(படம்: கோப்பிலிருந்து) |
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மனை, வீடுகள் ஒதுக்கீட்டில் மிகப்பெரிய முறை கேடுகள் நடந்துள்ளன. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் இந்த முறை கேடுகள் அம்பலத்திற்கு வந்துள்ளன.
வீட்டுவசதி வாரியத்தில் உள்ள மனை, வீடுகளில் 15விழுக்காடு வரை அரசு விருப் புரிமை அடிப்படையில் விதிகளுக்கு உட் பட்டு ஒதுக்கீடு செய்யலாம். இந்த ஒதுக் கீடானது விதவைகள், சமூக சேவகர், சமூ கத்தில் பிரபலமானவர்கள், பொது நிர்வா கம், சுதந்திரப்போராட்ட வீரர்கள், அப்பழுக் கற்ற அரசு ஊழியர் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும். ஒதுக்கீடு பெறுகிறவர் தனக்கோ அல்லது தனது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கோ சொந்த வீடு இல்லை என்று உறுதி அளிக்க வேண்டும்.
ஆனால், வாரிய நடைமுறை விதிகளை மீறி முறைகேடாக ஒதுக்கீடு செய்துள்ள னர். ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களை பெற்றுள்ளவர்கள் யாரும் ஏழை, எளிய மக்கள் இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கக் கூடிய செய்தி.
இவற்றில் சில...
வீடு இருந்தும் மீண்டும் ஒதுக்கீடு பெற்ற அரசியல்வாதிகள்
டி.யசோதா எம்எல்ஏ: காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் துணைத் தலைவரான டி.யசோதா, 2006 சட்டமன்ற தேர்தலில் திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் சமர்ப் பித்த சொத்துக் கணக்கில் 11லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு (எண் 106ஏ, வெள்ளாளத் தெரு, கோடம்பாக்கம், சென்னை) உள்ள தாக கூறியிருக்கிறார். இவருக்கு சமூக சேவகர் என்ற அடிப்படையில் முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ரூ.59.56லட்சம் மதிப்புள்ள மனை (ஏ5) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 89வது வட்ட காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் பி.என். வனஜா, சட்டமன்ற உறுப்பினரான டி. யசோதாவிற்கு சமூக சேவகர் என்று சான்றிதழ் கொடுத்துள்ளார். அதை வாரியமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனமோ, அமைப்போ, தாசில்தாரோ, கவுன்சிலரோ, சட்டமன்ற உறுப்பினரோ யாருக்கும் சமூக சேவகர் என்று சான்றிதழ் வழங்க முடி யாது. அவ்வாறு வழங்கினாலும் அதனை அரசு ஏற்றுக் கொள்ளாது.
எஸ்.ராஜலட்சுமி: திமுக சட்டமன்ற கட்சி கொறடா அர.சக்கரபாணியின் (ஒட்டன் சத்திரம் தொகுதி) மனைவி எஸ்.ராஜ லட்சுமி. இவருக்கு ரோட்டரி கிளப் சமூக சேவகர் என்று சான்றிதழ் வழங்கி உள்ளது. சமூக சேவகர் என்ற அடிப்படை யில் முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப் பில் உயர் வருவாய் பிரிவில், 79.86லட்சம் ரூபாய் மதிப்புள்ள மனை (எண் 1047) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2006 சட்டமன்ற தேர்தலில் அர.சக்கரபாணி போட்டியிட்டபோது தேர்தல் ஆணை யத்திற்கு சமர்ப்பித்த சொத்துக் கணக்கில், தனது சொந்த கிராமமான கள்ளிமந்தை யத்தில் 12லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடும், தனது மனைவி ராஜலட்சுமிக்கு ஒட்டன் சத்திரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் ரூ.4.50லட்சம் மதிப்புள்ள வீடும் உள்ளது என்று கூறியுள்ளார். ஏற்கெனவே வீடு உள் ளவருக்கு வாரியம் ஒதுக்கீடு செய்தது எப்படி?
எல்.கணேசன்: மதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த எல்.கணேசன் 2009 மார்ச் மாதம் திமுகவில் இணைந் தார். ஆனால் இவருக்கு 7.3.2008 அன்று முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 79.86லட்சம் ரூபாய் மதிப்புள்ள மனை (எண்.1052) ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது இவர் தாக் கல் செய்த சொத்துக்கணக்கில், 12லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விதிமுறையை மீறி இவருக்கும் மனை ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.
பி.மூர்த்தி எம்எல்ஏ: சோழவந்தான் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.மூர்த்தி. 2006 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் போது தனக்கு எந்த சொத் தும் இல்லை என்று கூறியிருக்கிறார். இவருக்கு உயர் வருவாய் பிரிவின் கீழ் முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப் பில் 72.8லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு (ஈ2/6) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் சமூக சேவகர் என்று லயன்ஸ் கிளப் சான்றிதழ் வழங்கியுள்ளது.
பிருந்தா நெடுஞ்செழியன், என். சூர்யா: வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகத்தின் மூத்த மருமகள் பிருந்தா நெடுஞ்செழியன். இவரது மகள் மருத்துவர் என்.சூர்யா.
பிருந்தா நெடுஞ்செழியனுக்கு சமூக சேவகர் என்ற பிரிவின் கீழ் முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 23.4.08 அன்று உயர் வருவாய் பிரிவில் 9.82 லட்சம் ரூபாய் மதிப்பிலான 983சதுர அடி பரப்பளவு கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு (பி3/14) ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் 2007ம் ஆண்டு வருமான வரி கட்டிய விவரங்களில் இருந்து சொந்த வீடு இருப்பது தெரியவருகிறது.
என். சூர்யா என்சிசி, கண்சிகிச்சை முகாம், ரத்ததான முகாம் ஆகியவற்றில் கலந்து கொண்டும், ஏழை குழந்தை களின் கல்விக்கு உதவி செய்து வரும் சமூக சேவகர் என்று சேலம் வட்டாட் சியர் சான்றிதழ் வழங்கியுள்ளார். இவ ருக்கும் பிருந்தா நெடுஞ்செழியனுக்கு வீடு ஒதுக்கப்பட்ட அதே நாளில்,அதே பிளாட்டில் (பி 3/13) 9லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இந்த இரண்டு வீடுகளும் தற் போது வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
வட்டாட்சியருக்கு சமூக சேவகர் என்று சான்று அளிக்க அதிகாரம் கிடை யாது. அப்படி இருக்கையில் அவர் எப்படி சமூக சேவகர் என்று சான்றிதழ் வழங்கினார்? ஏற்கெனவே சொந்த வீடு வைத்துள்ள பிருந்தாவிற்கு வீடு ஒதுக் கப்பட்டது எப்படி? முகாம்களில் கலந்து கொள்வதாலேயே ஒருவரை சமூக சேவகராக ஏற்றுக் கொள்ள முடி யுமா? சொந்த பயன்பாட்டிற்கு வீட்டை வாங்கி விட்டு, வாடகைக்கு விட்டு வருமானம் பார்ப்பது சரியா?
திமுக பிரமுகர்கள்
பூச்சி எஸ்.முருகன்: திமுக பிர முகரான இவர் வீட்டுவசதி வாரிய தொமுச நிர்வாகியாக உள்ளார். பட்டி னப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடி யிருப்பில் எம்ஐஜி (ஐ-1)பிரிவின் கீழ் வீடு பெற்றுள்ளார். இவருக்கு, விதி முறைகளை மீறி மீண்டும் திருவான்மி யூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் (ஏ-11) 58.61 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2422சதுர அடி பரப்பளவு கொண்ட மனை ஒதுக்கப்பட்டுள்ளது.
வித்யா: முதலமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரியான மருதவிநாயகத் தின் மகளான வித்யாவுக்கு, சமூக சேவ கர் என்ற பிரிவில் முகப்பேர் வீட்டுவசதி வாரியத்தில் உயர் வருவாய் குடியிருப்பு பகுதியில் குடியிருப்பு (பி3/14) ஒதுக்கப் பட்டுள்ளது. இதன் மதிப்பு 9.82லட்சம் ரூபாய். இவர் சமூக சேவகர் என்று அரிமா சங்க கூட்டமைப்பு சான்றிதழ் பெற்று சமர்ப்பித்துள்ளார்.
முரளிதரன்: திமுக தலைமையக மான அண்ணா அறிவாலயத்தில் பணி யாற்றும் முரளிதரன் முகப்பேர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், நடுத்தர வருவாய் பிரிவினர் இருக்கும் இடத்தில் ரூ.35.26லட்சம் மதிப்பிலான மனையை (எண் 1062) ஒதுக்கீடு பெற்றுள்ளார். லயன்ஸ் கிளப் கொடுத்த சமூக சேவகர் என்ற சான்றிதழை கொடுத்து ஒதுக்கீடு பெற்றுள்ளார்.
இளமுகில்: திமுக தலைமையக மான அண்ணா அறிவாலயத்தில் ஐடி-மேனேஜராக பணியாற்றுபவர். இவர் முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடி யிருப்பு பகுதியில் நடுத்தர வருவாய் பிரிவினர் இருக்கும் இடத்தில் 35.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மனை (எண்: 1060) ஒதுக்கீடாக பெற்றுள்ளார்.
இளந்தென்றல்: இவர் முள்ளிமாந கர் மீனவ பஞ்சாயத்து சபையிடமிருந்து சமூக சேவகர் சான்றிதழ் பெற்று, அதனை கொடுத்து முகப்பேர் உயர் வருவாய் பிரிவினர் வசிக்கும் இடத்தில் ரூ.7.04லட்சம் மதிப்புள்ள வீட்டை (இ2/10) ஒதுக்கீடாக பெற்றுள்ளார். இவர் இளமுகிலின் சகோதரி என்பது குறிப் பிடத்தக்கது.
கே.அன்பு: கலைஞர் டிவி-யில் கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றி வருகிறவர். ஸ்ரீ அபி பாஞ்சாலி யோக சங்கத்தில் இருந்து சமூக சேவகர் சான்றிதழ் பெற்று சமர்ப்பித்துள்ளார். இவரும் முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உயர் வரு வாய் பிரிவினர் வசிக்கும் இடத்தில் 9.55லட்சம் மதிப்பிலான வீடு (பி3/16) ஒதுக்கீடு பெற்றுள்ளார்.
தீபா: முதலமைச்சரின் தனிச்செய லாளர் தேவராஜனின் மகளான தீபா சமூக சேவகர் என்ற பெயரில், திரு வான்மியூர் காமராஜ் நகரில் ரூ.1.08 கோடி மதிப்புள்ள 4466சதுர அடி பரப்பு கொண்ட மனையை (எண் 543) ஒதுக் கீடாக பெற்றுள்ளார்.
ஜெயசுதா: நக்கீரன் வார ஏட்டின் இணை ஆசிரியர் காமராஜின் மனைவி ஜெயசுதா. வீட்டோடு இருக்கும் இவ ருக்கு சமூக சேவகர் என்ற பிரிவின் கீழ் அரசு விருப்புரிமை அடிப்படையில் திரு வான்மியூர் புறநகர் திட்டம், காமராஜ் நகரில் 4764சதுர அடி பரப்பளவு கொண்ட ரூ.1.15கோடி மதிப்பிலான நிலம் ஒதுக்கீடு பெற்றுள்ளார்.
மக்கள் தொடர்பு அதிகாரிகள்
கே.நித்தியானந்தன்: முதலமைச் சரின் தனிப்பட்ட உதவியாளராக இருந்து தற்போது உதவி மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட் டுள்ளார். இவருக்கு சமூக சேவகர் என்ற பிரிவில் திருவான்மியூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ரூ.50.82லட்சம் மதிப்புள்ள (2100சஅ) மனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவருடைய அதிக பட்ச சம்பளம் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்காது. ஆனால் மாதாமாதம் 76,500 ரூபாய் தவணை தொகை செலுத்தும் வகை யில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இது எப்படி சரியாகும்?
கே.மாறன்: முதலமைச்சரின் அலு வலக உதவி மக்கள் தொடர்பு அதிகாரி யான இவருக்கு அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்ற பிரிவில் முகப்பேர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உயர்வரு வாய் பிரிவினர் வசிக்கும் இடத்தில் ரூ. 9.45லட்சம் மதிப்பிலான குடியிருப்பு (பி3/12) ஒதுக்கப்பட்டுள்ளது.
பால.சக்திதாசன்: முதலமைச்ச ரின் அலுவலக உதவி மக்கள் தொடர்பு அதிகாரி. இவருக்கு அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்ற பிரிவில் முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உயர் வருவாய் பிரிவினர் வசிக்கும் பகுதியில் ரூ.9.75லட்சம் மதிப்பிலான குடியிருப்பு (பி3/11) ஒதுக்கி பெற்றுள்ளார்.
கே.மாறனுமும், பால.சக்திதாச னும் முதலமைச்சரின் மூத்த மக் கள் தொடர்பு அதிகாரி எஸ்.வெங்கட் ராமனிடம் சான்றிதழ் வாங்கி சமர்ப்பித் துள்ளனர். விதியை மீறி அவரும் சான்றிதழ் கொடுத்துள்ளார். இந்த சான்றிதழை ஏற்று வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது.
ஜெ.நவீன் இப்ராஹிம்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜாபர் அலியின் மக னான இவர் லயன்ஸ் கிளப் வழங்கிய சமூக சேவகர் சான்றிதழ் கொடுத்து முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடி யிருப்பு பகுதியில் உயர்வருவாய் பிரி வின் கீழ் 65லட்சம் ரூபாய் மதிப்பிலான மனை (ஏ1) ஒதுக்கீடு பெற்றுள்ளார்.
தமிழ்ப்பணி மற்றும் சமுதாயப் பணி மாமன்றம்: இந்த அமைப்பு சமூக சேவை செய்து வருவதாக கூறி முகப் பேர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உயர்வருவாய் பிரிவில் 43.19 லட்சம் ரூபாய் மதிப்பிலான மனை (எண் 1046) ஒதுக்கீடு பெற்றுள்ளது.
இதேபோன்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி பானுமதி, தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணயக்குழு தலைவ ரும், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியு மான ரவிராஜபாண்டியன் உள்ளிட்டோ ரும் முறைகேடாக ஒதுக்கீடு பெற் றுள்ளனர்.
ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், மாஸ் ஆக்ஷன் நெட்வொர்க், சராமிக் டிரஸ்ட், எக்ஸ்னோரா போன்ற அமைப்புகளிட மிருந்து எல்லாம் சமூக சேவகர் சான்றி தழ் பெற்று 300க்கும் மேற்பட்டோர் மனை ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தெரிகிறது.
ஏழை எளிய மக்களின் சமூக மேம் பாட்டிற்காக ஒதுக்கீடு செய்ய வேண் டிய வீடு, மனைகள் அதிகாரிகளின் கொள்ளைக்காடாக மாறியுள்ளது.
கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்க ளில் முதலமைச்சர்கள் தங்களின் ரத்த உறவுகள், சொந்தக்காரர்கள், கட்சிக்காரர் கள், வீட்டு வேலைக்காரர்கள், ஓட்டு நர்கள், அரசு அதிகாரிகள் என தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நிலம், மனைகளை ஒதுக்கி கடும் நெருக்கடியில் மாட்டிக் கொண்டனர். மகாராஷ்டிர முதலமைச் சர் அசோக் சவாண் தனது பதவியையே இழந்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் கட்சியை மிரட்டி தப்பித்துக் கொண்டார். இதேபோன்று தமிழகத்திலும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடுகள், மனைகள் ஒதுக்கீடு செய்வதில் மிகப்பெரிய முறை கேடு நடந்துள்ளது. அனைத்து துறை களுக்கும் தலைவர் முதலமைச்சர்தான். ஊழல்களை பற்றி அதிகம் பேசும் முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்:
ஜாபர்சேட் ஐபிஎஸ்: தமிழக காவல் துறையின் உளவுத் துறை தலைவராக பணியாற்றி வருபவர். இவருக்கு அப் பழுக்கற்ற அரசு ஊழியர் பிரிவில் திருவான் மியூர் காமராஜர் நக ரில் 1.15கோடி ரூபாய் மதிப்பிலான 4,756சதுரஅடி மனை (எண் 540) ஒதுக்கீடு செய்யப் படுகிறது. 2008 ஜூன் 6ம் தேதி இந்த சொத்தை படித்துக் கொண்டிருக்கும் தனது மகள் ஜெனிபர் பெயருக்கு மாற்று கிறார். மாணவி ஜெனிபர் ரூ.46.03 லட்சம், ரூ.1.73லட்சம், 2009 பிப்ரவரி மாதம் ரூ.60லட்சம் என தவணை செலுத்தினார். மனையின் மொத்த தொகை யான ஒருகோடியே ஏழு லட் சம் ரூபாய் செலுத்திய பின்னர் அந்த சொத்து ஜெனிபரின் தாயாரான பர்வீன் ஜாபர் பெய ருக்கு மாற்றப்படுகிறது.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், பர்வீ னும் இந்த மனைக்கான முழுத்தொகையை மீண்டும் செலுத் துகிறார். 2009 அக்டோபர் மாதம் ரூ.50.64 லட்சமும், நவம்பர் மாதம் ரூ.25 லட்சமும் செலுத்துகிறார். மேலும் செலுத்த வேண்டிய 51.5லட்சம் ரூபாயை அதே மாதத்தில் செலுத்தினார்.
வரி ஏய்ப்பு செய்வதற்காக ஜாபர் சேட் குடும்பம் மீண்டும் மீண்டும் பணத்தை செலுத்தியதாக கணக்கு காட்ட இவ் வாறு செய்துள்ளார்கள். காரணம் ஜாபர் சேட்டின் மகள் ஜெனிபருக்கு இவ்வ ளவு வருமானம் எப்படி வந்தது என்ற கேள்வி எழக்கூடும். இதன்பின்னர் ஜெனிபர் செலுத்திய மொத்த தொகையையும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடுகிறது.
துர்கா சங்கர்: முதல்வரின் செயலாளராக உள்ள ராஜ மாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர். தொழிலதிபரான இவர் சமூக சேவகர் பிரிவின் கீழ், ஜாபர் சேட் மனைக்கு அருகே 1.12 கோடி ரூபாய் மதிப்புள்ள 2450சதுர அடி மனை (எண்: 538) ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஜாபர் சேட் மனைவி பர்வீனும், துர்கா சங்கரும் சொந்த பயன்பாட்டிற்கு வீடு கட்ட ஒதுக்கீடு பெற்றவர்கள், தற் போது இருவரும் சேர்ந்து மனை எண் 538 மற்றும் 540ஐ இணைத்து 12 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடி யிருப்பு கட்டியுள்ளனர். ஒரு குடியிருப் பின் மதிப்பு சுமார் 1.5கோடி ரூபாய் என்று மதிப்பிடப்படுகிறது. இருதரப் பும் சேர்ந்து ரூ.2.85கோடி ரூபாய்க்கு ஒதுக்கீடு பெற்று 18கோடி ரூபாய் லாபம் அடைகின்றனர்.
கோ.பிரகாஷ் ஐஏஎஸ்: 2008ம் ஆண்டு திருநெல் வேலி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது அப்பழுக் கற்ற அரசு ஊழியர் பிரிவின் கீழ் திரு வான்மியூர் விரிவாக்கம், திருவள்ளுவர் நகரில் 76.58லட்சம் ரூபாய் மதிப்பிலான 3829சதுர அடி பரப்பளவு கொண்ட மனை (எண்: எஸ்-6) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் தனக்குத் தானே அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்று சான்றிதழ் கொடுத்து முறை கேடாக ஒதுக்கீடு பெற்றுள்ளார்.
ஒரு அரசு ஊழியர் 25வருடம் பணி யாற்றி ஊழல் கறை படியாமல், தண்டனை பெறாமல் இருந்தால், அவருக்கு அரசே 500ரூபாய் மதிப்புள்ள கிசான் விகாஸ் பத்திரம் வழங்கி அப்பழுக்கற்ற ஊழியர் என்று சான்று வழங்கும். அதுதான் செல்லும். இதை தெரிந்திருந்தும் ஒரு மாவட்ட ஆட்சியரே முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.
சி.கே.கரியாலி ஐஏஎஸ்: ஆளுநர் மாளிகையில் பணி யாற்றி வரும் கரியாலி திருவான்மியூர் விரிவாக்கப் பகுதியில் ரூ.1.20கோடி மதிப்பில் 6023 சதுர அடி பரப்பளவிலான மனை (எஸ்4) ஒதுக்கீடு பெற்றுள்ளார். இவரின் கணவர் டாக்டர் ராஜ் குமாருக்கு சென்னையில் வீடு உள்ளதை மறைத்துள்ளார்.
டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்: 2008ல் தமிழக அரசின் நிதித்துறை சிறப்பு செயலாளராக பணி யாற்றிய இவர், தான் அப்பழுக்கற்ற ஊழியர் என்ற பிரிவின் கீழ் திருவான் மியூரில் 59.29லட்சம் ரூபாய் மதிப்பி லான மனையை (எண் ஏ-20) பெற் றுள்ளார். ஆனால் தமிழக அரசு இவருக்கு அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்ற சான் றிதழை வழங்கவில்லை.
கோசலராமன் ஐஏஎஸ்: கோசல ராமனுக்கு அப்பழுக் கற்ற அரசு ஊழியர் என்ற அடிப்படையில் அரசு விருப்புரி மையில், திருவான்மியூர் புறநகர்த் திட்டம் உயர் வரு வாய்ப் பிரிவில் ரூ.65.76 லட்சம் மதிப்பிலான 3288சதுர அடி பரப் பளவு கொண்ட மனை ( ஏ-5) ஒதுக்கப் பட்டுள்ளது. இவ ருக்கும் அரசு அத்தகைய சான்றிதழை வழங்கவில்லை.
தகவல் உரிமை சட்ட ஆர்வலரான வி.கோபாலகிருஷ் ணன், தமிழக அரசின் கூடுதல் செயலாளர் எஸ்.சாலமனிடம், யார் யாருக்கு எந்தெந்த அடிப்படையில் அப்பழுக் கற்ற அரசு ஊழியர் சான்றிதழ் கொடுத்துள்ளீர்கள், அவர் களின் விவரத்தை தருமாறு விண்ணப்பித்திருந்தார். அதற்கு பதி லளித்த சாலமன், யாருக்கும் அப்படி சான்றிதழே வழங் காத நிலையில், பட்டியல் தர இயலாது என்று கூறியுள் ளார். ஆக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி காரிகள் கொடுத்துள்ளது பொய்யான சான்றிதழ் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

----------------------------------------------------------------------------------------------------
செய்தி: கவாஸ்கர் (தமிழகத்தில் நடைபெற்ற இந்த ஊழலை வெளிக்கொணர்ந்த செய்தியாளர் கவாஸ்கருக்கு மாற்று வலைப்பக்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.)
நன்றி: தீக்கதிர் நாளிதழ்
ஏழை, பரம ஏழையான முதல்வர் மத்திய அரசில் மட்டுமல்ல, தமிழக அரசிலும் நடைபெற்றுவரும் ஊழல்களுக்கு விளக்கம் எழுதியே காகிதப் பஞ்சம் வந்துவிடுமோ? பாவம் அவர் நாளைக்கு டீ சாப்பிட யாரிடம் கடன் வாங்குவார்?.... |
இடம் கிடைத்தவர்கள் பலரும் முதல்வரின் அலுவலகத்தில் பணி புரிபவர்களாக இருக்கின்றனர் .இவர்களை என்ன செய்ய முடியும் ?வீரபாண்டி ஆறுமுகம் "ஏன் எனக்கு பேரன்கள் இருக்கக் கூடாதா ?"என்று முதல்வர் பாணியில் உளறிக் கொண்டிருந்தார் .எங்கே போகிறோம் ?
ReplyDeleteதமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் - மனைகள்
ReplyDeleteஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் கலைஞர் விளக்கம்.
அரசு விருப்புரிமையின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான வீடுகள் - மனைகள் ஆகிய வற்றை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக - கற்பனையாகவும், வேண்டுமென்றே திசை திருப்ப வேண்டுமென்ற உள்நோக்கத்துடனும்; சில நீதி யரசர்கள், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் பெயர்களைக் குறிப்பிட்டு - ஒரு சில ஏடுகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
அரசு விருப்புரிமை ஒதுக்கீடு என்பது ஏதோ இப்போது தி.மு. கழக ஆட்சியிலே மட்டும் நடைமுறைப்படுத்துவது போன்ற தோற்றத்தை அந்தச் சில நாளேடுகள் உருவாக்கிட பெருமுயற்சிகள் செய்கின்றன. அரசு விருப்புரிமை ஒதுக்கீடு என்பது கடந்த பல ஆண்டுகளாகவே, நடைபெற்ற எல்லா ஆட்சிக் காலங்களிலும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் உருவாக்கப்படும் மனைகள், கட்டப்படும் வீடுகள் அனைத்தும் - அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் - நடைமுறையில் இருந்து வரும் ஒன்றாகும். வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் அல்லது மனைகள் ஆகியவற்றில் 85 சத விகித வீடுகளை வீட்டு வசதி வாரியத்திற்கு விண்ணப்பம் செய்வோருக்கு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. மீதியுள்ள 15 சதவிகித வீடுகள் மற்றும் மனைகளை அரசு விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்கிறது. இது எல்லா ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்து கடைப்பிடித்து வரப்படும் முறையாகும். அரசு தனது விருப்புரிமை ஒதுக்கீடான 15 சதவிகித இடங்களை திருமணம் ஆகாத பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், கணவனை இழந்தோர், மாற்றுத் திறனாளிகள், சமூக சேவகர்கள், சமூகத்தில் சிறப்பு வாய்ந்தோர், தனியாக வசிக்கும் முதியோர், பொது நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களில் பணி புரிவோர், மத்திய அரசு மற்றும் மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் பணி புரிவோர், பத்திரிகையாளர்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணி புரிவோர், தேசியமயமாக்கப்பட்ட ஈட்டுறுதி நிறுவனங்களில் பணி புரிவோர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாரியங்களில் (தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தைத் தவிர) பணிபுரிவோர், உள்ளாட்சி நிறுவனங் கள் மற்றும் நகராட்சிகளில் பணிபுரிவோர், இராணுவத்தினர் மற்றும் முன்னாள் இராணுவத்தினர், விடுதலைப் போராட்ட தியாகிகள், மொழிக்காவலர்கள், அப்பழுக்கற்ற அரசு ஊழியர் ஆகியோர்க்கு, விண்ணப்பங்கள் - கைவசம் உள்ள மனைகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக அரசினால் விருப்புரிமையைப் பயன்படுத்தி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்க ளில் முதலமைச்சர்கள் தங்களின் ரத்த உறவுகள், சொந்தக்காரர்கள், கட்சிக்காரர் கள், வீட்டு வேலைக்காரர்கள், ஓட்டு நர்கள், அரசு அதிகாரிகள் என தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நிலம், மனைகளை ஒதுக்கி கடும் நெருக்கடியில் மாட்டிக் கொண்டனர். மகாராஷ்டிர முதலமைச் சர் அசோக் சவாண் தனது பதவியையே இழந்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் கட்சியை மிரட்டி தப்பித்துக் கொண்டார். இதேபோன்று தமிழகத்திலும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடுகள், மனைகள் ஒதுக்கீடு செய்வதில் மிகப்பெரிய முறை கேடு நடந்துள்ளது. அனைத்து துறை களுக்கும் தலைவர் முதலமைச்சர்தான். ஊழல்களை பற்றி அதிகம் பேசும் முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?
ReplyDeleteநான் ஊழலுக்கு நெருப்பு,
நான் ஊழலுக்கு தலீத்,
நான் ஊழலுக்கு திராவிடன்,
நான் ஊழலுக்கு கருப்பு என்று கதை வசனம் எழுதி.
அதை புறநானுறு காட்டும் ஊழல் வாழ்க்கை,
தொல்காப்பியம் சொல்லும் ஊழல் இலக்கணம் என எதையாவது உளரி மக்களை வசியப்படுத்துவார்
நல்ல முயற்சி கவாஸ்கருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeletevery good job!
ReplyDeletecongrats! to Mr.Gawaskar....
i can not understand this crime... they give the money to government for the house. so some one elaborate completely about this....
ReplyDeletethe rich gave money ... but this is a government scheme for poor ...
ReplyDelete