என்னதான் செய்வார்கள்
இப்போது அவர்கள்
மூடி மறைத்தார்கள்
முயன்று தடுத்தார்கள்
எதிரிகளின் சதி என்றார்கள்
எச்சரிக்கையும் செய்தார்கள்
அறிக்கை மேல் அறிக்கை விட்டார்கள்
அடங்கவில்லை அதன் வீச்சம்
கரைத்தாலும் மிதக்கிறது
புதைத்தாலும் முளைக்கிறது
என்னதான் செய்வார்கள்
இப்போது அவர்கள்
கனிந்த பலாவின் வாசனையென
கடிதம் எழுதுவார்களா?
செத்த எலியாய்
தேசமெங்கும் நாறும் ஊழலை.
- க.பாலபாரதி (சட்டமன்ற உறுப்பினர், சி.பி.எம்)
அட்டகாசம் போங்கல் இந்த அரசியல்வாதிகளும் செத்த எலி போல நாத்தம் பிடிச்சவனுக தான்
ReplyDeleteமேடம் கேசு போடணும்கிறாங்களே???போட மாட்டாங்களா????
ReplyDelete