்பது... நீங்களும் நானும் இணைந்து பணியாற்றலாம். அதைத்தான் நான் சொல்கிறேன். அதற்கு மேல் நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், நான் அவரை அவரது அலுவலகத்தில் சந்திக்க விரும்பவில்லை.

ரஞ்சன்: ஏன் சந்திக்க வேண்டும்? அவர் வரட்டும். சரி... நான் இப்படியே செய்கிறேன்... அவரது கருத்துப்படி செவ்வாய்க்கிழமை வாக்கில் செய்துவிடுகிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள்.

ராடியா: ஓகே. நான் அவரிடம் சொல்கிறேன். ஓரிருநாள் பயணமாக மும்பைக்கு நான் செல்ல வேண்டும்...


உரையாடல்களைக் கேட்க: [பெரம்பலூர் மருத்துவமனை] - [ஸ்வான் டெலிகாம்] - [நீதிபதியிடம்] - [வாஜ்பாய் மருமகனிடம்] - [ரிலையன்ஸ்...] 


(நன்றி: தினமணி)

2 comments:

  1. India is NOT a democratic country but a corporate concern. We elect the members and the lobbyists select the ministers. Money speaks louder than ethics.

    ReplyDelete
  2. நல்லா சொன்னீங்க வாசன்

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)