போக்குவரத்துக் கழகங்களில் பெண்களை ஓட்டுநர், நடத்துநர்களாக எடுக்கும் திட்டம் இல்லை என்று சட்டமன்றத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறியதாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
“பணியில் சேர்ந்த உடன் மாற்று பணி கோருகின்றனர்; 3 மாத காலம் பிரசவ கால விடுமுறை கேட்கின்றனர், இவ்வாறு விடுமுறை வழங்குவது சாத்தியமில்லை, இந்தப்பணி இயல்புக்கு இது சரிப்பட்டு வராது” என்பதை அமைச்சர் முன்வைத்துள்ளார். தமிழ்நாடு ஜனநாயக மாதர் சங்கம் இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
போக்குவரத்துத்துறை பணி என்றால், பெண்கள் கர்ப்பப்பையை அகற்றிவிட்டு வேலைக்கு வரவேண்டுமென அமைச்சர் எதிர்பார்க்கிறாரா? 3 மாத பிரசவ கால விடுப்பு என்பது, தொழிற்சங்கங்கள் போராடிப் பெற்ற உரிமை. அது பெண் உழைப்பாளிகளுக்குக் கிடைத்துள்ள சட்டரீதியான அங்கீகாரம், இது போன்ற உரிமைகளை நிலை நாட்டுவதில், அரசு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டாமா? தொழிற்சங்க உரிமைகளைக் கோடாரி கொண்டு வெட்டுவதே வேலையாக இருக்கக்கூடிய அரசிடம் இதையெல்லாம் எதிர்பார்ப்பதே தவறோ என்னவோ?
பணி ஒன்றாக இருந்தாலும், செய்பவர்கள் ஒரே மாதிரி இருப்பதில்லையே பெண்கள் என்றால், மாற்றுத்திறனாளிகள் என்றால், அரவாணிகள் என்றால், ஒவ்வொரு பகுதிக்கும் இயல்பாகவே சில பிரச்சனைகள் இருக்கும். அவற்றுக்கான தீர்வோடு, பணி நிலைமை என்பது இருக்க வேண்டும். அதை செய்வதைவிட்டு விட்டு, அவர்களைப் பணிக்கே அமர்த்த மாட்டேன் என்பது, அரசியல் சட்டம் கொடுத்துள்ள சமத்துவத்திற்கே எதிரானது.
அமைச்சர் தனது வார்த்தைகளை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும்; இதில் தமிழக அரசின் நிலை என்ன என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குடும்பம் நடத்தக்கூடாது, குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்பதெல்லாம் எல்லை மீறிய வார்த்தைகள். பெண்கள் இப்போதுதான் வீட்டை விட்டு பொதுவெளிக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களை மீண்டும் வீட்டிற்குள் அடைத்து பார்க்கிற மடத்தனம் இது. பெரியார் இருந்தால் இவர்களை ’போங்கடா வெங்காயங்களா’ என முகத்தில் அறைந்திருப்பார்.
வணக்கம் தோழர்.பெண்மையின் நிலை அறிகிறவர்களாய் ஆட்சியாளர்கள் மாறாதவரை இந்நிலைதான்.
ReplyDeleteஇன்றைய ஆட்சியாளர்கள் ஒருநாளும் அப்படி மாற மாட்டார்கள். ஆளும் வர்கம் லாபத்தை மட்டுமே நோக்கும் சுரண்டல் வெறிகொண்டதாய் இருக்கும் வரையில்.
ReplyDelete//ஒவ்வொரு பகுதிக்கும் இயல்பாகவே சில பிரச்சனைகள் இருக்கும். அவற்றுக்கான தீர்வோடு, பணி நிலைமை என்பது இருக்க வேண்டும். அதை செய்வதைவிட்டு விட்டு, அவர்களைப் பணிக்கே அமர்த்த மாட்டேன் என்பது, அரசியல் சட்டம் கொடுத்துள்ள சமத்துவத்திற்கே எதிரானது. //
ReplyDeleteசரி கண் பார்வை இழந்தோரும் ஓடடுநராக்கினால் பயணிகளின் கதி என்ன,
சாலையை பயன்படுத்தும் மற்றவர் கதி என்ன ?
கண் பார்வை இழந்தோரை தெரிவு செய்யவில்லை என்றல் அது அரசியல் சட்ட சம்த்துவத்துக்கு எத்ரர்னாதா?
எல்லாம் சரி, தனியார் நிறுவ்னத்தில் இதே உரிமைக்ளை/சலுகைகளை பெண்கள் எதிர்பார்பார்கள ?
ஒவ்வோறு பணியிலபுக்கும் அதற்கு தகுந்தவர்களையே பணியமர்த்த வேண்டும்.
இப்படி அரசாஙக பணி என்றால் பிரச்சனைக்கு திர்வு செய்து பணியமர்த்தினால் அவர்களை கொண்டு எப்படி தனியாருடன் போட்டியிடடு திறமையான சேவை வழங்க இயலும் ? அப்புறம் அரசாஙகம் சரியில்லை அரசஙகம் செய்யும் தொழில் சரியில்லை, சேவை சரியில்லை என குறைபட்டு என்ன பயன்.
அமைச்சர் சொன்னவுடன் எதிர் கருத்து சொன்னால் புகழ் கிடைக்கும் என்பது சுயநலமேயன்றி வேறில்லை.