Thursday, November 18, 2010

ஊழல்களின் ராஜாக்கள்

நன்றி: தி ஹிந்து

இந்தியாவின் தொலைதொடர்பு துறையில் நிகழ்ந்துள்ள ஊழலான 2 ஜி ஸ்பெட்ரம் அலை வரிசையில் ஒரு லட்சத்து எழுபத்தியாறு லட்சம் கோடி 1.76 லட்சம் கோடி ரூபாய் வரை தொலைதொடர்பு துறைக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறதுஇதுவரை இந்தியாவில் நடந்துள்ள ஊழல்களில் மிகப்பெரிய ஊழலாக இது இருக்கும். முதலில் வருவபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதுஇதற்கு தான் பொறுப்பல்ல ட்ராய் அமைப்பின் சட்டதிட்டப்படி தான் வழங்கினேன்அவர்கள்தான் ஆலோசனை சொன்னார்கள் என .ராசா கலாய்கிறார்,
 எப்படி இருந்தாலும் அந்த துறையி நல்ல திட்டங்கள் அமுலானால் அதற்கு காரணம் நான் தான் என்றும். இது போன்ற ஊழல் பிரச்சனைகள் என்றால் அதிகாரிகள் தான் என்றால் பால்குடிக்கும் குழந்தை கூட நம்பாது,அவரின் தலைவரோ இது கடுகளவு தொகையே என்கிறார். இது கடுகளவு என்றால் இன்னும் நிறைய செய்திருக்க வேண்டும் என்கிறாரா?
முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்டிராய் ( Telecom Regulatory Authority of India -TRAI ) பரிந்துரையின் பேரில்தான்,அலைவரிசை ஒதுக்கீடு நடைபெற்றதாக .ராசா கூறி உள்ளார். ஆனால்இதனை டிராய்தலைவர் என்.மிஸ்ரா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்கு (15.11.2008) அளித்துள்ள பேட்டியில் தெரிவித்து உள்ள கருத்துகள் பின்வருமாறு;
 2007 இல் டிராய் செய்த பரிந்துரையில் இன்றைய இந்தியாவின் சுறுசுறுப்பான செயலாக்கம் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் இதுவரை இல்லாத வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளும் போது 2001 இல் நிர்ணயிக்கப்பட்ட நுழைவுக் கட்டணம் உரிமம் பெறுவதற்கு சரியானதாக இருக்காது. சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்தக் கட்டணம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று சொல்லப்படவில்லை.

தொலைத் தொடர்பு அமைச்சகத்திற்கு 2007அக்டோபர் 19 மற்றும் 2008ஜனவரி 14 ஆகிய நாட்களில் இரு கடிதங்கள் எழுதி உள்ளேன். அமைச்சரவை எடுக்கும் முடிவு மற்றும் நடவடிக்கை களை இந்தப் பரிந்துரையில் இடம்பெறாதவற்றுடன் தொடர்பு படுத்துவது நியாயம் அல்ல. அது தவறாக வழிநடத்துவதாகும். டிராய் அமைப்பின் ஒட்டு மொத்த பரிந்துரை மீறப்படும்போது அதிகாரபூர்வமான முறையில் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் தொலைத் தொடர்புத் துறைக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். அப்படி இருந்தும் டிராய் அமைப்பை கலந்து ஆலோசிக்காமல் அதனுடைய பரிந்துரைகளுக்கு புறம்பாக தொலைத்தொடர்புத்துறை பல தடவை செயல்பட்டு உள்ளது. நிறுவனங்கள் இணைப்பு மற்றும் பங்குகள் கையகப்படுத்தும் நடைமுறையிலும் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை;

மேலும் இந்த அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் கட்டமைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இப்படித்தான் ஸ்வான்,யூனிடெக் நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று உள்ளன
 தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மிஸ்ரா தெரிவித்துள்ள தகவல்கள் மூலம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை தெரிவித்ததோடுமத்திய அமைச்சாராக அவர் பதவி பிரமாணம் ஏற்கும் போது சொன்ன சட்டத்தின் ஆட்சியை புறந்தள்ளிவிட்டு சென்றுள்ளார்.

டிராய் தலைவர் மிஸ்ரா தக்க பதிலடி கொடுத்தவுடன்இப்பொழுது ராசா கூறுகிறார்,பிரதமர் அனுமதியுடன்தான் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று. இவ்வளவு பெரிய மோசடிக்கு மெகா ஊழலுக்கு பிரதமர் அனுமதி அளித்துள்ளார் என்று பிரதமர்மன்மோகன் சிங்கை உடன் அழைத்து உள்ளார். ஆனால்இதுவரை பிரதமர் இது குறித்து வாய் திறக்கவில்லை. முன்னாள் தொலைதொடர்பு துறை செயலாளர் மாத்துர் அவர்கள் இந்த அலை வரிசைக்கான அனுமதி குறித்து ஆரம்ப நிலையிலேயே தனது ஆட்சேபணையை தெரிவித்து இந்த நடைமுறையை கைவிட வேண்டும் என கூறியுள்ளார்.தற்போது தேவைப்பட்டால் இது குறித்த அனைத்து ஆவணங்களையும் அளிக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

அதேபோல்  தற்போது நடைபெற்ற காமன்வெல்த் போட்டிமும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீடு இரண்டிலும் நடைபெற்ற ஊழல்களில் இந்தியாவின் தேசிய கட்சிகளான காங்கிரஸ்பிஜேபி இரண்டு கட்சியை சார்ந்தவர்களும் சம்பந்தபட்டுள்ளது நாற்றெமெடுத்து நாறுகிறது. பாராளுமன்றத்திலும் தொடர்ந்து பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டுமென பிஜேபியும்முடியாது என காங்கிரசும் சபையை ஸ்தம்பிக்க வைக்கின்றன. இடது சாரிகள் சொல்வதைப்போல குற்றம் செய்தஊழல் செய்த அரசியல்வாதிகள்,அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை என்பது குறித்து பேசவேண்டும்.
எது சொன்னாலும் மக்கள் இழிச்சவாயர்கள்தேர்தல் நேரத்தில் பணத்தை காட்டி வாக்கை வாங்கி விடலாம் என்ற அசாத்திய நம்பிக்கையில் தான், இன்று ஊழலை தேசிய கொள்கையாக மாற்றி விட்டார்கள்,
மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் காலத்தில் நடைபெற்ற மாருதி ஊழல்ராஜீவ் காந்தி காலத்தில் போபர்ஸ் ஊழல்நரசிம்மராவ் காலத்தில் தொலை தொடர்புதுறை ஊழல்,சர்க்கரை இறக்குமதி ஊழல், வாஜ்பாய் காலத்தில் சவபெட்டிஆயுதங்கள் வாங்கியதில் ஊழல்மன்மோகன்சிங் காலத்தில் மருத்துவகவுன்சில் ஊழல்2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்ஐபிஎல் கிரிக்கெட் ஊழல்பாராளுமன்றத்தில் எம்,பிக்கள் வாக்களிக்க லஞ்சம்காமன்வெல்த் போட்டியில் ஊழல்ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீட்டு ஊழல் என ஊழல்களின் தேசமாக இந்தியா மாற்றப்பட்டு வருகிறது. கண்ணுக்கு தெரிந்து பத்திரிக்கைகளில் விவாதப் பொருளாக மாறிப் போன ஊழல்கள் இவை. மறைக்கப்பட்ட,தெரியாத ஊழல்கள் எத்தனை எத்தனையோ,.. பறி போன இந்திய உழைப்பாளி மக்களின் செல்வங்கள் எவ்வளவோ,. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில் என எம்ஜிஆர் கால பாடல் ஒன்று உள்ளதுபல அமைச்சர் பெருமக்கள் நோகமல் நொங்கு சாப்பிடுவது போல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளையடிப்பார்கள்இந்தியாவில் உள்ள அமைச்சர்கள்பெரு முதலாளிகள்சினிமா நட்சத்திரங்கள்விளையாட்டுவீரர்கள் என பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை முறையாக செலுத்தாமல் பெயருக்கு கட்டிவிட்டு ஏமாற்றி வைத்திருக்கும் கருப்பு பணமே இந்தியாவிற்கான ஆண்டு பட்ஜெட் போடுமளவுக்கு உள்ளதுகருப்பு பணம் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP-ல்) 5.1 விழுக்காடு முதல் இருபது விழுக்காடு வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கருப்பு பணம் பெரும்பாலும் தங்கமாகவும்நிலமாகவும்வீடாகவும் புழங்குகின்றது.
உலகின் கள்ளப் பணத்தைப் பதுக்கி வைக்கும் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் மட்டுமே ரூ70 லட்சம் கோடிஅதாவது 1.40 ட்ரில்லியன் டாலர். இந்தப் பணம் நமது நாட்டுக்குச் சொந்தமானது. இவ்வளவு பெரிய தொகையில் என்னென்ன செய்யலாம் தெரியுமா?இந்தியா தனது அயல்நாட்டுக் கடனை 13 தடவை திருப்பிச் செலுத்தலாம்.  சுவிஸ் வங்கியில் பணம் போட்டுள்ள வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளதுகறுப்புப் பணம் குறித்து ஆய்வு செய்த பேராசிரியர் ஆர். வைத்தியநாதன் குறிப்பிடுவதாவது: "சுவிஸ் வங்கியில் இருக்கும் கள்ளப் பணத்தை வெளியே கொண்டு வர ஜெர்மனிபிரான்ஸ்அமெரிக்காஇங்கிலாந்து ஆகியவை குரல் கொடுக்கின்றன. ஆனால்,இந்தியா மட்டும் வாய் மூடி மெனியாக இருக்கின்றது”. அவர் மேலும் குறிப்பிடுகையில் "நமது வருமான வரி அதிகாரிகள் சுவிஸ் நாட்டின் ஜூரிச் நகரில் உள்ள இந்திய உணவகங்களுக்குச் சென்றாலே இந்தியாவின் எந்தெந்த பிரபலங்கள் அங்கு வங்கிக் கணக்கு வைத்துள்ளனர் என்பது தெரிந்துவிடும்'' என்று வேடிக்கையாகச் சொல்கிறார்."பிரிட்டீஷ்காரர்களால் 90 ஆண்டுகளில் 45 லட்சம் கோடி பணத்தைத்தான் சுவிஸ் வங்கிகளில் சேமிக்க முடிந்தது. ஆனால் நமது இந்தியப் பெருமக்கள் 30 ஆண்டுகளிலேயே 405 லட்சம் கோடி பணத்தை மிகவும் வேகமாக ஓடிச் சென்று சுவிஸ் வங்கியில் சேர்த்துவிட்டனர். எவ்வளவு பெரிய சாதனை'' என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்தியாவில் 2008ஜூலை 18ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தின் படிமக்கள் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு ரூ. ஆறு லட்சத்து மூவாயிரம் கோடி ரூபாயில் புழக்கத்தில் 28 சதவீதம் கள்ள நோட்டுக்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கள்ளநோட்டுக்களின் பெருக்கம் காரணமாக ரூபாயின் மதிப்பு குறைவதுடன்,பணவீக்கம் பெரிதும் அதிகரித்துவிலைவாசி கடுமையாக உயரும். அதேசமயம் கள்ள நோட்டு நடமாட்டத்தால்இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமே சிதைந்து போகும் அபாயம் காத்திருக்கிறது.

சுதந்திர இந்தியாவில் ஊழல்கள்

1948ம் ஆண்டில் இங்கிலாந்துக்கான இந்திய தூதராக வி.கே.கிருஷ்ண மேனன் இருந்தார். அப்போது லண்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடமிருந்து 2000 ஜீப்புகள் வாங்க பரிந்துரை செய்து ஒப்பந்தமிட்டதோடு ரூ 80 லட்சமும்  மொத்தமாக முன்பணமாகவே வழங்கப்பட்டது. ஆனால் 2000 ஜீப்புகளுக்கு பதிலாக வெறும் தரம் குறைந்த 155 ஜீப்புகள் வந்து சேர்ந்தது. ஆனால் நேரு அவர்கள் கிருஷ்ண மேனனை பாதுகாப்புத் துறை அமைச்சராக்கினார்.

1951ம் ஆண்டில்மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை செயலாளராக இருந்த எஸ்.ஏ.வெங்கட்ராமன் சம்பந்தப்பட்டது. ஒரே நிறுவனத்துக்கு சைக்கிளின் உதிரி பாகங்கள் அனைத்தையும் இறக்குமதி செய்ய ஆணையிட்டதில் ஊழல் நிரூபிக்கப்பட்டு,வெங்கட்ராமன் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு உயர்அதிகாரி ஊழல் குற்றச்சாட்டுக்காக சிறையில் அதிக நாட்கள் இருந்தது இதுவாகதான் இருக்கும்.

1958ம் ஆண்டுவெளி வந்த முந்த்ரா ஊழல் என்று அழைக்கப் பட்ட ஊழல் தான். இந்த ஊழலை வெளிக் கொண்டு வந்தது நேருவின் மருமகனும்இந்திராவின் கணவருமான பெரோஸ் காந்தி. 1957ம் ஆண்டுகொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹரிதாஸ் முந்த்ரா என்பவர்தான் இந்த ஊழலுக்கு மூல ஊற்று. இவரது 6 தொழில் நிறுவனங்களின் பங்குகள்பங்குச் சந்தையில் அசுர வீழ்ச்சி அடைந்ததனால் இந்நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு நிறுவனமான எல்.ஐ.சி அப்போதைய நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியின் ஆலோசனையின் பேரில்1.25 கோடிக்குமுந்த்ராவின் ஆறு நிறுவனங்களின் பங்குகளை வாங்கியது. ஆனால்வாங்கிய பங்குகள் அனைத்தும்விலை வீழ்ச்சியடைந்துஎல்ஐசியின் மொத்த முதலீடும் காணாமல் போனது. இது தொடர்பாக,பெரோஸ் காந்தி பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் 1958ம் ஆண்டு கேட்ட கேள்வி,இந்தியா முழுவதும் பெரும் புயலை கிளப்பியது. பெரோஸ் காந்தியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்துநாடெங்கும் பெரும் அமளி கிளம்பநேருநீதிபதி சாக்லா என்பவர் தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை அமைத்தார். நீதிபதி சாக்லா தனது அறிக்கையை 24 நாட்களளில் சமர்ப்பித்தார். தனது அறிக்கையில் இந்த ஊழலுக்கு அப்போதைய நிதித் துறை செயலர் ஹரிபாய் படேல்மற்றும் இரண்டு எல்ஐசி அதிகாரிகளே இந்த ஊழலுக்கு காரணம்அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தார். நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி நிதித் துறைச் செயலரின் நடவடிக்கைகளுக்குநிதி அமைச்சர் என்ற வகையில் பொறுப்பேற்று கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார்.

1962ம் ஆண்டு தேஜா கேப்பர் ஊழல் என்று அழைக்கப்படும் ஊழல். ஜெயந்தி தர்மா தேஜா என்பவர்வங்கிகளிலிருந்து 200 கோடி ரூபாய் கடனாக பெற்றும் தனது மூதலிடாக ரூபாய் 200 முதலீடு செய்து ஒரு கப்பல் நிறுவனத்தை துவங்கினார். இந்நிறுவனத்தில் முதலீடு செய்த பங்குதாரர்களின் பணம் அனைத்தும்தேஜாவின் சொந்த வங்கிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டது. 1970ல் லண்டனில் கைதான தேஜாகாவலில் இருந்து தப்பிச் சென்றார்.

1971ம் ஆண்டில் நகர்வாலா ஊழல் என்று பிரபலமாக அழைக்கப்பட்ட ஊழல். 1971ம் ஆண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பாராளுமன்ற தெரு கிளையின் தலைமை காசாளர் வேத பிரகாஷ் மல்ஹோத்ராவுக்கு இந்திய உளவுப் பிரிவைச் சேர்ந்த ரஸ்தம் சோரப் நகர்வாலா என்பவர் இந்திரா காந்தி அவர்களின் குரலில் தொலைபேசியில் பேசியதன் அடிப்படையில் 60 லட்சம் ரூபாய் பணம் பரிமாறப்பட்டது. 1973 மாண்டு நகர்வாலா இறந்துவிட்டவுடன் இந்த ஊழலும் இறந்து போனது,

1987 ஏப்ரல் 16ல்சுவீடன் வானொலி போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் இந்தியாவின் அரசியல்வாதிகளுக்கும்உயர் அதிகாரிகளுக்கும் பெரிய அளவில் லஞ்சம் கொடுத்து இந்த போபர்ஸ் பீரங்கி வாங்கப் பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்துஇந்தியாவில் பெரும் புயல் கிளம்பியது. இந்த போபர்ஸ் பீரங்கி  பேரத்தில் லஞ்சமாக 139 கோடி கைமாறியுள்ளதுஇந்த ஊழல் வெளியானதால்ஆட்சியை இழந்த ராஜீவ்கடைசி வரை இந்த புகாரை மறுத்து வந்தார். கடும் போராட்டத்துக்கு பிறகு வி.பி.சிங் பிரதமாரான பிறகு,சிபிஐஇவ்வழக்கில் விசாரணையை துவக்கியது. பல ஆண்டுகள் கடந்தும்இவ்வழக்கில் ஒருவருமே தண்டிக்கப்படவில்லை. காங்கிரஸ் 2004ல் பதவியேற்றதும்முடக்கி வைக்கப்பட்டிருந்து ஒட்டலியா குவாத்ரோச்சி வங்கிக் கணக்குகள்விடுவிக்கப்பட்டன. பத்திரிக்கைகளில் இச்செய்தி வெளியாகிபரபரப்பாவதற்குள்ஒட்டலியா குவாத்ரோச்சி மொத்த பணத்தையும்வங்கிக் கணக்கிலிருந்து எடுத்து விட்டார். இன்று அந்த வழக்கின் கதி அதோ கதி...

1992ல் இந்தியாவை உலுக்கிய மிகப் பெரிய ஊழல் ஹர்ஷத் மேத்தாவின் 5000 கோடி ரூபாய் ஊழல். இந்திய பங்குச்சந்தையில் நாட்டுடைமையாக்கப் பட்ட வங்கிகளின் பணத்தை வைத்துபல பங்குகளின் விலையை ஏற்றவும் இறக்கவும் செய்த காளைக்கும்,கரடிக்குமான போட்டி என வர்ணித்த பங்குசந்தையில் ஹர்ஷத் மேத்தா ஊழல் வெளி வந்ததும்பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைக் கண்டது. ஹர்ஷத் மேத்தாஅப்போதைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு 1 கோடி ரூபாயை லஞ்சமாக கொடுத்ததாக திடுக்கிடும் புகாரைக் கூறினார்.  இந்த பங்குச் சந்தை ஊழல் தொடர்பாக விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையில் அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் எஸ்.வெங்கட்ராமன்துணை கவர்னர்கள் அமிதவ் கோஷ் மற்றும் ஆர்.ஜானகிராமனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரை அளித்தது. மேலும்மத்திய அமைச்சர்கள் ராமேஷ்வர் தாகூர்சங்கரானந்த்மாதவராவ் சிந்தியாமன்மோகன் சிங் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்களையும் வைத்திருந்தது. ஆனால்நரசிம்மராவ் அரசு இந்த பரிந்துரையின் மீது  எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

1994ம் ஆண்டு சர்க்கரை தட்டுப்பாடு ஏற்பட்டுசர்க்கரை விலை உயர்ந்ததையடுத்துக்யான் பிரகாஷ் விசாரணை கமிஷன் அமைக்கப் பட்டது. இக்கமிஷன்சந்தையில் சர்க்கரை கிடைக்காமல் தட்டுப்பாட்டை ஏற்பட காரணம்மத்திய அமைச்சர் கல்பனாத் ராய்தான்,சர்க்கரை ஆலைகளுக்கு விலையேற்றம் காரணமாக லாபம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில்கல்பனாத் ராய் செயல்பட்டுள்ளார் இதனை ஒட்டியே ஊழல் நடந்துள்ளது என்று பரிந்துரை செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல்,கிடப்பில் போட்டார் நரசிம்ம ராவ்.

சும்மா சாம்ப்பிள்
 • 1995ல் யுகோஸ்லாவியா தினார் ஊழல்மேகாலயா வன ஊழல்,
 • 1996ல் யூரியா உர இறக்குமதி ஊழல்,பீகார் மாட்டுத் தீவன ஊழல்,
 • 1997ல் சுக்ராம் ஊழல்பீகார் நில பேர ஊழல்பன்சாலி பங்கு வர்த்தக ஊழல்,
 • 1998ல் தேக்கு மரக்கன்று ஊழல்,
 • 2001ல் யுடிஐ ஊழல்தினேஷ் டால்மியா பங்கு வர்த்தக ஊழல்கேத்தன் பரேக் பங்கு வர்ததக ஊழல்,
 • 2002ல் சஞ்சய் அகர்வாலின் வீட்டு வர்த்தக ஊழல்,
 • 2003ல் போலி முத்திரைத் தாள் ஊழல்,
 • 2005ல் பங்கு வர்த்தக ஐபிஓ ஊழல்பீகார் வெள்ள நிவாரண ஊழல்ஸ்கார்ப்பீன் நீர்மூழ்கி கப்பல் ஊழல்,
 • 2006ல் பஞ்சாப் சிட்டி சென்டர் ஊழல்உத்தரப் பிரதேசத்தில் தாஜ் காரிடார் ஊழல்,
 • 2008ல் பூனேவைச் சேர்ந்த ஹசன் அலி கான் வருமான வரி ஏய்ப்புசத்யம் கம்ப்யூட்டர் நிறுவன ஊழல்ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்ட்டிரா ஊழல்ஜார்க்கண்ட் மருத்துவ உபகரணங்கள் ஊழல்அரிசி ஏற்றுமதி ஊழல்ஒரிஸ்ஸா சுரங்க ஊழல்,மது கோடாவின் ஊழல் என  பட்டியல் நீண்டு பத்திரிக்கைகளில் வந்து கொண்டே இருக்கிறது..


இந்த ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் என்று எடுத்தால்1 சதவிகிதம் கூட இருக்காதுகடந்த மன்மோகன் சிங் ஆட்சியின் போது அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் போடக்கூடாது என இடதுசாரிகள் ஆட்சிக்கான ஆதரவை வாபஸ்பெற்ற போது கோடிக்கணக்கில் எம்பிகளை குதிரை வியாபாரத்தில் ஈடுபடுத்தியது அரசுபணம் பெற்ற அரசியல் கட்சிகளின் எம்பிகள் பாராளுமன்றத்தில் வெளிப்படையாக பெறப்பட்ட பண கத்தைகளை காண்பித்ததை உலகமே கண்டுகளித்ததுஒரு எம்பியின் விலை 25 கோடி என்று பத்திரிக்கைகளில் செய்தி வந்தது. தற்போதுஎடியூரப்பா அரசாங்கத்தை காப்பாற்றவும் எம்எல்ஏக்கள் விலை பேசப்பட்ட தகவல்கள் வருகின்றன.

தற்போதும் ஸ்பெக்ட்ரத்தில் லட்சகணக்கான கோடி ரூபாய்களை அரசுக்கு இழப்பு ஏற்படும் வகையில் செய்தது மட்டுமல்லதொடர்ந்து தானிய ஏற்றுமதிஉர இறக்குமதிபெட்ரோல் விலை நிர்ணய அனுமதிஅணுசக்தி ஒப்பந்தம் என பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள்,மற்றும் இந்திய பெரு முதலாளிகளின் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள்,வரிவிலக்குகள்தாராள அனுமதிகள் காரணமாக இந்திய அரசுக்கு வரவேண்டிய பல லட்சம் கோடி ரூபாய்கள் இழப்பும் ஏற்பட்டுள்ளதுஇந்தியாவின் தலைமை தணிக்கை அதிகாரிமத்திய கண்காணிப்பு ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அரசின் அமைப்புகள் இந்த முறைகளை கண்டறிந்து சொன்னாலும்நடவடிக்கை என்பது காலவதியாகி போகிறது,

1984ல் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் பலியான 25000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும்ஊனமுற்று இன்றும் மாற்றுதிறனாளிகளாக உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உரிய நஷ்டஈடுநிவாரணத் தொகை வழங்காமல் ஏமாற்றிவிட்டு அமெரிக்காவில் பதுங்கியுள்ள ஆண்டர்சனை பாதுகாப்பாக இந்தியாவில் அன்றைக்கே அனுப்பி வைத்த ஆட்சியாளர்கள்நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்று வரை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கும் அமெரிக்க அதிபர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கவே ஆட்சியாளர்களுக்கு நேரம் சரியாக உள்ளது.

இதில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள காமன்வெல்த் போட்டியில் பல்லாயிரம் கோடி ஊழல்கள் நடந்துள்ளதாக தினந்தோறும் விசாரணைகள்அறிக்கைகள் என பத்திரிக்கைகளின் பக்கங்கள் செய்திகளை நிறைத்துமட்டுமே வெளியிடுகின்றன. ஊழலின் ஊற்றுக்கண்னை அடைக்க எந்த நடவடிக்கையும் இல்லைஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் பெரும் பணத்தையெல்லாம் தேர்தல் நேரத்தில் மக்களுக்கே செலவு செய்கிறோம் என வாதத்தை முன்வைத்து தப்பி விடுகின்றனர்.

1983ம் ஆண்டு 36,768 கோடியாக இருந்த கருப்பு பணம்இன்று 9 இலட்சம் கோடியாக உயர்ந்து நிற்கின்றது. இந்த கறுப்பு பணங்கள் அனைத்தும் கூடுதலாக தேர்தல் நேரத்தில் வெளி வருகிறது,  தேர்தல் நேரத்தில் ஒரு வேட்பாளர் கிட்டதட்ட 5 கோடி ரூபாய் செலவு செய்கிறாராம். இது கணக்கில் வராத பணமே. 542 தொகுதியை கணக்கில் எடுத்தால் மொத்த கருப்பு பண அளவு 10000 கோடி அளவுக்கு  வெளி வருகின்றது. இது இல்லாமல் உள்ளாட்சி தேர்தல்சட்டசபை தேர்தலிலும் பண புழக்கம் உண்டு. அதனால் தான் அரசின் எந்த துறையாக இருந்தாலும் லஞ்சம் இல்லாமல் வேலை நடப்பதில்லை என வேதனைப்பட்டு நீதிமன்றங்களே ஆதங்கப்பட்டு கூறும் சூழல் உருவாகியுள்ளது.

ஊழலுக்கு மாற்று
ஊழலின் ஊற்றுக்கண்ணே முதலாளித்துவத்தின் அடிப்படை குணாம்சம். இன்றைய உலகமயச் சூழலில் இதனை எந்தவிதமான உறுத்தலுக்கும்குற்றசெயலாக கருதாமல் வாய்ப்பு கிடைக்கிறது என்ற அடிப்படையில் இப்படி ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகள்,தொழிலதிபர்கள்விளையாட்டுவீரர்கள் இவர்களின் வாழ்க்கை தரம்ஆடம்பர தன்மை,புகழ்கௌரவம்அதிகாரம் சார்ந்த பல்வேறு கூறுகளை கணக்கில் கொண்டு இதன் பின்னணியில் தொடர்ந்து ஊழல் உள்ளிட்ட பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரையும் தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை எடுத்து ஊழல் மூலம் சேர்த்த அனைத்து சொத்துக்களையும் நாட்டுடைமையாக்க வேண்டும். அதற்கு தேவை உறுதியான மக்கள் நலன் பேணும் ஆட்சி அதிகாரமே.
எனவே ஆளும் ஆட்சியாளர்கள் தேர்தல் சீர்திருத்ததைசெய்வதுதேர்தலுக்கு அரசே செலவிடுவதுவிகிதாச்சார பிரதிநிதித்துவத்தை அமுலாக்கிடுவது என ஊழலின் ஊற்றுக்கண்ணை அடைக்க உருப்படியாக ஏதாவது செய்தால் மட்டுமே முடியாட்சியாக உள்ள ஊழலின் ராஜாக்களை ஒழித்திட முடியும்.
கட்டுரையாளர்: செ.முத்துக்கண்ணன்

1 comment:

 1. ஊழலுக்கு ஒரு அகராதியே போடலாம். இந்தியாவில் பெருந்திருட்டில் ஈடுபடுவோர் தண்டனையிலிருந்து எளிதில் தப்பிவிடலாம் என்ற எண்ணமும் இந்த அமைப்பும் ஊழல் நீடித்திருக்க முக்கிய காரணம்.

  விபரமான இடுகை.

  ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)